Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Paanch said:

அந்தச் சோகத்தை ஏன் கேட்கிறீர்கள் வன்னியரே!  சாமியார் எல்லாம் துறந்து சன்னியாசியாகப் போகிறாராம், அவர் சன்னியாசியானால் பரிமளாக்காவின் நிலை இப்படித்தான் இருக்கும். வயிறு பிழைக்கவேண்டுமே!! புத்திமதி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.….  5c95a2c12037d216067c213962a30551.jpg

 

ச்சோ ச்சோ..! பரிமளம் அம்மணியின் நிலைமை இப்படி ஆகக்கூடாது.

அதையும் மீறி நடந்தால், கள்ளடிக்கும் சாமிக்கு ... அடித்துவிட வேண்டியதுதான்.😡😋

  • Replies 294
  • Views 47.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா..!

இந்த திரி இதுவரை 12,906 முறை பார்வையிடப்பட்டுள்ளது..!!

tenor.gif?itemid=5661616

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/17/2019 at 11:13 AM, Paanch said:

அந்தச் சோகத்தை ஏன் கேட்கிறீர்கள் வன்னியரே!  சாமியார் எல்லாம் துறந்து சன்னியாசியாகப் போகிறாராம், அவர் சன்னியாசியானால் பரிமளாக்காவின் நிலை இப்படித்தான் இருக்கும். வயிறு பிழைக்கவேண்டுமே!! புத்திமதி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.….  5c95a2c12037d216067c213962a30551.jpg

 

பாஞ்சருக்கு நம்ம ரேஞ்ச்  தெரியேல்லை...:cool: 😂

Briefmarken-Luftpostbrief-Cover-EXPRESS-Sri-Lanka.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன்னதியான் துணை

சிமோனா ஸ்ராச 24
முன்ஸ்ரர்
6.08.1983

என்ரை மாம்பழம் பரிமளம் அறிவது!
                                                                              நான் நல்ல சுகமாயிருக்கிறன். அதுபோல் என்ரை பரிமள குஞ்சுவும் சுகமாயிருக்க குளத்தடி பிள்ளையாரை வேண்டுறன்.

உங்கடை செல்லக்கையாலை எழுகின கடிதம் கிடைத்தது. உங்கடை முத்து முத்தான எழுத்துக்களை நாள் முழுக்க வாசிச்சுக்கொண்டிருக்கலாம்.அதென்ன ஒரு இடத்திலை இரண்டு வசனம் எழுதிப்போட்டு ஒண்டும் தெரியாதமாதிரி வெட்டியிருக்கிறியள். அப்பிடி என்ன அதிலை எழுதி வெட்டினனீங்கள்? 

என்னோடை வேலை செய்யிற இத்தாலிப்பெடியன் தோடு குத்தியிருக்கிறான். பாக்க வடிவாய் கிடந்துது. அதுதான் நானும் குத்தினனான்.உங்களுக்கு பிடிக்காட்டில் வேண்டாம்.கழட்டி விடுறன். இவங்கள் பிறகு விசர் கேள்வியெல்லாம் கேட்பாங்கள். எண்டாலும் பரவாயில்லை. இஞ்சை பெடியங்கள் தோடு குத்துறதுதான் இப்ப பாஷன்.

கிளாசிலை இருக்கிறது சாராயமில்லை அது அப்பிள் யூஸ்.நீங்கள் சொன்னாப்பிறகு நான் மருந்துக்கும் பியரோ விஸ்கியோ நாக்கிலை பட விடமாட்டன்.வேலை இடத்திலை களைப்பு தீர ஒரு பியர் குடிக்கச்சொல்லி வில்லங்கப்படுத்துவாங்கள். நான் திரும்பியும் பாக்கன்.சோறு சமைக்கிறனான்.பைக்கற் அரிசி.சுடுதண்ணிக்கை போட்டுட்டு 15- 20 நிமிசத்திலை அவிஞ்சுடும்.கறி உருழைக்கிழக்குக்கை மீன்ரின்னையும் போட்டு ஒரு சின்ன கறி வைப்பன். சரக்குத்தூள் மிளகாய்த்தூள் எல்லாம் இஞ்சை வாங்கேலாது. ஒரு துருக்கி கடையிலை உறைப்பு தூள் எண்டு சொல்லி வாங்கினன்.ஒரு சொட்டு உறைப்பும் இல்லை.கலர்தான் பாக்க வடிவாய் இருக்கும்.பச்சைமிளகாயும் விக்கிறாங்கள் அதுவும் பெரிசாய் உறைப்பில்லை.

