Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

நீங்கள் அப்படியானவர்களைப் பற்றி கூறுகிறீர்கள் என்பதை அனுமனித்து...

அவர்கள் வாழ்க்கையைப் படிக்கவில்லை. புத்தகப் பூச்சிகளுக்கு வெளி உலகம் தெரியாது. அவர்களோடு ஒப்பிடுகையில் கோட்டை ரயில் நிலையத்தில் பெட்டி தூக்குபவர் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தப்பிப் பிழைப்பர். வெளினாடுகளில் உள்ள நம்மவர்களைக் கவனித்தீரென்றால் சிலவற்றை அவதானிக்கலாம். கல்வி அறிவு குறைந்த ஆனால்  கடின உழைப்புள்ள நம்மவர்களில் அனேகர் செல்வ வளத்தில் நிறைவாயும் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வாழ்க்கையின் வெற்றிக்கு வழி கோலியிருப்பர். ஆனால் இலங்கையில் நன்கு படித்த அனேகர் வெளினாட்டு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியவில்லை. காரணம் அவர்களால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு Level க்கு கீள் இறங்கவோ மேல் போகவொ தெவையான வெளி உலக அணுபவங்கள் இல்லை.

உண்மை...நான் இங்கே கண பேரை கண்டு இருக்கேன்...அவர்களுக்கு ஆங்கிலம் கூட ஒழுங்காய் கதைக்க முடியாமல் இருக்கும்...ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து கடின உழைப்பால் முன்னேறி நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள்.
உ+ம் பெற்றோல் செட்டுக்களில் வேலைக்கு காசாளராய் சேர்ந்து மனேஜராய் போன  பல பேர் இருக்கிறார்கள்...ஏரியாக்களை பொறுத்து அவர்களது சம்பளம் பாங்க் மனேஞ்ரது சம்பளத்தை விட அதிகமாய் இருக்கும் 

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 3:08 PM, வல்வை சகாறா said:

வணக்கம் சுமே

சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்

சுமே கல்யாணம் பேசட்டோ என்ற கேள்வியில் நீங்கள் பேச முற்பட்ட விடயங்களுக்கு தீர்வு கிடைக்காது. விவாத்தில் தெளிதலை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் முடிவை அடைவது மிகக்கடினம்.

தீர்வு கிடைக்கவேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. இப்படியும் பலது நடக்கிறது உலகத்தில் என்பதைச் சொல்வதற்கே தான் இது. 

வருகைக்கு நன்றி சகாரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 7:49 PM, ரதி said:

உண்மை...நான் இங்கே கண பேரை கண்டு இருக்கேன்...அவர்களுக்கு ஆங்கிலம் கூட ஒழுங்காய் கதைக்க முடியாமல் இருக்கும்...ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து கடின உழைப்பால் முன்னேறி நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள்.
உ+ம் பெற்றோல் செட்டுக்களில் வேலைக்கு காசாளராய் சேர்ந்து மனேஜராய் போன  பல பேர் இருக்கிறார்கள்...ஏரியாக்களை பொறுத்து அவர்களது சம்பளம் பாங்க் மனேஞ்ரது சம்பளத்தை விட அதிகமாய் இருக்கும் 

பெற்றோல் செற்றில் மனேஐராய் இருந்து தமிழரின் பணத்தைச் சுரண்டியே பணக்கார்ரானவர்கள் பற்றியே நிறைய எழுதலாம் ரதி. பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்யும் பலர் இந்திய படிக்க என்று வந்த மாணவர்கள். மற்றும் பகுதிநேர வேலைக்குப் பதிந்துவிட்டு முழுநேர வேலை செய்துகொண்டு கவுன்சில் உதவிப்பணத்தில் வாழ்பவர்கள் அதிகம். அவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் கொடுப்பதாக்க் காட்டிக்கொண்டு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் அடித்துக்கொண்டு பணக்கார்ராக வாழும் பலரை நான் அறிவேன்.  அவர்களுக்கு விடுமுறைக்கான தொகை ( Holliday payment) கூடக் கொடுக்காமல் அதையும் தாமே எடுக்கும் மனேஜர் இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2020 at 4:26 PM, Maruthankerny said:

இதுவும் நம்பிக்கையானதோ அல்லது முடிவான முடிவோ இல்லை.
ஈழத்தமிழரின் டி என் எ வில் 28வீதம் பெங்கால் மரபணு இருப்பது சாத்தியம் அற்றது 
அவர்கள் ஆய்வு செய்த தமிழர்களில் அது இருந்து இருக்கலாம் .......

