Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

112422905_tv061585021-720x450.jpg

ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி!

ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது.

பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை.

இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை மட்டுமே தொழுகைக்காக வைத்திருக்க முடியும். குறிப்பாக 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும்.

இந்தநிலையில், க்ரூஸ்பெர்க்கில் உள்ள மார்த்தா லூத்தரன் தேவாலயம் நெருக்கடியால் சிக்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரபு மற்றும் ஜேர்மன் மொழிகளில் தங்களது தொழுகையினை மேற்கொள்ள இடமளித்துள்ளது.

புதிய சமூக தொலைதூர விதிகளின் கீழ் முஸ்லிம்கள், தற்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு மதத்தின் இன்னொரு மதத்தினருக்கு இவ்வாறு உதவுவது, ‘ஒற்றுமையின் அற்புதமான அடையாளம்’ என்று உலகநாடுகளால் பாராட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜேர்மனியில்-கிறிஸ்தவ-தேவ/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி!

சேர்ச்சுக்கு போக  அல்லா ஓமெண்டு ஒத்துக்கொண்டவரோ?

25 minutes ago, குமாரசாமி said:

சேர்ச்சுக்கு போக  அல்லா ஓமெண்டு ஒத்துக்கொண்டவரோ?

இங்கு  பல வருடகாலமாக அம்மன் கோவில் சேர்ச்சுக்குள்ளேயே இருந்த‍து. பின்னர் அம்மன் சற்று   பணக்காரிவிட்டதால் இப்போது சேர்ச்சில் இருந்து  புறப்பட்டு பெரிய மண்படம் எடுத்த அங்கு கோவில் கொண்டு விட்டா. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக மதங்களைக் கடைப்பிடிப்போர் மற்றைய மதங்களை நிந்தனை செய்வதில்லை. மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல்  ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே. அன்றுதான் உலகில் அமைதியும் சமத்துவமும் தானாகத் தோன்றும். தன்தன் மதத்தை புனிதமெனக் கொண்டாடுவது போல் அடுத்தவர் மதத்தைக் கொண்டாட வேண்டாம். நிந்தனை செய்யாதிருந்தாலே உலகில் பாதிப் போர்கள் நின்றுவிடும். ஆனால் அதனைத் தடுப்பதிலும் தூண்டிவிடுவதிலும்  ஆயுத தளபாட விற்பனையாளர்கள் திறம்படச் செயலாற்றி வெற்றிபெற்றே வருகின்றார்கள்.  கொரோனா ஒரு புதிய உலகைத் தேடும் சூழலைத் தந்தபோதும் உலகால் மாறமுடியவில்லை என்பதை உலகப் பெருநாடுகளின் நிகழ்கால உரையாடல்களும் நகர்வுகளும்  சுட்டுகின்றன.  ஆயிரம்போர்களும் கோடிக்கனக்கான மக்களின் அழிவுகள் சூழந்தாலும் சுரண்டாலிதிக்க சக்திகள் என்றும் மாறப்போவதில்லை.  இதில் மதவாதிகள் இருந்துகொண்டேயிருப்பார்கள் என்பதும் நிதர்சனமானதே.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

எனக்கு இந்த ஜதி சாதியெல்லாம் ஒன்றே. இதை நான் கணக்கில் எடுகாது விட்டாதால் தான் இன்று வரை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கின்றேன், என் அறியா பருவத்திலிருந்து நான் இந்த ஜாதி சாதி ஏதிர்ந்து வந்துள்ளேன், 3ம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படிக்கும் மாணவர்களை அவர்கள் கேலி செய்வதுண்டு, அவர்கள் 5ம் வகுப்பு, நான் அந்த மாணவர்களுடன் இணைந்து அவர்களை ஏதிர்த்துள்ளேன், அவர்களை ஓட ஓட அடித்து விரட்டியும் உள்ளோம். இன்றும் என்னுடன் படித்த அவர்களை ஊருக்கு போகும் போது சந்திப்பேன். சாதி மதம்  என்று கதைத்தவர்களை இன்று காணவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இங்கு  பல வருடகாலமாக அம்மன் கோவில் சேர்ச்சுக்குள்ளேயே இருந்த‍து. பின்னர் அம்மன் சற்று   பணக்காரிவிட்டதால் இப்போது சேர்ச்சில் இருந்து  புறப்பட்டு பெரிய மண்படம் எடுத்த அங்கு கோவில் கொண்டு விட்டா. 

