Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Vankalayan said:

மன்னிக்கவும், அவர் அப்படி ஒன்றும் முடடாள் இல்லை. இவருக்கு சில வேளைகளில் இவரின் குணம் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம். கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை. எனவே அவர் அந்த நோக்குடன் அதை செய்திருக்கலாம் அல்லது அவரை அந்த சந்தர்ப்பம் அந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கலாம்.நான் நினைக்கவில்லை அவர் அடி விழுந்ததை பெரிதாக எடுத்திருப்பார் என்று. சில வேளைகளில் அவர் மரிக்கவும் தயாராக இருந்திருப்பர். இந்த கருத்து இங்கே சம்பந்தம் இல்லாவிடடாலும் , அவரை ஒரு முடடாளாக நீங்கள் கருதியதால் எழுதுகிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

உண்மை 

நன்றி...உங்கள் பாதிரிமார்கள் யாரைக் கண்டாலும் மதம் மாத்த வெளிக்கிடுவார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இதற்கு மேலும் இத் திரியில் மினக்கெட ஒன்றுமில்லை 

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Vankalayan said:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும் என்பது  இயேசுவின் போதனை அல்ல என்று, தற்போதைய பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நன்றி...உங்கள் பாதிரிமார்கள் யாரைக் கண்டாலும் மதம் மாத்த வெளிக்கிடுவார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இதற்கு மேலும் இத் திரியில் மினக்கெட ஒன்றுமில்லை 

இதுதான் எம் இனத்தின் உண்மையான குணம். கிடைக்கும் சந்தர்ப்பங்களை பிடித்து தவறுகளை சுட்ட்டிக்காட்டி, ஒற்றுமையாய் போரடுவதை விடுத்து, நமக்கு நாமே குழிபறிக்கும் மிகக் கேவலமான பண்பை நான் வேறெந்த இனத்திலும் காணவில்லை. 

மிகவும் வேதனை தரும் பதிவு. 

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் கூறும்  பலர், கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்று  இன்றும்  இந்துக்களாகவே இருந்து கொண்டே  மதம் மாற்றுகிறார்கள் என்று பழி போடுகிறார்கள்.  இங்கு என்ன விளங்குகிறது என்றால், இவர்கள் கல்வி கற்கும் வரையும் கிறிஸ்தவ  மதம். கற்ற பின்   தம் மதத்தை கடைபிடிக்கும் சந்தர்ப்ப வாதிகள். இல்லையாயின்  மதம் மாற்றுகிறார்கள்  என்கிற கூற்று அபாண்டமானது. யாரையோ திருப்திப் படுத்துவதற்காக, எம்மில் சிறுபான்மையினரை நாமே நசுக்குவதற்காக,  எப்போ பிக்குகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக  வன்முறையான கருத்துக்களை வெளிவிடும்போதும் இங்கு சிலர் அவர்களுக்கு ஆதரவாக கிளம்பிவிடுவார்கள். இவர்களின் கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை.  கடந்து போய்விடவேண்டும். பிக்கு தெரிவில் நின்று ஆடும்போது சிங்களவர் சிலர் சொல்கிறார்களாம்  பிக்குவுக்கு பைத்தியம் பிடித்திருக்கு என்று.  அதற்கு வக்காலத்து வாங்குபவர்களை என்ன சொல்லலாம்? ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று அங்கே ஆசிரியராக பணியாற்றியவர் சைவத்துக்கு பெரும் தொண்டு செய்திருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை, விபுலானந்தர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று தேறி சைவத்துக்கு தொண்டாற்றி இருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை. இவர்களைத்தான் மாற்றுகிறார்களாம். எஜமானருக்காக வாலாட்ட இப்படி ஏதாவது புரளியளை விட்டு விசுவாசம் காட்டுகினமாம். ஒரு அனிஞாயத்தில் குளிர் காய்பவர் மனதில், ஏதோ பிரச்சனை குடையுது என்று அர்த்தம். 

10 hours ago, ரதி said:

நன்றி...உங்கள் பாதிரிமார்கள் யாரைக் கண்டாலும் மதம் மாத்த வெளிக்கிடுவார்கள் என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு இதற்கு மேலும் இத் திரியில் மினக்கெட ஒன்றுமில்லை 

ஒரு தடவை விபசாரத்தில் பிடிபடட ஒரு பெண்ணை யேசுவிடம் கொண்டு வந்து தாங்கள் மத போதனையின்படி இவள் மீது கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று யூதர்கள் கூறினார்கள்.

அப்போது இயேசு அவர்களுக்கு கூறியது உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியலாம் என்று. உடனே அங்கிருந்த எல்லோரும் ஒவொருவராக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடடார்கள். அப்போது இயேசு அந்த பெண்ணிடம் நானும் உனக்கு தண்டனை கொடுக்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விடடார்.

