Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

எப்போதும் தமிழன் வசதியான இடத்தில் 2 வதாக  இருந்து தனது கருத்தை சொல்வதால் யாரும் அவர் கருத்தை ஏற்று கொள்வார்கள். இது சகஜமானதே.....!

Résultat de recherche d'images pour "status of rich and poor gif"

நான் கொஞ்சம் கீழே 24ல்  இருந்து  எனது கருத்தை சொன்னாலும் அது சபை ஏறாது, ஆனாலும் சொல்கிறேன் பங்களாதேஷை தவறாக எடை போட்டு விட்டொமோ என்று.......!

Image associée

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

எப்போதும் தமிழன் வசதியான இடத்தில் 2 வதாக  இருந்து தனது கருத்தை சொல்வதால் யாரும் அவர் கருத்தை ஏற்று கொள்வார்கள். இது சகஜமானதே.....!

நான் கொஞ்சம் கீழே 24ல்  இருந்து  எனது கருத்தை சொன்னாலும் அது சபை ஏறாது, ஆனாலும் சொல்கிறேன் பங்களாதேஷை தவறாக எடை போட்டு விட்டொமோ என்று.......!

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

நியூஸிலாந்து  அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு கூட என்ற எனது கணிப்பு அவர்களின் முந்தய உலக கோப்பைகளில் அவர்களின் achievements இல் இருந்து வந்ததே! அதைவிட பல நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தில் county அணிகளுக்கு விளையாடுவதும் அவர்களுக்கு கூடிய வெற்றி வாய்ப்பைப்பெற உதவும் என்று நினைக்கிறேன். அத்துடன் கேப்டன் கூல் Kane Williamson , Stephan Fleming  போல் ஒரு master tactician. 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இனி ரதி அக்கா போலை கடைசி இடத்தை நோக்கி நகரப்போறன். கோசான் பயப்பிட தேவையில்லை நாங்கள் இருக்கிறம் போட்டிக்கு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

இதை  நான் நேற்றே எழுதி விட்டன் , இன்று வ‌ங்கிளாதேஸ் வெல்லுற‌துக்கு வாய்ப்பு அதிக‌ம் இருக்கு 👌

6 hours ago, புங்கையூரன் said:

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

புங்கையூர‌ன் ஜ‌யா , நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாம் தானே உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல்  😁/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

அருன் பீன்ஸ்  சிறு த‌வ‌று செய்த‌ மாதிரி இருக்கு , நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டையை தெரிவு செய்து இருக்கிறார் / உந்த‌ மைதாண‌த்தில் இர‌ண்டாவ‌து இனிங்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் , பொறுத்து இருந்து பாப்போம் 😉

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்ளாதேஸ்சின் தோல்வி உறுதி / ஓட்ட‌ம் கூட‌ குடுத்திட்டின‌ம் 😉

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு நிறுத்த‌  ப‌ட்டு இருக்கு 😉

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

ஒத்துகிறேன் நீங்க பத்தினிதான் 😂.

மண்டைகாய வேண்டாம் கிருபன் - நாங்கெல்லாம் கொப்பி அடிச்சாலும் சொல்லிப்போட்டுதானே அடிக்கிறம். அப்ப யார் வெண்டாலும் பெருமை உங்களுக்குதானே😎.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்னை பார்த்து கொப்பி அடித்த மாதிரித்தான் கள நிலவரங்கள் கூறுது.....!  😁

              Image associée

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

உண்மைதான், ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் இல் விளையாடும் பொழுது அவர்களின் தொனி மாறிவிடும், மோசமான டீம்ஆக வந்தால்கூட, ஒருமாதிரி pick up பண்ணி, மேலே வந்து, cup உம் எடுத்துவிடுவார்கள். Game plan அந்தமாதிரி. 

முன்பு நான் கிரிக்கெட் பார்க்கும் காலத்தில், chasing மிகவும் கடினமானது, முதலாவது டீம் 270-280 ஓட்டங்கள் எடுத்துவிட்டாலே போதும், வெற்றி நிச்சயம். இப்பொழுது 350 என்ற இலக்கை எல்லாம் சாதாரணமாக chase செய்கிறார்கள். 

