Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்திருந்து பார்……

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித்திருந்து பார்……

 

alone.jpg

ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா?
என்பது தெரிய வேண்டுமா?
எவருமில்லாத உலகில்  நீ மட்டும்
வலம் வர வேண்டுமா?
பூமியின் எல்லைகளுக்கப்பால்
பூகோள விதிகளைத் தாண்டி வானவீதியில்
இறக்கை விரித்துப் பறக்க வேண்டுமா?
தனித்திருந்து பார்.

கொட்ட முடியாத சோகங்களை கண்ணீரில்
கொட்டி கவலைகளை மறக்க வேண்டுமா?
எட்ட முடியாத சிகரங்களை கற்பனையில் ஏறி
கலகலப்பாய் கரமசைக்க வேண்டுமா?
தழுவவும் தலை தடவவும் ஆளில்லாமல்
உனக்குள் நீயே உடைய வேண்டுமா?
தனித்திருந்து பார்

கடந்து போன காலங்களின் களிப்பான நிகழ்வுகளை
அசைபோட்டு மனம்  ஆர்ப்பரிக்க வேண்டுமா?  
உறவுகளின் உரசலும் பிரிவுகளின் விரிசலும்
தொலைந்து விட்ட காலமும் தோளில் பாரமாகிட
விட்டு விடுதலையாகிய சிட்டுக் குருவியைப் போல்
வட்டமிட்ட நினைவுகளின் வனப்பினை சுவைத்திட
தனித்திருந்து பார்


உன் வீட்டில் வசதிகள் பலவும்
உன் வங்கிக் கணக்கில் டொலர்கள் பலவும்
வங்கி லொக்கரில் நகைகள் பலவும்
உன்னைச் சுற்றி உறவுகள் பலவும் இருந்தும்
ஏனோ ஏகாந்தம் மட்டும் உன் எழிலான தோழியாய்
கரம் குலுக்கும் காலம் வரும் அதன் வலிமையைச் சுவைத்திட
தனித்திருந்து பார்

அடுத்தவர் முன் அகமெங்கும் சிரிப்பாய்
முகமெங்கும் மலர்வாய்
வண்ணப் பட்டாடையில் வடிவான மயிலாய்
தோகை விரித்தாடும் உன் வெளித் தோற்றம்
வீட்டிற்குள் மனக்கூட்டிற்குள் நொந்து ரணமாகி
வேதனையில் வெந்திடும் அழுது
அது தனித்திருக்கும் அப் பொழுது

அழைப்பு மணியோசை காதில் கேட்கிறதா என
தினமும் எதிர்பார்த்து விழியில் ஏக்கமுடன்
உணவுத்தட்டை வெறித்தபடி உண்ண மனமின்றி
முதுமை உணர்வு முகத்தில் மோதிட
நீயும் மெழுகுவர்த்தியும் நேருக்கு நேர்
நோக்கியபடி உருகிடும் பொழுது
அது தனித்திருக்கும் வலிமிகு பொழுது

பெற்றெடுத்த பிள்ளைகள் பெரியவராய் ஆகியும்
உற்ற உறவுகளும் ஒதுங்கியே போனபின்
நினைவுகளின் நிசப்தமும் நெஞ்சமதின் சுமைகளும்
கனவுகளின் இனிமையும் காலமதின் வேகமும்
கடந்து வந்த பாதைகளின்  சுவடுகளும் ஓய்ந்தபின்
நான் மட்டும் தனியே என் கவிதைகளே என் துணையே!!

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பு மணியோசை காதில் கேட்கிறதா என
தினமும் எதிர்பார்த்து விழியில் ஏக்கமுடன்
உணவுத்தட்டை வெறித்தபடி உண்ண மனமின்றி
முதுமை உணர்வு முகத்தில் மோதிட
நீயும் மெழுகுவர்த்தியும் நேருக்கு நேர்
நோக்கியபடி உருகிடும் பொழுது
அது தனித்திருக்கும் வலிமிகு பொழுது....!

 

நிதர்சனமான மனசைப் பாதிக்கும் வரிகள் சகோதரி........!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை

கொடிதிலும் கொடிது முதுமையில் தனிமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதியோரைப் பராமதிக்க செல்லும் பொழுதுகளில் அவர்கள் அனுபவிக்கும் வலி மிகுந்த தருணங்களை பல தடவைகள் கனத்த மனத்துடன் சந்தித்திருக்கிறேன். இது நாளை நமக்கு வந்தால் என்ற எண்ணம்கூட பல தடவை வருவதுண்டு. இது ஒரு கொடிய பொழுதுதான். படித்து கருத்திட்ட சுவி ஈழப்பிரியன் இருவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையின் தரிசனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் சிலசமயம் கசப்பாக இருந்தாலும் தரிசிக்க வேண்டிய தருணத்தில் எவராலும் ஓடி ஒளிய முடியாது. கருத்துக்கு நன்றி சுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பெற்றெடுத்த பிள்ளைகள் பெரியவராய் ஆகியும்
உற்ற உறவுகளும் ஒதுங்கியே போனபின்
நினைவுகளின் நிசப்தமும் நெஞ்சமதின் சுமைகளும்
கனவுகளின் இனிமையும் காலமதின் வேகமும்
கடந்து வந்த பாதைகளின்  சுவடுகளும் ஓய்ந்தபின்

தனிமையைப் பழகவேண்டும். பல வருடம் தயார்படுத்தினால்தான் சமாளிக்கலாம். இல்லாவிட்டால் சுவருடன் உரையாடும் நிலை வந்துவிடும்.

