Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 2:02 PM, தனிக்காட்டு ராஜா said:

அடுத்த நாள் காலை .............. தொடரும் 

காலேல காலேல வந்து பாக்கிறன் ஒன்றையும் காணேல்ல.

  • Replies 70
  • Views 9.5k
  • Created
  • Last Reply

நானும் உங்கள் பாலைவன வாழ்கையை வாசித்தேன். உணர்வுகளை தொலைத்து, நிம்மதியை இழந்த  வாழ்கையாக இருந்திருக்கும்.தொடருங்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜா. 

என்னெவென்ரு சொல்வேன். 1994ம் ஆண்டு நவம்பரில் எனக்கு நடந்த அனுபவத்தை அப்படியே அச்சொட்டாக எழுதியுள்ளீர்கள். என்னுடைய வாழ்க்கையையே எழுதிகொண்டு போகின்றீர்களா என்று ஆச்சரியப்ட்டேன்.

எங்களிருவருக்கும் சில ஒற்றுமைகளை கவனித்தேன்.

நீங்கள் பிறந்த்தும் 23 march , நானும் அதேதினமே, சமீபத்தில்தான் திருமணம் முடித்தீர்கள் என நினக்கின்றேன். நானும் உங்களைபோல 30 வயதிற்கு மேற்பட்டே திருமண‌ம் செய்தேன். 

வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளீர்கள் போல, நானும் அப்படியே

தெடர்ந்து எழுதுங்கள் ஆவலாகவுள்ளேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 8:40 AM, ஈழப்பிரியன் said:

சண்டை தொடங்கிய நேரம் மட்டக்களப்பிலிருந்து நிறைய போராளிகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பெருவாரியாக போனதாக சொன்னார்கள்.ஆனபடியால்த் தான் உங்களையும் எந்த குறூப் என்று கேட்டிருக்கிறார்கள்.கருணா குறூப் என்று சொல்யிருந்தால் அவர்களே பாதுகாப்பு கொடுத்து கொண்டு போய் விட்டிருப்பார்களே?

ம்ம் இருக்கலாம் அவர்களுக்கு சின்ன சந்தேகம் கர்ணா குறுப் என்றால் செல்ல விட்டிருப்பார்கள் நான் ஒன்றும் சொல்லாதது அவர்களுக்கு பலத்த சந்தேகம்.

ஓம் கிட்ட தட்ட 5000- 6000 போராளிகள் மட்டக்களப்பில் இருந்தார்கள் விலகியவர்களுள் கிட்டதட்ட 4000 பேருக்கும் மேல் கட்டார், துபாய் சவுதி, ஓமான் , இப்படியான நாடுகளுக்கு உயிர் பிழைக்க சென்று விட்டார்கள்

5 hours ago, ஈழப்பிரியன் said:

காலேல காலேல வந்து பாக்கிறன் ஒன்றையும் காணேல்ல.

ஹாஹா அண்ண இங்க கரண்ட் இல்லை அதனால் கொஞ்சம் தாமதம் எடுக்கும் ஜீலை வரைக்கும் கரண்ட் இல்லை நாளொன்றுக்கு 3 மணித்தியாலம் வெட்டுகிறார்கள் இரவிலும் ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லை சம்சாரம் வேற உங்களுக்கு கணிணியில் எந்த நேரமும் வேலைதானா என்று புறுபுறுப்பதும் மெதுவா ஆரம்பிக்கிறது  தொடர்ந்து வரும் 

1 hour ago, ஜெகதா துரை said:

நானும் உங்கள் பாலைவன வாழ்கையை வாசித்தேன். உணர்வுகளை தொலைத்து, நிம்மதியை இழந்த  வாழ்கையாக இருந்திருக்கும்.தொடருங்கள்.......

நன்றீ அன்பரே

1 hour ago, colomban said:

தனிக்காட்டு ராஜா. 

என்னெவென்ரு சொல்வேன். 1994ம் ஆண்டு நவம்பரில் எனக்கு நடந்த அனுபவத்தை அப்படியே அச்சொட்டாக எழுதியுள்ளீர்கள். என்னுடைய வாழ்க்கையையே எழுதிகொண்டு போகின்றீர்களா என்று ஆச்சரியப்ட்டேன்.

எங்களிருவருக்கும் சில ஒற்றுமைகளை கவனித்தேன்.

நீங்கள் பிறந்த்தும் 23 march , நானும் அதேதினமே, சமீபத்தில்தான் திருமணம் முடித்தீர்கள் என நினக்கின்றேன். நானும் உங்களைபோல 30 வயதிற்கு மேற்பட்டே திருமண‌ம் செய்தேன். 

வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளீர்கள் போல, நானும் அப்படியே

தெடர்ந்து எழுதுங்கள் ஆவலாகவுள்ளேன்

நன்றி நீங்கள் 1994 நான் 2004 ம் பிறந்தது 23 மார்ச் மாதம் தான் 1984 என்ன வாழ்க்கை என வெறுத்த காலம் என்றும் சொல்லலாம் அந்த நாட்கள் கருத்துக்கு நன்றி கொழும்ஸ்

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் காலை முதல் நாள் வேலையென்பதால் நேரத்துடன் எழும்பி எல்லோரும் காத்து நின்றோம்.