பங்களாதேஷ் இம்முறை ஆச்சரியப்படுத்துகிறார்கள்,  எப்பிடி இருந்தவர்கள். தென்னாபிரிக்கா போன்ற அணிகளை இலகுவாக வெல்லுகிறார்கள். 300+ ஓட்டங்களை எல்லாம் chase செய்கிறார்கள். 

தென்னாப்பிரிக்கா மிகவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கு, அரை இறுதிக்கு வருவார்கள் என்று கணித்திருந்தேன், ஆஸ்திரேலியாவுக்கு மேலாக இவர்களை செலக்ட் பண்ணியிருந்தேன், இனி முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நீர்வேலியான் said:

தென்னாபிரிக்க அணிக்கு pressure situations ஐ  கையாள தெரியாது. எப்போதும் சொதப்புவார்கள். இம்முறை 5 வெள்ளையல்லாத வீரர்கள் கட்டாயம் அணியில் இடம்பெறவேண்டும் என்று வேறு கட்டுப்பாடு உள்ளது. சொல்லவா வேண்டும்?? AB  டிவில்லியர்ஸ்  விளையாடியிருந்தால் ஒருவேளை அரை இறுதிக்கு வர சான்ஸ் இருந்திருக்கும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவ‌ர் விளையாட்டு அறிமுக‌மான‌ பிற‌க்கு / ஒரு நாள் தொட‌ரில் 300 ஓட்ட‌ம் என்ப‌து சுல‌ப‌மா அடிச்சு ஆடி எடுக்கின‌ம் / 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் கிரிக்கெட் உல‌கில்  இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் /

இங்லாந் அணி இப்போது ப‌ல‌மாய் இருக்கு / இன்னும் கொஞ்ச‌ வ‌ருடம் போனா இப்ப‌ இருக்கிர‌ இங்லாந் அணி மாதிரி இருக்காது / இங்லாந் வீர‌ர்க‌ள் 34 வ‌ய‌தோடு ஓய்வை அறிவிக்கிர‌வை , இப்ப‌ இருக்கிர‌ பெரிய‌ இங்லாந் ஜ‌ம்ப‌வான்க‌ள் 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாட‌ கூடிய‌வை / அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் இட‌த்தை நிர‌ப்ப‌ ந‌ம்பிக்கையான‌ 
வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை /

எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு 
இங்லாந் அணி இப்போது தான் ப‌ல‌மாய் இருக்கு / 

இந்தியா அணியில் இட‌ம் பிடிக்க‌
வீர‌ர்க‌ள் இடையே க‌டும் போட்டி / 
இந்தியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ ஜ‌பிஎல் மூல‌ம் பார்க்க‌ தெரியும் /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 38
எப்போதும் தமிழன் 38
ரஞ்சித் 36
கந்தப்பு 36
ஈழப்பிரியன் 34
எராளன் 34
தமிழினி 34
பகலவன் 34
கல்யாணி 34
அகஸ்தியன் 32
கிருபன் 32
ரதி 32
கறுப்பி 32
நந்தன் 30
புத்தன் 30
குமாரசாமி 30
வாத்தியார் 30
நுணாவிலான் 30
ராசவன்னியன் 28
வாதவூரான் 28
சுவைப்பிரியன் 28
மருதங்கேணி 28
காரணிகன் 28
சுவி 24
கோசான் சே 24
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா இந்த‌ பெரிய‌ ர‌ன்ஸ் எடுத்தும் / வ‌ங்ளாதேஸ் அணி 48 ர‌ன்னால் தோல்வி /

சொறில‌ங்காவிலும் பார்க்க‌ வ‌ங்கிளாதேஸ் ந‌ல்லா விளையாடுது 

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை நம்பி பல போட்டிகளில் அவர்கள் வெல்வார்கள் என்று கணித்துவிட்டேன். இப்போது நியூஸிலாந்து அரையிறுதிக்குப் போவது உறுதி. ஆனால் வழமைபோல் அவர்களின் ஸ்ரீம் குறைந்துவிடும் என்பதால் இறுதிப்போட்டிக்குப் போகமாட்டார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

ஒத்துகிறேன் நீங்க பத்தினிதான் 😂.

மண்டைகாய வேண்டாம் கிருபன் - நாங்கெல்லாம் கொப்பி அடிச்சாலும் சொல்லிப்போட்டுதானே அடிக்கிறம். அப்ப யார் வெண்டாலும் பெருமை உங்களுக்குதானே😎.

