Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் !

உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

wethar.jpg

இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது  102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது. 

இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில்  101.F (38.5C) என்ற இங்கிலாந்தின் வெப்பநிலை சாதனையும் முறியடிக்கப்படலாம் என இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

67281829_2391851961099354_52616589198680

லண்டனில் நிலவும் வெப்பசூழல் காரணமாக இதுவரை கொட்வோல்ட் நீர்பூங்காவில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மூவர் காணமல்போய்யுள்ளதுடன் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பத்தை தணிக்க குழுமியுள்ளனர். அத்துடன் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அரைக்காற்சட்டையுடன் பணிக்கு செல்வதை அவதானிக்கக்கூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் அதிகூடிய வெப்பநிலையானது 114.8.C ஆக பிரான்ஸில் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/61130

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வெயில் பாலைவனத்தில் கூட இப்படி வெக்கை இருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்ன வெயில் பாலைவனத்தில் கூட இப்படி வெக்கை இருக்காது 

இன்று மட்டும்தான் அங்காலை கொஞ்ச நாளைக்கு பேருக்கு வெயில் பின் மழையும் மப்பும்தான் நாலுமணிக்கே இருட்டி பயித்திய கார ஆஸ்பத்திரிக்கு போடுற பல்ப்புவெளிச்சம் போல் ஒரு வெளிச்சம் தெருவெங்கும் வியாபிக்கும் அவ்வளவுதான் லண்டன் .😀 இன்னிக்காவது  ஊர் போல் இருந்ததே என்று சந்தோசபடுங்க .

பிரான்சில் நடக்கும் உலகின் மிக பிரபல்ய துவிச்சக்கரவண்டி போட்டி, Tour de France,  நிறுத்தப்பட்டது - காரணம் பனி பொழிவு.

அதேவேளை, பாரிசிலில் வெப்பத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

இன்று மட்டும்தான் அங்காலை கொஞ்ச நாளைக்கு பேருக்கு வெயில் பின் மழையும் மப்பும்தான் நாலுமணிக்கே இருட்டி பயித்திய கார ஆஸ்பத்திரிக்கு போடுற பல்ப்புவெளிச்சம் போல் ஒரு வெளிச்சம் தெருவெங்கும் வியாபிக்கும் அவ்வளவுதான் லண்டன் .😀 இன்னிக்காவது  ஊர் போல் இருந்ததே என்று சந்தோசபடுங்க .

உண்மை தான்...எனக்கு இந்த இருட்டை கண்ணால காட்டேலா☺️ ...சோம்பேறித்தனம் பத்திடும் 

  • கருத்துக்கள உறவுகள்

என் வீடு நல்ல குளிர்மை. காலை 9.30 க்கு யன்னல் எல்லாம் பூட்டீற்று டொய்லற் யன்னல் மட்டும் திறந்துவிடடேன். அத்தோடு வீடடை விட்டு வெளியே எங்கும் போகும் அலுவல் இல்லை. சும்மா இருந்ததும், படம் பார்த்ததும் பின்னர் படுத்துத் தூங்கியதுமாக அன்றைய பொழுது போட்டுது😀

தை மாதம் வாங்கின பானைக் கூடப் பூட்டவில்லை இன்னும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்கள் வீட்டுக்கு வந்தால் தப்பலாம் என்கிறீர்கள்அப்ப ஓகஸ்ட் கடைசி வாரத்தில் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதாக உள்ளேன். 😛

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

அப்ப உங்கள் வீட்டுக்கு வந்தால் தப்பலாம் என்கிறீர்கள்அப்ப ஓகஸ்ட் கடைசி வாரத்தில் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதாக உள்ளேன். 😛

என்ன நிவேதா அக்காட பதில  காணல

என்ன இலங்கையில் அடிக்காத வெக்கையா வெயிலா என்ன இங்க வாய்க்கால் ஆறு குளம் என தேடிப்போய் ஒரு சின்ன சமையல் செய்து சாப்பாடு என வெக்கை காலத்தை கழிக்குறோம் அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வல்வை சகாறா said:

