Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தூதரக பணியாளரை விசாரணை செய்யவேண்டும் - தூதுவரை நேரில் சந்தித்து முக்கிய அதிகாரிகள் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bdd140b1aa034d4508a14ab1619bf67e_L.jpg

பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் – வெளிவிவகார அமைச்சு முக்கிய தகவல்

சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை தெளிவுப்படுத்துவதற்கான சந்திப்பொன்று நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள் காலம் மற்றும் அவர் அந்த திகதியில் மேற்கொண்ட நடமாட்டங்கள் என்பன முரண்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் அங்கிருந்த சி.சி.ரி.வி காட்சிகள், தொலைபேசி பதிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதியாவதாக சுவிட்சர்லாந்து தூதுவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரிக்கு இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதால் அது குறித்து அவர் இலங்கை சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரின் மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சில தினங்களுக்கு முன்னர் சுவிஸில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பெண்-அதிகாரி-கடத்தப்பட்ட/

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் விசாரணை செய்யவேண்டும் என இலங்கை அரசாஙகம் வலியுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால்  குணரட்ணவும் இலங்கை;ககான சுவிஸ் தூதுவரை சந்தித்து சிஐடியினர் மேற்கொண்டுள்ள விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரை விசாரணைக்காக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சுவிஸ் தூதரகம் ஏற்றுக்கொள்ளாத போதிலும் நவம்பர் 29 ம் திகதி சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்தும்,நேரம் குறித்தும் பாதிக்கப்பட்டவர் சார்பில் சுவிஸ் தூதரகம் சிஐடியினருக்கு வழங்கிய தகவல்கள்,குறிப்பிட்ட தினத்தன்று பாதிக்கப்பட்டவரின் நடமாட்டத்துடன் பொருந்தவில்லை,என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகள்,தொலைபேசி உரையாடல்கள்,ஜிஎஸ்பி தரவுகள்,உட்பட பல விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்தும்,நேரம் குறித்தும் பாதிக்கப்பட்டவர் சார்பில் சுவிஸ் தூதரகம் சிஐடியினருக்கு வழங்கிய தகவல்கள்,குறிப்பிட்ட தினத்தன்று பாதிக்கப்பட்டவரின் நடமாட்டத்துடன் பொருந்தவில்லை,என தூதுவருக்கு தெரிவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் சுவிஸ் தூதரகத்திற்கு சமர்ப்பித்துள்ள நிராகரிக்க முடியாத ஆதாரங்கள் காரணமாக இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மையை கண்டுபிடிப்பதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இதற்காக பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுபவரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் விசாரணை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவேளை தனக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் குறிப்பிட்டுள்ளதால் அவரை இலங்கையில் சட்டவைத்திய அதிகாரியொருவரின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகத்தை ஒத்துழப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/70162

முன்னுக்குப் பின் முரணாக மாறும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம்..!

நாட்டிலுள்ள சுவிசர்லாந்து தூதுவரயாலயத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை தெளிவுப்படுத்துவதற்கான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்ற போதே அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருக்கு இடையில் இந்த சந்தி;ப்பு இடம்பெற்றிருந்தது. 

சுவிட்சர்லாந்து தூதரகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்,  சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள், காலம் மற்றும் அவர் அந்த திகதியில் மேற்கொண்ட நடமாட்டங்கள் என்பன முரண்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகள், தொலைபேசி பதிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதியாவதாக சுவிர்ஸ்ஸலாந்து தூதுவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள சுவிட்;ஸர்லாந்து தூதரகத்தின் அதிகாரிக்கு இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதால் அது தொடர்பில் அவர் இலங்கை சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரின் மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

http://www.hirunews.lk/tamil/229387/முன்னுக்குப்-பின்-முரணாக-மாறும்-சுவிஸ்-தூதரக-பெண்-அதிகாரி-விவகாரம்

சுவிஸ் அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில் இந்த தூதரகம் க்ரெகேரி ரோட்டில் அமைந்துள்ளது. இதட்கு பக்கத்தில்தான் ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தூதரகமும் அமைந்துள்ளது. அங்கிருக்கும் CCTV கமெராக்கள் மூலம் எல்லாவத்தயும் அறிந்து கொள்ளலாம்.

