Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாத் தாக்கத்துக்குள்ளானவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது இரண்டு விட்ட சகோதரனும் குடும்பத்தவர்களும் மொத்தமாக  ஒன்பது பேர் கரோ நகரில் கொரோனாத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனது சகோதரன் 40 வயது.மனைவி 35 வயது, ஒரு மகன் 10 வயது.மற்றும் எனது சின்னம்மா, சிற்றப்பா, மகள், கணவன், ஒரு மகன் ( வைத்தியர்). மற்றைய மகன் ஆகியோர் ஒன்றாக இரு வீடுகளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நோய் வைத்தியராகக்  கடமைபுரியும் மகனுக்கும் மற்றைய மகனுக்கும் ஒன்றாக தொற்றியுள்ளது. இருவருக்கும் வந்து அவர்கள் 30,33 வலதுகளை உடையவர்கள் என்பதால் குணமாகிவிட்டனர். அவர்களுக்கு வந்து பத்தாம் நாள் மற்றவர்களுக்கும் வந்துள்ளதாம். சின்னம்மாவுக்குத்தான் டயாபற்றிஸ் உள்ளது. மற்றவர்கள் ஓரளவு பரவாயில்லை.

இன்று அவர்களுடன் பேசியபொழுது சகோதரன்தான் பேசினார். கொஞ்சம் மனத்திடமம் ஆரோக்கியமான குடும்பங்கள் என்பதனால் பெரிதாக்கத் தாக்கவில்லை. இன்று நான்காம் நாள். உடல் வழிதான் தாங்க முடியாது இருப்பதாகத் தம்பி கூறுகிறான். பசியே இல்லையாம். ஆனால் உணவு உண்பது நல்லது என்று கூறியபடியால் புளிக்கஞ்சி, பால்கஞ்சி, தோடம்பழம், எலுமிச்சை தேன்விட்டுக் கரைத்தது. என்று உண்கின்றனராம். வாயில் எலுமிச்சை குடிக்கும்போது மற்றும் புளிப்புச் சுவை தெரிவதாகவும், மற்றையவை உண்ணும்போது எல்லாமே இனிப்பதுபோல் இருப்பதாகவும் கூறினார். நாரி உழைவுதானாம் தாங்க முடியவில்லை. எலும்புகளை போட்டு முறித்தெடுப்பதுபோல் இருப்பதாகக் கூறினார். சிலருக்கு வயிற்றோட் டமும் இருக்கிறதாம். டொய்லெற்றுக்குப் போய் வந்த பின்னர் சிறிது உடல்வலி குறைவதுபோல் உணர்வதாகக் கூறுகிறார்.  

வீடடை விட்டு யாரும் வெளியில் செல்லவில்லை. வைத்தியரும் வைத்தியசாலைக்கும் சகோதரர் பொருட்கள் சிலது வாங்கவும் வெளியே சென்றதாகக் கூறினார். இன்னும் நான்கு நாட்களில் தனக்குச் சுகமாகிவிடும் என்று நம்புவதான நம்பிக்கையுடன் இருக்கிறார். சின்னம்மாவும் சிற்றப்பாவும் பத்துவயது சிறுவனும் தான் அதிக நேரம் படுத்திருக்கின்றனராம். பரசிற்றாமோல் மட்டும்தான் தற்போது அனைவரும் எடுக்கின்றனராம். வெளியே மட்டும் போய்விடாதீர்கள் அக்கா என்கிறார். வீட்டுக்குள் ஒரு மருத்துவர் இருப்பதனால் கொஞ்சம் நின்மதியாக இருக்கின்றனர்.        
 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியரும் வைத்தியசாலைக்கும் சகோதரர் பொருட்கள் சிலது வாங்கவும் வெளியே சென்றதாகக் கூறினார்.

நோய் உள்ளது என்று தெரிந்தால் ஏன் பொருட்கள் வாங்கவும், வேலைக்கும் செல்கின்றனர்.

