Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1_Coronavirus-in-Switzerland-Fribourg-30-Mar-2020-720x450.jpg

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 250 இற்க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை பிரித்தானியா கொள்வனவு செய்துள்ளது.

இந்த நிலையில், குறித்த வென்டிலேட்டர்கள் குறித்து பிரித்தானிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து பெறப்பட்ட வென்டிலேட்டர்கள், ‘ஷாங்க்ரிலா 510 மொடல்’, இவை பிரித்தானிய மருத்துவர்களுக்கு அறிமுகமில்லாதவை என கூறப்படுகின்றது.

அத்துடன், இயந்திரங்கள் சிக்கலான ஒக்ஸிஜன் விநியோகம், ஒழுங்காக சுத்தம் செய்ய முடியவில்லை, அறிமுகமில்லாத வடிவமைப்பு மற்றும் குழப்பமான அறிவுறுத்தல் கையேடு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

மேலும் குறிப்பாக, இவை மருத்துவமனைகளில் அல்ல, ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உள்ள கொள்முதல் பிரச்சினைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

http://athavannews.com/சீன-வென்டிலேட்டர்களை-பயன/

சீனாவை அப்பிடியே குப்பை தொட்டிக்கு அனுப்பிவிட வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kali said:

சீனாவை அப்பிடியே குப்பை தொட்டிக்கு அனுப்பிவிட வேண்டியது தான்

அப்படி அனுப்புவதற்கு முன்னர் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கோவணத்துடன்தான் நிற்கவேண்டி ஏற்படும். 

😂😂😂😂

ஆதவன் நியூஸையும் அதன் கட்டுரையாளர்களையும் இந்த வென்ரிலேற்றர்களில் வைத்து மரணம் நிச்சயமா என்று பரீட்சித்துப் பார்க்கலாம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்டுகளுக்கு முன் அமேசன் மூலம் ஒரு மரம் + துணி அலுமாரி ஒன்றை வாங்கினேன். அது சீனத் தயாரிப்பு. அந்த அலுமாரி.. குச்சிகள்... குழாய்கள்.. துணி என்று பீஸ் பீஸாக.. ஒரு பெட்டிக்குள் வந்தது. எப்படி பொருத்துவது என்று குழம்பியபடி.. வழங்கப்பட்டிருந்த கையேட்டை படிச்சு.. பொருத்த வெளிக்கிட்டால்.. அது பொருத்தி முடிய கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்கள் செலவிட வேண்டி வந்ததோடு.. கைகளில் சிராய்கள் குத்தி காயம் வேறு.

அன்றிலிருந்து அமேசனில் ஓடர் செய்யும் போது அது எங்கிருந்து விநியோகிக்கப்படுகிறது.. என்ற விபரம் விற்பனையாளரின் முகவரி.. உற்பத்தி செய்யப்பட்ட நாடு இவை பார்த்துத்தான் பொருட்கள் வாங்கிறது. இன்றேல்.. நேரடியா கடைக்குச் சென்று தான் வாங்கிறது.

மேலும்..

பிரித்தானியா ஒரு காலத்தில் மருத்துவ உபகரண உற்பத்தியில் முன்னணியில் இருந்த நாடு. குறிப்பாக மீளப் பயன்படுத்தக் கூடிய மருத்துவ உபகரண உற்பத்தியில். இப்போ பிரித்தானியா எல்லாத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம்.. அமெரிக்கா.. மற்றும் பிற நாடுகளையே சார்ந்திருக்கிறது. கேவலம்.. மருத்துவ மேற்கவசம்.. முகக் கவசம் கூட துருக்கியில் இருந்து வரவேண்டி இருக்கிறது. 

பிரித்தானியா.. இப்போ ஒன்றுமே இல்லாத நாடாகிவிட்டது ஐரோப்பிய ஒன்றியம் அதனை நாசம் செய்துவிட்டது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

பிரித்தானியா ஒரு காலத்தில் மருத்துவ உபகரண உற்பத்தியில் முன்னணியில் இருந்த நாடு. குறிப்பாக மீளப் பயன்படுத்தக் கூடிய மருத்துவ உபகரண உற்பத்தியில். இப்போ பிரித்தானியா எல்லாத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம்.. அமெரிக்கா.. மற்றும் பிற நாடுகளையே சார்ந்திருக்கிறது. கேவலம்.. மருத்துவ மேற்கவசம்.. முகக் கவசம் கூட துருக்கியில் இருந்து வரவேண்டி இருக்கிறது. 

பிரித்தானியா.. இப்போ ஒன்றுமே இல்லாத நாடாகிவிட்டது ஐரோப்பிய ஒன்றியம் அதனை நாசம் செய்துவிட்டது. 