இந்த குளிருக்கு இறைச்சி சாப்பிட வேணும் செல்லம்.அப்பிடியெண்டால் உங்களுக்காக வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிடாமல் இருக்கிறன். என்ரை செல்லக்குஞ்சு மட்டும் தான் என்ரை மனசிலை. நான் வெள்ளைக்காரியளை திரும்பியும் பாக்கிறேல்லை. நீங்கள் சொல்லுறமாதிரி எல்லாரும் கெட்டவையள் இல்லை. நல்லவையும் இருக்கினம்.

அடுத்த கடிதத்திலை ரிவிக்கு முன்னாலை நிண்டு போட்டோ எடுத்து அனுப்புறன் என்ரை செல்லம். செல்லம் நீங்கள் கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறதாய் எழுதியிருந்தியள். சந்திரா எப்பிடி இருக்கிறா? வசந்தியை சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ.ஞானம் ஸ்ரூடியோவுக்கு போய்  ரவுசர் போட்டு ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்கோ. வசந்தியையும் கூட்டுக்கொண்டு போங்கோ.

இப்ப இஞ்சை நல்ல வெய்யில் எறிக்குது.ஆனல் பின்னேரம் குளிரும்.வெய்யிலுக்கு எல்லா இடமும் வடிவாய் இருக்கு. பூக்கண்டு எல்லா இடமும் வைச்சிருக்கினம்.அடுத்த முறை பூக்கண்டுகளுக்கு முன்னாலை நிண்டு படம் எடுத்து அனுப்புறன் பாருங்கோ.

என்ரை உடன்பிறப்போடை ஒண்டும் கொழுவுப்பட வேண்டாம்.அவளின்ரை குணம் தெரியும் தானே.சரியான ராங்கி பிடிச்சவள்.குமரேசனுக்கு கிணத்தடியிலை வைச்சு செய்த வேலை தெரியும் தானே.அவள் என்ன வாய் காட்டினாலும் திருப்பி ஒண்டும் கதைக்க வேண்டாம்.


வேறை என்ன செல்லம் தனிமைதான் என்னைப்போட்டு வாட்டுது. நீங்கள் எனக்கு பக்கத்திலை இருக்கிறதாய் கனவு காணுவன்.பழைய ஞாபகமெல்லாம் வாட்டியெடுக்குது ராசாத்தி.அங்கை தோட்டப்பக்கத்து துரவுப்புட்டி ஞாபகம் வருதோ. எனக்கு இப்பவும் அதை நினைச்சால்....

சரி செல்லம் கனக்க எழுதீட்டன் போலை கிடக்கு.இப்ப இஞ்சை இரவு 3மணியாச்சுது. விடிய வெள்ளன சோசல் ஓபிசுக்கு போக வேணும்.

கடிதம் கண்டதும் பதில் கடிதம் போடுங்கோ மாம்பழம்.

மு-கு: ரவுசர் போட்டு போட்டோ எடுக்க மறக்காதையுங்கோ.துணைக்கு வசந்தியையும் கூட்டிக்கொண்டு போங்கோ.

இப்படிக்கு
ஆசை முத்தங்களுடன்
அன்பு அத்தான்
குமாரசாமி ~*~ Minnie ~*~

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னோடை வேலை செய்யிற இத்தாலிப்பெடியன் தோடு குத்தியிருக்கிறான். பாக்க வடிவாய் கிடந்துது. அதுதான் நானும் குத்தினனான்.உங்களுக்கு பிடிக்காட்டில் வேண்டாம்.கழட்டி விடுறன். இவங்கள் பிறகு விசர் கேள்வியெல்லாம் கேட்பாங்கள். எண்டாலும் பரவாயில்லை. இஞ்சை பெடியங்கள் தோடு குத்துறதுதான் இப்ப பாஷன்.

அத்தான் நீங்க எந்த காதில குத்தியிருக்கிறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்போ வசந்தியையும் தொட்டுச் செல்கிறார், என்னவாயிருக்கும்..? vil2_gratte.gif

பேரு வேறை 'பழனியில் நிற்கிறவர்' பெயராய் இருக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதென்ன ஒரு இடத்திலை இரண்டு வசனம் எழுதிப்போட்டு ஒண்டும் தெரியாதமாதிரி வெட்டியிருக்கிறியள்

எனது மனைவியும் கடிதம் எழுதிய காலங்களில் இப்படித் தான் ஏதாவது எழுதிப் போட்டு மெழுகு மெழுகென்று மெழுகித்தான் கடிதம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஞானம் ஸ்ரூடியோவுக்கு போய்  ரவுசர் போட்டு ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்கோ. 

