Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-7-720x450.jpg

வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம்  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்

2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2-5.jpg

3-3.jpg

http://athavannews.com/வல்வெட்டித்துறையில்-கும/

  • கருத்துக்கள உறவுகள்

முழுவியளத்துக்கு சுப்பர் ஆனா ஆக்கள் திறந்து வைத்து இருக்கினம் .

1-7-720x450.jpg

மூண்டும் அடிபடுது போல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்துக்கு ஒரு நீச்சல் தடாகம் தேவை, சிறுவர்கள்(ஆண்/பெண்) எல்லோரும் கட்டாயம் நீச்சல் பயில வேண்டும். தற்பாதுகாப்பும், இன்னொருவரை காப்பாற்றவும், விசேட திறமை உள்ளவர்கள் போட்டிகளில் பங்குபற்ற.

சிறப்பான விடயம். இது போல் பல கிராமங்களில் இப்படிப்பட்ட நீச்சல் தடாகங்கள் திறக்கப்பட்டு தொடர்சியாக சுகாதாரமாக பராமரிக்கப்படல் வேண்டும். இதை உருவாக்கியொருக்கு பாராட்டுக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கிராமத்துக்கு ஒரு நீச்சல் தடாகம் தேவை, சிறுவர்கள்(ஆண்/பெண்) எல்லோரும் கட்டாயம் நீச்சல் பயில வேண்டும். தற்பாதுகாப்பும், இன்னொருவரை காப்பாற்றவும், விசேட திறமை உள்ளவர்கள் போட்டிகளில் பங்குபற்ற.

நீச்சல் பழகுவது நல்ல விடயம் பிரச்சனை தண்ணீர் சம்பந்தமானது ஏழு லட்சம் லீற்றர் நன்னீர் தேவை திறப்புவிழாவுக்கு தடாகம் நிரம்புவதுக்கே முக்கிய நன்னீர் வழங்கல் வடமராட்சி கிழக்கு பகுதி எங்கும் உவர்நீரடிக்க தொடங்கியுள்ளது வந்து விழும் மழையையும் கார்பெட் ரோட்டில் ஓடவிட்டு கடலுக்குள் ஒரு துளியும் மண்ணுக்குள் இறங்காமல் கலைத்து விடுகிரம் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து போய் கொண்டு உள்ளது தண்ணியில்லை என்று குழாய் அடித்தால் நல்லதண்ணி கிணறு உப்புத்தண்ணியாகி விட்டுது என்று  போனில் சொல்லி குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் .

அரசியல்வாதிகள் சுமத்திரன் தரவழிகள் தான் வாழ்ந்தால் காணும் எனும் கொள்கையுடன்  மேலும் பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்தவர்கள் அவர்களிடம் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது நீச்சல் முக்கியமானது அதுக்காக கண்ணை வித்து நீச்சல் பழகுவது போன்றது இந்த விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி திருவினையாக்கியிருக்கிறது. ஊருக்கு பெருமைதேடித்தந்த வீரனை மதிப்பளித்ததோடு எதிர்கால சந்ததிக்கும் பெரும் ஊக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதுதான் ஒவ்வொருவரும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். இதுவரை காலமும் எமது ஊரில் நிறைய நீச்சல் வீரர்கள் இருந்திருக்கிறார்கள் ஆனால் போட்டிகள் தொடர்பாக அவர்களுக்கு சரியான ஊக்கம் வழங்கப்படவில்லை. அத்தோடு அதிகமான வல்வையர்களுக்கு நீச்சலை அடிப்படையாகக்கொண்டே தொழில் அமைகிறது. மாபெரும் சமுத்திரங்களில் வெளிநாட்டுக்கப்பல்களில் தாயகத்தில் இருக்கும் நம்மவர்கள் பலர் வேலை செய்கிறார்கள் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே கடல் வாழ்வாக இருக்கும் பட்சத்தில் நீச்சல் என்பது மிக அவசியமான ஒன்று. ஒரு சாதனை வீரனுக்கு மதிப்பளிப்பதாக இருக்கும் இத்தடாகம் தொழில் ரீதியான கற்கைக்கும் விளையாட்டு ரீதியான சாதனைக்கும் வழிகாட்டியாக அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழக்குமரனின் உலக சாதனைகள்:

1- பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது.(1971-ம் ஆண்டு)

2 - 128 மணி நேரம் தொடர்ச்சியாக "டிவிஸ்ட்"நடனம் ஆடியது(1978)

3 - 1487 மைல் தூரத்தை 187 மணி நேத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது(1979)

4 - 33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது.(1979)

5 - 136 மணி நேரம் பால் பனசிங் செய்தது.(1979)

6 - இரண்டு நிமிடத்தில் 165 தடவை site up செய்தது.