அதே போல கிறிஸ்தவர்களின் கடமை என்னவென்பதை விளக்கமாக எழுதி இருந்தேன். உங்களுக்கு அது கோபத்தை உருவாகிவிட்ட்து. நானும் உங்களை மன்னித்து விடடேன்.

6 hours ago, மாங்குயில் said:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும் என்பது  இயேசுவின் போதனை அல்ல என்று, தற்போதைய பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

ஆய்வாளர்கள் எதை சொல்லவில்லை. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றும், அமீபாவில் இருந்து வந்தான் என்றும் இப்படியாக எல்லாவட்டயும்தான் சொல்கிறான். எனவே எல்லாவட்டயும் எல்லோரும் எழுதலாம். அதை ஆராய்ந்து அறிவது ஒவொருவரையும் பொறுத்தது. 

17 minutes ago, satan said:

குற்றம் கூறும்  பலர், கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்று  இன்றும்  இந்துக்களாகவே இருந்து கொண்டே  மதம் மாற்றுகிறார்கள் என்று பழி போடுகிறார்கள்.  இங்கு என்ன விளங்குகிறது என்றால், இவர்கள் கல்வி கற்கும் வரையும் கிறிஸ்தவ  மதம். கற்ற பின்   தம் மதத்தை கடைபிடிக்கும் சந்தர்ப்ப வாதிகள். இல்லையாயின்  மதம் மாற்றுகிறார்கள்  என்கிற கூற்று அபாண்டமானது. யாரையோ திருப்திப் படுத்துவதற்காக, எம்மில் சிறுபான்மையினரை நாமே நசுக்குவதற்காக,  எப்போ பிக்குகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக  வன்முறையான கருத்துக்களை வெளிவிடும்போதும் இங்கு சிலர் அவர்களுக்கு ஆதரவாக கிளம்பிவிடுவார்கள். இவர்களின் கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை.  கடந்து போய்விடவேண்டும். பிக்கு தெரிவில் நின்று ஆடும்போது சிங்களவர் சிலர் சொல்கிறார்களாம்  பிக்குவுக்கு பைத்தியம் பிடித்திருக்கு என்று.  அதற்கு வக்காலத்து வாங்குபவர்களை என்ன சொல்லலாம்? ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று அங்கே ஆசிரியராக பணியாற்றியவர் சைவத்துக்கு பெரும் தொண்டு செய்திருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை, விபுலானந்தர் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று தேறி சைவத்துக்கு தொண்டாற்றி இருக்கிறார். அவரை மதம் மாற்றவில்லை. இவர்களைத்தான் மாற்றுகிறார்களாம். எஜமானருக்காக வாலாட்ட இப்படி ஏதாவது புரளியளை விட்டு விசுவாசம் காட்டுகினமாம். ஒரு அனிஞாயத்தில் குளிர் காய்பவர் மனதில், ஏதோ பிரச்சனை குடையுது என்று அர்த்தம். 

இன்று தமிழருக்காக (இந்து/கிறிஸ்தவர்கள்) , அவர்கள் உரிமைக்காக பேசுபவர்கள் , பாதுகாப்பவர்கள் கிறிஸ்தவ மதகுருமார் என்பதை அநேகர் மறந்து விடடார்கள்.

பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள். இன்று அநேகர் தமிழ் படிப்பதட்காக பயன்படுத்தும் முக்கியமான ஒரு புத்தகம் பரிசுத்த வேதாகமம். ஆறுமுகநாவலர் அவர்கள் அப்படியாக இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஒருவர் மதம் மாறுவதும், ஏற்றுக்கொள்ளுவதும் ஒவ்வொருவரையும் பொறுத்தது. யாரையும் பலாத்காரமாக கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவதில்லை. இருந்தாலும் சிலருக்கு விளக்க குறைவினிமித்தம் பிழையாக விளங்கிக்கொள்கிறார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

இதுதான் எம் இனத்தின் உண்மையான குணம். கிடைக்கும் சந்தர்ப்பங்களை பிடித்து தவறுகளை சுட்ட்டிக்காட்டி, ஒற்றுமையாய் போரடுவதை விடுத்து, நமக்கு நாமே குழிபறிக்கும் மிகக் கேவலமான பண்பை நான் வேறெந்த இனத்திலும் காணவில்லை. 

மிகவும் வேதனை தரும் பதிவு. 

