Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமயத்தின் பெயரில் மூடத்தனங்களை நம்பும் முட்டாள்கள் அதிகரித்து விட்டது எம்மினத்தில். வற்றாப்பளை ஜயருக்கு அம்மன் கனவில் சொன்னது என்று யாரோ அடித்து விட அரிசிமாவில் மஞ்சல் சேர்த்து குளைத்து சட்டிசெய்து அதில் விளக்கெரித்து அதை எடுத்து பூசுதுவள் இருவத்தொரு நாள்..பேஸ்புக்கில் லைக் செயர் அள்ளுது இதுக்கு. எனக்கு தெரிந்து நான் இருக்கும் நாட்டில் ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள் இதை செய்யுதுகள் ஊரில் இருந்து வேறு டெலிபோன். எடுத்து சொல்லுதுகள் என்னையும் செய்யட்டாம்.

நேத்து ஒரு வைபர் குறுப்பிலும் பேஸ்புக்கில் ஆயிரக்கனக்கில் செயரும் லைக்கும் தாண்டி போகுது ஊரில இருக்கிற ரெண்டு கோயில் சிலையில கண்ணுல ரத்தம் வருது எண்டு அஞ்சாறு வருசத்துக்கு முன்னம் ரீவியில வந்த நியூசை ஆரோ இப்ப கொரோணாவால வருதெண்டு போட..

மஞ்சல் தண்ணில ஆம்பிளையள் முழுகுங்கோ கொரோனோவுக்கு எண்டு ஆரோ அடிச்சு விட விடிய எழும்பி முழுகின நியூஸ் யாழில வந்திச்சு இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னுக்கு..

சிவன்கோவில் சிலைகள் உடைந்து விட்டன என்று யாரோ பேஸ்புக்கில் அடித்துவிட அதுவும் பெரிதாக பரவி மறுப்பறிக்கை வேறு வந்ததாக நினைவு..

கொரோனோக்கு கைதட்டுறம் எண்டு தகரங்களை சட்டி பானயளை உடைச்சும் விளக்கு கொழுத்துறம் எண்டு பட்டாசு கொழுத்தி வீட்டையும் கொழுத்துதுகள் இந்தியாவில.. 

ஒரு ஆஞ்சநேயர் படத்த போட்டு இதை செயார் பண்ணு விடிய நல்ல சேதி வரும் எண்டால் லைக்கும் செயாரும் அள்ளுது பேஸ்புக்கில்..

தேரை பொக்லைன் மிசினால இழுக்குறாங்கள்..

தீர்த்தக்குளத்துக்கு முள்ளுக்கம்பி வேலி அடிக்குறாங்கள்.

வேற ஆக்கள் வருகினம் எண்டு கோயிலப்பூட்டி வச்சுருக்கிறாங்கள்.

யேசுவிடம் வா கொரோணா ஓடிவிடும் என்று ஒருபக்கத்தால் மூடர்கூட்டம் ஊர் ஊராக கொரோணா பரப்புது..

இவர்களை கொஞ்சப்பேர் என்று நாம் அவ்வளவு இலகுவில் சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது.. கொஞ்சம் இல்ல தமிழரில் பெரும்பான்மை ஆகிவிட்டார்கள் இவர்கள்தான்.. அறிவு உள்ள இனம் என்று நம்பிய இலங்கைத்தமிழர்களும் இப்போது இப்படி முழு சங்கியாக மாறிவிட்டார்கள்.. இவர்கள்தான் இன்று நாட்டு தலைவர்களையும் எம்பிக்களையும் ஊரிலும் இந்தியாவிலும் தெரிவு செய்யும் சக்தியாக இருக்கிறார்கள்.. அதுதான் அவர்களின் தலைவர்கள் நாட்டை ஆளமுடியுது.. 

