Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Featured Replies

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதும் இந்துத் தெய்வங்களின் பெயரில் உள்ள வீதிகளை கிறிஸ்தவ மற்றும் பொதுப் பெயர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி இந்து சமய அதியுயர் குருபீடங்கள் அது உயர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில்,
இலங்கைத் தீவின் வடபகுதியில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் செயற்பாடுகளும் இந்துப் பிரதேசங்களில் கிறிஸ்தவ சிலைகளை நிறுவும் செயற்பாடுகளும் இந்துக்களின் பூர்வீகப் பிரதேசங்களை இந்துக்கள் அல்லாத பிரதேசங்களாக பெயர் மாற்றம் செய்யும் செயற்பாடுகளும் இந்து ஆலயங்களுக்கும் திருவுருவங்களுக்கும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும் ஒரு பகுதி கிறிஸ்தவ பாதிரிமார்களாலும் அவர்கள் சார்ந்த திருச்சபைகளினாலும் அவர்கள் சார்ந்தவர்களாலும் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டு வருவது ஆழ்ந்த வேதனைக்குரியதாகும்.

அவை வடபகுதியில் இந்து கிறிஸ்தவ நட்புறவையும் நல்லிணக்கத்தையும் மிக மோசமாக பாதிக்கும் செயல்கள் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் அனைத்து இந்து குருபீடங்களும் நிறுவனங்களும் இணைந்து ஒப்பமிட்டு இக் கடிதத்தினை அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77532

  • Replies 134
  • Views 10.4k
  • Created
  • Last Reply
14 minutes ago, ampanai said:

இந்து கோவில் உள்ள வீதியில் புத்தர் சிலை வைத்து , வீதி பேரை மாற்றினால் கப்சிப்பென்று அடங்கி போவார்கள்। கிறிஸ்தவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் எதாவது செய்தால் குய்யோ முய்யோ எண்டு கத்துவார்கள்।

அப்படி என்றால் மன்னாரில் இந்துக்களே இல்லாத , ஏன் மக்களே இல்லாத இடங்களில் கோவில்கள் எதுக்கு கட்டுகிறீர்கள்? முதல் கல்லை வைப்பார்கள், பின்னர் கோவில் திருப்பணி எண்டு தட்டு ஏந்துவார்கள்। பின்னர் சிறிய கோவில், பின்னர் பெரிய கோவில்। ஆனால் அங்கு மனித சஞ்சாரமே இருக்காது। இது எல்லாம் பெரிய திடடமிடலுடன்தான் நடக்குதென்பது மக்களுக்கு தெரிந்தாலும் அமைதி காக்கிறார்கள்। ஆனால் அங்கு மக்கள் எப்போதும் அமைதி காப்பார்கள் என்று சொல்ல முடியாது।

எனவே இந்து மகா சபை தங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை பிழை பிடிப்பது நல்லது।இப்போது கிறிஸ்தவர்கள் , இந்துக்களிடையில் நல்லிணக்கம் இருப்பதாக தெரியவில்லை। விஷ்வா இந்து பரிஷத் , சங்கபரிவர் எப்போது இங்கு காலடி வைத்ததோ அன்றிலிருந்து இது தொலைந்து விட்ட்து।

  • தொடங்கியவர்
2 minutes ago, Vankalayan said:

எனவே இந்து மகா சபை தங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை பிழை பிடிப்பது நல்லது।இப்போது கிறிஸ்தவர்கள் , இந்துக்களிடையில் நல்லிணக்கம் இருப்பதாக தெரியவில்லை। விஷ்வா இந்து பரிஷத் , சங்கபரிவர் எப்போது இங்கு காலடி வைத்ததோ அன்றிலிருந்து இது தொலைந்து விட்ட்து।

உலகில் உள்ள மத சார்ந்து பார்த்தால், கிறிஸ்தவ மதமே அதிக பண பலம் கொண்டது. அரசு தவிர்ந்து பார்த்தால், கத்தோலிக்க திருச்சபை பண பலத்தில் உலகின் முதலாவது இடத்தில் உள்ளது.  அதனால், அவர்கள் உலகில் பரந்து செயல்பட முடிகின்றது. உலகின் பலம் வாய்ந்த நாடுகளும் மதத்தை சில நாடுகளில் அரசியல் ஆயுதமாக பாவிப்பார்கள். 