பிரித்தானிய பிராண்ட் இன்றும் உலகப்புகழ் மிக்கது. 

உயர் கூலி காரணமாக, இங்கே manufacture செய்ய முடியாமல் போய் விட்டது.

ஆனாலும், அந்த பிராண்ட் பாவித்து, பொருள் செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் உள்ள நாம், மாத்தி யோசிக்காததால், எமது உழைப்பினை, mutton ரோல் உருட்டுவதிலும், கடலை வடை சுடுவதிலும், மெஷின் செய்து இடியப்பம் பிழிந்து, அவித்து யாவாரம் செய்வதிலும் முனைப்பு காட்டுகின்றோம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரித்தானிய பிராண்ட் இன்றும் உலகப்புகழ் மிக்கது. 

உயர் கூலி காரணமாக, இங்கே manufacture செய்ய முடியாமல் போய் விட்டது.

ஆனாலும், அந்த பிராண்ட் பாவித்து, பொருள் செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் உள்ள நாம், மாத்தி யோசிக்காததால், எமது உழைப்பினை, mutton ரோல் உருட்டுவதிலும், கடலை வடை சுடுவதிலும், மெஷின் செய்து இடியப்பம் பிழிந்து, அவித்து யாவாரம் செய்வதிலும் முனைப்பு காட்டுகின்றோம்...

நாங்கள் ஒன்று டொக்ரர், இஞ்சினியர், கணக்காளர் அல்லது லோயறாத்தான் வருவோம். இல்லாட்டி கோப்பையடிப்போம். நீங்க என்ன சொல்லுறது. 😜

(வறுமை என்பது இதுதானோ 🤔)

2 hours ago, nedukkalapoovan said:

சில ஆண்டுகளுக்கு முன் அமேசன் மூலம் ஒரு மரம் + துணி அலுமாரி ஒன்றை வாங்கினேன். அது சீனத் தயாரிப்பு. அந்த அலுமாரி.. குச்சிகள்... குழாய்கள்.. துணி என்று பீஸ் பீஸாக.. ஒரு பெட்டிக்குள் வந்தது. எப்படி பொருத்துவது என்று குழம்பியபடி.. வழங்கப்பட்டிருந்த கையேட்டை படிச்சு.. பொருத்த வெளிக்கிட்டால்.. அது பொருத்தி முடிய கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்கள் செலவிட வேண்டி வந்ததோடு.. கைகளில் சிராய்கள் குத்தி காயம் வேறு.

அன்றிலிருந்து அமேசனில் ஓடர் செய்யும் போது அது எங்கிருந்து விநியோகிக்கப்படுகிறது.. என்ற விபரம் விற்பனையாளரின் முகவரி.. உற்பத்தி செய்யப்பட்ட நாடு இவை பார்த்துத்தான் பொருட்கள் வாங்கிறது. இன்றேல்.. நேரடியா கடைக்குச் சென்று தான் வாங்கிறது.

மேலும்..

பிரித்தானியா ஒரு காலத்தில் மருத்துவ உபகரண உற்பத்தியில் முன்னணியில் இருந்த நாடு. குறிப்பாக மீளப் பயன்படுத்தக் கூடிய மருத்துவ உபகரண உற்பத்தியில். இப்போ பிரித்தானியா எல்லாத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம்.. அமெரிக்கா.. மற்றும் பிற நாடுகளையே சார்ந்திருக்கிறது. கேவலம்.. மருத்துவ மேற்கவசம்.. முகக் கவசம் கூட துருக்கியில் இருந்து வரவேண்டி இருக்கிறது. 

பிரித்தானியா.. இப்போ ஒன்றுமே இல்லாத நாடாகிவிட்டது ஐரோப்பிய ஒன்றியம் அதனை நாசம் செய்துவிட்டது. 

அந்த அலுமாரி பாவிக்கக்கூடியதாக இருந்ததா ? விலை எப்படி மலிவா ? 😜

கோவிட்-19 இன் தாக்கம் குறித்த பல ஆய்வுகள் முனைப்புப் பெறும் இன்றைய காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு ஆய்வு பல தகவல்களை வெளிப்படுத்துகிறது.

பெப்பிரவரி 6ஆம் நாளுக்கும் ஏப்ரல் 18ஆம் நாளுக்கும் இடையில் பிரித்தானியாவின் 166 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 16749 பேரை மையப்படுத்திய தகவல்களை இவ்வாய்வு உள்வாங்கியுள்ளது.