இந்த நிலைமையில் ஊரில் இருக்கும் அடுத்த தலைமுறையும் இவர்களைதான் பின்பற்றபோகுது.. இந்த மூடத்தனங்கள்தான் சாதி மத வெறியை உருவாக்கும் தலைமுறைகளிடம். வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் தலைமுறை இதிலிருந்து மீண்டு விடும். ஆனால் ஈழத்தை நினைத்தால்..!? பேஸ்புக்கை திறந்தால் மதமூடத்தனங்களால் பைத்தியம் புடிக்குது.. நம் பிள்ளைகள் தப்பிவிட்டார்கள் என்று சுயநலமாக இருந்துவிட்டால் இவை மனதை சங்கடப்படுத்தாது என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்ச மதம்மாறின கூட்டம் ஒண்டு சீனாவிலை தங்கள் போதகர் ஒருவர் தான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது என்று சொல்லிக்கொண்டு திரியுது.

சிலவற்றை நான் வாசிக்காமல் கடந்துவிடுவது ஓணாண்டி. நீங்களும் வாசிக்காமல் விட்டால்  பயித்தியம் பிடிக்கவே பிடிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பா. ஓணாண்டி

எனது அறிவுக்கெட்டிய வரையில், மூடத்தனங்களைக் களைய 

1) சுய சிந்தனை - காரண காரியங்களை தெரிந்து கொள்ளுதல்

2) பகுத்தறிவை பாவித்தல். கொப்பி அன் பேஸ்ற் என்றில்லாமல் ஏன் எதற்கு எப்படி என கேள்வியை நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரிடமும் கேட்போம் கேட்க வைப்போம். முக்கியமாக எங்கள் பிள்ளைகளிடம் இப் பழக்கத்தை ஊக்குவித்தல்.

3) மூடத்தனங்களிலிருந்து விலகுவதில் பெருமை கொள்ளுதல்

போன்றவற்றை எனது பிள்ளைகளுக்கு நான் பழக்கி வருகிறேன். 

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிஞ்ச மதம்மாறின கூட்டம் ஒண்டு சீனாவிலை தங்கள் போதகர் ஒருவர் தான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது என்று சொல்லிக்கொண்டு திரியுது.

சிலவற்றை நான் வாசிக்காமல் கடந்துவிடுவது ஓணாண்டி. நீங்களும் வாசிக்காமல் விட்டால்  பயித்தியம் பிடிக்கவே பிடிக்காது

கொறோணா வைரசை உலகம் முழுவதும் பரப்பியதில் கிறீத்துவ மதக் குழுக்களுக்கு (Cult) முக்கிய பங்கிருக்கிறது. இலங்கையின் வட புலத்தில் இவர்களும் இந்தியாவில் முகமதியர்களும் முக்கியமானவர்கள். 

Common sense க்கு முன் மத நம்பிக்கைகளை வைக்கும் இவர்களைப் போன்றோரால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாதது 😏

  • கருத்துக்கள உறவுகள்

புனைவுகள் வைரஸைவிட வேகமாகப் பரவும் காலத்தில் ஓணாண்டியார் இதில் சொன்னவையும் புனைவுகள் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கோ!

கொரோனாவுக்கு மருந்தில்லை! இதை முதலில் எல்லோரும் தெளிவாகப் தெரிந்துகொள்ளவேண்டும். உடலில் எதிர்ப்புசக்தி உருவாகி கொரோனாவை ஒழித்தால் மட்டும்தான் ஒருவர் பாதிப்பிலிருந்து தப்பலாம். 

அப்ப ஏன் ஹொஸ்பிரலுக்குப் போறாங்கள் எண்டு மோட்டுக்கேள்வி கேட்கக்கூடாது. ஹொஸ்பிடலில் ஒருவரின் உயிரை தாக்குப்பிடிக்கும் வேலைதான் நடக்கின்றது. சுவாசப்பை போன்ற முக்கியமான உடலுறுப்புக்களை எதிர்ப்புசக்தி உருவாகும் வரை தொடர்ந்தும் வேலைசெய்யப்பண்ணுவதுதான் டொக்கர்மாரின் வேலையாக இருக்கு. கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிரி கூடுதலாகக் தாக்கும்போது சில முக்கிய உடலுறுப்புக்களையும் தாக்கி அவற்றை வேலைசெய்யாமல் பண்ணுவதால்தான் மரணம் சம்பவிக்கின்றது.

