Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார். சிங்கப்பூரில் 13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்மவயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, நான் அந்த இடத்தில் இல்லை. ஆதலால் என் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கூறி முகேஷ் சிங் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில் அந்த மனுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1584663057756.jpg தூக்குதண்டனை வழங்கப்படுவதையொட்டி சிறை அடைக்கப்பட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

ஏற்கனவே முதல்முறையாக ஜனவரி 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவைத் தள்ளிப்போடும் நோக்கில் கருணை மனு, சீராய்வுமனுவை குற்றவாளிகள் தாக்கல்செய்து தண்டனையை தள்ளிவைத்தனர்.

2-வது முறையாக பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூகக்ு தண்டனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் டெத்வாரண்ட் பிறப்பித்தது. அப்போதும் கருணை மனுத்தாக்கல் செய்து தங்கள் தண்டனையை குற்றவாளிகள் தள்ளி வைத்தனர்.

அதன்பின் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் மூன்றாவது முறையாக டெத் வாரண்ட் பிறப்பித்தது. அப்போதும் குற்றவாளிகள் கருணை மனு, சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து தண்டனையை தள்ளி வைத்தனர்.

இதையடுத்து, இறுதியாக மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என 4-வது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளான கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன, சீராய்வு மனுக்களும், மறுஆய்வு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

1584663110756.jpg திஹார் சிறை முன் போலீஸார் குவிக்கப்பட்டகாட்சி

இதையடுத்து தூக்கு தண்டனைக்கு முதல்நாளான நேற்று கூட குற்றவாளிகளில் 3 பேர் அக்சய் குமார், பவன் குப்தா, முகேஷ் ஆகிய 3 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மாறி, மாறி மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை நிறுத்தி வைக்க முயன்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இறுதியாக டெத் வாரண்டை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த மனுவும் இரவு விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவு குற்றவாளிகளின் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்திவைக்கக் கோரினார்.

1584664786756.jpg திஹார் சிறைக்கு முன்பாக திரண்ட மக்கள்:படம் ஏஎன்ஐ

இந்தமனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி,ஏஎஸ்.போபண்ணா, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு நள்ளிரவில் 20 நிமிடங்கள் வரை விசாரித்து தண்டனையை நிறுத்த வைக்க மறுப்புத் தெரிவித்தனர்.

இதனால், அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை குற்றவாளிகள் 4 பேருக்கும் நிறைவேற்றப்படுவது உறுதியானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. குற்றவாளிகள தூக்கிலிடுவதற்காக உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹேங்மேன் பவான் ஜலாத் வரவழைக்கப்பட்டிருந்தார்.

  • இன்று காலை 4.30 மணிமுதல் திஹார் சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது..
  • இன்று அதிகாலை 4.30 மணி்க்கு தூக்கு தண்டனையை நிறைேவற்றும் ஹேங்மேன் பவான் ஜலாத் எழுந்து தனது பணிகளைத் தொடங்கினார்
  • காலை 4.48 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் சிறையில் மருத்துவ அதிகாரிகள் உடல்பரிசோதனை செய்ததில் அவர்கள் 4 பேரும் முழு உடல்தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அழைத்துச் செல்ல தயார்செய்யப்பட்டபின், சிறையின் கதவுகள் மூடப்பட்டன
  • 4.50 மணிக்கு திஹார் சிறையின் வாசலில் மக்கள் கூட்டம் கூடத்தொடங்கியது
  • 5.13 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் முகத்தில் கறுப்பு துணியிட்டு தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • 5.20 மணிக்கு சிறைக்கு வெளியே மக்கள் கூட்டம் கூடி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கோஷமி்ட்டனர். இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
  • 5.30 மணிக்கு குற்றவாளிகள்4 பேரும் தூக்கிலிடப்பட்டதாக டெல்லி திஹார் சிறை நிர்வாகம் அறிவித்தது.

 

https://www.hindutamil.in/news/india/545032-nirbhaya-case-four-convicts-hanged-at-delhi-s-tihar-jail-for-2012-gang-rape-and-murder-3.html

நான் தூக்கிற்கு எதிரானவன். அந்த ரீதியில் இதை கண்டிக்கின்றேன். 

34 minutes ago, ampanai said:

நான் தூக்கிற்கு எதிரானவன். அந்த ரீதியில் இதை கண்டிக்கின்றேன். 

