Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Featured Replies

கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய சகல வழிபாட்டு நிகழ்வின் போது பக்தர்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்துக்கொள்வதற்கு முடிந்த வரையில் முயற்சிக்குமாறு அனைத்து மத தலைவர்களிடமும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தகளையும் நடத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுகாதார நலனை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும். கொரோனா தொற்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இடம்பெறக்கூடும் என்பதினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் 187 திரையரங்குகள் உண்டு, இவற்றில் 170 மாத்திரமே செயற்படுகின்றன. விசேடமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு போன்ற திரையங்குகளில் தமிழ் சினிமாப் படங்கள் திரையிடப்படும் இடங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர்.

இதேபோன்று ஆங்கில திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளிலும் இரசிகர்கள் கூடுகின்றனர். மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77820
<p></p>

  • தொடங்கியவர்

ஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் !

அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77825

  • தொடங்கியவர்

தலதா மாளிகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடு

தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தளதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

அதன்படி முதற் காரணியாக, மாளிகைக்குள் வருவோர் முகம்,கை,கால் கழுவிட்டு தூய்மையாக உள்வருவதற்கான ஏற்பாடுகளும், விஷக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்து வகையொன்றை பெற்றுக்கொடுத்த பின்னர் உள்நுழைய முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு விஷக் கிருமிகளை ஒழிப்பதற்காக மேறகொள்ளப்பட்டுள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகள்  காரணமாக மாளிகைக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி அந்த சூழலில் நடமாட முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தலத-மளகயல-வஷட-பதகபப-ஏறபட/175-246871

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

நல்லதே நடக்கும்.....கும்பலாக போங்க...கும்பலாக குடுங்க....2009 ..எங்களால் மறக்க முடியாதது தானே...கடவுள் எம்பக்கம் இருந்தால்..

Edited by alvayan

  • தொடங்கியவர்

பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

மறுஅறிவித்தல் வரை ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்துமாறு சகல மக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமும்,இலங்கை சுகாதார அமைச்சும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.இதற்கு அமைவாக மஸ்ஜித்களில் ஜும்ஆ, ஐவேளை, ஜமாஅத் தொழுகைகள் உட்படஏனைய எல்லா வகையான ஒன்றுகூடல்களையும் உடன்அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரும்வரை இடைநிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல்உலமா நாட்டு முஸ்லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்துகொள்ளுமாறும் வேண்டுகோள்விடுக்கிறது எனவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறும் உலமா சபை கோரியுள்ளது.

பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹுத்தஆலா எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு,

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால், அதனைக் கட்டுப்படுத்த ஒவ்வவொரு நாடும் தற்பாதுகாப்பு முயற்சிகளைச் செய்து வருகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும் எனவும் கோரியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத்தடுப்பது சம்பந்தமாக, உலமா சபை பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஜும்ஆ மற்றும் ஜவேளைத்தொழுகை உட்படஅனைத்து ஒன்றுகூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொதுஇடங்களில் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

உரியநேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும். அதானின் முடிவில் “ஸல்லூ பீ ரிஹாலிகும்” (நீங்கள்இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள் என்றுஅறிவிக்க வேண்டும்.

மஸ்ஜிதில் இருக்கும்இமாம் மற்றும்முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ள வேண்டும்.

வீட்டில்உள்ளவர்கள் ஐவேளைத்தொழுகைகளை உரியநேரத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். முன்பின் சுன்னத்தானதொழுகைகள் மற்றும்ஏனைய தஹஜ்ஜுத், ழுஹா, சதகா, நோன்பு போன்ற நபிலானவணக்கங்களில் கூடியகவனம் செலுத்துவதோடு பாவமான காரியங்களிலிருந்து விலகிநிற்றல்.

பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதனால், அவர்கள் சுற்றுலா செல்லுதல், பாதையில்கூடிவிளையாடுதல் போன்ற விடயங்களைத்தவிர்த்து, குர்ஆன்ஓதுதல், துஆ, மற்றும்கற்றல், கற்பித்தல் போன்றநல்ல விடயங்களில்ஈடுபடுத்து வதில்பெற்றோர் கூடுதல்கவனம் செலுத்தல்.