இதுகளை விளங்காமல் அங்க மருந்திருக்காம், ரசம் குடிச்சால் தப்பலாமாம், மஞ்சள் தெளிச்சால் வைரஸ் வராதாம் என்பதெல்லாம் எல்லோரையும் குழப்பும் வேலை. இதைத் தடுக்க உலக சுகாதார சபை சொல்லுவதையும், ஒவ்வொரு நாடுகள் சொல்லிவதையும் நம்பினால் போதும். 

ஆனால் ஆனானப்பட்ட பிரித்தானியாவிலேயே 5G கொரோனா வைரஸை பரப்புது என்று மண்டை கழண்டதுகள் Twitter இல் கீச்சிட்டு mobile mast ஐ உடைச்சிருக்கிறாங்கள். 

இதுக்குமேல சொல்ல ஒண்டுமில்லை. அடுப்பில கொத்தமல்லி அவியுது! அதைப் பார்க்கவேணும்😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதற்கான ஆதாரத்தை இணைக்க முடியுமா?

https://mobile.twitter.com/mayhempsingh/status/1246834912017010690

தள்ளி நில்லுங்க.. கொழுத்திட்டு நேர வந்திடப்போறாங்க.. லூசுப்பயலுக.

Edited by பாலபத்ர ஓணாண்டி

Just now, பாலபத்ர ஓணாண்டி said:

https://mobile.twitter.com/mayhempsingh/status/1246834912017010690

தள்ளி நில்லுங்க.. கொழுத்திட்டு நேர வந்திடப்போறாங்க..

பாலபத்திர ஓணாண்டி நீங்கள் ஆதாரங்களை இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. இவ்வாறாக முகநூல்களிலும் வட்ஸ்அப், வைபர் ஆகியவற்றில் நீங்கள் கூறிய மூடத்தனங்களை பரப்ப‍ப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. இப்போது கொரோணா பிரச்சனையில் அறிவு பூர்வமாக தீர்வு காண வக்கிலாது பார்ப்பன சங்கி ஊடகங்கள் இவ்வாறான  பித்தலாட்ட வீடியோக்களை பரவ விட்டுள்ளார்கள். அதை எம்மவர்களில் பலரும் நம்புகின்றனர். இவ்வாறு மூடத்தனங்களை பரப்பிய ஒரு இந்திய சங்கியிடம் நான் முகநூலில் விவாதம் புரிந்தேன். விவாத இறுதியில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை சம்பந்தமாக பேசப்பட்ட போது அந்த சங்கி கூறியது  அவன் நாட்டில் போய் நீங்க ரவுடிதனம் புரிந்தா உங்களை கொல்லாமல் விடுவான?  என்பது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

...விவாத இறுதியில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை சம்பந்தமாக பேசப்பட்ட போது அந்த சங்கி கூறியது  அவன் நாட்டில் போய் நீங்க ரவுடிதனம் புரிந்தா உங்களை கொல்லாமல் விடுவான?  என்பது தான்...

இந்த மாதிரி 'அரைவேக்காடுகள்' தமிழகத்தில் இன்னமும் பலருண்டு..! அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் நமக்கு ஆத்திரத்தில் பைத்தியமே பிடித்துவிடும்.

சில நாட்களுக்கு முன் தில்லி மாநாடு முடிவில் கொரானா தொற்றியதை பற்றி நான் பேசும்பொழுது பிற தென்னிந்திய மாநிலத்தை சேர்ந்த அவர் இப்படி குறிப்பிட்டார்.

