Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2011-1-696x392.jpg
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என்பது தனக்கு தெரியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில், கோமாரி, ஊரணி பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில்,

தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். கடந்த சனாதிபதித் தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம். மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம், ஓடும் கப்பலிலே பயணிக்க வேண்டும் என மேடைகளில் உரக்கக் கூறினோம். அது பற்றிய தெளிவு அப்போது தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை. சனாதிபதி கோட்டாபயவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விடயம். நாம் வெற்றியின் பங்காளராக இருக்கும் போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசிடம் வாதிடும் சக்தியாக மாற முடியும்.

சஜித் பிரேமதாச அவருடன் இருந்தவர்கள் துவேஷம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தமிழ் மக்களை காடேற்ற முற்பட்டனர். இனவாதம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் இருந்த இடத்திலே தமிழ் தலைமைகளும் இருந்து கொண்டு ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள் என்று இன்னும் எனக்குபுரியவில்லை. இது ஒரு வரலாற்றுப்பிழை. இந்த வரலாற்றுப் பிழைகளை இனிவரும் காலங்களிலும் நாம் விட்டு விடக்கூடாது.

கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துரோகச் செயல். வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், காளி கோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டினேன் என்று திமிராகப் பேசிய முஸ்லிம் தலைவர்கள் இப்போது அடங்கிப் போய் இருக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும்இல்லை.

கடந்த ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சிக்காலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடு. அவரை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தவர்கள் தமிழ் மக்கள். அவர் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. மாறாக துரோகத்தை மாத்திரமே செய்தார். அவரால் ஒரு அரசியல்கைதிகள் கூட வெளியில் விட முடியவில்லை .

இன்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறார். நான் ஏன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிஎன்ற கட்சியை உருவாக்கினேன் என்றால், எனக்கு தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் . ஏனெனில் அது ஒரு ஆணித்தரமான கட்சி அல்ல. அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல. அவர்கள் பதிவு செய்யப் போவதுமில்லை. தமிழரசு கட்சியின் கீழ் தான் ஒன்றாக இருக்கின்றனர். அவர்களின் உடைவை நிமிர்த்த கூடிய கட்சி தேவை என்பதால்தான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கி, தமிழர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள்களோ, அங்கெல்லாம் பயணம்செய்து கட்சியை பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறோம்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வேறு ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும். தேசியக் கட்சியுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் நாம் களம் இறங்குவோமானால் ஒரு ஆசனத்தைகூட பெற முடியாது. ஏனெனில் தேசிய கட்சியில் முஸ்லிம்கள் இடம்பெற்றிருப்பார்கள். தமிழர்களின் வாக்கும் அவர்களுக்கே செல்லும்இதன்னால் அந்த ஆசனம் சென்றடையும் இது ஒரு சனநாயக மரபு. அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும். வெல்ல வைத்து தருவது உங்கள் கடமை. நீங்கள் வெல்ல வைப்பவரை நான் அமைச்சராக்குவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியின் தேவையை விட அம்பாறை மாவட்டத்திற்கு மிகமுக்கியமானது. இந்த பொத்துவில் மண்ணானது கஸ்ட்ரோ, டேவிட், தோமஸ், ரஞ்சன் போன்ற பல தளபதிகளை இந்த போராட்டத்திற்காக பல தந்தது. ரஞ்சன் என்ற மாவீரரும் நானும் ஒரே காலத்தில் பயிற்சியை பெற்றவர்கள். இந்த யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு இருக்கின்றது. அதை பலர் விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லை. ஏனெனில் கருணா அம்மான் போராட்டத்தில் இன்றும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும் வந்திருக்க மாட்டார்கள். அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள். இது எல்லோருக்கும் இழப்புதான் என தெரிவித்தார்.

http://www.pagetamil.com/93929/

ஓவர் தண்ணியடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு .

  • கருத்துக்கள உறவுகள்

போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌

இன்னும் கருணா அம்மான் என அழைப்பது சரிதானா ?? அவரின் உண்மையான பெயரை கொண்டு அழைத்தால் என்ன  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌

சுவாமிக்கு என்ன படைக்கிறீங்கள் ? மான்கறியா ? வெள்ளாடா ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு  மிகவும் கடினமான  காலமாக  இருக்கப்போகிறது

மூழ்கப்போகும் கப்பலில் பயணிக்கக்கூடாது

ஓடும் கப்பலில் பயணிக்கப்பழகணும்  என்பது

மிகவும்  சுயநலமான  சிந்தனை

வரலாற்றில்  தன்னை தன் மண்ணை இழக்க விரும்பாத இனத்துக்கு

இவ்வாறான கூற்றுக்கள் சலனங்களை உண்டு  பண்ணிவிடக்கூடியதே

மூழ்கப்போகும் கப்பல்  தமிழினமாகவும்

ஓடும்  கப்பல் சிங்களமாகவும் காண்பித்து

அதில்  ஏறிய தனது  இன்றைய  வாழ்வையும் செல்வத்தையும்

உதாரணமாக  காட்டினாராயின்....????????

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பெரும்பகிடி கஜன் கிலி  பிடித்தாராம் தமிழதேசியக்கடசி தடம்புரள முக்கிய காரணமே இந்த வக்கத்த  சைக்கிள் கூடடம் .

"கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." 

"அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்." 

இவை பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறியத்தராலம் !

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சுவாமிக்கு என்ன படைக்கிறீங்கள் ? மான்கறியா ? வெள்ளாடா ?

சுவாமிக்கு இப்போதெல்லாம் இந்த மான், வெள்ளாட்டுக் கறிகள் பிடிப்பதில்லை. அவருக்கு மானுடனும், மயிலுடனும் கொஞ்சிக் குலாவுவதுதான் பிடிக்கும். இவைகளுக்கு நான் எங்கே போவேன்.... 😫

kkk-735x400.jpgQuellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு காமடிப் பீசு.

முதல்ல.. உனக்கொரு உருப்படியான கட்சியை வைச்சிருக்கப் பாரு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்காவது கிழக்கு மக்களின் பிரச்சினை கருணா அம்மானுக்கு தெரிய வந்திருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஓரளவுக்காவது கிழக்கு மக்களின் பிரச்சினை கருணா அம்மானுக்கு தெரிய வந்திருக்கிறது 

அதென்ன அம்மான்  ?? 

ஒட்டுமொத்த இனத்தையும் வித்த நா.......கெல்லாம் பெருமையுடனும் உரிமையுடனும் அழைக்கும், கூறும் உறவுமுறை ஒரு கேடா.  ?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அதென்ன அம்மான்  ?? 

ஒட்டுமொத்த இனத்தையும் வித்த நா.......கெல்லாம் பெருமையுடனும் உரிமையுடனும் அழைக்கும், கூறும் உறவுமுறை ஒரு கேடா.  ?

ஹாஹா  நான் இயக்கம் வச்ச பெயரைத்தான் சொன்னன் 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா  நான் இயக்கம் வச்ச பெயரைத்தான் சொன்னன் 😎

இனத்தை காட்டிக் கொடுக்காதவரை அந்தப் பெயர் சரிதான். நானும் அம்மான் என மரியாதையுடனும் உரிமையுடனும் அழைத்துவந்தேன். தலைவர் எள் என்றவுடன் எண்ணையாக நின்றவர். பின்னர் ஒரு பானை சோற்ட்றினுள் விழுந்த ஒரு துளி விடமானார்.

. . . . . .  எல்லாமே போய்விட்டது . . . . . .

. . . . . . . . . . . . 😭😭😭 . . . . .  . . .  

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட இடைவெளியின் பின்னர் வடக்கு பாசிசவாதிகளிடமிருந்து கிழக்கை காப்பாற்றும் உங்கள் பணியை  மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி,

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கடைசிவரை விளங்கவேயில்லை,

இவ்வளவு தியாக மனப்பான்மையோடு கிழக்கை காப்பாற்றும் நீங்கள் சொல்வதை கேட்டு 

ஏன் எப்போ பார்த்தாலும்  எந்த தேர்தல் வந்தாலும்,

 கிழக்கு மக்கள்  நீங்கள்  சொல்லும் கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்?

நன்றி கெட்ட மக்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்.

வடக்கு பிரதேசவாதம் எதுவுமே வேலைக்காகவில்லை என்றதும் 

வடக்கு தமிழர் என்ற ஆயுதத்தை கைவிட்டு இப்போ கிழக்கு முஸ்லீம்களிடமிருந்து மட்டக்களப்பை காப்பாற்றுகிறேன்  என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அதையும் மட்டக்களப்பு அம்பாறை தமிழர்கள் நம்புவார்கள்   என்றா நினைக்கிறீர்கள்?