அப்ப உங்கள் வீட்டுக்கு வந்தால் தப்பலாம் என்கிறீர்கள்அப்ப ஓகஸ்ட் கடைசி வாரத்தில் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதாக உள்ளேன். 😛

என் வீட்டுக்கு என்றால் எனக்கு மகிழ்ச்சி  தான். தாராளமாக ஊரைக் கூட்டிவருவதானாலும் வரலாம் சகாரா.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன நிவேதா அக்காட பதில  காணல

எனக்கு கண்ணில பட்டால்த்தானே பதில் எழுத 🤓

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அவனவன் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வேகிறான்..!

நாள் முழுவதும் தொடர்ந்து ஏசி அறைகளில் தான் வாழ்க்கை.. 

இக்கரைக்கு அக்கரை மோகம்தான்..!!

போகட்டும், உங்கள் ஊர் ஆட்கள் பாடிய இந்த சுமாரான பாடல்களைக் கேட்டு மனம் குளிருங்கள்..:103_point_down:

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் வீட்டுக்கு என்றால் எனக்கு மகிழ்ச்சி  தான். தாராளமாக ஊரைக் கூட்டிவருவதானாலும் வரலாம் சகாரா.

கதை எழுத கருவைத் தேடிக் கருவாடா இருக்கின்றீர்களாக்கும்😂🤣

ஒரு கூட்டம் வந்தால் ஓராயிரம் கதைவிட்டு கதை கறக்கலாம்😜 🏃🏃🏃 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

கதை எழுத கருவைத் தேடிக் கருவாடா இருக்கின்றீர்களாக்கும்😂🤣

ஒரு கூட்டம் வந்தால் ஓராயிரம் கதைவிட்டு கதை கறக்கலாம்😜🏃🏃🏃 

இருக்கிற பத்துக் கதையில ஒண்டை எழுதவே மூட் வருக்குதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2019 at 7:05 PM, தனிக்காட்டு ராஜா said:

என்ன இலங்கையில் அடிக்காத வெக்கையா வெயிலா என்ன இங்க வாய்க்கால் ஆறு குளம் என தேடிப்போய் ஒரு சின்ன சமையல் செய்து சாப்பாடு என வெக்கை காலத்தை கழிக்குறோம் அவ்வளவுதான் 

முனிவ‌ர் /
த‌மிழீழ‌ம் ம‌ற்றும் தமிழ் நாட்டு வெக்கையை தாங்கி கொள்ள‌லாம் , ஜ‌ரோப்பா வெக்கை அப்ப‌டி இல்லை , இங்கை குளிர் வெக்கையும் மாரி மாரி வ‌ரும் , ஏன் ஒரு நாளில் ப‌ல‌ வ‌கையான‌ வெத‌ர் ஜ‌ரொப்பாவில் /
வெக்கை
ம‌ழை
வேக‌மாய் வீசும் காற்று
மெதுவான‌ குளிர் /

க‌டும் குளிர் 10ம் மாச‌ க‌ட‌சியில் தொட‌ங்கும் /

முனிவா நீங்க‌ ச‌ந்தோச‌ ப‌டுங்கோ நீங்க‌ள் சொர்க்க‌த்தில் வாழ்வ‌து என்று நினைச்சு /

புல‌ம்  பெய‌ர் நாட்டு வாழ்க்கை ந‌ர‌க‌த்திலும் விட‌ கொடிய‌து /

த‌மிழீழ‌ம் கிடைச்சா , இந்த‌ நாட்டு பாஸ்போட்டை பெற்றோல் ஊத்தி கொழுத்தி போட்டு நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ ஊரிலே இருந்துடுவேன் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

அவசரப்பட்டு அப்படி பெற்றோல் ஊத்தி கொழுத்துற முடிவுக்கு வரக்கூடாது பையா...... அது தண்டனைக்குரிய குற்றம். மற்றும் பாஸ்போட் தந்த நாட்டை  அவமதிக்கும் செயல்....., அதை அங்கேயே நல்ல விலைக்கு வித்து போட்டு அந்தக்காசில் உங்கள் வீட்டுக்கு ஏ .சி. பூட்டலாம்தானே.......!   😁 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பையன்26 said:

நான் மத்திய கிழக்கில் 6 வருடம் இருந்திருக்கிறேன் அதை நீங்கள் அறிவீர்கள் அந்த வெயில் வெக்கை பற்றி தாங்கள் அறீவீர்கள் பையா

புலம் பெயர் வாழ்க்கை  தமிழீழம் கிடைச்சாலும்  சனம் வராது 100 ற்கு 90 வீதமானவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

புலம் பெயர் வாழ்க்கை  தமிழீழம் கிடைச்சாலும்  சனம் வராது 100 ற்கு 90 வீதமானவர்கள்

அது  தமிழீழத்தை  அடைந்தபின்

பார்க்கப்படவேண்டியது

(இங்கு  தமிழீழம் என்பது  நாம்  கனவு  கணட  தேசமாக இருக்கணும்)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அது  தமிழீழத்தை  அடைந்தபின்

பார்க்கப்படவேண்டியது

(இங்கு  தமிழீழம் என்பது  நாம்  கனவு  கணட  தேசமாக இருக்கணும்)

யுத்தமும் போராட்டமும் இருக்கும் வரைக்கும் நம்பிக்கையி வாழ்ந்தோம் ஆனால் இன்று இருக்கும் அரசியலும் அரசியல் வாதிகளும் அடிமை மக்களும்  திண்டாட்டமும் திண்ணையும் தான் மிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்தமும் போராட்டமும் இருக்கும் வரைக்கும் நம்பிக்கையி வாழ்ந்தோம் ஆனால் இன்று இருக்கும் அரசியலும் அரசியல் வாதிகளும் அடிமை மக்களும்  திண்டாட்டமும் திண்ணையும் தான் மிச்சம்

இந்தநிலையில்  புலம்  பெயர் மக்கள் வருவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்கலாம்  சகோ??

இந்த  வருடம்  நடந்த  தாக்குதலால்  பல  லட்சம் மக்கள் ஊருக்கு  போகாமலேயே  ஒதுங்கிக்கொண்டார்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

இந்தநிலையில்  புலம்  பெயர் மக்கள் வருவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்கலாம்  சகோ??

இந்த  வருடம்  நடந்த  தாக்குதலால்  பல  லட்சம் மக்கள் ஊருக்கு  போகாமலேயே  ஒதுங்கிக்கொண்டார்கள்

ம்ம் உண்மைதான் தாக்குதல் என்றாலே உயிர் பயம் நான் கூட எங்கேயாவது ஏன் மத்திய கிழக்கிற்காவது  மீண்டும் ஓடலாம் என நினைத்தேன் எல்லோருக்கும் உயிர் பயம் ஒன்றுதானே

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, suvy said:

அவசரப்பட்டு அப்படி பெற்றோல் ஊத்தி கொழுத்துற முடிவுக்கு வரக்கூடாது பையா...... அது தண்டனைக்குரிய குற்றம். மற்றும் பாஸ்போட் தந்த நாட்டை  அவமதிக்கும் செயல்....., அதை அங்கேயே நல்ல விலைக்கு வித்து போட்டு அந்தக்காசில் உங்கள் வீட்டுக்கு ஏ .சி. பூட்டலாம்தானே.......!   😁 

