Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக.. "றோ" புலனாய்வு அமைப்பு மீது, ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

49vUUcEj?format=jpg&name=600x314

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டபோது தாம் இதனை உறுதிப்படுத்தியபின்னர் தொடர்புகொள்வதாக கூறியபோதும் இந்தத்தகவல் அச்சுக்குப் போகும்வரையில் அவர் மீண்டும் தொடர்புகொள்ளவில்லை என ஹிந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதுடன் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தன்னைப்-படுகொலைச்-செய்ய/

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

 

maithri-press-1-300x200.jpgஇந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலைச் சதிக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவே இருந்தது என்று, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர், ECONOMY NEXT ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையையிட்டு தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், விசாரணைகள் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சரைப் பார்த்து சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் அசாதாரணமான உறுதியுடன் இருந்தார் என்றும்,  தனது அரசாங்கம் மீது சிறிலங்கா அதிபர் கூறிய குற்றச்சாட்டுகளையிட்டு அவர் அதிருப்தியுடன் காணப்பட்டார் என்றும் அமைச்சரவை வட்டாரம் தெரிவித்தது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது குற்றம்சாட்டிய சிறிலங்கா அதிபர், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. என்று தெரிவித்த அமைச்சரவை வட்டாரம், சிறிலங்கா அதிபரின் இந்தக் குற்றச்சாட்டினால் அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

அவர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதையும் வழங்காததால்,அதன் மீது அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, படுகொலைச் சதி தொடர்பான விபரங்களை வெளியிட நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பை சிறிலங்கா அதிபரின் முன்னாள் இணைப்பு அதிகாரியும், தற்போதைய மூத்த ஆலோசகருமான சிறிலால் லக்திலக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது சிறிலங்கா அதிபர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/10/17/news/33518

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

 

maithri-modi-300x199.jpgதன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – சிறிலங்கா உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் சிறிசேன நேற்று நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியப் புலனாய்வுப் பிரிவு தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக, தனது அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தெரியாமல் இருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார் என, அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

“கைது செய்யப்பட்ட இந்தியர், என்னைக் கொல்ல முயற்சிக்கும் றோவின் முகவராக இருக்க வேண்டும். இதனை இந்தியப் பிரதமர் அறியாமல் இருக்கலாம். இது பெரும்பாலும் வழக்கம் தான். சிஐஏயின் இதுபோன்ற நடவடிக்கைகள் ட்ரம்ப்புக்கும் தெரியாமல் இருக்கலாம்” என்று சிறிலங்கா அதிபர் உரையாற்றியிருந்தார்.

அவர் அப்படிக் கூறியது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அதிபர் செயலக ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, இதுபற்றி ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறினார். எனினும், இதுவரை அவரிடம் இருந்து  எந்தப் பதிலும் வரவில்லை.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு-, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா அதிபர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

எனினும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது சிறிலங்கா தலைவர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைப்பது இது தான் முதல்முறையல்ல. 2015 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்சவும், தனது தோல்விக்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சிறிலால் லக்திலகவிடம், வினவிய போது, மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதால் செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதாக கூறினார்.

http://www.puthinappalakai.net/2018/10/17/news/33520

  • கருத்துக்கள உறவுகள்

கூத்து, கூத்தூ, தையங்கூத்தூ. 

சிலி சேனா நடிப்பதை விடுங்கள். சீனவை வடக்கில், கிழக்கில் இருத்துங்கள். உங்கள் கூத்தை ராஜாவூடு பக்காவாக ஆடுங்கள்.  

நாங்கள் உங்களுக்கு கைதட்டி, ஆரவாரிக்கிறோம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  ஆளம்  தெரியாமல்  வாயை  விடுகிறார்

பாவம்

இப்பவே  அஞ்சலி  போட்டு  வைப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ‘றோ’ மீது குற்றம் சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன!!

 

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு இருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதனைத் தெரிவித்தார்.

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் றோவுக்குத் தொடர்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்.

படுகொலைச் சதித் திட்ட குற்றச்சாட்டுடன், றோ தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகத் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://newuthayan.com/story/15/ஜனாதிபதி-றோ-மீது-குற்றம்-சாட்டவில்லை-ராஜித-சேனாரத்ன.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்கள் ராஜிவ்வை போட்டார்கள் என்று அவர்கள் சொல்லலாம், இந்தியர்கள் நம்மாள போட ட்ரை பண்ணுகிறார்கள் என்று சொல்வதில் பிழை இல்லை தானே.  :grin:

வந்துட்டாரையா, வந்துட்டார்...

விமல் வீரவன்ச விபரத்தோட வந்திட்டார்... 