வான் வந்து நின்று நேற்று வந்த ஆட்களையெல்லாம் வரச்சொன்னார்கள் அத்தனை பேரையும் ஏற்றி கம்பனி ஸ்டோர் என்று சொல்லப்படுகின்ற இடத்திற்கு கொண்டு சென்றார்கள் மீண்டும் அந்த இடத்தில் 1 மணிநேரம் காத்திருக்க இடிஅமீன் தனி வாகனத்தில் எதோ பாக்கு சப்பிக்கொண்டு வந்தான் இந்தியர்  இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் . வந்த அவரோ அனைவருக்கும் யூனிபாம் கொடுக்க சொன்னார் எங்க கம்பனியில் கிளினிங் தான் வேலை ஆனால் நாங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் செய்யத்தான் வேண்டும் என்றார் சொன்ன அவர் ஆட்களை தெரிய ஆரம்பித்தார்.

(சுருக்கமாக சொல்லப்போனால் ஆட்களை இறக்குமதி செய்து வேலைக்கு ஆள் தேவையான இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்பது)

10 பேரை எடுத்து நீங்கள் கிளாஸ் வேஷ் போ என்றார் ( பல அடுக்கு மாடிகளின் வெளிப்புறத்தே உள்ள கண்ணாடிகளை தொட்டிலில் நின்ற மாதிரியே கிளின் பண்ணுவது நாங்கள் வந்த கம்பனியோ கிளினிங் கம்பனி யென்பது அப்பதான் தெரிந்தது.  கையில் இருந்த பாஸ்போட் கொப்பியை பார்த்த போதே எங்களை ஏமாற்றிய ஏஜென்சுக்காரக்கு என்ன செய்யணும் என்று மனதில் தோன்றியது. இன்னும் 10 பேரை எடுத்து நீங்கள் பஸ் வோஷ் என்றார் அவனிடம் பதில் கதைக்க முடியாது கதைத்த பொடியங்களுக்கு நீங்கள் திரும்ப ஊருக்கு போக தயாரா இருங்கள் என்று அதட்டலாக சொல்ல அவனுகளும் பயந்து நாங்க போறம் சேர் என்றானுகள். ஊருக்கு சென்றால் கடன் மற்றும் சண்டை என்ன செய்வதென தெரியாத அவனுகள் ஒத்துக்கொள்கிறானுகள் தங்கள் நிலையை எண்ணி .ஒரு நாளைக்கு இரவில் சுமார் 100 பஸ்கள் கழுவி அதை துடைக்க வேண்டும் 5 பேர் ஒரு குறூப்பாக இருப்பார்கள்

மீதி 10ற்குள் நானும் அடங்குகிறேன் நீங்கள் 10 பேரும் ஸ்பெஷல் என்றான் ஸ்பெஷல் என்றால் என்ன என்று நான் கேட்க சொல்லுற எல்லா இடங்களுக்கெல்லாம் போய் அங்க நம்ம கம்பெனிக்காரர்கள் இருப்பார்கள் அவ்ர்களுடன் இணைந்து எல்லா வேலைகளும் செய்ய வேண்டும் என்றார் நானோ அப்படியெல்லாம் என்னால் செய்ய முடியாது சொன்னேன் நீ ஊருக்கு போக தயாரா இரு என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார் நான் துணிந்து விட்டேன் மீண்டும் ஊருக்கு செல்வோம் என. அவர்களால் ஊருக்கு அனுப்ப முடியாது என பல பேர் அன்று இரவு வந்து  சொன்னானுகள் அப்படி அனுப்பினால் அவர்கள் கம்பெனிக்கு நட்டம் எனவும் சொல்ல எனக்கு ஒரு மனதைரியம் மனத்துக்குள் வந்தாலும் கொஞ்சம் பதட்டமாக இருந்தது ஊருக்கு அனுப்பி விடுவானோ என்று.

அடுத்த நாள் நானும் மீண்டும் வாகனத்தில் ஏறி அந்த ஆட்களை பிரித்து விடும் இடத்துக்கு செல்ல இடிஆமின் என்னை இவனை ஸ்பெஷலில் தான் போடணும் வேற வேலை கொடுக்கப்படாது என சொல்லிவிட்டான் நானும் ஒன்றும் சொல்லாமல் 1 மாதம் வரைக்கும் போக சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று வேலை செய்ய பழகி கொண்டேன் வேலையோ புதிய புதிய மார்க்கட்டுக்களில், வேலைக்கு நிற்பது  , மற்றும் லோடிங் அன்லோடிங் என்று சொல்கின்ற கனரக வாகனகளில் வரும் பொதிகளை, பெட்டிகளை தலையில் வைத்து இறக்குவது அது வெறும் குடோன் என்று சொல்லப்படுகின்ற பெரிய தகரத்தினால் ஆன கொட்டகை அந்த இடங்களில் வெயில் காலம் என்பதால் உள்ளாடைகளுக்குள் நிர் வழிய அது கவட்டை அறுத்து மெதுவாக இரத்தம் கசிய ஆரம்பிக்கும்அதுவடியும் போது வியர்வை நீரும் செல்ல செல்ல மீண்டும் அந்த இடம் எரிய ஆரம்பிக்கும் வேலை முடிந்தது ஆளாளுக்கு தெரியாமல் உள்ளாடைகளை கழட்டி ரவுசர் பைக்குள் வைத்துக்கொண்டு உடுப்பு மட்டும் உப்பு பொரிந்து காணப்படும்  வாகனத்தில் ஏறி வருமோம் வெறுத்துப்போன வெளிநாட்டை நினைத்து. ஆனாலும் ஆங்கிலம் வாசிக்க தெரிந்தனால் அந்த கண்டெய்னர்களில் வரும் பெட்டிகளின் மொத்தம் அதனுள் என்ன இருக்கின்றது என செக் பண்ணி அதை பிரித்து அனுப்ப பழகியதால் தூக்கும் வேலையும் எனக்கு குறைந்து போனது ஆனால் வெயில் மட்டும் வாட்டி வதக்கி எடுத்தது கட்டிய காசை எடுத்தால் இந்த வெளிநாடே வேண்டாம் சாமி நாட்டுக்கு ஓடிட வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொள்வேன்.

