Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸ்டர் ஆபீசரும், அவரின் புது உலகமும்

Featured Replies

அன்று மிஸ்டர் ஆபீசர் தனது அலுவலக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள். நெருங்கிய சில அலுவலக சகாக்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்று வீடு வந்தபோது அவர் மனைவி உமாவும், ஒரே ஒரு மகள் கவிதாவும் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவர் தனது அலுவலக  நினைவுகளை அசை போட்டார். நிர்வாக உதவியாளராகத் தொடங்கிய அவரது பணிக்காலத்தின் இடையே கம்ப்யூட்டர் மயமான பொழுதில் தொழிநுட்பத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக இறுதி வரை சாதாரண அலுவலராகவே வேலை செய்து ஒய்வு பெற்றார். (எனினும் அலுவலக உத்தியோகத்தர் என்னும் திமிர் அவரிடம் எப்போதுமே குடி கொண்டிருந்தது. வேலை தவிர்ந்த வெளியிடங்களில் நண்பர்கள், உறவினருடன் உரையாடும்போதும் 'எந்த ஆபிசில...' என்று ஆரம்பித்து தான் அலுவலகத்தில் வேலை செய்வதைக் காட்டிக்கொள்வார்). இதனால் தான் இவருக்கு மிஸ்டர் ஆபீசர் என்ற பட்டப்பெயர் கிடைத்தது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இவரது வீம்புப் பேச்சினாலேயே இவரது அலுவலகத்தில் சில ஊழியருடன் இவருக்குக் கருத்துவேறுபாடு முற்றி நிம்மதி இழந்து இன்று அறுபதாவது வயதில் ஓய்வெடுக்கும் நிலைக்கு வந்துள்ளார். 

அலுவலக நினைவுகளில் இருந்து மீண்டவருக்கு 'ஒய்வு பெற்றுவிட்டோம், இனி மேல் என்ன செய்யலாம்?. என்ன தான் இருந்தாலும் அலுவலகம் சென்று போது நேரம் போவது தெரியவில்லை. இனிமேல் வாழ்க்கை வெறுமையாக இருக்கப்போகிறதே. பொழுதுபோக்குக்காவது எதாவது வேலை செய்தாக வேண்டுமே' என ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது  உமாவும், கவிதாவும் வருவதைக் கண்டார். அவர்கள் வந்தவுடனே இருப்புக்கொள்ளாமல் தனது மனதில் வந்த குழப்பத்தை அவர்களிடம் இவ்வாறு பகிர்ந்தார்: "உமா, கவிதா இஞ்ச வாங்கோ. ஓய்வு பெற்று ஒரே விசராய்க்கிடக்கு. அலுவலக வேலைபோல, ஆனால்  அழுத்தம் (stress) இல்லாமல், ஆனால் ஒரே இடத்தில் இருந்து செய்யும் வேலை ஏதும் தேடுவம் என்று நினைக்கிறன். சம்பளம் பற்றிக் கவலை இல்லை. ஏதாவது செய்தாக வேணும்' என்றார்.

உடனே மகள் கவிதா சொன்னாள் "அதுக்கு முகநூலில் (Facebookல்) இணைந்தாலே போதும். நீங்க விரும்பினமாதிரி வேலை பார்க்கலாம்". 

அதற்கு ஆபீசர் சொன்னார்: "முகநூலா? என்ர அலுவலகத்திலும் அதைப்பற்றி எல்லாரும் சொல்லி இருக்கினம். உள்ள சோலியோட அதைப்பற்றி யோசிக்க நேரம் இருக்கேல. இருக்கிற வேலையையே ஒழுங்கா கம்ப்யூட்டர்ல செய்யக் காணேல. அப்படி முகநூலில் என்ன தான் விஷேஷம் இருக்கு?"

அதன் அருமை பெருமைகளை மனைவியும், மகளும் எடுத்துச் சொல்லலாயினர்; கவிதா சொன்னாள் 'இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைப் பார்க்கலாம்!'

"ஒரு சத்தமும் இல்லாமல் கொசிப் அடிக்கலாம்!" என்று உமா அடித்துவிட, 

"24 மணி நேரமும் திறந்து இருக்கும் - விரும்பிய நேரத்துக்கு வேலைக்குப் போய் வரலாம்!,
கிட்டத்தட்ட உங்கட சொந்த பிஸ்னசை மனேஜ் பண்ற மாதிரி!" என்று டெலிமார்க்கெற்றர் போல எடுத்து விட்டாள் கவிதா.