அம்மன் எவ்வளவு சக்தி கொண்டவர் சேர்ச்சுக்குள்ளே போய் அடக்கமாக இருந்திருக்கிறாரே

3 hours ago, nochchi said:

மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல்  ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே.

💯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சேர்ச்சுக்கு போக  அல்லா ஓமெண்டு ஒத்துக்கொண்டவரோ?

இங்கு இரண்டாம் மாடியில்... மசூதியும், மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
வெள்ளிக்கிழமை என்றால்... இரண்டு பகுதியிலும், ஒரே கூட்டமாக இருக்கும்.
பிள்ளையாரே என்று, இன்னும்... ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையாரே என்று, இன்னும்... ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

உண்மைதான் தமிழ் சிறி, மசூதிக்காரருக்கும், பிள்ளையார் கோவில்காரருக்கும் இடையே எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் பிள்ளையார் கோவில்காரர் தங்களிடையே அசம்பாவிதம்கொண்டு கோட் வாசலில் நிற்கிறார்கள். 😲

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

உண்மைதான் தமிழ் சிறி, மசூதிக்காரருக்கும், பிள்ளையார் கோவில்காரருக்கும் இடையே எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் பிள்ளையார் கோவில்காரர் தங்களிடையே அசம்பாவிதம்கொண்டு கோட் வாசலில் நிற்கிறார்கள். 😲

தமிழர்களிடம் உள்ள பலவீனமா? அல்லது பதவிமோகமா? உண்மையிலே பொதுத்தொண்டு நோக்கமாயின் இவை நிகழாது புரிந்தணர்வோடு நகரும் அல்லவா?

தமிழ் இஸ்லாமிய உறவுகளுக்கு ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்.
#TamileelamDefactoState

100090202_167872224757228_1612435185112973312_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=4HkqkY1KT6IAX8xSZXa&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ea2465e2228fbe04c56a14d752b78f4f&oe=5EF07059

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ampanai said:

தமிழ் இஸ்லாமிய உறவுகளுக்கு ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்.
#TamileelamDefactoState

100090202_167872224757228_1612435185112973312_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=4HkqkY1KT6IAX8xSZXa&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ea2465e2228fbe04c56a14d752b78f4f&oe=5EF07059

தமிழர் ஆட்சிசெய்தால் எம்மதமும் சம்மதமே. :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இங்கு இரண்டாம் மாடியில்... மசூதியும், மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
வெள்ளிக்கிழமை என்றால்... இரண்டு பகுதியிலும், ஒரே கூட்டமாக இருக்கும்.
பிள்ளையாரே என்று, இன்னும்... ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

அல்லா தான் எல்லாவற்றுக்கும் மேலே என்பவர்கள் மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் கீழே இரண்டாம் மாடியில் மசூதியும் இருப்பதை எப்படி பொறுத்து கொள்வார்களோ எதற்கும் நீங்கள் அவதானமாக போய்வாருங்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

தமிழர்களிடம் உள்ள பலவீனமா? அல்லது பதவிமோகமா? உண்மையிலே பொதுத்தொண்டு நோக்கமாயின் இவை நிகழாது புரிந்தணர்வோடு நகரும் அல்லவா?

வடவர் தமிழரிடையே புகுத்தியுள்ள சாதிப்பிரச்சனை முதலாக, ஊர்ப்பிரிவினை, அதிகார மமதை, பதவிமோகத்துடன் மக்களிடம் இருந்தும், அரசியல்வாதிகளிம் இருந்தும் கிடைக்கும் செல்வாக்கு. பணத்தாசை இருந்தாலும் கோவில் பணத்தைக் கையாடச் சிறிது பயமிருக்கிறது. 