"தமிழ் ஜிகாதிகள், ராஜீவை அழித்தது போல, இப்போ முசுலீம் ஜிகாதிகள் இந்துக்களை அழிக்க கொரானாவை காவித் திரிகிறார்கள்..!"

எங்கே சொல்லியழ..?

இத்தனைக்கும் அவர், உயர்பதவியிலிருக்கும் மூத்த பொறியாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரோ தாங்கள் பிரபல்யமாக கிளப்பி விட்ட வதந்தி ....அந்த கோயில் ஐயர்  தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்லி உள்ளார் ...கோயில் நிர்வாகமும் மறுத்திருந்தது ....இது நேற்றே மு.பு உலாவத் தொடங்கி பொய் என்பதால் புஸ் என்று அடங்கி விட்டது .

இன்று காவி வந்ததன் நோக்கம் புரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

புரியாத எங்களுக்காக, உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கும் புரியவைப்பீர்களா?

கேள்வி  : பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி? 
பதில்     :  கடைசி ஒரு மனிதர் இந்த பூவுலகில் இருக்கும் வரை அப்படி ஒரு சமூகம் இருக்காது 🙂 

பின்குறிப்பு : பகுத்தறவு என்பது என்றால் என்ன?  பதில் : ஒருவருக்கும் அது தெரியாது 🤩

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

புரியாத எங்களுக்காக, உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கும் புரியவைப்பீர்களா?

ஐயரின் கனவில் அம்மன் வந்த செய்தி ,ஆண்கள் மஞ்சள் போட்டு குளித்த செய்தி எல்லாம் யாரோ சும்மா பம்பலுக்காய் கிளப்பி விட்ட செய்திகள்...அதை பார்த்து ஒருத்தரும் விளக்கு ஏத்தவுமில்லை ,மஞ்சள் போட்டு குளிக்கவுமில்லை 

நேற்று வந்த செய்தியை இன்னு காவி வந்ததன் நோக்கம் மதம் தொடர்பான திரிகளை அணைக்க விடாது தொடரணும் என்பதற்காக அல்லது உன் மதத்திலும் இப்படியான முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காய் இருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

கேள்வி  : பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி? 
பதில்     :  கடைசி ஒரு மனிதர் இந்த பூவுலகில் இருக்கும் வரை அப்படி ஒரு சமூகம் இருக்காது 🙂 

பின்குறிப்பு : பகுத்தறவு என்பது என்றால் என்ன?  பதில் : ஒருவருக்கும் அது தெரியாது 🤩

தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதுதான் சாலப் பொருந்தும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

ஐயரின் கனவில் அம்மன் வந்த செய்தி ,ஆண்கள் மஞ்சள் போட்டு குளித்த செய்தி எல்லாம் யாரோ சும்மா பம்பலுக்காய் கிளப்பி விட்ட செய்திகள்...அதை பார்த்து ஒருத்தரும் விளக்கு ஏத்தவுமில்லை ,மஞ்சள் போட்டு குளிக்கவுமில்லை 

நேற்று வந்த செய்தியை இன்னு காவி வந்ததன் நோக்கம் மதம் தொடர்பான திரிகளை அணைக்க விடாது தொடரணும் என்பதற்காக அல்லது உன் மதத்திலும் இப்படியான முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காய் இருக்கும்  

நன்றி ரதி. உங்கள் மனதில் உள்ளதை துணிச்சலாகவும், இனிமையான பேச்சுத் தமிழிலும் நீங்கள் எழுதி வருவதால் எங்கள் மத்தியில் உங்கள் மீது பேரபிமானம் இருக்கிறது. 