Would you say this if you sister got rapped?

 

22 minutes ago, Maniam4 said:

Would you say this if you sister got rapped?

 

Yup, and I would double down, even if this happened to my daughter. 

தூக்குத் தண்டனையை எதிர்பவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் சில விதிவிலக்குகள் அவசியமாகின்றன.

எந்தவொரு தவறும் செய்யாத ஒரு அப்பாவி பலப்பிரயோகத்தால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை எந்தவொரு காரணத்துக்காகவும் மன்னிக்க முடியாது. குற்றம் செய்தவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னணியில் இந்த தூக்குத் தண்டனையை கண்டிக்கத் தோன்றவில்லை.  

அதுபோலவே ஈழத்திலும் எவ்வித குற்றங்களும் செய்யாத அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்கள-பௌத்த இராணுவப் போர்க்குற்றவாளிகளும் அவர்களை இயக்கிய சிங்கள-பௌத்த அரச இயந்திரமும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மைனர் குஞ்சு தப்பிட்டார்.

இறுதி நிமிடம் வரைக்கும் தம் தவறை உணராத இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகச் சரியான தண்டனை.

மிலேச்சத்தனமாக என் கவுண்டர் முறையில் கொல்லாமல் இறுதி வரைக்கும் சட்ட ரீதியாக அணுகி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது.

நிர்பயா இனி நிம்மதியாக உறங்குவாள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த நீதி..!

8 வருடங்களாக நீதிக்கு போராடிய அவர்களின் விடா முயற்சியை பாராட்டும் அதேவேளையில், மகளை நினைத்து ஒவ்வொரு நாளும் அழுத அந்த பெற்றோரின் வலிகள், வார்த்தைகளில் விவரிக்க இயலாத சோகம்.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஓவ்வொரு நாளும் தப்பித்து தண்டனை தள்ளிப் போடுவதை பார்த்த அனைவருக்கும் "என்னடா நாடு இது..?" என வெறுத்துப்போய் பொது மக்களின் பொறுமையை சோதித்த பின்னரே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் தண்டனையே மிகச் சரியானது..! வரவேற்கிறேன்.

"குற்றம் செய்தையா, இந்தா.. அதற்குரிய உடனடி சரியான தண்டனை..!"  என இருந்தால்தான் இம்மாதிரி தினவெடுத்த வேட்டை நாய்கள், குறிகளை பொத்திக்கொண்டு இருப்பார்கள், அடங்கியிருப்பார்கள்..

பயமே குற்றங்களை தடுக்கும்.

மக்களிடம் குற்றம் செய்ய எத்தனிக்கும் முன், 'உச்சபட்ச தண்டனை என்ற அந்த பயம்' இருக்க வேணும்.

23 minutes ago, ராசவன்னியன் said:

காலம் கடந்த நீதி..!

8 வருடங்களாக நீதிக்கு போராடிய அவர்களின் விடா முயற்சியை பாராட்டும் அதேவேளையில், மகளை நினைத்து ஒவ்வொரு நாளும் அழுத அந்த பெற்றோரின் வலிகள், வார்த்தைகளில் விவரிக்க இயலாத சோகம்.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஓவ்வொரு நாளும் தப்பித்து தண்டனை தள்ளிப் போடுவதை பார்த்த அனைவருக்கும் "என்னடா நாடு இது..?" என வெறுத்துப்போய் பொது மக்களின் பொறுமையை சோதித்த பின்னரே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் தண்டனையே மிகச் சரியானது..! வரவேற்கிறேன்.

"குற்றம் செய்தையா, இந்தா.. அதற்குரிய உடனடி சரியான தண்டனை..!"  என இருந்தால்தான் இம்மாதிரி தினவெடுத்த வேட்டை நாய்கள், குறிகளை பொத்திக்கொண்டு இருப்பார்கள், அடங்கியிருப்பார்கள்..

பயமே குற்றங்களை தடுக்கும்.

மக்களிடம் குற்றம் செய்ய எத்தனிக்கும் முன், 'உச்சபட்ச தண்டனை என்ற அந்த பயம்' இருக்க வேணும்.