ஒருவர்மற்றவரை சந்தித்தால்ஸலா கூறுவதும்முஸாபஹாசெய்வதும்சுன்னத்தாகும். எனினும், COVID19என்ற நோய்கைகள்மூலம் அதிகமாகப்பரவ வாய்ப்புள்ளது என்றுவைத்திய நிபுணர்கள் கருதுவதால், ஒருவர்மற்றவரை சந்திக்கும்பொழுது முஸாபஹாசெய்வதைத் தவிர்த்து ஸலாம்சொல்வதுடன் போதுமாக்கிக் கொள்ளுதல்.

ஜனாஸாவின் கடமைகளைமார்க்க விதிமுறைகளைப் பேணி நிறைவேற்றுவது எம்மீதுள்ள கடமையாகும். இக்கால சூழ்நிலையை கவனத்திற்கொண்டு அடக்கம்செய்யும் விடயத்தில் ஜனாஸாவிற்கு செய்யவேண்டிய முக்கியகடமைகளுடன் சுருக்கிக் கொள்ளல். சமூகவலைத்தளங்களில் மார்க்கத்திற்கு முரணானமற்றும் ஊர்ஜிதமற்ற தகவல்களைப் பரப்பு வதைத்தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.

https://www.thinakaran.lk/2020/03/16/உள்நாடு/49614/பள்ளிவாசல்களில்-மறுஅறிவித்தல்-வரை-தொழுகைகள்-நிறுத்தம்

1 hour ago, ampanai said:

பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

முசுலீம்களின் மதவெறித் தொழுகைகளை நிறுத்துவதில் கொரோனா வைரஸ் வெற்றிகண்டுள்ளது.

இப்ப ஆவது மனித இனம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்டதை உணர்ந்தா சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யுங்கள் – ஆதீன குரு முதல்வர்கள் கோரிக்கை

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா தாக்கம் குறித்து நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் சிவத்திரு அகத்தியர் அடிகளார், மெய்கண்டார் ஆதீன முதல்வர் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் ஆகியோர் இணைந்து ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறுவதுடன் அது பரவுவதையும் கட்டுப்படுத்த உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆலயத் திருவிழாக்களை இயன்றளவு எளிமையாக மக்கள் நெரிசல் இல்லாமல் நிகழ்த்த ஏற்பாடு செய்யுங்கள். விசேட நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன் அன்னதானம் வழங்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.புலம்பெயர் தேசங்களில் இருந்து இரு வாரங்களுக்குள் நாட்டிற்குத் திரும்பியவர்கள் ஆலயங்களிற்குச் செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கொடிய நோயிலிருந்து உலக மக்களைக் காப்பாற்ற இறைவனை மனமுருகி பிரார்த்திப்போம்.

இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அபாயத்திற்கு எமது நாடும் உட்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சைவ மக்களையும் ஆலயங்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறுவதுடன் அது பரவுவதையும் கட்டுப்படுத்த உதவுங்கள் என சைவ மக்களிடம் ஆதீன குரு முதல்வர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.(15)
 
http://www.samakalam.com/செய்திகள்/ஆலயங்களில்-பெருமளவில்-தி/

  • கருத்துக்கள உறவுகள்

கொர்னோவை  பார்த்து புத்தனும் ,அல்லாவும் ,யேசுவும் ,சிவனும் ஓடியே போய் விட்டனர் .

26 minutes ago, பெருமாள் said:

கொர்னோவை  பார்த்து புத்தனும் ,அல்லாவும் ,யேசுவும் ,சிவனும் ஓடியே போய் விட்டனர் .

உண்மை தான் கொராணாவுக்கு மனிதன்  தனது அறிவின் மூலம் மருந்து கண்டு பிடித்து அதை கட்டுப்படுத்தி சுகாதார வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியபின்னர் மதவாதிகள் ஒடிய இந்த நால்வரையும்  அழைத்துவந்து தமது வியாபாரத்தையும் மற்ற அடுத்த  மத வெறுப்பையும் தொடர்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

உண்மை தான் கொராணாவுக்கு மனிதன்  தனது அறிவின் மூலம் மருந்து கண்டு பிடித்து அதை கட்டுப்படுத்தி சுகாதார வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியபின்னர் மதவாதிகள் ஒடிய இந்த நால்வரையும்  அழைத்துவந்து தமது வியாபாரத்தையும் மற்ற அடுத்த  மத வெறுப்பையும் தொடர்வார்கள். 

