Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

Featured Replies

Gotabaya-Rajapaksa-1-720x450.jpg

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும்.

அந்த அபிலாஷைகளை அடைந்துகொண்டுள்ள ஒரு சூழலில் இம்முறை படைவீரர்கள் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கிடைத்திருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட அனைத்து பிரஜைகளும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்திருந்தனர்.

உலகின் ஒழுக்கக் கட்டுப்பாடான இராணுவம் என்ற கீர்த்திக்குரிய எமது இராணுவ அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதிக்கும் பல நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன.
இதனால் மனவேதனையடைந்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு சட்டமற்ற நிலைக்கு பதிலாக சட்டத்தையும், அநீதிக்கு பதிலாக நீதியையும் உறுதிப்படுத்தி படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளுக்கான உரிய கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். இந்த எதிர்பார்ப்புகளை எமக்கு நிறைவேற்ற முடியுமாக இருந்தது.

நாம் அடைந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அர்த்தப்படுத்துவதற்கு ஒரு சுதந்திர தேசம் என்ற வகையில் நாம் ஒன்றுபட்டு எழுந்திருக்க வேண்டும். பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் தேசத்தின் நன்மையை முதன்மைப்படுத்தி உலகின் ஏனைய நாடுகளுடனும் இணைந்து எமது இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும்.

கொவிட் 19 நோய்த்தொற்று போன்ற தடைகள் வந்தாலும் நாம் ஒரு போதும் பின்னோக்கிச் செல்லப்போவதில்லை. தேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச பொறிமுறையினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு பிளவுபடுவதை தடுத்து நிறுத்திய படைவீரர்களுக்கும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய மக்களுக்கும் வழங்கமுடியுமான உயர்ந்த கௌரவம் அதுவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மற்றும் பல்வேறு தியாகங்களை செய்த படைவீரர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜனாதிபதி-யுத்த-வெற்றிநாள/

  • தொடங்கியவர்

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143557

சிங்கள-பௌத்த மிலேச்ச கொலைகாரர்களுக்கும் சிங்கள-பௌத்த மிலேச்ச பயங்கரவாதிகளுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பதவியுயர்வு அளித்து எக்காளமிடுகின்றனர்!

  • தொடங்கியவர்

mulli-415x260.jpg

625.368.560.350.390.830.053.800.560.160.

images?q=tbn:ANd9GcSLHkGdvhJcdsEZ9I86gqU

Mullivaikal-Tamil-Genocide-84.jpg

2.jpg

3513945555_1741f2bf15_z.jpg

sYaahlD6yJsV2vVhg0yCRx52IYQagNC8NGz1qvOO

11 minutes ago, போல் said:

mulli-415x260.jpg

625.368.560.350.390.830.053.800.560.160.

images?q=tbn:ANd9GcSLHkGdvhJcdsEZ9I86gqU

Mullivaikal-Tamil-Genocide-84.jpg

2.jpg

3513945555_1741f2bf15_z.jpg

sYaahlD6yJsV2vVhg0yCRx52IYQagNC8NGz1qvOO

இலங்கையின் வெறிநாள் வாழ்த்து செய்தி எண்டு வரவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பெளத்த சிங்களவர்களின் சனாதிபதி என்பதை நிரூபிக்கிறார். வாக்குப் போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்.

ஆனால்.. எங்கட சம் சும் மாவை கும்பல்.. உட்பட பலரும்.. ஒரு இரங்கல் செய்தியைக் கூட மே 18 இல் விடவில்லை. அவர்கள் சொந்த மக்களுக்கு.. வாக்குப் போட்ட மக்களுக்கே விசுவாசமாகவில்லை. இதில... இவர்கள்.. மக்கள் பிரதிநிதிகள் என்று கொண்டிருக்க.. எம்மவர்கள் வாக்குப் போடுவது தான்.. மனச்சாட்சியை உறுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்

18 minutes ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

71/72 மற்றும் 88/89 ஜே வி பி அரசுக் கவிழ்ப்பு புரட்சிகளின் போது.. இலட்சத்துக்கும் மேல் சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். ரோகண விஜயவீர கொல்லப்பட்டார். இங்கெல்லாம் ஏன் வெற்றி விழா கொண்டாடவில்லை..??!

