Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரப்பகுதியில் சற்றுமுன்னர் சுற்றிவளைக்கப்பட்டவீடு -சிக்கினர் இரண்டு பெண்கள்

Featured Replies

13 hours ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும்.... உங்கள் பதிவினை பார்க்கும் போது... உங்களுக்கு புரியக்கூடியவாறு சொல்லமுடியும் என்று நினைக்கவில்லை.

அப்போ நான் எழுதினது மிகச் சரி என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

பேராசை பிடித்து மற்றவரகளை ஏமாற்றிப் பிழைக்கும் மோசடிப் பேர்வளிகளை விட, சோம்பேறித்தனமாக ஊர் சுற்றிவிட்டு வெளிநாட்டு பணத்தை எதிர்பார்தது வாழக்கை நடத்துபவர்களை விட, மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகளை விட இந்த பெண்கள் செய்யும் தொழில் மேலானது என்பது எனது கருத்து.  அடுத்தவனை ஏமாற்றி அடுத்தவன் பொருளில் ஆசைப்படும்   கேடு கெட்டவர்களை விட தனக்கு சொந்தமான உடலை வருத்தி வருமானம் ஈட்டும் இவர்கள் எந்த வகையிலும் தவறானவர்கள் அல்ல. 

உங்கள் கருத்தில் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது, அதேநேரம் அதிலுள்ள அநியாயத்தையும் ஏற்க மனம் மறுக்கிறது. உடலை வருத்தாமல் தொழில் செய்ய முடியாது. அதேநேரம் தொழில் செய்வதிலும் ஒரு நெறிமுறைகளை மனிதகுலம் வகுத்து வைத்துள்ளது. அதில் நெறியற்றதாகவே விபச்சாரத்தை ஒதுக்கி வைத்துள்ளது. வயிற்றுப் பசியைக்காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது. 

ஊரடங்கு நடைமுறையினால் கூட வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளும் அங்கு நடைபெறுகின்றன. விபச்சாரத்தைவிட பிச்சைபெறுவது நன்று.

93136921_689335365154978_689632565027405824_n.jpg?189db0

93186024_2333373453629209_6935434999701176320_n.jpg?189db0

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kali said:

அப்போ நான் எழுதினது மிகச் சரி என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். நன்றி. 

அய்யா, தலைவா, ஒருவர் பதிவை வைத்து அவரை மட்டுக்கட்டிவிடலாம்....

உங்கள் பதிவுகளை பார்க்கும் போது, உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு, திறமையோ, தகுதியோ எனக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்கள் கருத்தில் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது, அதேநேரம் அதிலுள்ள அநியாயத்தையும் ஏற்க மனம் மறுக்கிறது. உடலை வருத்தாமல் தொழில் செய்ய முடியாது. அதேநேரம் தொழில் செய்வதிலும் ஒரு நெறிமுறைகளை மனிதகுலம் வகுத்து வைத்துள்ளது. அதில் நெறியற்றதாகவே விபச்சாரத்தை ஒதுக்கி வைத்துள்ளது. வயிற்றுப் பசியைக்காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது. 

ஊரடங்கு நடைமுறையினால் கூட வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளும் அங்கு நடைபெறுகின்றன. விபச்சாரத்தைவிட பிச்சைபெறுவது நன்று.

93136921_689335365154978_689632565027405824_n.jpg?189db0

93186024_2333373453629209_6935434999701176320_n.jpg?189db0

பொருளாதாரத் தேவைக்காக உடலை விற்கும் பெண்களை, பிச்சையெடுப்பவராக கற்பனை செய்து பார்த்தேன்.  உங்கள் குறிப்பிட்ட  கருத்துடன் உடன்படக் கடினமாக உள்ளது. 🤔