உலகின் இரு நாடுகளிலேயே இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதில் ஒரு நாட்டில் மட்டுமே அரச மதமாக இந்து உள்ளது.  இது, உலகின் மற்றைய மதங்களுடன் ஓப்பிடும்பொழுது,குறைவானது.  

இன்றைய பொருளாதார வளர்ச்சியில் இந்திய இந்துத்தவா அமைப்புக்களும் சடுதியாக பணம் பொருந்திய அமைப்புக்களாக மாறிவிட்டன. இதனால், அண்டை நாடுகளான இலங்கையில் இவர்களின் பணம் ஊடாக ஒரு அழுத்தம் இருக்கும்.  

சீனாவால் இலங்கையில் பொருளாதார அழுத்தம் உள்ளது. 

இப்போது சிலமதங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு கட்டளையாக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் பிறப்பிக்கபட்டு விட்டது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் எறகனவே இருந்த வீதிகள் பெயர் மாற்றங்கள் செய்வது சரியா?? தப்பா?? மதம் மாற்றுவது தப்பா சரியா?? இதை மட்டும் சொல்லுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மார்த்தாண்டன் said:

இப்போது சிலமதங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு கட்டளையாக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் பிறப்பிக்கபட்டு விட்டது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் எறகனவே இருந்த வீதிகள் பெயர் மாற்றங்கள் செய்வது சரியா?? தப்பா?? மதம் மாற்றுவது தப்பா சரியா?? இதை மட்டும் சொல்லுங்கள் 

நீங்கள் எங்கு இருந்து எழுதுகிறீர்கள் ? லண்டனிலிருந்தா ?

முதலில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் அறிக்கையினை வாசியுங்கள்.

பின் கருத்தெழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மார்த்தாண்டன் said:

இப்போது சிலமதங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு கட்டளையாக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் பிறப்பிக்கபட்டு விட்டது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் எறகனவே இருந்த வீதிகள் பெயர் மாற்றங்கள் செய்வது சரியா?? தப்பா?? மதம் மாற்றுவது தப்பா சரியா?? இதை மட்டும் சொல்லுங்கள் 

திரு மார்த்தாண்டன் அவர்களே,

நீங்கள் இந்து மதமா அல்லது  சைவ சமயமா ?

சைவர்களை சைவர்களாகவும் இந்துக்களை இந்துவாகவும் இருக்கும்படி சைவர்களையும் இந்துக்களையும் கேளுங்கள்.  அவர்கள்தானே மதம் மாறுகிறார்கள்..

பலருக்கு தாங்கள் சைவமா  இந்துவா என்பதே தெரிவதில்லை.😀

அவன்தான் வா வா வந்து சமயம் மாறு என்கிறான், பைத்தியக்காறன். உங்களுக்கு எங்கே போனது  அறிவு ?

சரி அவன்தான் சமயம் மாறுகிறானென்றால் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? 😡

சமயம் மாறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதுதானே முறை. அதைவிடுத்து சும்மா குய்யோ முய்யோ என்று கத்துவீர்களா ?  

  • தொடங்கியவர்
1 hour ago, மார்த்தாண்டன் said:

இப்போது சிலமதங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு கட்டளையாக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் பிறப்பிக்கபட்டு விட்டது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் எறகனவே இருந்த வீதிகள் பெயர் மாற்றங்கள் செய்வது சரியா?? தப்பா?? மதம் மாற்றுவது தப்பா சரியா?? இதை மட்டும் சொல்லுங்கள் 

1. எறகனவே இருந்த வீதிகள் பெயர் மாற்றங்கள் செய்வது சரியா?? தப்பா??

இலங்கை போன்ற சனநாயக நாட்டில் ஒரு வீதிக்கு பெயர் வைப்பது என்பது பிரதேச சபைக்குட்பட்டது என எண்ணுகிறேன். அதாவது, பிரதேச சபைக்கு அந்த அதிகாரம் உள்ளது.

எனவே, பெயர் மாற்றப்படுவதற்கும் ( இது பொதுவாக அபூர்வமாக நடக்கும் ஒன்று) அவர்களே விவாதித்து அங்கீகரிக்க வேண்டும்.

2. மதம் மாற்றுவது தப்பா சரியா??

அது அவரவர் தனிப்பட்ட விருப்பு. அதனால் தான் மத சுதந்திரம் என்பது சனநாயக நாடுகளின் அரசியல் அமைப்பில் உள்ளது.

இருந்தும், இலங்கை உட்பட பல நாடுகளில் பலவேறு காரணங்களுக்காகவும் மக்கள் மதம் மாறுகிறார்கள்.