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி ஸ்விஸ் தூதரகத்தின் தகவல்கள் இதனுடன் ஒத்துப்போகாவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் அரசும் பதவிக்கு வந்தவுடன் இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. எனவே இதன் நோக்கம் என்ன என்பது விரைவில் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் – தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் : வெளிவிவகார அமைச்சு அறிக்கை

இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நேற்று மாலை விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை வருமாறு,
சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்
2019 நவம்பர் 25 திங்கட்கிழமை இடம்பெற்ற கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி, இந்த விடயம் குறித்த முழுமையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டது.
இன்று மாலை (2019 டிசம்பர் 01) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் ஹேன்ஸ்பீட்டர் மொக் மற்றும் தூதரகத்தின் பிரதித் தலைவர் ஆகியோரை சந்தித்து, பொலிஸ் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) விசாரணையின் முடிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
2019 நவம்பர் 29 வெள்ளிக்கிழமை சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளின் கோரிக்கையின் பேரிலன்றி, குறித்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருடன் நேர்காணலில் ஈடுபடுவதற்கு தூதரகம் அவரை முற்படுத்தவில்லை என்றாலும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சார்பாக சுவிஸ் தூதரகத்தினால் சி.ஐ.டி. க்கு முறையாக முன்வைக்கப்பட்ட சம்பவங்களின் வரிசை மற்றும் குறித்த சம்பவத்தின் காலவரிசை ஆகியன, சாட்சியுடனான நேர்காணல்கள் மற்றும் உபெர் பதிவுகள்இ, சி.சி.டி.வி. காட்சிகள் , தொலைபேசிப் பதிவுகள் மற்றும் ஜி.பி.எஸ். தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப சான்றுகளின் அடிப்படையில், குறித்த தினத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான நகர்வுகளுடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை என்பது தொடர்பான தெளிவான சான்றுகள் தூதுவருக்கு வழங்கப்பட்டன.
சுவிஸ் தூதரகத்துக்கு சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் முன்வைத்த உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டைச் சூழவுள்ள உண்மைகளை கண்டறிந்து கொள்வதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன், இதற்காக குறித்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளால் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டல் வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. குறித்த கடத்தல் சம்பவத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதாக அந்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் தெரிவித்துள்ளதால், அவர் இலங்கையில் உள்ள ஒரு சட்ட மருத்துவ அதிகாரியால் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான உரிமைக்கோரல்களின் உண்மைத்தன்மையை நிறுவ இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/சுவிஸ்-தூதரக-ஊழியர்-கடத்/

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியரை வாக்குமூலமளிக்குமாறு அரசாங்கம் கோருவது வேடிக்கை: ராஜித சேனாரத்ன 

Published by Loga Dharshini on 2019-12-02 15:52:35

 

(நா.தனுஜா)

அண்மையில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் மிகவும் அச்சமடைந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்து, அவருடைய குடும்பத்தாருடன் கூட பேசமுடியாத நிலையில் இருக்கின்றார். அவ்வாறிருக்க அவர் வந்து வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றது. அவரால் எவ்வாறு வாக்குமூலம் அளிக்க முடியும்? என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

rajitha.jpg

மேலும் தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் தவறான பாதையில் பயணிப்பதற்கு முற்படுமாக இருந்தால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரைப் போன்று நாடு சர்வதேசத்தின் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், தற்போதைய பொருளாதார நிலைவரத்தின் பிரகாரம் கடுமையான நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எமது நல்லாட்சி அரசாங்கத்தில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், நாங்கள் நாட்டில் ஜனநாயகத்தையும் மக்களின் மனித உரிமைகளையும் வலுப்படுத்தினோம். ஜனநாயகக் கட்டமைப்புக்களான நீதிமன்றம், பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றின் சுயாதீனத்துவத்தை வலுப்படுத்தினோம் என்றார்.

