Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

மேற்கு நாடுகளில் புதைக்கிறார்கள் சரி. ஆனால்.. உயிரற்ற உடலில் தொற்றுநீக்கிகளை பயன்படுத்திவிட்டு புதைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும்.. காற்றுப்புக முடியாத பைகளில் அடைத்தும் புதைக்கக் கூடும். குறிப்பிட்ட ஆழத்திலும் புதைக்க வேண்டும்.

இவற்றுக்கான செலவு எரித்தல் பொறிமுறையை விட அதிகம். மேலும் எரித்தல் தொற்றுநீக்கை மிகக் கூடிய சதவீதத்தில் உறுதி செய்யும்.  செலவும் குறைந்த பொறிமுறை. 

முஸ்லிம்கள் வெறும் துணியால் இறந்த உடலைச் சுற்றிவிட்டு ஆழம் குறைவாகத்தான் புதைப்பார்கள். இவர்களின் முறையை அப்படியே பின்பற்றுதல் தொற்றுநீக்கத்தை கூடிய அளவுக்கு உறுதி செய்யாது. 

47 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

உங்கள் நண்பரிடம் ஒரு கேள்வியை கேளுங்கள். 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழும் மிக அதிஷ்டத்தைக் கொண்டவர் எப்படி.. வடமராட்சியில் வசிப்பவராகச் சித்தரித்து.. வடக்கில் தேர்தலில் நின்றார்..??! இவரின் பேட்டியின் பிரகாரம் இவரின் கடந்த கால தேர்தல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபிக்கப்பட முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்..?! தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை அது. இப்போ தர்மத்தை நிலைநாட்ட உரியவர்கள் களத்தில்.. நாட்டில் இல்லை. அதனால்.. தான் கேட்கிறோம். 

அவரின் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் இது எந்த வகையில் பொருந்தும். ஏன் அவரின் அதிஷ்ட தேவர்கள் வசிக்கும் கொழும்பில்.. அவர்களுக்கான பிரதிநிதியாக தேர்தலில் நிற்கவில்லை..????! 

Edited by nedukkalapoovan

  • Replies 71
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

நில்மினி அக்கா, 

பல கேள்விகள் வரும். பிறகு நீங்கள்தான் பதிலளிக்கவேண்டிவரும்😲

ஒரு சில கேள்விகள் (சுமந்திரன் ஐயாவுக்கானது):

1. இலங்கையில் தமிழ்த் தேசியம் நலிந்து மதவாதம், பிரதேசவாதம், சாதியப்போக்குகள் முன்னுக்கு வருகின்றன. இத்தகைய பிற்போக்கான சமூகப் போக்குகளை மாற்றியமைத்து தமிழர்களை ஒன்று திரட்டி பலமிக்க அரசியல் சக்தியாக்க கூட்டமைப்பிடம் உள்ள நீண்டகாலத் திட்டங்கள் என்ன?

2. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும், சஜித் பிரமேதாஸவுக்கும் வெளிப்படையாக ஆதரவை வழங்கியதன் மூலம் தமிழர்களுக்கு கிடைத்த அனுகூலங்கள் யாவை?

3. ராஜபக்ஸ குடும்பத்தினரின் ஆட்சி இன்னும் 15 - 20 வருடங்களுக்கு நீடிக்கும் என்பது வெளிப்படையானது என்பதால், தமிழர்களுக்கு பிராந்திய ஆட்சி (சுயாட்சி என்பதே கனவாகிவிட்டது) கிடைப்பது மிகவும் சவாலானது. அதனால் பிராந்திய ஆட்சியை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்காது, ராஜபக்ஸ குடும்பத்தினருடன் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் இணைந்து வடக்கையும், கிழக்கையும் பொருளாதார ரீதியில் அடுத்த 15 - 20 வருடங்களில் முன்னேற்றுவதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நானும்  நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். உங்கள் கேள்விகளை சுமாவிடம் கேட்டு பதிலை பதிவிடுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

அதை விட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஆட்களை மதம் மாற்றுவதை நிறுத்த சொல்லுங்கள் 😉
 
முகநூலில் இந்த பிரச்சினையும் போகிறது இதுவும் உன்மையா??

