Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி :

இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..!

 

Picture1.jpg

1449927179.bb1108d8196143c1aeac9e90dbe8c2e9.gif

ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்..

புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்..

'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..!

தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்..

மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை..

ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று..

எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும்..அதுவும் நினைத்த கல்லூரியில்..! நம்பிக்கை வந்தது.

 

குக்கிராமத்திலிருக்கும் ஒரேயொரு கடையில் கிடைக்கும் செய்திதாள்களில், 'எப்பொழுது கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளிவரு'மென தினந்தோறும் துருவித் துருவித் தேடல்கள்..!

அறிவிப்பும் வந்தது.. ஐயாவிடம் பணத்தை வாங்கி கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன்..

"ராசா, நீ பக்கத்திலிருக்கும் மதுரையிலேயே படிப்பா..!" என தாயின் வேண்டுகோள்..

நேர்முகத்தேர்வுகளும் வந்தன..

குக்கிராமத்தை விட்டு வெளிவராத எனக்கு திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் செழிப்பையும், பச்சைபசேலென வயல்வெளிகளையும் காண வாய்ப்பும் கிட்டியது.. நான் ரெயிலில் அதிக தூரம் பயணித்ததும் அப்பொழுதுதான்.

"இவ்வருட பொறியியல் படிப்பிற்கான நேர்முகத்தேர்வில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்..இந்த தேதிக்குள் ரூபாய் மூவாயிரத்து சொச்சம் கல்லூரிக்கும், விடுதிக்கும் கட்டவும், இன்னபிற சான்றிதழ்களோடு கல்லூரிக்கு சேர வரவேண்டும்.." என பதிவுத் தபாலில் கடிதம் வந்தது..

ஒரே மகிழ்ச்சி.. தெருவெல்லாம் கூடிவிட்டது.. 'நம்மூர் பையனுக்கு எஞ்சினியர் படிக்க அனுமதி கிடைத்துவிட்டது' என ஆரவாரம்..

 

விடுமுறை முடிந்து, மறுநாள் கல்லூரி திறக்கும் நாள்..!

எனது ஐயா கூப்பிட்டு "இதோ பாருப்பா.. ஊருக்குள்ளேயே எங்கள் காலை சுத்திசுத்தியே வளர்ந்துட்டே.. ஒனக்கு வெளி உலகம் தெரிய வேணும்.. இனிமேல் நீதான் தனியா இருக்க பழகோணும்..அதனால நீ தனியா ரயிலேறி போய் கல்லூரியில் சேர்ந்துகொள்.." என கண்டிப்புடன் கூறிவிட்டு பணம் கொடுத்து அனுப்பினார்.

அம்மா கண்ணீரோடு பலகார, பதார்த்த மூட்டை முடிச்சுகளுடன் விடைகொடுத்து அனுப்ப, கல்லூரிக்கு செல்ல மதியம் ஒரு மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தேன்..

கிராமத்திலிருக்கும்போது வேட்டியுடன் இருந்து பழகிவிட்டதால் அன்று ரெயிலேறுவதற்கும் வேட்டியுடன் தான் நின்றிருந்தேன்..எனது ரெயில் வரவிருக்கும் நேரம் மதியம் 02:30.

மிட்டாய் கடையை பார்ப்பதுபோல் நடைமேடையிலிருக்கும் பல்வேறு அறிவிப்பு பலகைகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.. நேரம் செல்ல செல்ல ரெயிலேறுவதற்கு பலரும் கூடிவிட்டனர்.

 

தஞ்சை மாவட்டம் எனக்கும் முற்றிலும் புதிது என்பதால், அருகில் நின்றிருந்த ஒரு இளவயது அன்பரிடம் "ஏங்க, இந்த ரெயில் எத்தனை மணிக்கு ஊர் போய் சேரும்..?" என தயக்கத்துடன் விசாரித்தேன்..

அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, "நடுச்சாமம் ஆகிவிடும்..என்ன விசயமா அந்த ஊருக்கு நீங்க போறீங்க..?" என வினவினார். அப்பொழுது அவருடன் இன்னொரு நண்பரும் இணைந்து கொண்டார்.