அத்தோடு, தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வேன் தொடர்பான தகவலொன்றை நான் வெளியிட்ட போது, அது பொய் என்று பலரும் சாடினார்கள். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருவார காலத்திலேயே வெள்ளை வேன் வந்துவிட்டது. கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருக்கிறார். அதனால் மிகுந்த அச்சமடைந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவருடைய குடும்பத்தாருடன் கூட பேசமுடியாத நிலையிலேயே பாதிக்கப்பட்ட ஊழியர் இருக்கின்றார். அவ்வாறிருக்க அவர் வந்து வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றது. அவரால் எவ்வாறு வாக்குமூலம் அளிக்க முடியும்? அதேபோன்று இனியும் இங்கு பாதுகாப்பில்லாத நிலையில் அவரையும், அவரது குடும்பத்தாரையும் சுவிஸர்லாந்திற்கு அனுப்புவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அடுத்ததாக ஊடக நிறுவனங்கள் சோதனையிடப்படுவதுடன், ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். நான் பல வருடங்களுக்கு முன்னர் 4 ஆம் மாடிக்குச் சென்றிருக்கிறேன். அங்கு காணப்படும் சூழ்நிலை எத்தகையது என்பதை நன்கு அறிவேன். அவ்வாறிருக்க உண்மையில் விசாரணை நடத்தும் நோக்கம் எதுவுமின்றி, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்காக அங்கு அழைத்துச்சென்று பலமணிநேரங்கள் தடுத்துவைத்திருக்கிறார்கள்.

புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி அணிகின்ற ஆடைகளின் சாதாரண தன்மை, தனக்கான பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தமை போன்ற சாதாரண இயல்புத்தன்மை வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது முன்னெடுக்கின்ற மேற்படி செயற்பாடுகளை மறைப்பதற்கான ஒரு போர்வையாக அவர் இத்தன்மையைப் பயன்படுத்துகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் அடுத்ததாக ஏற்கனவே ஜனாதிபதி கூறியது போன்று ஒரு முன்மாதிரியான அரசாங்கத்தை அமைப்பாராக இருந்தால் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். ஆனால் அதைவிடுத்து ஒரு இராணுவ ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு முற்படுவாராயில் அது நாட்டிற்கு உகந்ததல்ல என்பதுடன், சர்வதேசத்தின் மத்தியில் காணப்படும் எமது நாட்டிற்குரிய ஏற்புடைமைத்தன்மையும் இல்லாது போகும்.

https://www.virakesari.lk/article/70223

அதான் சர்வதேச விசாரணை வேண்டும் என்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய் - திஸ்ஸ 

Published by J Anojan on 2019-12-02 16:49:59

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் விசாரணையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

thisa.jpg

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சுவிசர்லாந்து தூதரகத்தில் வீசா பிரிவில் பணிபுரிந்துவந்த பெண்ணை இனந்தெரியாத சிலர் வெள்ளை நிர வாகனத்தில் ஏற்றி அவரை இரண்டு மணித்தியாலங்கள் வரை விசாரித்ததாகவும் அவரின் கையடக்கத்தொலைபேசியை பரிசோதித்துள்ளதாகவும் விசாரிக்கும்போது குறித்த பெண்ணை அச்சுறுதியுள்ளதாவும் சுவிட்சர்லாந்து தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார். 

தூதுவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் முறைப்பாடு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 

இவ்வாறான நிலையில் தூதுவரின் குற்றச்சாட்டு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையோன்றை விடுத்துள்ளது. 

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்தே இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த அறிக்கையிலே சுவிசர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/70230

  • கருத்துக்கள உறவுகள்

இது கோத்தாபய எனும் போர்க்குற்றவாளிக்கெதிராக இயங்கிவந்த பல பொலீஸ் அதிகாரிகளை பழிவாங்கும் செயலின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படவேண்டிய ஒன்று.

