Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பாஉ வியாளேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஆனார் என டெயிலி மிரர் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் உள்ள கிழக்கு பாஉ, வியாளேந்திரன் கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஆனார் என  டெய்லி மிரர் செய்தி வெளியிட்டு உள்ளது. 

http://www.dailymirror.lk/art...ent-Dy-Minister--157830.html

  • Replies 51
  • Views 4.4k
  • Created
  • Last Reply

குளோபல் தமிழ் செய்தியாளர்

viyalenthiran.jpg?zoom=1.210000026226043

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மகிந்தவின் பக்கம் கட்சி தாவியுள்ளார். இதத் தொடர்ந்து பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதியமைச்சராக அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டார்.

அத்துடன் எஸ்.பி. நாவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ் அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

http://globaltamilnews.net/2018/101795/

இவர் தான் முந்தானாத்து கனடிய தமிழ் காங்கிரஸ் ஊழல் செய்யுது என்று கனடிய மண்ணில் வைச்சு சொன்னவர்

  • கருத்துக்கள உறவுகள்

பண பரிவர்த்தனை ஒரு பக்கம் இருக்க தனது தரப்பு நியாயங்களை காலையில் சொல்வாரா ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

இவர் தான் முந்தானாத்து கனடிய தமிழ் காங்கிரஸ் ஊழல் செய்யுது என்று கனடிய மண்ணில் வைச்சு சொன்னவர்

இப்ப CTC வந்து சொல்லப் போக்கினம்.. இவரை பற்றி தெரிந்து தான்... காசை ரிலீஸ் பண்ணாமல் வைத்து இருந்தோம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணை தொடர்பான கனடிய தமிழர் பேரவையின் அறிக்கை

நவம்பர் 01, 2018

பா.உ. ச.வியாழேந்திரன் அவர்களது சமீபத்திய கனடா வருகையுடன் தொடர்பு படுத்தி கனடிய தமிழர் பேரவையின் 2016 நிதி சேர் நடை பவனி மூலம் மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சேகரிக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தில் பல்வேறு செய்திகள் சமூக மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அச் செய்தி முற்றிலும் தவறானது மட்டுமல்லாது திரிபுபடுத்தப்பட்டு மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் எண்ணத்தோடு செயற்படும் சிலரால் பரப்பப்பட்டும் வருகிறது.

இச் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் கனடிய தமிழர் பேரவைக்கு உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களின் அவல நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு சில வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு 2016 ம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய தமிழர் பேரவை, திரு. வியாழேந்திரன் பா.உ. வைக் கனடாவுக்கு அழைத்திருந்தது. இதன் பிரகாரம் கனடாவிலுள்ள பல மனிதாபிமான தொண்டு நிறுவனங்களுடனும் தமிழ் ஊடகங்களுடனும் திரு. வியாழேந்திரன் பல சந்திப்புக்களை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலைமைகள் பற்றிய நேரடி அனுபவங்களையும், மேற்கொள்ள வேண்டிய அவசியமான சில செயற்திட்டங்களையும் பரிந்துரைத்தார். இச் சந்திப்பினைத் தொடர்ந்து பல தமிழ்க் கனடிய மனிதாபிமான அமைப்புக்களும், பெரு மனது கொண்ட தனிபட்ட கொடையாளிகளும் இம் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவுதர முன்வந்தனர். இத் திட்டங்களில், கிராமங்களைத் தத்தெடுத்தல், பின்-பள்ளி உதவிகள், முன் - பள்ளி ஆசிரியர் ஆதரவுத் திட்டங்கள், முன் - பள்ளி உணவு வழங்கல், பாடசாலைக் கட்டுமானங்கள், உள-வள ஆலோசனை வழங்கல், பெண்கள் விடுதிகளைப் புனர் நிர்மாணம் செய்தல், பார்வையற்றோருக்கான பள்ளிகளுக்கு ஆதரவு வழங்கல், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களின் தேவைகளை நிறைவேற்றுதல், நுண் கடனுதவித் திட்டங்களை அறிமுகம் செய்தல், கிராமங்களுக்கு நீர் வழங்கல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆதியன மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பெற ஆரம்பித்துள்ளனர். மேலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் சந்திப்புகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது மிக முக்கியமானதும் அவசரமானதுமென திரு. வியாழேந்திரன் பா.உ. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கனடிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் கனடா-மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணை உருவாக்கம் பெற்றது. இத் திட்டத்திற்கான நிதி 2016 செப்டம்பரில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த நடை பவனி மூலம் திரட்டப்பட்டது.