நான் தயக்கத்துடன், "எனக்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர அனுமதி கிடைச்சிருக்கு.. நாளைக்கு முதல்நாள் காலேஜ்.. அதுதான் போறேன்.." என்றேன்..

உடனே இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே, "நாங்களும் அந்த ஊருக்குதான் போறோம்.. நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்..? அப்பா என்ன தொழில் செய்கிறார்..?" என அன்பாக விசாரிதனர்.

நானும் "பக்கத்திலிருக்கும் ஊர்தான்.. என் ஐயா ஒரு விவசாயி.." பதிலளித்தேன்.

"ஒங்க அப்பா பேரு..?" எனக் கேட்டனர்.  vil2_secoue.gif

நான், 'இவர்கள் ஏன் இப்படி துருவுகிறார்கள்..?' என துணுக்குற்றாலும், 'சரி ஊரு வரை போய் சேர பேச்சு துணைக்கு உதவியாக இருக்கு'மென நினைத்து

"என் ஐயா பேரு ........." என சொன்னேன்.

உடனே புதிதாக உடன்சேர்ந்த அந்த அன்பர் "ஏம்பா, ஒன்னை கஸ்டப்பட்டு வளர்த்து, பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டிருக்காரே, அவரின் பேருக்கு முன்னால Mr. என குறிப்பிட்டு மரியாதையா சொல்ல மாட்டியா..? வேட்டியெல்லம் கட்டிட்டு வந்திருக்கே.. ஒனக்கு முன்னாடியே விசயமெல்லாம் தெரியுமா..? எங்களோட தானே ரெயிலில் வரப்போறே, ஒனக்கு இருக்கு கச்சேரி.." என்றார்.

நான் விக்கித்து அதிர்ந்து போனேன்..

ரெயிலும் வந்துவிட்டது.. எனக்கு பிடித்தது சனி..  vil-effraye.gif

 

(தொடரும்..)

Edited by ராசவன்னியன்
எழுத்துபிழை சரி செய்ய..

  • Replies 63
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அசத்துகிறதே அண்ணா.தொடருங்கள் வாசிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, ராசவன்னியன் said:

"ஏம்பா, ஒன்னை கஸ்டப்பட்டு வளர்த்து பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டிருக்காரே, அவரின் பேருக்கு முன்னால Mr. என குறிப்பிட்டு மரியாதையா சொல்ல மாட்டியா..? வேட்டியெல்லம் கட்டிட்டிட்டு வந்திருக்கே.. ஒனக்கு முன்னாடியே விசயமெல்லாம் தெரியுமா..? எங்களோட தானே ரெயிலில் வரப்போறே, ஒனக்கு இருக்கு கச்சேரி.."

ராக்கிங் ரெயிலுக்கையே ஆரம்பிச்சிட்டுது போல.....😎
 

வெள்ளை வேட்டி வேற.....😂

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது கதை  mr . வன்னியன். நாங்களும் எங்கள் தந்தையாரை ஐயா என்றுதான் அழைப்போம்.பின்னாளில் பிள்ளைகள் எல்லாம் அப்பா என்றுதான் அழைக்கிறார்கள்.தொடருங்கள் mr. வன்னியன்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்... ராகிங்கும், அதற்கு கொடுத்த பின்புல கதைகளும், வாசிக்க சுவையாக உள்ளன. :)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..!

சென்ற ஆண்டுகளை வீணாகத் தவற விட்டு விட்டீர்கள்.

ஈழத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் உங்கள் நினைவை மீட்ட வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். 