நாங்க‌ள் சின்ன‌ பிள்ளைக‌ளாய் வ‌ந்த‌ ப‌டியால் இவ‌ங்க‌ளின் பாசை க‌தைக்க‌ எழுத‌ ப‌ழ‌கி அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌க‌ர்ந்து விட்டோம் சுவி அண்ணா /
எம் முன்னோர்க‌ள் அதுங்க‌ள் பாவ‌ங்க‌ள் காலையில் 6ம‌ணிக்கு எழும்பி க‌டும் குளிரையும் பார்க்காம‌ வேலைக்கு போய் , மிக‌வும் க‌ஸ்ர‌ ப‌ட்ட‌ வேலை செய்து வாழுதுங்க‌ள் /
வ‌ருத்த‌ம் வ‌ந்தா கூட‌ ம‌ருத்துவ‌ரிட‌ம் அவ‌ர்க‌ளின் பாசையில் ம‌ருத்துவ‌ரிட‌ம் ஒழுங்காய் சொல்ல‌ மாட்டின‌ம் , பாசை பிர‌ச்ச‌னை / ஊரில் என்றால் அதுங்க‌ள் த‌மிழ் டாக்குத்த‌ரிட‌ம் போய் த‌மிழில் சொல்லுவின‌ம் தானே அது அவ‌ர்க‌ளுக்கு ப‌ல‌ வித‌த்தில் ந‌ன்மை அளிக்கும்/

இங்கை எல்லா வ‌ச‌தியும் இருக்கு சுவி அண்ணா , அப்ப‌டி இருந்தும் பிற‌ந்த‌ நாடும் வ‌ள‌ந்த‌ ஊரும் எப்ப‌வும் சொர்க்க‌ம் சுவி அண்ணா , என்ர‌ வ‌ய‌து ந‌ண்ப‌ர்க‌ளின் ம‌ன‌ நிலையும் இது தான் / 
சிங்க‌ள‌வ‌னுக்கு கீழ‌ அடிமையாய் இருக்க‌ மாட்டோம் , சிங்க‌ள‌வ‌னை போட்டு த‌ள்ளும் கால‌ம் வ‌ந்தா கூட‌ அவ‌ங்க‌ளை போட்டு த‌ள்ள‌வும் த‌ய‌ங்க‌ மாட்டோம் /
பிர‌பாகர‌னின் பிள்ளைக‌ள் ப‌ல‌  வித‌த்தில் த‌ங்க‌ளை த‌யார் செய்துட்டு தான் இருக்கின‌ம் /

2009ம் ஆண்டு வ‌ன்னி த‌லைமை அறிவிச்ச‌ ஒரு சொல்லுக்காக‌ , இன்று ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌ ப‌டியே இருக்கு /

அவை அத‌ அறிவிக்காட்டி யாழ்பாண‌த்தை சுற்றி பார்க்க‌வே சிங்க‌ள‌வ‌ங்க‌ள் த‌ய‌ங்குவான் , நாங்க‌ள் சிறு பிள்ளைய‌ய் இருந்த‌ போது எம் மாமா மார் இந்திய‌ன் ஆமிக்கு எதிரா ந‌ட‌த்தின‌ கோரிலா தாக்குத‌ல‌ போல் ப‌ல‌ தாக்குத‌ல்க‌ள் ந‌ட‌ந்து இருக்கும் 
சிங்க‌ள‌வ‌னுக்கு எதிராக‌ /

2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ வ‌ன்னியில் இருந்து யாழ்பாண‌த்தில் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு ஆயுத‌ம் க‌ட‌த்த‌ ப‌ட்ட‌து சுவி அண்ணா 💪/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் சாத்தியமாகுமா தெரியவில்லை, ஆனால் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியாவது கிடைத்தால் மண்ணும் மக்களும் நிம்மதியடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

தமிழீழம் சாத்தியமாகுமா தெரியவில்லை, ஆனால் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியாவது கிடைத்தால் மண்ணும் மக்களும் நிம்மதியடையலாம்.

துரோக‌ம் இல்லாம‌ , ஒற்றுமை இருந்தா , நாங்க‌ள் நினைக்கும் இல‌க்கை அடைய‌லாம் உற‌வே ( நான் சொன்ன‌ இல‌க்கு த‌மிழீழ‌ம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

துரோக‌ம் இல்லாம‌ , ஒற்றுமை இருந்தா , நாங்க‌ள் நினைக்கும் இல‌க்கை அடைய‌லாம் உற‌வே ( நான் சொன்ன‌ இல‌க்கு த‌மிழீழ‌ம் 🙏