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முடிந்தால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணச் சொல்லுங்கள் அவர் புடுங்கிற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணியாத்தான் இருக்கு 

நிச்சயம் சொல்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nilmini said:

நானும்  நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். உங்கள் கேள்விகளை சுமாவிடம் கேட்டு பதிலை பதிவிடுகிறேன் 

வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

தமிழ் மக்கள் மேல் கொஞ்சசமாவது அக்கறை இருந்தால் தொடந்து அரசியலில் இருக்க சொல்லுங்கள் ...அப்படி இல்லாதவிடத்து பதவியை இராஜினாமா செய்து விட்டு வக்கீல் தொழிலை மட்டும் பார்க்க சொல்லுங்கள் அல்லது சிங்கள கட்சிகள் ஏதாவது ஒன்றில் போய் சேர சொல்லுங்கள் 
அதை விட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஆட்களை மதம் மாற்றுவதை நிறுத்த சொல்லுங்கள் 😉
 
1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முகநூலில் இந்த பிரச்சினையும் போகிறது இதுவும் உன்மையா??

நெருப்பில்லாமல் புகையாது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nilmini said:

1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.

மெனக்கெடாதீங்க இலங்கை ஒரு தீர்வையும் வழங்காது தமிழ் மக்களுக்கு நில்மினி அக்கா ஆனால் அந்த தீர்வு என்ற பொய்யை வைத்து மக்களை குழப்பி அரசியல் செய்கிறார்கள் கூட்டமைப்பினர் 

4 minutes ago, ரதி said:

நெருப்பில்லாமல் புகையாது 

ம்ம் பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி அக்கா.. மேலும் ஒரு வேண்டுகோள்..

தனக்கு பழக்கமான ஊடகங்களுக்கு அல்லது ஊடகக்காரர்களுக்கு மட்டும் கேள்வி பதில் சொல்லாமல்.. முடிந்தால்.. உலகின் பல பரப்பில் இருந்து வாசகர்கள்.. உறவுகள் வந்து போகும் இந்த யாழில் இணைந்து தனக்கென வைக்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான நேர்த்தியான பதில்களை சும் அங்கிள் சும்மா இருக்கும் வேளைகளில் வழங்க முடியுமான்னு கேளுங்கள்.

யாழ் நிர்வாகத்துக்கு..

இங்கு முன்வைக்கப்படும்.. சும் அங்கிள் நோக்கிய கேள்விகளை ஒரு தனித்திரியில் தொகுத்தால்.. நில்மினி அக்காவுக்கு அவற்றை உரியவரிடம் சேர்க்க வசதியாக இருக்கும்..!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

வியை கேளுங்கள். 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழும் மிக அதிஷ்டத்தைக் கொண்டவர் எப்படி.. வடமராட்சியில் வசிப்பவராகச் சித்தரித்து.. வடக்கில் தேர்தலில் நின்றார்..??! இவரின் பேட்டியின் பிரகாரம் இவரின் கடந்த கால தேர்தல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபிக்கப்பட முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்..?! தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை அது. இப்போ தர்மத்தை நிலைநாட்ட உரியவர்கள் களத்தில்.. நாட்டில் இல்லை. அதனால்.. தான் கேட்கிறோம். 

அவரின் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் இது எந்த வகையில் பொருந்தும். ஏன் அவரின் அதிட்ச தேவர்கள் வசிக்கும் கொழும்பில்.. அவர்களுக்கான பிரதிநிதியாக தேர்தலில் நிற்கவில்லை..????! 

