Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

19 minutes ago, ampanai said:

https://www.canada.ca/en/revenue-agency/services/charities-giving/giving-charity-information-donors/about-registered-charities/what-difference-between-a-registered-charity-a-non-profit-organization.html

Registered charities

Registered charities are charitable organizations, public foundations, or private foundations that are created and resident in Canada. They must use their resources for charitable activities and have charitable purposes that fall into one or more of the following categories:

  • the advancement of religion

Examples of registered charities

  • advancement of religion (places of worship and missionary organizations)

The Region of Peel provides eligible charities with a rebate of 40 per cent of their property taxes (local, Regional and education tax portions). The Province of Ontario passed legislation requiring municipalities to provide tax rebates to eligible charities starting in the 2001 tax year

https://www.peelregion.ca/finance/tax-handbook/property-tax-rebate-program.htm

இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் மத நிறுவனமாக, அமைப்பாக சட்ட ரீதியில் பதியப்பட்டவற்றுக்கான வருமானம் தொடர்பான முறைமைகள் மற்றும் வரி தொடர்பான விடயங்கள்.

ஒரு மத வைபவத்தை பிரார்த்தனையை தன் வீட்டில் வைத்து செய்வதற்கு அனுமதி பெறச் சொல்லி இங்கு சொல்லப்படவில்லை.

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

இருக்கின்ற மத்தை வீட்டில் நடாத்த உள்ள சட்டமுறைதான் இது.

சீக்கியர்கள் இதை அதிகம் செய்கிறார்கள். அதனால் தான் பல தலைமுறைகளையும் தாண்டி அவர்களிடம் மதம் உள்ளது.

தவறான தகவல் அம்பனை. தயவு செய்து தரும் இணைப்பை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்!

  • தொடங்கியவர்

இன்றைய அமெரிக்க துணை ஜனாதிபதியும் முன்னாள் இந்தியானா மாகாண ஆளுநருமான மைக் பென்ஸ் ஒரு தீவிர மதவாதி. இவர் சார்ந்த Evangelical Movement வேறு மதங்களில் உள்ளவர்களை மாற்றுவதற்கு 'பல உதவிகளை' செய்பவர்கள். 

கிறிஸ்தவ மதங்களை கொண்ட பல்கலைக்கழகங்களும், பாடசாலைகளும் உண்டு.  இங்கு கற்க பணமும் பல இலவசங்களும் வழங்கப்படும், மக்கள் வரிப்பணததில். வரிப்பணம் செலுத்துபவர்கள் சைவர்களாகவும் இஸ்லாமியர்களாவும் இருக்கலாம். இங்கே அந்த மதம் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், இதை எதிர்ப்பவர்களும் கூடுதலாக இஸ்லாமியர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அதே........ ஊரில் காவல்துறைக்கு போகாமல் மக்கள் தாங்களே முடிவெடுக்கின்றனர். ஐ மீன் ஓட....ஓட விரட்டியடிக்கின்றனர். இருந்தும் வறுமையால் சிலர்.......

stalking என்பதன் அர்த்தம் ஒருவரை அவரது மறுப்புக்குப் பிறகும் பின் தொடர்வது கு.சா!  திரி குறிப்பிட்ட சம்பவங்களில் யாரும் பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கவில்லை!, விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்து பிரச்சாரம் செய்யவில்லை!  ஊரவர் தனியார் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தது (trespassing) தான் இங்கே நடந்த குற்றம்! நீங்கள் வசிக்கும் நாட்டில் இதற்கு சிறைத்தண்டனை!

  • தொடங்கியவர்
5 minutes ago, நிழலி said:

இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் மத நிறுவனமாக, அமைப்பாக சட்ட ரீதியில் பதியப்பட்டவற்றுக்கான வருமானம் தொடர்பான முறைமைகள் மற்றும் வரி தொடர்பான விடயங்கள்.

ஒரு மத வைபவத்தை பிரார்த்தனையை தன் வீட்டில் வைத்து செய்வதற்கு அனுமதி பெறச் சொல்லி இங்கு சொல்லப்படவில்லை.

Potential property tax rebate

Registered charities paying property taxes directly, or indirectly as tenants, are eligible for a minimum 40% rebate under Ontario’s Municipal Act and City of Toronto Act.

Individual municipalities may also allow not-for-profits that are not registered charities to qualify for a rebate. Contact your local municipality with questions about property taxes, assessment and applicable rebates, and the Municipal Property Assessment Corporation with questions about assessments and exemptions.

https://www.ontario.ca/page/not-profits-taxes-and-exemptions

1 hour ago, நிழலி said:

லாரா,

ஏழை மக்களை ஏமாற்றி செய்யும் மதமாற்றத்துக்கு நான் எப்பவும் எதிர் என்பதை முதலில் சொல்லிக் கொண்டு மிகுதியை தொடர்கின்றேன்.

ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கும், மதம் சம்பந்தமாக மக்களை கூட்டி பிரார்த்தனை செய்வதற்கும் எந்த அனுமதியும் தேவையில்லை,. இதனால் தான் சாயிபாபா பஜனை தொடக்கம் அம்மா பகவானுக்கான வாராந்திர மாதாந்திர பூசை வரைக்கும் ஆட்களை திரட்டி தனியார் வீடுகளில் நடத்த முடிகின்றது. கொழும்பில் இராமகிருஸ்ண வீதியில் அமைதிருக்கும் வீட்டில் ஒவ்வொரு வாரமும் இவ்வாறுதான் அம்மா பகவான் பூசைகளை நடாத்துகின்றனர். இந்த வீட்டுக்காரர்கள் எமக்கு சொந்தம் என்பதால் இது தொடர்பாக கேட்டு விட்டே எழுதுகின்றேன்.