 

இதுவும் ஒரு வகையில்  சரிதான். எவ்வளவு காலமானாலும் தப்ப முடியாது என்ற  நிலையை  ஏற்படுத்துகின்றது. அதே நேரம்  கொரோனா பிரச்சனையால் கைதிகளை  விடுவிக்கும் நிலையும் சில நாடுகளில் ஏற்படுகின்றது.  இவர்களை விடவும் முடியாது. அதே நேரம் கொரோனாவால் செத்துவிட்டாலும் மோடி ஆட்சியில் கடசிவரை தண்டனை கிடைக்கவில்லை என்ற  அரசியல் சிக்கல் ஏற்பட்டுவிடும்.  கொரோனா பிரச்சனை ஏற்படாவிட்டால் என்னும் காலதாமதம்  ஆகியிருக்கவும் வாய்ப்புள்ளது. அவர்கள் கடசிவரை தாம் தப்புவோம் என்ற நம்பிக்கையிலேயே இருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மக்களிடம் குற்றம் செய்ய எத்தனிக்கும் முன், 'உச்சபட்ச தண்டனை என்ற அந்த பயம்' இருக்க வேணும்.

ஆக இனி யாரும் இப்படியான குற்றங்களைச் செய்ய மாட்டார்கள் என்று நம்பலாமா ராசவன்னியன்?

ஒருவர் செய்த குற்றத்தை  அவர் உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பே நீதியாக இருக்க வேண்டும் என்பதை எனது கருத்து.

சர்வதேச அறிக்கையின்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 100 பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெறுவதாகச் சொல்கிறார்கள்.  இதையைம் கவனிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kavi arunasalam said:

ஆக இனி யாரும் இப்படியான குற்றங்களைச் செய்ய மாட்டார்கள் என்று நம்பலாமா ராசவன்னியன்?

ஒருவர் செய்த குற்றத்தை  அவர் உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பே நீதியாக இருக்க வேண்டும் என்பதை எனது கருத்து.

சர்வதேச அறிக்கையின்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 100 பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெறுவதாகச் சொல்கிறார்கள்.  இதையைம் கவனிக்க வேண்டும்.

அவனவனுக்கு குளிர்விட்டு போச்சுது..

பணமிருந்தால் சட்டத்தை எப்படியும் வளைக்கலாம், அதிகாரமிருந்தால் நீதியை வளைக்கலாம், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓராண்டு அல்லது ரெண்டு வருடங்கள் தண்டனை என பணக்காரர்கள், அரசியல்வியாதிகள், ரெளடிக் கும்பல்கள் அனைத்தும் தெரிந்தே அனைவரும் தறிகட்டு ஆடுவதை இந்த ஆசிய நாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கையில், 'தண்டனைகள் மிகக்கடுமையாக உடனடியாக வழங்கியேயாக வேண்டும்' என சாதாரண பொதுமக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

தவறுகளுக்கு சட்டத்தின் ஓட்டைகளும், மிதமிஞ்சிய தாமதமும், சிறு தண்டையையும் கொடுத்தால் எவனுக்கு பயமிருக்கும்..?

மிருகங்களாக வன்கொடுமை செய்வார்களாம், இவர்களுக்கு திருந்த வாய்ப்பு கொடுக்கணுமாம்..

மாடுகள் மாதிரி வளர்ந்தும் அறிவில்லை? இதே கொடுமையை அவர்களின் வீட்டிலுள்ளோரிடம் செய்யத் துணிவார்களா..? தொட்டால் வெட்டப்படும் என்ற பயமிருந்தால் துணிவார்களா..?

இங்கேயும் மிருகங்களாக சிலரை பார்க்கலாம், கண்களாலேயே கற்பழித்துவிடுவார்கள், ஆனால் நெருங்க பயப்படுவார்கள், காரணம் அடுத்த சில நாட்களிலேயே தலை துண்டாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை போகப் பொருளாக, ஏளனமாக, எளியோராக பார்க்கும் நிலை மாற வேண்டும், சட்டமும் மிகக்கடுமையாக, தண்டனையும் உடனடியாக கிடைக்கும்வண்ணம் இருக்க வேண்டும்.

தந்தையின் வலியை உணரமுடிகிறது..

test.jpg

Edited by ராசவன்னியன்

9 hours ago, பிழம்பு said:

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்மவயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நபரின் தூக்கு என்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. காந்திய தேசத்தில்.ஒரு பதின்ம வயதினரை, தூக்கில் இட்டது மூலம், கிந்தியா மீண்டும் ஒரு தோற்றுப்போன பல்லின் நாடாகி விட்டது. 