மேலும்.. சுமந்திரன் என்ற பன்னாடை.. இதே ஜே வி பி பயங்கரவாதிகளுடன் சிவப்புச் சட்டை போட்டு வீதி உலா வந்தது.. மட்டும் எப்படிங்கோ..?!

ஒரு அரச பயங்கரவாத்திற்கு எதிரான.. ஆட்சிக்கவிழ்ப்பு சிங்கள ஆயுதப் பயங்கரவாதத்திற்கு ஒத்தூதும்.. சுமந்திரன்... தனக்கு வாக்குப் போட்ட சொந்த மக்களின் உரிமை.. துயரில் பங்கெடுக்க வக்கில்லாமல் போவது கொடுமையிலும் கொடுமை.

இவை தங்களின் கொழும்புப் பார்வைக்கு புலனாகவில்லைப் போலும்..??!

1983 இல் கொழும்பில் இருந்து தமிழர்கள் அடித்துவிரட்ட பட்ட போதும்.. கொலை செய்யப்பட்ட போதும்.. சொத்துக்கள் எரிக்கப்பட்டும் சூறையாடப்பட்ட போதும்.. உங்களை ரட்சித்தவர்கள் யாராம்..???! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

அவர்களும் இறந்து மடிந்துபோய்விட்டார்களே, பிறகு என்ன ஒடிபோய்விட்டார்கள் என்று சொல்லுறீயள்.....

போர், யுத்தம் தவிர்க்கபட வேண்டிய ஒன்று அதை யாரும் ஏற்றுகொள்ளவில்லை....இவ்வளவு அழிவிக்கு பின்பும் அரசுகள் பயங்கரவாதிகளை( ஒருவனின் போராளி மற்றவனுக்கு பயங்கரவாதி) உருவாக்குவதில் முன்னின்று செயல்படுகின்ற‌தே...அரசுகள்தான் பய‌ங்கரவாதிகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளை உருவாக்குவதிலயே முழுமூச்சாக் செயல் படுகின்றனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

ஈழத்தமிழின வரலாறு தெரியாதவர்களும் சுயநலவாதிகளும் இப்படித்தான் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு வயிறு நிரப்பிக்கொண்டு திரிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழின வரலாறு தெரியாதவர்களும் சுயநலவாதிகளும் இப்படித்தான் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு வயிறு நிரப்பிக்கொண்டு திரிவார்கள்.

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 

என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, colomban said:

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 

என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

இயக்கங்கள்/போர்கள் ஆரம்பிக்க முதல் இலங்கையில் இனக்கலவரங்கள் நடந்தனவே...!

அப்போதெல்லாம் சிங்கள இனவாதிகளால் ஈழத்தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும்,மார்பங்கள் அறுக்கப்பட்டும் வீடுகள் இருப்பிடங்கள் எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் சொந்த மண்னிலையே விரட்டியடிக்கப்பட்டார்களே? 

அப்போது என்ன கோமாவிலா இருந்தீர்கள்?

6 hours ago, போல் said:

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும்.

ஒரு நாடு இரு தேசம்.

ஏன் தமிழர்கள் பிரிவினை கேட்கிறார்கள் என்பதற்கு விடை காணாதவரைக்கும் ...
ஏன் இன்றும் நல்லிணக்கம் இந்த நாட்டில் இடம்பெற வழி சமைக்காத வரைக்கும் ....

இது ஒரு நாடு ஒரு தேசங்கள்  

7 hours ago, போல் said:

உலகின் ஒழுக்கக் கட்டுப்பாடான இராணுவம் என்ற கீர்த்திக்குரிய எமது இராணுவ அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதிக்கும் பல நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன.