வேலை முடிந்து வந்த பிறகு சமைக்க வேண்டும் 8 பேருக்கும் யாருக்கும் சமைக்க தெரியாது சோறை சட்டியில் நீரை வைத்து அரிசை இட்டு அது அவிந்த பிறகு நீரை வடித்து விடுவோம்  கறிக்கு தெரிந்த யாரையாவது கூட்டிக்கொண்டு சமைக்க கற்றுக்கொண்டோம் ஒவ்வொருவரும் வேலை விட்டு வரும் நேரம் இரவு 11,12 மணியாகும் எல்லோரும் வந்து எடுத்து வைத்த தண்ணீரை எடுத்து ஒரு வாளியினுள் எடுத்துச்சென்று குளித்த பின்னரே சாப்பிட ஆரம்பிப்போம். (குழாயில் வரும் நீரில் குளிக்க முடியாது அது கொதி நீர் என்பதால் ) சாப்பிட்ட பிறகு அடுத்தநாள் பகல் சாப்பாடுக்கும் சோறையும் கறியையும் பார்சலாக கட்டி வைத்த பின்பு ஊர் பிரச்சினைகள் பரவலாக அடிபடும் அவற்றை பேசிக்கொண்டு தூங்க ஆரம்பிக்கும் நேரம் வாகனம் வந்து விடும் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு அதிகதூரம் கூட்டி செல்வதால்  அதிக வாகன நெரிசலில் சிக்க கூடாது என்பதற்க்காக அவர்கள் எங்களை 4 மணிக்கே எங்களை நித்திரை தூக்கத்தில் கூட்டி சென்று விடுவார்கள்.

தொடரும்.............. 1f42b.png1f42b.png

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பல அனுபவங்கள்  நினைவில் வந்து போகுது.....பின்பு எழுதுகின்றேன். தொடருங்கள் தனி......!   😇

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கண்ணிப் பட்டது. அரபு நாட்டு வாழ்க்கைப்பற்றியும் அங்கு பெண்களும் ஆண்களும் படும் துன்பங்கள்பற்றியும் பல காணொளிகளை பார்த்தாச்சு. நீங்கள் தெளிவாகவும் துணிவாகவும் எழுதுவதற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியக் கிழக்கு நாடுகளில் சேரப்போகும் வேலை, நிறுவனத்தைப் பற்றி விசாரிக்காமல் வந்திறங்கினால் கடினமான வாழ்க்கைக்கு முகம் கொடுக்க நேரிடும்.

தொழிற்கல்வி(ITI or Diploma) பயின்றவர்களுக்கு வேலையில் பிரச்சினைகள் சற்றே குறைவு.

எந்த வேலையாயினும் தீர விசாரித்து வருவதே நல்லது. ஆனால், செல்வம் வரும் என்ற ஆசையில் யாரும் அதை செய்வதில்லை.

நல்ல வேளை, எஜன்ஸிகாரன் பணத்தை வசூலித்துவிட்டு, டூரிஸ்ட் விசா கொடுக்காமல் உங்களை நிறுவன வேலைக்கு என வேலை (Employment Visa) விசாவில் இறக்கிவிட்டடதை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்..!

'கல்லி வல்லி' ஆட்களின் நிலைமை படுமோசம், எப்பொழுது போலீஸ்காரனிடம் பிடிபடுவோமோ என்ற பயத்திலேயே வாழ வேண்டியதிருந்திருக்கும்.

தொடருங்கள் முனி..

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வேலை சென்று உழைப்பதை விட உயிரை பாதுகாக்கும் நோக்கில் தான் பலரும் புலம்பெயரந்தார்கள்.
மத்தியகிழக்கு வாழ்க்கை மிகுந்த துயரை தந்ததை உங்கள் எழுத்தில் காண்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மார்ச் மாதம் தான் 1984

1984 இல் எனது திருமணம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துபாய் மற்ற அரபு நாடுகளை விட பரவாயில்லை என நினைத்து இருந்தேன், ஆனால் அவர்களும் இப்பிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கு!! உங்கள் வலியை புரிந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேலை முடிந்து வந்த பிறகு சமைக்க வேண்டும் 8 பேருக்கும் யாருக்கும் சமைக்க தெரியாது சோறை சட்டியில் நீரை வைத்து அரிசை இட்டு அது அவிந்த பிறகு நீரை வடித்து விடுவோம்  கறிக்கு தெரிந்த யாரையாவது கூட்டிக்கொண்டு சமைக்க கற்றுக்கொண்டோம் ஒவ்வொருவரும் வேலை விட்டு வரும் நேரம் இரவு 11,12 மணியாகும் எல்லோரும் வந்து எடுத்து வைத்த தண்ணீரை எடுத்து ஒரு வாளியினுள் எடுத்துச்சென்று குளித்த பின்னரே சாப்பிட ஆரம்பிப்போம்

வெளிநாடு வந்த ஆண்கள் எல்லோரும் பெண்களை விட பக்காவாக சமைப்பார்கள்.

அது சரி இந்தக் கதைவதையெல்லாம் புதுப்பெண்ணுக்கும் சொல்லியாச்சோ?