அடுத்தவர்களுக்கும் ஆபத்தினை தராமல், உங்களிடம் அல்லது பக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டால், வாங்கி வாசலில் வைத்து விட்டு போவார்கள் தானே. 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோய் மாறியவர் தான் பொருட்கள் வாங்கச் சென்றது. பாதுகாப்புக்கு கவசங்கள் அணிந்து பக்கத்த்தில் சுப்பமாக்கற் இருப்பதனால் சென்றுவிட்டு உடனே வந்துள்ளார். நான் கூட அதைக்கூறினேன். ஓடர் செய்தால் வாசலில் கொண்டுவந்து வைத்துட்டுவிட்டுச் செல்வார்கள் என.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நோய் மாறியவர் தான் பொருட்கள் வாங்கச் சென்றது. பாதுகாப்புக்கு கவசங்கள் அணிந்து பக்கத்த்தில் சுப்பமாக்கற் இருப்பதனால் சென்றுவிட்டு உடனே வந்துள்ளார். நான் கூட அதைக்கூறினேன். ஓடர் செய்தால் வாசலில் கொண்டுவந்து வைத்துட்டுவிட்டுச் செல்வார்கள் என.

டாக்டருக்கு தெரியவேண்டும் அல்லவா... அவருக்கு வருத்தம் மாறினாலும் அவர் ஒரு காவி தான்....

அவர் வீட்டுக்கு கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டார்.... 

வீட்டில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி இருந்தால் அடுத்தவர்கள் தப்பி இருப்பார்கள் அல்லவா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

டாக்டருக்கு தெரியவேண்டும் அல்லவா... அவருக்கு வருத்தம் மாறினாலும் அவர் ஒரு காவி தான்....

அவர் வீட்டுக்கு கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டார்.... 

வீட்டில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி இருந்தால் அடுத்தவர்கள் தப்பி இருப்பார்கள் அல்லவா....

வைத்தியர் பாதுகாப்பாய்த்தானாம் இருந்தவர். அந்த சகோதரனால்த்தான் மற்றவைக்கும் வந்ததாக இவர்கள் நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு,

தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. 

 சிலர் எந்தத் துன்பத்திலும் உறவுகளிடம்கூட உதவிகேட்காதவர்கள் என்றொருபகுதியினரையும் உள்ளடக்கியதே எமது குமுகாயமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் பாதுகாப்பாய்த்தானாம் இருந்தவர். அந்த சகோதரனால்த்தான் மற்றவைக்கும் வந்ததாக இவர்கள் நினைக்கிறார்கள்.

எனது உறவினர் ஒருவர், ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போய், அவரது மனைவி காச்சல் என்று இரண்டு கிழமையாக பெரும் பாடு. வைரஸாக இருக்கும் என்று சந்தேகத்தில் நான் அந்த பக்கமே போகவில்லை. இரண்டு முறை ஆம்புலன்ஸ் வந்து செக் பண்ணி வைரஸ் இல்லை எண்டு சொல்லி, நிமோனியா என்று மருந்து கொடுத்தும் மாறாமல், ஆஸ்பத்திரிக்கு நேர போய், பிளட் டெஸ்ட் எடுத்து, ஒரு நாள் வைத்திருந்து light நிமோனியா என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இது மூன்றாவது கிழமை.  எனக்கெண்டால் சந்தேகம் இருந்தது.

அந்த பர்த்டே பார்ட்டி கொண்டாடியவர்  வைரஸால் பாதிக்கப்பட்டு ICU வில் என்று இன்று செய்தி வந்தது. 

திண்ணையில் மீரா சொன்ன கதையைக் கேட்டு யோசனையாக இருக்கு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகள் ஒரு வைத்தியர்
இருந்தும் இந்தக் கொரோனா  வைரஸின் முடிவு வரை அவரை வீட்டிற்கு  
வரவேண்டாம் என்றும் தனிமையிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றும்படி வேண்டியுள்ளேன்.
இப்படியான நேரத்தில் ஒரே குடும்பமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எல்லோரும் கவனமாக இருங்கள். கொரோன மட்டுமல்ல வேறு வருத்தங்களும் கவனிக்க முடியாமல் இறப்புக்கள் நடக்கின்றன.

இன்று என் நண்பன்/ சகோதரனின் தாயின் இழப்பு (நிமோனியா?)

நேற்று என்னுடன் கூட படித்தவரின் சகோதரியின் கணவன் (மாரடைப்பு)

நாளை யாரோ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா இடமும் துக்ககரமானதாகவும் கவலைதரும் செய்திகளாகவே இருக்கின்றது.இவைகள் கூடிக்கொண்டு போகின்றதே தவிர குறையும் போல் தெரியவேயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nochchi said:

மெசொபொத்தேமியா சுமேரியர் அவர்களுக்கு,

தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. 