Ähnliches Foto

குமாரசாமி அண்ணை..... சிலோனிலை  வாங்குற ரவுசர்   எல்லாம், சீனாவிலை  இருந்து வாறது.
அந்தக்  கால் சட்டைகளை, ஒருக்கால் தோய்க்க... சாயம்  போயிடும்.  

நீங்கள் அடுத்த கடிதத்திலை,  பரிமளத்தின்ரை... கால் சட்டை, "சைஸ்" என்ன வென்று  கேட்டு,
ஜேர்மனியில்  இருந்து.... இரண்டு, மூண்டு  கால் சட்டையை... பார்சல் பண்ணி அனுப்பி விடுங்கோ.

நீங்கள் அனுப்பின... ஜேர்மன் கால் சட்டை எண்டு...
பரிமளத்துக்கும்... சரியான புளுகமாய்  இருக்கும். :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அத்தான் நீங்க எந்த காதில குத்தியிருக்கிறீங்க?

Smirk Vadivelu GIF - Smirk Vadivelu SteveVa GIFs

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

கடிதம் கண்டதும் பரிமளம் பறக்கிறா......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

அய்🥰  எனக்கு இரண்டு💒 அண்ணிமார் போல☺️ 

  • கருத்துக்கள உறவுகள்

அடடே திரும்பவும் பரிமளத்துக்கு கடிதம்வந்திட்டுதே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

அய்🥰  எனக்கு இரண்டு💒 அண்ணிமார் போல☺️ 

Image associée

இரண்டு அண்ணிமாரும் ஜெர்மனிக்கு வந்தால், அண்ணரை மறந்திடுங்கோ.....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/8/2020 at 1:30 AM, ராசவன்னியன் said:

அப்பப்போ வசந்தியையும் தொட்டுச் செல்கிறார், என்னவாயிருக்கும்..? vil2_gratte.gif

பேரு வேறை 'பழனியில் நிற்கிறவர்' பெயராய் இருக்கு..!

சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்படாது. நான் நல்லவன் 😂

Bildergebnis für வடிவேலு memes

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்படாது. நான் நல்லவன் 😂

Bildergebnis für வடிவேலு memes

இளையராஜா பாட்டுக்கு வரி வசூலிப்பது போல 

வடிவேலுவும் தனது படங்களை தரவேற்றுகிறவர்களுக்கு வரி வசூலிக்க வேண்டும்.

3 hours ago, குமாரசாமி said:

சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்படாது. நான் நல்லவன் 😂

கள்ளன் கொலைகாரனிலிருந்து எல்லோரும் இதைத் தான் சொல்கிறார்கள்.

யாரை நம்புவது?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்படாது. நான் நல்லவன் 😂

AGnpvO.gif

 கனகாலத்திற்குப் பிறகு பரிமளம் அண்ணிக்கு  கடிதம் போயிருக்கு. அண்ணியை சுகம் கேட்டதாக சொல்லுங்கோ.(வசந்தியையும் சேர்த்துத்தான்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/8/2020 at 5:27 AM, தமிழ் சிறி said:

Ähnliches Foto

குமாரசாமி அண்ணை..... சிலோனிலை  வாங்குற ரவுசர்   எல்லாம், சீனாவிலை  இருந்து வாறது.
அந்தக்  கால் சட்டைகளை, ஒருக்கால் தோய்க்க... சாயம்  போயிடும்.  

நீங்கள் அடுத்த கடிதத்திலை,  பரிமளத்தின்ரை... கால் சட்டை, "சைஸ்" என்ன வென்று  கேட்டு,
ஜேர்மனியில்  இருந்து.... இரண்டு, மூண்டு  கால் சட்டையை... பார்சல் பண்ணி அனுப்பி விடுங்கோ.