27 minutes ago, நீர்வேலியான் said:

துபாய் மற்ற அரபு நாடுகளை விட பரவாயில்லை என நினைத்து இருந்தேன், ஆனால் அவர்களும் இப்பிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கு!! உங்கள் வலியை புரிந்து கொள்கிறேன்.

சாமி வரம் தந்தாலும் பூசாரி விடமாட்டார் என்ற மாதிரி இடையில் நிற்பவர்களால்த் தான் பிரச்சனையே.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் . நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. கருத்தெழுத நேரம் போதாமலுள்ளதால் பதிவிட முடியவில்லை. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனி வாசிக்க மனசு கனக்கிறது 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

எனக்கும் பல அனுபவங்கள்  நினைவில் வந்து போகுது.....பின்பு எழுதுகின்றேன். தொடருங்கள் தனி......!   😇

எழுதுங்கள் காத்திருக்கிறேன் வாசிக்க 

15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்றுதான் கண்ணிப் பட்டது. அரபு நாட்டு வாழ்க்கைப்பற்றியும் அங்கு பெண்களும் ஆண்களும் படும் துன்பங்கள்பற்றியும் பல காணொளிகளை பார்த்தாச்சு. நீங்கள் தெளிவாகவும் துணிவாகவும் எழுதுவதற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் ...

நன்றி இதை விட பல சோகமான சம்பவங்களும் நடந்திருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது இந்த சம்பவங்கள் எனது அந்த நாட்களில் நடந்தது 

14 hours ago, ராசவன்னியன் said:

மத்தியக் கிழக்கு நாடுகளில் சேரப்போகும் வேலை, நிறுவனத்தைப் பற்றி விசாரிக்காமல் வந்திறங்கினால் கடினமான வாழ்க்கைக்கு முகம் கொடுக்க நேரிடும்.

தொழிற்கல்வி(ITI or Diploma) பயின்றவர்களுக்கு வேலையில் பிரச்சினைகள் சற்றே குறைவு.

எந்த வேலையாயினும் தீர விசாரித்து வருவதே நல்லது. ஆனால், செல்வம் வரும் என்ற ஆசையில் யாரும் அதை செய்வதில்லை.

நல்ல வேளை, எஜன்ஸிகாரன் பணத்தை வசூலித்துவிட்டு, டூரிஸ்ட் விசா கொடுக்காமல் உங்களை நிறுவன வேலைக்கு என வேலை (Employment Visa) விசாவில் இறக்கிவிட்டடதை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்..!

'கல்லி வல்லி' ஆட்களின் நிலைமை படுமோசம், எப்பொழுது போலீஸ்காரனிடம் பிடிபடுவோமோ என்ற பயத்திலேயே வாழ வேண்டியதிருந்திருக்கும்.

தொடருங்கள் முனி..

ம்ம் அண்ணா வேலையில் பாஸ்போட்டில் கூட வேலை அடித்தார்கள் சிலருக்கு ஆனால் அந்த பாஸ்போட்டை விமானம் ஏறும் போதே கொடுத்தார் ஏஜென்சிக்காரன் அவன் உழைப்புக்கு அப்போது எனக்கு சொல்லப்பட்ட வேலை வேறு 

இப்படிப்பட்ட கம்பனிகள் இருக்கத்தான் செய்கிறது சம்பளம் ஒழுங்கில்லை இதானல் சிலர் கம்பனி வேலையை  விட்டு வேறு வேலைக்கு ஓடுவது என்ன பாதுகாப்பில்லை எப்போது பொலிஸ் பிடிப்பான் நாட்டுக்கு அனுப்புவான் என பயந்துகொண்டே வாழ வேண்டும் அங்கு 

14 hours ago, ஏராளன் said:

வேலை சென்று உழைப்பதை விட உயிரை பாதுகாக்கும் நோக்கில் தான் பலரும் புலம்பெயரந்தார்கள்.
மத்தியகிழக்கு வாழ்க்கை மிகுந்த துயரை தந்ததை உங்கள் எழுத்தில் காண்கிறேன்.

நன்றி நண்பா

11 hours ago, ஈழப்பிரியன் said:

1984 இல் எனது திருமணம்.

நான் பிறந்த ஆண்டு அது

10 hours ago, நீர்வேலியான் said:

துபாய் மற்ற அரபு நாடுகளை விட பரவாயில்லை என நினைத்து இருந்தேன், ஆனால் அவர்களும் இப்பிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கு!! உங்கள் வலியை புரிந்து கொள்கிறேன்.

நிட்சயமாக அரபிகள் அப்படி இல்லை இந்த கம்பனிகள் மாத்திரம் அப்படியே கம்பனிகள் என்று சொல்லும் போது இந்தியர்களின் கம்பனிகள்தான் ஓர் அரபியை வைத்து தொழில் சான்றுதழ் பெற்று கம்பனியை நடத்துவார்கள் 

10 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடு வந்த ஆண்கள் எல்லோரும் பெண்களை விட பக்காவாக சமைப்பார்கள்.

அது சரி இந்தக் கதைவதையெல்லாம் புதுப்பெண்ணுக்கும் சொல்லியாச்சோ?

ஓம் ஓம் நன்றாக சமைக்க பழகிக்கொண்டேன்

இன்று வரைக்கும் இங்கே உள்ளவர்களுக்கு தெரியாது அம்மா, அப்பாவுக்கும் கூட தெரியாது அங்கு என்னுடன் இருந்த நண்பர்களுக்கும் இதை வாசிக்கும் அன்பர்களுக்கும் மட்டுமே தெரிய வருகிறது யாழ் இணைய ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக அண்ண

நான் யாழில் எழுதுவது அவாக்கு தெரியும் ஆனால் இந்த தொடர் அவர் நித்திரைக்கு போன பின்னரே எழுதுவது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

சாமி வரம் தந்தாலும் பூசாரி விடமாட்டார் என்ற மாதிரி இடையில் நிற்பவர்களால்த் தான் பிரச்சனையே.