பொன்னாலையில் நடந்த நிகழ்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதை பொலிசார் கூறியிருந்தனர். அதை கேள்விகுட்படுத்தி நீதிமன்றம் போயிருந்தால் அவ்வாறு அனுமதி தேவையில்லை என்றுதான் தீர்ப்பும் வந்து இருக்கும். இலங்கையில் இருக்கும் பொலிசாருக்கு அனேகமான சட்டமும் தெரியாது அதை மதிக்கவும் தெரியாது.

நீங்கள் கூறுவது வீடுகளில் கூடி பிரார்த்தனை செய்வது பற்றி

பொன்னாலை சைவ கிராமம். அங்கு கிறிஸ்தவ மதமாற்றக்குழு வெளியிடத்திலிருந்து வந்து ஆளில்லாத வீட்டில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் மதமாற்றும் வகையிலான மதபோதனைகளை செய்தது. இப்படியான நடவடிக்கைகளுக்கு அனுமதி, பதிவு தேவை, அவர்கள் வீட்டில் செய்தாலும். அவர்களே தாம் கிராம சேவகரிடம் அனுமதி பெற்று விட்டு வந்ததாக பொய் சொன்னார்கள். கிராம சேவகரை கேட்ட போது அவர்கள் தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியிருந்தார். அனுமதி என்ற ஒரு விடயம் இருந்ததால் தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். பின்னர் பொலிஸ் வரை போய் பொலிஸும் உரிய அனுமதி இல்லாமல் மதச்செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கூறியிருந்தது.

இத்திரியிலுள்ள சம்பவமும் அதையொத்தது. எனவே அனுமதி, பதிவு இல்லாமல் அதை செய்ய முடியாது.

Edited by Lara

  • தொடங்கியவர்
17 minutes ago, குமாரசாமி said:

அதே........ ஊரில் காவல்துறைக்கு போகாமல் மக்கள் தாங்களே முடிவெடுக்கின்றனர். ஐ மீன் ஓட....ஓட விரட்டியடிக்கின்றனர். இருந்தும் வறுமையால் சிலர்.......

என்னை அவர்கள் கேட்கும் பொழுது, நான் எனது பெயரை ஒரு இஸ்லாமியராக கூறுவதால் உடனடியாக ஓக்கே என்று விடுவார்கள். மறந்தும் எனது சொந்தப்பெயரை சொல்வதில்லை. ஆரம்பத்தில் சொல்லி பட்ட பாடு சொல்ல முடியாது.

கனடாவிலேயே இந்த நிலை என்றால் தாயகத்தில் சொல்லவா வேண்டும்.

10 minutes ago, Justin said:

தவறான தகவல் அம்பனை. தயவு செய்து தரும் இணைப்பை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்!

சகோ,
யாரவது ஒரு வரி செய்யும் கணக்காளரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சீக்கிய மக்கள் இவ்வாறு வீட்டில் செய்கிறார்கள், பஜனைகள் வைக்கிறார்கள். வீட்டில் ஒரு பகுதியை இவ்வாறு பாவித்து சோலை வரியை குறைக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

இன்றைய அமெரிக்க துணை ஜனாதிபதியும் முன்னாள் இந்தியானா மாகாண ஆளுநருமான மைக் பென்ஸ் ஒரு தீவிர மதவாதி. இவர் சார்ந்த Evangelical Movement வேறு மதங்களில் உள்ளவர்களை மாற்றுவதற்கு 'பல உதவிகளை' செய்பவர்கள். 

கிறிஸ்தவ மதங்களை கொண்ட பல்கலைக்கழகங்களும், பாடசாலைகளும் உண்டு.  இங்கு கற்க பணமும் பல இலவசங்களும் வழங்கப்படும், மக்கள் வரிப்பணததில். வரிப்பணம் செலுத்துபவர்கள் சைவர்களாகவும் இஸ்லாமியர்களாவும் இருக்கலாம். இங்கே அந்த மதம் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், இதை எதிர்ப்பவர்களும் கூடுதலாக இஸ்லாமியர்களே. 

தவறான தகவலை ஏற்றுக் கொள்ளாமல் மேலும் பல தவறான தகவல்களால் குட்டையைக் குழப்பும் வேலையை செய்கிறீர்கள் போல தெரிகிறது:

அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலைகள், பல்கலைகள் தனியார் நிர்வாகம், அது கிறிஸ்தவ சபையாக தனியாளாக இருக்கலாம். சேர்வதற்கு பணம் (tuition)  கட்ட வேண்டும். நகரத்தின் வரி கொஞ்சம் அந்தப் பாடசாலைகளுக்கும் போகும். அப்படிப் போகும் நகரங்களில் குறிப்பிட்டளவு மதம் சாராத மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது நிபந்தனை. யாராவது சேர்க்க மாட்டோம் என்றால் DOE, இல் இருந்து IRS வரை வரிசை கட்டி வந்து ரின் கட்டி விடுவார்கள்.

கனடாவில் கிறிஸ்தவ பாடசாலைகளில் கற்கும் இலங்கை இந்துக் குடும்ப ஆட்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். தயவு செய்து fake news ஐப் பரப்பும் வேலையை நிறுத்துங்கள். நீங்கள் சொல்பவற்றை உறுதி செய்ய முடியா விட்டால் பொது இடத்தில் பகிராதீர்கள்!    