இப் பணம் திரட்டப்பட்டதிலிருந்து ஒரு வருடத்துக்கும் மேலாக, திரு. வியாழேந்திரன் பா.உ. வின் உதவியுடன் இப் பண்ணைத் திட்டத்திற்கான உகந்த நிலமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் பலவித சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய காரணத்தினால் அம் முயற்சி தடைபட்டுப் போனது. உயர்தர மாடுகளுக்குத் தேவையான அளவு போதிய நீர் வசதியின்மை, 10 ஏக்கர் வசதியான நிலம், நம்பிக்கையான உறுதிப் பத்திரங்களைப் பெற முடியாமை, மற்றும் நிலத்துக்கான அபரிமிதமான விலை ஆகியன இச் சவால்களில் சில. திரு. வியாழேந்திரன் பா.உ. அவர்களின் கடும் முயற்சியின் பின்னரும் உகந்த நிலத்தைக் கொள்வனவு முடியாமல் போனது மட்டுமல்லாது காலமும் நீடித்துக் கொண்டு போவதயும் மனதில் கொண்டு கனடிய தமிழர் பேரவை இப் பண்ணைத் திட்டத்தை நிறைவேறுவதற்கான மாற்று வழிகளையும் ஆராய்ந்தது.

இம் மாற்று வழிக்கான தேடலின் பிரகாரம் மட்டக்களப்பு அரச அதிபரின் உதவியுடன் பண்ணைக்கு உகந்த அரச நிலமொன்றைக் நீண்டகாலக் குத்தகைக்கு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக் குத்தகைக்கான விண்ணப்பம் 2018 முற்பகுதியில் மனுச் செய்யப்பட்டது. பல நிர்வாகத் தடங்கல்களைச் சந்தித்த போதும் கனடிய தமிழர் பேரவை அனுமதிப் பத்திரத்தைப் பெற்று பண்ணையைச் செயற்பட வைக்கவேண்டுமென்பதில் சிரத்தையுடன் செயற்படுகிறது. மட்டக்களப்பு பிரதேச மக்களின் நன்மை கருதி இத் திட்டம் விரைவில் செயற்பட ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கையுடன் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.

இப் பண்ணைத் திட்டத்துக்கான பணத்தைக் கனடிய தமிழர் பேரவை மோசடி செய்து விட்டது என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றம் சாட்டுவது கனடிய தமிழர் பேரவையை அவமதிக்கும் உள்நோக்கங்களைக் கொண்டதாகும். இவ் திட்டத்திற்காக திரு. வியாழேந்திரன் பா.உ. விற்கு கனடியத் தமிழர் பேரவை பணமெதுவும் வழங்கவில்லை என்பதை என்பதை உறுதி செய்கிறது.

கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணைத் திட்டத்துக்காகச் சேகரிக்கப்பட்ட நிதி கனடிய வங்கி ஒன்றில் பிரத்தியேக கணக்கில் சேமிப்பில் உள்ளது. இப் பணம் பேரவையின் வேறெந்தச் செலவீனங்களுக்காகவோ அல்லது சிறீலங்காவிலுள்ள தனிப்பட்ட அல்லது அமைப்புக்களின் தேவைகளுக்கோ பாவிக்கப்பட மாட்டாது என்பதைக் கனடிய தமிழர் பேரவை உறுதி செய்கிறது. அத்தோடு, பண்ணை நிலத்துக்கான பத்திரம் கிடைத்தவுடன் கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணையின் செயற்பாட்டை கனடிய தமிழர் பேரவை நேரடியாகவோ அல்லது பேரவையின் நம்பிக்கையான உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாகவோ ஆரம்பிக்கும்.

கனடா - மட்டக்களப்பு பண்ணைத் திட்டம் மட்டுமல்லாது எமது இதர பல திட்டங்களையும் செவ்வனே முடித்து வைப்பதில் கனடிய தமிழர் பேரவை மிக உறுதியுடன் உள்ளது.

கனடிய தமிழர் சமூகத்தின் உதவியுடன் எமது தாய் நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் அயராது உழைக்கும்.

மேலதிக விளக்கம் மற்றும் தகவல்களுக்கு 416-240-0078 என்ற இலக்கத்தைத் தயவு செய்து அழைக்கவும்.