இது, யுத்தம் முடிந்த பின், இலங்கை தீவில், மற்றும் புலம்பெயதோர் ஐ field sampling செய்து, இரு ஆராய்ச்சிகளின் முடிவில் கிடைத்த பெறுபேறுகள்.

ஓர் ஆராய்ச்சி Newcastle University செய்தது. இந்த ஆராய்ச்சிகள் பகிரங்கமாயினும், அந்தந்த துறைக்குள் இருபவர்களிற்கே அணுக கூடியதா இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகளை நான் நேரடியாக பார்க்கவில்லை, ஆனால், அந்த துறையில் இருக்கும் ஓர் மருத்துவ ஆராய்ச்சி (medical research) நிபுணரின் தொடர்புகளால் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிபுணர், ஆராய்ச்சி பெறுபேறுகளை திரித்து சூழ வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், இவர் தனது வம்சத்தை யாழ் இராச்சியத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திளின் பரம்பரை சுவடு என்பதில், அதாவது ஈழத்து தமிழர் எனும் அடையாளம் என்பதில் பற்றுக் கொண்டவர். 

அவரிற்கும், அது ஓர் ஆச்சரியமான பெறுபேறாகவே இருந்தது.

On 3/3/2020 at 4:26 PM, Maruthankerny said:

இதை ஏதன் அடிப்படையில் எழுதுகிறேன் என்றால் பெங்கால் என்றே ஓர் தனித்துவமான 
மரபணு இருக்க சாத்தியம் இல்லாதபோது எப்படி 28 வீதம் பெங்கால் மரபணு ஈழத்தமிழரில் அல்லது சிங்களவரில் இருக்க முடியும்? 

Bengal DNA உடன் பெருமளவில் ஒத்து போகிறது என்பதையே Bengal DNA என்று குறிப்பிட்டேன்.        

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎8‎/‎2020 at 6:33 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் மகளுக்கு லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்த பையன் தான் வேண்டும் என்று விளம்பரத்தில் போட் ட பின்னரும் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருக்கும் ஒருவரின் அக்கா எம்மிடம் தொடர்புகொண்டு சாதகத்தையும் வற்சப்பில் போட்டார். நான் ஏன் உங்கள் தம்பிக்கு இலங்கையில் ஏற்ற பெண் ஒருவரைப் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு தம்பிக்கு லண்டன் வர விருப்பம் என்று அவர் நேரடியாகவே கூற நான் அவர்களை நிராகரித்துவிட்டேன். 

ஏன், அவுஸ்திரேலியாப் பக்கம் கொஞ்சமும் காத்து வீசேல்லை..😳

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 7:30 PM, மாங்குயில் said:

அவர் நேர்முகத்தேர்விற்கு சென்ற சமயம்,  Oxford  University இல் படித்த ஒருவரும், லண்டனில் பிரபலமான ஒரு University இல் படித்த ஒருவரும், நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தார்களாம்.

இவர்கள் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லையாம்.

எனது மச்சானுக்கும்,   Liverpool இல் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் படித்த ஒருவருக்கும் வேலை கிடைத்ததாம்.

Oxford இல் படித்தவருக்கு, ஏன் வேலை கிடைக்கவில்லை என்று பின்னாளில்தான் தெரிய வந்ததாம்.

அவருக்கு தகைமைக்கு அதிகமான தகைமை இருந்ததுதான் காரணமாம்.

That means, the candidate is over-qualified for that Post.