மிகப் பெரும்பாலான பெண்கள் விருப்பத்தின் நிமித்தம் இத் தொழிலில் இறங்குவதில்லை. சூழல் அவர்களை அதற்குள் தள்ளிவிடுகிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அடித்தல் புகைபிடித்தல் பெண்கள் பிறத்தி ஆண்களுடன் தொட்டு பழகுதல் விபச்சாரம் செய்தல் விபச்சாரயிடம் போதல் இப்படி இன்னும் பல பல விடையங்கள் எம்மலர்களால் பிழையாகப் பாக்ப் படுகிறது.சரி அது தறாகவே இருக்கட்டும்.ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டு;ம் எத்தனை பேர் அதி உச்ச நாகரீகம் நிலவும் மேலை நாடுகளில் இந்த விடையங்களை முற்றாக தவிர்த்தார்கள் என்பதை அவரவர் மனச்சாச்சிக்கே விட்டு விடுவம்.ஏன் என்றால் இங்கு எல்லாத்துகும் அனுமதி உண்டு.ஆனால் ஊரவன் வாய்வு பறிஞ்சாலும் குய்யோ முய்யோதான்.அது தான் எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.

12 minutes ago, சுவைப்பிரியன் said:

மேடைக்கு பின்னால் வந்து இரகசியமாக சொல்ல வேண்டிய விசயத்தை இப்படி மேடையில் நின்று மைக் பிடித்து சொல்லி போட்டுடைத்தால் எப்படி நாங்க ஒத்துக்கொள்ளுவம். ( இது மைன்ட் வொய்ஸ் தான். கேட்டுட்டுதோ. 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பொருளாதாரத் தேவைக்காக உடலை விற்கும் பெண்களை, பிச்சையெடுப்பவராக கற்பனை செய்து பார்த்தேன்.

பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்த அய்யனின் காட்சி தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

தண்ணி அடித்தல், புகைபிடித்தல் ...

ஒரு தெளிவிற்காக கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்.

மேற்கூறியவை குற்றமா ஐயா..? :shocked:

இவைகள் பந்தா, ஆண்மை, கெத்து, ஸ்டைல் போன்றவற்றில் அடங்காதா..? சமூகத்திலும், படங்களிலும் அப்படித்தானே இவைகள் உருவகப்படுத்தப்படுகின்றன..?

இப்பழக்கங்கள் இல்லாதவர்களை, ஏளனமாக (இவன் சாமியார் என்று) பார்ப்பவர்களும் உண்டுதானே? :)

57 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தெளிவிற்காக கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்.

மேற்கூறியவை குற்றமா ஐயா..? :shocked:

இவைகள் பந்தா, ஆண்மை, கெத்து, ஸ்டைல் போன்றவற்றில் அடங்காதா..? சமூகத்திலும், படங்களிலும் அப்படித்தானே இவைகள் உருவகப்படுத்தப்படுகின்றன..?

இப்பழக்கங்கள் இல்லாதவர்களை, ஏளனமாக (இவன் சாமியார் என்று) பார்ப்பவர்களும் உண்டுதானே? :)

Alcohol because no great story ever started with someone eating a salad.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

Alcohol because no great story ever started with someone eating a salad.

Bottle.jpg

திரு.துல்பன்,

அடுத்தென்ன..?

சாமியார் நித்தியானந்தா & ரஞ்சிதா படமா..? 🤣

உவமைகள், படங்களை நினைக்கையில் இந்த பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..!

கோட்டுக்குத் தேவை சில சாட்சி..
நல்ல குணத்துக்கு தேவை மனசாட்சி..!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

அதேநேரம் தொழில் செய்வதிலும் ஒரு நெறிமுறைகளை மனிதகுலம் வகுத்து வைத்துள்ளது. அதில் நெறியற்றதாகவே விபச்சாரத்தை ஒதுக்கி வைத்துள்ளது.

பொலிசும் இராணுவமும் கொலை செய்யும் தொழில் செய்வதை தவறாக காண்பதில்லை. இறைச்சிக்காக மிருகங்களை கொல்வதை தாரளமாக ஏற்றுக்கொள்ளலாம். பணத்துக்காக ஏழைகளை மாட்டு வேலை செய்யவைப்பதும் தவறாக தெரியவில்லை. தன்னால் விற்கமுடிவதை அவள் விரும்பி விற்றாலும் விரும்பாமல் விற்றாலும் மற்றவர்களுக்கு அதில் என்ன வேலை என்று நான் கேட்கவில்லை, நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கேட்டுவிட்டு, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். இந்த நாடுகள், வாழ்க நிரந்தரம், வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 01:33, ஈழப்பிரியன் said:

ஆம் உங்கள் கோரிக்கை ஆராயப்பட்டது.
ஆனாலும் இங்கு வந்து போனவர்கள் தொகை கூடுதல் என்பதால் இப்போது அவர்களை வைத்து பராமரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

ஈழப்பிரியன்.... என்ன கொடுமை இது 
உலகம்... எய்ட்ஸ் என்றும், கொரோனா என்றும், 
பயந்து போய்... முடங்கி இருக்கையில்,
யாழ்ப்பாணத்தில்... விபச்சார விடுதிக்கு, 
 Q  "கியூ" வரிசையில்.. போய் இருப்பதை நினைக்க....
மனது... பதை பதைக்குது. 😮

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

பொலிசும் இராணுவமும் கொலை செய்யும் தொழில் செய்வதை தவறாக காண்பதில்லை. இறைச்சிக்காக மிருகங்களை கொல்வதை தாரளமாக ஏற்றுக்கொள்ளலாம். பணத்துக்காக ஏழைகளை மாட்டு வேலை செய்யவைப்பதும் தவறாக தெரியவில்லை. தன்னால் விற்கமுடிவதை அவள் விரும்பி விற்றாலும் விரும்பாமல் விற்றாலும் மற்றவர்களுக்கு அதில் என்ன வேலை என்று நான் கேட்கவில்லை, நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கேட்டுவிட்டு, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். இந்த நாடுகள், வாழ்க நிரந்தரம், வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே.

உங்கள் அறிவுத்திறனுக்கு ஒரு பாராட்டு.! 'அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கி, அதற்குப் பொருள் சொல்லி, ஆதாரமும்காட்டி, ஆணித்தரமாக வாதாடக்கூடிய திறன்கொண்டவர்களையும் கண்டுள்ளோம். 😌  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

உங்கள் அறிவுத்திறனுக்கு ஒரு பாராட்டு.! 'அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கி, அதற்குப் பொருள் சொல்லி, ஆதாரமும்காட்டி, ஆணித்தரமாக வாதாடக்கூடிய திறன்கொண்டவர்களையும் கண்டுள்ளோம். 😌  

நல்ல சைவப்பழம் போலும் ... 😃 சிலுக்கு சுமிதாவுக்கும், டொனால் ட்ரம்புக்கும் கூடத்தான் உங்கள் மக்கள் கோவில் கட்டுகிறார்கள். மாட்டு மூத்திரம் குடித்தால் கொரொனா வைரஸ் தொற்றாது என்பதும் அங்கிருந்துதான் வந்தது. இப்படி எத்தனையை கண்டுள்ளோம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஒரு தெளிவிற்காக கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்.

மேற்கூறியவை குற்றமா ஐயா..? :shocked:

இவைகள் பந்தா, ஆண்மை, கெத்து, ஸ்டைல் போன்றவற்றில் அடங்காதா..? சமூகத்திலும், படங்களிலும் அப்படித்தானே இவைகள் உருவகப்படுத்தப்படுகின்றன..?

இப்பழக்கங்கள் இல்லாதவர்களை, ஏளனமாக (இவன் சாமியார் என்று) பார்ப்பவர்களும் உண்டுதானே? :)

சிலது சில இடங்களில் சமுகக் குற்றம்.சில இடங்களில் சட்டக்குற்றம்.மற்றது நீங்கள் சொன்ன கெத்து சமாச்சாரங்கள் எல்லாம் ஏழைகள் செய்தால் ஒரு பார்வை.பணம் படைத்தவர்கள் செய்தால் இன்னொரு பார்வை.அம்புட்டுத்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

நல்ல சைவப்பழம் போலும் ... 😃

பாராட்டுக்கு நன்றி அன்பரே! :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

 மாட்டு மூத்திரம் குடித்தால் கொரொனா வைரஸ் தொற்றாது என்பதும் அங்கிருந்துதான் வந்தது. இப்படி எத்தனையை கண்டுள்ளோம்.😎

அது ஏன் எதற்கெடுத்தாலும் ஹிந்திய மக்களின் நடைமுறைகளை எம்மவருடன் இணைக்கிறீர்கள் என்றுதெரியவில்லை! எத்தனைதரம் எழுதினாலும் விளங்காததுகளை என்னவென்று சொல்ல!!