பின் குறிப்பு : இவ்வாறான கேள்விகளுக்கு அரசியல் வாதிகள் பதில் தர மாட்டார்கள்.

  • தொடங்கியவர்

இது சிறிலங்கா அரசின் தேசிய சின்னம் அதில், புத்த மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

Emblem of Sri Lanka.svg

1. The crest is the Dharmachakra, symbolizing the country's foremost place for Buddhism and just rule.

2. Traditional Sinhalese heraldic symbols for the sun and the moon form the supporters. Sun and Moon, and Lion depicting Lord Buddha is given less prominence than cart wheel of English Buddhism, so it is in great discordance with National Scriptures

https://en.wikipedia.org/wiki/Emblem_of_Sri_Lanka

இந்த குரு பீடங்களில் உள்ள  மத தலைவர்களான ஐயர்மார்கள் எல்லாம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டு அந்த கரையோர பகுதி மக்களிடம் சென்று அங்கு முகாமிட்டு அவர்களுடன் ஒன்றாக  உணவருந்தி அந்த மக்களுக்கு இந்து மத‍த்தின் த‍த்துவங்களை விளக்கலாம் தானே. அவ்வாறு மதம் மாறுவதாக தாம் கருதும் மக்களை சந்திக்காமால் திமிர்தனமாக  ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதில் என்ன பயன். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

நங்கள் பெட்டிசன் மட்டும்தான் போடுவோம். இல்லாவிட்டால் குய்யோ முய்யோவென்று கத்துவோம். அம்புட்டுதே. 😡

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

இது சிறிலங்கா அரசின் தேசிய சின்னம் அதில், புத்த மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

Emblem of Sri Lanka.svg

https://en.wikipedia.org/wiki/Emblem_of_Sri_Lanka

UoJ_logo.png

இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சின்னம். இதில் இந்து சமயத்துக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/University_of_Jaffna

  • தொடங்கியவர்
4 minutes ago, கற்பகதரு said:

UoJ_logo.png

இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சின்னம். இதில் இந்து சமயத்துக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/University_of_Jaffna

குத்துவிளக்கும் மாடும் தமிழர் பண்பாடு சேர்ந்தவை, இல்லையா ? 

சரி அவர்கள் சிங்களத்தில் கூட எழுதி உள்ளார்கள். ஆனால், ஒரு நாடு என்ற ரீதியில் அதைவிட பெருந்தன்மையுடன் நடந்தால் நாடு நன்றாக இருக்குமே  !

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கற்பகதரு said:

UoJ_logo.png

இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சின்னம். இதில் இந்து சமயத்துக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

https://en.m.wikipedia.org/wiki/University_of_Jaffna

31 minutes ago, ampanai said:

குத்துவிளக்கும் மாடும் தமிழர் பண்பாடு சேர்ந்தவை, இல்லையா ? 

சரி அவர்கள் சிங்களத்தில் கூட எழுதி உள்ளார்கள். ஆனால், ஒரு நாடு என்ற ரீதியில் அதைவிட பெருந்தன்மையுடன் நடந்தால் நாடு நன்றாக இருக்குமே  !

10 hours ago, ampanai said:

இது சிறிலங்கா அரசின் தேசிய சின்னம் அதில், புத்த மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

Emblem of Sri Lanka.svg

1. The crest is the Dharmachakra, symbolizing the country's foremost place for Buddhism and just rule.

2. Traditional Sinhalese heraldic symbols for the sun and the moon form the supporters. Sun and Moon, and Lion depicting Lord Buddha is given less prominence than cart wheel of English Buddhism, so it is in great discordance with National Scriptures

https://en.wikipedia.org/wiki/Emblem_of_Sri_Lanka

தமிழரும் புத்தமதத்தவராக இருந்தவர்கள் தானே? ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றாவது புத்த மத காப்பியங்கள். மணிமேகலையின்படி ஈழத்தமிழர் பௌத்தவர்கள். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பௌத்த மதத்தை கொண்டு சென்றவர் போதி தருமர் என்ற தமிழ் துறவி. ஆகவே பௌத்தத்துக்கு ஈழத்தமிழராகிய நாமும் முதலிடம் கொடுப்போமே? அதோடு சேர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து இலச்சினையில் உள்ள நந்தி தேவரை இந்துக்கடவுளாக மற்ற மதத்தினர் பார்க்காமல் “தமிழ் கலாச்சாரத்து மாடு” என்று நீங்கள் சொல்வது போல ஏற்றுக் கொள்வோம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழு, வாழ விடு என்று வாழப் பழகுவோம், என்ன சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ampanai said:

இந்து சமய அதியுயர் குருபீடங்கள் அது உயர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளது.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.