ஆரம்பமே சிறப்பு. அசத்துங்கள் ராசவன்னியரே👍🏾

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதி ஊக்குவித்த சுமேரியர், கு.சா, சுவி, தமிழ் சிறி, கவி அருணாசலம் மற்றும் பச்சைகள் வழங்கிய ஏராளன், மல்லிகை வாசம் அனைவருக்கும் மிக்க நன்றிகள் உரித்தாகுக.  vil-fleurs4.gif

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ராக்கிங் ரெயிலுக்கையே ஆரம்பிச்சிட்டுது போல.....😎
வெள்ளை வேட்டி வேற.....😂

பெரும்பாலும் ரெயிலில் ராகிங் நடப்பதில்லை, ஏனெனில் இம்மாதிரி அனைத்து வருட மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கல்லூரியை திறக்க மாட்டார்கள். இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டுவரை முதலில் கல்லூரி வகுப்புகளை ஆரம்பித்துவிட்டு, ஒருமாதம் கழித்துதான் முதலாமாண்டு மாணவர்களுக்கு திறப்பார்கள்.

என்னுடைய நேரம், கல்லூரி ஸ்ட்ரைக்கினால் மூடபட்டுவிட்டு, அன்றுதான் எல்லா வருட மாணவர்களுக்கும் ஒரே தேதியில் திறந்தார்கள். vil-triste2.gif

பல்வேறு பகுதியிலிருந்த ரெயிலில் வந்த அனைத்து முதலாமாண்டு மாணவர்களுக்கும் அன்று தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்ததும் ரெயிலில் ராகிங் ஆரம்பித்துவிட்டார்கள் உடன்வந்த சீனியர் மாணவர்கள்..!

8 hours ago, suvy said:

நன்றாக இருக்கின்றது கதை  mr . வன்னியன். நாங்களும் எங்கள் தந்தையாரை ஐயா என்றுதான் அழைப்போம்.பின்னாளில் பிள்ளைகள் எல்லாம் அப்பா என்றுதான் அழைக்கிறார்கள்.தொடருங்கள் mr. வன்னியன்......!  👍

நன்றி சுவி..

இன்னமும் கிராமங்களில் 'ஐயா' என்றுதான் தந்தையை அழைக்கிறார்கள். படித்த, நகரங்களில் வாழும் மக்களிடையே தான் இந்த 'அப்பா' என அழைக்கும் வழக்கம் எல்லாம்..!

2 hours ago, Kavi arunasalam said:

...ஈழத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் உங்கள் நினைவை மீட்ட வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆரம்பமே சிறப்பு.

அசத்துங்கள் ராசவன்னியரே👍🏾

நன்றி கவி..

நீங்கள் சொல்வது உண்மைதான்.. எனக்கு சுவாரசியமாக எழுதும் ஆற்றல் இல்லையென்றாலும் ஈழத்தில் சமீபத்தில் நடந்த சம்பவமே என்னை யாழில் எழுதத் தூண்டியது.

45 வருடங்கள் ஓடிவிட்டன..

நினைவிலிருக்கும் சில ராகிங் சம்பவங்களை, ஆபாசத்தை தவிர்த்து எழுதும் எண்ணமிருக்கிறது. ஏனெனில் சில வதைகள், அருவருப்பாகவும், கொடுமையாகவும் இருந்ததில் அவ்வயதில் அழுதிருக்கிறேன்.. vil-pleurs.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

எனது ஐயா கூப்பிட்டு "இதோ பாருப்பா.. ஊருக்குள்ளேயே எங்கள் காலை சுத்திசுத்தியே வளர்ந்துட்டே.. ஒனக்கு வெளி உலகம் தெரிய வேணும்.. இனிமேல் நீதான் தனியா இருக்க பழகோணும்..அதனால நீ தனியா ரயிலேறி போய் கல்லூரியில் சேர்ந்துகொள்.." என கண்டிப்புடன் கூறிவிட்டு பணம் கொடுத்து அனுப்பினார்.

அம்மா கண்ணீரோடு பலகார, பதார்த்த மூட்டை முடிச்சுகளுடன் விடைகொடுத்து அனுப்ப, கல்லூரிக்கு செல்ல மதியம் ஒரு மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தேன்

வெளியுலகம் தெரியாத பிள்ளையை தனியே அனுப்பிய தந்தையின் நம்பிக்கையையும், பசியில்லாமல் பிள்ளை இருக்கவேண்டுமென்ற தாயின் அன்பும் எந்தத் தலைமுறைக்கும் பொதுவானதுதான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

வெளியுலகம் தெரியாத பிள்ளையை தனியே அனுப்பிய தந்தையின் நம்பிக்கையையும், பசியில்லாமல் பிள்ளை இருக்கவேண்டுமென்ற தாயின் அன்பும் எந்தத் தலைமுறைக்கும் பொதுவானதுதான்!