அளவுக்கு அதிகமான தகமை உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்காது என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

நேர்முகத்தேர்விற்கு அழைப்பின்றி வந்திருக்க முடியாது.

over qualified என்று தெரிந்தும் ஏன் அழைக்கப்பட்டார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

ஏன், அவுஸ்திரேலியாப் பக்கம் கொஞ்சமும் காத்து வீசேல்லை..😳

அத்தனை தூரத்தில் பிள்களகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு நினைத்தவுடன் அவர்களைப் பார்க்க முடியுமா??? 😀

5 hours ago, Kadancha said:

இது, யுத்தம் முடிந்த பின், இலங்கை தீவில், மற்றும் புலம்பெயதோர் ஐ field sampling செய்து, இரு ஆராய்ச்சிகளின் முடிவில் கிடைத்த பெறுபேறுகள்.

ஓர் ஆராய்ச்சி Newcastle University செய்தது. இந்த ஆராய்ச்சிகள் பகிரங்கமாயினும், அந்தந்த துறைக்குள் இருபவர்களிற்கே அணுக கூடியதா இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகளை நான் நேரடியாக பார்க்கவில்லை, ஆனால், அந்த துறையில் இருக்கும் ஓர் மருத்துவ ஆராய்ச்சி (medical research) நிபுணரின் தொடர்புகளால் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிபுணர், ஆராய்ச்சி பெறுபேறுகளை திரித்து சூழ வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், இவர் தனது வம்சத்தை யாழ் இராச்சியத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திளின் பரம்பரை சுவடு என்பதில், அதாவது ஈழத்து தமிழர் எனும் அடையாளம் என்பதில் பற்றுக் கொண்டவர். 

அவரிற்கும், அது ஓர் ஆச்சரியமான பெறுபேறாகவே இருந்தது.

Bengal DNA உடன் பெருமளவில் ஒத்து போகிறது என்பதையே Bengal DNA என்று குறிப்பிட்டேன்.        

பெங்கால் DNA இன் குறியீடு என்ன என்று அவரிடம் கேட்கமுடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
5 hours ago, சாமானியன் said:

ஏன், அவுஸ்திரேலியாப் பக்கம் கொஞ்சமும் காத்து வீசேல்லை..😳

அத்தனை தூரத்தில் பிள்களகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு நினைத்தவுடன் அவர்களைப் பார்க்க முடியுமா??? 😀

அவுஸ்திரேலியாவில் மகளை கட்டி கொடுத்திருந்தால் நீங்கள்  இப்போது toilet paper வாங்கி கொண்டு  சென்று கோடுக்க வேண்டி வந்திருக்கும்.😀

https://www.9news.com.au/national/aldi-toilet-paper-sale-coronavirus/cb78abef-508a-4860-bfe4-ba2224e693ea

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அவுஸ்திரேலியாவில் மகளை கட்டி கொடுத்திருந்தால் நீங்கள்  இப்போது toilet paper வாங்கி கொண்டு  சென்று கோடுக்க வேண்டி வந்திருக்கும்.😀

https://www.9news.com.au/national/aldi-toilet-paper-sale-coronavirus/cb78abef-508a-4860-bfe4-ba2224e693ea

லண்டன் சனங்கள் நல்லசனங்கள் போல. உப்பிடி ஒரு கடையிலையும் அடிபடேல்லை. பைப்பில தண்ணி வரும்வரையும் எங்கட ஆட்களுக்குப் பிரச்சனை இல்லை. அதுதான் பெரிசா ஒருத்தரும் எங்கள் ஆட்கள் ரொயிலற் பேப்பரை ராகெட் பண்ணேல்லை.😁

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டன் சனங்கள் நல்லசனங்கள் போல. உப்பிடி ஒரு கடையிலையும் அடிபடேல்லை. பைப்பில தண்ணி வரும்வரையும் எங்கட ஆட்களுக்குப் பிரச்சனை இல்லை. அதுதான் பெரிசா ஒருத்தரும் எங்கள் ஆட்கள் ரொயிலற் பேப்பரை ராகெட் பண்ணேல்லை.😁

என்ன சுமே அன்டிநீங்கள் சட்டன் பக்கம் வரேலைப் போல. இங்கை ஒரு சுப்பர் மாக்கெட்டிலும் டொயிலெட் பேப்பர் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

நேர்முகத்தேர்விற்கு அழைப்பின்றி வந்திருக்க முடியாது.

over qualified என்று தெரிந்தும் ஏன் அழைக்கப்பட்டார்?