5 minutes ago, ampanai said:

என்னை அவர்கள் கேட்கும் பொழுது, நான் எனது பெயரை ஒரு இஸ்லாமியராக கூறுவதால் உடனடியாக ஓக்கே என்று விடுவார்கள். மறந்தும் எனது சொந்தப்பெயரை சொல்வதில்லை. ஆரம்பத்தில் சொல்லி பட்ட பாடு சொல்ல முடியாது.

கனடாவிலேயே இந்த நிலை என்றால் தாயகத்தில் சொல்லவா வேண்டும்.

சகோ,
யாரவது ஒரு வரி செய்யும் கணக்காளரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சீக்கிய மக்கள் இவ்வாறு வீட்டில் செய்கிறார்கள், பஜனைகள் வைக்கிறார்கள். வீட்டில் ஒரு பகுதியை இவ்வாறு பாவித்து சோலை வரியை குறைக்கின்றார்கள். 

நான் சொன்னது சீக்கியர் அல்லது வரி பற்றியல்ல, நீங்கள் சொல்லும் பதிவு செய்தல் தனியார் வீட்டு பத வழிபாட்டுக்குப் பொருந்தாது! உங்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பது புரியவில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது! 

2 minutes ago, ampanai said:

Potential property tax rebate

Registered charities paying property taxes directly, or indirectly as tenants, are eligible for a minimum 40% rebate under Ontario’s Municipal Act and City of Toronto Act.

Individual municipalities may also allow not-for-profits that are not registered charities to qualify for a rebate. Contact your local municipality with questions about property taxes, assessment and applicable rebates, and the Municipal Property Assessment Corporation with questions about assessments and exemptions.

https://www.ontario.ca/page/not-profits-taxes-and-exemptions

உண்மையில் என் கேள்வியையும் இதில் சொல்லப்பட்டுள்ளவற்றையும் புரிந்து கொண்டீர்களா என ஒரு சிறு சந்தேகம் வருகின்றது,.

தன்னார்வ நிறுவனமாக charity யாக பதியப்பட்ட அமைப்புகளுக்கான rebate தொடர்பாக, வரி தொடர்பாகவே இங்கு கூறப்பட்டு இருக்கு. வீட்டில் வைத்து இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என சொல்லப்படவில்லை இங்கு. பலர் தம் வீடுகளில் நிகழ்த்தும் இவ்வாறான ஒன்று கூடலுக்கு ஒன்று கூடி பிரார்த்தனை செய்வதற்கு இங்கு அரசின் அனுமதி தேவையில்லை. அதே நேரம் அப்படி செய்யும் போது அதற்கு சமூகளிக்கின்றவர்கள் பார்க்கிங்க் செய்ய பெரும் இடம் தேவையெனில் அனுமதி பெறுதல் வேண்டும்.

  • தொடங்கியவர்
2 minutes ago, Justin said:

கனடாவில் கிறிஸ்தவ பாடசாலைகளில் கற்கும் இலங்கை இந்துக் குடும்ப ஆட்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். தயவு செய்து fake news ஐப் பரப்பும் வேலையை நிறுத்துங்கள். நீங்கள் சொல்பவற்றை உறுதி செய்ய முடியா விட்டால் பொது இடத்தில் பகிராதீர்கள்!   

சகோ,
அமெரிக்கா காரர்கள் தான் அதிகம் போய் 'fake news' பேசுகிறவர்கள். கனடாவில் இல்லை 🙂 

முழுக்க முழுக்க வரிப்பணத்திலேயே இந்த நிறுவனங்கள் நடாத்தப்படுகின்றன. ஆரம்ப வயதில் (elementary)  கத்தோலிக்கராக இருந்தே ஆகவேண்டும். பிறகு சேர்ப்பார்கள் இந்துக்களையும் , ஏனென்னறால் funding வேண்டும் என்பதற்காக.

பல்கலைக்கழகங்கள் என்று வரும்பொழுது கனடாவில் பெரும்பான்மையானவை அரச அங்கீகாரம் மாறும் பண உதவிகளை பெற்றவை.

4 minutes ago, நிழலி said:

உண்மையில் என் கேள்வியையும் இதில் சொல்லப்பட்டுள்ளவற்றையும் புரிந்து கொண்டீர்களா என ஒரு சிறு சந்தேகம் வருகின்றது,.

தன்னார்வ நிறுவனமாக charity யாக பதியப்பட்ட அமைப்புகளுக்கான rebate தொடர்பாக, வரி தொடர்பாகவே இங்கு கூறப்பட்டு இருக்கு. வீட்டில் வைத்து இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என சொல்லப்படவில்லை இங்கு. பலர் தம் வீடுகளில் நிகழ்த்தும் இவ்வாறான ஒன்று கூடலுக்கு ஒன்று கூடி பிரார்த்தனை செய்வதற்கு இங்கு அரசின் அனுமதி தேவையில்லை. அதே நேரம் அப்படி செய்யும் போது அதற்கு சமூகளிக்கின்றவர்கள் பார்க்கிங்க் செய்ய பெரும் இடம் தேவையெனில் அனுமதி பெறுதல் வேண்டும்.

ஒரு கனடாவில் உள்ள வரி செய்ப்பவரை கேட்டுப்பாருங்கள்.

