Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

ஊரோடு ஒத்து ஓடு என்று ஒரு பழமொழி உண்டு। இவர்கள் அரசோடு ஒத்து ஓடுகிறார்கள்। வருகிறது சந்தர்ப்பம் , மக்கள் தீர்மானிக்கட்டும்। நீங்கள் இம்முறை வாக்களிக்காததால் அவர்கள் பற்றி பின்னர் கருத்துதெரிவிப்பதில் சரியாக இருக்காது। 

இவர்கள் சரியாக ஓடியிருந்தால் நான் விமர்சிக்கும் அளவுக்கும் வந்திருக்க மாட்டார்கள் நான் சப்போட் இல்லை இருந்தாலும் கருத்து சுதந்திரம் இருக்கு எனக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கூட்டம் பாராளுமன்றைக் கூட்டுவதற்கான மாற்றீடல்ல: மகிந்தவிடம் கூட்டமைப்பு

tna-leaders.jpg“நீங்கள் அழைப்பு விடுத்திருக்கும் கூட்டம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது, அமையவும் முடியாது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்க விரும்புகிறோம். எமது கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தற்போது தோன்றியுள்ள பல அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் இன்று அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர். சம்பந்தன், (தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), மாவை. சேனாதிராஜா (தலைவர், லங்கைத் தழிழரசுக் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் (தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்), தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்) ஆகியோர் கையொப்பமிட்டுள்ள இந்த அறிவிக்கையின் முழு விபரமும் வருமாறு:

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதிக்கு வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது.

இப்பின்னணியில், பிரதம மந்திரி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் 04 ஆம் திகதி திங்கட் கிழமை அலரி மாளிகையில் கூட்டமொன்றிற்கு அழைத்துள்ளார்.

பின்வரும் காரணிகளின் காரணமாக நாடும் மக்களும் மிகவும் நெருக்கடியான நிலைமையில் உள்ளனர்:

அ. உலகளாவிய கொள்ளை நோய் – கொரோனா வைரஸ் – படிப்படியாக மோசமடைந்து வருகிறது. எமது நாட்டிலிருந்து அதனை முழுமையாக ஒழிப்பதற்கு இன்னும் அதிகமான வேலைகள் செய்யப்படவேண்டும். பாரதூரமான விளைவுகளோடு அது மேலும் மோசமடையும் என்ற நியாயமானதோர் அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது தொடர்பாக நாட்டின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவை.

ஆ. 1994 ஆம் ஆண்டிலிருந்து கடந்த இருபத்தைந்து (25) ஆண்டுகளாக ஐந்து பாராளுமன்ற மற்றும் சனாதிபதிப் பதவிக் காலங்களில் நடைபெற்ற அனைத்துத் தேசிய தேர்தல்களிலும் மக்கள் தமது இறைமையை – தமது வாக்குரிமையை – பிரயோகித்து 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்துள்ளதோடு, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகிய தமது இறைமையின் – ஆட்சி அதிகாரங்களின் – மூன்று அம்சங்களையும் – சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித் துறை அதிகாரங்கள் – உள்ளடக்கி புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். தமது இறைமையைப் பிரயோகித்து மக்கள் வழங்கிய இவ்வாணை நிறைவேற்றப்படாததோடு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் ஓர் அரசியலமைப்பின் கீழேயே நாடு தொடர்ந்து ஆளப்படுகிறது.

இ. 2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் பிரதானமாக மூன்று விடயங்களைக் கையாண்டு புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கு ஒரு வழிநடத்தற் குழு மற்றும் பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்பான உப குழுக்கள் மற்றும் ஒரு வல்லுநர் குழு ஆகியவற்றோடு அரசியலமைப்புச் சபை என்ற பெயரில் தன்னை ஒரு முழு பாராளுமன்றக் குழுவாக மாற்றுவதற்கு ஒருமனதாகத் தீர்மானித்;தது:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை

பாராளுமன்றத்திற்கான தேர்தல் சீர்திருத்தங்கள்

தேசிய பிரச்சினையான தமிழர் பிரச்சினை-ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

தாபிக்கப்பட்ட பல குழுக்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் வகித்தன் அங்கு பெருமளவு கருத்தொருமைப்பாடு நிலவியது; குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன் பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை இந்நடைமுறை தடைப்பட்டபோது, அது இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது.

அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய பிரச்சினையானது, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் 1991 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களினாலும் கையாளப்பட்டு வந்துள்ளது; அதில் பெருமளவு முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளன.