பல நிறுவனக்களில் over qualified என்பதை காட்டி ஒருவரை நிராகரிக்க முடியாது. அடிப்படை தகுதி இருந்தால் கூப்பிட்டே ஆக வேண்டும்.

1 hour ago, வாதவூரான் said:

என்ன சுமே அன்டிநீங்கள் சட்டன் பக்கம் வரேலைப் போல. இங்கை ஒரு சுப்பர் மாக்கெட்டிலும் டொயிலெட் பேப்பர் இல்லை

சட்டன்ல இருக்கிற சனத்துக்கு தண்ணீல கண்டம் போல் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நேர்முகத்தேர்விற்கு அழைப்பின்றி வந்திருக்க முடியாது.

over qualified என்று தெரிந்தும் ஏன் அழைக்கப்பட்டார்?

ஒருவர், தனது நிறுவனத்துக்கு பொருந்தமாட்டார் என நேர்முக்தேர்வு செய்தவர் கருதினால், வந்தவர் தன்னம்பிக்கையை சிதைக்காமல், சொல்லி வைப்பதே  over qualified. இதை Face saving exercise என்பர். 
ஜயா, நீஙகள் படிச்ச படிப்புக்கு, எங்கவோ இருக்க வேண்டிய ஆள், உங்களிடம் வேலை வாங்கிற தகுதி எங்களுக்கு இல்லை ஜயா. பப்பாவில் ஏத்துவது போல், அல்வா கொடுப்பது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாதவூரான் said:

என்ன சுமே அன்டிநீங்கள் சட்டன் பக்கம் வரேலைப் போல. இங்கை ஒரு சுப்பர் மாக்கெட்டிலும் டொயிலெட் பேப்பர் இல்லை

நான் ஏன் அங்கு வரப்போகிறேன். இப்பகுதியில் தாராளமாக இருக்கு. உங்களுக்குத் தேவை என்றால் வாங்கோ வாங்கித் தருகிறேன்.

10 hours ago, goshan_che said:

சட்டன்ல இருக்கிற சனத்துக்கு தண்ணீல கண்டம் போல் 🤣

🤔😥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தெட்டு திருமண சேவைகள் உலகெங்கும்.

திருமண சேவை 1

ரெஜிஸ்ட்ரேசன் இலவசம் என்று தூண்டிலைப் போடுவார்கள். சரி போய் ரெஜிஸ்டர் பண்ணுவம் என்றுபோனால் £100 கட்டினால் ஒருவருட சந்தா இலவசம் என்பர். சரி திருமண விடயம். கட்டுவம் என்று கட்டி ஒரு நாலு சாதகம் பொருந்தி அதில ஒன்று பிடித்ததாக தெரிவுசெய்து மாப்பிளை வீட்டின் தொலைபேசி எடுத்துக் கதைத்து சரிவராமல் மீண்டும் சலிக்காமல் அலசி .... இப்படியே ஐந்து மணமகனின் போனிலக்கம் தந்து முடிய ஆறாவது இலக்கம் கேட்டால், ஐந்து மணமகனை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். இனி மேற்கொண்டு மணமகனின் விபரம் வேண்டும் என்றால் மீண்டும் £100 கட்டவேண்டும் என்று கூற, நான் மீண்டும் பணம் கட்ட மாட்டேன்.  விரும்பினால் இலக்கம் தாருங்கள் என்றால், இந்த இலக்கத்தில் உள்ள மணமகன் வீட்டினர் உங்கள் சாதகம் பொருத்தமாக இருக்கிறது என்கின்றனர். £100 கட்டினால் தருக்கிறோமென்று மாறி மாறி வற்சப்பில் செய்திகள் போட்டுக்கொண்டிருக்க, வேறுவழியின்றி வற்சப்பில் அந்த இலக்கத்தைத் தடை செய்தால் இன்னொரு இலக்கத்தில் வந்து இதே தொல்லை. இறுதியில் உங்களைப் பற்றி செய்தித் தாள்களில் எழுதப்போகிறேன் என்ற பின்னர்தான் ஆறு மாதங்கள் பேசாமல் இருந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து போன் வருகிறது

நான் : காலோ

அவ : கலோ
 
நான் : யார் கதைக்கிறீங்கள்

அவ : நான் கிளிநொச்சியிலிருந்து கதைக்கிறன்.