இந்த திரியை ஆரம்பித்த பாலபத்ர ஓணாண்டி, தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் பற்றிய சொந்த அனுபவத்தை உண்மையாக எழுதியிருப்பதாகவே எனக்கு தெரிகிறது. மேலும் மூடநம்பிக்கைகள், அளவுக்கு அதிகமான சமயநம்பிக்கைகள் பற்றிய அவரது கவலையும் நியாயமானதாகவே தெரிகிறது.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள தரவுகளின் மூலம்:
https://www.pewforum.org/religious-landscape-study/

70 வீதம் அமெரிக்கர்கள் தம்மை கிறீஸ்தவர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். 

22.8 வீதம் எந்த மதத்தையும் சாராதவர்கள். இவர்களில்:

        15.8 வீதம் எம் மதமும் சம்மதமான ரகம் ( என்னை போல - கைலாசாவாசிகள்😇)

           3.1 வீதம் நாத்தீகவாதிகள் - கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பரப்பும் மதங்களை சேர்ந்தவர்கள்.

           4.0 வீதமானவர்கள் மதங்களை பற்றி அக்கறைப்படாதவர்கள்.

தமிழர் மத்தியிலும் இப்படி புள்ளிவிபரம் எடுத்து பார்க்கலாமே?

Religions

Explore religious groups in the U.S. by tradition, family and denomination

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ampanai said:

கேள்வி  : பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி? 
பதில்     :  கடைசி ஒரு மனிதர் இந்த பூவுலகில் இருக்கும் வரை அப்படி ஒரு சமூகம் இருக்காது 🙂 

பின்குறிப்பு :பகுத்தறவு என்பது என்றால் என்ன?  பதில் : ஒருவருக்கும் அது தெரியாது 🤩

மனித இனம் காலத்துக்கு காலம் பரிணாம வளர்ச்சியில் சிந்தனை ஆற்றல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்..

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு 

என்கிறார் வள்ளுவர்..

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் பிறந்த திருவள்ளுவரால் இதை சிந்திக்க முடிந்திருக்கிறது..

அவருக்கு பிறகு பரிணாம வளர்ச்சியில் நீண்டபெரிய இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உள்ள நாம் என்ன எழுதுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அம்பனை பகிடியாக எழுதியதை சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அம்பனை பகிடியாக எழுதியதை சீரியஸாக எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இல்லை கப்டன்.. நான் பேஸ்புக் வட்ஸப்பில் நம்ம தீவிர சங்கி அல்லேலூயா பாய் கூட்டம்   எழுதி பகிரும் மூடத்தனங்களை சொன்னேன்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி 'அரைவேக்காடுகள்' தமிழகத்தில் இன்னமும் பலருண்டு..! அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் நமக்கு ஆத்திரத்தில் பைத்தியமே பிடித்துவிடும்.

சில நாட்களுக்கு முன் தில்லி மாநாடு முடிவில் கொரானா தொற்றியதை பற்றி நான் பேசும்பொழுது பிற தென்னிந்திய மாநிலத்தை சேர்ந்த அவர் இப்படி குறிப்பிட்டார்.

"தமிழ் ஜிகாதிகள், ராஜீவை அழித்தது போல, இப்போ முசுலீம் ஜிகாதிகள் இந்துக்களை அழிக்க கொரானாவை காவித் திரிகிறார்கள்..!"

எங்கே சொல்லியழ..?

இத்தனைக்கும் அவர், உயர்பதவியிலிருக்கும் மூத்த பொறியாளர்.

விவாத‌த்தில் வெல்ல‌ முடியா விட்டால் , தூச‌ன‌த்தில் பேசுங்க‌ள் /

அழிவை துய‌ரை ச‌ந்திச்ச‌து நாங்க‌ள் , நீங்க‌ள் மேல‌ சொன்ன‌ அரைவைக் காடுக‌ள் கூட‌ எழுதினா அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் வ‌ரும் /  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலி த‌ன‌ம் ஜ‌யா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

கீழே உள்ள தரவுகளின் மூலம்:
https://www.pewforum.org/religious-landscape-study/

70 வீதம் அமெரிக்கர்கள் தம்மை கிறீஸ்தவர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். 