7 - 9100 தடவை high kicks செய்தது(1980)

8 - நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது.(1981)

9 - 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நீச்சல் பழகுவது நல்ல விடயம் பிரச்சனை தண்ணீர் சம்பந்தமானது ஏழு லட்சம் லீற்றர் நன்னீர் தேவை திறப்புவிழாவுக்கு தடாகம் நிரம்புவதுக்கே முக்கிய நன்னீர் வழங்கல் வடமராட்சி கிழக்கு பகுதி எங்கும் உவர்நீரடிக்க தொடங்கியுள்ளது வந்து விழும் மழையையும் கார்பெட் ரோட்டில் ஓடவிட்டு கடலுக்குள் ஒரு துளியும் மண்ணுக்குள் இறங்காமல் கலைத்து விடுகிரம் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து போய் கொண்டு உள்ளது தண்ணியில்லை என்று குழாய் அடித்தால் நல்லதண்ணி கிணறு உப்புத்தண்ணியாகி விட்டுது என்று  போனில் சொல்லி குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் .

அரசியல்வாதிகள் சுமத்திரன் தரவழிகள் தான் வாழ்ந்தால் காணும் எனும் கொள்கையுடன்  மேலும் பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்தவர்கள் அவர்களிடம் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது நீச்சல் முக்கியமானது அதுக்காக கண்ணை வித்து நீச்சல் பழகுவது போன்றது இந்த விடயம். 

தண்ணீர் பிரச்சனைக்கு மழை காலங்களில் மட்டும் நீச்சல் தடாகங்களை பாவிக்கலாம். மிக முக்கிய ஒரு சில தடாகங்களை வருடம் முழுக்க பாவிக்கலாம்.
கோவில் கேணிகளை மக்கள் நீந்தி பழக விடலாம், இப்போது பல கேணிகள் நீச்சல் பழகவிடாது மூடி வைக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பெயர்களில் பொதுவசதிகள் அமைவது வரவேற்கப்பட வேண்டியது.

வீரர்களின் பெயர்களில் பொதுவசதிகள் ஏற்படுத்தப்படும் போது அதை நேர்மையான வீரர்கள் / மனிதர்கள் திறந்துவைப்பதே அந்த வீரர்களுக்கு கவுரவமானது.

இங்கே ஒரு வீரனின் பெயரில் அமைந்த தடாகத்தை, தமிழினக் கொலைகாரர்களும், நேர்மையற்ற பேர்வழிகளும், கைக்கூலிகளும்  திறந்து வைத்தது அந்த வீரனுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆக கருதப்படுகிறது.

குறைந்தது வல்வையின் மைந்தனும் எளிமையான அரசியல்வாதியுமாகிய சிவாஜிலிங்கத்தை வைத்து திறந்திருப்பதே முறையானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

கடவுள் பாதி மிருகம் பாதி சிவாஜிலிங்கத்துக்கு இந்த தடாகம் அமையணும் என்று யாரோ பப்பாவில் எத்திவிட முக்கால்வாசி கஷ்டபட்டு கடைசியில்  அவரின் வாயால் ஓரம்கட்டபட்டு படத்தில் நிற்பதை பார்க்க பாவமாயிருக்கு .

வடமராட்சியில் என்ன நிகழ்வு நடந்தாலும் சுமத்திரன் அழையாத விருந்தாளியாய் உள்ளே புகுந்து மைக்கை புடுங்கி அரசியல் கதைப்பது அவரின் புது ஸ்டைல் .

  • கருத்துக்கள உறவுகள்
  • 4 weeks later...

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, பà¯à®©à¯à®©à®à¯, நிறà¯à®à®¿à®±à®¾à®°à¯ மறà¯à®±à¯à®®à¯ ஸà¯à®à¯à®°à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯

இந்த சிறுமியின் பெயர் தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமியாகும்.

இவர் தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

இவர் ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனையாக விளங்கி வருகின்றார். அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதையடுத்து அக்டோபர் 21ம் திகதி அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அதில் பங்குபற்றினால் நிச்சயம் பதக்கம் பெற்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்ப்பார்.

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இவர் அமெரிக்கா செல்வதற்கான இந்திய அரசின் அனுமதியும் கடவுச் சீட்டும் பெற முடியாமல் உள்ளது.

இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசு மறுக்கிறது.

இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.

இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளாக இருந்தால் உடனடியாக குடியுரிமை வழங்கி தமது நாட்டுக்கு பதக்கம் பெறுவார்கள்.