நாங்கள் இப்போது ஒரே கோட்டில் இணைகின்றோம். 😂

என்னை கொஞ்சநாள் அளவு கணக்கில்லாமல் வறுத்தெடுத்தாங்களப்பா.....சொல்லி வேலையில்லை..🤠

  • கருத்துக்கள உறவுகள்

நாலைக்குத் தான் வாழ்வா,சாவா போராட்டம்...இலங்கையணிக்கு கொஞ்சசமாவது இரக்கம் இருந்தால் எனக்காவது🙃 போட்டியில் வெல்லுவார்கள்/வெல்ல வேண்டும்...அல்லது அவர்களும் சவுத் ஆபிரிக்கா மாதிரி மூட்டையை கட்ட வேண்டியது தான் 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

20 ஓவ‌ர் விளையாட்டு அறிமுக‌மான‌ பிற‌க்கு / ஒரு நாள் தொட‌ரில் 300 ஓட்ட‌ம் என்ப‌து சுல‌ப‌மா அடிச்சு ஆடி எடுக்கின‌ம் / 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் கிரிக்கெட் உல‌கில்  இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் /

இங்லாந் அணி இப்போது ப‌ல‌மாய் இருக்கு / இன்னும் கொஞ்ச‌ வ‌ருடம் போனா இப்ப‌ இருக்கிர‌ இங்லாந் அணி மாதிரி இருக்காது / இங்லாந் வீர‌ர்க‌ள் 34 வ‌ய‌தோடு ஓய்வை அறிவிக்கிர‌வை , இப்ப‌ இருக்கிர‌ பெரிய‌ இங்லாந் ஜ‌ம்ப‌வான்க‌ள் 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாட‌ கூடிய‌வை / அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் இட‌த்தை நிர‌ப்ப‌ ந‌ம்பிக்கையான‌ 
வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை /

எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு 
இங்லாந் அணி இப்போது தான் ப‌ல‌மாய் இருக்கு / 

இந்தியா அணியில் இட‌ம் பிடிக்க‌
வீர‌ர்க‌ள் இடையே க‌டும் போட்டி / 
இந்தியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ ஜ‌பிஎல் மூல‌ம் பார்க்க‌ தெரியும் /

2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் 😂. 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். 

அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. 

இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள்.

விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது.

3 hours ago, குமாரசாமி said:

நாங்கள் இப்போது ஒரே கோட்டில் இணைகின்றோம். 😂

என்னை கொஞ்சநாள் அளவு கணக்கில்லாமல் வறுத்தெடுத்தாங்களப்பா.....சொல்லி வேலையில்லை..🤠

நம்ம தொழில் கஸ்டம் புரியாத சனங்கள்😂 

2 hours ago, ரதி said:

நாலைக்குத் தான் வாழ்வா,சாவா போராட்டம்...இலங்கையணிக்கு கொஞ்சசமாவது இரக்கம் இருந்தால் எனக்காவது🙃 போட்டியில் வெல்லுவார்கள்/வெல்ல வேண்டும்...அல்லது அவர்களும் சவுத் ஆபிரிக்கா மாதிரி மூட்டையை கட்ட வேண்டியது தான் 
 
இஞ்ச, இவவாவுக்கு தங்கட டீம் சவுத் ஆபிரிக்காவை விட திறம் எண்ட நினைப்பு 😂. ஆப்கனிஸ்தானோடயே தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்.

4 hours ago, கிருபன் said:

தென்னாபிரிக்காவை நம்பி பல போட்டிகளில் அவர்கள் வெல்வார்கள் என்று கணித்துவிட்டேன். இப்போது நியூஸிலாந்து அரையிறுதிக்குப் போவது உறுதி. ஆனால் வழமைபோல் அவர்களின் ஸ்ரீம் குறைந்துவிடும் என்பதால் இறுதிப்போட்டிக்குப் போகமாட்டார்கள்!

Chokers ஐ நம்பினால் ஆகுவீர்கள jokers!

