Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்; பொலிசார் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்; பொலிசார் அதிருப்தி: உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

By admin -
204008_3.jpg சித்தரிப்பு படம்

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் பொலிசார் விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடி எற்பட்டதென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திர கடுமையான அதிருப்தியடைந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (06)  சண்டே ரைம்ஸ் ஆங்கில இதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பளையில் கஞசாவுடன் கைதான கடத்தல்காரர்களையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அழுத்தம் கொடுத்து விடுவித்துள்ளார். இந்த விவகாரம் உயர்மட்டத்திற்கு சென்றதையடுத்து, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயர்மட்ட விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

பளை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றை பற்றிய தகவல் கிடைத்ததும், பொலிஸ் சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர் என்றும், கஞ்சா கடத்தல்காரர்கள் பொலிசாரை தாக்கினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மேலதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட, மேலதிக பொலிசார் அனுப்பப்பட்டு கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “கஞ்சா கடத்தியமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது சுமத்தும் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக்தி மிக்க ஒருவர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினார். “நீங்கள் கைது செய்து வைத்திருப்பவர்கள் எமது ஆதரவாளர்கள். அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்“ என கட்டளையிடும் பாணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மறுபேச்சின்றி கஞ்சா கடத்தல்காரர்களை விடுதலை செய்தார்.

கைதான சந்தேகநபர்களில் ஒருவர், குறிப்பிட்ட அரசியல்வாதியின் வாகன சாரதியின் சகோதரர் ஆவார். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர்- ‘இவர்கள் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றுகிறார்கள்?’ என கோபமாக கேட்டார்“ என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்த விடயத்தை பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக உள்ளதால், இந்த விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.pagetamil.com/31264/

கஞ்சாக்கடத்தல்காரர்கள் விடுதலை விவகாரம்; யார் அந்த கூட்டமைப்பு பிரமுகர்?… பின்னணியில் நடந்தது என்ன?- முழுமையான விபரங்கள்!

By admin -
unm.jpg

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைதானவர்களை விடுவிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக முக்கியமான ஒருவர் உத்தரவிட்டார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலை காலையில் தமிழ்பக்கத்தில் வெளியிட்டோம்.

இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்று தமிழ்பக்கமும் ஆராய்ந்தது. இதன்போது மேலதிகமாக சில தகவல்களை பெற்றுக்கொண்டோம். அதை வாசகர்களிற்காக தருகிறோம்.

முதலில், பொலிசாருக்கு உத்தரவிட்ட கூட்டமைப்பின் பிரமுகர் யார் என்ற கேள்வி வாசகர்களிற்கு இருக்கும். அவரை நாமும் வெளிப்படையாக அடையாளப்படுத்தவில்லை. காரணம், இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்றுதான் தெரிகிறது.

காகம் இருக்க பனம்பழம் விழுவது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறதென, உள்ளார்ந்த ரீதியில் சம்பவங்களை அறிந்தபோது தெரிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியொருவர் என்றளவில் அவர் பற்றிய அடையாளங்களை முடித்துக் கொள்கிறோம்.

நான்கைந்து தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறிப்பிட்ட எம்.பி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்திருக்கிறார். பொதுவாக நமது எம்.பிக்கள் பின்னிரவில்தான் கொழும்பிலிருந்து புறப்படுவார்கள். அதிகபட்சமாக கொழும்பு-யாழ்ப்பாண பயணத்திற்கு ஐந்து மணித்தியாலங்களை மட்டுமே செலவிடுவார்கள் பல எம்.பிக்கள். இந்த எம்.பியும் அப்படியானவர்தான்.

பின்னிரவில் புறப்பட்டு, வாகனத்தின் தூக்கத்தில் இருந்திருக்கிறார். அப்போது சாரதி திடீரென வாகனத்தை நிறுத்தி, தனது தம்பியை பொலிசார் கைது செய்துள்ளனர், அவர் பல்கலைகழக பட்டதாரி, சட்டத்தரணியை திருமணம் செய்தவர், காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப் போகிறார்கள், எப்படியாவது பொலிசில் கதைத்து விடுவிக்க வேண்டுமென கேட்டார்.