ஆனால் இந்த சிறுமி அகதியாக அதுவும் தமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. இந்திய அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. தமிழ்நாடு அரசும்கூட அக்கறைகாட்ட மறுக்கிறது.

இச் சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வழக்கு போட்டு நீதி பெறவோ எந்த வசதியும் அற்ற ஒரு குடும்பம் ஆகும்.

யாராவது மனிதாபிமானம் உள்ளவர்கள் இரக்கப்பட்டு உதவி செய்தால் மட்டுமே ஏதும் நடக்கக் கூடும்.

இல்லையேல் ஒரு சிறுமியின் கனவு அகதி என்பதற்காக கருகி விடும் நிலையே இருக்கிறது.

Facebook 

On 8/9/2019 at 3:59 AM, பெருமாள் said:

முழுவியளத்துக்கு சுப்பர் ஆனா ஆக்கள் திறந்து வைத்து இருக்கினம் .

1-7-720x450.jpg

மூண்டும் அடிபடுது போல் இருக்கு .

ஆழிக்குமரன் பெயரில் அமைத்தது சிறப்பான விசயம் ஏனெனில் அவர் ஒரு கடின முயற்சியாளர் விளையாட்டுத்துறையில் ஈழத்தில் முயற்சிக்கு அவரே முதன் முன்னுதாரணம். ஆனால் இதை மூன்று கத்திரிக்கோல் போட்டு முண்டியடித்து வெட்டும் முயற்சி ரெம்ப கேவலமா இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க செல்ல இருக்கும் தேசியத் தலைவரின் ஊரினைச் சேர்ந்த “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட தற்பொழுது தமிழகம் திருச்சியில் வசித்து வரும் நீச்சல் வீராங்கனை செல்வி தனுஜா ஜெயக்குமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நீச்சல் போட்டி ஒன்றில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார் .
68425555_2404983272921386_11355689691476

நேற்று இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தின் பூனே நகரில் இடம்பெற்ற இந்திய அளவிலான 10th Modem Pentathalon National Championships 2019 ( 10th Buathle / Triathle National Championships 2019 ) போட்டிகள் இடம்பெற்றது . குறித்த போட்டி எதிர்வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெறவுள்ள 10th ( Buathle / Tiathle World Championships 2019 ) முன்னோடியாக இடம்பெற்றது .

நேற்று இடம்பெற்ற குறித்த 2 போட்டிகளில் செல்வி தனுஜா 1 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் பெற்றுளார் . இதன் மூலம் மிக இலகுவாக 10th Buathle / Tiathle | World Championships 2019 போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளார் .

15 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவினருக்கான

T 800 Meters Run – 100 Meters Swim – 800 Meters Run ஐ 07 : 43 : 03 நிமிடத்தில் அடைந்து முதல் இடத்தையும்,

4×400 Run , 4 x 25 Swim , 4 x 5 Hits ; 5M 16 . 15 . 87 நிமிட நேரத்தில் அடைந்து 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் .

ஆனாலும் செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கை கடவுச்சீட்டைப்பெற்று இந்தியாவில் வசிப்பதால் இந்தியாவிலிருந்து வெளிநாடு ஒன்றில் போட்டியிடுவதில் இடர்கள் உள்ளது எனக் கூறப்படுகின்றது . ஆனாலும் தனுஜாவின் தந்தை திரு.ஜெயக்குமார் தமது வழக்கறிஞர் மூலம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளார்,

இந்தியாவில் பல போட்டிகளில் பங்குகொண்டு பல வெற்றிகளை ஈட்டி ஈழதேசத்துக்கும், உலகத்தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் #செல்வி_தனுஜா_ஜெயக்குமார் அமெரிக்காவிற்கும் சென்று தனது அதீத திறமைகளை நிலைநாட்டி பல்வேறு பரிசில்களை பெறுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

68671780_2404983356254711_5363036438864568723381_2404983326254714_45964338379400

67801468_2392281690858211_76687577759497

https://mulakkam.com/archives/6720

5 hours ago, ampanai said:

இந்த சிறுமியின் பெயர் தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமியாகும்.

இவர் தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

5 hours ago, ampanai said:

இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசு மறுக்கிறது.

இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.

இவர்கள் தாய்மண்ணுக்கு திரும்புவது சிறந்த முடிவாக இருக்கும்.

அதை விடுத்து மகளின் திறமையை வைத்து பெற்றோர்கள் பிச்சைக்காரப் பிழைப்பை முன்னெடுப்பதை எந்தவிதத்திலும் பாராட்ட முடியாது.

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.