சொல்வது விளங்கவில்லையா அல்லது உள்ளே எதுவுமே இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அது ஏன் எதற்கெடுத்தாலும் ஹிந்திய மக்களின் நடைமுறைகளை எம்மவருடன் இணைக்கிறீர்கள் என்றுதெரியவில்லை! எத்தனைதரம் எழுதினாலும் விளங்காததுகளை என்னவென்று சொல்ல!!

சொல்வது விளங்கவில்லையா அல்லது உள்ளே எதுவுமே இல்லையா??

17 hours ago, Paanch said:

உங்கள் அறிவுத்திறனுக்கு ஒரு பாராட்டு.! 'அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கி, அதற்குப் பொருள் சொல்லி, ஆதாரமும்காட்டி, ஆணித்தரமாக வாதாடக்கூடிய திறன்கொண்டவர்களையும் கண்டுள்ளோம். 😌  

அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கியவர்கள் தான் மாட்டுமூத்திரம் குடிப்பவர்கள். நீங்கள் அதற்கு உரிமை கொண்டாடிக்கொண்டு, நாங்கள் அவர்கள் இல்லை என்றும் சொன்னால் .... புரியமாட்டேன் என்கிறதே என் மண்டை.😄 மாட்டுமூத்திரம் குடிப்பதை ஒத்துக்கொண்டால் குறைந்தா போய்விடுவீர்கள்? இந்திய விஞ்ஞான நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளே, மாட்டுமூத்திரம் குடிப்பது மட்டுமன்றி அதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, அதுபற்றிய ஆய்வுகளையும் பகிர்ந்து வருகிறார்கள், உங்களுக்கு உங்கள் சமய நம்பிக்கையையும் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ள ஏன் இந்த வெட்கம்?  இந்துக்கள் == இந்தியர்கள் ==ஹிந்துஸ்தானியர்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கியவர்கள் தான் மாட்டுமூத்திரம் குடிப்பவர்கள். நீங்கள் அதற்கு உரிமை கொண்டாடிக்கொண்டு, நாங்கள் அவர்கள் இல்லை என்றும் சொன்னால் .... புரியமட்டேன் என்கிறதே என் மண்டை.😄 மாட்டுமூத்திரம் குடிப்பதை ஒத்துக்கொண்டால் குறைந்தா போய்விடுவீர்கள்? இந்திய விஞ்ஞான நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளே, மாட்டுமூத்திரம் குடிப்பது மட்டுமன்றி அதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, அதுபற்றிய ஆய்வுகளையும் பகிர்ந்து வருகிறார்கள், உங்களுக்கு உங்கள் சமய நம்பிக்கையையும் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ள ஏன் இந்த வெட்கம்?  இந்துக்கள் == இந்தியர்கள் ==ஹிந்துஸ்தானியர்.

விளக்கமில்லாமலும் திரிக்கு சம்பந்தமில்லாமலும் கருத்தெழுதும் உங்களுக்கு பதில் கருத்தெழுதி எனது நேரத்தை வீணாக்க  நான் விரும்பவில்லை. ஏனெனில் நான் இலங்கை சைவன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 11:16, சுவைப்பிரியன் said:

தண்ணி அடித்தல் புகைபிடித்தல் பெண்கள் பிறத்தி ஆண்களுடன் தொட்டு பழகுதல் விபச்சாரம் செய்தல் விபச்சாரயிடம் போதல் இப்படி இன்னும் பல பல விடையங்கள் எம்மலர்களால் பிழையாகப் பாக்ப் படுகிறது.சரி அது தறாகவே இருக்கட்டும்.ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டு;ம் எத்தனை பேர் அதி உச்ச நாகரீகம் நிலவும் மேலை நாடுகளில் இந்த விடையங்களை முற்றாக தவிர்த்தார்கள் என்பதை அவரவர் மனச்சாச்சிக்கே விட்டு விடுவம்.ஏன் என்றால் இங்கு எல்லாத்துகும் அனுமதி உண்டு.ஆனால் ஊரவன் வாய்வு பறிஞ்சாலும் குய்யோ முய்யோதான்.அது தான் எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.