வழமையா குவாட்டரல, செமில தான் குப்புற விழுறது, இந்த முறை ஆரம்பத்திலேயே.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 6:12 PM, ரதி said:

ஊரில் இருப்பவை கேட்க்கினம் எங்கட நாட்டில மட்ச் நடக்கேக்குள்ள மழை வந்தால் முழு  மைதானத்தையும்  மூடக்  கூடிய வசதி இருக்குது...நீங்கள் பணக்கார நாடாக இருந்து கொண்டு உங்களிட்ட அந்த வசதி இல்லையோ  என்றினம் 🤫

ரதி அக்கா,

கவர் போடாமைக்கு இதுதான் காரணம்.

ஊரில் ஒரு மைதானத்திலும் ஒழுங்கான நீர்வடிப்பு (டிரைனேஜ்) இல்லை. அதனால் அவுட் பீல்டில் சின்ன மழைக்கே வெள்ளம் தேங்கி விடும். இங்கே அப்படி இல்லை. எல்லா பெரிய கிரவுண்டுமே ஒரு டிரைன் வலைஅமைப்பின் மீதுதான் இருக்கும். ஆகவே விழும் மழை தங்காது உடனடியாக கீழே போய்விடும். எனவே இங்கே முழு கிரவுண்டையும் மூட வேண்டிய தேவை இல்லை. பிரிஸ்டல், தோண்டன் போன்ற டெஸ்ட் போட்டிகள் நடவாத இரு சின்ன கிரவுண்டுகளில் மட்டும் இந்தளவுக்கு டிரைனேஜ் வசதி இல்லை. தவிரவும் அன்றைக்கு அடிச்ச அடைமழைக்கு கவர் போட்டும் கண்டிராது. அடைமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுதால், மழை நீர் கவருக்கு கீழாலேயும் பரவும்.

On 6/19/2019 at 10:46 AM, பையன்26 said:

அண்ணா , அன்மையில் இர‌ண்டு பேரும் சேர்ந்து தானே அப்கானிஸ்தான் அணிய‌ புக‌ழ்ந்த‌ நாங்க‌ள் , அவைக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு என்று ,

அப்ப‌டி புக‌ழ் பாடி போட்டு இப்ப‌டி எழுதினத‌க்கு என‌து வ‌ன்மையான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள் 😁😁😁 /

அது வேறவாய் 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் 😂. 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். 

அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. 

இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள்.

விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது.

இங்லாந் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை ,
இப்ப‌ இருக்கிர‌ மோர் அலி ம‌ற்றும் ர‌சித் இவ‌ர்க‌ள் அங்கினேக்க‌ ப‌ந்தை சுழ‌ட்டி போடின‌ம் /

இங்லாந் அணியில் ( ப‌ட்லர்) (மோர்க‌ன்) ( ரோட் ) இவ‌ர்க‌ளின் ஓய்வோடு ம‌ற்றும் ஒரு சில‌ வீர‌ர்க‌ளின் ஓய்வோடு இங்லாந் அணி பின்ன‌டைவை ச‌ந்திக்கும் /

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை /

ப‌ட்ள‌ர் ம‌ற்றும் மோர்ன் அலியின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இங்லாந் அணி ப‌ல‌மான‌ அணியா வ‌ந்த‌து /

இந்தியாவில் எத்த‌ன திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் , 

என‌க்கு இந்தியா அணிய‌ பிடிக்காது

உண்மையை சொல்ல‌ போனால் 
( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் ) 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

இதை  நான் நேற்றே எழுதி விட்டன் , இன்று வ‌ங்கிளாதேஸ் வெல்லுற‌துக்கு வாய்ப்பு அதிக‌ம் இருக்கு 👌

புங்கையூர‌ன் ஜ‌யா , நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாம் தானே உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல்  😁/

சோம்பேறிக் குணம் தான்...காரணம் பையா...!

மாடு மரத்தின் கீழ் படுத்து இரை மீட்டுவது போல.....தனிமையில்...இனிமை காண்பதில்....இப்போதெல்லாம் ஒரு சுகம்!

பார்வையாளராக இருக்கத் தான் ...எண்னினேன்!

இப்போது பங்காளியாகி இருக்கலாமோ என்று கவலைப்படுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

Just now, goshan_che said:

27 minutes ago, பையன்26 said:

உண்மையை சொல்ல‌ போனால் 
( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் ) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.