அதுதான், அந்த எம்.பிக்கு வில்லங்கம் பிடித்த கணம்.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். பொதுவாகவே எல்லா விடயத்திலும் பயங்கர கில்லாடியான எம்.பி,இப்படியான விசயங்களில் சட்டநுணுக்கங்களையெல்லாம் பார்ப்பார். ஆனால் பல வருடங்களாக தன்னுடன் சாரதியாக இருப்பவரின் நம்பிக்கையிலோ என்னவோ, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி தொடர்பேற்படுத்தி, அவரை விடுதலை செய்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

அவர்களை கைது செய்தது பெரிய ஒப்ரேசன் ஒன்று. பளை பொலிசார் அதற்காக பெரிய ரிஸ்க் எடுத்திருந்தார்கள். கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கை சேர்ந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். சக்தி மிக்க பிரமுகரே சொல்லிவிட்டாரே… பொலிஸ் பொறுப்பதிகாரி, அவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

விசயம் அத்துடன் முடிந்ததென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால், அதன்பின்னர்தான் வில்லங்கமே ஆரம்பித்தது. எவ்வளவு சிரப்பட்டு கஞ்சாவுடன் நாங்கள் கைது செய்ய, அரசியல்வாதிகளின் தலையீட்டில் விடுவதென்றால் இனி நாங்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்கவே போகவில்லையென பளை பொலிஸ்நிலைய மற்றும் தொடர்புடைய இளநிலை பொலிஸ் அதிகாரிகள் திணைக்களத்திற்குள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.

இதேசமயம், பொலிஸ் மற்றும் இதர புலனாய்வு சேவை முகவர்களும் இந்த விவகாரத்தை ஒட்டி தகவல்களை சேகரித்தனர். விடுவிக்கப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல்காரர்தான், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்தி விற்கும் “பிரபல தாதா“ ஒருவரின் நேரடியான லிங் இல் இருக்கிறார்… அவரது வீட்டுக்கு அடிக்கடி புதுபுது வாகனங்கள் வந்து செல்கிறது… இதையெல்லாம் தெரிந்தும் அவர்களை ஏன் விடுவிக்க பரிந்துரைத்தீர்கள் என அந்த புலனாய்வு வட்டாரங்கள், குறிப்பிட்ட எம்.பியின் உதவியாளர்களிற்கு தகவலை பாஸ் செய்திருந்தார்கள். அவர்கள் தகவல் கொடுத்தது நேற்று மதியம்!

இந்த தகவலை கேட்ட உதவியாளர்களிற்கு தலை விறைக்க ஆரம்பித்திருக்கிறது.

நேற்று மாலையே உதவியாளர்கள் பளை, வடமராட்சி கிழக்கு பகுதிகளிற்கு சென்று என்ன நடந்தது என்பதை விசாரித்திருக்கிறார்கள்.

கஞ்சாவுடன் பிடிபட்டவர்களை குறிப்பிட்ட எம்.பி நேரடியாக தலையிட்டு விடுதலை செய்வித்தார் என்று ஊருக்குள்ளே காட்டுத்தீயாக தகவல் பரவியிருந்தது. எப்படி தகவல் பரவியிருந்தது தெரியுமா?

விடுதலையான நால்வரும் ஊருக்குள் போய்- “நாம் யார் தெரியுமா? “அந்த எம்.பியின்“ ஆட்கள். “சாமானுடன்“ பிடிபட்டும் வந்துவிட்டோம் பார்த்தீர்களா?“ என கொலரை தூக்கி விட்டிருக்கிறார்கள். இதனால் வடமராட்சி கிழக்கு, பளை பகுதிகளில் இந்த தகவல் பரவலாக அடிபட்டுள்ளது.

உதவியாளர்கள் பரபரப்புடன் திரும்பி வந்து, நேற்று மாலைதான் குறிப்பிட்ட எம்.பியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். எம்.பிக்கும் பயங்கர அதிர்ச்சி. தனது பரிந்துரையில் விடுவிக்கப்பட்டவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டு உள்ளதென்பதையும், இந்த விவகாரம் இவ்வளவு சீரியசாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நேற்று மாலை- உதவியாளர்கள் சொன்னபோதுதான்- எம்.பி அறிந்து கொண்டார்.