நாம் ஒற்றுமையாய் போராட இதை விட எவ்வளவோ விடயங்கள் இருக்கு...உண்மையான கண பிரச்சனைகள் இருக்கும் போது உப்புசப்பில்லாத தேவையற்ற பிரச்சனைகளை தூக்கி பிடிப்பதே புலம் பெயர்ந்தவர்களது வழக்கம்...அங்குள்ளவர்களே இதை பெரிசாய் கணக்கில் எடுக்கவில்லை...அந்த போதகருக்கு ஒரு சபை இருக்கு...அந்த திருச்சபையின் கிளைகள் இங்கு தான் இருக்கு...அவர்களே இதை பெரிதாய் எடுக்கவில்லை.....இதை பற்றியே கதைக்கவில்லை ...இது பற்றிய எனது விரிவான விளக்கத்தை ஏற்கனவே எழுதின பிறகும்  விதண்டாவாதம் செய்வது தேவையற்றது ...நீங்கள் உங்கள் பெயரை மாத்தி வந்தாலும் யார் என்று விளங்கின படியால் தான் மரியாதையாக பதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன் 
 
15 hours ago, Vankalayan said:

ஒரு தடவை விபசாரத்தில் பிடிபடட ஒரு பெண்ணை யேசுவிடம் கொண்டு வந்து தாங்கள் மத போதனையின்படி இவள் மீது கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று யூதர்கள் கூறினார்கள்.

அப்போது இயேசு அவர்களுக்கு கூறியது உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியலாம் என்று. உடனே அங்கிருந்த எல்லோரும் ஒவொருவராக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடடார்கள். அப்போது இயேசு அந்த பெண்ணிடம் நானும் உனக்கு தண்டனை கொடுக்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விடடார்.

அதே போல கிறிஸ்தவர்களின் கடமை என்னவென்பதை விளக்கமாக எழுதி இருந்தேன். உங்களுக்கு அது கோபத்தை உருவாகிவிட்ட்து. நானும் உங்களை மன்னித்து விடடேன்.

ஆய்வாளர்கள் எதை சொல்லவில்லை. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றும், அமீபாவில் இருந்து வந்தான் என்றும் இப்படியாக எல்லாவட்டயும்தான் சொல்கிறான். எனவே எல்லாவட்டயும் எல்லோரும் எழுதலாம். அதை ஆராய்ந்து அறிவது ஒவொருவரையும் பொறுத்தது. 

ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் பெயரை மாத்தி ,மாத்தி வரும் நீங்கள் என்னை மன்னிப்பதா ? போய் கர்த்தரிடம் மன்னிப்பை கேளுங்கள் .
மற்றவர்களுக்கு போதிக்க முன் உலகம் முழுவதும் உங்கள் பாதிரிகளால் வன்பணர்வுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளுக்காக போராடுங்கள் ...பிராத்தியுங்கள் ...வந்திட்டார்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க தங்கட அழுக்கை மறைத்து கொண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு செய்தி வெளியாகி கண்டனங்கள்வெளிவந்து கொண்டிருக்கிறது.  தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது. எதிர்ப்புகள் கிளம்பியபோது, பலவிதமான சமாளிப்புகள். காரணம் கேடடவர்கள் இனவாதத்தை தூண்டி, நாட்டின் நில்லிணக்கத்தை குழப்புகிறார்கள் என்றும், சரத்தில் இல்லையென்றும், நாங்கள் அதைப்பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. என்றும் பல சமாளிப்புகள் தங்கள் அதிகாரப்போக்கை செயற்படுத்த ஒருகாரணம். அதை மறைக்க வேறொரு ஏற்றுக்கொள்ள முடியாத சமாளிப்பு.  பலபேர் அப்படிதான் பெயரா முக்கியம்? விடயமே இங்கு கருத்தில் எடுக்க வேண்டியது. உலகத்தைப்பற்றி இங்கு யாரும் விவாதித்ததாக தெரியவில்லை. போராட பல பிரச்சனைகள் இருக்கும்போது உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் என்பது  இவ்வளவு கருத்து எழுதும் போதும் தெரியவில்லை. சந்தர்ப்பவாதம் வெளிவந்தவுடன் உலகக்கவலை, நாட்டுக்கவலை எல்லாம் வருகிறது எம்மவர்க்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும் என்பது  இயேசுவின் போதனை அல்ல என்று, தற்போதைய பைபிள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பைபிள் ஆய்வாளர்கள், இந்துக்களோ, பவுத்தர்களோ, முஸ்லிம்களோ அல்லர்.

ஒரு தடவை விபசாரத்தில் பிடிபடட ஒரு பெண்ணை யேசுவிடம் கொண்டு வந்து தாங்கள் மத போதனையின்படி இவள் மீது கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று யூதர்கள் கூறினார்கள்.

அப்போது இயேசு அவர்களுக்கு கூறியது உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியலாம் என்று. உடனே அங்கிருந்த எல்லோரும் ஒவொருவராக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடடார்கள். அப்போது இயேசு அந்த பெண்ணிடம் நானும் உனக்கு தண்டனை கொடுக்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விடடார்.