இல்லை நீங்கள் வாழும் நகரசபைக்கு அழைத்துக்கேளுங்கள் (311). உங்கள் வீட்டில் ஒரு பகுதியை மதம் சார்ந்த, பஜனைகளுக்கு பாவிக்கலாமா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என. 
 
https://www.ontario.ca/laws/regulation/990599

18 minutes ago, Lara said:

நீங்கள் கூறுவது வீடுகளில் கூடி பிரார்த்தனை செய்வது பற்றி

பொன்னாலை சைவ கிராமம். அங்கு கிறிஸ்தவ மதமாற்றக்குழு வெளியிடத்திலிருந்து வந்து ஆளில்லாத வீட்டில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் மதமாற்றும் வகையிலான மதபோதனைகளை செய்தது. இப்படியான நடவடிக்கைகளுக்கு அனுமதி, பதிவு தேவை, அவர்கள் வீட்டில் செய்தாலும். அவர்களே தாம் கிராம சேவகரிடம் அனுமதி பெற்று விட்டு வந்ததாக பொய் சொன்னார்கள். கிராம சேவகரை கேட்ட போது அவர்கள் தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியிருந்தார். அனுமதி என்ற ஒரு விடயம் இருந்ததால் தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். பின்னர் பொலிஸ் வரை போய் பொலிஸும் உரிய அனுமதி இல்லாமல் மதச்செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கூறியிருந்தது.

இத்திரியிலுள்ள சம்பவமும் அதையொத்தது. எனவே அனுமதி, பதிவு இல்லாமல் அதை செய்ய முடியாது.

லாரா,

என் ஞாபகம் சரியெனில், பொன்னாலையில் நிகழ்வு ஒரு வீட்டில் நடக்கவில்லை. ஒரு வளவில் அல்லது பொது வெளியில் ஒலிபெருக்கிகள் எல்லாம் கொண்டு வந்து அடுக்கி வைத்து நிகழ்வு நடாத்த முற்பட்டனர் என நினைக்கின்றேன். அப்படி ஒரு பொது வெளியில் வைப்பதற்கு அனுமதி தேவை. ஆனால் இச் செய்தியில் வீடொன்றில் நிகழ்வு நடந்தது எனக் குறிப்பிட்டு உள்ளனர். தனியார் வீடொன்று எனில் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொன்று, எம் தமிழ் / முஸ்லிம் ஊடகவியலாளர்கள் செய்தி ஒன்றை தரும் போது அதற்கான போதிய தரவுகளை தருவதில்லை என்பதுடன் தம் கற்பனைகளையும் கட்டி விடுவர். என்ன நடந்தது என ஆராய முற்படும் போது முற்றிலும் வேறு கதை ஒன்று தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

5 minutes ago, ampanai said:

சகோ,
அமெரிக்கா காரர்கள் தான் அதிகம் போய் 'fake news' பேசுகிறவர்கள். கனடாவில் இல்லை 🙂 

முழுக்க முழுக்க வரிப்பணத்திலேயே இந்த நிறுவனங்கள் நடாத்தப்படுகின்றன. ஆரம்ப வயதில் (elementary)  கத்தோலிக்கராக இருந்தே ஆகவேண்டும். பிறகு சேர்ப்பார்கள் இந்துக்களையும் , ஏனென்னறால் funding வேண்டும் என்பதற்காக.

பல்கலைக்கழகங்கள் என்று வரும்பொழுது கனடாவில் பெரும்பான்மையானவை அரச அங்கீகாரம் மாறும் பண உதவிகளை பெற்றவை.

அம்பனை, உங்களிடம் நான் இனி ஆதாரம் கேட்கப் போவதில்லை! ஏனெனில் ஒரு முற்றிலும் தவறான தகவலை இங்கே ஒரு சம்பந்தமேயில்லாத இணைப்பை இணைத்து பரப்பிக் கொண்டு கனடாவில் fake news காரர் இல்லை என்கிறீர்கள்! உங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்! 😎

என் குழந்தையே காசு கட்டித் தான் கிறிஸ்தவ பள்ளியில் படித்தது! அவரோடு படித்த மூன்றிலொரு பங்கு வகுப்பினர் இந்தியாவில் இருந்து வந்த இந்துக்குழந்தைகள். இது தான் நிலையும் சட்டமும்! உங்கள் வாதத்திற்கு அடிப்படை உங்களால் வாசித்து விளங்கிக் கொள்ள முடியாத நிலையா அல்லது வேறெதுமா என எனக்கு தெரியவில்லை!

ஆனால், இனி உங்கள் கருத்துகள் இணைப்புகளின் நம்பகத் தன்மை பற்றிய ஒரு முன்னெச்சரிக்கையை யாழ் வாசகர்களுக்கு இந்தத் திரி தெளிவு படுத்தி விட்டது என நினைக்கிறேன்!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

என்னை அவர்கள் கேட்கும் பொழுது, நான் எனது பெயரை ஒரு இஸ்லாமியராக கூறுவதால் உடனடியாக ஓக்கே என்று விடுவார்கள். மறந்தும் எனது சொந்தப்பெயரை சொல்வதில்லை. ஆரம்பத்தில் சொல்லி பட்ட பாடு சொல்ல முடியாது.

கனடாவிலேயே இந்த நிலை என்றால் தாயகத்தில் சொல்லவா வேண்டும்.

ஏன் ஓடுகிறீர்கள் .... அவர்களை துரத்துகிறீர்கள் என்பது புரியவில்லை? 
இலங்கையில் வசிக்கும்போதே நான் 1987-88 இல் இருந்து ஜெகோவாவின் 
மாத சஞ்சிகையான  விழித்தெழு வை வாசித்து வருகிறேன் இவர்கள் காவற்கோபுரம் என்று 
ஒரு சஞ்சிகையும் தருவார்கள் அது அதிகமாக பைபிள் சார்ந்து இருப்பதால் எனக்கு பைபிள் அறிவு ஆரம்பத்தில் 
இல்லாததாலும் அதை வாசிப்பது இல்லை. இப்போதும் தொடர்ந்தும் வாசிக்கிறேன் பல அறிவியல் தகவல்களோடு பைபிள் பற்றியும் அறிவை பெறுகிறேன். நான் கடவுளை நம்புவதில்லை ஆனால் என்ன மதம் என்று என்னை யாரும் கேட்டால் சைவம் .. சைவம் என்று பெருமையோடு சொல்கிறேன். 