அண்மையில் மன்னாரில் மட்டும் 2,500 மேற்பட்ட பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறியது;கிழக்கு மாகாணத்தில் குடும்பம் குடும்பமாக இஸ்லாம் மத்துக்கு மாறியமி, வன்னியில் முன்னாள் போராளிகள் பலர் இஸ்லாம் மதத்துக்கு மாறியமை, யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு,வடமராட்சி கிழக்கு,புங்குடுதீவு என இஸ்லாம் மத பிரசின்னமே இல்லத இடங்களில் எல்லம் நடக்கும் மத மாற்றங்கள், சட்டவிரோதமான இஸ்லாமிய குடியேற்றங்கள்/காணி பரிப்புகள் எல்லாம் இவர்களின் கண்ணுக்கு தெரியாதா, இவர்களை இயக்குவது மொட்டா,வீணையா அல்லது அரேபிய நிதியா?

20 hours ago, Kapithan said:

நீங்கள் எங்கு இருந்து எழுதுகிறீர்கள் ? லண்டனிலிருந்தா ?

முதலில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் அறிக்கையினை வாசியுங்கள்.

பின் கருத்தெழுதுங்கள்.

இந்த ஊர்காவற்துறை பிரதேச சபை வீணைக்கட்சியின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது, இதிலிருந்து விளங்கவில்லையா சைவ கத்தோலிக்க முரண்பாடுகளுக்கு வித்திடுபவர்கள் யாரென்று.

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் உள்ள யாழ் துணைப்பல்கலைக்கழகத்தில் புத்த விகாரை அரச செலவில்... சைவக் கோயிலோ அதே நிலையில் 

Saiva_temple_Kili_campus.jpg

Sarasavi_Viharaya_Kili_campus_01.jpg

Sarasavi_Viharaya_Kili_campus_05.jpg

https://tamilnet.com/art.html?catid=13&artid=39755

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 3:25 AM, கற்பகதரு said:

தமிழரும் புத்தமதத்தவராக இருந்தவர்கள் தானே? ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றாவது புத்த மத காப்பியங்கள். மணிமேகலையின்படி ஈழத்தமிழர் பௌத்தவர்கள். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பௌத்த மதத்தை கொண்டு சென்றவர் போதி தருமர் என்ற தமிழ் துறவி. ஆகவே பௌத்தத்துக்கு ஈழத்தமிழராகிய நாமும் முதலிடம் கொடுப்போமே? அதோடு சேர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து இலச்சினையில் உள்ள நந்தி தேவரை இந்துக்கடவுளாக மற்ற மதத்தினர் பார்க்காமல் “தமிழ் கலாச்சாரத்து மாடு” என்று நீங்கள் சொல்வது போல ஏற்றுக் கொள்வோம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழு, வாழ விடு என்று வாழப் பழகுவோம், என்ன சொல்கிறீர்கள்?

நாங்கள் தான் உலகத்தின் மூத்த குடிகள் என்றபடியால் எப்பொழுதும் வன்வேயாக தான் யோசிப்போம்😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

கிளிநொச்சியில் உள்ள யாழ் துணைப்பல்கலைக்கழகத்தில் புத்த விகாரை அரச செலவில்... சைவக் கோயிலோ அதே நிலையில் 

Saiva_temple_Kili_campus.jpg

Sarasavi_Viharaya_Kili_campus_01.jpg

Sarasavi_Viharaya_Kili_campus_05.jpg

https://tamilnet.com/art.html?catid=13&artid=39755

பெயர்ப் பலகையில் தமிழும் இல்லை. 

எப்போதும்  கூட இருப்பவனிடம்தான் தவறு கண்டுபிடிப்பது. சண்டை பிடிப்பது. 

மதம் மாற்றுகிறார்கள் / மாறுகிறார்கள் என்று கூறுவதற்கு குய்யோ முய்யோ கூட்டத்திற்கு எந்த தகுதியும் இல்லை. 

பட்டினி கிடப்பவனுக்கு ஒரு பருக்கை சோறுகூட போடாதவர்கள் இவர்கள்.😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kapithan said:

மதம் மாற்றுகிறார்கள் / மாறுகிறார்கள் என்று கூறுவதற்கு குய்யோ முய்யோ கூட்டத்திற்கு எந்த தகுதியும் இல்லை. 