22.8 வீதம் எந்த மதத்தையும் சாராதவர்கள். இவர்களில்:

        15.8 வீதம் எம் மதமும் சம்மதமான ரகம் ( என்னை போல - கைலாசாவாசிகள்😇)

           3.1 வீதம் நாத்தீகவாதிகள் - கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பரப்பும் மதங்களை சேர்ந்தவர்கள்.

           4.0 வீதமானவர்கள் மதங்களை பற்றி அக்கறைப்படாதவர்கள்.

தமிழர் மத்தியிலும் இப்படி புள்ளிவிபரம் எடுத்து பார்க்கலாமே?

Religions

Explore religious groups in the U.S. by tradition, family and denomination

கற்பகம் அதை ஏன் மினக்கெட்டு எடுப்பான்.. ரெண்டு நாட்டு மக்களும் தெரிவு செய்யும் அரசியல்வாதிகளை பார்க்கவே தெரியுதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

விவாத‌த்தில் வெல்ல‌ முடியா விட்டால் , தூச‌ன‌த்தில் பேசுங்க‌ள் /

அழிவை துய‌ரை ச‌ந்திச்ச‌து நாங்க‌ள் , நீங்க‌ள் மேல‌ சொன்ன‌ அரைவைக் காடுக‌ள் கூட‌ எழுதினா அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் வ‌ரும் /  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலி த‌ன‌ம் ஜ‌யா 

தம்பி முதல் சொன்னது தப்புடா செல்லம்.. கடைசியா சொன்னது சரி. சீமான் முன்வைக்கும் தத்துவங்கள் கொள்கைகள் நாட்டுக்கு மிக நல்லவை.. பகுத்தறிவோடு கூடியவை.. ஆனால் அவற்றை ஆழ்ந்து சிந்தித்து உள்வாங்காமல் அவசரக்குடுக்கையாக கோபத்தில் நம் தம்பிகள் தூசணத்தில் எழுதுவது கொம்மாள கோத்த எண்டு திட்டுவது பெண்கள் மற்றும் பெரியவர்களை எம்மிடம் இருந்து தூர விலகப்பண்னிவிடும். நாம் தமிழர் கூட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளும் வீதம் குறைவு. அது ஏன் என்பதை நாம் சிந்திக்கணும்..

இந்த நாட்டில் ஒரு தூய அரசியல் தேவை,காசு கொடுத்தால்தான் வாக்களிப்பீர்கள் என்றால் எங்களுக்கு அந்த வாக்கே வேண்டாம் என்று சொல்லவே ஒரு தனி தைரியம் வேண்டும்.. இத்தனை நற்பண்புகள் கொண்ட நாம் தமிழர் கட்சியில் இன்னமும் நம்ம பசங்கள் பலருக்கு மற்றவர்களிடம் பேசுவது பற்றி சொல்லித்தர வேண்டி இருக்கிறது.. புரிந்து , உணர்ந்து நாமே மாறவேண்டும் . . இல்லையென்றால் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் .

கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நம் கையில் தான் உள்ளது . நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளும் கருத்துக்களும் எழுத்துக்களும் மிக கூர்மையானது அதை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது நம் மீதே பாதிப்பை ஏற்படுத்தும்..

பி:கு - நான் ஒரு தீவிர நாம் தமிழர் கட்சி ஆதரவாளன். 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லை கப்டன்.. நான் பேஸ்புக் வட்ஸப்பில் நம்ம தீவிர சங்கி அல்லேலூயா பாய் கூட்டம்   எழுதி பகிரும் மூடத்தனங்களை சொன்னேன்..