இப்பிரச்சினை எவ்வாறு கையாளப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு வழியில் எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என்பது தொடர்பாக நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய சமாதானத்தின் நலனிற்காகவும், பிராந்திய அமைதியின் நலனிற்காகவும் உலக சமாதானத்தின் நலனிற்காகவும் இவ்வாக்குறுதிகள் காப்பற்றப்படவேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்குத்; துரோகமிழைப்பதற்காக சர்வதேசச் சமூகமும் ஏமாற்றப்பட்டதாகவே தோன்றும்.

ஈ. நாடு எதிர்நோக்கும் மோசமுறும் பொருளாதார நெருக்கடி.

மேலே விபரிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதனாலும்;, நாட்டின் நலனிற்காகவும் அதன் மக்களின் நலனிற்காகவும் இவ்விடயங்கள் அனைத்தையும் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான ஒரு முறையில் தீர்த்து வைப்பதற்கு எமது ஆதரவை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்காகவும்; கௌரவ பிரதம மந்திரியுடனான இச்சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

எனினும், நீங்கள் அழைப்பு விடுத்திருக்கும் இக்கூட்டம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது, அமையவும் முடியாது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்க விரும்புகிறோம். எமது கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தற்போது தோன்றியுள்ள பல அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்றும் பாராளுமன்றத்தினால் மட்டுமே அவற்றைக் கையள முடியும் என்றும் நாம் உறுதியான கருத்தினை கொண்டிருக்கிறோம்.

http://thinakkural.lk/article/40284

பிரதமரின் கூட்டத்தில் கூட்டமைப்பினர் உட்பட 200 முன்னாள் எம்பிகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (4) தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தை ஜேவிபி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 200 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டமைப்பில் இருந்து சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

https://newuthayan.com/பிரதமரின்-கூட்டத்தில்/

29 minutes ago, உடையார் said:

அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய பிரச்சினையானது, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் 1991 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களினாலும் கையாளப்பட்டு வந்துள்ளது; அதில் பெருமளவு முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளன.

இப்பிரச்சினை எவ்வாறு கையாளப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு வழியில் எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என்பது தொடர்பாக நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய சமாதானத்தின் நலனிற்காகவும், பிராந்திய அமைதியின் நலனிற்காகவும் உலக சமாதானத்தின் நலனிற்காகவும் இவ்வாக்குறுதிகள் காப்பற்றப்படவேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்குத்; துரோகமிழைப்பதற்காக சர்வதேசச் சமூகமும் ஏமாற்றப்பட்டதாகவே தோன்றும்.

இதை மீண்டும் மீண்டும் சொல்வதுடன் தமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் சிங்கள அரசியலில் புதிய பாதைகளை உருவாக்கி பயணிக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மாளிகையில் இன்று நடந்தது என்ன? (படங்கள்)

96-2-2.jpg

Covid -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் ஆரம்பமானது.
 
Covid -19 அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பான நீண்ட விளக்கமொன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், உளவுப் பிரிவினரும் வழங்கினர்.
பிரதம அமைச்சரின் செயலாளர் காமினீ செனரத், நிதியமைச்சரின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், சுகாதாரத் துறை சார்ந்த தலைவர்கள், பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட Covid -19 ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

96-1-4.jpg

http://thinakkural.lk/article/40297

இடது கையை பின் வைத்தமை மரியாதையின் நிமித்தம் ?? 

Image

Image

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் மகிந்த கும்பல்.. தேர்தலில் நின்று வென்று ஒரு அரசை அமைத்திட்டால்.. தங்களுக்கும்.. ஒரு சில எலும்புகளை தூக்கி வீசுவார்கள் என்ற ஒரு வித நப்பாசையில் அமைந்த.. எஜமான விசுவாசத்தின் வாலாட்டல் தான்.

இதனை விட தமிழ் அரசியல் வியாதிகள் கடந்த 10 ஆண்டுகளாக செய்த அரசியல் தான் என்ன..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருடனான சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு..! 3 முக்கிய விடயங்களை உள்ளடக்கி மகஜரை கையளித்தார் இரா.சம்மந்தன்..

Mahi-Sam-TO1.jpg

இலங்கையில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்ட அவசியம் மற்றும் புதிய அரசியலமைப்பு முயற்சியை மீள ஆரம்பித்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்தல் உள்ளிட்ட 3 முக்கிய விடயங்கள் அடங்கிய மகஜர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது .

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த மகஜரினை இன்று நடைபெற்ற முன்னா ள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கையளித்திருக்கின்றனர்.

TN-Ste1.jpg

TN-Ste2.jpg

TN-Ste3.jpg

https://jaffnazone.com/news/17604

5 hours ago, உடையார் said:

இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 200 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இருக்கிறதே 225 உறுப்பினர்கள். அதுல 200 பேர் கலந்து கொண்டார்களாம்!

விரைவில உதயன் எருமை மாடுகள் ஏரோபிளேன் ஓட்டின என்று செய்தி போட்டாலும் போடும். அந்தளவுக்கு அதன் ஊடகவியலாளர் தரம் உள்ளது.

கொரோனா நெருக்கடியில் ஸ்ரீலங்கா! பிரதமருடன் பேசப்பட்டது என்ன?

கொவிட் - 19 அனர்த்த நிலமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும் அவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காகவும் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று முற்பகல் 10.15 இற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலந்துரையால் 12.45 இற்கு நிறைவடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா ஒழிப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் - 19 அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பான நீண்ட விளக்கம் ஒன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களும் உளவுப்பிரிவினரும் வழங்கினர்.

பிரதம அமைச்சரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சரின் செயலாளர், உட்பட அரச அதிகாரிகள். சுகாதாரத்துறை சார்ந்த தலைவர்கள், பாதுகாப்பு பிரிவுகளைச் சேர்ந்த தெலைவர்கள், கொவிட் - 19 ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராமன்ற உறுப்பினர்களையே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருப்பினும் எதிரணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

2 hours ago, Rajesh said:

இருக்கிறதே 225 உறுப்பினர்கள். அதுல 200 பேர் கலந்து கொண்டார்களாம்!

விரைவில உதயன் எருமை மாடுகள் ஏரோபிளேன் ஓட்டின என்று செய்தி போட்டாலும் போடும். அந்தளவுக்கு அதன் ஊடகவியலாளர் தரம் உள்ளது.

100ஐ 200 எண்டு போட்டிருக்கினம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் அளித்துள்ள வாக்குறுதி

(ஆர்.யசி)
 
நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சட்ட முறைமைகளை ஆராய்வதாகவும், பொது மன்னிப்பில் விடுவிக்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தை விடுவிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்றுஇன்று பிற்பகல் விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

95967299_2632572906989132_19200396648157

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் , செல்வம் அடைக்கலநாதன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இன்று காலை அலரிமாளிகை கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமரிடம் முன்வைத்த எழுத்துமூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது பிரதமருடன் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

95330056_636546263566576_276924649557091

95931513_852770851886939_805945586264676

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும், அதேபோல் தமிழர் பகுதிகளின் விசேட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக விவசாயம், பண்ணை வளர்ப்பு உள்ளிட்ட விடயங்களை பலப்படுத்த வேண்டும் என்ற காரணிகளை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல் நாளாந்த வேலையாட்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காரணிகளை பிரதமரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல் சுய தொழில் வாய்ப்புகளை பெருக்க அரசாங்கத்திடம் நிதி இல்லையென்றாலும் உள்ளூராட்சி சபைகளில் இடர் முகாமைத்துவ நிதி உள்ளதால் அவற்றை பெற்றுகொடுத்து மக்களுக்கான சுய தொழில்களை, விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இதில் ஆளுநர்கள் தடையாக இருப்பதாகவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இந்த விடயத்தில் அரசாங்கமாக நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருந்தாலும் கூட தேர்தல்கள் ஆணைக்குழு இப்போது தடையாக உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். குறிப்பாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொது மன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மிக நீண்டகாலமாக அவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலான காலமாக சிறைகளில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கான குறுகியகால தண்டனை வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலும் விடுவிக்கப்படுகின்றனர். எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்மென சுமந்திரன் எடுத்துக்கூறியுள்ளார்.
 