உண்மைதான், திரு.கிருபன்..

நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது மட்டும் என் தாய் மாமா உடன் வந்திருந்தார். அப்பொழுது பொறியியல் கல்லூரி வழியாகத்தான் நேர்முகத் தேர்வு நடக்கும் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றேன்.

கல்லூரி ஸ்ட்ரைக்கினால் மூடப்பட்டிருந்ததால், நல்லவேளை தப்பித்தேன், இல்லையெனில் தனியாக அப்பக்கம் திரியும் புது மாணவர்களை பிடித்து ராகிங் செய்யும் வழக்கமும் உண்டு.

நேர்முகத் தேர்வு அவ்வளவு கடினமாக இல்லை.

ஐந்து பேராசிரியர்களைக் கொண்ட தேர்வுக் குழு, அரை வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்.

நடுவில் இருக்கையில் என்னை உட்கார சொல்லிவிட்டு, ஒரு குடுவையை நீட்டினார்கள். அதில் முழுக்க கேள்விகளை சிறு தாளில் எழுதி சுருட்டி வைத்திருந்தார்கள்..(குடவோலை முறைப்படி..!) :)

அவற்றில் ஒவ்வொன்றாக ஏதேனும் ஐந்து காகிதங்களை எடுத்து, அதில் வரும் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்..

எனக்கு,

  • ஆர்கிமிடீஸ் விதி,
  • ஓம்ஸ் விதி,
  • நியூட்டனின் மூன்றாவது விதி,
  • கால்பந்து விடயமாக ஒரு கேள்வி,
  • வேதியல் பாடத்தில் ஒரு சூத்திரம்,

என வரிசையாக வந்தது.

ஏற்கனவே படித்து தயார்செய்து சென்றிருந்ததால், அனைத்திற்கும் சரியாக பதிலளித்தேன்.

ஆனால் அனுமதி தெரிவு என்பது பெரும்பாலும் புகுபுக வகுப்பில் (PUC) பெற்ற மதிப்பெண்கள் (கணிதம், பெளதீகம், இரசாயனம் ஆகிய பாட மதிப்பெண்களின் கூட்டுத்தொகை)அடிப்படையிலேயே கொடுக்கப்படவேண்டுமென நடைமுறை இருந்ததால், கல்லூரியில் சேர எனக்கு அனுமதி கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2020 at 4:16 PM, ராசவன்னியன் said:

அம்மா கண்ணீரோடு பலகார, பதார்த்த மூட்டை முடிச்சுகளுடன் விடைகொடுத்து அனுப்ப, கல்லூரிக்கு செல்ல மதியம் ஒரு மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தேன்..

வழமை போல எல்லோரது அம்மாமாரும் செய்கிற வேலை தான்.இப்போதும் பிள்ளைகள் வந்துட்டுப் போகும்போது ஒரே பிரச்சனை தான்.

        இந்த ராக்கிங் பிரச்சனைக்காகவே நான் பல்கலைப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

...        இந்த ராக்கிங் பிரச்சனைக்காகவே நான் பல்கலைப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

ராகிங் செய்யபட்டதினால் சில நல்ல விசயங்களும், பயன்களும் கிட்டின.

உதாரணமாக, பொறியியல் பாடப் புத்தகங்களின் விலை மிக அதிகம். கடந்த வருட பாடத்தின் குறிப்புகள் (Notes) நமக்கு அவர்களிடமிருந்து கிட்டும். சீனியர் மாணவர்களிடம் பாடத்தில் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். அனைத்தும் எனக்கு சில சீனியர் மாணவர்களே கொடுத்து உதவினர்.

மிக முக்கியமாக 'நெட்வொர்க்கிங்'..(Networking)!