நான் : என்ன விஷயமா கதைக்க எடுத்தனீங்கள் ??

அவ : எனக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

நான் : எங்க லண்டனிலையா ?

அவ : இல்ல இங்கதான் இருக்கிறார். அவருக்கு லண்டன் வர விருப்பம்.

நான் : சரி அதுக்கு நான் என்ன செய்ய ?

அவ : உங்கட மகளா நீங்கள் கலியாணம் பேசிறது ??

நான் : ஓம். ஆர் உங்களுக்குச் சொன்னது ?

அவ : எனக்கு ஒரு ஐயா தந்தவர். அதுதான் உங்களோட கதைக்கிறன்.

நான் : உங்கட தம்பி என்ன படிச்சவர் ?

அவ : A L தான் படிச்சவர். நீங்கள் சரி எண்டு உங்கட மகள் இங்க வந்து ரெஜிஸ்டர் பண்ணி உங்க கூப்பிட்டா அவர் பிறகு படிப்பார்.

வந்த கோபத்தைஅடக்கிக்கொண்டு

நான் : நாங்கள் யேர்மனியில அல்லது லண்டனில பிறந்த  மாப்பிளைதான் பார்க்கிறம்.

அவ : அவர் சரியான கெட்டிக்காரன்.

நான் போனை வைத்துவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியிலயும் கொரோனா தொத்தலாம் என்று ஆரோ கதை கட்டி விட்டினமோ????

இந்தப் பக்கமும் ஆட்கள் வாறதை காணேல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தத் திரியிலயும் கொரோனா தொத்தலாம் என்று ஆரோ கதை கட்டி விட்டினமோ????

இந்தப் பக்கமும் ஆட்கள் வாறதை காணேல்லை.😂

நீங்கள் எழுதுவதை விட்டதால சனம் வாறதில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இலங்கையில் இருந்து போன் வருகிறது

நான் : காலோ

அவ : கலோ
 
நான் : யார் கதைக்கிறீங்கள்

அவ : நான் கிளிநொச்சியிலிருந்து கதைக்கிறன்.

நான் : என்ன விஷயமா கதைக்க எடுத்தனீங்கள் ??

அவ : எனக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

நான் : எங்க லண்டனிலையா ?

அவ : இல்ல இங்கதான் இருக்கிறார். அவருக்கு லண்டன் வர விருப்பம்.

நான் : சரி அதுக்கு நான் என்ன செய்ய ?

அவ : உங்கட மகளா நீங்கள் கலியாணம் பேசிறது ??

நான் : ஓம். ஆர் உங்களுக்குச் சொன்னது ?

அவ : எனக்கு ஒரு ஐயா தந்தவர். அதுதான் உங்களோட கதைக்கிறன்.

நான் : உங்கட தம்பி என்ன படிச்சவர் ?

அவ : A L தான் படிச்சவர். நீங்கள் சரி எண்டு உங்கட மகள் இங்க வந்து ரெஜிஸ்டர் பண்ணி உங்க கூப்பிட்டா அவர் பிறகு படிப்பார்.

வந்த கோபத்தைஅடக்கிக்கொண்டு

நான் : நாங்கள் யேர்மனியில அல்லது லண்டனில பிறந்த  மாப்பிளைதான் பார்க்கிறம்.

அவ : அவர் சரியான கெட்டிக்காரன்.

நான் போனை வைத்துவிட்டேன்.

