Jump to content

இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன்

sri.jpg

கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர்

இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது

இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் .

இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது

சர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர். 

Posted

ஜ.நாவும், ஜெனிவாவும், 11 ஆண்டுகளும், தொடரும் காவடி ஆட்டமும்

ஈழத்தமிழரின் பரிகாரநீதி வேண்டிய யாகத்தில், ஜ.நாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை, இன்றைய குழப்ப நிலையில், சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

2009 மே இல், தமிழின அழிப்புடன் ஈழத்தமிழரின் விடுதலைப் போர் முடிவி;ற்கு வருகிறது.
அவ்வாண்டே, ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், தான் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விட்டதாக, அதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றி, மகிழ்கின்றது சிறீலங்கா..

அதன் பின் தொடர்ந்து எழுந்த தமிழர் இனப்படுகொலை சம்பந்தமான கூக்குரல்களால், 2010இல், மூவரைக் கொண்ட குழுவை அமைத்துப் போர் குறித்தும், அதன் இறுதி காலங்களில் நடைபெற்ற விடயங்கள் குறித்தும், ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, பணிக்கிறார் ஜ.நா செயலாளர் நாயகம்.

இதனை ஆராய்ந்த குழுவினர், 2011இல், தமது அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். அதில் ஜ.நா மக்களை காக்கின்ற தனது பணியில், மோசமான தவறை இழைத்ததாக குற்றஞ்சாட்டியது மட்டுமன்றி, போர் குற்றங்களும், மனிதாபிமானக் குற்றங்களும், வேறு இழைக்கப்பட்டுள்ளதாக அது அடித்துக் கூறியது.

இதை மையப்படுத்தி, அடுத்த நகர்விற்காக இவ்விடயம் ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, ஆம் ஜெனிவாவிற்கு நகர்த்தப்பட்டது.

அங்கு 2012 மார்ச் கூட்டத்தொடரில், சிறீலங்காவிற்கு எதிரான முதலாவது தீர்மானம் 19-2 நிறைவேற்றப்படுகிறது. 24 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க, 15 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இத்தீர்மானத்தை 11 வாக்களிக்கும் தகுதிபெற்ற நாடுகள் உட்பட, 40 நாடுகள் கூட்டாகக் கொண்டுவந்திருந்தன.

2013 இல் மார்ச் கூட்டத்தொடரில், மீண்டும் ஒரு தீர்மானம் 22-1 நிறைவேற்றப்படுகிறது. இதை 25 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க, 13 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தீர்மானத்தை 10 வாக்களிக்கும் தகுதிபெற்ற நாடுகள் உட்பட, 32 நாடுகள் கூட்டாகக் கொண்டுவந்திருந்தன.

இதன் தொடர்ச்சியாக 2013இல், மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், சிறீலங்காவிற்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டார்.

2014 இல் மார்ச் கூட்டத்தொடரில், மீண்டும் ஒரு தீர்மானம் 25-1 நிறைவேற்றப்படுகிறது. இதை 23 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க, 12 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தனது அறிக்கையை சமர்ப்பித்து பேசிய நவநீதம்பிள்ளை அவர்கள், சிறீலங்கா குறித்து மாற்று வழிகளை ஆராயுமாறு நாடுகளை வேண்டிக்கொள்கிறார்.

2015 சனவரியில், தமக்கு சாதகமான சனாதிபதி அமைந்ததும், பாராளுமன்றத்தேர்தல் வரை மேற்குலகம் அமைதி காக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு சாதகமான அரசு அமைந்ததும், அதனையும் இணைத்து, ஒக்டோபர் கூட்டத்தொடரில் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றுகின்றனர். இதுவே நாம் இன்று பரவலாக பேசிக்கொள்ளும் தீர்மானம் ஆகும். இதில் வலியுறுத்தப்பட்ட முக்கிய நான்கு விடயங்களை, 2016 டிசம்பருக்குள் அமுலாக்குவோம் என்ற உறுதிமொழியை அங்கு வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வழங்குகிறார்.

எனினும் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும் முன்னேற்றம் காணப்படாத நிலையில், 2017 மார்ச் கூட்டத்தொடரில், மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் வழங்கி தீர்மானம் 34-1 நிறைவேற்றப்படுகிறது. இதன்போது தனது அறிக்கையை சமாப்பித்துப் பேசிய ஆணையாளர் குசையினும், சிறீலங்கா விடயத்தில் மேலதிக பொறிமுறைகளை ஆராய்ந்து முன்னெடுக்குமாறு நாடுகளை வேண்டுகிறார்.

இதன் தொடர்ச்சியாகவே 2019 மார்ச் கூட்டத்தொடாரில், மேலும் இரண்டு ஆண்டுகாலம் அவகாசம் வழங்கி 40-1 தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதன்போது ஒரு ஆண்டில், அதாவது 2020 மார்ச் 43ஆவது கூட்டத்தொடரில், ஒரு வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆணையாளர் வேண்டப்படுகிறார். அதனை வியாழன் பெப்பிரவரி 27ஆம் நாள், பின்னேரம் ஆணையாளர் வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அதற்கான தனது பதிலைப் பதிவு செய்யும் போதே, தமக்கு முந்திய அரசு தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதில் இருந்து, தாம் விலகிக் கொள்வதாக சிறீலங்கா தற்போதை அரசு அறிவிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெள்ளி 28ஆம் நாள் காலை, இது குறித்த பொது விவாதத்தில் ஏனைய நாடுகள், இது குறித்த தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவுள்ளன. இதில் தமக்கு சார்பாக கருத்துத் தெரிவிக்க நாடுகளைத் திரட்டும் முயற்சியில் சிறீலங்காவுள்ளது.

- முகநூல் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன்

சிறிதரனின் முகத்தையே இன்னும் தமிழர்கள் தெரிந்து  கொள்ளவில்லை என்ற  துணிவில் இக்கருத்தை  முன் வைக்கிறார்  போலும்

Posted
1 hour ago, விசுகு said:

சிறிதரனின் முகத்தையே இன்னும் தமிழர்கள் தெரிந்து  கொள்ளவில்லை என்ற  துணிவில் இக்கருத்தை  முன் வைக்கிறார்  போலும்

அடாவடி மினிஸ்டர்க்கு கள்ள காணி பிடித்து கொடுத்ததில் இவருக்கும் பங்கிருக்காமே

Posted
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

போனமுறை சம்பந்தனுக்கு ஒரு சொகுசு வீடு பொது எதிரியால கொழும்பில வழங்கப்பட்டது.

இந்த முறை பொது எதிரியால யாருக்கு ஒரு சொகுசு வீடு கொழும்பில வழங்கப்பட உள்ளது என்டு சொன்னா மக்கள் ஓடி ஓடி வாக்கு போடுவார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் உள்ள கடைசி தமிழனை அழிக்கும்வரை   இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

இலங்கையில் உள்ள கடைசி தமிழனை அழிக்கும்வரை   இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்.

கால அவகாசம் என்ற சொல்லுக்கே..... மதிப்பையும், அர்த்தத்தையும்  இழக்க வைத்து விட்டார்கள். 😢

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.