Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தரையிறங்கவுள்ள, முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Palali-1-720x450.jpg

யாழில் தரையிறங்கவுள்ள, முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர்.

இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது.

இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய நிபுணர்கள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்திடம் இறுதி அறிக்கையை கையளிக்கும் நோக்கிலேயே இந்த குழு இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

http://athavannews.com/யாழில்-தரையிறங்கவுள்ள-மு/

பலாலியில்  வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று பலாலியில் தரையிறங்கியது. 

73541660_1223843654485700_34754848257988

இந்திய அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.

73201882_1223843527819046_19739562661830

இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

72690199_1223843634485702_5089196299098572601313_1223843404485725_8666183180765672317173_1223843487819050_32234377967692

https://www.virakesari.lk/article/66935

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

73201882_1223843527819046_19739562661830

72601313_1223843404485725_86661831807656

விமான ஓடு பாதையில்... சிறிய குளங்களை,  கட்டி வைத்திருப்பது  மிக அழகாக உள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் நமது தமிழீழம் இருந்த போதும்.. ஹிந்தியப் படைகளின் வருகையின் போதும் இதே விமான தளத்தில் பல விமான மணி நேரங்கள் பறப்பின் பின் தரையிறங்கிய பல அனுபவங்கள் ஹிந்தியர்களிடம் உள்ளது.

அவசர அவசரமாக நடக்கும் இந்த அபிவிருத்தி என்பது ஹிந்தியாவின் ஆதிக்கம் வட தமிழீழத்திலும் தெந்தமிழீழத்திலும் வலுப்பெறவதையே உறுதி செய்யும்.

அதாவது தமிழர்களுக்கு எந்த உரிமையும் வழங்காது.. அவர்களைக் கொன்றொழிப்பதன் ஊடாக ஹிந்தியா தமிழர்களின் நிலத்தில் தன் ஆதிக்கத்தை சிங்களவர்களூடாக நிலைநிறுத்திக் கொள்கிறது.

இதில் ரணில்.. மைத்திரி.. சந்திரிக்கா.. சம்சும்மாவை கும்பலின் கூட்டுச் சதிதான் உள்ளது.

எதுஎப்படியோ.. எதிரிகளின் இந்த நாசகார நோக்குள் எமது மக்கள்.. தம்மை பலப்படுத்திக் கொள்ளும் பொருண்மியத் திட்டங்களையாவது அமைத்துக் கொண்டு சிறப்புப் பெற வேண்டும் என்பது இப்போதைய விருப்பாகும். 

40 minutes ago, தமிழ் சிறி said:

விமான ஓடு பாதையில்... சிறிய குளங்களை,  கட்டி வைத்திருப்பது  மிக அழகாக உள்ளது. :grin:

இதை வெள்ளோட்டம் என்பார்கள்.

இந்தியா டூ யாழ்ப்பாணம்: மீண்டும் விமான சேவை - விரிவான தகவல்கள் 

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமானசேவை

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் பரீட்சார்த்தமாக தரையிறங்கியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் இன்று செவ்வாய்க்கிழமை தரையிறங்கியுள்ளது.

விமான ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் தேதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமானசேவை

பலாலி விமான நிலையம் மூன்று கட்டங்களாக விரிவாக்கப்படுகிறது . முதற்கட்ட பணிகளுக்காக சுமார் 2 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விமானநிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வரும் 17 ஆம் தேதியன்று திறந்து வைக்கவுள்ளனர்.

விமான நடவடிக்கை செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடுதளத்தின் முதலாவது 950 மீட்டர் மார்க்கம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் குறித்த பிரதான ஓடுதளத்தின் 1.5 கிலோமீட்டர் மார்க்கம் மேலதிகமாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1800 சதுர கிலோமீட்டர் வரையான ஆகாய மார்க்கத்தில் விமானங்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது பிரதான விமான ஓடுதளத்தின் 2.3 கிலோமீட்டர் மார்க்கம் முற்றாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அந்த கட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் AL- 320 மற்றும் AL- 321 ரக விமானங்கள் பலாலி விமான நிலையத்தில் இருந்து பிராந்திய விமான நிலையங்களுக்கு பயணிக்கவுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமானசேவை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும்.

இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும்.

கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் YCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும்.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமானசேவை

இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50061203

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

73201882_1223843527819046_19739562661830

2 hours ago, தமிழ் சிறி said:

விமான ஓடு பாதையில்... சிறிய குளங்களை,  கட்டி வைத்திருப்பது  மிக அழகாக உள்ளது. :grin:

ரோட்டு போட்டுக்குடுத்தது யாரெண்டு தெரியாமல் கதைக்கப்படாது சிறித்தம்பி... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.இனி நாங்கள் அதை என்ன செய்கிறம் என்டதை பொறுத்து மற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: cloud, sky, airplane and outdoor

Image may contain: airplane and outdoor

Image may contain: cloud, sky, outdoor and nature

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்,  முதலாவது இந்தியவிமானம் தரையிறங்கிய காட்சி..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு நேரடி பயண சேவைகள் இல்லையென்றால், இந்த விமான நிலையத்திலும் வைக்கோல் போர் அடைபட சாத்தியம் உள்ளது.

2 hours ago, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டுக்கு நேரடி பயண சேவைகள் இல்லையென்றால், இந்த விமான நிலையத்திலும் வைக்கோல் போர் அடைபட சாத்தியம் உள்ளது.

