Jump to content

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

 

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.
பதிவு: ஜூன் 16,  2020 13:19 PM
புதுடெல்லி

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.


சீன ராணுவத்தின் அத்துமீறலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க முயற்சி நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தகவல் வெளியாகி உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16131938/Army-Officer-2-Soldiers-Killed-In-Violent-FaceOff.vpf

 

How The Indian Armed Forces Worship All Religions Together At One ...

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்; இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை - சீனா குற்றச்சாட்டு

indian-army-officer-two-soldiers-killed-in-scuffle-with-chinese-army-in-galwan-valley கோப்புப்படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தரப்புக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் போல் சீன ராணுவத்துக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில் ஏற்கெனவே இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடைேய சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த மோதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த வாரம் சுமுக நிலை எட்டப்பட்டது. இந்தச் சூழலில் இந்திய வீரர்கள் 3 பேர் சீன வீரர்களால் கொல்லப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பதில் நடவடிக்கை ஏதும் வேண்டாம், அது மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று சீன வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவனத்தின் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன எல்லைக்குள் அத்துமீறிய அதிகாரிகளை இந்திய வீரர்கள் தாக்கியதாக சீன ராணுவம் புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

1592295926756.jpg

இந்திய- சீன எல்லைப்பகுதியில் உள்ள 3,500 கி.மீ. பகுதி இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனால் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், திபெத் ஆகிய எல்லைப் பகுதிகளில் சீனா அவ்வப்போது படைகளைக் குவித்து இந்தியாவுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.

குறிப்பாக லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 2,500க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குடில் அமைத்துத் தங்கினர். போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுவதும், பதுங்குக் குழிகள் அமைப்பதிலும் இருந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இருதரப்புப் பிரச்சினையைத் தீர்க்க ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் இரு தரப்பு ராணுவத்தினரும் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினர், ராணுவ மேஜர் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, இந்தியா,சீனா வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளாத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தை திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான பணியில் இருந்தபோது இந்தத் தாக்குதலை சீன ராணுவம் நிகழ்த்தியுள்ளது. எல்லைப் பிரச்சினையில் சுமுகமான சூழல் எட்டியிருந்த நிலையில் சீன ராணுவம் செய்த இந்தச் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.hindutamil.in/news/india/559664-indian-army-officer-two-soldiers-killed-in-scuffle-with-chinese-army-in-galwan-valley-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - சீன எல்லையில் ராணுவங்கள் மோதல்: மூன்று இந்திய ராணுவத்தினர் பலி

India-China face-off in Ladakh: Indian Army officer, 2 soldiers killedபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்திய ராணுவம் மீது சீனா குற்றச்சாட்டு

ஒருதலைபட்சமாக செயல்பட்டு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சீன வெளியுறவுத்துறை இந்திய ராணுவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

திங்களன்று இந்திய ராணுவத்தினர் இரண்டு முறை அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்து, மோதலைத் தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர் என்றும், இது இருதரப்பினரிடையே கைகலப்புக்கு வித்திட்டது என்றும் சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தைத் தணிக்க, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்றுதான் இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தியா - சீனா: ராணுவ வீரர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக ஜூன் 6-ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சுமார் ஐந்து வார காலமாக பூதாகரமாகி உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.

India-China face-off in Ladakh: Indian Army officer, 2 soldiers killed

ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-53061829

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

103781045_1851377898352443_6329605524951ராமநாதபுரம் வீரர் பலி..

டிஸ்கி :

கற்களால் தாக்கி கொண்டார்களாம்.. தயவு செய்து வீர மரணம் என்டு போடாதீர்கள்.. 😢

உண்மையிலே வீர மரணம் அடைந்தவன் முக்தியில் இருந்து கிளம்பி வந்து முக்கி எடுத்துடுவான்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மற்றும் சீன வீரர்கள்

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் லடாக்கில் சீனப் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் மூன்று இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு தரப்பிலிருந்தும் மூத்த இராணுவ அதிகாரிகள் "நிலைமையைத் தணிப்பதற்காக சந்திப்பதாக" இந்திய இராணுவம் கூறியதுடன், இரு தரப்பினரும் உயிரிழந்தனர்.