மன்னிக்கவும். நீங்கள் சிங்கள இடத்தில சுமா வளர்ந்ததை பற்றி சொல்வதை பிழை என்று நினைக்கிறன். மற்றது முதல் தடவை சம்பந்தன் ஐயா கெடக்கு இணங்க அரசியில் நுழைந்து Draft  மூலமாக MP 
 ஆக வந்து பிறகு யாழ் மக்கள் தானே அவனை தேர்ந்து எடுத்தவ .  நானும் பிறந்ததில் இருந்தே சிங்கள இடங்களில் இருந்து சிங்கள நண்பர்களுடன் வளர்ந்து இப்பவும் நிறைய சிங்களவர்களுடனேயே பழகும் படி சந்தர்ப்பம் அமைந்து விட்டது. அதனால் தமிழ் உணர்வு, பற்று தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இன்னும் வளர்ந்து கொண்டுதான்  போகிறது. ஆனால் எனதோ அல்லது சுமந்திரனினதோ தமிழ் படிப்பு, சங்கீதம், விவாதம், என்பன நிறைய வடக்கு கிழக்கில் இருந்தவர்களை விட அதிகாமாகத்தான் இருந்தது. சுமந்திரன் தமிழ் இலக்கிய  மன்ற தலைவன், பேச்சு போட்டிகள், விவாதப்போட்டிகளில் எல்லாம் முன்னணியில் நிற்பான். இப்ப எனது நண்பிகளின் குடும்பங்கள் பல கொழும்பில் வெளிநாட்டுக்கும் பார்க்க ஆடம்பரமாக, மேலை நாடு கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள். சுமாவின் வீடு மிகவும் எளிமையானது, ஒரே சமையல் அம்மாதான் 30 வருங்களாக அம்மா போல் வீட்டை கவனித்து கொள்கிறார். மனைவி டியூஷன் சொல்லிகுடுத்து வேலைக்கும் போகிறார். பிள்ளைகள் தமிழ் பாடசாலைகளில் கற்று மிகவும் தேர்ச்சி பெற்றிருகிறார்கள். மகளுக்கு அமெரிக்காவில் scholarship கிடைத்து படிக்கிறர். மகன்மாருக்குக் மொரட்டுவ பல்கலை கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. என்னைப்போலவே சிங்கள முஸ்லீம் நண்பர்களிடம் சரளமாக சிங்களத்தில் உரையாடி நண்பர்களாக இருப்பதில் என்ன தவறு? அவனது ஊர் குடத்தானை தானே? சுமா சிங்களத்தில் பேட்டிகள் கொடுப்பதால் சிங்கள பத்திரிகைகளுக்கு ஓரளவாவது எமது பிரச்னை விளங்குது. நன்றாக படித்தவன், ஆங்கில பேச்சுத்திறன் உள்ளதால் வெளிநாடுகளில் மதிக்கிறார்கள். சிங்கள இனவாத அரசு தமது கொள்ககைகளை மாற்றும்வரை எந்த அரசியல் வாதிகளாலும் எமக்கும் ஒன்றுமே நல்லது நடக்காது. 

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மெனக்கெடாதீங்க இலங்கை ஒரு தீர்வையும் வழங்காது தமிழ் மக்களுக்கு நில்மினி அக்கா ஆனால் அந்த தீர்வு என்ற பொய்யை வைத்து மக்களை குழப்பி அரசியல் செய்கிறார்கள் கூட்டமைப்பினர் 

ம்ம் பார்க்கலாம் 

உண்மைதான் 

13 minutes ago, nedukkalapoovan said:

நில்மினி அக்கா.. மேலும் ஒரு வேண்டுகோள்..

தனக்கு பழக்கமான ஊடகங்களுக்கு அல்லது ஊடகக்காரர்களுக்கு மட்டும் கேள்வி பதில் சொல்லாமல்.. முடிந்தால்.. உலகின் பல பரப்பில் இருந்து வாசகர்கள்.. உறவுகள் வந்து போகும் இந்த யாழில் இணைந்து தனக்கென வைக்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான நேர்த்தியான பதில்களை சும் அங்கிள் சும்மா இருக்கும் வேளைகளில் வழங்க முடியுமான்னு கேளுங்கள்.

யாழ் நிர்வாகத்துக்கு..

இங்கு முன்வைக்கப்படும்.. சும் அங்கிள் நோக்கிய கேள்விகளை ஒரு தனித்திரியில் தொகுத்தால்.. நில்மினி அக்காவுக்கு அவற்றை உரியவரிடம் சேர்க்க வசதியாக இருக்கும்..!!

நல்ல ஐடியா. நிச்சயம் சொல்கிறேன். யாழ்  இணையத்துக்கு இந்த ஐடியாவை நானும் பரிந்துரைக்கிறேன் 
பிகு : சுமா அங்கிள் என்றால் நில்மினி அக்கா அன்டி ஆகிவிடுவா . ஒரே வகுப்பு அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

பிகு : சுமா அங்கிள் என்றால் நில்மினி அக்கா அன்டி ஆகிவிடுவா . ஒரே வகுப்பு அல்லவா? 

அக்கா ஆன  பின் ஆன்ரி ஆனால் என்ன பாட்டி ஆனா என்ன. இருந்தாலும் ஆன்ரி ஆக்குவதில் பிரச்சனையே இல்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nilmini said:

நல்ல ஐடியா. நிச்சயம் சொல்கிறேன். யாழ்  இணையத்துக்கு இந்த ஐடியாவை நானும் பரிந்துரைக்கிறேன் 
பிகு : சுமா அங்கிள் என்றால் நில்மினி அக்கா அன்டி ஆகிவிடுவா . ஒரே வகுப்பு அல்லவா? 