இப்படியான ஒரு நிகழ்வும், இயேசு காலத்தில் நடக்கவில்லையென்று, கிறிஸ்தவ  பைபிள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியில் உள்ள நிகழ்வும், அதற்கு யாழில் வந்த பின்னோட்டங்களும்,

மதம் என்பது ஒரு கீழ்தரமான போதை எனும் கால்மார்க்சின் கூற்றை மேலும் ஒரு முறை மெய்பிக்கின்றன.

1. பிக்கு அடித்திருப்பது பெளத்த-அபின். பெளத்தமே உயர்ச்சி எனும் உயர்வு நவிற்சி. ஏனைய மதத்தவர்கள் பெளத்தத்தை அழிக்கப்பாக்கிறார்கள் எனும் ஹலூசினேசன் எல்லாம் பெளத்த-அபின் அடிப்பதால் வரும் மனநோய்கள். இந்த மனநோய் முற்றியவுடன் - பாதிரி மேல் பாய்ந்து விட்டார்.

2. பாதிரி அடித்திருப்பது அல்லலூயா-அபின். இந்த அபின் அடித்தவர்களுக்கு நாம் மட்டுமே நல்வழியில் போகிறோம் ஏனையோர் எல்லாம் பாவிகள், அவர்களை மீட்க எப்படியாவது அல்லலூயா போதனைகளை அவர்களுக்கு சொல்லி விடவேண்டும் என்ற உயர்வு நவிற்சி ஏற்படும். கூடவே எந்த ஆபத்தையும் எதிர் கொண்டும் போதிக்க வேண்டும் என மனம் கிடந்து அலையும் ( அந்தமான் தீவில் அம்பு பட்டுச் செத்த வெள்ளை நினைவுக்கு வரலாம்). இந்த அல்லலூயா-அபின் ஏற்படுத்தும் போதை முற்றினால், இடம், பொருள், ஏவல் அறியாமல் மதம்மாற்ற போதனையை நடத்தும்படி ஆகும்.

3. மேலே காணொளியில் நடப்பது போதை தலைக்கேறிய இரெண்டு மனநோயாளிகளுக்கு இடையேயான முரண். நடக்கும் இடம் 2019 இல், இலங்கை என்பதால் பிக்குவின் கை ஓங்கியுளது. இதுவே 1600 களின் தென் அமேரிக்க என்றால் பிக்குவின் இடத்தில் பாதிரியின் கை ஓங்கி இருக்கும்.

4. சம்பவத்தை கண்ட யாழில் கருத்தெழுதும் சைவ-அபின் பாவனையாளருக்கு, கிறீஸ்தவ பாதிரி அடிவாங்கினார் என்பதே அவர்கள் போதையை அடுத்த லெவலுக்கு எடுத்துப்போய் குதூகலிக்க வைக்கிறது.

5. இதை கண்ட யாழில் கருத்தெழுதும் கிறீஸ்தவ-அபின் பாவனையாளருக்கு அடித்த போதை இன்னும் கோபம், சுய இரக்கம் ஆகிய உணர்வுகளை தூண்டி விடுகிறது.

Religion is the opium of the masses 

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: இந்து சமயமும் அதன் நம்பிக்கைகளும் எவ்வளவு கொடுமையான அடக்குமுறை சாதனங்கள் என பலதடவை நான் யாழில் எழுதியுள்ளேன். 

அதற்கு சற்றும் குறைவில்லாத அடக்குமுறையின் இன்னொரு வடிவமே கிறீஸ்தவம்.

யேசு எனும் ஒரு ஏழ்மையான யூதன் - அந்த காலத்தில் தனக்கு அறிவுக்கெட்டிய நல்வழிகளளை தன்னை சூழ உள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்தார். ஆட்சியாளரின் அடாவடிகளை தட்டி கேட்டார். மவுசு கொஞ்சம் கூட, ஆளை போட்டுத்தள்ளி விட்டார்கள். அவ்வளவுதான் மேட்டர்.

தேவகுமாரன், செத்து, செத்து விளையாடினார், கன்னி வயிற்றில் பிறந்தார் என்பதெல்லாம் - இப்போ பிரபாகரனை, ஆமை ஓட்டை பற்றி சீமான் இட்டு கட்டும் கதைகள் போல பின்னால் வந்தவர்கள் கட்டியது. 

பைபிளின் அதிகாரங்களை யார் எழுதினார்கள், யேசு இறந்த எத்தனை ஆண்டுகளின் பின் அவை எழுதபட்டன என்பதை பார்த்தாலே யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது புரியும்.

யேசுவின் சீடர்களில் ஒருவரான செண்ட் போல் என்பவராலே கிறீஸ்தவம் முதன் முதலாக கட்டமைக்கப்படுகிறது.

கிறீஸ்தவத்தை நிறுவனமயப்படுத்தி, வத்திகானை மையமாக்கியவர்கள் ரோமர்கள்.