 சிலர் எந்தத் துன்பத்திலும் உறவுகளிடம்கூட உதவிகேட்காதவர்கள் என்றொருபகுதியினரையும் உள்ளடக்கியதே எமது குமுகாயமாகும்.

உண்மைதான். இன்று அவர்களுக்கு சிறிது உணவுப்பொருட்களை கவுன்சில் அனுப்பிவைத்ததாம்.

20 hours ago, Nathamuni said:

எனது உறவினர் ஒருவர், ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போய், அவரது மனைவி காச்சல் என்று இரண்டு கிழமையாக பெரும் பாடு. வைரஸாக இருக்கும் என்று சந்தேகத்தில் நான் அந்த பக்கமே போகவில்லை. இரண்டு முறை ஆம்புலன்ஸ் வந்து செக் பண்ணி வைரஸ் இல்லை எண்டு சொல்லி, நிமோனியா என்று மருந்து கொடுத்தும் மாறாமல், ஆஸ்பத்திரிக்கு நேர போய், பிளட் டெஸ்ட் எடுத்து, ஒரு நாள் வைத்திருந்து light நிமோனியா என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இது மூன்றாவது கிழமை.  எனக்கெண்டால் சந்தேகம் இருந்தது.

அந்த பர்த்டே பார்ட்டி கொண்டாடியவர்  வைரஸால் பாதிக்கப்பட்டு ICU வில் என்று இன்று செய்தி வந்தது. 

திண்ணையில் மீரா சொன்ன கதையைக் கேட்டு யோசனையாக இருக்கு.

வீட்டை விட்டு வெளியே போகாதிருப்பதே அவரே வழி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வாத்தியார் said:

எனது மகள் ஒரு வைத்தியர்
இருந்தும் இந்தக் கொரோனா  வைரஸின் முடிவு வரை அவரை வீட்டிற்கு  
வரவேண்டாம் என்றும் தனிமையிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றும்படி வேண்டியுள்ளேன்.
இப்படியான நேரத்தில் ஒரே குடும்பமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் அவசியம்

உண்மைதான். இங்கு வீட்டில் உள்ள ஒருவருக்கு நோய் இருப்பதை அறிந்தவுடன் வைத்தியர்கள் தாதியர்களை வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தங்குமிடங்களை வைத்தியசாலைக்கு அருகிலேயே ஒழுங்கு செய்து கொடுக்கின்றது NHS.  
என்றாலும் உங்கள் மனவுறுதி பாராட்டத்தக்கது. மகள் நலமுடன் தொடந்து சேவையாற்ற வாழ்த்துக்கள்.

18 hours ago, குமாரசாமி said:

எல்லா இடமும் துக்ககரமானதாகவும் கவலைதரும் செய்திகளாகவே இருக்கின்றது.இவைகள் கூடிக்கொண்டு போகின்றதே தவிர குறையும் போல் தெரியவேயில்லை.

குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ட‌ த‌ம்பி குடும்ப‌ம் கொரோனாவில் இருந்து மீண்டு வ‌ந்த‌து ம‌கிழ்ச்சி /  10வ‌ய‌து சின்ன‌ பைய‌ன் மேல் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்லுங்கோ / அதுங்க‌ளுக்கு தாங்கி கொள்ளும் ச‌க்தி கிடையாது /

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக கவனமாக இருக்க வேண்டும், கெட்டித்தனம் வேலைக்காகாது.பகிவுக்கு நன்றி சகோதரி.....! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

53 minutes ago, பையன்26 said:

உங்க‌ட‌ த‌ம்பி குடும்ப‌ம் கொரோனாவில் இருந்து மீண்டு வ‌ந்த‌து ம‌கிழ்ச்சி /  10வ‌ய‌து சின்ன‌ பைய‌ன் மேல் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்லுங்கோ / அதுங்க‌ளுக்கு தாங்கி கொள்ளும் ச‌க்தி கிடையாது /

ஓம் கவனமாகத்தான் இருக்கினம்

53 minutes ago, suvy said:

மிக மிக கவனமாக இருக்க வேண்டும், கெட்டித்தனம் வேலைக்காகாது.பகிவுக்கு நன்றி சகோதரி.....! 