நன்றி

கனடிய தமிழர் பேரவை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கனடாவில் உள்ள கிழக்கு பாஉ, வியாளேந்திரன் கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஆனார் என  டெய்லி மிரர் செய்தி வெளியிட்டு உள்ளது. 

http://www.dailymirror.lk/art...ent-Dy-Minister--157830.html

எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பதை விட அமைச்சுப் பதவி நல்லது.முஸ்லீம்களிடமிருந்து நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பதை விட அமைச்சுப் பதவி நல்லது.முஸ்லீம்களிடமிருந்து நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சரிதான்....ஆனாலும் மகிந்த கரை ரேர வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணை தொடர்பான கனடிய தமிழர் பேரவையின் அறிக்கை

நவம்பர் 01, 2018

பா.உ. ச.வியாழேந்திரன் அவர்களது சமீபத்திய கனடா வருகையுடன் தொடர்பு படுத்தி கனடிய தமிழர் பேரவையின் 2016 நிதி சேர் நடை பவனி மூலம் மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சேகரிக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தில் பல்வேறு செய்திகள் சமூக மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அச் செய்தி முற்றிலும் தவறானது மட்டுமல்லாது திரிபுபடுத்தப்பட்டு மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் எண்ணத்தோடு செயற்படும் சிலரால் பரப்பப்பட்டும் வருகிறது.

இச் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் கனடிய தமிழர் பேரவைக்கு உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களின் அவல நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு சில வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு 2016 ம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய தமிழர் பேரவை, திரு. வியாழேந்திரன் பா.உ. வைக் கனடாவுக்கு அழைத்திருந்தது. இதன் பிரகாரம் கனடாவிலுள்ள பல மனிதாபிமான தொண்டு நிறுவனங்களுடனும் தமிழ் ஊடகங்களுடனும் திரு. வியாழேந்திரன் பல சந்திப்புக்களை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலைமைகள் பற்றிய நேரடி அனுபவங்களையும், மேற்கொள்ள வேண்டிய அவசியமான சில செயற்திட்டங்களையும் பரிந்துரைத்தார். இச் சந்திப்பினைத் தொடர்ந்து பல தமிழ்க் கனடிய மனிதாபிமான அமைப்புக்களும், பெரு மனது கொண்ட தனிபட்ட கொடையாளிகளும் இம் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவுதர முன்வந்தனர். இத் திட்டங்களில், கிராமங்களைத் தத்தெடுத்தல், பின்-பள்ளி உதவிகள், முன் - பள்ளி ஆசிரியர் ஆதரவுத் திட்டங்கள், முன் - பள்ளி உணவு வழங்கல், பாடசாலைக் கட்டுமானங்கள், உள-வள ஆலோசனை வழங்கல், பெண்கள் விடுதிகளைப் புனர் நிர்மாணம் செய்தல், பார்வையற்றோருக்கான பள்ளிகளுக்கு ஆதரவு வழங்கல், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களின் தேவைகளை நிறைவேற்றுதல், நுண் கடனுதவித் திட்டங்களை அறிமுகம் செய்தல், கிராமங்களுக்கு நீர் வழங்கல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆதியன மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பெற ஆரம்பித்துள்ளனர். மேலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் சந்திப்புகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது மிக முக்கியமானதும் அவசரமானதுமென திரு. வியாழேந்திரன் பா.உ. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கனடிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் கனடா-மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணை உருவாக்கம் பெற்றது. இத் திட்டத்திற்கான நிதி 2016 செப்டம்பரில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த நடை பவனி மூலம் திரட்டப்பட்டது.

இப் பணம் திரட்டப்பட்டதிலிருந்து ஒரு வருடத்துக்கும் மேலாக, திரு. வியாழேந்திரன் பா.உ. வின் உதவியுடன் இப் பண்ணைத் திட்டத்திற்கான உகந்த நிலமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் பலவித சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய காரணத்தினால் அம் முயற்சி தடைபட்டுப் போனது. உயர்தர மாடுகளுக்குத் தேவையான அளவு போதிய நீர் வசதியின்மை, 10 ஏக்கர் வசதியான நிலம், நம்பிக்கையான உறுதிப் பத்திரங்களைப் பெற முடியாமை, மற்றும் நிலத்துக்கான அபரிமிதமான விலை ஆகியன இச் சவால்களில் சில. திரு. வியாழேந்திரன் பா.உ. அவர்களின் கடும் முயற்சியின் பின்னரும் உகந்த நிலத்தைக் கொள்வனவு முடியாமல் போனது மட்டுமல்லாது காலமும் நீடித்துக் கொண்டு போவதயும் மனதில் கொண்டு கனடிய தமிழர் பேரவை இப் பண்ணைத் திட்டத்தை நிறைவேறுவதற்கான மாற்று வழிகளையும் ஆராய்ந்தது.