இன்றும் நாளையும் அது தொடரவே செய்யும். 

காரணம், நீங்கள் மனிதம் அற்ற கொடியவர்கள். இராணுவ உடைக்குள் மறைந்திருக்கும் வெறியர்கள். 

நீங்கள், ஐ.நா. படை போர்வைக்குள்ளேயா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவர்கள், அதுவும் சிறுவர்களை. 
 
7 hours ago, போல் said:

கொவிட் 19 நோய்த்தொற்று போன்ற தடைகள் வந்தாலும் நாம் ஒரு போதும் பின்னோக்கிச் செல்லப்போவதில்லை. தேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச பொறிமுறையினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம் கோவிட்19 னால் சிதைவடைந்து உங்கள் முப்படைகளுக்குமான செல்வுகளை குறைக்கவேண்டிய தருணம் வரும். அப்பொழுது வரும் சிக்கல். 

7 hours ago, போல் said:

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.

Image

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 

என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

"என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது"
கொழும்பாருக்கு தவறுகளை சுட்டிக்காட்டும் , ஞாயத்துக்கு குரல் கொடுக்கும் பேராண்மை இல்லையோ.
எய்தவனை விட்டு அம்பை நோகும் கதை இது. 

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, colomban said:

உங்களை போன்ற வசதியானவர்கள் ஒருவாறு வெளி நாட்டிட்கு தப்பி போட்டியள். என்னிடம் அப்படியல்லவே. 

என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது. என்ன செய்ய கேட்டால் நான் சுயலவாதி.   யுத்தெமொன்றே இனி வேண்டாம் எங்களுக்கு

8 hours ago, colomban said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா 

பிரபாகரனும், தமிழ் மக்களும் ஏதோ முசுப்பாத்திக்கு சண்டை பிடித்தது மாதிரியல்லோ நீங்கள் நினைக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

"என்னுடய சகோதர சகோதரிகளை நிர்வாணமாக்கி தலைசுட்டுக்கொன்ற‌ நாள் இது"
கொழும்பாருக்கு தவறுகளை சுட்டிக்காட்டும் , ஞாயத்துக்கு குரல் கொடுக்கும் பேராண்மை இல்லையோ.
எய்தவனை விட்டு அம்பை நோகும் கதை இது. 

நாங்கள் சாதரண மனிதர்கள் அநீதியை சகித்து வாழப்பழகிவிட்டோம் எதிர்க்க சக்தியில்லை இனியும் இழந்து போகவும் எதுமில்லை
 
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, colomban said:

நாங்கள் சாதரண மனிதர்கள் அநீதியை சகித்து வாழப்பழகிவிட்டோம் எதிர்க்க சக்தியில்லை இனியும் இழந்து போகவும் எதுமில்லை
 
ஊரில் வ‌சிக்கும் என‌து அத்தை சிங்கள‌வ‌னின் அட‌க்குமுறைக்கு ஒரு போதும் ப‌ய‌ந்த‌வா இல்லை /

போராட்ட‌த்தில் பெத்த‌ ம‌க‌னையே இழ‌ந்த‌வா , பெத்த‌ ம‌க‌ன் என்ன‌ ல‌ச்சிய‌த்துக்காக‌ நாட்டுக்காக‌ உயிரை விட்டானோ , அந்த‌ ல‌ச்சிய‌ நெருப்பு தாயின் ம‌ன‌சிலும் இருக்கு / அதே போல் போராட்ட‌த்தில் த‌ங்க‌ளின் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ எத்த‌னையோ ஆயிர‌ம் பெற்றோர்க‌ள் ம‌ன‌திலும் இதே நிலை தான் / 

அவ‌ர்க‌ளின் ல‌ச்சிய‌ம் த‌மிழீழ‌ம் , போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர்க‌ள் ஒரு போதும் சிங்க‌ள‌வ‌னுக்கு ஜ‌ல்ரா அடிக்க‌ மாட்டின‌ம் / பிள்ளைக‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌வே விரும்புவின‌ம் ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.