95703276_240798613942626_298328982430941

இதற்குப் பதில் தெரிவித்த பிரதமர்,
நீண்ட காலமாக சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இவர்களை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்த சட்ட முறைமைகள் என்ன என்பது கவனத்தில் கொள்ள நாம் தயராக உள்ளோம். அதேபோல் பொதுமன்னிப்பில் விடுவதென்றால் அது ஜனாதிபதியால் மாத்திரமே முடியும். எனவே அவருடன் இது குறித்து கலந்துரையாடி அவரது நிலைப்பாடு என்னவோ அதனை உங்களுக்கு அறியத்தருகிறேன் என்றுள்ளார்.
இந்நிலையில் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் 300 ஏக்கர் காணியும் , ஜெயபுரம் பகுதிகளில் 200 ஏக்கர் நிலமும் வனப்பாதுகாப்பு திணைக்களம் தன்வசப்படுத்தி வைத்துள்ளனர். இந்த நிலங்களை விடுதலை செய்தால் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்தும் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் அந்த நிலங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேசுவதாகவும் பிரதமர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/81363

த.தே.கூ. பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதால் நன்மைகள் கிடைக்குமெனில் வரவேற்கத்தக்கது - சிறிக்காந்தா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இடம்பெற்ற பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என் சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
குறித்த விடையம் தொடர்பில் என்.சிறிக்காந்தா கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் கூடியுள்ள கூட்டத்திற்கு போவதோ விடுவதோ என்பது சம்பந்தப்பட்ட கட்சிகளை பொறுத்தது.

அந்த வகையிலே எங்களுடைய கட்சியும் அங்கம் வகிக்கின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்பதும் இந்த முடிவு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நிலைப்பாடு என்பதும் நான் சொல்ல வேண்டிய விடயங்களாகும்.
 
ஆனால் அதேநேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதையிட்டு சாதகமாகவோ பாதகமாகவோ நான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
 
அது அவர்களுக்குரிய விவகாரம் அவர்களைப் பொறுத்தது. ஆனால் அவர்கள் கலந்து கொள்வதன் ஊடாக ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது அவர்களால் மக்களுக்கு கிடைக்குமென்றால் அது வரவேற்கத்தக்க விடயம்.
நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கொள்கையளவிலே பாராளுமன்றத்தைக் கூட்டுங்கள், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதற்குரிய காரணங்கள் வலுவாக இருக்கின்றன.

நாட்டில் நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. கோரோனா தொற்று நோயினுடைய பரவல் காரனமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பித்திருக்கின்றது.
 
நாடாளுமன்றத் தேர்தல் பற்றி இப்போது சிந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே பாராளுமன்றம் கூட்ட படவேண்டிய ஒரு நடைமுறை தேவை, அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்ற வகையிலே எதிர்க்கட்சியினை சேர்ந்த சகலரும், நாங்கள் சார்ந்த கட்சி உட்பட வேண்டுகோளை விடுத்திருந்தும் அவை ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
இந்தப் பின்னணியில்தான் பிரதமருடைய கூட்டம் இன்று நடைபெற்றது இதில் கலந்து கொள்வதில்லை என கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகள் பலவும் தீர்மானித்துள்ள நிலையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.
 
ஆனால் அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை அது அவர்களைப் பொறுத்த விவகாரம், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.
 
அரசியல் சர்ச்சைகளுக்கு இதுவல்ல நேரம், இது ஒரு நெருக்கடியான நிலைமை அனைவரும் பொறுப்புடன் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டம். குறுகிய அரசியல் வேறுபாட்டை பின்தள்ளி மக்களுடைய நலன்களை, இன மத மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் சகலரும் மக்களுடைய நலன்களை முன்னிறுத்தி செயற்படவேண்டிய நேரம் இது என என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/81345

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் சரியாக ஓடியிருந்தால் நான் விமர்சிக்கும் அளவுக்கும் வந்திருக்க மாட்டார்கள் நான் சப்போட் இல்லை இருந்தாலும் கருத்து சுதந்திரம் இருக்கு எனக்கு 

உங்களுக்கு கருது சுதந்திரம் இருக்கிறது। நான் இல்லை என்று சொல்லவில்லை। எனது கருத்தை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை। நான் எழுதியது இம்முறை நீங்கள் வாக்களிக்கவிடடாள் தேர்தலின் பின்னர் அவர்களை விமர்சிப்பவது அவ்வளவு சரியாக இருக்காது என்பதுதான்। 

5 hours ago, ampanai said:

ஐயா நிறைய கருத்துக்கள் , விமர்சனங்கள் இவர்களைப்பற்றி எழுதுகிறீர்கள்। நீங்கள் மட்டுமல்ல அநேகமானோர் விமர்சித்துதான் எழுதுகிறார்கள்। இருந்தும் என்ன , மீண்டும் இவர்களைத்தான் தெரிவு செய்யப்போகிறீர்கள்।

நூறு வீதம் இல்லாவிடடாலும் 80 % இவர்களைத்தான் தெரிவு செய்யப்போகிறீர்கள்। அது சரி இன்னுமொரு ஐந்து வருடங்களுக்கு விமர்சிப்பதட்கு ஆட்கள் தேவைதானே। 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Rajesh said:

இருக்கிறதே 225 உறுப்பினர்கள். அதுல 200 பேர் கலந்து கொண்டார்களாம்!