ஓடுவதால்தான் ஒரு புரிந்துணர்வு வருவதில்லை அவர்கள் கூட்டி சென்று 
கட்டிவைத்து அடித்து மதம் மாற்றுவதில்லை கதைக்க போகிறார்கள் அவ்வளவுதானே?
எமது மதம் உயர்வானது என்றால் அவர்களுடன் பேசி ... ஏன் அவர்களை எமது மதத்துக்கு மாற்ற முடியாது? 

Image may contain: one or more people

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

1. வீடுகளில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகள் (கஞ்சா விற்றல்), வரி ஏய்க்கும் செயல் பாடுகள் (வியாபாரம்) என்பன செய்தல் இப்படி அனுமதியை வேண்டும் நிலைக்கு நீதிமன்றங்களைத் தள்ளுகின்றன. அந்த உதாரணங்களைத் தான் நீங்கள் உங்கள் பிரிட்டிஷ் நடைமுறையில் காட்டியிருக்கிறீர்கள்.

இது சட்ட பூர்வாமாக, ஒழுங்கு முறையில் செய்யும் எந்த தொழில்களையும் கூட நீதி மன்றம் அப்படியே, அதாவது என்ன உண்மையில் நடைபெறுகிறது என்பதையும் கருத்தில் எடுத்தே எந்த சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் எடுக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கின்றன.

22 minutes ago, ampanai said:

சகோ,
அமெரிக்கா காரர்கள் தான் அதிகம் போய் 'fake news' பேசுகிறவர்கள். கனடாவில் இல்லை 🙂 

முழுக்க முழுக்க வரிப்பணத்திலேயே இந்த நிறுவனங்கள் நடாத்தப்படுகின்றன. ஆரம்ப வயதில் (elementary)  கத்தோலிக்கராக இருந்தே ஆகவேண்டும். பிறகு சேர்ப்பார்கள் இந்துக்களையும் , ஏனென்னறால் funding வேண்டும் என்பதற்காக.

பல்கலைக்கழகங்கள் என்று வரும்பொழுது கனடாவில் பெரும்பான்மையானவை அரச அங்கீகாரம் மாறும் பண உதவிகளை பெற்றவை.

ஒரு கனடாவில் உள்ள வரி செய்ப்பவரை கேட்டுப்பாருங்கள்.

இல்லை நீங்கள் வாழும் நகரசபைக்கு அழைத்துக்கேளுங்கள் (311). உங்கள் வீட்டில் ஒரு பகுதியை மதம் சார்ந்த, பஜனைகளுக்கு பாவிக்கலாமா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என. 
 
https://www.ontario.ca/laws/regulation/990599

நான் இருக்கும் நகரசபைக்கு அழைக்க (Whitby, Ontario), அவர்கள் Law enforcement for buildings எனும் அலுவலகத்துக்கு தொலைபேசச் சொல்லி இவ் இலக்கத்தை தந்தனர்: 905 430 4305

என் சொந்த வீட்டில் மாதாந்தம் ஒரு பிரார்த்தனை கூட்டத்தை நிகழ்த்த அனுமதி தேவையா எனக் கேட்டேன். இது வீட்டில் உள்ளே நிகழுமாயின் (Indoor) அனுமதி தேவையில்லை என அறியத் தந்தனர்.

19 minutes ago, நிழலி said:

லாரா,

என் ஞாபகம் சரியெனில், பொன்னாலையில் நிகழ்வு ஒரு வீட்டில் நடக்கவில்லை. ஒரு வளவில் அல்லது பொது வெளியில் ஒலிபெருக்கிகள் எல்லாம் கொண்டு வந்து அடுக்கி வைத்து நிகழ்வு நடாத்த முற்பட்டனர் என நினைக்கின்றேன். அப்படி ஒரு பொது வெளியில் வைப்பதற்கு அனுமதி தேவை. ஆனால் இச் செய்தியில் வீடொன்றில் நிகழ்வு நடந்தது எனக் குறிப்பிட்டு உள்ளனர். தனியார் வீடொன்று எனில் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொன்று, எம் தமிழ் / முஸ்லிம் ஊடகவியலாளர்கள் செய்தி ஒன்றை தரும் போது அதற்கான போதிய தரவுகளை தருவதில்லை என்பதுடன் தம் கற்பனைகளையும் கட்டி விடுவர். என்ன நடந்தது என ஆராய முற்படும் போது முற்றிலும் வேறு கதை ஒன்று தெரியவரும்.

நீங்கள் கூறும் வளவில் கூட்டம் நடத்த முற்பட்டதும் பொன்னாலையில்.

அதற்கு ஒரு கிழமைக்கு பின் வெளியிடத்திலிருந்து வந்து ஆளில்லாத வீட்டில் ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் மதபோதனை செய்தார்கள். அது தான் பின்னர் பொலிஸ் வரை சென்றது.