அதிலும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தால் தினந்தோறும் உணவகத்திலோ(Mess), கல்லூரி வராந்தாவிலோ சீனியர்களை சந்திக்கும்போது "ஹலோ சார், எப்படி இருக்கீங்க..?" என புன்னகைத்து கைகொடுக்க, உறவுப்பாலம் அமைத்து நட்பை தொடர பயன்படுவது இந்த ராகிங் அறிமுகம்.

சீனியர்களுடன் பின்னாளில் நட்பை தொடர்வது அவரவர்களின் சொந்த விருப்பம்.

கல்லூரி 'ப்ராஜெக்ட்(Project) செய்யும்பொழுதோ அல்லது படித்து முடித்து வெளியே வந்து வேலை தேடும்பொழுதோ இவர்களின் நட்பு பின்னல் மூலமாக எளிதில் பயன்பெறலாம்.

Edited by ராசவன்னியன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது வன்னியர்.

எனது தாய்வழி பாட்டனார் வீட்டில் 1950-60-70ம் ஆண்டு கல்கி, விகடன், குமுதம், நல்வழி, போன்ற பத்திரிகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 

உங்கள் எழுத்தை வாசித்த போது அதே உணர்வு. 

நீங்கள் எழுதும் பாங்கில் தொலைந்து போன ஒரு காலத்தின் சுவடு இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

Continued..

ரெயில் விருதுநகரிலிருந்து நடைமேடையை வந்தடைந்து நின்றது..!

"உன்னுடைய கோச் நம்பர், பெர்த் நம்பர் என்ன..?" என என்னிடம் கேட்டு குறித்துக்கொண்டு அந்த இருவரும் அவர்களது பெட்டியில் ஏறிக்கொண்டனர்.

'அப்பாடா பிழைத்தோம்' என் நிம்மதியுடன் எனது பெட்டியில் பெட்டி முடிச்சுகளுடன் ஏறி அமர்ந்துகொண்டேன். ஆனாலும் மனதில் நெருடலாகவே இருந்தது..

'கல்லூரியில் ஒருத்தரையும் தெரியாது.. நள்ளிரவில் ஊர் போய் சேரப்போகிறோம்..அந்நேரம் கல்லூரி விடுதி அலுவலகம் திறந்திருக்குமா..?

எப்படி எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையை தெரிந்துகொள்வது..?

யாரெல்லாம் நம்முடன் அறையில் இருக்கப்போகிறார்களோ..?

எப்படி இந்த ராகிங்கை எதிர்கொள்வது..?' என ஆயிரம் குழப்பங்கள்..!

இந்த நெருடல்களுக்கு மத்தியில் மனம் சற்றே கவலையுடன் பயணித்ததால், தூக்கமும் வரவில்லை. கிராமத்து வாழ்க்கையை நினைத்துக்கொண்டே சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தேன்.

பொழுது சாய்ந்து இரவில் திருச்சி வந்தடைந்தவுடன் என்னைப் போலவே பால்வடியும்(?) முகத்துடன் சிலர் பெட்டிகளுடன் ஏறினார்கள். எனக்கிருந்த மன உளைச்சலில், அவர்களை அதிகம் கவனிக்கவில்லை.

இரவு தோரயமாக ஒன்பது மணியளவில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. பலரும் முண்டியடித்துக்கொண்டு பெட்டியில் ஏறினார்கள்.

இங்கிருந்து ஆரம்பித்தது..ரகளை..!  vil-assome2.gif

பெட்டி முழுவதும் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களும், சில பொது மக்களும் இருந்தனர். எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது, 'அனைத்து வருட மாணவர்களுக்கும் நாளைதான் கல்லூரி திறக்கிறார்கள்' என்பது.

ரெயில் கும்பகோணத்தை அடையுமுன் ஒருத்தர், கையில் குளிப்பதற்கு பயன்படுத்தும் 'ப்ளாஸ்டிக் வாளி'யை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்தார்.

"ஐயா தர்மம் போடுகளையா.. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சி" என கண்கள் சிவக்க பரிதாபமாக நின்றார்.

நான் மலங்க விழித்தவாறு உட்கார்ந்திருக்க, "டேய் நல்லா சத்தமா பிச்சை எடுடா" அந்த பெட்டியில் ஓங்கி சிரித்தபடி பலரும் அங்கே வந்தனர். ரயில் ஒரு சிறிய ஊரில் எதிர்பாராதவிதமாக நின்றது..