-ஊரில் சியா மாசெட்டி வந்தவுடன் சாதி பார்த்து வாழ்ந்த கூட்டம் மறந்த கதை போல் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, tulpen said:

உண்மை தான் கொராணாவுக்கு மனிதன்  தனது அறிவின் மூலம் மருந்து கண்டு பிடித்து அதை கட்டுப்படுத்தி சுகாதார வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியபின்னர் மதவாதிகள் ஒடிய இந்த நால்வரையும்  அழைத்துவந்து தமது வியாபாரத்தையும் மற்ற அடுத்த  மத வெறுப்பையும் தொடர்வார்கள். 

மனிதனைப் படைத்த அதே கடவுள், நோயையும் படைத்திருக்கிறான்.

நோய் வந்தால் மருத்துவம் செய், என்பதையும் அதே கடவுள்தான் சொல்கிறார்.

  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என்றும், பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் எனவும் நித்யானந்தா டுவிட்டரில் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்னை தாக்காது. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்".

https://www.bbc.com/tamil/india-51903285

இறைவனை எங்கிருந்தும் தேடலாம்। ஆலயத்தில் போய் பங்குபற்றவிடடாலும் பரவயில்லை, வீட்டிலிருந்தும் கடவுளை வணங்கலாம்। நாடடை ஆளும் அதிகாரிகளுக்கும், சட்ட்திட்கும் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்।

24 minutes ago, ampanai said:

கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என்றும், பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் எனவும் நித்யானந்தா டுவிட்டரில் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்னை தாக்காது. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்".

https://www.bbc.com/tamil/india-51903285

அந்த பொம்பிளை பொருக்கி சாமி பிறந்த , வளர்ந்த இடம் தெரியும்தானே। அதே கள்ள புத்தி, தந்திர பேச்சுக்கள்। அந்த பொறுக்கியை பின்பற்றும் எருமை மாடுகள்  இருக்கும் வரைக்கும் இப்படித்தான் பேசுவான்।

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

எல்லாவற்றிலும் பெரிய இறைவன் என்று சொல்லபடுகிற அல்லா தொடங்கி எல்லா இறைவன்களுமே வெறும் வெற்று வேட்டுகள் என்பதை கொறொனாவைரஸ் நிருபித்துள்ளது.

  • தொடங்கியவர்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

எல்லாவற்றிலும் பெரிய இறைவன் என்று சொல்லபடுகிற அல்லா தொடங்கி எல்லா இறைவன்களுமே வெறும் வெற்று வேட்டுகள் என்பதை கொறொனாவைரஸ் நிருபித்துள்ளது.

நாத்திகனையும் அல்லவா விட்டுவைக்கவில்லை ? 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொர்னோவை  பார்த்து புத்தனும் ,அல்லாவும் ,யேசுவும் ,சிவனும் ஓடியே போய் விட்டனர் .

எனக்கொரு வ்ச்சப் மெசேச் வந்தது '" கொறோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு  இந்த ஜெபத்தைக் கூறுங்கள் "" என.

நான் கேட்டேன் "" சாப்பட்டிற்கு முன்பா பின்பா ?"" என .

இன்னும் பதிலைக் காணோம்.

1 hour ago, மாங்குயில் said:

மனிதனைப் படைத்த அதே கடவுள், நோயையும் படைத்திருக்கிறான்.

நோய் வந்தால் மருத்துவம் செய், என்பதையும் அதே கடவுள்தான் சொல்கிறார்.

சைவக் கடவுளா வேதக் கடவுளா அல்லது அல்லாவா ?

எந்தக் கடவுள் ? 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ampanai said:

நாத்திகனையும் அல்லவா விட்டுவைக்கவில்லை ? 🙂 

கோரோனோ வைரஸ் பொசிட்டிவ் ஆக இருக்கும் நாத்திகர்களின் நாவுகள் அவர்களையறியாமலே இறைவனைத் துதிக்க ஆரம்பிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

26 minutes ago, மாங்குயில் said:

கோரோனோ வைரஸ் பொசிட்டிவ் ஆக இருக்கும் நாத்திகர்களின் நாவுகள் அவர்களையறியாமலே இறைவனைத் துதிக்க ஆரம்பிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

அப்படி என்றால் எல்லோருடைய நாவும் இறைவனை துதிக்கப்போகிறதென்று சொல்லுகிறீர்கள்। Good.