இம் மாற்று வழிக்கான தேடலின் பிரகாரம் மட்டக்களப்பு அரச அதிபரின் உதவியுடன் பண்ணைக்கு உகந்த அரச நிலமொன்றைக் நீண்டகாலக் குத்தகைக்கு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக் குத்தகைக்கான விண்ணப்பம் 2018 முற்பகுதியில் மனுச் செய்யப்பட்டது. பல நிர்வாகத் தடங்கல்களைச் சந்தித்த போதும் கனடிய தமிழர் பேரவை அனுமதிப் பத்திரத்தைப் பெற்று பண்ணையைச் செயற்பட வைக்கவேண்டுமென்பதில் சிரத்தையுடன் செயற்படுகிறது. மட்டக்களப்பு பிரதேச மக்களின் நன்மை கருதி இத் திட்டம் விரைவில் செயற்பட ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கையுடன் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.

இப் பண்ணைத் திட்டத்துக்கான பணத்தைக் கனடிய தமிழர் பேரவை மோசடி செய்து விட்டது என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றம் சாட்டுவது கனடிய தமிழர் பேரவையை அவமதிக்கும் உள்நோக்கங்களைக் கொண்டதாகும். இவ் திட்டத்திற்காக திரு. வியாழேந்திரன் பா.உ. விற்கு கனடியத் தமிழர் பேரவை பணமெதுவும் வழங்கவில்லை என்பதை என்பதை உறுதி செய்கிறது.

கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணைத் திட்டத்துக்காகச் சேகரிக்கப்பட்ட நிதி கனடிய வங்கி ஒன்றில் பிரத்தியேக கணக்கில் சேமிப்பில் உள்ளது. இப் பணம் பேரவையின் வேறெந்தச் செலவீனங்களுக்காகவோ அல்லது சிறீலங்காவிலுள்ள தனிப்பட்ட அல்லது அமைப்புக்களின் தேவைகளுக்கோ பாவிக்கப்பட மாட்டாது என்பதைக் கனடிய தமிழர் பேரவை உறுதி செய்கிறது. அத்தோடு, பண்ணை நிலத்துக்கான பத்திரம் கிடைத்தவுடன் கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணையின் செயற்பாட்டை கனடிய தமிழர் பேரவை நேரடியாகவோ அல்லது பேரவையின் நம்பிக்கையான உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாகவோ ஆரம்பிக்கும்.

கனடா - மட்டக்களப்பு பண்ணைத் திட்டம் மட்டுமல்லாது எமது இதர பல திட்டங்களையும் செவ்வனே முடித்து வைப்பதில் கனடிய தமிழர் பேரவை மிக உறுதியுடன் உள்ளது.

கனடிய தமிழர் சமூகத்தின் உதவியுடன் எமது தாய் நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் அயராது உழைக்கும்.

மேலதிக விளக்கம் மற்றும் தகவல்களுக்கு 416-240-0078 என்ற இலக்கத்தைத் தயவு செய்து அழைக்கவும்.

நன்றி

கனடிய தமிழர் பேரவை

http://ekuruvi.com/tamil-canadian-walk-by-ctc/?fbclid=IwAR1HZFwshdPm0fCqzdv44Au2KSvxeGCt2I3BUGvU8O8rdPtNApPjwJ6BspE

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அமல் சார் 

பொய் சொல்லி திரிவதை விட உன்மையை சொல்லி விலகி ஏதாவது கிழக்கிற்கு செய்யலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

                                                                             #########################################

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் அமல் சார் 

பொய் சொல்லி திரிவதை விட உன்மையை சொல்லி விலகி ஏதாவது கிழக்கிற்கு செய்யலாம் 

கிழக்கு மாகாணத்தில் அன்று தொடக்கம் நடக்கும் குத்துக்கரணங்கள் தானே. பழகிப்போச்சிது.......அப்ப பொத்துவில்லை அடிக்க வெளிக்கிட்ட குத்துக்கரணம் இப்பவும் தொடர்ந்து கொண்டேயிருக்குது

என்ன ஒண்டு உவ்வளவு குத்துக்கரணங்கள் அடிச்சும் கிழக்குமாகாணம் இன்னும் வளர்ச்சியடையவேயில்லை எண்டது கவலைக்குரிய விசயம் கண்டியளோ..tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் போல் தனியவே தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியல்ல என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல இன்று காத்தான்குடி ஜொலிக்கும் அழகுக்கு மட்டக்களப்பும் நகரும் அந்தளவுக்கு இல்லை காரணம் அரசியலில் பின் தங்கியும் அபிவிருத்தியற்றதாகவே இன்றுவரை காணப்படுகிறது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி  ஒரு கரண்டு கம்பத்துக்கு லைட்டு போட கூட முடியலை  