உடனே எனது பெட்டியில் நான் மதுரை ரெயில் நிலையத்தில் சந்தித்த இருவரும் ஏறினர்.

என்னிடம் வந்து மற்ற நண்பர்களை பார்த்து, "டேய் இவனும் ஃபர்ஸ்ட் இயர்தான்டா, கொஞ்சம் கவனியுங்கள்" என சிரித்தனர்.

உடனே நால்வர் வந்து என்னுடைய மூட்டை முடிச்சுகளை ஆராய்ந்தனர். அதில் ஒருத்தர், எனது அம்மா ரயிலில் சாப்பிட கொடுத்த சாப்பாடு பொட்டலத்தை பிரித்து இன்னொரு டப்பாவில் மாற்றிவிட்டு, வெறும் இலையை என் கையில் கொடுத்தார்.

"டேய் ஒன் பேரு என்ன..? நீ எந்த ஊர்டா..? வேட்டியை மடித்துக் கட்டு.." என என்னை அதட்டினர். 'இவர்களெல்லாம் சீனியர் மாணவகள், ராகிங்கை தொடங்கிவிட்டார்கள்' என அப்பொழுதே புரிந்துவிட்டது.

விதியே என வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டேன், ஒரு சீனியர், கையில் நான் கொண்டுவத அந்த இலையை வைத்தார்.

"டேய் நீ என்ன செய்வையோ தெரியாது, இந்த பெட்டியிலுள்ள எல்லோரிடமும் பிச்சை எடுத்து காசை எனக்கு கொண்டுவந்து காட்டணும்.. போ" என தள்ளிவிட்டார்.

மதுரையில் ஏறிய அன்பர் "டேய் பாட்டு பாடிட்டே பிச்சை எடுடா.." என பிச்சையெடுக்க பாட்டும் சொல்லிக்கொடுத்தார்.

"தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. இன்று நீங்கள் போடும் பிச்சையிலே வளர்வேனம்மா.."

இதை பாடித்தான் அன்று ரெயில் பெட்டியில் சில பொதுமக்களிடம் பிச்சை எடுத்தேன், அவர்களும் சிரித்துக்கொண்டே இந்த ராகிங் கலாட்டாவை பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்னுடன் அந்த பெட்டியில் பயணித்த இன்னும் சில முதல் வருட மாணவர்களும் பிச்சை எடுத்தனர். ஆனால் பொதுமக்கள், நிலைமையை புரிந்துகொண்டு ஒருத்தரும் காசு போடவில்லை.

இப்படி ஒவ்வொரு பெட்டியிலும் அன்றிரவு ஒரே ராகிங் கலாட்டாதான். (ரெயிலில் நடந்த மற்ற சில சுவாரசியமான ராகிங் நிகழ்வுகள், காலப்போக்கில் எனக்கு மறந்துவிட்டன.)

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நான் படித்த பொறியியல் கல்லூரி நகரத்திற்கு ரெயில் வந்தடைந்தது..!

கீழே பெட்டி, பொதிகளுடன் இறங்கிவிட்டு 'எப்படி விடுதியில் என்னுடைய அறை பற்றி விசாரிப்பது..?' என கவலையுடன் நடைமேடையில் நின்றேன்.

அப்பொழுது மதுரையில் ஏறிய இரு சீனியர் மாணவர்களும், "டேய் ஒனக்கு ஹாஸ்டல் ரூம் எதுன்னு தெரியுமா..? யாரவது தெரிஞ்சவங்க இங்கே படிக்குறாங்களா..?" என விசாரித்தனர்.

"இல்லை சார், எனக்கு யாரையும் இங்கே தெரியாது.." என்றேன்..