நோ கமன்ஸ்😉🤠

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nilmini said:

1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

எவ்வளவு சைலண்றா குடியிருந்து இருக்காங்க..👍

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியா. நிச்சயம் சொல்கிறேன். யாழ்  இணையத்துக்கு இந்த ஐடியாவை நானும் பரிந்துரைக்கிறேன் 

இனி யாழில்  " சு " மந்திரம் ஒலிக்கும்....தேசியம் ஒழியும்...மாவீரர் போல ..அனைத்தும் மறைந்து போகும்ம்....

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள முஸ்லீம் நண்பர்களிடம் சரளமாக சிங்களத்தில் உரையாடி நண்பர்களாக இருப்பதில் என்ன தவறு? அவனது ஊர் குடத்தானை தானே? சுமா சிங்களத்தில் பேட்டிகள் கொடுப்பதால் சிங்கள பத்திரிகைகளுக்கு ஓரளவாவது எமது பிரச்னை விளங்குது. நன்றாக படித்தவன், ஆங்கில பேச்சுத்திறன் உள்ளதால் வெளிநாடுகளில் மதிக்கிறார்கள். சிங்கள இனவாத அரசு தமது கொள்ககைகளை மாற்றும்வரை எந்த அரசியல் வாதிகளாலும் எமக்கும் ஒன்றுமே நல்லது நடக்காது. 

அப்ப ஏன் பிரபாகரனை கெட்டவராக்கி,முசுலிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ததை வக்காலத்து வாங்கி,போராட்டம் என்பதே பிழை என்பதையும் , யூ ,என்னில் பொய் பிரச்சாரம் செய்ததையெல்லாம் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள...ஒன்றுக்கு 5 வாகனம் வைத்திருப்பவர் , ஏழை என்று கதை விடுகிறியள்.... பட்டிமன்றம் ,விவாதம் கதைத்தால் ...தமிழனுக்கு விமோசனம் கிடைத்து விடுமோ.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இது சுமந்திரன் பிரச்சார களம்...அவ்வளவுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆக வந்து பிறகு யாழ் மக்கள் தானே அவனை தேர்ந்து எடுத்தவர்......

எப்ப நடந்தது....அதுவும் தில்லு முல்லு செய்து மற்றவரை ஏமாற்றி கிடைத்தபதவி...இதைக்கொண்டு தமிழினத்தை வேரறுத்ததுதான் மிச்சம்... அய்யா  யாழ் நிறுவனரே ...சுமாவை .. யாழில் உள்ளீர்க்கப் படுவது தற்கொலைக்குச் சமம்...இங்கு நடந்த அனுபவத்தில் கண்ட உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னத்த கதைச்சாலும் வெள்ளைக்காரன் போனபிறகு வந்த இலங்கை அரசியல் அமைப்பு மாறுமட்டும் தமிழ் மக்களுக்கு விடிவே இல்லை. எல்லா தமிழ் தலைவர்களும் நிறைய பிழை விட்டிருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் ஒன்று பெரிதாக செய்து விட முடியாது. அரசியலில் இருந்து பணமும்  பண்ணவில்லை. சுமந்திரனுக்கு நண்பி என்ற முறையில் பிரச்சாரம் செய்வதிலயும் பிழையில்லை. 

எமது போராளிகளாலேயே முடியாமல் போன விடயம். ஏனென்றால் அவ்வளவு ஏமாத்து துவேசம் கொண்ட இலங்கை அரசியல் முறை. எவர் வந்தும்  நடக்கப்போவதில்லை. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

நானும் அரசியல் வாதிகளின் குடும்பத்தில் தான் வளர்ந்தனான் . தந்தை செல்வா, ஜி ஜி  பொன்னம்பலம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் , நவரத்தினம் என்று எல்லோரும் மாமா (மேயர் நாகராஜா) வீட்டுக்கும், எமது வீட்டுக்கும் வந்து கூட்டம் வைத்து கதைப்பதெல்லாம் கேட்டு தான் வளர்ந்தது. ஒருத்தருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இந்தியாவில் படிக்கும்போது எமது தலைவர்கள் MGR இந்த guest house இல் இருந்துகொண்டு தமது உறவினர் நண்பர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி அனுமதி பெற்றுக்கொடுத்தது தான் மிச்சம். 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஏன் அப்படி சொல்கிறீர்கள்?....அவர் வந்து கதைத்தால் தான் உண்மை நிலை அறியலாம் ...உண்மையில் அவர் யாழில் இணைந்தால் வரவேற்கத்தக்கது 

1 hour ago, alvayan said:

இப்ப இது சுமந்திரன் பிரச்சார களம்...அவ்வளவுதான்..