சுவிஸ் தூதரகத்திற்குச் சென்று இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகளினால் இவ்வாறான வேண்டுகோள் ஒன்று  விடுக்கப்படுவதன் மூலம் சொல்லப்படும் செய்தி யாதெனில்,

1. எமது நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், நாம் அவர்களைக் கண்கானிப்போம், அவர்களின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்விகேட்போம், அவர்கள் எந்த நிறுவனனத்தில், அல்லது எந்த அதிகாரம் மிக்க் இடத்திலிருந்தாலும் அவர்கள் மீது எமது அதிகாரம் பாயும் என்பது.

2. இரண்டாவது. தூதரகத்தில் வேலை செய்வதால் மட்டுமே எந்தவொரு அதிகாரியினதும் பாதுகாப்பிற்கு அத்தூதரகமோ அல்லது அந்த வெளிநாட்டு அரசோ பாதுகாப்பு வழங்கமுடியாதென்பதும், தமது நாட்டு விடயங்களில் வெளிநாடொன்று தலையிட்டு உள்நாட்டுப் பிரஜை ஒருவரைக் காக்க முடியாதென்பது.

ஒரு முழுதான இனக்கொலையினை அரங்கேற்றி, அப்படி எதுவுமே செய்யவில்லை என்று உலகினை ஏமாற்றிவரும் போர்க்குற்றவாளிகளான கோத்தாபாயவும் அவனது கட்டளையின் கீழ் போர்க்குற்றங்களை செய்துமுடித்த கமால் குணரட்ண எனும் ராணுவப் போர்க்குற்றவாளியும் ஆளும் ஒரு நாட்டில், "இது அவர்களின் வேலையில்லை, வேண்டுமென்றே சோடிக்கப்பட்டதொன்று, இவ்வளவு கெதியில் இப்படியெல்லாம் இறங்கமாட்டார்கள்" என்று நம்மை நாமே ஏமாற்றுவதத்தவிர வேறு வழியும் எமக்கில்லை. 

தூதரகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் அதிகாரி கடத்தப்பட்டதன் முக்கிய நோக்கம் சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்த்துக் கோரியுள்ள நிஷாந்த சில்வா எனும் பொலீஸ் அதிகாரி தப்பிச் சென்றதை விசாரிக்கவும், அவர்போன்று வேறு யார் யாரெல்லாம் தப்பிப் போக விண்ணப்பித்தார்கள் என்பதையும் அறியவே என்பது வெளிப்படை. நிஷாந்த சில்வா தன்னுடன் பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் வேளையில், தமக்கெதிரான ஆவணங்களுடன் வேறு எவரும் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கோத்தாவோ கமாலோ இப்போதைக்கு எதையுமே செய்யமாட்டார்கள் என்று நம்புவது கடிணம். எப்பாடு பட்டாவது தமது குற்றங்கள் வெளித்தெரிவதை தடுக்கவே முற்படுவார்கள். காலம் தாழ்த்தினால், அவர்களது முழு ரகசியங்களும் வெளிவரத் தொடங்கிவிடும், இன்னும் பலர் நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிடுவார்கள்.

சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய் - திஸ்ஸ 

வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் விசாரணையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

 

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சுவிசர்லாந்து தூதரகத்தில் வீசா பிரிவில் பணிபுரிந்துவந்த பெண்ணை இனந்தெரியாத சிலர் வெள்ளை நிர வாகனத்தில் ஏற்றி அவரை இரண்டு மணித்தியாலங்கள் வரை விசாரித்ததாகவும் அவரின் கையடக்கத்தொலைபேசியை பரிசோதித்துள்ளதாகவும் விசாரிக்கும்போது குறித்த பெண்ணை அச்சுறுதியுள்ளதாவும் சுவிட்சர்லாந்து தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார். 

தூதுவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் முறைப்பாடு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 

இவ்வாறான நிலையில் தூதுவரின் குற்றச்சாட்டு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையோன்றை விடுத்துள்ளது. 

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்தே இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த அறிக்கையிலே சுவிசர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/70230

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் – வெளிவிவகார அமைச்சு முக்கிய தகவல்

பாதுகாப்புக்காக குடும்பத்துடன் சுவிஸ் போயிட்டாவோ?