உடனே அந்த இருவரில் ஒரு சீனியர்(இவர் அப்பொழுது பொறியியலில் ஐந்தாம் வருடம் படித்துக்கொண்டிருந்தவர்)மற்றொரு சீனியரிடம்(இவர் நான்காம் வருடம் படித்துக்கொண்டிருந்தவர்)

"டேய் இவனை நம்ம ..........னின் ரூமில் நான் சொன்னேனு போய் தங்க வச்சி, நாளை காலை ஹாஸ்டல் ஆபீஸ் திறந்தவுடன் இவனின் ரூமை விசாரிச்சி மாத்தி விடு.." என கூறினார்.

மற்ற சீனியரும், "சரி சார்.." என சொல்லிவிட்டு என்னை அங்கிருந்து அழைத்துக்கொண்டு கல்லூரி விடுதி நோக்கி நடந்தார்..

ரயில்வே நிலையத்திலிருந்து  ஊர்வலம் போல அவ்வளவு மாணவர்கள் கூட்டம், விடுதியை நோக்கி நடுநிசியில் நடந்தது வித்தியாசமாக இருந்தது..

'அன்றிரவு எனக்கு சிவராத்திரிதான்' என அப்பொழுது எனக்கு புரியவில்லை..!  vil-coquard.gif

(தொடரும்..)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்  கொடுத்து வைத்தநீங்கள் எங்களையெல்லாம் ராக்கிங்க் பண்ணியது சியா மாசெட்டியும் சிலோன் கெலி யின் 50கலிபரும்  போதாக்குறைக்கு இந்தியன் அமைதிப்படையும் அவர்கள் மூக்கினுள் தண்ணீர் விட்டு ராகிங் செய்வார்கள் அனுபவித்தவர்களுக்கு அதன் வலி புரியும் இவ்வளவும் ஒலெவெல் எடுக்க முன்னரே .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

என்னுடன் அந்த பெட்டியில் பயணித்த இன்னும் சில முதல் வருட மாணவர்களும் பிச்சை எடுத்தனர். ஆனால் பொதுமக்கள், நிலைமையை புரிந்துகொண்டு ஒருத்தரும் காசு போடவில்லை.

ஐயா உங்கள் வாளிக்குள் எவ்வளவு சேர்ந்தது?

 

2 hours ago, ராசவன்னியன் said:

விதியே என வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டேன், ஒரு சீனியர், கையில் நான் கொண்டுவத அந்த இலையை வைத்தார்.

வேட்டியை அவித்து தரவா என்று கேட்டிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா உங்கள் வாளிக்குள் எவ்வளவு சேர்ந்தது?

ஒன்னும் சேரலை.. சில சீனியர்கள் இலையில் காசை போட்டுவிட்டு திரும்ப எடுத்துக்கொண்டு சிரித்தனர்.

4 hours ago, ஈழப்பிரியன் said:

வேட்டியை அவித்து தரவா என்று கேட்டிருக்கலாம்.

அதுவும் சில நேரத்தில் நடந்தது. ஆனால் சிலவற்றை/கொடுமைகளை, இங்கே பொதுவெளியில் எழுத இயலாது.

ஞாபகத்திலுள்ள சில சுவாரசியமான ராகிங் சம்பவங்களை மட்டுமே பகிர விரும்புகிறேன். ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இந்த ராகிங் நடந்தது.

( வயசு கூடிப் போச்சுது, அனைத்தையும் 45 வருடங்கள் கடந்த பின் ஞாபகப்படுத்தி, எழுத இயலாதுதானே? vil-oui.gif )

பொறுத்தருள்க, ஐயா.. vil2_cligne.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

பொறுத்தருள்க, ஐயா.. vil2_cligne.gif

ஏழு கழுதை வயசாச்சு இன்னும் கண்ணடிக்கிற பழக்கம் போகலை?

நினைப்பு தான் பழுசுக்கு போச்சே தவிர வயது ஒரு போதும் போகாதையா?

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவு மீட்டல் தொடருங்கள்'

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

 

"டேய் நீ என்ன செய்வையோ தெரியாது, இந்த பெட்டியிலுள்ள எல்லோரிடமும் பிச்சை எடுத்து காசை எனக்கு கொண்டுவந்து காட்டணும்.. போ" என தள்ளிவிட்டார்.