இங்க பிறந்த பெண் பிள்ளைகளுக்கு கடைசி வரைக்கும் ஊரில் பிறந்த ஆண்களை கட்டிக் குடுக்க கூடாது...எங்கட ஆட்களுக்கு அது ஒத்து வராது 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

இங்க பிறந்த பெண் பிள்ளைகளுக்கு கடைசி வரைக்கும் ஊரில் பிறந்த ஆண்களை கட்டிக் குடுக்க கூடாது...எங்கட ஆட்களுக்கு அது ஒத்து வராது 

எமது 80% முடிவுகள் நாம் சார்ந்த சமூக முடிவாக அமைகிறது இதனை நவீன சந்தைப்படுத்தும் உத்திகளில் ஒன்றாக வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன , இதற்கு யாரும் விதி விலக்கல்ல ( படித்தவர் , முற்போக்கு சிந்தனையுடையவர்) , எமது முழு வாழ்க்கையும் மற்றவர் என்ன சொல்வார்களோ என்ற கவலையிலேயே முடிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

உண்மை ...மற்றவர்கள் என்ன நினைப்பினமோ என்று வாழ்வதிலேயே எமது வாழ்க்கை முடிந்து விடும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

நீங்கள் எழுதுவதை விட்டதால சனம் வாறதில்லை😂

ஒவ்வொருநாளும் எழுதிக்கொண்டுதானே இருக்கிறன். ஒரு அரை நாள் எழுத்தாட்டில் ஆளை மறக்கிறதே 😃

3 hours ago, ரதி said:

இங்க பிறந்த பெண் பிள்ளைகளுக்கு கடைசி வரைக்கும் ஊரில் பிறந்த ஆண்களை கட்டிக் குடுக்க கூடாது...எங்கட ஆட்களுக்கு அது ஒத்து வராது 

ஆனால் ரதி சிலர் அங்குபிறந்த ஆண்களைக் கட்டி மகிழ்வாயும் வாழுகின்றனர் தானே??

2 hours ago, vasee said:

எமது 80% முடிவுகள் நாம் சார்ந்த சமூக முடிவாக அமைகிறது இதனை நவீன சந்தைப்படுத்தும் உத்திகளில் ஒன்றாக வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன , இதற்கு யாரும் விதி விலக்கல்ல ( படித்தவர் , முற்போக்கு சிந்தனையுடையவர்) , எமது முழு வாழ்க்கையும் மற்றவர் என்ன சொல்வார்களோ என்ற கவலையிலேயே முடிந்துவிடும்.

எதைப்பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.

80 % முடிவு என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள் வசீ ???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இங்க பிறந்த பெண் பிள்ளைகளுக்கு கடைசி வரைக்கும் ஊரில் பிறந்த ஆண்களை கட்டிக் குடுக்க கூடாது...எங்கட ஆட்களுக்கு அது ஒத்து வராது 

எங்கட ஆட்களுக்கு சரி வந்தாலும், இங்க பிறந்த பெண்பிள்ளைகளுக்கு ஒத்தே போகாது.

எனக்கு தெரிந்த பிள்ளைக்கு, அண்ணனின் மகன் என்று ஒத்தக் காலில் நின்று கட்டி வைத்தார் தாயார்.... மொரட்டுவ என்ஜினீயர்.

ஆறுமாதத்தில் பெண்ணின் தாயே, சொந்த அத்தையே திருத்தி விட்டார். அவர் விசா இல்லாததால் ( ஒரு வருசம் இருக்கவேண்டும்) எங்கேயோ ஒளிந்து விட்டார். அவர் கட்டு பெட்டித்தனமா எதிர்பார்த்தார். வைன் தொடக்கூடாது. நண்பிகளுடன் இரவிரவாக பார்ட்டி என்று திரியக் கூடாது..... சரி வரவில்லை. அத்தை வைன் அடித்தாலும் பிரச்னை. எல்லாத்துக்கும் மேலே ஆங்கில பிரச்னை, நல்ல வேலை எடுக்க இல்லை.

அவர் எங்கே என்று தெரியாததால், விவாகரத்து செய்ய முடியாமல் இருக்குது. 

பெரிய கஷடம் தான். பத்தாததுக்கு, மருமகன் எங்க எண்டு கனகாலத்துக்கு தெரியாமல் போனால், கொலை கேசிலயும் வந்து முடியும் எண்டு யாரோ பயம் காட்டி வேற போட்டினம். 