கோத்தா ஆட்சியில் ஒருதொகை இலங்கையர்கள் சுவிசிற்கு புலம்பெயருவார்கள் போலுள்ளது 🙄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

கோத்தா ஆட்சியில் ஒருதொகை இலங்கையர்கள் சுவிசிற்கு புலம்பெயருவார்கள் போலுள்ளது 🙄

இதில் முழுக்க முழுக்க சிங்களவர்களாகவே இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இந்த பெண் குடும்பத்தோடு அசேலம் அடிப்பதற்காக  பொய் சொல்லி இருக்கிறார் என்று ...கோத்தா பதவியேற்ற சூட்டோடு இப்படியான வேலை செய்ய மாட்டார்...எம்பசிக்கு முன்னால் வைத்து கடத்தினால் சுவிஸ் அரசிடமே சீசி டி வி ஆதாரங்கள் இருக்குமே!...உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லா விட்டால் சர்வதேச விசாரணைக்கு கோரலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் நினைக்கிறேன் இந்த பெண் குடும்பத்தோடு அசேலம் அடிப்பதற்காக  பொய் சொல்லி இருக்கிறார் என்று ...கோத்தா பதவியேற்ற சூட்டோடு இப்படியான வேலை செய்ய மாட்டார்...எம்பசிக்கு முன்னால் வைத்து கடத்தினால் சுவிஸ் அரசிடமே சீசி டி வி ஆதாரங்கள் இருக்குமே!...உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லா விட்டால் சர்வதேச விசாரணைக்கு கோரலாம்  

நீங்கள் அவசரபடுகிறீர்கள் ரதி. அரசாங்கமே விசாரணை செய்ததை ஒப்புக்கொள்ளும்போது நீங்கள் ஏன்  கோட்டாபாயவுக்காக கதைக்கிறீர்கள்.  அப்பெண் அகதிக் கோரிக்கைக்காக செய்யவேண்டிய நிலையில் இல்லை.  ஏனென்றால் அவருடைய தகுதிநிலை அவ்வாறு.  

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல் விவகாரம்: தூதரக வாசலில் உண்ணாவிரதம்!

Swiss-embassy-Colombo.jpg
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகம் [படம்: முகநூல்]

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் தொடர்பாக முன்னாள் மாகாணசபை அங்கத்தவரும், இளைப்பாறிய இராணுவ மேஜருமான அஜித் பிரசன்னா தூதரக வாசலில் உண்ணாவிரதமொன்றை ஆறம்பித்துள்ளார்.

கடத்தல் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் காவற்துறைக்கு வாக்குமூலமளிக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த ஊழியரின் மோசமாகும் உடல்நிலை காரணமாக அவர் வாக்குமூலம் அளிக்கமுடியாதுள்ளதாக தூதரகம் கூறியிருக்கிறது.

“சுவிட்சர்லாந்தின் தூதரே, எங்கள் தாய்நாட்டின் நல்ல பெயரைக் கெடுக்காதீர்கள். அந்தப் பெண்ணைச் சிறீலங்கா காவற்துறைக்கு வாக்குமூலமளிக்க அனுமதியுங்கள்” எனும் வாசகங்களைக் கொண்ட பதாகையொன்றைப் பிடித்தபடி பிரசன்னா தனது எதிர்ப்பைத் தூதரக வாசலில் காட்டியபடி நிற்கின்றார்.

அதே வேளை இக் கடத்தல் நடைபெறவேயில்லை எனவும் இது அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கடத்தல் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின்படி கடத்தப்பட்டவரின் கூற்று தவறானது எனவும் அதற்கான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதன்படி குறிப்பிட்ட கடத்தல் நடக்கவேயில்லை எனத் தாங்கள் முடிவெடுத்திருப்பதாகவும் காவற்துறை அதிகாரிகளும், விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளார்கள்.