உண்மைதான் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான். இங்கு வீட்டில் உள்ள ஒருவருக்கு நோய் இருப்பதை அறிந்தவுடன் வைத்தியர்கள் தாதியர்களை வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தங்குமிடங்களை வைத்தியசாலைக்கு அருகிலேயே ஒழுங்கு செய்து கொடுக்கின்றது NHS.  
என்றாலும் உங்கள் மனவுறுதி பாராட்டத்தக்கது. மகள் நலமுடன் தொடந்து சேவையாற்ற வாழ்த்துக்கள்.

குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம் 

அக்கா சொன்னதை பிழையா விளங்கப்படாது.

இரண்டு மாதத்தில கோரோனோ வேர்ல்ட் டூரை முடித்து கிளம்பிரும்.

பிறகு, யார், யார் மிச்சம் இருக்கினம், எண்டு யாழ் தளம் இயங்கினால் விசாரிக்கலாம் எண்டுறதை மறைமுகமா சொல்லுறா.. 😥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.

சாத்திர பலன்களும் அதைத்தான் சொல்லுது.😁
21.09.2019

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சாத்திர பலன்களும் அதைத்தான் சொல்லுது.😁
21.09.2019

😀நீங்களும் வாசிச்சிட்டியளாக்கும். இங்கு இனிப் பள்ளிக்கூடங்கள் செப்டெம்பர் தான் என்று கதைக்கின்றார்கள் ஆசிரியர்கள்.

4 hours ago, Nathamuni said:

அக்கா சொன்னதை பிழையா விளங்கப்படாது.

இரண்டு மாதத்தில கோரோனோ வேர்ல்ட் டூரை முடித்து கிளம்பிரும்.

பிறகு, யார், யார் மிச்சம் இருக்கினம், எண்டு யாழ் தளம் இயங்கினால் விசாரிக்கலாம் எண்டுறதை மறைமுகமா சொல்லுறா.. 😥

😃😎

4 hours ago, பையன்26 said:

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம் 

இங்கு மாவீரர் தினம் நடக்கும் பிரமாண்டமான மண்டபமான Excel இல் நோயாளர்களுக்காக கட்டில்கள் போடப்படுகின்றது. என்றால் இப்போதைக்கு நிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

தாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/

பையா
எனது மனைவி நான் சன்பிரான்சிஸ்கோவில் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறா.

ஆனால் அவ நியூயோர்க்கில் நிற்பதை எண்ண கவலையாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

நல்ல நல்ல உணவுகளாக இருக்கே

1 minute ago, ஈழப்பிரியன் said:

பையா
எனது மனைவி நான் சன்பிரான்சிஸ்கோவில் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறா.

ஆனால் அவ நியூயோர்க்கில் நிற்பதை எண்ண கவலையாக இருக்கிறது.

இந்த நேரம் தான் மனம் பதைக்கும். அவர் நலமாக இருப்பார் அண்ணா கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2020 at 02:44, ஈழப்பிரியன் said:

..எனது மனைவி நான் சன்பிரான்சிஸ்கோவில் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறா..

வீட்டில் சும்மா இருக்காமல், குடைச்சல் குடுத்தால் அப்படிதானே எண்ணத் தோன்றும்..? :)

'நல்ல வேளை, 'குடும்ப வன்முறை(DV)' கேஸில் உள்ளே தூக்கி போடாமல் விட்டார்களே..!' என சந்தோசப்படுங்கள்..!😋

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

வீட்டில் சும்மா இருக்காமல், குடைச்சல் குடுத்தால் அப்படிதானே எண்ணத் தோன்றும்..? :)

'நல்ல வேளை, 'குடும்ப வன்முறை(DV)' கேஸில் உள்ளே தூக்கி போடாமல் விட்டார்களே..!' என சந்தோசப்படுங்கள்..!😋

ஐயா
இதேதான் உங்களுக்கும்.ஊரில் இல்லையே என்று வீட்டில் சந்தோசமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா
இதேதான் உங்களுக்கும்.ஊரில் இல்லையே என்று வீட்டில் சந்தோசமாக இருக்கும்.

அதுதானே இல்லை..?

நான் வீட்டிலிருந்தால் எல்லா வேலைகளையும்(except cooking) நானே செய்து முடித்துவிடுவேன், அவர்கள் வெளியே அதிகம் செல்வது இல்லை..கோவிலை தவிர.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.