அமைச்சு பதவி பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்களை பற்றி சிந்தித்தால் கிழக்கு ஏன் அபிவிருத்தியடையவில்லை என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்வீர்கள் :90_wave: 

  • கருத்துக்கள உறவுகள்

கோழிக்குஞ்சு வளர்ப்பதும் மாட்டுப்பண்ணை வைப்பதும்தான் புலம்பெயர் தமிழர் பார்வையில் அபிவிருத்தி என்று வியாழேந்திரன் புரிந்துகொண்டார்.

இப்போது கிழக்குமாகாண அபிவிருத்திக்கு என வரும் பணத்தில் ஊழல் செய்து சம்பாதிப்பாரா அல்லது கிழக்கை முன்னேற்றுவரா? எனக்கென்னவோ கருணா, ஆறுமுகன், டக்ளஸ் கணக்கில் பெரிய பணக்காரன் ஆகுவார் என்றுதான் தெரியுது!

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் போல் தனியவே தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியல்ல என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல இன்று காத்தான்குடி ஜொலிக்கும் அழகுக்கு மட்டக்களப்பும் நகரும் அந்தளவுக்கு இல்லை காரணம் அரசியலில் பின் தங்கியும் அபிவிருத்தியற்றதாகவே இன்றுவரை காணப்படுகிறது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி  ஒரு கரண்டு கம்பத்துக்கு லைட்டு போட கூட முடியலை  

அமைச்சு பதவி பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்களை பற்றி சிந்தித்தால் கிழக்கு ஏன் அபிவிருத்தியடையவில்லை என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்வீர்கள் :90_wave: 

மட்டக்களப்பில் இருக்கும் பெரிய வர்த்தக நிலையங்கள் எதுவும் தமிழ் மக்களுக்கு சொந்தமில்லை என்றும் முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறிய தமிழ் வர்த்தகர்களை கருணா புலிகளை விட்டு பிரிந்த பின் துரத்தி அடித்து விட்டதால் மட்டக்களப்பின் வர்த்தகம் முழுதும் முஸ்லிம்களிடம் சென்று விட்டது என்று துரைரத்தினம் தன் புத்தகத்தில் எழுதி இருக்கின்றார். அத்துடன் தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு சிறு தொழில் கூடம் கூட இல்லையெனவும், தமிழ் மக்கள் தம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் தேர்தலில் கூட பெரியளவில் பங்கு கொள்வதில்லை எனவும் அறிய முடிந்தது.

ஹிஸ்புல்லாவை தம் பகுதியில்  மாலை  மரியாதையுடன் பல தமிழர்கள் வரவேற்று கூட்டம் நடத்த அனுமதிக்கும் அதே வேளை, முஸ்லிம் பகுதிக்குள் ஒரு தமிழ் அரசியல்வாதி கூட போக முடியாது என சொல்கின்றார்.
நிலமை இப்படி எனில் மட்டு எப்படி ஜொலிக்கும்?

25 minutes ago, குமாரசாமி said:

கிழக்கு மாகாணத்தில் அன்று தொடக்கம் நடக்கும் குத்துக்கரணங்கள் தானே. பழகிப்போச்சிது.......அப்ப பொத்துவில்லை அடிக்க வெளிக்கிட்ட குத்துக்கரணம் இப்பவும் தொடர்ந்து கொண்டேயிருக்குது

..tw_glasses:

வடக்கில் இருந்து அன்றில் இருந்து இன்று வரைக்கும் குத்துகரணம் அடிக்கும் அடித்த டக்கிளஸ், சபாரத்தினம், சித்தார்த்தன், மாணிக்கதாசன், மண்டையன் குழு ரவுடி சுரேஸ்பிரேமச்சந்திரன், அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோர் எல்லாம் என்னமாதிரி?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மட்டக்களப்பில் இருக்கும் பெரிய வர்த்தக நிலையங்கள் எதுவும் தமிழ் மக்களுக்கு சொந்தமில்லை என்றும் முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறிய தமிழ் வர்த்தகர்களை கருணா புலிகளை விட்டு பிரிந்த பின் துரத்தி அடித்து விட்டதால் மட்டக்களப்பின் வர்த்தகம் முழுதும் முஸ்லிம்களிடம் சென்று விட்டது என்று துரைரத்தினம் தன் புத்தகத்தில் எழுதி இருக்கின்றார். அத்துடன் தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு சிறு தொழில் கூடம் கூட இல்லையெனவும், தமிழ் மக்கள் தம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் தேர்தலில் கூட பெரியளவில் பங்கு கொள்வதில்லை எனவும் அறிய முடிந்தது.
ஹிஸ்புல்லாவை தம் பகுதியில்  மாலை  மரியாதையுடன் பல தமிழர்கள் வரவேற்று கூட்டம் நடத்த அனுமதிக்கும் அதே வேளை, முஸ்லிம் பகுதிக்குள் ஒரு தமிழ் அரசியல்வாதி கூட போக முடியாது என சொல்கின்றார்.
நிலமை இப்படி எனில் மட்டு எப்படி ஜொலிக்கும்?