"பக்கத்து வீட்டுப் பெடியனிட்ட ஏதும் உதவி தேவை எண்டா உதில call பண்ணியும் கதைக்கலாம் - அவன் எங்க நிக்கிறானோ இல்லையோ முகநூலில் மட்டும் 24 மணி நேரமும் இருப்பான்!" என்று உமா சொல்லவும் இறுதியாக மிஸ்டர் ஆபீசர் முகநூலில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். முகநூலில் அவருக்கு Profile ஒன்று open பண்ணி, மகளும், மனைவியும் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை அவருக்கு நண்பர்களாக இணைத்து விட்டனர்.

ஆபீசர் விதம் விதமான படங்களை எடுத்துப் போட்டார்; அலுவலகத்தில் ரை கட்டியபடி எடுத்த ஒரு போட்டோ, பார்க்கில, பீச்சில மனைவி, மகளுடன் ஒரு செல்பி என குளியலறை, பள்ளியறை தவிர்த்து எல்லா இடங்களிலும் படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தார். அநீதிக்கு எதிராகப் போராடினார், முகநூலில் வீராவேசமான கருத்தெழுதி. மனித உறவுகளின் உன்னதத்தைப் பற்றி நிலைத் தகவலில் சிலாகித்து எழுதினார், இங்கே மனைவி, மகளுடன் நேரத்தைச் செலவிட நேரமின்றி. லைக்குகளும் ('Like's), வாழ்த்துக்களும் இன்ன பிற கமெண்ட்ஸ்ம் (comments) குவிந்தன. பசித்திரு-தனித்திரு-விழித்திரு என ராமலிங்க அடிகளார் ஆன்மிகத்தில் உபதேசித்ததை முகநூல் வாழ்வில் கடைப்பிடித்தார் ஆபீசர். 

போதாக்குறைக்கு அவரது பிறந்த நாளன்று வெளியே dinnerக்கு போக உமாவும், கவிதாவும் கேட்ட போது, "வெளி உலகத்திலை என்ன இருக்கு? இவ்வளவு காலமும் ஆபிஸ் ஆபிஸ் என காலத்தை வெறுமனே ஓட்டிட்டன்.  இங்க தான் (முகநூலில்) சுவாரசியமான உலகமே இருக்கு. இப்ப தானே இதுக்குள்ள இறங்கினனான். ஒரு கை பார்த்திட்டு தான் மற்ற வேலை" என்று சொல்லிவிட்டு பிறந்த நாளுக்கு வாழ்தியவர்களுக்கு நன்றி சொல்ல ஆயத்தமானார், முகநூலில். 

"இந்த முகநூலில் இவரை இணைத்தது பிழையாப் போச்சு" எனக் கவிதா சலித்துக்கொள்ள, "ஓமோம், நீ தானே எல்லாத்துக்கும் காரணம்; இந்த மனுசன் ஓய்வு பெற்றால் சமையல், தோய்சல் எண்டு எனக்கு உதவியா இருக்கும் எண்டு கனவு கண்டுகொண்டிருந்தன்..." என உமா பெருமூச்சு விட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றார். 

நாட்கள் சில சென்றன. ஒருநாள் வைகறைப் பொழுதில் மிஸ்டர் ஆபீசரின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த உமாவும், கவிதாவும் திடுக்கிட்டு விழித்தெழும்பி அவரது அறையை நோக்கி ஓடினர். அங்கே ஆபீசர் தனது தலையில் கைவைத்தபடி தன் கொம்ப்யூட்டரின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

"என்னப்பா உங்கட முகநூலை யாராவது ஹக் (hack) பண்ணிட்டாங்களா?" என்ற படி அவரருகே உமா சென்றாள், அப்படியாவது மனுசன் முகநூல் போதையை விட்டிடும் என்ற நப்பாசையில். "இல்லைப் பாரும், இந்த மூண்டு பேரும் எனக்கு நட்புக்கு அழைப்புக் (friend request) கொடுத்திருக்கிறாங்கள்" என்று அலறினார் ஆபீசர். 