22ஆம் நூற்றாண்டில் கூட இந்திய தேசம் ஒரு மனிதகுலத்தின் வளர்ச்சியை தொடாத பல்லினநாடாக உள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் - மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்கள்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

உடல் கூராய்வு பகல் 12.30 மணி அளவில் முடிவடையும் என்று தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இன்று (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு திகார் சிறையில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இவர்களின் கருணை மனுக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்திருந்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்படத்தின் காப்புரிமை DELHI POLICE

இந்நிலையில் இன்று (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு திகார் சிறையில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகு இது குறித்து பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, ''கடைசியாக அவர்கள் தூக்கிலடப்பட்டனர். இன்று தான் எங்களுக்கு நீதி கிடைத்தது. இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது. நீதித்துறைக்கு, அரசுக்கும் அந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி இது'' என்று கூறினார்.

ஆஷா தேவி (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது" என்று நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi

Justice has prevailed.

It is of utmost importance to ensure dignity and safety of women.

Our Nari Shakti has excelled in every field. Together, we have to build a nation where the focus is on women empowerment, where there is emphasis on equality and opportunity.

— Narendra Modi (@narendramodi) 20 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi

7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?

2012-ம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

நிர்பயாபடத்தின் காப்புரிமை AFP

இந்த வழக்கின் முக்கிய சம்பவங்கள்

2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.

2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 மே: தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.https://www.bbc.com/tamil/india-51967241

3 hours ago, ampanai said:

இந்த நபரின் தூக்கு என்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. காந்திய தேசத்தில்.ஒரு பதின்ம வயதினரை, தூக்கில் இட்டது மூலம், கிந்தியா மீண்டும் ஒரு தோற்றுப்போன பல்லின் நாடாகி விட்டது. 

22ஆம் நூற்றாண்டில் கூட இந்திய தேசம் ஒரு மனிதகுலத்தின் வளர்ச்சியை தொடாத பல்லினநாடாக உள்ளது. 

சும்மா எழுந்தமானமாக அவரை விடுவிக்காமல் விடவில்லை. நீதிமன்றம். குற்றம் இடம்பெற்ற வேளை, அவருக்கு 19 வயது என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

அதே வேளை, குற்றம் செய்தவர்களில் 17 வயதான ஒரு பொடியனை விடுவித்து விட்டது நீதிமன்றம். இந்த பொடியனே மிக மோசமான சித்திரவதையை புரிந்தவர் என நீதிமன்றம் அறிந்தும் சிறார் சிறையில் வைத்து 'புனர்வாழ்வளித்து விட்டு' விடுவித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திக்...திக்.. கடைசி நிமிடங்கள்; தூக்கமில்லா இரவுகள்: கடைசி ஆசையைச் சொல்லாமல் சென்ற நிர்பயா குற்றவாளிகள் - சிறைக்குள் நடந்தது என்ன?

புதுடெல்லி

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தாங்கள் எந்த நேரமும் காப்பாற்றப்படுவோம் என்ற நினைப்பில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய நால்வரும் நேற்று இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்துள்ளனர் என்று திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் உதவவில்லை. 3 முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அதில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிய 4 பேரும், 4-வது டெத் வாரண்ட்டில் மரணத்தில் பிடியில் சிக்கினார்கள்.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் ஒரே நேரத்தில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.

திஹார் சிறையில் முதன்முதலாக 4 குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் இப்போதுதான் தூக்கிலிடப்பட்டார்கள். இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி மும்பையில் உள்ள எர்ரவாடா சிறையில் ராஜேந்திர ஜக்கால், திலிப் சுத்தார், சாந்தாராம் ஜக்தப், முனாவர் ஷா ஆகியோருக்கு கொலை வழக்கில் ஒரேநேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திஹாரில் 4 குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுதான் முதல் முறையாகும்

திஹார் சிறையில் நேற்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்து சிறை வட்டாரங்களில் இருந்தவர்கள் கூறியதாவது:

''தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது எனத் தெரிந்தவுடன் குற்றவாளிகள் 4 பேரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். இரவு முழுவதும் தூங்கவில்லை. 4 குற்றவாளிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அதற்குச் சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.