நீங்கள் இன்று உயிர் வாழ்வதற்கு காரணமே

புலிகளின் தலைமை   மட்டக்களப்பை  மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தபோது 

நீங்கள் அங்கிருந்து கொழும்புக்கு  தப்பியோட உயிரை கொடுத்து உதவி புரிந்தது   முஸ்லீம்கள் என்பது எல்லோரையும்விட

இன்று முஸ்லீம்களால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும்   தென் தமிழீழ மக்களுக்கு எப்போதும் நினைவிலிருக்கும்.

சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இவரெல்லாம் எப்படிடா எங்கள்  இன விதலை போராட்டத்துக்கு ஓர்காலம் ஒரு தளபதியா இருந்தான் என்ற அவர்களின் கோபமே ......

உங்களையோ  அல்லது நீங்கள் சொல்லும் கட்சியையோ  தென் தமிழீழ மக்கள் ஆதரிப்பதேயில்லை.

வடக்கு தமிழர்களைவிட ஒருபடி மேலாக 

தென் தமிழீழ மக்கள்

எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும் மானம் ரோஷத்தை எதுக்காகவும் விட்டு கொடுக்காதவர்கள்.

தனி தமிழ் மாகாணமாக இருந்துகொண்டு  வட தமிழர்கள் சிங்கள தேச சலுகைகளுக்கு மயங்காமல் அவர்களை புறக்கணிப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை.

சிங்களமும்  முஸ்லீம்களும் சுற்றி வளைத்த ஒரு முற்றுகை  சூழலில் வாழ்ந்தாலும், வறுமையின்  பின்னணியிலும் மாவீரர் குடும்பங்களை அதிகமாக கொண்ட ஒரு சோகத்தில் வாழ்ந்தாலும் 

எந்த காலத்திலும்  தனது ஊரவன் சொல்கிறான்  என்பதற்காக  தமிழர் மானத்திற்காய் போரிட்டவர்களை அவர்கள் விட்டு கொடுப்பதேயில்லை.

அதனால்தான் கருணா சொல்பவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிப்பதேயில்லை.

ஆனால் வடக்கு தமிழர்களில் ஒரு பகுதி புலிகள் இருந்த காலத்திலேயும் அரச சலுகைகளுக்காக   டக்ளைசை தெரிவு செய்து கொண்டு இருந்தது.

உங்கள் தலைமையில் ஒரு காலம் இருந்தாலும்,

உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத

ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும்.

அது நீங்கள் சொல்வதை எப்போதுமே கேட்காது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத

ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும்.

அது!

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு  ஒரு கவுரவத்தை கொடுத்த தலைவனை ஏமாற்றி பிச்சைக்கார, நாறின பிழைப்பு நடத்தி பெருமைப்படுகுது. அது அந்த தலைவனை இலகுவாக ஏமாற்றி விட்டதென்றால், அதற்கு காரணம், அந்த அளவுக்கு தலைவர் இந்த ஈனப் பிறவிமேல் வைத்திருந்த அசையாத நம்பிக்கையே தவிர, இவரது திறமை என்று ஒன்றுமில்லை. ஆனால் இவரது வாழ்வில் எவனொருவனுமே எப்போதுமே இவரை நம்பப் போவதுமில்லை.  இவரே உயிரைக் கொடுத்தாலும். துரோகி என்கிற முதல் எழுத்து    இவரது சந்ததியின் பெயரோடு  ஒட்டியே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இனத்தை காட்டிக் கொடுக்காதவரை அந்தப் பெயர் சரிதான். நானும் அம்மான் என மரியாதையுடனும் உரிமையுடனும் அழைத்துவந்தேன். தலைவர் எள் என்றவுடன் எண்ணையாக நின்றவர். பின்னர் ஒரு பானை சோற்ட்றினுள் விழுந்த ஒரு துளி விடமானார்.

. . . . . .  எல்லாமே போய்விட்டது . . . . . .

. . . . . . . . . . . . 😭😭😭 . . . . .  . . .  

அதற்கு அவர் மட்டும் தான் காரணமா ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்கு அவர் மட்டும் தான் காரணமா ??

என்னய்யா உங்கள் பிரச்சனை  ?

முரளீதரன் நல்லவரா கெட்டவரா  ? நீரே கூறும் .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

நீண்ட இடைவெளியின் பின்னர் வடக்கு பாசிசவாதிகளிடமிருந்து கிழக்கை காப்பாற்றும் உங்கள் பணியை  மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி,

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கடைசிவரை விளங்கவேயில்லை,

இவ்வளவு தியாக மனப்பான்மையோடு கிழக்கை காப்பாற்றும் நீங்கள் சொல்வதை கேட்டு 

ஏன் எப்போ பார்த்தாலும்  எந்த தேர்தல் வந்தாலும்,

 கிழக்கு மக்கள்  நீங்கள்  சொல்லும் கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்?