அதே தான் மத்திய கிழக்கு நிலமையும் ஊர் நிலமையும் 

9 hours ago, Kavallur Kanmani said:

தொடருங்கள் . நான் இன்னும் படித்து முடிக்கவில்லை. கருத்தெழுத நேரம் போதாமலுள்ளதால் பதிவிட முடியவில்லை. தொடருங்கள்.

மொத்தமாக வாசித்து கருத்தை சொல்லுங்கள் அக்கா நேரம் கிடைக்கும் போது 

5 hours ago, ரதி said:

தொடருங்கள் முனி வாசிக்க மனசு கனக்கிறது 
 
ம்ம் வலிகளை ஏற்க சோகங்களையெல்லாம் மறக்க பழகிகொண்டுள்ளேன் ஆனால் சிரித்த வாறே நன்றி ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இந்த வேலை ஒருமாதம் சுழன்றது அந்த வேலை ஒப்பந்தம் முடிவடைய மீண்டும் அந்த ஆட்கள் பிரிக்கும் இடத்துக்கு சென்றோம் எல்லோரும்.

நீ ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு போ உன்னுடன் இவனையும் கூட்டிக்கொண்டு போ என என்னையும் இன்னொரு நண்பனையும் ஒரு சாரதியிடம் இடி ஆமின் ஒப்படைத்தான் சாரதியோ உங்கள் பெட்டி படுக்கைகளை எடுங்கள் நீங்கள் இனி கேம்பில் தங்க தேவையில்லை அந்த ஹோட்டலில் தங்கலாம்  என்று சொன்னான் பெட்டி படுக்கைகளை எடுத்து நானும் இன்னொரு நண்பனும் புறப்பட்டோம் அங்கே போனதும் அங்கே எங்களை போன்ற இன்னும் 3  அடிமைகள் பக்கத்து ஊர்க்காரர்கள் இருந்தார்கள் வரவேற்றார்கள் மற்றவர்கள் வேற வேற நாட்டுக்காரர்கள் அறிமுகம் ஆனோம் அடேய் ஏன்டா இங்க நீங்க வந்த நீங்கள் பெண்ட கழட்ட போறானுகள்  உங்களுக்கு என்று சொன்னார்கள்.

என்னடா வெளிநாடு எப்படியெல்லாம் நம்மளை புரட்டி வதைக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும்  முதலாளி மேனேஜர் ஒரு தமிழர் வந்து நீங்க இங்க வாங்க  என்று சொல்லி அங்கே தட்டுக்கழுவிக்கொண்டிருந்த ஒருவரை அழைத்து இவர்களை வேலையில் வச்சுக்கொள்ளுங்கள் என்றார் நானோ வந்த மற்ற நண்பனிடம் என்னடா செய்யுற?.. பொறுடா இந்த வேலையும் வேண்டாமென்றால் அவன் ஊருக்கு அனுப்பி போடுவான் அங்க போய் எப்படி கடனை கட்டுற இங்க என்ன வேலை செய்தாலும் ஆருக்கு? தெரியப்போகுது கொஞ்ச நாளைக்கு  இருப்போம் பிறகு ஏதாவது ஒன்றை சொல்லி ஓடிடுவோம் என்று சொன்னான் ம் ஓம் எதுவும் சொல்லாமல் இருந்தேன்  சாப்பிட்டு விட்டு றூமுக்குள்  சென்று விடுங்கள் நாளை உங்களுக்கு வேலை யென்றார் சம்பளம் உங்க கம்பனி தரும் மேலதிக காசு நாங்கள் தருவோம் என்றார் (150) திர்ஹம் (ரூபா) கம்பனி 500+150 மொத்த சம்பளம் 650 x 35 (இலங்கை பெறுமதி) நீங்கள் கணக்கு பார்த்து கொள்ளுங்கள் இதுதான் மொத்த சம்பளம் எங்களுக்கு. ஹோட்டல் கம்பனிக்கு கொடுப்பது 3000 திர்ஹம் அவர்கள் அதை எடுத்துவிட்டு எங்களுக்கு கொடுப்பது வெறும் 500 மட்டும் எப்படி இந்த கம்பனிகள் ஊழியர்களின் வியர்வையை சுரண்டி வாழ்கிறார்கள் என்பது போக போக அறிந்து கொண்டேன்.

மத்திய கிழக்கில் நடக்கும் பாரிய ஊதிய கொள்ளை எனலாம் இது தெரியும் எல்லோருக்கும் ஆனால் கண்டு கொள்வதில்லை அரசாங்கம் தற்போது சாதாரண ஊழியர்களுக்கு இதுதான் சம்பளம் என்று சட்டம் போட்டதால் பல இந்திய கம்பனிகளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் வந்தாலும் சுரண்டல்கள் இருக்கத்தான் செய்கிறது அதாவது ஒரு நாளைக்கு வேலைக்கு செல்லாவிட்டால் இரண்டு நாழுக்குரிய சம்பளப்பணத்தை சம்பளத்தில்லிருந்து வெட்டி எடுப்பது  