அங்கிருந்து வருவது பெண்கள் என்றால் ஆண்கள் சமாளிப்பார்கள். ஆண்கள் என்றால் கஷடம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, Nathamuni said:

எங்கட ஆட்களுக்கு சரி வந்தாலும், இங்க பிறந்த பிள்ளைகளுக்கு ஒத்தே போகாது.

எனக்கு தெரிந்த பிள்ளைக்கு, அண்ணனின் மகன் என்று ஒத்தக் காலில் நின்று கட்டி வைத்தார் தாயார்.... மொரட்டுவ என்ஜினீயர்.

ஆறுமாதத்தில் பெண்ணின் தாயே, சொந்த அத்தையே திருத்தி விட்டார். அவர் விசா இல்லாததால் ( ஒரு வருசம் இருக்கவேண்டும்) எங்கேயோ ஒளிந்து விட்டார். அவர் கட்டு பெட்டித்தனமா எதிர்பார்த்தார். வைன் தொடக்கூடாது. நண்பிகளுடன் இரவிரவாக பார்ட்டி என்று திரியக் கூடாது..... சரி வரவில்லை. அத்தை வைன் அடித்தாலும் பிரச்னை. எல்லாத்துக்கும் மேலே ஆங்கில பிரச்னை, நல்ல வேலை எடுக்க இல்லை.

அவர் எங்கே என்று தெரியாததால், விவாகரத்து செய்ய முடியாமல் இருக்குது. 

பெரிய கஷடம் தான். பத்தாததுக்கு, மருமகன் எங்க எண்டு கனகாலத்துக்கு தெரியாமல் போனால், கொலை கேசிலயும் வந்து முடியும் எண்டு யாரோ பயம் காட்டி வேற போட்டினம். 

வைன் அடிக்கிற அத்தை எப்பிடி இலங்கையில கட்டிவச்சவா. அப்பிடியென்றாலும் முதலே மருமகனிட்டை எல்லாத்தையும் சொல்லி எல்லா கலியாணத்தை நடத்தியிருக்கவேணும்.

அதுசரி வைன் குடிக்காமல் உங்கட மாமி இருக்கமாட்டாவோ???😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுசரி வைன் குடிக்காமல் உங்கட மாமி இருக்கமாட்டாவோ???😀

உங்கட மாமி?😁

மாமி..... டீ, காப்பி குடிக்ககிறதில்லை.

நீங்கள் எங்க இருக்கிறியள்? அவோவுக்கு southern comfort, இவோவுக்கு siminoff வோட்கா, அடுத்தவோவுக்கு red wine, saro ஆண்டிக்கு போஸ்டர் பீர் தான் என்று பார்ட்டி நடக்குது.

ஆம்பிளையள் ஒரு பக்கமா தண்ணி அடிக்க, பொம்பிளையல் கோக் அடிச்சுக்க கொண்டு ஊர் கதை பேசினது பழைய காலம். அவயலும் தண்ணியோட தான் கதை.

அது தான் சிலபேருக்கு style.... ஆங்...
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

உங்கட மாமி?😁

மாமி..... டீ, காப்பி குடிக்ககிறதில்லை.

நீங்கள் எங்க இருக்கிறியள்? அவோவுக்கு southern comfort, இவோவுக்கு siminoff வோட்கா, அடுத்தவோவுக்கு red wine, saro ஆண்டிக்கு போஸ்டர் பீர் தான் என்று பார்ட்டி நடக்குது.

ஆம்பிளையள் ஒரு பக்கமா தண்ணி அடிக்க, பொம்பிளையல் கோக் அடிச்சுக்க கொண்டு ஊர் கதை பேசினது பழைய காலம். அவயலும் தண்ணியோட தான் கதை.

அது தான் சிலபேருக்கு style.... ஆங்...
 
சில இடங்களில் நடக்கலாம் அதுக்காக எல்லாரும் குடிக்கிறமாதிரி சொல்லுறியள். நாம் போகும் இடங்களில் இன்னும் அந்த அளவுக்கு இல்லை. எமது ஊரவர் உறவினர் உட்பட. விடிய எழும்பி ஒரு பால்கோப்பி குடிச்சால்தான் நின்மதியா இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.