 உலக வரலாற்றில் கிறீஸ்தவத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித குல விரோதங்கள் ஏனைய மதங்களுக்கு குறைந்தவை அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற  கால்மாக்ஸ் கூற்றுக்கள், அபின் அடித்தவருக்கு   ஒப்பானது என்று, மதவாதிகள் சொல்கின்றார்கள்.

பைபிளின் அதிகாரங்களை யார் எழுதினார்கள், யேசு இறந்த எத்தனை ஆண்டுகளின் பின் அவை எழுதபட்டன என்பதை பார்த்தாலே யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது புரியும்.  -  Goshan

யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.   இதுதான் உண்மை.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ரதி.

உங்கள் கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை.

1) நான் பெயரை மாற்றி வரும் அளவிற்கு இங்கு யாருடனும் குறிப்பிட்டு சொல்லும் அளவில் கருத்து முரண்பாடு ஏற்படவில்லை.

(வேறு பயரில் வருகிறேன் என்பது உண்மையே. பெயரை கூறுங்கள் பார்க்கலாம், முடிந்தால்😀)

2) என்னையும் சேர்த்துதான் எம் இனம் எனக்குறிப்பிட்டிருந்தேன். தனியே உங்களை சுட்டவில்லை. காயம் ஏற்படுத்தியிருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

3) மரியாதைக் குறைவாக நீங்கள் எழுதியிருப்பினும் நான் அவ்வாறு பதிலளித்திருக்கப்  போவதில்லை. மரியாதைக்குரைவாக எழுதாததற்கு நன்றிகள்.

4) பாதிரிகளைப் பற்றி என்னிடம் கூருவதால் பயனில்லை. ஏனென்றால் நான் கோவிலுக்குப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குயில்,

அப்படி மதவாதிகள் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் மாக்ஸ்-அபின் பாவனையாளரும் இல்லை.

மாக்ஸ் என்ற ஒரு லண்டனில் வாழ்ந்த ஜேர்மானியன் சொன்ன தத்துவத்தை, நிறுவனமயப்படுத்தி, மார்க்சை வழிபாட்டுக்குரியோனாக்கி, சீனாவிலும், ரஸ்யாவிலும், கம்போடியாவிலும் எவ்வாறான மனிதகுல விரோத முன்னெடுப்புகள் நடந்தன என்பதையும் நான் அறிந்தே உள்ளதால் - எனக்கு மாக்ஸ் போதையும்மில்லை.

அதற்க்காக மாக்ஸ் சொன்ன ஒரு விடயம் உண்மையாகும் போது அதை மறுதலிக்க வேண்டியதில்லை.

10 hours ago, ரதி said:

நாம் ஒற்றுமையாய் போராட இதை விட எவ்வளவோ விடயங்கள் இருக்கு...உண்மையான கண பிரச்சனைகள் இருக்கும் போது உப்புசப்பில்லாத தேவையற்ற பிரச்சனைகளை தூக்கி பிடிப்பதே புலம் பெயர்ந்தவர்களது வழக்கம்...அங்குள்ளவர்களே இதை பெரிசாய் கணக்கில் எடுக்கவில்லை...அந்த போதகருக்கு ஒரு சபை இருக்கு...அந்த திருச்சபையின் கிளைகள் இங்கு தான் இருக்கு...அவர்களே இதை பெரிதாய் எடுக்கவில்லை.....இதை பற்றியே கதைக்கவில்லை ...இது பற்றிய எனது விரிவான விளக்கத்தை ஏற்கனவே எழுதின பிறகும்  விதண்டாவாதம் செய்வது தேவையற்றது ...நீங்கள் உங்கள் பெயரை மாத்தி வந்தாலும் யார் என்று விளங்கின படியால் தான் மரியாதையாக பதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன் 
 
ஒரு பெயரில் வர தைரியம் இல்லாமல் பெயரை மாத்தி ,மாத்தி வரும் நீங்கள் என்னை மன்னிப்பதா ? போய் கர்த்தரிடம் மன்னிப்பை கேளுங்கள் .
மற்றவர்களுக்கு போதிக்க முன் உலகம் முழுவதும் உங்கள் பாதிரிகளால் வன்பணர்வுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளுக்காக போராடுங்கள் ...பிராத்தியுங்கள் ...வந்திட்டார்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க தங்கட அழுக்கை மறைத்து கொண்டு 

அம்மணி நாங்கள் ஒன்றும் கைலாச சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் இல்லை. இங்கு எல்லோருமே புனை பெயரில்தான் எழுதுகிறார்கள் உங்களை போன்ற படித்த சிலரை விட. உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. மன்னிக்கவும் நித்தியானந்தா ஆசீர்வதிப்பாராக.

  • கருத்துக்கள உறவுகள்

வாட்சப்பில் எனக்குவந்த ஒரு செய்தி:-

✝ ஏசு
உங்களுக்காக
மரித்தார்..