விரைவில உதயன் எருமை மாடுகள் ஏரோபிளேன் ஓட்டின என்று செய்தி போட்டாலும் போடும். அந்தளவுக்கு அதன் ஊடகவியலாளர் தரம் உள்ளது.

எப்படியும் மளின் அடுத்த பிறந்தநாளுக்கு..மகிதவை வீட்டிற்கு கூப்பிட வேணும்தானே...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

உங்களுக்கு கருது சுதந்திரம் இருக்கிறது। நான் இல்லை என்று சொல்லவில்லை। எனது கருத்தை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை। நான் எழுதியது இம்முறை நீங்கள் வாக்களிக்கவிடடாள் தேர்தலின் பின்னர் அவர்களை விமர்சிப்பவது அவ்வளவு சரியாக இருக்காது என்பதுதான்। 

அவர்கள் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் விட்ட பிழைகளை விமர்சித்துக்கொண்டே இருப்பன் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு நன்மை என்றால் வரவேற்கத்தக்கது – ஸ்ரீகாந்தா

In இலங்கை     May 5, 2020 7:35 am GMT     0 Comments     1235     by : Jeyachandran Vithushan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் கூடியுள்ள கூட்டத்திற்கு போவதோ விடுவதோ என்பது சம்பந்தப்பட்ட கட்சிகளை பொறுத்தது. அந்த வகையிலே எங்களுடைய கட்சியும் அங்கம் வகிக்கின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்பதும் இந்த முடிவு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நிலைப்பாடு என்பதும் நான் சொல்ல வேண்டிய விடயங்களாகும்.

ஆனால் அதேநேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதையிட்டு சாதகமாகவோ பாதகமாகவோ நான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவர்களுக்குரிய விவகாரம் அவர்களைப் பொறுத்தது. ஆனால் அவர்கள் கலந்து கொள்வதன் ஊடாக ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது அவர்களால் மக்களுக்கு கிடைக்குமென்றால் அது வரவேற்கத்தக்க விடயம். நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் கொள்கையளவிலே நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுவதற்குரிய காரணங்கள் வலுவாக இருக்கின்றன. நாட்டில் நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று நோயினுடைய பரவல் காரனமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பித்திருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி இப்போது சிந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே பாராளுமன்றம் கூட்ட படவேண்டிய ஒரு நடைமுறை தேவை, அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்ற வகையிலே எதிர்க்கட்சியினை சேர்ந்த சகலரும், நாங்கள் சார்ந்த கட்சி உட்பட வேண்டுகோளை விடுத்திருந்தும் அவை ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் பிரதமருடைய கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதில்லை என கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகள் பலவும் தீர்மானித்துள்ள நிலையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.

ஆனால் அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை அது அவர்களைப் பொறுத்த விவகாரம், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அரசியல் சர்ச்சைகளுக்கு இதுவல்ல நேரம், இது ஒரு நெருக்கடியான நிலைமை அனைவரும் பொறுப்புடன் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டம்.

குறுகிய அரசியல் வேறுபாட்டை பின்தள்ளி மக்களுடைய நலன்களை, இன மத மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் சகலரும் மக்களுடைய நலன்களை முன்னிறுத்தி செயற்படவேண்டிய நேரம் இது” என சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்

http://athavannews.com/பிரதமரின்-கூட்டத்தில்-கல/

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 21:50, உடையார் said:

அலரி மாளிகை கூட்டத்துக்கு முன்னர் சம்பந்தனுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மந்திராலோசனை

tna-300x188.jpg

அடே என்னவாவது செய்து துலையுங்கோ ...
அதுக்காக அருமையான தமிழ் வார்த்தைகளை கேவலம் செய்யாதிருங்கள் 
நெஞ்சு பொறுக்குதில்லையே .....
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/5/2020 at 14:05, ampanai said:

Image

சூடு சுரணை இல்லாததுகளுக்கு எப்பிடி கார்ட்டூன் போட்டாலும் உறைக்காது.