வெளிநாட்டில் இருந்து வோட்டு போடலாமா ?
 
  • கருத்துக்கள உறவுகள்

என் சமூகம் சார்பாக உங்களுக்கு நன்றிகள்.

ஜனாசாக்கள் எரிக்கப்படுவதைத் தடைசெய்வது தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அரசியல் அலப்பறையும் அலங்காரமும் வேசமும் பம்மாத்தும் இல்லாமல் காரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளீர்கள் தாயே

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களும் இந்த வழக்கில் அக்கறையோடு ஈடுபாடுகொண்டுள்ளார் என்பதை அறியும் போது உங்கள் இருவருக்கும் முஸ்லிம் சமூகம் சார்ந்த நன்றிகள்.

இந்த வழக்கு வெற்றிபெறவும் சுகாதாரத்துறையினர் இந்த விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவும் இறைவன் துணை இருக்கட்டும்.

முஸ்லிம் சிவில் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களால் மேற்படி மனித உரிமை மீறல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

குறிப்பு1 - பின்கதவால் டாலர்களில் பேரம்பேசி இலவசமாக முஸ்லிம்களுக்காகக் களமிறங்குவதாக அரசியல் படம்காட்டும் நபர்களை முஸ்லிம் மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை அவதானிக்கிறேன். அட இன்னுமா அவைங்கள நம்புறீங்க - சுமந்திர கூட்டத்தைச் சொன்னேன்

குறிப்பு 2- ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவுக்கும் அவரது மணைவி சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவுக்கும் எமது நன்றியறிதலைத் தெரியப்படுத்த இப்பதிவை ஷெயார் செய்து கொள்ளுங்கள்.

உண்மையாகத் தர்மம் செய்பவன் விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டான்.

எமது போராட்டத்தையும் செப்பணிட்டு சிறந்த ஆலோசனைகளால் வழிப்படுத்திய தவராசா சேருக்கு நன்றிகள்.

Image may contain: 5 people, people standing and suit
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நாங்கள் என்னத்த கதைச்சாலும் வெள்ளைக்காரன் போனபிறகு வந்த இலங்கை அரசியல் அமைப்பு மாறுமட்டும் தமிழ் மக்களுக்கு விடிவே இல்லை. எல்லா தமிழ் தலைவர்களும் நிறைய பிழை விட்டிருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் ஒன்று பெரிதாக செய்து விட முடியாது. அரசியலில் இருந்து பணமும்  பண்ணவில்லை. சுமந்திரனுக்கு நண்பி என்ற முறையில் பிரச்சாரம் செய்வதிலயும் பிழையில்லை. 

எமது போராளிகளாலேயே முடியாமல் போன விடயம். ஏனென்றால் அவ்வளவு ஏமாத்து துவேசம் கொண்ட இலங்கை அரசியல் முறை. எவர் வந்தும்  நடக்கப்போவதில்லை. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

நானும் அரசியல் வாதிகளின் குடும்பத்தில் தான் வளர்ந்தனான் . தந்தை செல்வா, ஜி ஜி  பொன்னம்பலம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் , நவரத்தினம் என்று எல்லோரும் மாமா (மேயர் நாகராஜா) வீட்டுக்கும், எமது வீட்டுக்கும் வந்து கூட்டம் வைத்து கதைப்பதெல்லாம் கேட்டு தான் வளர்ந்தது. ஒருத்தருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இந்தியாவில் படிக்கும்போது எமது தலைவர்கள் MGR இந்த guest house இல் இருந்துகொண்டு தமது உறவினர் நண்பர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி அனுமதி பெற்றுக்கொடுத்தது தான் மிச்சம். 

யாரோ பெண்மணியை சுமத்திரன் எலக்சனில் நிக்க வைக்க முயற்சி செய்தவர் ..அவட பெயர்   அம்பிகா சற்குருநாதன் ? ...உங்களுக்கு தெரிந்தவவோ ?