அடுத்தநாள் காலை நேரம் பிரிக்கப்பட்டு வேலைக்கு வந்த நேரம் திடீர் சுகயீனம் ஒருத்தனுக்கு ஏற்பட வேரொரு இடத்துக்கு சாப்பாடு வேனில் கொண்டு போகும் வேலை எனக்கு கிடைத்தது மற்றவனுக்கோ டிஸ்வோசில் இருந்தானுகள் காரணம் நான் புதுசா வேலை பழகுவன் எனவும் பழைய ஆட்களுக்கு அந்த வேலை தெரியும் என்பதால் அவர்களை மாற்ற வில்லை அந்த மேனேஜர் அவனும் ஓர் கள்ளன் தான் என்பது போக போக நானும் தெரிந்து கொண்டேன் இந்தியாவில் இருந்து ஆட்களை எடுத்து ஹோட்டலுக்கு இந்திய காசு கணக்கு பார்த்து 10000 ரூபா மட்டும் தான் கொடுக்க வேண்டுமென நான் காதறிய சொன்னவர். அவர் மட்டும் லட்ச கணக்கில் உழைத்துகொண்டார். நாட்டை விட்டு ஓடியும் போனார் கொள்ளையடித்து விட்டு.

மாதம் முழுக்க வேலை 2 நாட்கள் மட்டும் விடுமுறை நாங்கள் 5 பேர் மட்டும் இலங்கையர்கள் அவர்கள் எங்களை புலிகள் என்றே அழைத்துக்கொண்டார்கள் இலங்கையில் சண்டை அதிகமாக இருந்தததால் இப்படி இரண்டு மூன்று மாதங்கள் கழிய ஊருக்கு கொஞ்ச பணத்தையும் அனுப்பிவிட்டு ஒரு போண்காட்டை வாங்கி பூத்தில் நின்று கதைத்துவிட்டு ஒரு போணை அனுப்புறன் ஒருவரிடம் வாங்கி கொள்ளுங்கள் என சொல்லி விட்டு போட்டு மிஸ்டு கோல் கொடுங்கள் நான் எடுக்கிறேன் என காத்துக்கொண்டிருந்தேன் அன்றைய நாள் தான் 2004.12. 26 அதிகாலை போண் அழைப்பு வருமென காத்திருந்த எனக்கு சுனாமி என்ற சொல் மட்டும் டீவியில் முதன்மைச் செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது மற்ற நண்பர்களுக்கு ஊரில் எல்லோருக்கும்  அழைத்துப்பார்த்தால் எந்த தகவலும் இல்லை டீவியின் கீழ் பகுதியிலும் செய்தியில் இலங்கையிலும் கரையோர பிரதேசங்களும் அனர்த்தத்துக்கு உள்ளாகி பலர் இறப்பு என்ற செய்தியுடன் நானும் இடிந்து போனேன். ஏனென்றால் எனது வீடும் சொந்தங்கள் அனைவரதும் வீடும் கரையோர பிரதேசங்களை அண்டித்தான் இருந்தது .

தொடரும்.............1f42b.png1f42b.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

... சம்பளம் உங்க கம்பனி தரும் மேலதிக காசு நாங்கள் தருவோம் என்றார் (150) திர்ஹம் (ரூபா) கம்பனி 500+150 மொத்த சம்பளம் 650 x 35 (இலங்கை பெறுமதி) நீங்கள் கணக்கு பார்த்து கொள்ளுங்கள் இதுதான் மொத்த சம்பளம் எங்களுக்கு. ஹோட்டல் கம்பனிக்கு கொடுப்பது 3000 திர்ஹம் அவர்கள் அதை எடுத்துவிட்டு எங்களுக்கு கொடுப்பது வெறும் 500 மட்டும் எப்படி இந்த கம்பனிகள் ஊழியர்களின் வியர்வையை சுரண்டி வாழ்கிறார்கள் என்பது போக போக அறிந்து கொண்டேன்...

சாரி, முனி..!

இது அநியாய சுரண்டல்..

எங்கள் பகுதியிலிருக்கும் சிறிய உணவகத்தில் கூட தங்குமிடம், சாப்பாடு இலவசமாகக் கொடுத்து, குறைந்தது மாதம் திர்ஹாம் 1300/- கொடுக்கிறார்கள்.

அலுவலக வேலை, ஸ்டோர்ஸ் கீப்பர் வேலை கிடைத்தால் கூட வேலை அழுத்தம் குறைவாக, அதே நேரம் ஊதியமும் அதிகமாக கிடைத்திருக்கும்.

இது எனது அனுமானம் மட்டுமே..! உங்களின் வேலை சூழல், முன் அனுபவம், கல்வித் தகுதி பற்றி தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி இந்த வேலை ஒருமாதம் சுழன்றது அந்த வேலை ஒப்பந்தம் முடிவடைய மீண்டும் அந்த ஆட்கள் பிரிக்கும் இடத்துக்கு சென்றோம் எல்லோரும்.

பாவியர் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவ்வளவு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து இருக்கிருக்கிறீர்கள்...உப்ப நினைக்க கவலையாய் இல்லையா😥 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

சாரி, முனி..!

இது அநியாய சுரண்டல்..

எங்கள் பகுதியிலிருக்கும் சிறிய உணவகத்தில் கூட தங்குமிடம், சாப்பாடு இலவசமாகக் கொடுத்து, குறைந்தது மாதம் திர்ஹாம் 1300/- கொடுக்கிறார்கள்.

அலுவலக வேலை, ஸ்டோர்ஸ் கீப்பர் வேலை கிடைத்தால் கூட வேலை அழுத்தம் குறைவாக, அதே நேரம் ஊதியமும் அதிகமாக கிடைத்திருக்கும்.

இது எனது அனுமானம் மட்டுமே..! உங்களின் வேலை சூழல், முன் அனுபவம், கல்வித் தகுதி பற்றி தெரியாது.