 இந்த விமான நிலையத்தில் இருந்து  யுத்தத்திற்கு முற்பட்ட 1970 களின் ஆரம்பத்தில் சென்னை , திருச்சி விமான நிலையங்களுக்கும் கொழும்பு திருகோணமலைக்கும் கிரமமான  விமான சேவை இருந்தது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டுக்கு நேரடி பயண சேவைகள் இல்லையென்றால், இந்த விமான நிலையத்திலும் வைக்கோல் போர் அடைபட சாத்தியம் உள்ளது.

எது எப்பிடியிருந்தாலும் கொழும்பை விட மேலுக்கு வர விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எது எப்பிடியிருந்தாலும் கொழும்பை விட மேலுக்கு வர விடமாட்டார்கள்.

சாமிகளே, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நேராக தமிழ்நாடு(சென்னை, மதுரை, திருச்சி, கோவை) வந்திறங்கி சுற்றிப் பார்த்துவிட்டு, பின்னர் நேரடியாக ஈழப்பகுதிகளுக்கு பலாலி மூலம் செல்ல மிகுதியான போக்குவரத்தை உருவாக்குவது புலத்தில் உள்ளவர்கள் கைகளில்தானே உள்ளது..?

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய வியாபரிகள் வருகையும் கட்டுப்படுத்தபட வேண்டும். போதைபொருட்கள் பெருமளவில் பாகிஸ்தானிலிருந்து இந்தியவினூடகவே இலங்கைக்கு கடத்தப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

சாமிகளே, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நேராக தமிழ்நாடு(சென்னை, மதுரை, திருச்சி, கோவை) வந்திறங்கி சுற்றிப் பார்த்துவிட்டு, பின்னர் நேரடியாக ஈழப்பகுதிகளுக்கு பலாலி மூலம் செல்ல மிகுதியான போக்குவரத்தை உருவாக்குவது புலத்தில் உள்ளவர்கள் கைகளில்தானே உள்ளது..?

பலாலி விமான நிலையம் எவ்வித இடையூறுமின்றி சீராக இயங்குமென்றால் அடுத்த வருடத்திலிருந்து பாருங்கள். நீங்கள் கூறியபடி களைகட்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

சாமிகளே, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நேராக தமிழ்நாடு(சென்னை, மதுரை, திருச்சி, கோவை) வந்திறங்கி சுற்றிப் பார்த்துவிட்டு, பின்னர் நேரடியாக ஈழப்பகுதிகளுக்கு பலாலி மூலம் செல்ல மிகுதியான போக்குவரத்தை உருவாக்குவது புலத்தில் உள்ளவர்கள் கைகளில்தானே உள்ளது..?

வன்னியரே தமிழ்நாட்டு விமானநிலையங்களிலுள்ள கெடுபிடிகளை கொஞ்சம் சொல்லலாமே.முதலே தெரிந்திருந்தால் நல்லது தானே.

இங்கிருந்து தமிழ்நாடு போகிறவர்கள் மும்பாய் ஊடாக பயணிக்க விரும்புவதில்லை.களவு கப்பம் லஞ்சம் என்கிறார்கள்.

இதே பாணியில் தமிழ்நாடும் இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பலாலி விமான நிலையம் எவ்வித இடையூறுமின்றி சீராக இயங்குமென்றால் அடுத்த வருடத்திலிருந்து பாருங்கள். நீங்கள் கூறியபடி களைகட்டும். :)

அதனே உன்மையும் லேசா வந்து போவியள் போல  அரோகரா பலாலி கந்தா சீ யாழ்ப்பாண கந்தா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வன்னியரே தமிழ்நாட்டு விமானநிலையங்களிலுள்ள கெடுபிடிகளை கொஞ்சம் சொல்லலாமே.முதலே தெரிந்திருந்தால் நல்லது தானே.

இங்கிருந்து தமிழ்நாடு போகிறவர்கள் மும்பாய் ஊடாக பயணிக்க விரும்புவதில்லை.களவு கப்பம் லஞ்சம் என்கிறார்கள்.

இதே பாணியில் தமிழ்நாடும் இருக்குமா?

மும்பாயை ஒப்பிடுகையில் சென்னை விமான நிலையம் எவ்வளவோ பரவாயில்லை.

சுங்க சோதனைகள் நிச்சயம் இருக்கும். எனது அனுபவத்தில், வெளிப்படையாக, நியாயமாக இருந்தால் எந்தவித குழப்பங்களும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதனே உன்மையும் லேசா வந்து போவியள் போல  அரோகரா பலாலி கந்தா சீ யாழ்ப்பாண கந்தா

ஓம்.......பலாலியிலை இறங்கி ஹெலியிலை ஏறி வீட்டு வாசல்ல போய் இறங்குவம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியரே தமிழ்நாட்டு விமானநிலையங்களிலுள்ள கெடுபிடிகளை கொஞ்சம் சொல்லலாமே.முதலே தெரிந்திருந்தால் நல்லது தானே.

இங்கிருந்து தமிழ்நாடு போகிறவர்கள் மும்பாய் ஊடாக பயணிக்க விரும்புவதில்லை.களவு கப்பம் லஞ்சம் என்கிறார்கள்.

இதே பாணியில் தமிழ்நாடும் இருக்குமா?

இந்த இணையதளத்தில் சென்னை விமான நிலைய அனுபவங்களை படித்தால் தலை சுத்துது..! 🤔

https://www.airlinequality.com/airport-reviews/chennai-airport/page/1/

ஆனால் நான் இருமுறை மும்பை விமான நிலையத்தில் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானவை. அப்பட்டமாக லஞ்சப் பணம் கேட்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அயலவர்கள் என்றால் இளக்காரம்தான். வெள்ளைத்தோல் எனில் சற்று தளர்வு காட்டப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.