எம்.பி திட்டமிட்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றினார் என கொள்ள முடியாது. அவரது பெயரையும், புகழையும் சிலர் தவறாக பாவிக்க முயன்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட எம்.பியின் சறுக்கல் என்னவென்றால், தனது நம்பிக்கைக்குரிய சாரதியென்றாலும், பரிந்துரைப்பதற்கு முன்னதாக கொஞ்சம் அவதானமாக இருந்திருக்கலாம் என்பதே. இலங்கை அரசியலில் ஒரு கலக்கு கலக்கிய அதீத தன்னம்பிக்கையோ என்னவோ- இதெல்லாம் சின்ன விசயமாக இருக்கலாம் என்ற நினைப்பில்- எம்.பி அலட்சியமாக இருந்து விட்டார்.

தனது நம்பிக்கைக்குரிய சாரதிக்காக பரிந்துரைத்தது தன்னை இவ்வளவு பெரிய வில்லங்கத்தில் விழுத்துமென அந்த எம்.பி நினைத்திருக்கமாட்டார்.

பொதுவாக எல்லா அரசியல்கட்சிகளின் எம்.பிக்கள் மீதும் தமிழ்பக்கமும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளதுதான். அரசியல்ரீதியாக அவர்கள் தவறிழைத்தபோது, பிழையான முடிவுகளை எடுத்தபோது அவற்றை நேருக்கு நேராக சுட்டிக்காட்டினோம். ஆனால், இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியொருவரை அடையாளம் காட்டாமல், அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியதற்கு காரணம்- இது மேலே குறிப்பிட்டதை போல தற்செயலான ஒரு சம்பவம் என்பதாலேயே.

பொறுப்பான மக்கள் பிரதிநிதியொருவர் இந்த விவகாரத்தில் கூடுதல் அவதானமாக இருந்திருக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு இடம்தான் அவரது சறுக்கல் இடம். அதை அவர் சரி செய்வார் என நம்பலாம்.

அவரது அரசியல் எதிரிகள் இதை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கலாம். ஆனால், ஊடகமாக அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

வாசகர்களிற்கு மேலதிகமாக ஒரு கொசுறு தகவல்- நேற்று இந்த தகவல் கிடைத்ததும் எம்.பி பயங்கர அப்செட். நேற்றிரவு திட்டமிட்ட சில நிகழ்ச்சிகளையும் இரத்து செய்து விட்டார். தனது சாரதியையும் உடனடியாக நீக்கியதாக தகவல்!

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் இங்கே ஐரோப்பிய நாடொன்றில் நடைபெற்றிருந்தால்..... எம்.பி சாரதியை நீக்கியிருக்க மாட்டார் தானே நீங்கியிருப்பார்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை போட்ட தமிழ்பேஜ் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் சொன்னது உண்மைக் கதை.

பின்னால் சொன்னது சோடிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னால் சொன்னது உண்மைக் கதை.

பின்னால் சொன்னது சோடிக்கப்படுகிறது.

இப்ப அங்குள்ள தகிடுதத்த அரசியல்வாதிகளுக்கு முக்கியமாய் சம்பந்தன் ,சுமத்திரன் ,ஸ்ரீதரன் போன்றவர்களுக்கு தமிழர்களுக்கு மறதி நோய் அல்லது போதை மயக்கத்தில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க்கினம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிக்கும்படி கேட்டவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகரின் சாரதி. விடுவிக்கப்பட்ட கடத்தல்காரர் சாரதியின் தம்பி.  இதை விசாரணை செய்து செய்தியாக எழுதியவர் தேசிய கூட்டமைப்பின் பிரமுகரின் மனைவியின் சகோதரர். இந்த அரைகுறை செய்தியை தமிழ்பக்கத்தில் படிப்பவர் அடி முட்டாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vanangaamudi said:

இந்த அரைகுறை செய்தியை தமிழ்பக்கத்தில் படிப்பவர் அடி முட்டாள்.

நீங்களும் கடைசியாய் படித்து உள்ளீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் தான் தான் விடுவிக்க சொன்னேன் என்று ஒப்புக் கொண்டதாக ஜபிசி இணையத்தில் போட்டு  இருக்கு 

 

  • கருத்துக்கள உறவுகள்

49914784_2015881765164861_82671156158529

49658203_2015881758498195_52650681102887

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு பொய்யான தகவல் கொடுக்கப்பட்டது ? ; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விளக்கம்

செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை  அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம்  ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

TNA.jpg

குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில்துப்பாக்கியுடன் நின்றவர்களை  அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம்  ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

 செம்பியன்பற்றுப் பகுதியில் கடந்த 4 ஆம் திகதி ஓர் நிகழ்விற்கு செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் 3 ஆம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதியின் சில இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரித்தபோது தாங்கள் பொலிசார் எனக் கூறியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பொலிசார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத் துப்பாக்கிகளை கான்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியை காண்பிக்காது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். இதனால் அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த அதேநேரம் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப்பிடித்துள்ளனர்.

அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன்  இருந்த அனைவரும் பொலிசார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும் பளைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பளைப் பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். 

அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிசார் சீருடைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப் பொலிசார் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும் தாம் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் எனப் பளை பொலிசாரிடம் தெரிவித்தனர். இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.

குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. 

 

http://www.virakesari.lk/article/47611

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ முழு பூசணிக்காயை சுமத்திரன் ஒரே விழுங்கில் விழுங்கி விட்டார் .

இதெல்லாம் அந்தாளுக்கு ஜூ ஜுப்பி ஒரு இன அழிப்பையே சிம்பிளா இல்லை என்று சொன்னவர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சுமத்திரன் தான் தான் விடுவிக்க சொன்னேன் என்று ஒப்புக் கொண்டதாக ஜபிசி இணையத்தில் போட்டு  இருக்கு 

 

தமிழ் பேஜில் முதல் செய்தி வந்தபோதே சுமத்திரன் என்று முகநூல் கூட்டம்கள்  சூடம் அடித்து சத்தியம் செய்து கொண்டவை  செய்தி உண்மை சுமத்திரன் சம்பந்தபட்டு இருப்பதால் கொழும்பில் இருந்து பிரசர் குடுத்து நடந்த சம்பவத்தை தலைகீழாக்கி சொல்லுவினம் என்றும் எதிர்வு கூறி விட்டினம் இனி என்ன சுமத்திரன் செய்த செயலுக்கு வெள்ளையடிச்சாச்சு .

ஆனால் பாருங்கோ அந்த கஞ்சா வியாபாரிகள் ஊருக்குள் போய் தங்களை ஒருத்தரும் ஒண்டும் பிடுங்க ஏலாது என்றதை ஊர் மக்கள் பார்த்து இருக்கினம் அதை எப்படி மூடி மறைக்க போகினம் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

எப்படியோ முழு பூசணிக்காயை சுமத்திரன் ஒரே விழுங்கில் விழுங்கி விட்டார் .

இதெல்லாம் அந்தாளுக்கு ஜூ ஜுப்பி ஒரு இன அழிப்பையே சிம்பிளா இல்லை என்று சொன்னவர் .

கவலைப்படாதேங்கோ சம்சும் கொம்பனி தமிழ்ச்சனத்துக்கு நல்லது செய்யும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கவலைப்படாதேங்கோ சம்சும் கொம்பனி தமிழ்ச்சனத்துக்கு நல்லது செய்யும்.

நம்புறம் .

😃

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி எங்கள் புலம்பெயர் ஆட்களுக்கு வடக்கில் இருக்கும் சிங்கள பொலிஸ் மீது நம்பிக்கை வந்து விட்டது! (அல்லது இது சம்பந்தப் பட்ட தரப்பு தங்களுக்குப் பிடிக்காத சும் என்பதால் வந்த நம்பிக்கையா? இருக்காது! )

  • கருத்துக்கள உறவுகள்

903249998m-a-sumanthiran-%E0%AE%9F-720x450.jpg

ஆங்கில பத்திரிகையின் ‘கஞ்சா கதை’க்கு சுமந்திரன் விளக்கம்

கஞ்சா கடத்திய சந்தேகநபர்களை விடுவிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் உத்தரவு’ என இலங்கையின் முன்னணி ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தமைக்கு பதிலளித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், ‘செம்பியன்பற்றுப் பகுதியில் கடந்த 4ஆம் திகதி நிகழ்விற்கு செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் 3ம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதியின் சில இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரித்தபோது தாங்கள் பொலிஸார் எனக் கூறியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பொலிஸார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத்துப்பாக்கிகளை காண்பித்துள்ளனர்.

