Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன்..! விமர்சனங்களுக்கு சுமந்திரன்  பதிலடி..!

MA-Sumanthiran-720x450.jpg

புதிய அரசியலமைப்பை உருவாக்காத நிலையில் பதவி விலகும் நிலையிலேயே இருக்கி றேன். ஆனால் அது என்னுடைய தீர்மானம். அதனை எவரும் என் மீது திணிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்ற தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு விசயம். வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்பிற்குள்ளே ஒவ்வொரு கட்சிகளிலேயும் இருப்பவர்கள் விமர்சிப்பதும் சாதாரண ஐனநாயக சூழலிலே ஏற்படுகிற ஒரு நிலைமை.

ஆகையினாலே அதைக் குறித்து நாங்கள் விசனப்பட்டுக் கொண்டிருக்காமல் அந்தச் சவால்களையும் நாங்கள் சந்தித்து முன்னேற வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவேன் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அதனுடைய வரைபொன்று இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்திலே அவர்கள் அதனைச் செய்வார்களா என்பது சந்தேகம்.

ஆனாலும் சிறிலங்கா பொதுஐன பெரமுன கூட புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம் என்று சொல்யிரக்கின்றார்கள். தேர்தலுக்குப் பிறகும் மகிந்த ராஜபக்ஷ என்னோடு நடாத்திய சந்திப்பிலே இப்பொழுது அதைச் செய்ய முடியாது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதனைச் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றார்.

அவர்கள் சொன்னார்கள் என்று அதை நான் நம்பிக்கை வைத்து பேசவில்லை.ஆனால் புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை

அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவேன். இதேவேளை பதவி விலக வேண்டுமென்று சொல்வது அல்லது அப்படிச் சொல்கிறவர்கள் தாங்கள் அதனாலே ஏதாவது அரசியல் இலாபம் அடையலாம் என்று சிந்திக்கிறார்கள் போல் தென்படுகிறது.

நான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான். ஆகவே பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்.ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பூரணமாக நிறைவேற்றுவேன்

புதிய அரசியலமைப்பு உருவாகுவதற்கான சந்தர்ப்பம் அதற்கான சாத்தியக் கூறு இருக்கிற வரைக்கும் நான் விலக மாட்டேன். ஆனால் எப்போதாவது இனிமேல் அது நடக்காது என்ற ஒரு தீர்மானம் ஏற்படுமாக இருந்தால் நான் நிச்சயமாக பதவி விலகுவேன் என கூறினார்

https://jaffnazone.com/news/14846

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இருக்கிற கடைசி தமிழனையும் வித்து போட்டுத்தான் இவர் பதவி விலகுவார் இருந்து பாருங்கோ .

பின்கதவால வாங்கி பொக்கெற்றுக்குள்ள போட்ட காசு, பொய் பிரட்டுகளைச் சொல்லி பதவிலை ஒட்டி வைச்சிருக்கும் ஆசைய வளர்த்திருக்கு.

மக்கள் விழிப்படையும் வரை சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இப்பிடி தான் பிழைப்பை கொண்டுபோவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லிக் கொண்டே... இருப்பவர்கள், 
ஒருநாளும், பதவி விலக மாட்டார்கள்.:)

குலைக்கிற  **  கடிக்காது. 

சுய தணிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

காலங்காலமாக ஈழத் தமிழர் கட்ச்சிகள் 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான்  நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின்  அடிப்படை.

தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும்.  

சுமந்திரன் போன்ற திறமைசாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும். அதுதான் காலத்தின் கோரிக்கையாகும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை.

அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவேன். 

இதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்ன என்றால் நீங்கள்  புதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் உருவாகாமல் பார்த்துக் கொள்வீர்கள் எனவே உங்கள் பதவியையும் என்றென்றும் தக்க  வைத்துக்கொள்ளலாம்.

3 hours ago, poet said:

தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும்.  

அன்பின் புலவர்,

2009ம் ஆண்டு அவலத்தின் மத்தியில் நானும் புலம்பெயர் நாடுகளில் இருந்தோரும் சேர்ந்து கூட்டமைப்பின் உள்கட்டமைப்பை பலப்படுத்த திடடம் அமைத்து அதை அவர்களுடன் கதைத்து முற்கொண்டு  செல்ல முயன்றோம் . அதில் உள்கட்சி யனநாயக முறைமைகள் மட்டுமல்லாது தமிழரின் பொருளாதாரம், மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம் , மனிதஉரிமை மீறல் ஆவணக்கப்பாகம்  மற்றும் வெளிநாட்டு பொறிமுறை என்று கட்டமைப்புகளை நிறுவி தமிழரின் எதிர்கால இருப்பையும் எங்கள் வளர்ச்சிக்கான  அடுத்தகட்ட நடவடிக்கையையும் 
ஒரு நிறுவன மயப்படுத்தப்படட கூட்டமைப்பின் ஊடக நாம் செய்ய முயன்றோம். அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்கு பற்றிய சிலர் முன்வந்து கூட்டமைப்பு முக்கியஸ்த்தர்களுடன் கலந்துரையாடினார்கள் . ஆனால் எல்லாம் தோல்வியில்  தான் முடிந்தது. 