மேற்கு நாட்டவன் தனது கண்டுபிடிப்புக்களைமனித இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பாவிக்கும்போது  நீங்கள் குறிப்பிட்ட கூட்டங்கள் அந்த அறிவியற் கண்டுபிடிப்புக்களை தனது மூட நம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களை பரப்புவதற்கும் பாவிக்கின்றனர். ☹️
 
இந்தத் திருட்டுக் கூட்டங்களுக்கு அறிவியல் வளர்ச்சியில் தாங்கள் உரிமை கோருவதற்கு ஏதுமில்லை என்கின்ற தாள்வுமனப்பான்மையால்  நானும் ரெளடிதான் ஸ்ரைலில் இந்த பிற்போக்குத்தனங்களை முன்னிலைப் படுத்துகின்றனர். 😏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

3.1 வீதம் நாத்தீகவாதிகள் - கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பரப்பும் மதங்களை சேர்ந்தவர்கள்.

நாத்தீகவாதிகளுக்கு மதங்களை சேர்ந்தவர்கள் என்று தமிழில் ஒரு பொழிப்புரை தந்துள்ளீர்கள்.அமெரிக்காவில் மதங்களை சேர்ந்தவர்களையும் நாத்திகர்கள் என்று அழைக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 03:41, விளங்க நினைப்பவன் said:

நாத்தீகவாதிகளுக்கு மதங்களை சேர்ந்தவர்கள் என்று தமிழில் ஒரு பொழிப்புரை தந்துள்ளீர்கள்.அமெரிக்காவில் மதங்களை சேர்ந்தவர்களையும் நாத்திகர்கள் என்று அழைக்கிறார்களா?

நன்கு அவதானித்து இருக்கிறீர்கள். சில அமெரிக்கர்கள் (நான் உட்பட) மட்டுமல்ல, வேறு நாட்டவர் சிலரும் நாத்திகவாதத்தை ஒரு மதமாக பார்க்கிறோம். இந்த தமிழாக்கத்தின் அடிப்படையான ஆங்கில மூலத்தை கவனமாக படியுங்கள்:

சமய நம்பிக்கை அற்றவர்களில் மூன்று விதமானவர்கள் உள்ளதை கவனியுங்கள்.

இவர்களில், Agnostic என்பவர்களே சமயங்களை பற்றி அக்கறை படாதவர்கள்.

Atheist என்பவர்கள், ஏனைய மதவாதிகளை போல, மதம் இல்லை என்ற கோட்பாட்டை மதவாதிகளுக்கு இணையான ஆக்கிரோசத்துடன் முன்னெடுத்து செல்பவர்கள். மதவாதிகளை போலவே இவர்களது சில கருத்தகள் அறிவியலுக்கு மாறானவை. இவர்களில் சிலர் ஆபத்தானவர்களும் கூட. கொம்யூனிச புரட்சிகளின் போது மத நம்பிக்கை கொண்ட பாமரரையும் மோசமாக அழித்தொழித்தவர்கள் இவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது  உண்மை. கொம்யூனிசகாரர்களும் நாத்திகர்கள் தான்.இந்தியாவில் கொம்யூனிச கட்சியினர் முஸ்லிம் மதஆதரவாக இருக்கும் முரண்பாட்டை  காணலாம்.
தங்களுக்கு பிடித்த சனநாய கட்சிகளை சுதந்திரமாக ஆதரிக்கும் சனநாய முறையை விரும்பும் இறைவன் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
சனநாயகத்திற்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு இறைவன் கட்டளைபடி நடப்பதானால் மத ஆட்சியை அல்லவா நடைமுறைபடுத்த வேண்டும் 😂

*மதவாதிகளை போலவே இவர்களது சில கருத்தகள் அறிவியலுக்கு மாறானவை. இவர்களில் சிலர் ஆபத்தானவர்களும் கூட. கொம்யூனிச புரட்சிகளின் போது மத நம்பிக்கை கொண்ட பாமரரையும் மோசமாக அழித்தொழித்தவர்கள் இவர்களே. *

கற்பகதரு

Edited by விளங்க நினைப்பவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.