பின்பு
மூன்றாம் நாள்
உயிர்
தெழுந்தார்னு
சொன்ன
வரைக்கும்
பேசாமதான்
இருந்தார்
அந்த
புத்தபிக்கு..
*~m*
நீங்க கும்புடறது
கடவுள் இல்லை
கடவுளுக்கு
எதிரான
*சாத்தானு*
சொன்னபோது

சப்பனு
ஒரு *அறை*

*காது ஜவ்வு*
கிழிஞ்சிடுத்து..
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

அம்மணி நாங்கள் ஒன்றும் கைலாச சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் இல்லை. இங்கு எல்லோருமே புனை பெயரில்தான் எழுதுகிறார்கள் உங்களை போன்ற படித்த சிலரை விட. உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. மன்னிக்கவும் நித்தியானந்தா ஆசீர்வதிப்பாராக.

ஜெய் நித்தியானந்தம்.

நாளும் சத்சங்கம் கேளுங்கள். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நீங்க கும்புடறது
கடவுள் இல்லை
கடவுளுக்கு
எதிரான
*சாத்தானு*
சொன்னபோது

சப்பனு
ஒரு *அறை*

*காது ஜவ்வு*
கிழிஞ்சிடுத்து..
 
பிக்குவுக்கும் போதகருக்கும் வாழ்த்துகள்.

அவர்கள் தமது சேவையையும் அடிதடியையும் மேலும் அதிகரித்து பலுகிப் பெருக்க வாழ்த்துகள். 

மதம் இல்லாமல் குழப்பம் இல்லை.

குழப்பம் வராமல் விளக்கம் வராது.

விளக்கம் வராமல் தெளிவு பிறக்காது.

தெளிவு பிறந்தால் அமைதி நிலவும்.

அமைதி நிலவ மகிழ்ச்சி பரவும்.

ஆகவே, பிக்குவும் போதகரும் தாங்கள் ஒருவரை ஒருவர்அடித்துக் கொண்டு மக்களுக்கு மகிழ்ச்சி பரவ வழி அமைத்து தருவதற்கு பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கற்பகதரு said:

ஜெய் நித்தியானந்தம்.

நாளும் சத்சங்கம் கேளுங்கள். :100_pray:

3 hours ago, Vankalayan said:

அம்மணி நாங்கள் ஒன்றும் கைலாச சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் இல்லை. இங்கு எல்லோருமே புனை பெயரில்தான் எழுதுகிறார்கள் உங்களை போன்ற படித்த சிலரை விட. உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. மன்னிக்கவும் நித்தியானந்தா ஆசீர்வதிப்பாராக.

எப்படி நித்தியாநந்தா சூரியனை நிப்பாட்டியதாக சொல்லுவதை நம்புபவர்களை பார்க்க உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ,

அதேபோலத்தாம் நீங்கள்,

கன்னிப் பெண் கருத்தரித்ததாக நம்புவதும்.

கடல் மேல் பொடிநடை போட்டதாக நம்புவதும்.

கொஞ்சம் ரொட்டியையும் மீனையும் வைத்து ஒரு கூட்டத்தின் பசியை ஆற்றியதாக நம்புவதும் -

மற்றையவர்களுக்கு கேலியாக இருக்கிறது.

ஒன்றை நம்பி பிரார்த்திக்கும் உங்களுக்கு அதே போல இன்னொன்றை கேலி செய்யும் தார்மீக உரிமை இல்லை.

“கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராகவுக்கும்“, “ஜெய்நித்யானந்ததுக்கும்” ஒரு வித்யாசமும் இல்லை.

எங்கள் ஞானகுரு வடிவேலு சொன்ன மேட்டர்தான்.

” அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சோஸ், தனக்கு வந்தா ரத்தம்”.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2020 at 1:12 AM, Vankalayan said:

கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை

அதுபோல் கிறிஸ்தவர்களுக்கு இலங்கை எனும்   பெளத்த நட்டின் சட்டம்பற்றி போதிக்கும் கடமை அம்பிட்டிய சுமண தேரருக்கும் இருந்திருக்குமா? அதனால்தான் அந்த அடியா?

On 1/2/2020 at 1:12 AM, Vankalayan said:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

அப்படியென்றால் ,

அமெரிக்க இரட்டை கோபுரங்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்தபோது,

இன்னும் இதுபோல இரண்டு இரட்டை கோபுரங்களை எங்கள் நாட்டில்  தகர்த்து எறியுங்கள்  என்று அவர்களுக்கு மறு கன்னத்தை காட்டாமல்..

ஆப்கானிஸ்தான் நோக்கி படையெடுத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள்மீது..

அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு போர் தொடுத்தது ஏன் ஐயா?

இயேசுவின் போதனைகளை ஏன் அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு மதிக்கவில்லை?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

பிக்கு பாதருக்கு அறைந்த விஷயத்தில் ஒன்று சொல்லவேண்டும்...