பின்னர் வந்த செய்திகளும் முன்னைய சம்பவங்களை உறுதி செய்வதால் செய்தி உண்மை.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நீங்கள் கூறுவது வீடுகளில் கூடி பிரார்த்தனை செய்வது பற்றி

பொன்னாலை சைவ கிராமம். அங்கு கிறிஸ்தவ மதமாற்றக்குழு வெளியிடத்திலிருந்து வந்து ஆளில்லாத வீட்டில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் மதமாற்றும் வகையிலான மதபோதனைகளை செய்தது. இப்படியான நடவடிக்கைகளுக்கு அனுமதி, பதிவு தேவை, அவர்கள் வீட்டில் செய்தாலும். அவர்களே தாம் கிராம சேவகரிடம் அனுமதி பெற்று விட்டு வந்ததாக பொய் சொன்னார்கள். கிராம சேவகரை கேட்ட போது அவர்கள் தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியிருந்தார். அனுமதி என்ற ஒரு விடயம் இருந்ததால் தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். பின்னர் பொலிஸ் வரை போய் பொலிஸும் உரிய அனுமதி இல்லாமல் மதச்செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கூறியிருந்தது.

இத்திரியிலுள்ள சம்பவமும் அதையொத்தது. எனவே அனுமதி, பதிவு இல்லாமல் அதை செய்ய முடியாது.

26 minutes ago, Lara said:

நீங்கள் கூறும் வளவில் கூட்டம் நடத்த முற்பட்டதும் பொன்னாலையில்.

அதற்கு ஒரு கிழமைக்கு பின் வெளியிடத்திலிருந்து வந்து ஆளில்லாத வீட்டில் ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் மதபோதனை செய்தார்கள். அது தான் பின்னர் பொலிஸ் வரை சென்றது.

பின்னர் வந்த செய்திகளும் முன்னைய சம்பவங்களை உறுதி செய்வதால் செய்தி உண்மை.

இப்படி தான் நானும் பொன்னாலை சம்பவத்தை விளங்கி கொண்டேன். அவ்வாறே, இணைக்கப்பட்ட பொன்னாலை சம்பவ செய்தியும் இருந்தது.

இதன்  அடிப்படையிலேயே, பிரித்தானியாவில் உள்ள எழுதப்படாத சட்ட தத்துவமான, உண்மையில் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை பொறுத்தே எந்த சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதை, இலங்கை நீதி மன்றகளும் (இன, இனி மத (பௌத்த) பாகுபாட்டைத் தவிர்த்து) ஓர் முன்னுதாரணமாக அல்லது வழிகாட்டல்களாக எடுத்து தீர்ப்பை வழங்டுவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளது என்பதை குறிப்பிட்டேன்.

பொன்னாலை சம்பவத்தை  ஓர் முன்னுதாரமாக எடுத்தால், இப்பொது நடைபெற்றுள்ள போதனைகளுக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஏனெனில் அங்கு அதுவே நடைபெற்றது,  பிரித்தானியாவில் உள்ள எழுதப்படாத சட்ட தத்துவமான, உண்மையில் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை வைத்தே தீர்ப்பு வழங்கபட வேண்டும் என்பதை இலங்கை நீதி மன்றங்களுக்கு பின்பற்றினால்.

Edited by Kadancha

மதம் மாற்றுவதாக இங்கு  சிலர் ஏன் ஆத்திரப்பட்டு குத்தி முறிகிறார்கள் என்று தெரியவில்லை? 

யாரையோ எவனோ மதம் மாற்றினால் இவர்கள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள். இவர்களின் நம்பிக்கைப்படி இவர்களின் கடவுளில் இருந்து வேறு கடவுளை நோக்கி சிலர் கூட்டிச்சென்றால் இவர்களின் கடவுள் அவர்களுக்கு அனுக்கிரகம் கொடுக்க மாட்டார். அவ்வளவு தானே. அப்படி மதம் மாற்றுபவர்களுக்கும் கடவுள் தண்டனை கொடுப்பார் தானே. எல்லாம் அவன் செயல். அவனின்றி அணுவும் அசையாது என்று நம்பிக்கை கொள்ளும் இவர்கள் மதம் மாற்றுபவர்களுக்கு எதிராக ஆத்திரப்படுவது ஏன்? கடவுள் அவர்களை பார்த்துக் கொள்வார் என று விட்டு விடுவது தானே. இங்கு மட்டும் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு சட்டமே வேண்டும்.

அதாவது, மத மாற்றம் கோயில்கள், ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகளிலேயே மட்டுமே நடைபெறுவதற்கு சட்ட  அனுமதி உண்டு என்று.

சட்டத்தில் இந்த கட்டிட அமைப்புகள் வரையறுக்கப்பட்ட வேண்டும்.

இத்தகைய சட்டம், பல்வேறு பிரச்னைகளை தீர்த்து விடும்.

ஜஸ்டின் போன்றோருக்கு இது உவப்பிலாத சட்டம் தான், அனல் இது எல்லோருக்கும், மதாற்றத்தை பொறுத்தவரை,  சட்டத்தின் முன் சமமாக நடத்த இடமளிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மதம் மாற்றுவதாக இங்கு  சிலர் ஏன் ஆத்திரப்பட்டு குத்தி முறிகிறார்கள் என்று தெரியவில்லை? 

யாரையோ எவனோ மதம் மாற்றினால் இவர்கள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள். இவர்களின் நம்பிக்கைப்படி இவர்களின் கடவுளில் இருந்து வேறு கடவுளை நோக்கி சிலர் கூட்டிச்சென்றால் இவர்களின் கடவுள் அவர்களுக்கு அனுக்கிரகம் கொடுக்க மாட்டார். அவ்வளவு தானே. அப்படி மதம் மாற்றுபவர்களுக்கும் கடவுள் தண்டனை கொடுப்பார் தானே. எல்லாம் அவன் செயல். அவனின்றி அணுவும் அசையாது என்று நம்பிக்கை கொள்ளும் இவர்கள் மதம் மாற்றுபவர்களுக்கு எதிராக ஆத்திரப்படுவது ஏன்? கடவுள் அவர்களை பார்த்துக் கொள்வார் என று விட்டு விடுவது தானே. இங்கு மட்டும் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்? 