"யாரப்பா அது?" என்று கவிதா கேட்க, "என்ர அலுவலகத்தில என்னோட வேலை செய்தவங்கள். இவங்களால எப்போதும் எனக்கு வேலையில் நிம்மதி இருக்கவில்லை. என்னை எப்பவும் மனேஜரிட்ட மாட்ட வைத்துக்கொண்டே இருப்பாங்கள். இவங்கட கரைச்சல் தாங்காமல் தான் நான் கொஞ்சம் வெள்ளனவே ஓய்வெடுத்திட்டன் (retired) எண்டு சொன்னனான் தானே. இப்ப முகநூலிலையும் வந்து கரைச்சல் குடுக்கிறாங்கள். ராகு, கேது, சனி மூன்றும் வந்து friend request குடுக்கிறது போல இருக்கு" ஒரே மூச்சில் சொன்னவர் "கட்டாயம் இந்த நட்பு அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள(accept) வேண்டுமோ?" என கவிதாவைப் பார்த்து அப்பாவித்தனமாகக் கேட்டார். அவள் தான் இந்த விசயத்தில் அவருடைய ஆலோசகர். 

கவிதா யோசித்துவிட்டுச் சொன்னாள் "ஏற்றுக்கொண்டால் அவங்கள் உங்களுக்கு முகநூலிலும் கரைச்சல் கொடுப்பாங்கள். ஏற்காமல் மறுத்தால் (reject) அதுவும் அவங்களுக்குத் தெரியும்" என்று சொல்ல ஆபீசர் குறுக்கிட்டு "இப்ப என்ன தான் செய்ய பிள்ளை?" என்று ஏக்கத்துடன் கேட்டார். "நீங்கள் ஒண்டுமே பண்ண வேண்டாம். அப்படியே விட்டிடுங்க. அப்படியே விட்டாலும் எப்படியாவது நோண்டப் பார்ப்பாங்கள். ஆகவே இனி முகநூலைப் பாவிக்கிறதைக் குறைத்துக் கொள்ளுங்கோ" என்று கவிதா கூற உமாவும் அதை ஆமோதித்தாள். 

இது ஆபீசருக்குச் சற்று அதிர்ச்சியாக இருத்தாலும், சற்று நேரம் யோசித்துவிட்டு நடிகர் திலகம் அழுகையை அடக்கிப் பேசும் தொனியில் சொன்னார் "எனது முகநூல் நான் கடந்த மூன்று மாத காலமாகக் கட்டியெழுப்பிய அறிவு சார்ந்த சொத்து (intellectual property). அதை இலகுவாக விட்டுவிட முடியாது. எனினும் இந்த இக்கட்டான நிலையில் அதில் அதிக நேரம் செலவிடாது, ஏதாவது ஓர் தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரமாகத் தொண்டரா (voulnteer)  வேலை செய்தாலும் நல்லது தானே".

உமாவும், கவிதாவும் இதை ஆமோதித்தனர். "இப்ப தான் உங்களைப் பிடித்த சனி (முகநூல் போதை) விலகியிருக்கு" என உமா சொல்ல, "எல்லாம் அந்த ராகு, கேது, சனியால் தான்" என ஆபீசர் குறும்பாகச் சொல்ல எல்லோரும் கலகலப்பாகச் சிரித்தனர்.

"இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.

(பின் குறிப்பு: இக்கதை  முழுக்க முழுக்கக் கற்பனையே. யாரையும் தனிப்படக் குறிப்பிடும் நோக்கிலோ அல்லது, நோகடிக்கும் நோக்கத்திற்காகவோ சித்தரிக்க முனையவில்லை. எனினும், மிஸ்டர் ஆபீசர் போன்றோரை நாம் நம் வாழ்வில் பல இடங்களில் பார்த்திருக்கலாம். மிக முக்கியமாக நமக்குள்ளேயே பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! நன்றி 😊)

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வெடுக்கிற கிழவர்கள் மனக்குறையை அனுபவித்து எழுதியிருக்கின்றிர்கள்.....அது அவர்களுக்குத் தானே நன்றாக இருக்குறது. இந்த ராகு, கேது, சனி சொந்த வீட்டை விட்டு இவர் வீட்டில உச்சம் பெற்றிடும் கவனம்.......!  😁

  • தொடங்கியவர்
11 hours ago, suvy said:

ஓய்வெடுக்கிற கிழவர்கள் மனக்குறையை அனுபவித்து எழுதியிருக்கின்றிர்கள்.....அது அவர்களுக்குத் தானே நன்றாக இருக்குறது. இந்த ராகு, கேது, சனி சொந்த வீட்டை விட்டு இவர் வீட்டில உச்சம் பெற்றிடும் கவனம்.......!  😁

ஆம், கிரகங்கள் எந்த வடிவிலும் வரலாம்! 🤣

கருத்துக்கு நன்றி சுவி அண்ணா 😊

  • தொடங்கியவர்
On 2/20/2019 at 9:47 PM, suvy said:

ஓய்வெடுக்கிற கிழவர்கள் மனக்குறையை அனுபவித்து எழுதியிருக்கின்றிர்கள்.....அது அவர்களுக்குத் தானே நன்றாக இருக்குறது. 