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, ampanai said:

நாத்திகனையும் அல்லவா விட்டுவைக்கவில்லை ? 🙂 

நாத்திகன் என்றால் ஏதோ இறைவனினின் அவதாரம் ஒரு சாமி  அதனால் நோய் வராது  என்று நினைத்துவிட்டீர்கள்.மனிதர்களுக்கு நோய் வருவது இயற்கை என்று நம்புபவர்கள் அவர்கள். அவர்களுக்கு நோய் வந்தால் டொக்டரிடம் போய் மருந்து எடுத்து கொள்வார்கள்

இறைவா எனக்கு நோய் வராமல் காப்பாற்று என்று இறைவனிடம் மன்றாடுபவர்கள் பக்தர்கள்.
பக்தர்களுக்கு நோய் வந்தால் இறைவனிடம் நோயை குணப்புடுத்தும் படி காசும் கொடுத்து மன்றாடி பிரார்த்தனை செய்து விட்டு பின்பு டொக்டரிடமும் சென்று மருந்து வாங்கி குடிப்பார்கள். டொக்டரின் கொடுத்த மருந்தால் நோய் மாறினால் இறைவனுக்கு நன்றி என்பார்கள்.😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் இயற்கை மூலம் தன்னை நிரூபிக்கின்றான் .
அவனின்றி அணுவும் அசையாது.
கடவுள் இல்லை...இல்லை எனும் போதுதான் இயற்கை அழிவுகளும் கூடிக்கொண்டே போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் இயற்கை மூலம் தன்னை நிரூபிக்கின்றான் .
அவனின்றி அணுவும் அசையாது.
கடவுள் இல்லை...இல்லை எனும் போதுதான் இயற்கை அழிவுகளும் கூடிக்கொண்டே போகின்றது.

என்ன உங்கடை வெடி நநைந்து போச்சுது போல.ஒரு அசுமாத்ததையும் கானோம்.நானும் அங்கால ஒன்டு போட்டிருக்கறன் பாப்போம்😂

6 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் இயற்கை மூலம் தன்னை நிரூபிக்கின்றான் .
அவனின்றி அணுவும் அசையாது.
கடவுள் இல்லை...இல்லை எனும் போதுதான் இயற்கை அழிவுகளும் கூடிக்கொண்டே போகின்றது.

இயற்கையை அறிவதுதான் விஞ்ஞானம். அந்த அணுவும் அது சொல்லித்தான் தொியும். விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முயற்சியும், பயிற்சியும், தைரியமும் இல்லாமல் குறுக்கு வழியில் செல்ல எத்தனிப்பவர்களின் விளக்கம் அல்லது கட்டுக் கதையே கடவுள். அப்படியொன்று இருந்தாலும் அது எமக்கு விஞ்ஞானம் அறித்தந்த இந்த பூமியையும் சூரியக் குடும்பத்தை மட்டுமின்றி இது போன்ற எல்லா நட்சத்திரங்கள் மற்றும் அதை சுற்றும் பூமி போன்ற கிரகங்கள் மற்றும் அதில் வாழும் ஏனைய உயிரிகளையும் சோ்த்தே படைத்திருக்கும். தற்போது எமக்கிருக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை கொண்டு அதை "அவன்" என்றும் "அவள்" என்றும் உருவகப்படுத்தி அதனுடன் இருவழி தொடர்பு கொள்வது போன்று நடப்பது அல்லது நடிப்பது மனிதனின் மனத்தில் உள்ள ஒருவகை தன்மை அல்லது குறைபாடு. நோவிற்கு எப்படி வலிநிவாரணி உதவுகின்றதோ அது போன்றே இயலாமையின் போது இந்த இறைநம்பிக்கை உருவாகிறது. இது பிரச்சனையை தீர்க்க உதவாது ஆனால் காலத்தை கடத்த உதவும்.