5 hours ago, Paanch said:

வடவர் தமிழரிடையே புகுத்தியுள்ள சாதிப்பிரச்சனை முதலாக, ஊர்ப்பிரிவினை, அதிகார மமதை, பதவிமோகத்துடன் மக்களிடம் இருந்தும், அரசியல்வாதிகளிம் இருந்தும் கிடைக்கும் செல்வாக்கு. பணத்தாசை இருந்தாலும் கோவில் பணத்தைக் கையாடச் சிறிது பயமிருக்கிறது. 

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

23 hours ago, Paanch said:

கோட் வாசலில் நிற்கிறார்கள். 

தமிழர்களுக்கு நீதிமன்றின் மீது அலாதி பிரியம். 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

தமிழராக பிறந்த உங்களுக்கு இவ்வளவு காலமும் இதைப்பற்றி தெரியவரவில்லையா? நன்றாக சிந்தித்து பாருங்கள்! 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

தமிழராக பிறந்த உங்களுக்கு இவ்வளவு காலமும் இதைப்பற்றி தெரியவரவில்லையா? நன்றாக சிந்தித்து பாருங்கள்! 😀

வந்திட்டார் கேள்வி உங்களையும் நோக்கி உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

41 minutes ago, பெருமாள் said:

வந்திட்டார் கேள்வி உங்களையும் நோக்கி உள்ளது .

😀

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

தமிழினத்திடம் சுயஅறிவு ஆற்றல் எல்லாமே உள்ளது, ஆனால் எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது. விலங்குகளிலும் மென்மையான விலங்குகளையே கொடிய  விலங்குகள் கொன்று தின்கிறது. அதுபோலவே மென்மையான தமிழினத்தை கொடியவர்கள் கொன்று தின்றார்கள், தின்றுவருகிறார்கள். தமிழினமும் கொடிய இனமாக இருந்திருந்தால் இன்றும் தமிழினத்தின் பல அரசுகள் உலகில் அழியாது இருந்திருக்கும். உதாரணத்திற்கு எங்கள் காலத்தில்கூட அதற்கான சாட்சியம் உள்ளது. பிரபாகரன் படைகளுக்கு இருந்த ஆற்றலுக்கு அவர்கள் மற்றைய இனங்களைக் கொத்துக் கொத்தாக அழித்திருக்க முடியும். உலகம்கூட அவர்கள் படைத்திறன் ஆற்றலை வியந்ததை மறுக்க முடியாது. கொடிய எதிரியானாலும் அவன்தரப்பின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் ஏற்பட்ட கவனமே பிரபாகரன் படைகள் தோல்வியுறக் காரணமாக அமைந்ததாகவும் கருத முடியும்.    

2 hours ago, Paanch said:

“எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது.”

பாஞ்ச் உங்களின் இந்த நகைச்சுவைக் கருத்துக்கு சிரிக்கவே இன்று முழுவதும் லீவு எடுக்க வேண டும். அதுக்கே நேரமில்லை. மிகுதிக் நகைச்சுவைக்கு........... ஐயோ ஒரு வாரம் என்னால் லீவு எடுக்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

“எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது.”

பாஞ்ச் உங்களின் இந்த நகைச்சுவைக் கருத்துக்கு சிரிக்கவே இன்று முழுவதும் லீவு எடுக்க வேண டும். அதுக்கே நேரமில்லை. மிகுதிக் நகைச்சுவைக்கு........... ஐயோ ஒரு வாரம் என்னால் லீவு எடுக்க முடியாது.  

உங்கள் நகைச்சுவைக்கு நான் லீவெல்லாம் எடுக்கவேண்டிய தேவையில்லை. ஏன் என்றால் கொரோனா எனக்கும் நீண்டநாள் லீவை அளித்துள்ளது. வீட்டில் நிம்மதியாக இருந்து யாழ்களம் வரும்போது பலர் அங்கு கற்பூரம் ஏற்றுவதால் வரும் வாசனையையும் முகர்கிறேன்.  

On 25/5/2020 at 22:39, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

அப்பாவிகள், நல்லவர்கள், சாதுக்கள் எப்பவுமே அடப்பாவிகளால், அயோக்கியர்களால், ரவுடிகளால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் உலக வரலாறாச்சே  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.