அதாவது அன்றைய நாளில் பிரித்தானியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று உடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் இது 14.7 சதவீதமாகும். இவர்கள் குறித்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதில் 239 பேர் 18 வயதிற்கு குறைந்தவர்களாகவும், அதிலும் 139 பேர் 5 வயதிற்கு குறைந்தவர்களாகவும் இருந்துள்ளனர். ஆணா பெண்ணா என்ற தரவுகள் உள்ள 76.1 சதவீதம் பேரில் 60 சதவீதம் ஆண்களும் 40 சதவீதம் பெண்களும் ஆகும். இருக்க இவ்வாறு வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் பிள்ளை பெறும் வயதில் இருந்த பெண்களில் 55 சதவீதமானோர் கர்ப்பிணிகளாக இருந்துள்ள்னர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் தரவுகள் உள்ளவர்களில் 49 சதவீதமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேவேளை 33 சதவீதமானோர் வைத்தியசாலைகளில் மரணத்தைத் தழுவியுள்ளனர். ஏப்ரல் 18ஆம் நாள் நிலையில் 17 சதவீதமானோர் தொடர்ந்தும் வைத்திய சிகிச்சையில் வைத்தியசாலைகளில் இருந்துள்ளனர். அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 45 சதவீதமானோர் மரணத்தைத் தழுவினர். 31 சதவீதமானோரே குணமாகி வீடுதிரும்பினர். 24 சதவீதமானோர் அன்றைய நிலையில் தொடர் சிகிச்சையில் இருநதுள்ளனர்.

வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 53 சதவீதமானோர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். 27 சதவீதமானோர் அன்றைய நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளனர். 20 சதவீதமானோரே குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும் பான்மையானோர் இருமல் காச்சல் சுவாசிப்பதற்கு சிரமம் உடையவர்களாக இருந்துள்ளனர். அதேவேளை இறந்தவர்களில் கறுப்பின தென்னாசியர்களின் மற்றும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அவர்களது விகிதாரத்துடன் ஒப்பிடுமிடத்து அதிகமாக இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மூலம் முகநூல் பதிவு 

20 hours ago, Kapithan said:

அப்படி அனுப்புவதற்கு முன்னர் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கோவணத்துடன்தான் நிற்கவேண்டி ஏற்படும். 

😂😂😂😂

ஆதவன் நியூஸையும் அதன் கட்டுரையாளர்களையும் இந்த வென்ரிலேற்றர்களில் வைத்து மரணம் நிச்சயமா என்று பரீட்சித்துப் பார்க்கலாம். ☹️

கிணத்து தவளை மாதிரி இருக்கே உங்க கருத்துக்கள் 🤣

முதல்ல உங்களை தான் அந்த வென்டிலேட்டர்ல பரிசோதிக்கோணும் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kali said:

கிணத்து தவளை மாதிரி இருக்கே உங்க கருத்துக்கள் 🤣

முதல்ல உங்களை தான் அந்த வென்டிலேட்டர்ல பரிசோதிக்கோணும் 

நான் ரெடி நீங்க ரெடியா 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 15:23, தமிழ் சிறி said:

சீனாவிலிருந்து பெறப்பட்ட வென்டிலேட்டர்கள், ‘ஷாங்க்ரிலா 510 மொடல்’, இவை பிரித்தானிய மருத்துவர்களுக்கு அறிமுகமில்லாதவை என கூறப்படுகின்றது.

அத்துடன், இயந்திரங்கள் சிக்கலான ஒக்ஸிஜன் விநியோகம், ஒழுங்காக சுத்தம் செய்ய முடியவில்லை, அறிமுகமில்லாத வடிவமைப்பு மற்றும் குழப்பமான அறிவுறுத்தல் கையேடு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

மேலும் குறிப்பாக, இவை மருத்துவமனைகளில் அல்ல, ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெண்டிலேட்டர் இல் பிழையா அல்லது வாங்கியவர்கள் தவறா, இல்லை அதை பாவிக்க எத்தனிக்கும் மருத்துவர்களை நோவதா?

சீனாவை ஏன் ஒன்றையும் ஏறெடுத்துப் பார்க்காமல், பிழை அல்லது குறை சொல்ல விழைகிறீர்கள் என்பது புரியவில்லை.

15 hours ago, ampanai said:

வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 53 சதவீதமானோர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். 27 சதவீதமானோர் அன்றைய நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளனர். 20 சதவீதமானோரே குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

ஆனால், கேள்விப்படும் அவதானத்தின் படி, ventilator நிலைக்கு சென்றால்,  மீள்வது மிகவும் கடினம்.

சீனா இடம் இருந்து வாங்கப்பட்ட ventilatorஸ் என்பதற்கும், இறப்பு வீதத்திற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?   

