Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஜனாதிபதி யார் ? ஜனாதிபதித் தேர்தல் இன்று !

Featured Replies

2019 ஜனாதிபதி தேர்தல்: 3 மணிவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம் இதோ!

  • கண்டி – 75%
  • பொலநறுவை – 75%
  • நுவரெலியா – 75%
  • மாத்தளை – 72%
  • மாத்தறை – 72%
  • காலி – 71%
  • திருகோணமலை – 70%
  • குருநாகல் 75%
  • வவுனியா – 72%
  • களுத்துறை 70%
  • அம்பாறை – 65%
  • மட்டக்களப்பு 65%

http://athavannews.com/2019-ஜனாதிபதி-தேர்தல்-3-மணிவரை/

  • Replies 60
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

 

5 மணிக்கு,

EJfyvSrXsAEzGVz?format=jpg&name=900x900

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமாகியது தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.இன்று சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு மிகவும் சுமுகமான நிலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் முதலாவதாக தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமானியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அந்தவகையில் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 மணிக்கு ஆரம்பமாகியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
 

http://www.samakalam.com/செய்திகள்/ஆரம்பமாகியது-தபால்மூல-வா/

5 மணிக்கு,

Ratnapura - 84%

- News 1st

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

 

இந்தக் குடுகுடுப்பைக் கும்பல் காமடித் தலைவருக்கு.. உந்தப் பாட்டி அவ்வளவு கெத்தா இல்ல.

காமடித் தலைவருக்கு.. இந்தத் தாடி தலைவரின் பாட்டுத்தான் சரி..

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வாக்களிப்பில் சாதித்த வடக்கு, கிழக்கு! தென்னிலங்கை பின்னடைவு!!

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/election/01/231434?ref=home-latest

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

வாக்களித்து அசத்திய தமிழ் பேசும் மக்கள்! பின்னடைந்த பெரும்பான்மையினம்!!

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.ibctamil.com/election/80/131351?ref=imp-news

சிங்கள மக்களில் புதிய தலைமுறை இனவாதத்திற்கு அவ்வளவு மதிப்பளிப்பதில்லை. அவர்கள் நவீன உலகின் மாற்றங்களை உள்வாங்கத் துடிக்கிறார்களே தவிர.. சிங்கள பெளத்த இனவாதம் என்பது சிங்கள இளம் தலைமுறை வாக்களர்களிடம் எனி சிறுகச் சிறுகச் சாகும். 

 

  • தொடங்கியவர்

கடும் மழையின் மத்தியிலும் வாக்களிக்க பின்வாங்காத மலையக மக்கள்!

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவானோர் வாக்களித்துள்ளனர் என இதுவரையில் கிடைத்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் மலையகத்தில் இன்றைய தினம் கடும் மழை பெய்தபோதும் மக்கள் வாக்களிக்க செல்வதற்கு பின்வாங்கவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131353

42 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள மக்களில் புதிய தலைமுறை இனவாதத்திற்கு அவ்வளவு மதிப்பளிப்பதில்லை. அவர்கள் நவீன உலகின் மாற்றங்களை உள்வாங்கத் துடிக்கிறார்களே தவிர.. சிங்கள பெளத்த இனவாதம் என்பது சிங்கள இளம் தலைமுறை வாக்களர்களிடம் எனி சிறுகச் சிறுகச் சாகும். 

மிக சரியான கணிப்பீடு .... எனது எண்ணமும் இதுவே....எனது பாடசாலை வாழ்க்கை முழுவதும், எனது தொழில் சார் வாழ்க்கையின் ஆரம்ப காலம் எல்லம் சிங்கள்வருடனே இருந்தது ... இது எனது அனுபவம்; அந்த வகையில் சஜித்தின் வெற்றி முக்கியம், ஏன் எனில் இதுவரை இலங்கைய ஆண்ட அரசியல்வாதிகளுக்கு ஊழல்,பதவி வெறி என்பனவற்றை விட வேறு எதுவும் தெரியாது

  • தொடங்கியவர்

நாளை மாலைக்குள் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்!

vd-1-720x450.jpg

வாக்கெண்ணும் பணிகளில் பிரச்சினை எதுவும் இடம்பெறாது இருந்தால், நாளை மாலைக்கு முன்னதாக முடிவினை அறிவிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்கு பதிவுகள் நிறைவுப் பெற்றதன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஜனாதிபதி தேர்தல் பெரிதளவான விபரீதங்கள் இல்லாமல் நிறைவுக்கு வந்துள்ளது.