Suspect a RAW member bearing ID number RB317217/VJ: JO

சீனாக்காரன் நல்ல ஸ்பீடா போறான்யா .... இந்தியா காரன்... தடுமாறுறான் போல இருக்குதே..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இலங்கையர்கள் ராஜிவ்வை போட்டார்கள் என்று அவர்கள் சொல்லலாம், இந்தியர்கள் நம்மாள போட ட்ரை பண்ணுகிறார்கள் என்று சொல்வதில் பிழை இல்லை தானே.  :grin:

அதுதானே....! 'றோ' என்றால் இந்தியலங்கா போற்றும் ஆங்கில மொழியில் சமன் என்றுதானே அர்த்தம்.!! ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அதுதானே....! 'றோ' என்றால் இந்தியலங்கா போற்றும் ஆங்கில மொழியில் சமன் என்றுதானே அர்த்தம்.!! ? 

http://www.dailymirror.lk/article/President-Sirisena-alleges-that-RAW-is-plotting-his-assassination-156981.html

http://www.dailymirror.lk/article/Suspect-a-RAW-member-bearing-ID-number-RB-VJ-JO-157013.html

http://www.dailymirror.lk/article/Rajitha-downplays-assassination-plot-on-Prez--157015.html

http://www.dailymirror.lk/article/President-phones-PM-Modi-157014.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை எதிர்காலக் காய் நகர்த்தல்களில் இவரைப் போட்டுத்தள்ளுவதாகவுமிருக்கலாம் என்பதற்கான ஊகத்தின் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும் இனிமேல் யார் இவரைப் போட்டுத்தள்ள நினைத்தாலும் மிகவும் சிரமமான விடையமாக இது இருக்கும்.

மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை, அதே வேளை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிங்களம் தனது அரசியல் தலைமைகளைப் பாதுகாப்பதோடு சீனாவைத் தனக்கு மிக அருகில் கொண்டுவருவதற்கான காய் நகர்த்தல் 

தமிழர் விரோததேசம் இந்தியா இப்போது ஆப்பிழுத்த குரங்காக நிற்கிறது. இதைத் தமிழர்கள் வரவேற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிக்கு அப்பால், இலங்கை அரசு இந்த விஷயத்தினை தீவிரமாக எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

புது டெல்லி செல்லும் ரணில், இது விடயமாக ஆலோசிக்க, தனது நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திதிப்பினை ஒழுங்கு செய்ய கோரியுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

http://www.dailymirror.lk/article/PM-to-discuss-with-Indians-157019.html

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை, ஒரு மனநலம் குன்றியவர், என இந்திய தூதரகம் தானாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் கைதானவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இலங்கை அரசு நேற்று பல விடயங்களை பகிரங்கப் படுத்தி இருந்தது.

இடையே, நேற்று மைத்திரி, மோடியுடன் தொலைபேசியில் பேசியிருந்தார் என்பது கவனிக்க தக்கது. 

http://www.dailymirror.lk/article/President-phones-PM-Modi-157014.html

இது விடயமாக பயங்கரவாத தடுப்பு பிரிவி DIG நலிந்த டீ சில்வா கட்டாய விடுப்பில் உள்ளதையும், IGP புண்ணிய டீ சில்வா ராஜினாமா செய்யும் அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளதையும் கவனிக்க வேண்டும்.

*********

இன்று இந்திய தூதர் சித்து அவசரமாக ஜனாதிபதியை சந்தித்தார்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை கொலை செய்து போட்டு மகிந்தவை பதவியில் அமர்த்தும் பிளானாக   இருக்கும் ...பழியை புலியில் போட்டால் புலியும் உயிர்த்து விடும் 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்!

ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சி தொடர்பில் முழுமையான விசாரணைத் அவசியம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு நாட்டின் அரச தலைவரைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான தகவலை உடனடியாக நிராரிக்கப்பது முட்டாள் தனமானது, என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தனர்.

அவர் மேலும் கூறுகையில், “தெற்காசியாவில் இந்தியாவும் இலங்கையும் ஜனநாயக நாடுகள். இந்தியாவில் மூன்று காந்திகள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மகாத்மா காந்தி, பின் இந்திராகாந்தி, அதன் பின்னர் ராஜிவ்காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையிலும் அவ்வாறு படுகொலைகள் இடம்பெற்றன. அது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டது.

ஆனாலும் அரசியல் கொலைகளை நாம் இங்கு காணவில்லை. ஆனால் தற்போது, அரச தலைவர் ஒருவரைக் கொலைச் செய்யவுள்ளதாக தகவல் வெளியான போதிலும், அது குறித்து ஆராயாமல் அது பொய், உண்மையில்லை என்று கூறுகிறார்கள்.

ஒரு நாட்டில் அரச தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட போகின்றது என்றால் அது உண்மையோ பொய்யோ, அது குறித்து நீதி ஒழுங்காக செயற்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி கொலை சதி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு முன்னெடுத்து வருகின்ற நிலையில், இதற்கிடையில் பொய்யான பிரசாரங்கள் எமது சமூகத்தினரிடையே பரப்பப்ட்டு வருகின்றன.