மத மாற்றம் என்பது ஒருவரின் வரலாற்றை அழிப்பது போன்றது. பாரம்பரியம், பண்பாடு, அறம் சார்ந்த மதிப்பிடூகள், நம்பிக்கைகள் எல்லாமே பாட்டன், பூட்டி அவர்களின் மூதாதையரின் நம்பிக்கைகளில் இருந்து வந்தது. அதனால்தான் பிற மதங்களுக்கு மாறியவர்கள் தாலி கட்டுவது போன்ற சடங்குகளை கைவிடாமல் இருக்கின்றனர். எனவே அந்நியமான மதத்திற்கு மாற்ற பிரச்சாரம் செய்பவர்களைக் கண்டால் ஆத்திரம் வருவது இயல்பு.

மதங்களில் நம்பிக்கையில்லாத நான், மதம் மாறிய எனது உறவினர்கள் சிலருடன் கதைப்பது குறைவு. அவர்கள் தமது மூதாதையர்களை/வேர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதுதான் காரணமாக இருக்கலாம்!

1 hour ago, கிருபன் said:

கிருபன் உங்களின் இந்த பார்வையுடன்  நான் உடன்படுகிறேன்.  உங்களை போன்ற மதம் தொடர்பான தெளிவான பார்வையுடன் இருக்கும் எவரையும் மதம் மாற்றும் பேர்வளிகள் எதுவும் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். மதத்தில் நம்பிக்கை அற்ற என்னையும், மதத்தை சம்புரதாயத்திற்காக கடைப்பிடிக்கும் சாதாரண மக்களையும்  மத மாற்றுபவர்களால் மாற்ற முடியாது  நான் முன்னரே குறிப்பிட்டது போல் மதத்தையும் அது கூறிய  மூடப்பழக்கங்களையும்  மிக தீவிரமாக நம்புபவர்களை தான் மதம் மாற்ற முடியும் 

நீங்கள் quote செய்த எனது  கேள்வி   கடவுளில் நம்பிக்கை  இருப்பதாக கூறிக்கொண்டு அந்த கடவுளுக்கும் மனித அறிவுக்கும் சற்றும் பொருத்தமற்ற முறையில் மதத்தால் பரப்பப்பட்ட, எமது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள, அடிமுட்டாள் தனமான மூடத்தனங்களையும் நம்பிக்கொண்டு அதையும் பின்பற்ற வேண்டும் என்று வாதிடும் நபர்களுக்கானது. உங்களை போன்ற தெளிந்த சிந்தனை உடையவர்களுக்கானத அல்ல. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2019 at 8:25 PM, Thumpalayan said:

அறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ

பாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.

வாவ், உண்மைதான்,  எப்படி கண்டுபிடித்தீர்கள், நீங்கள் மிகவும் கெட்டிக்காறன்தான், 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

மத மாற்றம் என்பது ஒருவரின் வரலாற்றை அழிப்பது போன்றது. பாரம்பரியம், பண்பாடு, அறம் சார்ந்த மதிப்பிடூகள், நம்பிக்கைகள் எல்லாமே பாட்டன், பூட்டி அவர்களின் மூதாதையரின் நம்பிக்கைகளில் இருந்து வந்தது. அதனால்தான் பிற மதங்களுக்கு மாறியவர்கள் தாலி கட்டுவது போன்ற சடங்குகளை கைவிடாமல் இருக்கின்றனர். எனவே அந்நியமான மதத்திற்கு மாற்ற பிரச்சாரம் செய்பவர்களைக் கண்டால் ஆத்திரம் வருவது இயல்பு.

மதங்களில் நம்பிக்கையில்லாத நான், மதம் மாறிய எனது உறவினர்கள் சிலருடன் கதைப்பது குறைவு. அவர்கள் தமது மூதாதையர்களை/வேர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதுதான் காரணமாக இருக்கலாம்!

இதைத்தான் நான் சொல்லிவருகிறேன் ....
கிருபன் அண்ணாவை யாராலும் மதம் மாற்ற முடியாது 
என்னையும் யாராலும் மதம் மாற்ற முடியாது 

மறுவபவர்களை  எப்படி மாற்றுகிறார்கள்? 
ஏன் மாறுகிறார்கள்?
என்ற கேள்விக்கு நாம் விடைகாணும் மட்டும் அவர்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள்.
எமது மூதையார்கால் பற்றிய அறிவின்மை 
எமது மதம் என்ற பெயரில் எந்த விண்ணாணம் புடுங்கினாலும் கண்டும் காணாததுபோல் 
பாவனை செய்வது .... அல்லது முஸ்லிமில் கிறிஸ்தவத்தில் இல்லையா என்று சப்பை கட்டு கட்டுவது.
எமது மதம் பற்றி எந்த அறிவும் இல்லாது ....
எதோ இந்த உலகமே எமது மதத்தால் வாழ்வதுபோல பில்டப்பு செய்வது.
பிராமணன் என்ன முட்டால் தனம் செய்தாலும் ஏற்றுக்கொளவது. 
சொந்த மதத்தவனையே சாதியை சொல்லி இல்லாத கொடுமை எல்லாம் செய்வது.
போன்ற அநியாங்கள் தொடருமட்டும் ... இங்கிருந்து குலைக்க வேண்டியதுதான்.

ஒன்றுமே இல்லாதவன் பைபிள் என்று ஒரு புத்தகத்தை மட்டும் வைத்து கழுவி கழுவி ஊத்துகிறான். 

அத்தனையும் இருந்தவன் 
கடுவுளையே கண்டதுபோல ஆடுகிறான். 