இரத்னபுரியின் அஞ்சல் மூல முதலாவது பெறுபேற்றை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வழங்க வாய்ப்பு உள்ளது.

ஏனைய வாக்கெண்ணும் பணிகளில் பிரச்சினை எதுவும் இடம்பெறாது இருந்தால், நாளை மாலைக்கு முன்னதாக முடிவினை அறிவிக்க முடியும். இல்லையென்றால் திங்கட் கிழமை வரை நீடிக்கப்படலாம்.

இரண்டு தனியார் தொலைக்காட்சிகளும், அரச தொலைக்காட்சியும் ஒத்துழைத்திருந்தால் இந்த தேர்தலை இதனை விட நாங்கள் சிறப்பாக செய்திருக்கலாம்’ என கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 அளவில் ஆரம்பமாகிய நிலையில், கொழும்பு மாவட்டத்திற்கான அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், கம்பஹா மாவட்ட அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் வெயாங்கொடை வித்தியாலோக வித்தியாலத்திலும் இடம்பெறுகின்றன.

http://athavannews.com/நாளை-மாலைக்கு-முன்னதாக-ஜ/

  • தொடங்கியவர்

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்!! அதிர்ச்சியில் சஜித்!!

உத்தியோகப்பற்றற்ற முறையில் இதுவரை வெளிவந்துள்ள தபால்மூல வாக்குகள் எண்ணிக்கையில் கோத்தபாயா ராஜபக்ச முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது.

உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி:

புத்தளம் தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 5108

சஜித்: 3802

திருகோணமலை தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 7845

சஜித்: 6355

மொனறாகல தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 10876

சஜித்: 3250

கொழும்பு தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 33646

சஜித்: 18456

கம்பகா தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 24658

சஜித்: 7534

மாத்தறை தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 18536

சஜித்: 6345

https://www.ibctamil.com/parliment/80/131367?ref=imp-news

15 minutes ago, போல் said:

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்!! அதிர்ச்சியில் சஜித்!!

உத்தியோகப்பற்றற்ற முறையில் இதுவரை வெளிவந்துள்ள தபால்மூல வாக்குகள் எண்ணிக்கையில் கோத்தபாயா ராஜபக்ச முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது.

உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி:

புத்தளம் தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 5108

சஜித்: 3802

திருகோணமலை தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 7845

சஜித்: 6355

மொனறாகல தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 10876

சஜித்: 3250

கொழும்பு தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 33646

சஜித்: 18456

கம்பகா தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 24658

சஜித்: 7534

மாத்தறை தபால்மூல வாக்குகள்

கோத்தாபாய: 18536

சஜித்: 6345

https://www.ibctamil.com/parliment/80/131367?ref=imp-news

இலங்கையில் எந்த ஒரு ஊடகத்திலும் வராத தகவல்  IBC தமிழ் இணையத்தளத்துக்கு மட்டும் கிடைக்கிறது.

  • தொடங்கியவர்
4 minutes ago, Dash said:

இலங்கையில் எந்த ஒரு ஊடகத்திலும் வராத தகவல்  IBC தமிழ் இணையத்தளத்துக்கு மட்டும் கிடைக்கிறது.

வாட்ஸ்அப் இல் இதைவிட அதிக தகவல்கள் வருகின்றன. அவற்றை இங்கு இணைக்க முடியாது.
இதுவரைக்கும் போர்க்குற்றவாளி கோட்டாபய  முன்னணியில்  உள்ளார். போகப்போக நிலைமைகள்  மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

9-vaakku.jpg

உடனே எண்ண தொடங்கிவிட்டீனம் .. வாக்கு பெட்டியை பாதுகாத்து ( ! )  2 நாட்கள் கழித்து எண்ண மாட்டார்களா .?  ஜனநாயக நாட்டில் பெட்டி மாத்துற பிசினஸ் எல்லாம் கிடையாதா.?  என்னப்பா ஜனநாயகம்.? 😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

40 minutes ago, Dash said:

இலங்கையில் எந்த ஒரு ஊடகத்திலும் வராத தகவல்  IBC தமிழ் இணையத்தளத்துக்கு மட்டும் கிடைக்கிறது.