மதபோதகர் என்பது வேறு...

மதகுரு என்பது வேறு...

என்னோட மதத்தை நீ ஏற்றுகொள் என்று பிரச்சாரம் செய்பவர்  மதபோதகர்..

எல்லோர் மததிலும் உள்ளதுபோலவே ஒவ்வொருவர் மததிலும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது   மதகுரு...

மதம் என்பது ஒன்றும் விற்பனை பொருளல்ல..

அதனை விற்பனை செய்ய முயற்சிப்பவர்களே மதபோதகர்கள்...

இவர்கள் எவனிடமும் அடிவாங்க தகுதியுள்ளவர்களே.

கிறிஸ்தவம் என்பது ..

இந்துமதம் போலவே 

எம் தமிழீழ தேசத்தின் மிக புனிதமான மதம்..

அதனை விற்பனை பொருளாக்குபவன் எவன் வேண்டுமானாலும் எவரிடமும் அடிவாங்கலாம் நாம் கண்டுக்கமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, valavan said:

அதுபோல் கிறிஸ்தவர்களுக்கு இலங்கை எனும்   பெளத்த நட்டின் சட்டம்பற்றி போதிக்கும் கடமை அம்பிட்டிய சுமண தேரருக்கும் இருந்திருக்குமா? அதனால்தான் அந்த அடியா?

அப்படியென்றால் ,

அமெரிக்க இரட்டை கோபுரங்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தகர்த்தபோது,

இன்னும் இதுபோல இரண்டு இரட்டை கோபுரங்களை எங்கள் நாட்டில்  தகர்த்து எறியுங்கள்  என்று அவர்களுக்கு மறு கன்னத்தை காட்டாமல்..

ஆப்கானிஸ்தான் நோக்கி படையெடுத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள்மீது..

அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு போர் தொடுத்தது ஏன் ஐயா?

இயேசுவின் போதனைகளை ஏன் அமெரிக்கா எனும் கிறிஸ்தவநாடு மதிக்கவில்லை?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

பிக்கு பாதருக்கு அறைந்த விஷயத்தில் ஒன்று சொல்லவேண்டும்...

மதபோதகர் என்பது வேறு...

மதகுரு என்பது வேறு...

என்னோட மதத்தை நீ ஏற்றுகொள் என்று பிரச்சாரம் செய்பவர்  மதபோதகர்..

எல்லோர் மததிலும் உள்ளதுபோலவே ஒவ்வொருவர் மததிலும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது   மதகுரு...

மதம் என்பது ஒன்றும் விற்பனை பொருளல்ல..

அதனை விற்பனை செய்ய முயற்சிப்பவர்களே மதபோதகர்கள்...

இவர்கள் எவனிடமும் அடிவாங்க தகுதியுள்ளவர்களே.

கிறிஸ்தவம் என்பது ..

இந்துமதம் போலவே 

எம் தமிழீழ தேசத்தின் மிக புனிதமான மதம்..

அதனை விற்பனை பொருளாக்குபவன் எவன் வேண்டுமானாலும் எவரிடமும் அடிவாங்கலாம் நாம் கண்டுக்கமாட்டோம்.

தமிழீழத்தில் மதப் பிரச்சாரங்கள் செய்வதற்கு  தடையுண்டா அல்லது மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி உண்டென்றால் அதற்கான வரையரைகள் என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

பிகு: இந்து சமயமும் அதன் நம்பிக்கைகளும் எவ்வளவு கொடுமையான அடக்குமுறை சாதனங்கள் என பலதடவை நான் யாழில் எழுதியுள்ளேன். 

அதற்கு சற்றும் குறைவில்லாத அடக்குமுறையின் இன்னொரு வடிவமே கிறீஸ்தவம்.

யேசு எனும் ஒரு ஏழ்மையான யூதன் - அந்த காலத்தில் தனக்கு அறிவுக்கெட்டிய நல்வழிகளளை தன்னை சூழ உள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்தார். ஆட்சியாளரின் அடாவடிகளை தட்டி கேட்டார். மவுசு கொஞ்சம் கூட, ஆளை போட்டுத்தள்ளி விட்டார்கள். அவ்வளவுதான் மேட்டர்.

தேவகுமாரன், செத்து, செத்து விளையாடினார், கன்னி வயிற்றில் பிறந்தார் என்பதெல்லாம் - இப்போ பிரபாகரனை, ஆமை ஓட்டை பற்றி சீமான் இட்டு கட்டும் கதைகள் போல பின்னால் வந்தவர்கள் கட்டியது. 

பைபிளின் அதிகாரங்களை யார் எழுதினார்கள், யேசு இறந்த எத்தனை ஆண்டுகளின் பின் அவை எழுதபட்டன என்பதை பார்த்தாலே யேசுவுக்கும் பைபிளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது புரியும்.