சாதாரண ஒர் தமிழ் பிரதேச செயலகத்தை அமைத்துக்கொடுக்க முடியாத அரசியல் பலத்துடன் மன்ன்க்கவும் பெலப்பு இல்லாத அரசியல் வாதிகளுடன் தான் நாங்கள் சீவித்துக்கொண்டிருக்கிறோம் 

கன்னியா வெந்நீர் உற்று ,கல்முனை பிரதேச செயலகம் 

12 minutes ago, ஏராளன் said:

தமிழீழம் சாத்தியமாகுமா தெரியவில்லை, ஆனால் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியாவது கிடைத்தால் மண்ணும் மக்களும் நிம்மதியடையலாம்.

இதுவே சாத்தியமாவதென்பது அதிசயமே அதற்குரிய அழுத்தங்கள் என்பது தமிழ் அரசியல் வாதிகளிடம்  பெரிதாக இல்லை ஆனால் வடகிழக்கு இணைய முஸ்லீம் அரசியல் வாதிகள் பாரிய முடுக்கட்டையாக் இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சாதாரண ஒர் தமிழ் பிரதேச செயலகத்தை அமைத்துக்கொடுக்க முடியாத அரசியல் பலத்துடன் மன்ன்க்கவும் பெலப்பு இல்லாத அரசியல் வாதிகளுடன் தான் நாங்கள் சீவித்துக்கொண்டிருக்கிறோம் 

கன்னியா வெந்நீர் உற்று ,கல்முனை பிரதேச செயலகம் 

இதுவே சாத்தியமாவதென்பது அதிசயமே அதற்குரிய அழுத்தங்கள் என்பது தமிழ் அரசியல் வாதிகளிடம்  பெரிதாக இல்லை ஆனால் வடகிழக்கு இணைய முஸ்லீம் அரசியல் வாதிகள் பாரிய முடுக்கட்டையாக் இருப்பார்கள் 

என்ன‌ செய்வ‌து முனிவா , 
நிறைய‌ க‌ருத்த‌ ஆடுக‌ளை 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ண்டு விட்டோம் /
ஒரு போதும் ந‌ம்பிக்கையை கை விட‌க் கூடாது முனிவா /

த‌லைவ‌ரின் வ‌ழியில்
தொட‌ர்ந்து ந‌ம்பிக்கையோடு
ப‌ய‌ணிப்போம் ஒரு நாள் விடிவு கால‌ம் பிற‌க்கும் /

த‌மிழ் நாட்டில் எம‌க்கு ஆத‌ர‌வான‌ ஒரு பெரிய‌ க‌ட்சியை உருவாக்கினா , மீத‌ம் நாம் நினைப்ப‌து போல் ந‌ட‌க்கும் /

க‌வ‌லை வேண்டாம் முனிவ‌ர் வெற்றி ந‌ம‌தே 💪 /

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

என்ன‌ செய்வ‌து முனிவா , 
நிறைய‌ க‌ருத்த‌ ஆடுக‌ளை 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ண்டு விட்டோம் /
ஒரு போதும் ந‌ம்பிக்கையை கை விட‌க் கூடாது முனிவா /

த‌லைவ‌ரின் வ‌ழியில்
தொட‌ர்ந்து ந‌ம்பிக்கையோடு
ப‌ய‌ணிப்போம் ஒரு நாள் விடிவு கால‌ம் பிற‌க்கும் /

த‌மிழ் நாட்டில் எம‌க்கு ஆத‌ர‌வான‌ ஒரு பெரிய‌ க‌ட்சியை உருவாக்கினா , மீத‌ம் நாம் நினைப்ப‌து போல் ந‌ட‌க்கும் /

க‌வ‌லை வேண்டாம் முனிவ‌ர் வெற்றி ந‌ம‌தே 💪 /

இன்னுமா தமிழ் நாட்டை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் அவர்களுக்கு அரசியல் தேவை அரசியலுக்கு நாம் தேவை ஈழ த்தமிழர் 

இந்திய இறையாண்மையென்பதை விட்டு ஒரு சாணும் அவர்களால் நகர முடியாது  நண்பா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.