ஆஹா சுவி அண்ணா, கிழவர்களுக்கு என்று மட்டும் இதை எழுதவில்லை. தனிமையில் உள்ள எவருமே முகநூல் போன்ற சமூகத்தளங்களுக்கு அடிமையாகலாம் தானே! இந்தக் கதையில் வரும் ஓய்வு பெற்றவர் சிறு உதாரணம் மட்டுமே அண்ணா! நன்றி 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/20/2019 at 11:21 AM, மல்லிகை வாசம் said:

இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 5:21 AM, மல்லிகை வாசம் said:

இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள்.

யாழ்இல் எழுத நாங்க வாங்கிற பேச்சை யாடம் சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ்இல் எழுத நாங்க வாங்கிற பேச்சை யாடம் சொல்ல?

நீங்க எழுதுவதற்கு பேச்சு வாங்குறீங்க, நாங்க எழுத மூச்சு வாங்குது!

  • தொடங்கியவர்
10 hours ago, குமாரசாமி said:

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

ஆபீசர் மீது இனி கொஞ்ச காலம் மனைவியின் பார்வை இருப்பதால் யாழ்களம் மீது அவர் பார்வை தற்போதைக்கு இருக்காது போல் தெரிகிறது! 🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ்இல் எழுத நாங்க வாங்கிற பேச்சை யாடம் சொல்ல?

எல்லா இடமும் இதே கதை தான் போலிருக்கு, அண்ணை! 😀

1 hour ago, ஏராளன் said:

நீங்க எழுதுவதற்கு பேச்சு வாங்குறீங்க, நாங்க எழுத மூச்சு வாங்குது!

எல்லோரும் இங்கு வரும் போது மூச்சு வாங்கிட்டுத் தான் வருவார்கள். நாளடைவில் எழுத, எழுத இலகுவாகிவிடும். 😊

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் முழுநேர வேலையாக இருந்து அலப்பறை செய்பவர்கள் இப்போது எல்லாம் முதியவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் இளையவர்கள் முகநூலை அதிகம் விரும்புவதில்லை.

மிஸ்டர் ஆபிஸர் ராகு, கேது, சனியை எல்லாம் நட்பு வட்டத்தில் சேர்த்து வைத்திருக்கலாம். விரும்பிய நேரத்தில் ‘unfriend' ஆக்கமுடியும். அவர்களுக்கே தர்மசங்கடமானவகையில் பதிவுகளைப் போடமுடியும். ஆக மொத்தத்தில் ஒரு குட்டி இராஜாங்கமே முகநூலில் நடாத்தலாம். அதைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டது தப்பு!

  • தொடங்கியவர்
17 hours ago, கிருபன் said:

மிஸ்டர் ஆபிஸர் ராகு, கேது, சனியை எல்லாம் நட்பு வட்டத்தில் சேர்த்து வைத்திருக்கலாம். விரும்பிய நேரத்தில் ‘unfriend' ஆக்கமுடியும். அவர்களுக்கே தர்மசங்கடமானவகையில் பதிவுகளைப் போடமுடியும். ஆக மொத்தத்தில் ஒரு குட்டி இராஜாங்கமே முகநூலில் நடாத்தலாம். அதைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டது தப்பு!

ஹி...ஹி... ஆபிஸரின் பார்வையில் இது அநியாயம் தான். 

எனினும், அவர் முகநூலுக்கு அடிமையானதால் அவரை அதிலிருந்து மீட்க அவரது மனைவிக்கும், மகளுக்கும் கிடைத்தது இந்த வாய்ப்புத் தான். முகநூலை அளவாகப் பயன்படுத்தினால் தவறில்லை. ஆனால் மிதமிஞ்சிய பாவனை ஆபிசர் போன்றவர்களுக்கும், அவரது குடும்பத்தவர்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமல்லவா? 😊

முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களால் இளையோருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஓய்வுநிலையிலுள்ள அங்கிள்மார், தாத்தாக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளும் ஏராளம். உடலியக்கத்தை மட்டுப்படுத்துவது மட்டுமல்ல, உளவியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுக்கிறது.