கடத்தப்பட்ட பெண் ஒரு தமிழர் எனவும் அவர் கடத்தல், தடுத்து வைக்கப்பட்டமை, அவர்க்கு விசா வழங்கப்பட்டமை என்பன தொடர்பாக இன்னுமொருதடவை விசாரணைக்குட்படுத்தப்பட விரும்பவில்லை என அறியப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்கள், கொடுகப்பட்ட சாட்சியம் ஆகியவற்றில் காணப்படும் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு அப் பெண்ணை அதிகாரிகள் இரக்கமில்லாமல் மேலும் துன்புறுத்துவார்கள் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வெளிப்புறக் கமராக் காட்சிகள், ஊபர், தொலைபேசி உரையாடல்கள், செய்மதி நடமாட்டப் பாதைகள் பற்றிய தரவுகள் ஆகியவற்றின் ஆதாரப்படி கடத்தல் பற்றிய குற்றச்சாட்டு தவறானதென முடிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கும்படி கோரிக்கை விடுக்கிறோம்

 

இலங்கை அரசாங்கம்

கடத்தல் தொடர்பாக சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக் விடுத்த அறிக்கை தவறானதெனவும் வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் தம்மிடமுள்ள ஆதாரங்களுக்கும் கடத்தப்பட்ட பெண்ணினது நடமாட்டங்களுக்கும், கொடுக்கப்பட்ட சாட்சியத்துக்குமிடயில் உள்ள முரண்பாடுகளை முன்வைத்துச் சுட்டிக்காட்டினர். GPS, Uber, CCTV, Cellphone கருவிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளை அவர்கள் ஆதாரமாக முன்வைத்தனர் என அறிய முடிகிறது.

இலங்கை அரசாங்கத்தின் உதியோகபூர்வ அறிக்கை

” திங்கள், நவம்பர் 25, 2019 அன்று சுவிஸ் தூதரகத்தின் பணிபுரிந்த உள்நாட்டு ஊழியர் ஒருவர் தொடர்பாக இடம்பெற்ற குற்றச் சம்பவம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் பூரண விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

“இன்று மாலை (1 டிசம்பர் 2019), வெளிவிவகாரச் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் கமால் குணரத்ன மற்றும் சம்பந்தப்பட்ட வேறு சில அதிகாரிகளும் சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹான்ஸ்பேற்றர் மொக் மற்றும் தூதரகத்தின் உதவித் தூதுவரைச் சந்தித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

29 நவம்பர் 2019 அன்று சுவிஸ் தூதரகத்தால் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டவரை விசாரணைக்கு முன்நிறுத்த முடியவில்லை எனினும் சட்ட அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது. சுவிஸ் தூதரகத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர் மீது நடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட அறிக்கைக்கும் பாதிக்கப்பட்டவரது நடமாட்டங்கள் தொடர்பாகப் பெறப்பட்ட சாட்சியங்கள், ஊபர் தரவுகள், வெளிக் கமராக் காணொளி, தொலைபேசி உரையாடல்கள், செய்மதி தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களுடன் உடன்படுவதாகவில்லை.

” சுவிஸ் தூதரகத்துக்கு வழங்கப்பட்ட மறுக்கமுடியாத ஆதாரங்களின் பின்னணியில், இக்குற்றம் தொடர்பான உண்மைகளை நிலைநாட்ட மேலும் விசாரணைகள் அவசியமாகின்றன. அதற்கு பாதிக்கப்பட்டவர் சட்ட அதிகாரிகள் முன் சாட்சியமளிக்க வேண்டிய அவசியம் எழுகிறது. கடத்தலின்போது தான் காயப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் கூறியிருப்பதால், அவரை இலங்கையிலுள்ள சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதிக்க அவரை முன்னிறுத்த வேண்டும்.

இந்தக் கடத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று தூதரகத்துக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

https://marumoli.com/கடத்தல்-விவகாரம்-தூதரக-வ/?fbclid=IwAR1emoceaiYw85jfneLRoS7VjFhCNw-4FzmRx2lJoqTNn64fRMAhvEA9Vag

சிங்களம் 'நடுநிலைமை' சுவிஸ் நாடு மீது 'மென் போர்' தொடுத்துள்ளது. 

சுவிஸில் உள்ள ஐநாவின் மனித உரிமை 30/1 தீர்மானத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே சிங்களம் மன்னிக்கும் போல தெரிகின்றது 🙂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.