யாழ்ப்பாண வர்த்தகர்களை விரட்டியடித்த கருணா  அதற்கு முன்பே பல கடைகள் முஸ்லீம்களுக்கு  விற்கப்பட்டு விட்டது ஒரு சில கடைகள் தான் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது அப்படி கருணா வெளியேற சொன்ன போது முஸ்லீம்களுக்கு ஏன் விற்க வேண்டும் கடைக்காரர்கள் ?? தமிழர்களுக்கு ஏன் விற்கவில்லை?

தமிழர்கள் வாங்க முன்வரவில்லையென்றால் இழுத்து அடைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும் நீங்கள் கூறியது போல கர்ணா போக சொன்னதும்  ஒட்டு மொத்த யாழ் வர்த்த்க தமிழர்கள் விட்டு செல்லவில்லை கடைகளை 

எப்ப  பாரு வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவல்ல கட்சி புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று வாக்கு போட்டு  ஏமாந்ததுதான் மிச்சம் 

ஒரு மின்குமிழை கூட போட முடியாமல் , ஒரு அபிவிருத்தியை கூட பார்க்க முடியாது போகுமிடத்து ஒரு மாற்று இன எம்பியால் முடியுமாக இருந்தால் அவரை மாலைபோட்டும் , பண்ட் வாத்திய குழு அமைத்தும் வர்வேற்பதில் என்ன தவறு  ஹிஸ்புல்லாவால் அரச காரியங்களுக்கு சில நன்மைகள் தேடி சென்ற போது அவரால் அரச எம்பியால் கைகூடும் போது அவரை வரவேற்பதில் என்ன தவறு 

ஆனால் அபிவிருத்திய விரும்பாத நம்ம சனங்கள் மக்கள் உரிமையையும், வட கிழக்கு இணைப்பும் விரும்பிய மக்கள் அது இல்லையென்று ஜனாதிபதியே கூறிய பின்பு கூட்டமைப்புக்கு வால் பிடிக்காமல் விலகுவது என்னை பொறுத்தவரைக்கும் நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  தமிழரசுக்கட்சியை  சேர்ந்தவரல்லவே...

புளட்டை  சேர்ந்தவராச்சே..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இவர்  தமிழரசுக்கட்சியை  சேர்ந்தவரல்லவே...

புளட்டை  சேர்ந்தவராச்சே..

ஒரே குட்டைதான் குழம்பாதீங்க ஒரு தட்டில் இருக்கும் சோறு பலகறிகளைத்தான் சோற்றுப்பார்சல்:35_thinking:

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாண வர்த்தகர்களை விரட்டியடித்த கருணா  அதற்கு முன்பே பல கடைகள் முஸ்லீம்களுக்கு  விற்கப்பட்டு விட்டது ஒரு சில கடைகள் தான் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது அப்படி கருணா வெளியேற சொன்ன போது முஸ்லீம்களுக்கு ஏன் விற்க வேண்டும் கடைக்காரர்கள் ?? தமிழர்களுக்கு ஏன் விற்கவில்லை?

தமிழர்கள் வாங்க முன்வரவில்லையென்றால் இழுத்து அடைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும் நீங்கள் கூறியது போல கர்ணா போக சொன்னதும்  ஒட்டு மொத்த யாழ் வர்த்த்க தமிழர்கள் விட்டு செல்லவில்லை கடைகளை 

மட்டக்களப்பு தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பவில்லை எனும் போது எப்படி வாங்கி இருப்பர்?கடையை விட்டு துரத்தி அடிக்கும் போது சும்மா விட்டுட்டு போகும் அளவுக்கு வியாபாரிகள் முட்டாள்கள் இல்லை தனி.

சரி, ஏன் தமிழ் மக்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை?