மீரட் நகரில் இருந்து வந்திருந்த ஹேங்மேன் பவான் ஜலாத் நள்ளிரவு 12 மணிக்குத் தூக்கிலிடப்போகும் 4 பேரின் முகத்தையும் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை குற்றவாளிகள் இருக்கும் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர், பவான் ஜலாத்திடம் அவர்களைக் காண்பித்தனர்.

1584684295756.png

உச்ச நீதிமன்றத்தில் தங்களின் மனு விசாரிக்கப்படுவதால், கடைசி நேரத்தில் தூக்கு தண்டனை ரத்தாகும் என்ற நம்பிக்கையில் 4 பேரும் தூங்காமல் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

ஆனால், அதிகாலை 3.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தமுடியாது என்று தெரிவித்த செய்தி கிடைத்தவுடன் 4 குற்றவாளிகளும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர்.

உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்யத் தொடங்கினர். சிறைக்கு வெளியே துணை ராணுவப் படை பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டது.

  • அதிகாலை 4 மணிக்கு சிறை வார்டன் வந்து, குற்றவாளிகள் 4 பேரையும் கடைசியாகக் குளித்துவிட்டு தயாராகுங்கள் என்றார்.
  • 4.15 மணிக்கு 4 பேரும் குளித்துவிட்டு வந்தபின், தங்களுக்குப் பிடித்த மதத்தின் அடிப்படையில் வணங்கவும், ஏதாவது படிக்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் கடைசியாகச் சாப்பிடுவதற்கு உணவு வழங்கப்பட்டது.
  • 4.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரிடமும் சிறை வளாகத்தில் விருப்பமான தொலைவு வரை கடைசியாக நடக்கவும், ஓடவும் அனுமதியளிக்கப்பட்டது. 4 பேரும் நீண்ட தொலைவு நடந்து சென்று திரும்பினர்.
  • குற்றவாளிகள் 4 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவர் சான்றளித்தார். அதன்பின் அந்தக் கடிதத்தை சிறைக் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
  • அதிகாலை 5.20 மணிக்கு கருப்பு நிறத்தில் ஒரு துணி கொண்டு 4 பேரின் முகங்களும் மூடப்பட்டன. கைகள் கட்டப்பட்டு, அவர்கள் 4 பேரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாவட்ட ஆட்சியர், மருத்துவ ஆய்வாளர், சிறை கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் இருந்தனர்.
  • அதிகாலை 5.25 மணிக்கு ஏற்கெனவே போட்டிருக்கும் கருப்புத் துணி மீது மற்றொரு பருத்தித் துணி கொண்டு மூடப்பட்டது. அப்போது உங்களின் கடைசி ஆசை என்ன என்று அதிகாரிகள் 4 பேரிடமும் கேட்டனர்.
  • ஆனால், அவர்கள் தங்களின் கடைசி ஆசை என்னவென்று கடைசி வரை சொல்லவில்லை. மாவட்ட ஆட்சியர் பிளாக் வாரண்ட்டில் கையொப்பம் இட்டார். அதன் பின் 4 பேரின் கால்களையும் ஹேங்மேன் பவான் ஜலாத் இறுக்கமாகக் கட்டினார்.
  • சரியாக 5.30 மணி ஆனவுடன் சிறையின் கண்காணிப்பாளர் சைகை செய்தவுடன் ஹேங் மேன் பவான் ஜலாத் லிவரை இழுத்தவுடன் 4 பேர் நின்றிருந்த பலகை விலகி தூக்கில் தொங்கி, மரணத்தைத் தொட்டனர். அதன்பின் 30 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கிய 4 பேரின் உடல்கள் இறக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. அதில் 4 பேரின் உயிர் பிரிந்துவிட்டது என்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

https://www.hindutamil.in/news/india/545127-sleepless-edgy-nirbhaya-rapists-stared-at-never-ending-night-2.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ampanai said:

நான் தூக்கிற்கு எதிரானவன். அந்த ரீதியில் இதை கண்டிக்கின்றேன். 