5 hours ago, nunavilan said:

மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது கிடைக்குமானால்

இந்த மனுஷன் இப்பதான் ஒன்டு, இரண்டு எண்ணத் தொடக்கிருக்கார். 

11 hours ago, குமாரசாமி said:

சூடு சுரணை இல்லாததுகளுக்கு எப்பிடி கார்ட்டூன் போட்டாலும் உறைக்காது.

இன்னும் ஒரு 60 அல்லது 70 வருடங்களுக்கு இது பொருந்தும்।  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வக்கில்லாத கூட்டமைப்பு மீன்டும் விடுதலை தொடர்பாக பேசுகின்றார்கள் -அனந்தி பாச்ய்சல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.இதற்கு முன்பும் இதே மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது.அந்த 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாத நிலையில், முதலில் போவதுக்கு மறுத்தவர்கள். ஆனால் நேற்று முன் தினம் 11 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்திருக்கின்றார்கள்.இப்போது எங்கள் மத்தியில் எழுகின்ற சந்தேகம் இவர்கள் இந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்திற்கு தயாராகி விட்டார்களா ? அதுவும் கொரோனா நெருக்குவாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு கூட்டமைப்பினுடைய அனுசரனை அரசுக்கு தேவையாக உள்ளது. அரசினுடைய சலுகைகளும், வசதி வாய்ப்புகளும் கூட்டமைப்புக்கு தேவையாக இருக்கின்றது என்ற வகையில் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு விட்டார்களா என வலுவான சந்தேகம் ஒன்று எழுகின்றது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாத நிலையில், முதலில் போவதுக்கு மறுத்தவர்கள். ஆனால் நேற்று முன் தினம் 11 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்திருக்கின்றார்கள்.அது மாத்திரமின்றி கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

பின்னர் தமது கோரிக்கைகள் என்று குறிப்பிடப்பட்ட ஒரு கோப்பினை பிரதமரிடம் வழங்கிய காட்சியையும் கானமுடிந்தது.வழங்கப்பட்ட கோப்பில் அடங்கிய விடையம் என்ன என்பது இன்று வரை மக்களுக்கு தெரியாததாகவே இருக்கின்றது.2014ம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐய வழங்கிய கடிதத்தை சுமந்திரன் வழங்கிய நிலையில், அந்த கடிதத்தில் என்ன இருக்கின்றது என நாங்கள் அப்போது கேட்டும் இன்றுவரை என்ன இருக்கின்றது என்றே தெரியாமல் இருக்கின்றது.

அது அவ்வாறு இருக்க நேற்று வழங்கப்பட்ட கடிதத்தில் அரசியல் கைதிகளுடைய விடுதலை, புதிய அரசியல் யாப்பு போன்ற விடையங்கள் உள்ளடங்கியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த நல்லாட்சி அரசாங்கம் என முண்டுகொடுத்து. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய வக்கில்லாத கூட்டமைப்பு இப்போது 5 வருடங்கள் கடந்து மீன்டும் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக பேசுகின்றார்கள்.இந்நிலையில் மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனந்தி சசிதரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/அரசியல்-கைதிகளை-விடுதலை-6/

Image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் விமல் வீரவன்ச புகழாரம்

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரிடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு என சிறு, நடுத்தர வணிக மற்றும் நிறுவன மேம்பாடு, தொழில் வழங்கல் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்;இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த; நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார; ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் 5000ம் ரூபா நிவாரண தொகை வழங்கியுள்ளது.

இதனையும் எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அரசாங்கம் 20000 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும். என்று குறிப்பிடுகின்றார்கள்.

கடந்த அரசாங்கத்தில் இயற்கை அனர்த்தினாலும், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நட்ட ஈடு ஏதும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் உள்ளவர்கள் அரசாங்கத்தை தற்போது விமர்சிப்பது நகைப்புக்குரியது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், சவால்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்தரப்பினர் எந்திலையிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கடந்த 4ம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களது பங்குப்பற்றலுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரிடம் கோரிக்கை உள்ளடங்கிய பத்திரங்களை சமர்ப்பித்தார்கள். இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிட்டப்படுகின்றன.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கூட்டமைப்பினர் பிரதமரிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.

அரசாங்க தரப்பினருக்கும்இகூட்டமைப்பினருக்கும் இடையில் அரசியல் ரீதியான நிலைப்பாடு வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது. நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றார்.

https://www.virakesari.lk/article/81483

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.