இதற்கு முக்கியகாரணகள்:

1. தமிழருக்கு தலைமைத்துவம் என்றால் சர்வாதிகாரி போன்று நடக்கவேண்டும் என நினைத்து அந்த பண்புகளையே வெளிக்காட்டி நடப்பார்கள். இதில் சுமந்திரனோ , சம்பந்தனோ, மவையோ அல்லது அன்று ஒட்டிக்கொன்று நின்ற சுரேஷ்யோ அல்லது  இங்கிருக்கின்ற சங்கங்கள், கோவில்களின் தலைமையோ  விதிவிலக்கல்ல.  பலருடைய கருத்துக்களை உள்வாங்கி சிறந்த முடிவை எடுக்கும் தமைத்துவ பண்பு அறவே இல்லாதவர்கள். அதனால் உள்ளக யநாயகம் என்பது சாத்தியப்படும் ஒன்றல்ல 

2. தம்மை சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கி அதில் தம்முடன் உடன்படுவோரையும்,  எதிர்கருத்து வைக்காமல் ஆமாம் போடும் நபர்களையும் (yes men) சுற்றி வைத்துக்ககொண்டிருப்பார்கள். இந்த நபர்கள் தங்கள் இருப்புக்கு ஆபத்துவந்துவிடுமோ என்ற பயத்தில் மட்றவர்கள் நல்ல முன்னெடுப்புகளை செய்தால் அவர்களை எப்படியாவது கலைத்து  விடுவதில் நிபுணர்கள். அதோடு தவறுகளை சுட்டிகாட்டி  அவற்றை நிவிர்த்தி செய்ய உதவ முன்வந்தால் தலைவர்களுக்கு பந்தம் பிடிப்பதிலும் ஏதட்கும் நியாயம் கட்பிப்பதிலும் பின்னிற்கமாட்டார்கள். இது உள்ளக யநாயகம் என்பதை மேலும் பாதிக்கும் ஒன்று. அத்துடன் உதவ வருபவர்களும் எனக்கு இது புளிக்கிறது  என்று ஒடடம்பிடிப்பார்கள் 

3. தம்மிடம் எல்லா விடயங்கள் பற்றியும் பூரண அறிவும் ஆற்றலும் இருப்பதான மமதையுடன் இயங்குவார்கள். அதாவது தாங்கள் சகலகலா வல்லவர்கள் என்ற பாணியில் நடப்பார்கள். இதனால் துறைசார் நிபுணர்கள் (domain experts) தமது நிபுணத்துவத்தை பகிர முன்வந்தால் அவர்களை கணக்கிலெடுப்பதில்லை அல்லது விரைவில் அவர்களுக்கு மனவிரக்தி எற்பட வைத்து அவர்களை  தாங்களாவே விலகவைப்பார்கள். பின்னர் எங்களுக்கு ஒருவரும் உதவ வருகிறார்கள் இல்லை என சொல்லித்திரிவார்கள். அதன் மூலம் தங்கள் தான் ஒரு அமைப்பின் தூண்கள் என்ற மாயை மற்றவர் மத்தியில் உருவாக்கி வெற்றிகொள்வார்கள்.

4. நாம் தோற்றுபோனவர்கள் (perpetual victims) என்ற மனப்பான்மையை கொண்டவர்களயும்  குறுகியகால சிந்தனை (short-term thinking) கொண்டவர்களையும் சுற்றி வைத்துக்கொண்டு தாம் எடுக்கும் செயல்களை நியப்படுத்திக்கொண்டு இருப்பார்கள். அதனால் எதிர்காலத்தை முடிந்தவரை இன்று அனுமானித்து திடடம் தீட்டி அந்த எதிர் காலத்தை எமதாக்கமுடியாமல் குறுகியகால சிந்தனையுடனேயே வாழ்க்கையை ஓடட பழகிக்கொண்டுவிட்டார்கள் 

தமிழ் தேசிய கூட்டமைப்பு, மாகாண சபை, சர்வதேச தமிழ் அபைப்புகள் என்று பலதுடன் வேலை செய்து நான் கண்டுகொண்டது இது தான்.

இவர்களில் நடத்தை பற்றி அன்று MR ராதா சொன்னது மிக சரியானது:

ஊருக்கொரு லீடர் (leader). ஆளுக்கொரு கொள்கை. அவனவனை  சுற்றி பத்து பட்டினி பட்டாளம். நான்சென்ஸ் (nonsense). 

நிறைய இவர்கள் பற்றி எழுதலாம். ஆனால் எனக்கு இது மிகவும் மனத்தாங்கலான விடயம் என்பதால் இப்போதைக்கு இத்துடன் முடிக்கிறேன். எழுத்து பிளைகளுக்கு மன்னிக்கவும்.

Edited by puthalvan

1 hour ago, puthalvan said:

மிக சரியான கருத்து புதல்வன். இந்நிலை இலங்கை சுத‍ந்திரத்திற்கு முன்பே உருவாகிவிட்டது. அதன் பின்னர்  அகிம்ஸை  அதன்பின்ர் வந்தஆயுத போராட்ட காலத்தில்  கூட தொடர்ந்து இன்றும் தொடர்வது வேதனையான உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன்..! விமர்சனங்களுக்கு சுமந்திரன்  பதிலடி..!

சிங்களத்துக்கு இவ்வளவு காலமும் மிண்டு குடுத்து சுவீஸ்,அமெரிக்கா,லண்டன்,அவுஸ் எண்டெல்லாம் போய் அலுவல் பாத்ததெல்லாம் என்ன மாதிரி? போர்க்குற்றங்களை எல்லாம் காலங்கடத்தி மழுங்கடிக்க செய்ததெல்லாம் என்ன மாதிரி?

செய்யிறதையும் செய்து போட்டு இப்ப விலகப்போறாராமெல்லே..😡

11 hours ago, poet said:

சுமந்திரன் போன்ற திறமைசாலிகள்

உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலும் தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பதிலும் சுமந்திரனைவிடத் திறமைசாலிகள் இப்போதைக்கு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.