உங்களைப்போல் நானும் தூக்குத்தண்டனைக்கு எதிரானவன். கடவுள் தந்த உயிரை எடுப்பதற்கு எவனுக்கும் உரிமையில்லை என்பது என் நிலைப்பாடு.
இருப்பினும் அண்மையில் இந்த காணொளியை பார்த்தேன். மற்றப்பக்கமும் நியாயம் இருப்பது போல் தெரிகின்றது.

 

குற்றம் : கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார். சிங்கப்பூரில் 13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது

தீர்ப்பு : தில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கருத்து : குரூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்வர்களை, சட்டமும் சமூகமும் குரூரமாக கொன்றுள்ளது. ஆகவே, ஒரு மகிழ்ச்சி தெரிந்தாலும், ஒரு சமூகமாக, நாடாக மற்றும் நாகரீக மனித சமுதாயமாக இங்கு நாம் முன்னேறவில்லை.

இதனால் தான் உலகின் பெரும்பான்மை நாடுகளில் தூக்குதண்டனை இல்லை. 

1 hour ago, குமாரசாமி said:

உங்களைப்போல் நானும் தூக்குத்தண்டனைக்கு எதிரானவன். கடவுள் தந்த உயிரை எடுப்பதற்கு எவனுக்கும் உரிமையில்லை என்பது என் நிலைப்பாடு.
இருப்பினும் அண்மையில் இந்த காணொளியை பார்த்தேன். மற்றப்பக்கமும் நியாயம் இருப்பது போல் தெரிகின்றது.

நன்றி பகிர்விற்கு. குற்றத்தை மறுப்பதற்கில்லை. தண்டனையை பற்றித்தான் கருத்து வேறுபாடுகள். 

இவர் இறக்கும் பொழுது, 41 வயது. குற்றம் புரிந்த காலம் : 1975 - 1989. நிரூபிக்கப்பட்ட கொலைகள் - 6 

April 27, 1995 இல் தூக்குத்தண்டனை செய்யப்பட்ட இவர் இன்றும் சிறையில் இருந்தால், இவ்வாறு குற்றங்கள் செய்வது குறையும் என்பதே வாதம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நபர் குற்றம் புரிவதற்கு நிறய காரணங்கள் இருக்கு. மரபு அணுக்கள், மூளையின் அமைப்பு ( நான் dissect பண்ணிய ஒருவரின் மூளையில் grey matter எனப்படும் மூளை கலங்கள் (Neurons ) மிகவும் மெல்லியதாக இருந்தது. எப்படி இறந்தார் இன்று chart ஐ பார்த்தபோது தற்கொலை செய்துகொண்டார் என்று இருந்தது) இப்படி சில பிரச்சனைகளும் இருக்கலாம். சிறு வயதில் கிடைத்த சில பாரதூரமான அனுபவங்களாகவும், சமுதாயத்தின் தாக்கங்களாகவும்  இருக்கலாம். இதையெல்லாம் மீறி தனிப்பட்ட  காரணங்களும்  உண்டு. எது எப்படி என்றாலும் குற்றம் குற்றம்தான். எனது கருத்தின் படி சந்தர்ப்ப சூழ்நிலைகள் சில மனிதரை குற்றம் செய்ய தூண்டுகிறது . செய்தகுற்றத்துக்கு அகப்படாமல் தப்பினால் அது ஒரு addiction ஆக போய் மேலும் மேலும் குற்றம் செய்யவார்கள் (addiction).  பிடிபட்டால் தக்க தண்டனையும் , சீர்திருத்தமும்  கொடுத்தால் அவர்கள் திருந்தி வாழ இடமுண்டு. அதை விட்டு அமெரிக்கா போன்ற நாடுகளை இருக்கும் சிறையில் அடைத்தால் வெளியில் வருவது அனாவசியம். ஒரு மூன்று மாதம் இருந்தாலே  குற்றவாளி இன்னும் 10 மடங்கு மோசமான ஆளாக மாறிவிடுவான். Scandinavian , ஜேர்மனி , சுவிற்சர்லாண்ட் போன்ற நாடுகளில் உள்ள சீர் திருத்த சிறைகளில் நல்ல மனிதனாக திரும்பி வர இடம் உண்டு.  என்றாலும் கூட இது ஒரு சிக்கலான விடயம். குற்றத்தின் கொடுமை, அடிக்கடி குற்றம் செய்தல் இவையெல்லாம் கருத்தில் கொள்ள வேணும். அமெரிக்க சிறைகள் சின்ன குற்றம் செய்தவனையும்  மோசமான சிறை அனுபவத்தால் பெரிய குற்றவாளி ஆக்கி  விடும் ( வெளியில் வந்தபின்). 