நன்றி கெட்ட மக்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்.

வடக்கு பிரதேசவாதம் எதுவுமே வேலைக்காகவில்லை என்றதும் 

வடக்கு தமிழர் என்ற ஆயுதத்தை கைவிட்டு இப்போ கிழக்கு முஸ்லீம்களிடமிருந்து மட்டக்களப்பை காப்பாற்றுகிறேன்  என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அதையும் மட்டக்களப்பு அம்பாறை தமிழர்கள் நம்புவார்கள்   என்றா நினைக்கிறீர்கள்?

நீங்கள் இன்று உயிர் வாழ்வதற்கு காரணமே

புலிகளின் தலைமை   மட்டக்களப்பை  மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தபோது 

நீங்கள் அங்கிருந்து கொழும்புக்கு  தப்பியோட உயிரை கொடுத்து உதவி புரிந்தது   முஸ்லீம்கள் என்பது எல்லோரையும்விட

இன்று முஸ்லீம்களால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும்   தென் தமிழீழ மக்களுக்கு எப்போதும் நினைவிலிருக்கும்.

சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இவரெல்லாம் எப்படிடா எங்கள்  இன விதலை போராட்டத்துக்கு ஓர்காலம் ஒரு தளபதியா இருந்தான் என்ற அவர்களின் கோபமே ......

உங்களையோ  அல்லது நீங்கள் சொல்லும் கட்சியையோ  தென் தமிழீழ மக்கள் ஆதரிப்பதேயில்லை.

வடக்கு தமிழர்களைவிட ஒருபடி மேலாக 

தென் தமிழீழ மக்கள்

எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும் மானம் ரோஷத்தை எதுக்காகவும் விட்டு கொடுக்காதவர்கள்.

தனி தமிழ் மாகாணமாக இருந்துகொண்டு  வட தமிழர்கள் சிங்கள தேச சலுகைகளுக்கு மயங்காமல் அவர்களை புறக்கணிப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை.

சிங்களமும்  முஸ்லீம்களும் சுற்றி வளைத்த ஒரு முற்றுகை  சூழலில் வாழ்ந்தாலும், வறுமையின்  பின்னணியிலும் மாவீரர் குடும்பங்களை அதிகமாக கொண்ட ஒரு சோகத்தில் வாழ்ந்தாலும் 

எந்த காலத்திலும்  தனது ஊரவன் சொல்கிறான்  என்பதற்காக  தமிழர் மானத்திற்காய் போரிட்டவர்களை அவர்கள் விட்டு கொடுப்பதேயில்லை.

அதனால்தான் கருணா சொல்பவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிப்பதேயில்லை.

ஆனால் வடக்கு தமிழர்களில் ஒரு பகுதி புலிகள் இருந்த காலத்திலேயும் அரச சலுகைகளுக்காக   டக்ளைசை தெரிவு செய்து கொண்டு இருந்தது.

உங்கள் தலைமையில் ஒரு காலம் இருந்தாலும்,

உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத

ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும்.

அது நீங்கள் சொல்வதை எப்போதுமே கேட்காது.

சத்தியமாய் இதை வாசிக்க எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சத்தியமாய் இதை வாசிக்க எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திட்டுது 

கண்ணீர் வரும்  அளவில் நீங்கள் இளகிய மனம் உடையவர் என்கிரீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

என்னய்யா உங்கள் பிரச்சனை  ?

முரளீதரன் நல்லவரா கெட்டவரா  ? நீரே கூறும் .

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

தாங்கள் சொல்லவருவதை தெளிவாகச் சொல்லாமே ....?

ஏன் இந்த இழுவை ????????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 
அக்கோய்...

என்ன பிலோசபி எல்லாம் கதைக்கிறியள்.  என்ன விடயம்  ?

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

உங்களுக்கு முரளீதரனை குறை சொல்வது பிடிக்கவில்லை போலுள்ளது  ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உங்களுக்கு முரளீதரனை குறை சொல்வது பிடிக்கவில்லை போலுள்ளது  ?

முரளிதரனைமட்டும் குறை சொல்வது பிடிக்கல துரோகி என்றால் எல்லாம் துரோகிதான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.