சீனா எந்தவிதமான உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டியது.

செவ்வாயன்று பதிவான மரணங்கள் இரு சக்திகளுக்கிடையேயான மோதலில் பல தசாப்தங்களில் முதல் நிகழ்வு என்று நம்பப்படுகிறது. 1962 ஆம் ஆண்டில், இந்தியா அவமானகரமான தோல்வியை சந்தித்தபோது, அவர்கள் இதுவரை ஒரே ஒரு போரை மட்டுமே நடத்தியுள்ளனர்.

மொழியாக்கம் https://www.bbc.co.uk/news/world-asia-53061476?at_custom1=[post+type]&at_custom3=BBC+News&at_campaign=64&at_medium=custom7&at_custom2=facebook_page&at_custom4=AF35D8E2-AFA5-11EA-B45B-5FED923C408C&fbclid=IwAR1w0fzAna1klDo51y3aw688yy2SFKOMGx4cQkQnlUPA1ARkKa12ycRlZvw&fbclid=IwAR0-xobqbObgxMDewWi3Pb4ZBMpL59PlkaBSciEJxKL2XhNJAKtXQJ58EfY&fbclid=IwAR3zqtIxjQx6oWg_enaNBimJpqqs7SlOqJAdzdlB-viS6JurOiZkH3itsHY&fbclid=IwAR20_UNzwEqQP-Tkkoj1NJXeFLrUfqmzfXwK5N0eBSO61XJ8X3zkspq0fxs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகம் தகவல்

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகம் தகவல்

லடாக்கில் இந்திய - சீன ராணுவம் இடையே நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: ஜூன் 16,  2020 14:41 PM
புதுடெல்லி,

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரும் 22 வருடங்களாக ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவருமான பழனி என்பவரும் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சீன ராணுவத்தின் தரப்பிலும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. இருப்பினும் இது குறித்து சீன ராணுவத்தின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாக சீன ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 சீன வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து சீன அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16144142/Chinese-media-reports-5-Chinese-soldiers-killed-in.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்-சீனா
 
இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்-சீனா
 

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உரியதாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூன் 16,  2020 14:20 PM
பீஜிங்

லடாக் எல்லை பகுதியில் சீனா உடனான மோதலில் இந்திய ராணுவ மேஜர் மற்றும் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா உடனான மோதலில், இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதன்முறையாகும். இரு தரப்பிலும் பதற்றத்தை தணிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சமீப காலமாக லடாக் பிராந்தியத்தில் உள்ள எல்லை பகுதியில் சீனா - இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவியதால் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.

இதனை அடுத்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு தரப்பிலும் படைகள் விலக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக படைகள் விலக்கப்பட்டு வரும் நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு இரு தரப்பு மோதல் நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய தரப்பில் 3 உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ஏற்பட்ட இரு தரப்பு தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு இல்லை என்றும், கைக்கலப்பு மற்றும் கல்வீச்சில் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் அவசர ஆலோசனையை நடத்தி வருகிறார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உரியதாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சரின் பேச்சை மேற்கோள் காட்டி சீனாவின் குளோபல் டைம்ஸ்வெளியிட்டு உள்ள செய்தியில்  "திங்களன்று இந்திய ராணுவம் சட்டவிரோதமாக இரண்டு முறை எல்லையைத் தாண்டி, சீன வீரர்கள் மீது ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதன்  விளைவாக கடுமையான உடல் மோதல்கள் ஏற்பட்டன"

"சீனா இந்திய தரப்பில் தனித்துவமான பிரதிநிதித்துவங்களை பதிவு செய்துள்ளது, மேலும் அதன் முன்னணி ராணுவத்தை எல்லை மீறுவதிலிருந்தோ அல்லது எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதிலிருந்தோ கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16142022/No-Unilateral-Action-Dont-Stir-Up-Trouble-China-To.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்- தமிழக வீரர் வீரமரணம்

எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்- தமிழக வீரர் வீரமரணம்

 

சென்னை:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

 
இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் (வயது 40) ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

மோதலைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/16151358/1618025/IndiaChina-standoff-Tamil-Nadu-soldier-died.vpf

ஆழ்ந்த அஞ்சலிகள், ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின், “சேட்டை” கூடிப் போச்சு.💀

இனியும்.... இந்தியா, பொறுமை காக்கக் கூடாது.