இதன்காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியை காண்பிக்காது அடையாள அட்டையை காட்டுமாறு கோரியுள்ளனர். இதனால் அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த அதேநேரம், அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப் பிடித்துள்ளனர். அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன்  இருந்த அனைவரும் பொலிஸார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இருப்பினும் பளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பளை பொலிஸாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிஸார் சீருடையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப்பொலிஸார், பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும் தாம் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் எனப் பளை பொலிஸாரிடம் தெரிவித்தனர். இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்புகொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஒர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை” என சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

http://athavannews.com/ஆங்கில-பத்திரிகையின்-கஞ/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பக்க செய்தியாசிரியர் சும்மின் பெயரை மறைத்து அவரை காப்பாற்றி கரைசேர்க்க முயற்சிக்க இப்போது சும் தானே சுழியோடுவேன் நீச்சல்தெரியும் என்று சொல்லி வந்துவிட்டார். தமிழ்பக்கமும் பல்லுப்பிடுங்கிய  பாம்பாக சுருண்டுவிட்டதா அல்லது எஞ்சியிருக்கும் அரைகுறை செய்தியை என்னவென்று அதன் வாசகருக்கு சொல்லி உண்மையை வெளியிடப்போகிறதா?

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி செய்தி ஆசிரியர் தான் மனைவியின் தம்பியில்லையாம் சின்னவீட்டின் தம்பியாம். 

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஒரு மாதிரி எங்கள் புலம்பெயர் ஆட்களுக்கு வடக்கில் இருக்கும் சிங்கள பொலிஸ் மீது நம்பிக்கை வந்து விட்டது! (அல்லது இது சம்பந்தப் பட்ட தரப்பு தங்களுக்குப் பிடிக்காத சும் என்பதால் வந்த நம்பிக்கையா? இருக்காது! )

இங்கு போலிஸ் மீது நம்பிக்கை வந்துள்ளது என்று எங்கு எழுதப்பட்டுள்ளது ? 

உங்கடை ஆள் வலு கெட்டிக்காரர் முதலில் சாரயதவறனை இப்ப கஞ்சா இனி பவுடரில் தானாக்கும் ....................

12 hours ago, Justin said:

ஒரு மாதிரி எங்கள் புலம்பெயர் ஆட்களுக்கு வடக்கில் இருக்கும் சிங்கள பொலிஸ் மீது நம்பிக்கை வந்து விட்டது! (அல்லது இது சம்பந்தப் பட்ட தரப்பு தங்களுக்குப் பிடிக்காத சும் என்பதால் வந்த நம்பிக்கையா? இருக்காது! )

சம்சும் விசிறிகளுக்கு ஒருமாதிரி சிங்கள பொலிஸ் மீது நம்பிக்கை போய்விட்டது என்டும் சொல்லலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎6‎/‎2019 at 9:34 PM, பெருமாள் said:

தமிழ் பேஜில் முதல் செய்தி வந்தபோதே சுமத்திரன் என்று முகநூல் கூட்டம்கள்  சூடம் அடித்து சத்தியம் செய்து கொண்டவை  செய்தி உண்மை சுமத்திரன் சம்பந்தபட்டு இருப்பதால் கொழும்பில் இருந்து பிரசர் குடுத்து நடந்த சம்பவத்தை தலைகீழாக்கி சொல்லுவினம் என்றும் எதிர்வு கூறி விட்டினம் இனி என்ன சுமத்திரன் செய்த செயலுக்கு வெள்ளையடிச்சாச்சு .

ஆனால் பாருங்கோ அந்த கஞ்சா வியாபாரிகள் ஊருக்குள் போய் தங்களை ஒருத்தரும் ஒண்டும் பிடுங்க ஏலாது என்றதை ஊர் மக்கள் பார்த்து இருக்கினம் அதை எப்படி மூடி மறைக்க போகினம் ?

ஆனாலும் உண்மையை எதோ வகையில் ஒத்துக் கொள்ள சுமத்திரனுக்கும் ஒரு தில் ☺️இருக்கு 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

ஆனாலும் உண்மையை எதோ வகையில் ஒத்துக் கொள்ள சுமத்திரனுக்கும் ஒரு தில் ☺️இருக்கு 
 

பிரச்சனை இறுகுமெண்டால் ஒத்துக்கொள்ளத்தானே வேணும். வெளிநாடுகளை மாதிரி பதவிக்கு ஆப்பு வராதுதானே....:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.