இது ஒரு தவறான பாதை அல்லது எண்ணம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
நெருப்பை தொட்டவன் ஒருவன் நெருப்பு சுடும் என்று இன்னொருவருக்கு அறிவுரை சொல்லவே 
கூடாது என்பது போல உங்கள் கருத்து இருக்கிறது. எல்லோரும் நெருப்பை தொட்டு பார்த்து அறிய தேவை இல்லை. இன்னொருவரின் வாழ்க்கையின் எழுச்சி வீழ்ச்சியை முன் உதாரணமாக எடுப்பவனே புத்திசாலி 
அவர்கள்தான் இந்த உலகில் பல சாதனைகளை  படைக்கிறார்கள்.

மற்றது இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பது . 
"வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில்"
"வீடொன்றிலேயே அண்மைக்காலமாக தகாத நடவடிக்கைகள்  இடம்பெற்று வந்த நிலையில்"

"கலாச்சார சீரழிவு" எந்த வார்த்தை மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியது இது ஒட்டு மொத்த 
சமூகத்தையும் பாதிக்க கூடிய ஒரு விடயம் பற்றியே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே இது 
எழுந்தமாத்திரமாக நாம் எழுதிவிட்டு செல்ல கூடியது அல்ல. 
1000 வருடம் முன்பு விபச்சாரம் இருந்ததால் ........ அதன் பின்பு ஆயிரம் வருடம் முன்னேறி வளர்ந்த 
மனித குலத்தில் இன்றும் இருக்க வேண்டும் என்பது அபத்தம். அப்போது கணவர் இறந்தால் பெண்கள் உடன்கட்டை எற வேண்டும் என்றும் இருந்தததால் நாம் இன்று அதை தொடரவில்லையே?

மேலைநாடுகளில் இருப்பதால் அங்கும் இருக்கலாம் என்பதும் ஒரு சரியான வாதம் இல்லை 
ஏனெனில் மேலைநாடுகளில் எமது கலாச்சாரம் பண்புகள் எமது நிலத்துக்கே உரித்தான உறவு முறைகள் இல்லை. அங்கு இருப்பது இங்கு இல்லாதபோது இங்கு இருப்பதை ஒரு சீர்கேடை அங்கே இருக்கலாம் என்பது  
ஒரு நல்ல வாதமாக படவில்லை.

இங்கு இருப்பவர்கள் பலர் விபச்சாரிகளிடம் போய்வருகிறார்கள்தானே?
ஆதலால் அங்கு இருப்பவர்களும் போகலாம் என்பதும் ஒரு நியாயமான வாதமில்லை 
விபச்சாரம் எவ்வாறான தாக்கத்தை ஒரு சமூகத்தில் கொண்டு வருகிறது என்பதுதான் 
இங்கே பார்க்க வேண்டிய விடயமே தவிர எத்தனை பேர் ஈடுபடுகிறார்கள் என்பதல்ல 
சாலைகளில் அதிகமானவர்கள் வேக தடைக்கு மேலாக வாகனம் ஓட்டுவதால் வேக தடைகளை 
நீக்கிவிடலாம் என்பது போன்ற எதிர்விளைவை பற்றி சிந்திக்காத ஒரு எண்ணமாகவே எனக்கு படுகிறது.

இங்கு வாதத்துக்கு உட்படுத்த வேண்டியது 
விபச்சாரம்  நல்லதா? கேடா? .......... சமுகத்துக்கு நன்மையா? தீமையா?

ஏன் விபச்சாரிகள் உருவாக்குகிறார்கள்? அல்லது விபச்சாரிகள் உருவாக்கப்படுகிறார்களா? 
வறுமைதான் காரணம் என்றால் எல்லா வறிய பெண்களும் இப்படித்தான் வறுமையை 
எதிர்கொள்கிறார்களா? வறுமை இல்லாத இடங்களில் விபச்சாரம் அழிந்து போய் இருக்கிறதா? 

விபச்சாரிகளின் வறுமையை ஒழிக்க வேறு வழிகள் உருவாக்க படலாமா?

இவைதான் நாம் விடை தேட வேண்டிய வினாக்கள் 
என்னுடைய தனி ஒழுக்கம் ஒரு சமூக பார்வைக்கு தேவையற்றது 
ஒரு சமூக பார்வை என்பது சமூகத்தின் எதிர்காலம் பற்றி பார்க்க வேண்டியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.