18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு மின்குமிழை கூட போட முடியாமல் , ஒரு அபிவிருத்தியை கூட பார்க்க முடியாது போகுமிடத்து ஒரு மாற்று இன எம்பியால் முடியுமாக இருந்தால் அவரை மாலைபோட்டும் , பண்ட் வாத்திய குழு அமைத்தும் வர்வேற்பதில் என்ன தவறு  ஹிஸ்புல்லாவால் அரச காரியங்களுக்கு சில நன்மைகள் தேடி சென்ற போது அவரால் அரச எம்பியால் கைகூடும் போது அவரை வரவேற்பதில் என்ன தவறு 

இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதம் இல்லையா? அதுவும் தமிழ் மக்களை விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியை தம் தனிப்பட்ட நலனுக்காக வரவேற்பது? இதை போன்ற ஒன்றை தானே ஒட்டுக் குழுக்களும் 2009 வரைக்கும் செய்தன.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, நிழலி said:

மட்டக்களப்பில் இருக்கும் பெரிய வர்த்தக நிலையங்கள் எதுவும் தமிழ் மக்களுக்கு சொந்தமில்லை என்றும் முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறிய தமிழ் வர்த்தகர்களை கருணா புலிகளை விட்டு பிரிந்த பின் துரத்தி அடித்து விட்டதால் மட்டக்களப்பின் வர்த்தகம் முழுதும் முஸ்லிம்களிடம் சென்று விட்டது என்று துரைரத்தினம் தன் புத்தகத்தில் எழுதி இருக்கின்றார். அத்துடன் தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு சிறு தொழில் கூடம் கூட இல்லையெனவும், தமிழ் மக்கள் தம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் தேர்தலில் கூட பெரியளவில் பங்கு கொள்வதில்லை எனவும் அறிய முடிந்தது.

ஹிஸ்புல்லாவை தம் பகுதியில்  மாலை  மரியாதையுடன் பல தமிழர்கள் வரவேற்று கூட்டம் நடத்த அனுமதிக்கும் அதே வேளை, முஸ்லிம் பகுதிக்குள் ஒரு தமிழ் அரசியல்வாதி கூட போக முடியாது என சொல்கின்றார்.
நிலமை இப்படி எனில் மட்டு எப்படி ஜொலிக்கும்?

வடக்கில் இருந்து அன்றில் இருந்து இன்று வரைக்கும் குத்துகரணம் அடிக்கும் அடித்த டக்கிளஸ், சபாரத்தினம், சித்தார்த்தன், மாணிக்கதாசன், மண்டையன் குழு ரவுடி சுரேஸ்பிரேமச்சந்திரன், அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோர் எல்லாம் என்னமாதிரி?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர் பட்டியலில்  யார் தனது சொந்தக்கட்சி மூலம் தேர்தலில் நின்று வெற்றியீட்டிவிட்டு சிங்கள கட்சிக்கு அல்லது அமைச்சு பதவிக்கு தாவியவர்கள்?

ஆனால் கிழக்குமாகாணத்தில் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

மட்டக்களப்பு தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பவில்லை எனும் போது எப்படி வாங்கி இருப்பர்?கடையை விட்டு துரத்தி அடிக்கும் போது சும்மா விட்டுட்டு போகும் அளவுக்கு வியாபாரிகள் முட்டாள்கள் இல்லை தனி.

சரி, ஏன் தமிழ் மக்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை?

இன்றுவரைக்கும் நம்ம முன்னோர்கள் அவர்களை வியாபாரியாக பார்த்தார்கள் மற்றது கூட்டி துடைப்பதென்றாலும் அரசாங்க வேலையில் கூட்டி துடைக்க வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்  இன்னும் வியாபாரம் கற்றுக்கொள்ளவில்லை நம்ம ஆட்கள் 

 பிள்ளை (நம்ம) படித்து முடித்த பிறகு வேலைக்காகவே ஓடுவார்கள் அவர்கள் அப்படி இல்லை வேலை ஒன்றை கற்றுக்கொள்வார்கள் ( வியாபாரத்தை ) நம்ம ஆட்கள்  30 நாட்களில் அரசில் ஊண்டி இருந்து சம்பளம் பெறுவார்கள் கெளரவமாக அதையே அவர்கள் அன்றே பெற்று பாரிய முதலாளியாகிறார்கள் 

வியாபாரத்தை இதுவரை கற்றுக்கொள்ளவில்லை நம்மவர்கள் 

20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எப்ப  பாரு வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவல்ல கட்சி புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று வாக்கு போட்டு  ஏமாந்ததுதான் மிச்சம் 

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த நீங்களே இப்படி தவறாக கூறுவது வேடிக்கையாக இருக்குது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் அது உண்மையாகாது

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. கிழக்கிலங்கை பத்திரியாளர் சங்கம், கிழக்கு பல்கலைகழக சமூகம் மற்றும் சில கிழக்கு புத்திசீவிகளால் உருவாக்கப்பட்டது தான் த.தே.கூ.