தன்னிடம் உள்ள நவீன 🏹ஆயுதங்களை.... பாவிக்க வேண்டிய சரியான நேரம் இது தான்.👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, உடையார் said:

இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் (வயது 40) ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

30 minutes ago, தமிழ் சிறி said:

சீனாவின், “சேட்டை” கூடிப் போச்சு.💀

இனியும்.... இந்தியா, பொறுமை காக்கக் கூடாது.

தன்னிடம் உள்ள நவீன 🏹ஆயுதங்களை.... பாவிக்க வேண்டிய சரியான நேரம் இது தான்.👈

அங்கையும் தமிழன் தான் பலி...:(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அங்கையும் தமிழன் தான் பலி...:(

போர் முன்னரங்குகளில்... பெரும்பாலும், தமிழரைத்தான் அனுப்புவார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😜😜😜

36 minutes ago, குமாரசாமி said:

அங்கையும் தமிழன் தான் பலி...:(

 

என்ன செய்வது சாமியர், சில விடயங்கள் 100% மகிழ்ச்சியைத் தராது. சில விடயங்கள் 100% துன்பத்தையும் தராது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூன் 16,  2020 16:21 PM
சென்னை,

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

லடாக்கில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி ஆவார். இவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர். 40 வயதான பழனி இந்திய ராணுவத்தில் கடந்த 22 வருடங்களாக ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

பழனிக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பழனியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பழனியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பழனியின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த மூன்று ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16162152/Chief-Minister-Palanisamys-condolences-to-the-family.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வீரர்கள் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது; என்ன நடந்தது என்பதை விளக்குங்கள்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

cong-terms-death-of-3-indian-army-men-shocking-asks-govt-to-brief-political-parties காங்கிரஸ் எம்.பி . ஆனந்த் சர்மா : கோப்புப்படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அரசு விளக்க வேண்டும என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 2,500க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குடில் அமைத்துத் தங்கினர். போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுவதும், பதுங்குக் குழிகள் அமைப்பதிலும் இருந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இருதரப்புப் பிரச்சினையைத் தீர்க்க ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் இரு தரப்பு ராணுவத்தினரும் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ராணுவ மேஜர் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து இந்திய -சீன வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

1592307018756.png

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கால்வான் பள்ளாத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தைத் திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான பணியில் இருந்தனர்.

அப்போது இந்திய வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவித்தாலும் அது உறுதி செய்யப்படவில்லை.

இந்திய ராணுவத்தினர் எல்லை மீறி வந்து சீன ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால்தான் தாக்கினோம் என்று சீனா குற்றச்சாட்டு வைக்கிறது.

இச்சம்பவத்தால் லடாக் பகுதியில் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா கூறுகையில், “சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டறிந்தேன்.

1592307038756.jpg

இந்த நேரத்தில் மத்திய அரசு தேசத்துக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் அழைத்து உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது. தேசத்துக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம் தேசத்தின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசிடம் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு மாறாக சீனா நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. நம்பும் வகையில் இ்லலை. ஏற்கவும் முடியவில்லை. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி செய்வாரா” எனக் கேட்டுள்ளார்

https://www.hindutamil.in/news/india/559712-cong-terms-death-of-3-indian-army-men-shocking-asks-govt-to-brief-political-parties-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகம் தகவல்

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகம் தகவல்

லடாக்கில் இந்திய - சீன ராணுவம் இடையே நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: ஜூன் 16,  2020 14:41 PM
புதுடெல்லி,

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரும் 22 வருடங்களாக ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவருமான பழனி என்பவரும் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சீன ராணுவத்தின் தரப்பிலும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. இருப்பினும் இது குறித்து சீன ராணுவத்தின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாக சீன ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 சீன வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து சீன அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16144142/Chinese-media-reports-5-Chinese-soldiers-killed-in.vpf

அப்பிடி ