Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

arrested.jpg

இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கள பெளத்த பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வைத்தியர் குறித்த தகவல் கிடைத்ததா? இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என சபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள்  நேற்றையதினம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினர். 

இந்த குற்றச்சாட்டு குறித்து விசேட விசாரணை ஒன்றினை நடத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்றையதினம் சபாநாயகர் சபையில் தெரிவித்தார். 

இந்த குற்றச்சாட்டு குறித்து விசேட விசாரணை ஒன்றினை நடத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சபை நகர்வுகளின் போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு சத்திரசிகிச்சை செய்ததாக சிங்கள ஊடகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இது குறித்த உண்மைத்தன்மை என்ன? என கேள்வி எழுப்பினர், 

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் :- இது குறித்து இன்று (நேற்று) காலையிலும் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில் வினவினேன். இது குறித்து கடினமான விசேட விசாரணை ஒன்றினை நடத்தக் கோரியுள்ளேன் என்றார். 

இந்நிலையில், நான்காயிரம் சிங்கள பெளத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறும் தவ்ஹித் ஜமா-அத்தை சேர்ந்த அந்த முஸ்லிம் வைத்தியர் யார்? இந்த செய்தி உண்மையா? உண்மையென்றால் உடனடியாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றினை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கடந்த வியதழக்கிழமை சபையில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய உடனடியாக உண்மைகளை கண்டறிந்து சபையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். 

முதன்மை சிங்கள நாளிதழ் ஒன்றில் இன்றைய தினம் (வியாழக்கிழமை 23.05.2019) தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்று குறித்து இன்றைய தினம் வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற அமர்வுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கேள்வி எழுப்பினார். 

இதன்போது  ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக:- சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியொன்று குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். இதில் சத்திர சிகிச்சை செய்யும் தவ்ஹித் ஜமா-அத்  அமைப்பை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 4 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளார். 

இது குறித்து சாட்சியங்களுடன் தகவல் வெளிவந்துள்ளது. குறித்த வைத்தியரை கைதுசெய்ய தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என குறித்த பத்திரிகை செய்தியை தலைப்புச்செய்தியாக பிரசுரித்துள்ளது. இந்த செய்தி உண்மையென்றால் இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் காரணியாக அமையும். இதனால் ஏனைய இன மக்கள் முஸ்லிம் வைத்தியர்கள் எவரிடமும் செல்லாது தவிர்க்க வாய்ப்புகள் உள்ளது. 

அதையும் தாண்டி இது இனவாத பிரச்சினைகளை உருவாக்கும் காரணியாக அமையும். ஆகவே இந்த செய்தி குறித்து அரசாங்கம் உடனடியாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குறித்த வைத்தியர் 7 ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்துள்ளார் எனவும் அதில் நான்காயிரம் சிகிச்சைகளில் பெளத்த சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துள்ளார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே அரசாங்கம் என்ற வகையில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என்பதையும் கூற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த வைத்தியர் நேற்றையதினம் சந்தேகத்திற்குரிய சொத்துகள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/56698

  • கருத்துக்கள உறவுகள்

8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’???

image-10.png?resize=534%2C533

சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என ‘திவயின’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருணாகல் பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது. இதன்போது அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை, வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாக அவர் பெருமளவில் பணம் ஈட்டியுள்ளார் என காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர், சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே கைதானார் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தாரா? என்பது தொடர்பில் காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

image-1-2.png?resize=612%2C640

ஏற்கனவே அவர் 4000 சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தார் என ‘திவயின’ செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி வெளியாக்கப்பட்டதை அடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும், தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் குறித்த வைத்தியர், வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரியிருந்தார்.

இந்த விடயம் நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்த போதிலும், நேற்று அவ்வாறான தெளிவுபடுத்தல் எதனையும் சபையில் அவர் வழங்கவில்லை.

எனினும், சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை இடம்பெற்றமை தொடர்பாகப் காவல்துறையினரோ, புலனாய்வுப் பிரிவோ எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை என்று நேற்றுமுன்தினம் கூறிய சபாநாயகர், நேற்றைய அமர்வில் வைத்து இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் ஆராய்ந்து வருகின்றார் எனக் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/2019/122701/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் சிக்கா சிலிம்மா இருபதன் மர்மம் இப்ப விளங்கிட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இவ்வளவு காலமும் இந்த வைத்தியரை பற்றி ஒருத்தருக்கும் தெரியாமல் போனது?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

எப்படி இவ்வளவு காலமும் இந்த வைத்தியரை பற்றி ஒருத்தருக்கும் தெரியாமல் போனது?