முதன்முதலில் த.தே.கூ தேர்தலில் போட்டியும் போது புலிகள் அவர்களுக்கு வாக்களிக்குமாறு கூட மக்களை கேட்டிருக்கவில்லை. வேட்பாளர்கள் கூட முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டது

ஆனால் பின்னாளில் புலிகள் த.தே.கூ இனை தம் தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கி அவர்களின் உத்தியோகப்பற்றற்ற அரசியல் கட்சி போல ஆக்கியிருந்தனர்.

4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர் பட்டியலில்  யார் தனது சொந்தக்கட்சி மூலம் தேர்தலில் நின்று வெற்றியீட்டிவிட்டு சிங்கள கட்சிக்கு அல்லது அமைச்சு பதவிக்கு தாவியவர்கள்?

ஆனால் கிழக்குமாகாணத்தில் இருக்கின்றார்கள்.

உண்மைதான். ஆனால் வெறும் 50 தமிழ் வாக்குகளால் தெரிவு செயப்பட்டு தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி சிங்களத்துக்கு பயங்கரவாத தடை சட்டத்துக்கும் ஆதரவு கொடுத்த  ஆட்கள் வடக்கில் இருந்து தான் வந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதம் இல்லையா? அதுவும் தமிழ் மக்களை விரோத மனப்பான்மையுடன் பார்க்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியை தம் தனிப்பட்ட நலனுக்காக வரவேற்பது? இதை போன்ற ஒன்றை தானே ஒட்டுக் குழுக்களும் 2009 வரைக்கும் செய்தன.

கிழக்கினை பொறுத்தவரைக்கும் எப்போது வடகிழக்கு பிரிக்கப்பட்டதோ அன்றிலிருந்து சந்தர்ப்பத்தை பயன் படுத்த த்வறியுள்ளார்கள் ஓர் பெண் ஆசிரியர் கற்பிணியாக இருக்கும் காலத்தில் தனக்கான இடமாற்றத்தை கோரி ஒர் நம்ம எம்பியை தேடி போகிறார் மாற்றம் செய்து தரும் படி இலங்கை நிலவரப்படி பெரிய ஒருவரின் சிபாரிசு தேவை அவரால் முடியாது என்று சொல்ல மாற்று இனத்தவரிடம் செல்ல அந்த மாற்றத்தை செய்து கொடுக்கும் போது அந்த நிலையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் 

 ஆனால் ஒட்டுக்குழு ஒரு சிலரை பாதுகாக்கவே செய்தது மக்களை அல்ல :90_wave:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த நீங்களே இப்படி தவறாக கூறுவது வேடிக்கையாக இருக்குது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் அது உண்மையாகாது

தனியின்  அண்மைய  கருத்துக்களை நீங்கள்  கவனிக்கவில்லை  என்று நினைக்கின்றேன்

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் அமல் சார் 

பொய் சொல்லி திரிவதை விட உன்மையை சொல்லி விலகி ஏதாவது கிழக்கிற்கு செய்யலாம் 

33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு மின்குமிழை கூட போட முடியாமல் , ஒரு அபிவிருத்தியை கூட பார்க்க முடியாது போகுமிடத்து ஒரு மாற்று இன எம்பியால் முடியுமாக இருந்தால் அவரை மாலைபோட்டும் , பண்ட் வாத்திய குழு அமைத்தும் வர்வேற்பதில் என்ன தவறு  ஹிஸ்புல்லாவால் அரச காரியங்களுக்கு சில நன்மைகள் தேடி சென்ற போது அவரால் அரச எம்பியால் கைகூடும் போது அவரை வரவேற்பதில் என்ன தவறு 

ஆனால் அபிவிருத்திய விரும்பாத நம்ம சனங்கள் மக்கள் உரிமையையும், வட கிழக்கு இணைப்பும் விரும்பிய மக்கள் அது இல்லையென்று ஜனாதிபதியே கூறிய பின்பு கூட்டமைப்புக்கு வால் பிடிக்காமல் விலகுவது என்னை பொறுத்தவரைக்கும் நல்லது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.