மதுரையில் ஏறிய அன்பர் "டேய் பாட்டு பாடிட்டே பிச்சை எடுடா.." என பிச்சையெடுக்க பாட்டும் சொல்லிக்கொடுத்தார்.

"தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. இன்று நீங்கள் போடும் பிச்சையிலே வளர்வேனம்மா.."

இதை பாடித்தான் அன்று ரெயில் பெட்டியில் சில பொதுமக்களிடம் பிச்சை எடுத்தேன், அவர்களும் சிரித்துக்கொண்டே இந்த ராகிங் கலாட்டாவை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

ராஜ வன்னியன்... எக்கச் சக்கமான கோஸ்டிகளிடம் மாட்டுப் பட்டு,
ராகிங் அனுபவங்களை பெற்று இருக்கின்றார்.  🤣
இந்தப் பாடலின்... மூலப்  பிரதியை தேடினேன் கிடைக்கவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அதுவும் சில நேரத்தில் நடந்தது. ஆனால் சிலவற்றை/கொடுமைகளை, இங்கே பொதுவெளியில் எழுத இயலாது.

வேட்டியை மட்டித்துக் கட்டச் சொன்ன போதே புரிந்து கொள்ள முடிகிறது ராசவன்னியரே😌

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்து விட்டது.....!   😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழு கழுதை வயசாச்சு இன்னும் கண்ணடிக்கிற பழக்கம் போகலை?

நினைப்பு தான் பழுசுக்கு போச்சே தவிர வயது ஒரு போதும் போகாதையா?

அப்படியா..? எனக்கு கண்ணில குறைப்பாடு போல, அதான் தானாக கண்ணடிக்குது ஈழப்பிரியன்.

 

9 hours ago, சுவைப்பிரியன் said:

அருமையான நினைவு மீட்டல் தொடருங்கள்'

நன்றி சஜீவன்.

 

8 hours ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்... எக்கச் சக்கமான கோஸ்டிகளிடம் மாட்டுப் பட்டு,
ராகிங் அனுபவங்களை பெற்று இருக்கின்றார்.  🤣
...

இந்த கோஸ்டி 'ராகிங்'கில் சிலமுறை மாட்டுப்பட்டுள்ளேன், ஆனால் பாருங்கோ, இந்த கோஸ்டி 'ராகிங்'கில் ஒரு அனுகூலம் உண்டு, அதிகமாக அருவருக்கத் தக்க வதைகள் இருக்காது..

தனியாக ஒரு சிலரிடம் மாட்டினால் கதை கந்தலாகிவிடும், கண்ணீர் விடும் நிலைக்கு போய்விடும்.

 

4 hours ago, Kavi arunasalam said:

வேட்டியை மட்டித்துக் கட்டச் சொன்ன போதே புரிந்து கொள்ள முடிகிறது ராசவன்னியரே😌

வேட்டியை அவிழ்க்க சொன்ன நிகழ்வுகளும் சிலமுறை நடந்தன.

 

4 hours ago, suvy said:

கிடைத்து விட்டது.....!   😁 

காணொளிக்கு மிக்க நன்றி, சுவி.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தொடருங்கள். எங்களுக்கு உள் ஆடைக்கு மேல் பொலித்தின் பையை கட்டி பேருந்தில் ஏற்றிவிட்டார்கள், சனமெல்லாம் எங்களை ஒரு மாதிரி பார்த்தார்கள் நடக்கும் போது கேட்ட ஓலியால்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 4:24 AM, ராசவன்னியன் said:

சிலவற்றை/கொடுமைகளை, இங்கே பொதுவெளியில் எழுத இயலாது

இப்படியான கொடுமைகளை எல்லாம் பிரித்தானியாவில் படித்ததன் மூலம் காணவில்லை. சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என்ற பாகுபாடு இருக்கவில்லை.

பல்கலைக்கழகம் போன முதல்நாள், அங்கே படித்துக்கொண்டிருந்த தமிழ் மாணவர் புன்னகையுடன் வரவேற்ற அனுபவம்தான் எனக்கு. அதனால்தான் இந்த ராக்கிங் என்பதை என்னால் அடியோடு புரிந்துகொள்ளமுடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.