அறுவை சிகிச்சை  மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, 
அவர்களுக்கு தெரியாமலேயே...  கருத்தடை சத்திர சிகிச்சையை,
செய்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அறுவை சிகிச்சை  மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, 
அவர்களுக்கு தெரியாமலேயே...  கருத்தடை சத்திர சிகிச்சையை,
செய்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

தனியே அவர் மட்டும் செய்து இருக்க முடியாது..ஒரு குழுவாய் சேர்ந்து இயங்கி இருக்க வேண்டும் சொல்கிறார்கள்...சிசேரியன் செய்வதற்கு வைத்தியருக்கு இன்னொரு வைத்தியரின் உதவி,தாதிகள்  போன்ற டீம் ஒன்றை வைத்திருந்து இருக்கிறார்..சில பேர் காசுக்காய் இவருக்கு உதவி செய்திருப்பினம் 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பாகிஸ்தான்-குடும்பத்தை-பொறுப்பேற்ற-உறுப்பினர்/71-233329

கைதுசெய்யப்பட்ட வைத்தியருக்கு எதிராக பெண்கள் இருவர் முறைபாடு

திருமணமாகி குறுகிய கால இடைவெளியில் தாம் கருவுற்று முதலாவது குழந்தையை குருநாகல் போதனா வைத்தியசாலையில்  சிசேரியன் மூலம் பிரசவித்த பின்னர் தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்றும் குறித்தப் பெண்கள் தமது முறைபாட்டின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இவர்களது முறைபாட்டை பதிவு செய்த வைத்தியசாலை நிர்வாகம்,  இவர்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இப்பெண்களின் விருப்பத்துடன் நாளைய தினம் சோதனை செய்யவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அறுவை சிகிச்சை  மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, 
அவர்களுக்கு தெரியாமலேயே...  கருத்தடை சத்திர சிகிச்சையை,
செய்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

இப்பிடி நடந்திருக்க வாய்ப்பு உண்டு, இவ்வளவு துணிவாக செய்திருப்பாரா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இலகுவில் பிடிப்பட்டுவிடும். இப்பிடி உண்மையில் நடந்திருந்தால், ஒரு குழுவாகவே இயங்கி இருப்பார்கள். அங்கு நடக்கும் விசாரணைகளும், பத்திரிகை செய்திகளின் தாராதரமும் தெரிந்ததே, உண்மையாக நடந்ததா இல்லை திரிவுபடுத்தப்பட்டதா என்று கடைசிவரைக்கும்  எங்களுக்கு தெரியவராது.

6 hours ago, ரதி said:

தனியே அவர் மட்டும் செய்து இருக்க முடியாது..ஒரு குழுவாய் சேர்ந்து இயங்கி இருக்க வேண்டும் சொல்கிறார்கள்...சிசேரியன் செய்வதற்கு வைத்தியருக்கு இன்னொரு வைத்தியரின் உதவி,தாதிகள்  போன்ற டீம் ஒன்றை வைத்திருந்து இருக்கிறார்..சில பேர் காசுக்காய் இவருக்கு உதவி செய்திருப்பினம் 

உண்மையில் நடந்ததென்றால் எவ்வளவு துணிவு இருக்கவேண்டும். என்ன மனநிலை இது. மதம் இந்த அளவுக்கு போதையேற்றுமா?

Edited by நீர்வேலியான்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்திருக்க வாய்ப்பு உண்டு, இவ்வளவு துணிவாக செய்திருப்பாரா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இலகுவில் பிடிப்பட்டுவிடும். இப்பிடி உண்மையில் நடந்திருந்தால், ஒரு குழுவாகவே இயங்கி இருப்பார்கள். அங்கு நடக்கும் விசாரணைகளும், பத்திரிகை செய்திகளின் தாராதரமும் தெரிந்ததே, உண்மையாக நடந்ததா இல்லை திரிவுபடுத்தப்பட்டதா என்று கடைசிவரைக்கும்  எங்களுக்கு தெரியவராது.

உண்மையில் நடந்ததென்றால் எவ்வளவு துணிவு இருக்கவேண்டும். என்ன மனநிலை இது. மதம் இந்த அளவுக்கு போதையேற்றுமா?

எட்டாயிரம் பேரின் வாழ்க்கையில், விளையாடி இருக்கிறார்.
எத்தனையோ பேர் தமக்கு இன்னுமொரு குழந்தை வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.
அவர்களை... பெரும் ஏமாற்றத்திற்கும், மன உழைச்சலுக்கும் உள்ளாக்கி விட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

எட்டாயிரம் பேரின் வாழ்க்கையில், விளையாடி இருக்கிறார்.
எத்தனையோ பேர் தமக்கு இன்னுமொரு குழந்தை வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.
அவர்களை... பெரும் ஏமாற்றத்திற்கும், மன உழைச்சலுக்கும் உள்ளாக்கி விட்டார். 

சிறி, இந்த எண்ணிக்கை உண்மையிலேயே மலைப்பாக உள்ளது. ஒரு உணர்ச்சியும் இல்லாமல் எவ்வாறு இப்படி செய்யமுடிகிறது  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

சிறி, இந்த எண்ணிக்கை உண்மையிலேயே மலைப்பாக உள்ளது. ஒரு உணர்ச்சியும் இல்லாமல் எவ்வாறு இப்படி செய்யமுடிகிறது  

நீர்வேலியான்.... அவர்கள் மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் போது, 
உணர்ச்சிகள்  மரத்துப்  போய்விடும். இது இலங்கையில் மட்டுமல்ல... 
உலகெங்கும் வாழும் முஸ்லீம்களின்  நிலைப்பாடு இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்குக் கருத்தடை- ஆதாரமற்ற செய்தியெனக் கண்டனம்

கைதான வைத்தியர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
 
main photomain photomain photo

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம் மக்கள் மீது சிங்கள ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் போர் நடைபெற்றபோதும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலத்திலும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பௌத்த தேசிய இனவாதச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தன. அதேபோன்ற அணுகுமுறையை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் தொடர்பாகக் கொழும்பில் இயங்கும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. 

எண்ணாயிரம் சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமான கருத்தடை சத்திரசிகிச்சையை முஸ்லிம் வைத்தியர் ஒருவர் செய்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள நாளேடு செய்தி ஒன்றைப் பிரசுரித்துள்ளது.

ஆனால் அந்த நாளேட்டில் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என்றும் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவுமே தமக்குக் கிடைக்கவில்லை எனவும் இலங்கைப் பொலிஸ் மா அதிபர் கூறியதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

இந்த நிலையில் குருநாகல் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் 42 வயதான சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, என்ற வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் வங்கிக் கணக்கில் அதிகளவு நிதி வைப்பிலிடப்பட்டுள்ளமை தொடர்பாகவே குறித்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

எனினும் குறித்த வைத்தியர் எண்ணாயிரம் பேருக்கு சட்டவிரோதக் கருத்தடை செய்ததை ஒப்புக்கொண்டதாக இன்று சனிக்கிழமை வெளியான திவயின நாளேட்டில் மற்றுமொரு தகவல் பிரசுரமாகியுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்து அதிகளவு பணம் சம்பாதித்துள்ளதாகவும் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், குறித்த வைத்தியர் கருத்தடை சத்திர சிகிச்சையை செய்ததாகவும் அந்தக் குற்றச்சாட்டில் வைத்தியர் கைதுசெய்யப்பட்டதாகவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பிரிவு எதுவுமே கூறவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விசாரணை செய்வதாகக் கூறியுள்ளார். மேலதிகமாக எதையுமே தெரிவிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக உண்மையை அறிந்து கூறுமாறு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் திவயின பத்திரிகையில் வெளியான செய்தி உண்மைக்கு மாறனது என்றும் ஆதாரமற்ற செய்தி எனவும் கொழும்பில் உள்ள ஊடக அமைப்புகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று சனிக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=992

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையோ பொய்யோ, மேற்கொண்டு டாக்குத்தர்மார் சத்திரசிகிச்சை அறைக்குப் போவதற்கு முன்பாக முழுமையானவரா! குறைந்தவரா!! என்ற பரிசோதனைக்கு உட்படுத்துவது பெண்களுக்குப் பாதுகாப்பைத் தரும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு

(எம்.எப்.எம்.பஸீர்)

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

CID.jpg

குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால்  பொறுப்பேற்கப்பட்டு, சி.ஐ.டி.யின்  தலைமையகமான நான்காம் மாடிக்கு அழைத்து வரப்பட்டார். 

இந் நிலையிலேயே அவரிடம் தடுப்புக் காவலில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ள போதும், அவருக்கு எதிராக கும்ப கட்டுப்பாடு விவகார குற்றச்சாட்டும் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் விசாரிக்க சி.ஐ.டி. தீர்மானித்துள்ளது.