உடல் ஊனமுற்று ஓரிடத்தில் இருப்பவர்கள் தவிர ஏனையோர் இன்னும் சமூகத்தில் பயனுள்ள வேறு பல வேலைகளைச் செய்யலாம். குறைந்த பட்சம் வீட்டுவேலைகளையாவது செய்யலாம். இவை அவர்களது ஆரோக்கியத்தைப் பேணவும் உதவலாம். 

இவை தவிர, online privacy பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லாத ஆபிசர் போன்றவர்கள் தமக்குமட்டுமல்ல, தம்மைச்சூழ உள்ளவர்களுக்கும் ஆபத்தைத் தேடித்தரலாம். தனது மகளின் appointment letterஐ முகநூலில் பகிர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இதனால் வெளிப்படையாகப் பாதிப்பு இல்லாதது போல் தெரிந்தாலும் அதைப் பார்ப்பவர்கள் misuse பண்ணச் சாத்தியமிருக்கிறது.

இன்னும், சில மூத்தோர் முகநூலில் அடிக்கும் கொசிப்புக்கள், வதந்தி பரப்புதல்கள் இவற்றால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எழுதலாம். நீண்ட கட்டுரையாகிவிடும்! 

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிருபன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2019 at 11:48 PM, குமாரசாமி said:

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

அதுவும் சும்மா இல்லை உச்சத்தில இருக்கு எல்லாம். 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுவும் சும்மா இல்லை உச்சத்தில இருக்கு எல்லாம். 😀

ராகு கேதுவால பாதிக்கப்பட்டிருப்பாவோ?!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

இன்னும், சில மூத்தோர் முகநூலில் அடிக்கும் கொசிப்புக்கள், வதந்தி பரப்புதல்கள் இவற்றால் ஏற்படும் பாதகங்கள் பற்றியும் எழுதலாம். நீண்ட கட்டுரையாகிவிடும்

அப்படியா! 

நான் மூத்தோரை எல்லாம் கனம் பண்ணுவதுதால் அவர்களை முகநூலில் அண்டுவதில்லை😬

தப்பித்தவறி சிலரைச் சேர்த்தாலும் அவர்களை மூத்தோர்களாக கருதுவதில்லை!😎

  • தொடங்கியவர்
15 hours ago, கிருபன் said:

நான் மூத்தோரை எல்லாம் கனம் பண்ணுவதுதால் அவர்களை முகநூலில் அண்டுவதில்லை😬

தப்பித்தவறி சிலரைச் சேர்த்தாலும் அவர்களை மூத்தோர்களாக கருதுவதில்லை!😎

ஹாஹா...🤣 பொதுவாக எனக்கு மூத்தோருடன் நட்பாக இருப்பதில் பிரச்சினையில்லை. உண்மையில் நான் மதிக்கும், சந்தித்த பல மூத்தோரின் அலைவரிசை என்னுடன் ஒத்துப்போவதை உணர்ந்துள்ளேன். எனினும் நீங்கள் குறிப்பிட்டது போல் சிலர் மூத்தோர் போல நடப்பதில்லை! அவர்கள் முகநூலில் இன்னும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

கிடுகு வேலிக்கிடையே, தகர வேலிக்கிடையே என்று பேசப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள் தொலைபேசி மூலம் பரவிய காலம் தாண்டி இப்போது முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இன்னும் தீவிரமாக, வேகமாகப் பரவுகின்றன. நல்ல ஒரு பரிணாம வளர்ச்சி தான்! 😀 Gossips/rumours without borders! 🤣

  • தொடங்கியவர்

இக்கதைக்குத் தொடர்பில்லாத ஒரு காணொளி. முகநூலால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கு எழுதும் போது நினைவுக்கு வந்தது. 

இங்கு பேச்சாளர் தான் ஏன் முகநூலைப் பயன்படுத்துவதில்லை எனவும், அதன் விளைவாகத் தான் அடைந்த நன்மைகளையும் விளக்குகிறார். மிகவும் பயனுள்ள ஒரு TedTalk. 🙂

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2019 at 5:18 AM, குமாரசாமி said:

யாழ்களத்திலையும் ராகு கேது ஏழரைச்சனியெல்லாம் இருக்கு.....எதுக்கும் ஆபீசரை வரச்சொல்லுங்கோ....😑

வந்தால் ஆள மட்டும் சொல்லுங்கள் மற்ற அலுவலை நான் பார்க்கிறன் 

 

வாவ்  முகநூலுக்கு அடிமையான கதையொன்று  நன்றாக இருந்தது மல்லிகை வாசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.