தபால் மூல வாக்களிப்பில் கோத்தபாய முன்னணி வகிக்கிறார் என்று தான் Twitter இலும் செய்திகள் வருகின்றன.

உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிக்கும் போது அதை சரிபார்க்க முடியும்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Lara said:

தபால் மூல வாக்களிப்பில் கோத்தபாய முன்னணி வகிக்கிறார் என்று தான் Twitter இலும் செய்திகள் வருகின்றன.

உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிக்கும் போது அதை சரிபார்க்க முடியும்.

அமெரிக்க குடியுரிமையும் இலங்கை குடியுரிமையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

2 hours ago, போல் said:

வாக்களிப்பில் சாதித்த வடக்கு, கிழக்கு! தென்னிலங்கை பின்னடைவு!!

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/election/01/231434?ref=home-latest

இதில் 2015 வாக்களிப்பு வீதம் தபால் மூல வாக்களிப்பையும் உள்ளடக்கியது. 2019 இற்கு இன்னும் உள்ளடக்கப்படவில்லை. எனவே வீதம் பின்னர் மாறுபடும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

2015 இல் தபால் மூல வாக்குகளில் மகிந்தவே முன்னணி வகித்தார்... என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

  • தொடங்கியவர்
46 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உடனே எண்ண தொடங்கிவிட்டீனம் .. வாக்கு பெட்டியை பாதுகாத்து ( ! )  2 நாட்கள் கழித்து எண்ண மாட்டார்களா .?  ஜனநாயக நாட்டில் பெட்டி மாத்துற பிசினஸ் எல்லாம் கிடையாதா.?  என்னப்பா ஜனநாயகம்.? 😢

இங்கே அரசியலில் வலுவான பின்னணி உடையவர்கள் செய்யும் தில்லுமுல்லுகள் வேறுவிதமானவை.

(1) எதிர்தரப்பு வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்களிக்காமல் தடுப்பது
(2) பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற்று கள்ளவாக்குகளை செலுத்துவது. இதற்கு பொருத்தமான வாக்களிப்பு நிலையங்கள் முன்னரே தெரிவுசெய்யப்டும். அதிகாரிகள் உரியமுறையில் கவனிக்கப்படுவர்.
(3) அரச வாக்குச் சீட்டுகளை ஒத்த வாக்குச் சீட்டுகளை அச்சடித்து கள்ளவாக்குகளை செலுத்துவது. இதற்கு பொருத்தமான வாக்களிப்பு நிலையங்கள் முன்னரே தெரிவுசெய்யப்டும். அதிகாரிகள் உரியமுறையில் கவனிக்கப்படுவர்.
(4) களத்தில் இறக்கப்பட்ட போலி வேட்பாளர் பெற்ற வாக்குச் சீட்டுகள் எண்ணும் இடங்களில் மாற்றப்பட்டு எண்ணப்படும். அதிகாரிகள் ஏனைய முகவர்கள் உரியமுறையில் கவனிக்கப்படுவர்.
 

பாராளுமற்ற / மாகாணசபை தேர்தல்களில்  இவற்றுக்கு மேலதிகமாக கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குசீட்டுகள் பிரிக்கப்பட்ட பின்னர் விருப்புவாக்கு எண்ணுதலில் நடைபெறும் தில்லுமுல்லுகள் சர்வசாதாரணமானவை. ஏனைய கட்சிகள் குறித்த கட்சிக்குள் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி அதிகம் கவலை  கொள்வதில்லை.

(5) கட்சித் தலைமை தான் விரும்பும் நபர் வெல்வதற்காக தனது கட்சியில் ஏனையவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மாற்றி எண்ணுவர். உதாரணமா கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன் வென்றது இவ்வகையிலேயே. முன்பு ஒரு தடவை ஹக்கீம் வென்றதுவும் இவ்வகையிலேயே.
 

தேர்தல் முடிவுகள் இதில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

 

  • தொடங்கியவர்

வடக்கு, கிழக்கு, மலையக தமிழர் பகுதிகளில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளில் பேரினவாதக் கட்சியைச் சேர்ந்த சஜித் முன்னணியில் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கேகாலை, இரத்தினபுரி, பதுளை முடிவுகள் வர தாமதமாகும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.