இந் நிலையில் குறித்த வைத்தியருக்கு எதிராக குடும்ப கட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இன்று குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இரு பெண்கள், கைதாகியுள்ள ஷாபி வைத்தியருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளனர். 

 32,29 வயதுகளையுடைய குருணாகல் மற்றும் வாரியபொல பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். 

தாம் திருமணமாகி சிறிது காலத்திலேயே கருத்தரித்ததாகவும், தமக்கும் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலமே குழந்தை பிறந்ததாகவும் அந்த சத்திர சிகிச்சையை ஷாபி வைத்தியரே முன்னெடுத்ததாகவும் கூறியுள்ளனர். 

இந் நிலையில் அதன் பின்னர் தமக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தமக்கும் குறித்த வைத்தியரால் குடும்பகட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுவதாக கூறியுள்ளனர்.

இந் நிலையில் அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள வைத்தியசாலை, நாளைய தினம் குறித்த பெண்கள் இருவரின் விருப்பத்தின் பேரில் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்த தீர்மானித்துள்ளது.

http://www.virakesari.lk/article/56806

இப்பொழுது வடக்கு மாகாணத்தில் பிள்ளை பெற பல பெண்கள் கஷ்டப்பட்டுகினம்..…... அதற்கும் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்........!!!!!¡

  • 2 weeks later...

feel I have to share this regarding Dr. Shafi who is arrested in Sri Lanka.

I am a doctor who worked at TH Kurunegala with Dr. Shafi for about 3 years as a Co-SHO. We were under VOG, Dr. Gunasingha at that time in OBS ward 9.
When doing a C-section there is an assistant Dr - who is usually an intern, helping. There is a nurse assisting you, who provides with the instruments. There is an anesthetist who is responsible for the anesthesia. There is minor staff around assisting. Almost 100% of the time the others are not Muslims. I have personally helped Dr.Shafi in some of his surgeries. He is very skillful - can finish a C-section quite fast. It takes me about 30-35 mins and for him, about 20 mins. Personally, I have done around 800 C-sections; a record 10 in one day. There is no chance in hell to do an LRT (without anyone noticing) as it involves identifying the fallopian tube, bringing it out and then clamping, stitching and cutting it off. Some report that maybe he pinched the tube with his fingers or applied artery forceps during the surgery. Well, that is ridiculous for a few reasons - 1. you will still have to probe into the abdomen and around the uterus to reach the tubes and then it is still near impossible to do this without the others noticing. Soon after the baby is delivered there is a lot of blood pouring out of the uterus and the surgeon has to stop that before the mom bleeds to death. In this instance, it is impossible to do these manipulations let alone an LRT. And this guy is fast - many of our colleagues know that - there isn't any time he wastes to probe around and damage the tubes. 
2. Wouldn't there have been some form of internal bleed if this guy blindly tried to pinch the tubes? I mean I have done several LRTs myself (LEGALLY) and each time we make sure the stumps do not bleed before closing the abdomen. 
3. Wouldn't there be lots of ectopic pregnancies (tubal pregnancies) if someone intentionally injured the tubes?

These are very important questions that need to be looked at. 

Let me tell you about the character of this doctor - he is very helpful to everyone in the community regardless of their race or religion. I remember very often seeing him running around different wards and clinics trying to talk with patients/doctors and reassure families. Many people from different faith and background seek his help. 

. Reading posts by non-medical people and also medical professionals who haven't any experience with C-sections and surgeries really amuse me.#AH

இதை எழுதியவர் அவருடன் பணியாற்றிய தமிழ் பெண் டாக்டர் 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அபராஜிதன் said:

நல்லது ,அப்படியாயின் ஏன் இந்த சர்ச்சை வந்தது........இவரது மேலதிகாரிகள் ஏன் இன்னும் வாய்திறக்கவில்லை.... தமிழ் பெண் டாக்டர் தனது விபரங்களை அறியதந்திருக்கலாம்

35 minutes ago, putthan said:

நல்லது ,அப்படியாயின் ஏன் இந்த சர்ச்சை வந்தது........இவரது மேலதிகாரிகள் ஏன் இன்னும் வாய்திறக்கவில்லை.... தமிழ் பெண் டாக்டர் தனது விபரங்களை அறியதந்திருக்கலாம்

Face book ஐடி வேணும்என்டால்  தரலாம் 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.