1 hour ago, குமாரசாமி said:

உங்களைப்போல் நானும் தூக்குத்தண்டனைக்கு எதிரானவன். கடவுள் தந்த உயிரை எடுப்பதற்கு எவனுக்கும் உரிமையில்லை என்பது என் நிலைப்பாடு.
இருப்பினும் அண்மையில் இந்த காணொளியை பார்த்தேன். மற்றப்பக்கமும் நியாயம் இருப்பது போல் தெரிகின்றது.

 

இவர் சொல்வது போல மிக மோசமான குற்றங்களை செய்தவர்கள் அதிகாரத்தால் வெளியில் நல்லவர்கள் போல நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதே நேரம் பிடிபட்ட குற்றவாளிகள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். தூக்கு  தண்டனைக்கு நான் ஆதரவா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

Daily_News_9388347864152.jpg

ஒருத்தன் தையல் மிஷினோடு எஸ்கேப் .. கள வாத பிரதி வாதங்களை நோக்குகையில் அவன் திருந்தி வாழ்வானா.. இல்லையா என்பது போக போக தெரியும்..👍

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒருத்தன் தையல் மிஷினோடு எஸ்கேப் .. கள வாத பிரதி வாதங்களை நோக்குகையில் அவன் திருந்தி வாழ்வானா.. இல்லையா என்பது போக போக தெரியும்..👍

அந்த பாய் மேஜராகி, கேரளாவில் ஏதோ உணவகத்தில் வேலை செய்வதாகவும் அதற்கு ஒரு என்.ஜி.ஓ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் ஓடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒருத்தன் தையல் மிஷினோடு எஸ்கேப் .. .

அந்த 17 வயது சிறுவனின் வேலை விவரணை:

ETkSC1lU8AAMU30?format=jpg&name=900x900

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ampanai said:

Yup, and I would double down, even if this happened to my daughter. 

இதெல்லாம் உங்கட சகோதரிகளுக்கோ அல்லது உங்கள் மகளுக்கோ நடக்காது என்ற தைரியத்தில் எழுதுகிறீர்கள் ...ஆயுள் தண்டனை கொடுத்து உழைக்கின்ற மக்களது வரிப் பணத்தில் அவர்களை சிறையில் வைத்து சாப்பாடு போடுவதை விட அவர்களை தூக்கில் போட்டதே மேல் ...இந்த குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை உணரவேயில்லை ...இனி மேல் உணர போவதுமில்லை 

உலகில் உள்ள 195 நாடுகளில் 55 நாடுகளே தண்டனையாக கொலையை வழங்கும் நாடுகள். 
பெரும்பாலான, ஏறக்குறைய முழுமையான புலம்பெயர் தமிழர் வாழ் நாடுகளில் தூக்குத்தண்டனை - இல்லை.  

இந்தியா, இன்றும் அந்த சிறுபான்மை நாடுகளில் பட்டியலில் உள்ளது.அந்த நாடுகளால் கொலைத்தண்டனையை நிறுத்த முடியும் என்றால், இந்தியாவாலும். முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத்துறை மாணவி நிர்பயாவுக்கு நடந்தது துயர் மிகுந்த சம்பவம். நான்கு இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டதும் துயரமான சம்பவம். 

மாணவி  நிர்பயா கொலை செய்யப்பட்டவிதம் அதிர்ச்சியானது. இப்படியோர் கொலையை அரங்கேற்றிய குரூரபுத்தி இந்த இளைஞர்களுக்கு ஏற்பட காரணம் என்ன என்று அறியப்பட்டு அந்த கோளாறுகள் எதிர்காலத்தில் வேறு இளைஞர்களுக்கு வராமல் பார்த்துக்கொள்ள வழிவகைகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்களின்  மனவளத்தை மேம்படுத்தாமல் வெறும் தூக்குத்தண்டனை பயமுறுத்தல் மட்டும் கொடுப்பது எதிர்காலத்தில் இப்படியான கொலைகள், கொடுமைகள் செய்யப்படுவதை தடுக்குமா என்பது சந்தேகமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.