சி வ் ஆ (சிவா) = என்றால் இல்லாதது என்று பொருளாம் 
இல்லாததால்தான் இந்த உலகம் இயங்குகிறது சிவாதான் மூலம் என்று சைவர்கள் என்றோ சொன்னார்கள். 

அறிவியலின் உச்சமாக வரப்போகும் குவாந்தோம் தொழிலநுட்பம் (quantum Technology) 
இல்லாததன் செயல்பாடே இருப்பவையின் அசைவு என்கிறது. 

எல்லாம் இருக்கிற பிரபஞ்சத்தை விட 
ஒன்றுமே இல்லாத ப்ளாக் கோலின் (black hole)  சக்தி ஆபூர்வமானது என்கிறார்கள். 

Image result for quantum technology

Image result for quantum technology

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

மீண்டும்: சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை! இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! நீங்கள் தமிழையும் சமூகக் கல்வியையும் இன்னொரு முறை போய் படித்து விட்டு வருவது நல்லது!

நாங்கள் தமிழும் சமூகக்கல்வியும் படிப்பது இருக்கட்டும், தெரியாமல்தான் கேட்கிறேன் ஒரு மதத்தில்   இருப்பவருக்கு வேறு மத போதனைகளை ஏன் செய்கிறீர்கள்?  பொது அறிவுக்காகவா? இல்லையே அவரை எப்படியாவது  மதம் மாற்ற வேண்டுமென்றுதானே!  இந்த கேனைத்தனத்திற்கு சட்ட நெறிப்படுத்தல் வேற வேணுமோ??  வெட்கமாக இல்லை!!

Edited by Eppothum Thamizhan

5 hours ago, Maruthankerny said:

இதைத்தான் நான் சொல்லிவருகிறேன் ....
கிருபன் அண்ணாவை யாராலும் மதம் மாற்ற முடியாது 
என்னையும் யாராலும் மதம் மாற்ற முடியாது 

மறுவபவர்களை  எப்படி மாற்றுகிறார்கள்? 
ஏன் மாறுகிறார்கள்?
என்ற கேள்விக்கு நாம் விடைகாணும் மட்டும் அவர்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள்.
எமது மூதையார்கால் பற்றிய அறிவின்மை 
எமது மதம் என்ற பெயரில் எந்த விண்ணாணம் புடுங்கினாலும் கண்டும் காணாததுபோல் 
பாவனை செய்வது .... அல்லது முஸ்லிமில் கிறிஸ்தவத்தில் இல்லையா என்று சப்பை கட்டு கட்டுவது.
எமது மதம் பற்றி எந்த அறிவும் இல்லாது ....
எதோ இந்த உலகமே எமது மதத்தால் வாழ்வதுபோல பில்டப்பு செய்வது.
பிராமணன் என்ன முட்டால் தனம் செய்தாலும் ஏற்றுக்கொளவது. 
சொந்த மதத்தவனையே சாதியை சொல்லி இல்லாத கொடுமை எல்லாம் செய்வது.
போன்ற அநியாங்கள் தொடருமட்டும் ... இங்கிருந்து குலைக்க வேண்டியதுதான்.

ஒன்றுமே இல்லாதவன் பைபிள் என்று ஒரு புத்தகத்தை மட்டும் வைத்து கழுவி கழுவி ஊத்துகிறான். 

அத்தனையும் இருந்தவன் 
கடுவுளையே கண்டதுபோல ஆடுகிறான். 

சி வ் ஆ (சிவா) = என்றால் இல்லாதது என்று பொருளாம் 
இல்லாததால்தான் இந்த உலகம் இயங்குகிறது சிவாதான் மூலம் என்று சைவர்கள் என்றோ சொன்னார்கள். 

அறிவியலின் உச்சமாக வரப்போகும் குவாந்தோம் தொழிலநுட்பம் (quantum Technology) 
இல்லாததன் செயல்பாடே இருப்பவையின் அசைவு என்கிறது. 

எல்லாம் இருக்கிற பிரபஞ்சத்தை விட 
ஒன்றுமே இல்லாத ப்ளாக் கோலின் (black hole)  சக்தி ஆபூர்வமானது என்கிறார்கள். 

மருது  இந்த திரியிலேய  மகுடம் வைத்தது போன்ற மிக சிறந்த கருத்து உங்களது இந்த கருத்து. மிக்க நன்றி 

கடவுளை உண்மையில் நம்புபவர்கள்  மூடப்பழக்கங்களை நம்ப முடியாது. மூடப்பழக்கங்களை நம்புபவர்கள் கடவுளை நம்பாதவர்கள்.  இரண்டையும் சேர்த்து  நம்புபவர்கள் மனவளர்ச்சி குறைந்தவர்கள். இரண்டையும் சேர்த்து மக்களிடம் பரப்புபவர்கள் மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி பணம் உழைக்கும்  அயோக்கிய வியாபாரிகளே. (உண்மையான ஆன்மீகவாதிகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. அவர்களின் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு) 

  எமது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பவை பத்தாம்பசலித்தனமான இந்த மூடப்பழக்கங்கள் என்ற நச்சு செடிகளே.   இந்த நச்சு செடிகளே மத மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. எமது மத்த்தில் அறிவுக்கு பொருத்தமற்ற மூடப்பழக்கங்களை விதைத்து மக்களை பலவீனமாக வைத்திருந்தால் அதே மூடத்தனங்களை மூலதனமாக்கி அடுத்தவன் பணம் பண்ண தான் பார்பபான்.(பார்ப்பானுடன் போட்டி போட்டு)

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.