பட்டினி கிடப்பவனுக்கு ஒரு பருக்கை சோறுகூட போடாதவர்கள் இவர்கள்.😡

சோறு போடுபவன், மதம் மாற்றும் கோஷ்டி என்று அறிந்து வைத்திருக்கிறார்கள் மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஆகவே பட்டிணிகிடப்பவன் பசிதீர்ப்பவனுக்குப் பின்னால் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 hour ago, Kapithan said:

யாரும் பட்டினியில் இருப்பதில்லை.

பசி தீர்ப்பவனுக்குப் பின்னால் போவதும் இல்லை.

மதம் மாற்றும் கோஷ்டி, பசி தீர்ப்பவனல்ல.

மதம் மாறும்வரை, சோற்றுப் பொட்டலம்.

எதிர்த்தால், கொடுப்பதை ஒரேயடியாக நிறுத்தி  விடுவார்கள்.

Edited by மாங்குயில்

பட்டினி இருப்பவனை, வறுமையில் இருப்பவனை பணம் பொருள் காட்டி மதம் மாற்றுவது மிகமிக மோசமானதொரு ஈனச் செயல். இன்று பலர் இந்த கேவலமான தொழிலைச் செய்ய முற்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஒரு நல்ல மதத்தை பழிச் சொற்களுக்கு ஆளாக்குகிறார்கள்.

நல்ல பண்புள்ள மதப் பற்றாளர்கள் இப்படியான நாகரிகமற்ற மதம் மாற்றும் ஈனச்  செயலை ஒருபோதும் செய்யவும் மாட்டார்கள், ஆதரிக்கவும் மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

யாரும் பட்டினியில் இருப்பதில்லை.

பசி தீர்ப்பவனுக்குப் பின்னால் போவதும் இல்லை.

மதம் மாற்றும் கோஷ்டி, பசி தீர்ப்பவனல்ல.

மதம் மாறும்வரை, சோற்றுப் பொட்டலம்.

எதிர்த்தால், கொடுப்பதை ஒரேயடியாக நிறுத்தி  விடுவார்கள்.

உங்கள் உண்மையான முகம் இதுதான். 😡

யதார்த்தம் தெரியாமல் கனவுலகில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு நனவுலகில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலோ நேர்மையோ அறிவோ இருப்பதில்லை. உங்களால்  காழ்ப்புணர்வை கொட்டத்தான் முடியும். அதற்குமேல் ஒரு பருக்கை சோற்றைத்தானும் ஈயமாட்டீர்கள்.😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

உங்கள் உண்மையான முகம் இதுதான். 😡

யதார்த்தம் தெரியாமல் கனவுலகில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு நனவுலகில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலோ நேர்மையோ அறிவோ இருப்பதில்லை. உங்களால்  காழ்ப்புணர்வை கொட்டத்தான் முடியும். அதற்குமேல் ஒரு பருக்கை சோற்றைத்தானும் ஈயமாட்டீர்கள்.😜

நனவுலகில் நடப்பதைத்தான் சொல்கிறேன் 

2 hours ago, போல் said:

நல்ல பண்புள்ள மதப் பற்றாளர்கள் இப்படியான நாகரிகமற்ற மதம் மாற்றும் ஈனச்  செயலை ஒருபோதும் செய்யவும் மாட்டார்கள், ஆதரிக்கவும் மாட்டார்கள்.

கிறிஸ்தவம் நாகரிகமற்ற மதம் என்றுதான் உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள் 

3 hours ago, போல் said:

பட்டினி இருப்பவனை, வறுமையில் இருப்பவனை பணம் பொருள் காட்டி மதம் மாற்றுவது மிகமிக மோசமானதொரு ஈனச் செயல். இன்று பலர் இந்த கேவலமான தொழிலைச் செய்ய முற்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஒரு நல்ல மதத்தை பழிச் சொற்களுக்கு ஆளாக்குகிறார்கள்.

நல்ல பண்புள்ள மதப் பற்றாளர்கள் இப்படியான நாகரிகமற்ற மதம் மாற்றும் ஈனச்  செயலை ஒருபோதும் செய்யவும் மாட்டார்கள், ஆதரிக்கவும் மாட்டார்கள்.

ஆனால நல்ல  சிறந்த மதப்பற்றுள்ள அதே வேளைஇல் நாகரீகமற்ற பல  நபர்கள் உலகில் உள்ளார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.