யேசுவின் சீடர்களில் ஒருவரான செண்ட் போல் என்பவராலே கிறீஸ்தவம் முதன் முதலாக கட்டமைக்கப்படுகிறது.

கிறீஸ்தவத்தை நிறுவனமயப்படுத்தி, வத்திகானை மையமாக்கியவர்கள் ரோமர்கள்.

 உலக வரலாற்றில் கிறீஸ்தவத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித குல விரோதங்கள் ஏனைய மதங்களுக்கு குறைந்தவை அல்ல.

நல்ல ஒரு விளக்கம்😎

49 minutes ago, valavan said:

கிறிஸ்தவம் என்பது ..

இந்துமதம் போலவே 

எம் தமிழீழ தேசத்தின் மிக புனிதமான மதம்..

மதங்களில் எதுவுமே புனித மதம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

இந்த காணொளியில் உள்ள நிகழ்வும், அதற்கு யாழில் வந்த பின்னோட்டங்களும்,

மதம் என்பது ஒரு கீழ்தரமான போதை எனும் கால்மார்க்சின் கூற்றை மேலும் ஒரு முறை மெய்பிக்கின்றன.

12 hours ago, goshan_che said:

அதற்க்காக மாக்ஸ் சொன்ன ஒரு விடயம் உண்மையாகும் போது அதை மறுதலிக்க வேண்டியதில்லை.

கால்மாக்ஸ் என்பவரின் கூற்றில் என்ன உண்மை பொதிந்திருக்கிறது?

மதம், ஒரு கீழ்த்தரமான போதை, என்பது உண்மைச் செய்தியா?

கால்மாக்ஸ், மதங்களின் உண்மைத் தன்மைகளை அறியாமல், அவை கீழ்த்தரமான போதை என்று வர்ணித்திருக்கிறார்.

அதனால், கால்மாக்ஸ் தத்துவங்கள், அபின் அடித்தவரால் சொல்லப்பட்டவை என்று மதவாதிகள் சொல்வதில் எந்தத் தப்பும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

கன்னிப் பெண் கருத்தரித்ததாக நம்புவதும்.

கன்னிப் பெண் கருத்தரிப்பதில்லையா?

நாம் எல்லாரும், பெரும்பாலானவர்கள், கன்னிப் பெண்ணின் மூலம்தானே பிறந்திருக்கிறோம்.

இயேசுவைப் பெற்றெடுத்த மேரி, மாத்திரம் கன்னிப் பெண் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மாங்குயில் said:

1. மாக்சின் கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை:

மதாபிமானம் எனும் உணர்வு போதைவஸ்து போலானாது - அது தலைக்கேறினால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த பிக்குவே, அவரை தடுக்காமல் அருகே நின்று வேடிக்கை பார்க்கும் மக்களே சாட்சி.

சாதாரணமாக ஒருவர் ஒருவரை அறைந்தால், என்ன ஏதென்று சூழ நிக்கும் மக்கள் விசாரிப்பார்கள். தடுப்பார்கள். 

ஆனால் இங்கே எல்லாருக்கும் மதப் போதை மிகுந்தபடியால் வேடிக்கை பார்கிறார்கள்.

இந்த நிகழ்வு மாக்சின் கூற்றை நிறுவியே உள்ளது.

அதென்ன மதங்களின் உண்மைதன்மை? வேதங்களில், குரானில் சொல்லப்பட்டவை எல்லாம் மதங்கள் சொல்பவைதானே?

உண்மையிலேயே அடிப்படைவாதிகள்தான் மதங்களை உண்மையாக பின்பற்றுகிறார்கள்.

2. கன்னிப் பெண் பிள்ளை பெறுவதில்லை. உடலுறவில் கன்னிமை கழிந்து, அதன் பின் பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்து, கருப்பையில் இருக்கும் முட்டையை சூழ் கொண்டு - கருவாகி அண்ணளவாக 10 மாதத்தில் பிள்ளை பிறக்கும்.

நம்மில் பெரும்பாலானோர் கல்யாணம் வரை கன்னியாக இருந்து, கல்யாணத்தின் பின் கன்னியாக இல்லாமல் ஆகிய பெண் மூலமே பிறந்தோம்.

யேசு அப்படி இல்லை. அவர் மேரி வயிற்றில் கருவாகும் போது, மேரி ஒரு கன்னி என்று சொல்லபடுகிறது.

அதனால்தான் மேரி Virgin Mary. 
அதனால்தான் யேசுவின் பிறப்பு divine birth.

18 minutes ago, மாங்குயில் said:

கன்னிப் பெண் கருத்தரிப்பதில்லையா?

நாம் எல்லாரும், பெரும்பாலானவர்கள், கன்னிப் பெண்ணின் மூலம்தானே பிறந்திருக்கிறோம்.

இயேசுவைப் பெற்றெடுத்த மேரி, மாத்திரம் கன்னிப் பெண் கிடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.