29 minutes ago, Kali said:

முதல்ல உங்களை தான் அந்த வென்டிலேட்டர்ல பரிசோதிக்கோணும் 

ஆனால் முதலில் எந்த நோக்கத்திதிற்காக வாங்கப்பட்டது, வாங்கியவர்களுக்கு அது எந்த இடத்தில் உபயோகிப்படவேண்டும் என்பது தெரிந்து தான் வாங்கப்பட்டதா, மற்றும் மருத்துவர்களுக்கு போதிய பயிற்சியையும் கொடுத்து விட்டு, அதை மருத்துவர்களும் எமக்கு demonstrate பண்ணிய பின், எவரேனும் பின்னிற்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/5/2020 at 16:23, தமிழ் சிறி said:

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

எல்லா நாடுகளும் சீனாவை நாள் முழுக்க திட்டினாலும்.......நக்கலடிச்சாலும்
ஒரு சில பொருட்களுக்கு சீனாவிடம் தான் கையேந்த வேண்டி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எல்லா நாடுகளும் சீனாவை நாள் முழுக்க திட்டினாலும்.......நக்கலடிச்சாலும்
ஒரு சில பொருட்களுக்கு சீனாவிடம் தான் கையேந்த வேண்டி இருக்கு.

எல்லாரும் மலிவுக்காக கம்பனிகளை சீனாவுக்கு கொண்டு போட்டினம்.
இப்ப தான் யோசிக்கினம்.இனியோசித்து என்ன செய்ய.
இங்கினேக்க கொண்டுவந்கு கம்பனிகளை போட்டா பணக்காரனுக்கு மட்டும் தான் வியாபாரம் செய்யலாம்.
நம்மளை மாதிரி ஏழை எளியதுகள் அம்மணமாத்தான் திரியோணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாரும் மலிவுக்காக கம்பனிகளை சீனாவுக்கு கொண்டு போட்டினம்.
இப்ப தான் யோசிக்கினம்.இனியோசித்து என்ன செய்ய.
இங்கினேக்க கொண்டுவந்கு கம்பனிகளை போட்டா பணக்காரனுக்கு மட்டும் தான் வியாபாரம் செய்யலாம்.
நம்மளை மாதிரி ஏழை எளியதுகள் அம்மணமாத்தான் திரியோணும்.

கிந்தியா இப்ப புளுகிலை திரியுதாம்.....😁

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்

இப்ப ஆஸ்பத்திரிகளில் கண்டவன் நிண்டவனெல்லாம் வென்ரிலேற்றர் போட்டு பழகிறானாமே?
பிழையாக போட்டதாலேயே நிறைய பேர் போயிட்டினமாம்.
எல்லாத்தையும் கொரானோவில போட்டு தப்பிக்கலாம்.

நாங்க எல்லாம் சமையல் பழகுற மாதிரி அவங்களும் சந்தர்ப்பத்தை ஏன் விடுவான்.

ரம்பான ரம்பே வைத்தியராகிட்டார்.

2 minutes ago, குமாரசாமி said:

கிந்தியா இப்ப புளுகிலை திரியுதாம்.....😁

கொஞ்சம் பொறுங்கோ.சேடம் இழுக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கிந்தியா இப்ப புளுகிலை திரியுதாம்.....😁

5 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கோ.சேடம் இழுக்குது.

இந்தியாவில்... பொருளாதார  நேர்மை இல்லை.
எல்லாவற்றிலிலும்... லஞ்சம். ஊழல், சுத்துமாத்து என்று... இருப்பது, 
உலக வணிகத்துக்கு... சாதகமாக இருக்குமா.. என்பது கேள்விக்குரிய விடயம். 😎

On 2/5/2020 at 22:48, Kadancha said:

ஆனால் முதலில் எந்த நோக்கத்திதிற்காக வாங்கப்பட்டது, வாங்கியவர்களுக்கு அது எந்த இடத்தில் உபயோகிப்படவேண்டும் என்பது தெரிந்து தான் வாங்கப்பட்டதா, மற்றும் மருத்துவர்களுக்கு போதிய பயிற்சியையும் கொடுத்து விட்டு, அதை மருத்துவர்களும் எமக்கு demonstrate பண்ணிய பின், எவரேனும் பின்னிற்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

அப்படியும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 23:22, குமாரசாமி said:

கிந்தியா இப்ப புளுகிலை திரியுதாம்.....😁

நோக்கியா போன் காரன் பட்ட பாடு முழு உலகத்துக்கும் தெரியும் ஒரு கொம்பனியை திவால் ஆகணும் என்றால் இந்தியா போங்க  அதே கொம்பனிபோல் பல கொம்பனி சைனா காரன்  முதலாளி  வேண்டுமா சைனா வுக்கு போங்க அளவுக்கு மீறின லாபம் ஆளை கொல்லும்  .

இங்கும் நாய் பூனைக்கு  சாப்பாடு விக்கும் கடைகள் லாப விகிதம் 100க்கு மேல் கடைசியில் மாரி தவக்கை  நிலைதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.