முன் அனுபவம் கல்வி தகமையென்பதெல்லாம் ஒன்றும் பார்க்கல எடுத்து வந்த செட்டிபிகேட் எல்லாம் வெறும் காகிதமாக மட்டும் பார்க்கப்பட்டது  மதம் கூட பாரியசவாலாத்தான் இருந்தது நல்ல வேலைக்கும். மற்றது ஓர் வருடம் இருந்து விட்டு செல்லலாம் என இருந்தேன் ஆனால் நடந்தது வேறு.

அது போக கம்பனிக்காரர்கள் அந்த 3000 ரூபாய்க்கு கணக்கு சரியாக காட்டுவார்கள் (நீர் +மின்சாரம் + மூட்டை +கரப்பான் பூச்சி மருந்துக்கு+ போக்குவரத்து +கம்பனிச்சாப்பாடு+யூனிபோம் தராத எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வார்கள்)

13 hours ago, ஈழப்பிரியன் said:

பாவியர் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் தான்.

ம்ம் காலம் வகுத்தது அதன்படியே நடக்கும் நடக்கிறது 

5 hours ago, ரதி said:

உண்மையில் இவ்வளவு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து இருக்கிருக்கிறீர்கள்...உப்ப நினைக்க கவலையாய் இல்லையா😥 

 இருக்கு ஆனால் அதுவும் சில காலம் தான் ரதி  மீண்டும் அரசு கம்பனிகளுக்கு ஊழியர்களுக்கான  சம்பளத்தை கூட்ட சொன்னதும் 800+ ஓவர்டைம் காசும் கொடுக்கப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நாட்கள் வேலைக்கு செல்ல வில்லை ................

6வது  நாளாக ஊருக்கு  அழைத்தேன் அப்போது எனது தம்பி இறந்த செய்தி சொல்லவில்லை எங்கேயாவது இருப்பான் எனவும் எங்கள் வீடுகள் எல்லாமே கடலால் அள்ளிச்செல்லப்பட்டு விட்டதும் அந்த இடங்கள் எல்லாம் அரச காணியாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அறிய முடிந்தது . நான் ஒன்றை நினைத்திருக்க காலம் ஒரு கணக்கை போட்டு என் கையில் திணித்து விட்டு சென்றது. நீ இருந்தாக வேண்டுமென இந்த மூட்டைப்பூச்சிகள்,கரப்பத்தான் பூச்சிகள் இருக்கும் நாட்டில் வாழ்ந்தாக வேண்டுமெனவும்.  

ஊருக்கு சென்றும் ஒன்றும் செய்திட முடியாது அகதிகளாகத்தான் இருக்க வேண்டும்  அம்மா அப்பா தங்கை இருவரும் அகதிகள் முகாமில் தான் இருக்கிறார்கள் நானும் ஊருக்கு போய் என்ன செய்ய??. இங்கே இருந்தால் ஏதாவது உழைத்து செய்திடலாமென நினைத்து இருந்தன். ஊரில் வேலையும் எடுக்க ஏலாது அப்படி அரசும் கொடுக்காது தமிழர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு . நண்பர்களும் வந்து இன்னொரு தடவை ஏ. எல் (உயர்தர பரீட்சை) எழுதிவிட்டு செல்லுடா என்று சொல்ல நானோ அங்கே வந்தால் மீண்டும் வரமுடியாதுடா நான் இங்கே இருந்து உழைத்துதான் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றேன் நானும் மீண்டும் ஏ. எல் +2 (உயர்தரம்) பரீட்சை எழுத முடியல ஆனால் அவர்கள் எல்லோரும் எழுதி  பாஸ் ஆகினார்கள்

எனது கம்பனிக்கு ஊரில் அனர்த்தம் நடந்துவிட்டது ஏதாவது உதவிகள் செய்ய முடியுமா என கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். நாட்கள் கடந்தன அழுகையும் சோகங்களும் நிறைந்தது  நாங்களோ இங்கிருந்தால் நம்மளை உறுஞ்சி விடுவார்கள் வேற இடத்துக்கு செல்ல வேண்டுமென பிளான் பண்ணிக்கொண்டு இருப்போம். சந்தர்ப்பம் அமையவில்லை  அந்த ஹோட்டல் அமைந்துள்ள இடமோ , சகல நிகழ்வுகளும் நடக்கும் இடம் விபச்சாரம் , பப்புகள் , தியட்டர்கள் என மிக பிரபலமான இடம் இங்கே துபாய் நாட்டுக்காசு அனைத்தும் இங்கே செலவழிக்கப்பட வேண்டும் என அந்த நாட்டு அரசு நினைத்து அனைத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது போல எல்லாமே சாதாரணமாக நடக்கும். இரவில் ஓட்டல் எங்களின் கைகளில் தான் இருக்கும் சகல வேலைகளையும் செய்து பூட்டி விட்டு செல்லும் வழியில் கையை அசைப்பார்கள் கையை பிடித்து இழுப்பார்கள் (வர்ரியா) என சகல நாட்டு இறக்குமதி செய்யப்பட்ட பெண் போதைகளும் வரிசையாக நிற்கும் . அவர்களின் தொழிலுக்காக அவர்களும் ஏமாற்றி இறக்குமதி செய்ப்பட்டவர்களாகத்தான் இருக்குமென நான் நினைத்துக்கொள்வேன் .