முதிய வயதில் தனிமை பொல்லாதது. இன்றைய கொரோனாக் காலத்தில் இன்னும் மோசமாக பலர் தனிமையில் இருக்கப்போகின்றார்கள்.

 

On 3/16/2020 at 11:53 PM, Kavallur Kanmani said:

தனித்திருந்து பார்……

 

alone.jpg

இன்றைய கொறோனா வைரஸ் சூழலில் பெரியோர் மட்டுமல்ல இளையோரும் தனித்திருக்க வேண்டிய நிலையில் உங்கள் கவிதையின் அர்த்தம் இன்னும் ஆழமாகப் புலப்படும். அருமை கண்மணி அக்கா! 👍😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி மல்லிகை வாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 1:53 PM, Kavallur Kanmani said:

நீயும் மெழுகுவர்த்தியும் நேருக்கு நேர்
நோக்கியபடி உருகிடும் பொழுது
அது தனித்திருக்கும் வலிமிகு பொழுது

தனிமை குறித்துச் சுட்டும் வைரவரிகள். வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளமையில் தனிமை  கொடுமை.
முதுமையில் தனிமை கொடூர  கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நொச்சி.

உண்மைதான் குமாரசாமி. முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமைதான். இயலாமை. ஏக்கம். பிள்ளைகளின் உதாசீனம். உடல் நோய்கள். என்று தனிமை வாட்டும் சமயங்களில்  அவர்களின் பெருமூச்சுக்களையும் கண்ணில் துளிர்க்கும் நீரினையும் பலதடவை சந்தித்திருக்கிறேன். கருத்துக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாரதிவாஜாவின் மீண்டும் முதல் மரியாதை படம் பார்த்தேன். ஒரு முதியவரின் உணர்வுகளை படம் பிடித்திருந்தார். படம் எடுத்திருந்தது  ஸ்கொட்லாண்டில் . காட்சிகள் மிக எழிலாக இருக்கிறது. கதையும் காட்சிகளும் அருமையாக உள்ளன.
தனித்திருந்து பார் கவிதையை படித்து பச்சைப் புள்ளியிட்ட  இணையவன். நுணாவிலான். ரதி. நில்மினி. பிரமா. சசி. தமிழினி. கவி. அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 1:53 PM, Kavallur Kanmani said:

தனித்திருந்து பார்

தன் வீட்டையே தன் தோளில் காவித்திரிந்தவர்கள் பின் பார்க்கும் என்ற உறவுகள் எல்லாம் பறந்து போன பின் அலை கடலில் தனிமையில் பயணிக்கும் படகு போன்றது தனிமை.தனிமையின் வலிகளை  கூறிய உங்கள் கவிதை அழகு.நான் கூடி தனிமையின் கொடுமை பற்றி எழுதியிருக்கிறேன்.

 

https://youtu.be/jIrCb4j9FyM

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 1:53 PM, Kavallur Kanmani said:

ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா?

கவிதை அழகு காவலூர் கண்மணி அவர்களே! ஆனாலும் தனிமையின் கொடுமைபற்றி கவி வடித்த நீங்கள் அதன் இனிமைபற்றி வடிக்கவில்லையே.?

12.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் இனிமை பற்றியும் கவி எழுத முயற்சி செய்கிறேன். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பாஞ்ச்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியக்கா ,
காலம் ஒவ்வொருவருக்கும் தனிமையைப் பழகென்று தருகின்ற தண்டனை கொடியது. ஆனால் தனிமையையும் சமாளித்து வெளியேறி வருதலே வெற்றி. முயற்சிப்போம் வெற்றி காண்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் உதயகுமார். இப்போதைய பெற்றோர்கள் தம் எதிர்காலம் பற்றிய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றனர். தனிமையைச் சந்திக்க நம்மை நாமே பழக்கிக் கொள்வது மிக அவசியம். 
பல தடவைகளில் தனிமைகூட ஒரு தண்டனையாகத்தான் இருக்கும். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். எனது கணவர் உயிருடன் இருக்கும் பொழுது பல வருடங்கள் நான் தனிமையில் கழித்தேன். (அவர் வெளிநாட்டிலும் நான் இலங்கையிலுமாக) கனடா வந்த சில வருடங்களில் அவர் உயிருடன் இல்லை.  பிள்ளைகளின் நலனிற்காக தனிமையை துணையாக்கி இப்போது பேரப் பிள்ளைகளுடன் ஆனந்தமாய் பொழுது போகிறது. இதுவும் கடந்து போகும் .கருத்துக்கு நன்றி சாந்தி.

  • 3 weeks later...

அருமையான பதிவு அம்சமான வரிகள் தோழி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ் ரஜனி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.