இயற்கை அழிவுகள் கூடுகின்றமைக்கான ஒப்பீட்டு தரவுகள் இல்லை. இயற்கை அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது. மனித இனப்பெருக்கமும் அதன் செயற்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் மாற்றமும் செயற்கையானவையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சாணக்கியன் said:

 தற்போது எமக்கிருக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை கொண்டு அதை "அவன்" என்றும் "அவள்" என்றும் உருவகப்படுத்தி அதனுடன் இருவழி தொடர்பு கொள்வது போன்று நடப்பது அல்லது நடிப்பது மனிதனின் மனத்தில் உள்ள ஒருவகை தன்மை அல்லது குறைபாடு. நோவிற்கு எப்படி வலிநிவாரணி உதவுகின்றதோ அது போன்றே இயலாமையின் போது இந்த இறைநம்பிக்கை உருவாகிறது. 

உலகில் வாழும் பெரும்பாலான செல்வந்த மக்களும் இறை நம்பிக்கையோடுதான் வாழ்கிறார்கள்.

இயலாமையின்  வெளிப்பாடுதான், இறைநம்பிக்கை உருவாக காரணம்  என்ற கற்பிதம் பிழையானது.

மனிதனின் இயலாமை, முதுமை, தொய்வு நிலை, குடும்பத்தால் தனித்து விடப்படல் போன்றவற்றால், இறை நம்பிக்கை இயற்கையாகவே அதிகரிக்கும்.

செல்வந்தர்களின் நிலையும் அப்படித்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாணக்கியன் said:

இயற்கையை அறிவதுதான் விஞ்ஞானம். அந்த அணுவும் அது சொல்லித்தான் தொியும். விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முயற்சியும், பயிற்சியும், தைரியமும் இல்லாமல் குறுக்கு வழியில் செல்ல எத்தனிப்பவர்களின் விளக்கம் அல்லது கட்டுக் கதையே கடவுள். அப்படியொன்று இருந்தாலும் அது எமக்கு விஞ்ஞானம் அறித்தந்த இந்த பூமியையும் சூரியக் குடும்பத்தை மட்டுமின்றி இது போன்ற எல்லா நட்சத்திரங்கள் மற்றும் அதை சுற்றும் பூமி போன்ற கிரகங்கள் மற்றும் அதில் வாழும் ஏனைய உயிரிகளையும் சோ்த்தே படைத்திருக்கும். தற்போது எமக்கிருக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை கொண்டு அதை "அவன்" என்றும் "அவள்" என்றும் உருவகப்படுத்தி அதனுடன் இருவழி தொடர்பு கொள்வது போன்று நடப்பது அல்லது நடிப்பது மனிதனின் மனத்தில் உள்ள ஒருவகை தன்மை அல்லது குறைபாடு. நோவிற்கு எப்படி வலிநிவாரணி உதவுகின்றதோ அது போன்றே இயலாமையின் போது இந்த இறைநம்பிக்கை உருவாகிறது. இது பிரச்சனையை தீர்க்க உதவாது ஆனால் காலத்தை கடத்த உதவும்.

இயற்கை அழிவுகள் கூடுகின்றமைக்கான ஒப்பீட்டு தரவுகள் இல்லை. இயற்கை அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது. மனித இனப்பெருக்கமும் அதன் செயற்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் மாற்றமும் செயற்கையானவையே.

👍மிகவும் அருமையான விளக்கம்.

On 3/16/2020 at 11:51 AM, மாங்குயில் said:

மனிதனைப் படைத்த அதே கடவுள், நோயையும் படைத்திருக்கிறான்.

நோய் வந்தால் மருத்துவம் செய், என்பதையும் அதே கடவுள்தான் சொல்கிறார்.

அப்படி சோன்னாரா? யாருக்கு சொன்னார்?  திரு நீறு சர்வ ரோக நிவாரணி, கந்தன் திருநீரணிந்தால்  கண்ட பிணி நீங்கும் என்று அவர் கூறியதாகவும் பாண்டியனின் வெப்பு நோய் வைத்தியம் பார்காமலே திரு நீறால் சுகமடைந்ததாகவும்  சமய ஆசிரியர் எனக்கு சொன்னார். இப்போது திரு நீறை கையால் எடுக்க வேண்டாம் கரண்டியால் எடுக்க சோல்லி  கோவில்களில் வலியுறுத்துகிறார்கள். கொரோனா வைரசின் சக்தியின் முன்னால் திருநீறால் தாக்கு பிடிக்க முடியாது என்று கோவில்களில் கூறுகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.