இந்த கொலை சதி விவகாரம் உண்மையா அல்லது பொய்யா என்று எமக்கு தெரியாது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியமாகும்.

கொலை சதி தொடர்பில் தெரியப்படுத்திய நபரின் பின்புலம் தொடர்பில் ஆராயவோ அல்லது அவர் தொடர்பில் விமர்சனங்களையோ முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கூறிய விடயம் என்ன? அந்த விடயத்தின் தீவிரத்தன்மை தொடர்பிலே ஆராய வேண்டும்.

நீதியின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றமே அதன் உண்மை தன்மை தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ளவர்களும் எதிர் தரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் மாற்றுக் கருத்துக்களை கூறி இந்த விடயத்தை மூடிமறைக்க முயற்சி செய்கின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.” என கூறினார்.

http://athavannews.com/ஜனாதிபதியை-கொள்ள-முயற்சி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dfgbn-1-720x450.jpg

திரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த 

அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தெரிவித்தவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த செயலானது வெட்கப்படவேண்டிய விடயம் என்பதுடன் மிகவும் பயங்கரமான விடயமாகும். அத்துடன் இந்திய – இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் இருந்துவரும் நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது

இந்திய புலனாய்வு அமைப்பு தன்னை கொலைசெய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின்போது தெரிவித்ததாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் இந்த தகவல்களை அமைச்சரவையில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் குறிப்பிட்டதாகவே தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் இவ்வாறு தெரிவித்தவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்திருக்கவேண்டும். இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஆராயவும் எதிர்பார்க்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/திரிபுபடுத்தி-தகவல்-வழங்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nalaka-1-720x450.jpg

ஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­க சில்வா இன்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.

கொலை­ சதி விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பயங்கரவாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இர­க­சிய பொலிஸார் முன் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் ஆஜ­ரா­க­வில்லை.

இந் நிலையிலேயே இன்று பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைகள் குறித்த விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க முன்னிலையில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிட்டது.

அந்தவகையில் நாலக சில்வாவிடம் 9 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன் அவரை நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/ஜனாதிபதியை-கொலைச்-சதி-வி/

On 10/17/2018 at 11:08 AM, nunavilan said:

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

"றோ" என்டால் என்ன?
ஒரு இந்திய பாதாளலோக குழுவோ?
ஒரு இந்திய மாபியா குழுவோ?
ஒரு இந்திய போதைவஸ்து கடத்தல் குழுவோ?
         அல்லது
ஒரு இந்திய பயங்கரவாதக் குழுவோ?
இவர்கள் எதுக்கு மைத்திரியை கொலை செய்யோணும்?

யாராவது விடைகள்  தெரிஞ்சால் சொல்லவும்.

20 hours ago, Rajesh said:

"றோ" என்டால் என்ன?
ஒரு இந்திய பாதாளலோக குழுவோ?
ஒரு இந்திய மாபியா குழுவோ?
ஒரு இந்திய போதைவஸ்து கடத்தல் குழுவோ?
         அல்லது
ஒரு இந்திய பயங்கரவாதக் குழுவோ?
இவர்கள் எதுக்கு மைத்திரியை கொலை செய்யோணும்?

யாராவது விடைகள்  தெரிஞ்சால் சொல்லவும்.

"றோ" என்பது தெற்காசியாவின் மிக மோசமான பயங்கரவாதக் கும்பல். 
ஹிந்திய அரச பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்டு,  ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் நிதியளிப்பு, ஊக்கம், ஆதரவுடன் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இலங்கையில் நடைபெற்ற பிரேமதாச, கதிர்காமர், சந்திரிகா படுகொலை முயற்சி, சிவராம் படுகொலை, நிமால் சிறிபால படுகொலை முயற்சி, அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் படுகொலை, உமாமகேஸ்வரன் படுகொலை, மகேஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் படுகொலை முயற்சி போன்ற பலரது படுகொலைகளில் "றோ" நேரடியாகவும் பின்னணியிலும்  ஈடுபட்டது மறுக்க முடியாத உண்மைகள்!  
 

On 10/21/2018 at 11:11 AM, போல் said:

"றோ" என்பது தெற்காசியாவின் மிக மோசமான பயங்கரவாதக் கும்பல். 
ஹிந்திய அரச பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்டு,  ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் நிதியளிப்பு, ஊக்கம், ஆதரவுடன் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இலங்கையில் நடைபெற்ற பிரேமதாச, கதிர்காமர், சந்திரிகா படுகொலை முயற்சி, சிவராம் படுகொலை, நிமால் சிறிபால படுகொலை முயற்சி, அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் படுகொலை, உமாமகேஸ்வரன் படுகொலை, மகேஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் படுகொலை முயற்சி போன்ற பலரது படுகொலைகளில் "றோ" நேரடியாகவும் பின்னணியிலும்  ஈடுபட்டது மறுக்க முடியாத உண்மைகள்!  
 

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.