ஆசைகள் வந்தாலும் அவை மெதுவாக உள்ள இருந்து நீ இங்கே சந்தோசமாக இருக்க அங்கே அவர்கள் ?? என்ற கேள்விகள் கேட்டுவிட்டு வந்த ஆசைகளை கூட்டி சென்றுவிடும் என்னுடன் இருந்த எல்லோரும் அப்படியே சென்றானுகள் இங்கே உழைத்து இங்கே செலவழிக்கணும் இதற்கெல்லாம் நாம் செல்லக்கூடாது என ஏனென்றால் அவனுகளும் என்னைப்போலவே கஸ்ரப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாட்கள் சென்றது ஓர் நாள் ஓணம் பண்டிகை என்பதால் எனக்கும் வேலை அதிகமாக இருந்தது அப்போதுதான் எனது நண்பன் அந்த ஓட்டல் மேனேஜரை சட்டை கோலரில் பிடித்து ஆளைத்தூக்கி வைத்து அடிக்க கூடியிருந்தான் .(அடிச்சிட்டான்)

ஒரு சின்ன கலவரம் ஏற்பட கம்பனிக்கு கோல் எடுத்து இவர்கள் அனைவரையும் உடனடியாக மாற்றுங்கள் என சொல்ல அடுத்த நாள் காலை பெட்டி படுக்கைகளுடன் நாங்கள் செல்ல  இடிஅமீன் சண்டை பிடிச்சது யாரு தமிழ் மாறன் நான் தான் என்றான் துணிச்சலானவன் அதிகம் பேசமாட்டான் புலிகளிலிருந்து கடிதம் கொடுத்து விலகி வந்தவன். நீ உடனே அபுதாபிக்கு போ என சொல்ல அவனும் போய்ட்டு வாரேன்டா என சொல்லி அவனும் போய் விட்டான். அந்த இடிஆமிக்கு அழைப்பு வருகிறது ஒரு ஒப்பிஸ் பாய் ( Office Boy) எனக்கு விசா எடுக்க சொன்ன நேரம் ஏஜென்சிக்காரனால் சொல்லப்பட்ட வேலை அது எங்களுக்கு தேவைப்படுகிறது இடிஆமினோ ஆங்கிலம் ஆருக்கு தெரியுமென்று கேட்க நான் தலையசைக்க  நீ இவருடன் போ என ஒருவரிடம் கொடுத்து என்னை அனுப்புகிறார்.

ஓர் அரபிகள் வேலை செய்யும் அரச அலுவலகத்துக்கு அங்கே சென்றால் எல்லாம் உள்நாட்டு அரபிகள் அரபி மட்டுமே பேசுவார்கள் அவர்களுக்கு ஆங்கிலம் புரியாது ஹிந்தி ஓரளவு பேசுவார்கள் .அங்கிருந்த மேனேஜர் மட்டும் ஆங்கிலமும் ,ஹிந்தியும் , மலையாளமும் பேசுவார்  . அங்கே சென்றபோது என்னுடன் இன்னொரு மட்டக்களப்பு பொடியனும் இருந்தார் மற்றவர்கள் (டிரைவர்) வங்களாதேஷ் நாட்டுக்காரர் நாங்கள் 3 பேரும் அங்கே அலுவலக உதவியாளராக கடமை புரிய ஆரம்பித்தோம் எனக்கு வேலைகள் பழக்கப்பட்டு பழகிக்கொண்டேன் .அங்கே ஓர் மாதம் சென்ற பின்னர் அவர்கள் தொழுவும் நேரம் பார்த்து வாகனங்களை கழுவ ஆரம்பித்தேன் . ஓர் கார் கழுவினால் எல்லா உடுப்புக்களும் நான் குளிர்த்தது போல ஆகிடும் அங்கு வருபவர்கள் எல்லோரும் அரச குடும்பத்தை சேர்ந்த அரபிகள் என்பதால் வேலையில் சுத்தமாகவும் ஆழும் சுத்தமாக சேவ் செய்து நல்ல உடுப்புக்கள் அணிந்து இருக்க வேண்டும் சாப்பாடு எல்லாம் காலை சாப்பாடு மதிய சாப்பாடுகள்  கிடைத்தது . 2 மணிநேரத்துக்கு ஒரு பெரிய ஹோட்டல் சாப்பாடு கொண்டு வருவார்கள் .

ஒர் காரை கழுவும் போது அரபி பெண்கள் எங்கள் காரையும் கழுவி விடு என காசும் தருவார்கள் சிலர் 50 சிலர் 20 ஆனால் கார் அருகே நிற்க முடியாது அவ்வளவு வெளிச்சூடும் உள் சூடுமாக அனலாக இருக்கும் 12.30ற்கு  மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் ஓர் நாள் லேட்டாக எனக்கு கம்ளைண்ட்(றிப்போட்) அடிக்கப்பட்டது.

தொடரும்................. 1f42b.png1f42b.png

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போது எனது தம்பி இறந்த செய்தி சொல்லவில்லை எங்கேயாவது இருப்பான் எனவும் எங்கள் வீடுகள் எல்லாமே கடலால் அள்ளிச்செல்லப்பட்டு விட்டதும் அந்த இடங்கள் எல்லாம் அரச காணியாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அறிய முடிந்தது . நான் ஒன்றை நினைத்திருக்க காலம் ஒரு கணக்கை போட்டு என் கையில் திணித்து விட்டு சென்றது.

என்ன நடந்தது இதை கொஞ்சம் விபரமாக எழுதலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டுராஜா,
படிப்பதுக்கு மிகவும் கனமாக உள்ளது, தொடர்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியின் இழப்பு தாங்க முடியாத துயரம் தான், துன்பத்துக்கு மேல துன்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.