நீங்கள் அனுப்பின... ஜேர்மன் கால் சட்டை எண்டு...
பரிமளத்துக்கும்... சரியான புளுகமாய்  இருக்கும். :grin:

கடித போக்குவரத்தே களவிலை நடக்குது.......இதுக்கை ரவுசர் வேறை 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/8/2020 at 1:43 PM, suvy said:

Image associée

கடிதம் கண்டதும் பரிமளம் பறக்கிறா......!   😂

😀

On 1/8/2020 at 9:18 PM, ரதி said:

அய்🥰  எனக்கு இரண்டு💒 அண்ணிமார் போல☺️ 

ஆசை தோசை அப்பளம் வடை ☺️

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடே திரும்பவும் பரிமளத்துக்கு கடிதம்வந்திட்டுதே.

ம்....ம்..ம்..ம்....ம் :cool:

13 hours ago, suvy said:

Image associée

இரண்டு அண்ணிமாரும் ஜெர்மனிக்கு வந்தால், அண்ணரை மறந்திடுங்கோ.....!  😂

ஒரேடியாய் வந்தால் தானே பிரச்சனை....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இளையராஜா பாட்டுக்கு வரி வசூலிப்பது போல 

வடிவேலுவும் தனது படங்களை தரவேற்றுகிறவர்களுக்கு வரி வசூலிக்க வேண்டும்.

கள்ளன் கொலைகாரனிலிருந்து எல்லோரும் இதைத் தான் சொல்கிறார்கள்.

யாரை நம்புவது?

19598915_1880404962285092_5139546927182826808_n.jpg?_nc_cat=101&_nc_ohc=HM8pDNnHdJsAQlsRTG0ZnptGM4ExgWyPCZ0IGT0wxjdWt8yRXWmcadlHw&_nc_ht=scontent-dus1-1.xx&oh=d41b56f50cb60b0c6104e831770ade29&oe=5EA0C639

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துர்க்கை அம்மன் துணை

கரணவாய் சென்ரல்
கரணவாய்
05.08.1983

 

அன்புள்ள ஆசை அத்தானுக்கு,

நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மாளாச்சியை வேண்டுகின்றேன்.
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் அத்தான்.

ஊர் குறட்டை விடும் சாமத்திலே...
நானுறங்கும் நேரத்திலே...
காத்துப் போல வந்து தொட்டது யார்? 
காதல் தீயை நெஞ்சில் இட்டது யார்?
யார் அது யார் என் அத்தானே?

அது நீங்கள் தான் அத்தான்.
அது நீங்கள் தான் அத்தான்.


நீங்கள் தந்த பட்டுச் சேலை....
கலையாமல் கட்டிபார்த்தேன்....
கலியாண பொம்புளை போல...
கால் விரல் மெட்டிச்சத்தம் ..
காதோரம் உங்கள் மூச்சுச்சத்தம்..

என் அத்தான் அங்கிருந்து தனியே வாட..
இங்கே தென்னந்தோப்பில் தனியே ..
இருந்து நான் பாடும்..
குயில் பாட்டு கேக்குதா அத்தான்..
தூங்காமல் என் மனம் கிடந்து வாடுது அத்தான்..
சொல்ல துணை யாருமில்லை அத்தான்..


சுவரோரம் சாய்ஞ்சிருந்து..
என்னோடை நானே இங்கே...
தனியாக பேசுறேன்.
பாய்கூட முள்ளாப் போச்சு அத்தான்...  
தலையணி கல்லாய்ப்போச்சுது...
தூங்காமல் வாடுறேன்.

அத்தான் உங்கள் பெயரை... 
மணலில் எழுதி கை நோகுது....
கற்பூரமாய் உருகி உருகி...
நாள் போகுது அத்தான்.
தாலி கட்டுவது எப்போது அத்தான்?
மணமேளம் சத்தம் எப்போது அத்தான்?

இப்படிக்கு
உங்கள்
ஆசை
இதய 
பரிமளம்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா பரிமளம் குமாரசாமியை கவிஞர் ஆக்கிவிட்டாவே

🤓🤗

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் அம்மணிக்கு இன்னமுமா கலியாணம் ஆகலை..? vil2_cupidon.gif

பின்னே எப்பிடி இந்த ஐத்தான், பொய்த்தான், பொத்தான் என உருகல் cum மருகல்..?  vil2_envoicoeur.gif

ஒருவேளை பரிமளம் அம்மணி,  கு.சா வுக்கு முறைப்பெண்ணோ? dubitatif.gif

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு கடிதத்திலேயே 15 அத்தான்.

அத்தான் செத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழுக்கு வார‌தே தாத்தாவின் எழுத்தை பார்த்து சிரிக்க 😁 , தாத்தா நீ க‌ல‌க்கு 😘

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.