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

யாரோ பெண்மணியை சுமத்திரன் எலக்சனில் நிக்க வைக்க முயற்சி செய்தவர் ..அவட பெயர் நளினி? ...உங்களுக்கு தெரிந்தவவோ ?
 
இல்லை. அப்படி promote பண்ணியதும் எனக்கு  தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

இல்லை. அப்படி promote பண்ணியதும் எனக்கு  தெரியாது. 

ஓ ..நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழும் மிக அதிஷ்டத்தைக் கொண்டவர் எப்படி.. வடமராட்சியில் வசிப்பவராகச் சித்தரித்து.. வடக்கில் தேர்தலில் நின்றார்..??! இவரின் பேட்டியின் பிரகாரம் இவரின் கடந்த கால தேர்தல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபிக்கப்பட முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்..?! தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை அது. இப்போ தர்மத்தை நிலைநாட்ட உரியவர்கள் களத்தில்.. நாட்டில் இல்லை. அதனால்.. தான் கேட்கிறோம். 

அவரின் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் இது எந்த வகையில் பொருந்தும். ஏன் அவரின் அதிட்ச தேவர்கள் வசிக்கும் கொழும்பில்.. அவர்களுக்கான பிரதிநிதியாக தேர்தலில் நிற்கவில்லை..????! 

மன்னிக்கவும். நீங்கள் சிங்கள இடத்தில சுமா வளர்ந்ததை பற்றி சொல்வதை பிழை என்று நினைக்கிறன். மற்றது முதல் தடவை சம்பந்தன் ஐயா கெடக்கு இணங்க அரசியில் நுழைந்து Draft  மூலமாக MP 
 
இந்தக் கேள்விக்கான நில்மினி அக்காட பதில் போதுமானதாக இல்லை.

சுமந்திரனை அரசியலுக்குள் கொண்டு வர சம்பந்தன் இரு தடவைகள் முயற்சித்தவர். முதல் தடவை விடுதலைப்புலிகள் இவரின் தெரிவை நிராகரித்து விட்டனர். இரண்டாம் தடவை புலிகள் இல்லாத சந்தர்ப்பமாகப் பார்த்து பின் கதவால்.. அதாவது தேசிய பட்டியல் மூலம் சம்பந்தன் இவரை கொண்டு வந்தார்.

இறுதியாக வடமராட்சியில் போட்டியிட்டு தெரிவானார். இப்போ அந்தப் பதவிக்காலம் முடிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவிலும்.. தமிழரசுக் கட்சி பேச்சாளர் என்ற கோதாவிலும் திரிகிறார்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை.. குடும்பம் பற்றி நாங்கள் அறிய விரும்பவில்லை. அப்படி அறிவதாயின் இன்னும் பல வழிகளில் அறியாலம். அதற்கான தொடர்புகள் உண்டு.

என்னுடைய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.... 5 வயது முதல் கொழும்பில் வாழும் ஒருவர் எப்படி வடக்கில்.. தேர்தலில் போட்டி இட முடிந்தது. சட்டப்படி.. அந்தத் தொகுதியில் வாழாத ஒருவர்.. எப்படி அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தெரிவானார்..??! சுமந்திரனின் கூற்றுப்படி 5 வயதில் இருந்து கொழும்பில் வாழும் நபர் எப்படி.. வடக்கில் ஒரு தொகுதியில் போட்டியிட்டார். ஏனெனில்.. 10 வருடங்கள் கொழும்பில் வாழ்ந்த எங்களின் தேர்தல் பதிவே கொழும்பில் இருக்கும் போது.. 5 வயதில் இருந்து கொழும்பில் வாழ்ந்த சுமந்திரனின் பதிவு நிச்சயம் கொழும்பில் தான் இருக்கும்..!

எனவே இறுதித் தேர்தலில் இவர் எப்படி வடக்கில் போட்டியிட்டார்..???????! அது சட்டரீதியானதா..??! எந்த வகையில் அது சட்டரீதியானது..????!

இவற்றிற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. அவரின் குடும்ப விபரங்கள் தேவையில்லை.. பொதுவெளியில். இவரின் குடும்பங்கள் பற்றி எங்களுக்கு ஓரளவு தெரியும். இவர் எம் பி ஆனதன் பின் இவரது சகோதரிகளின் வாழ்க்கை எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பது முதல்...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.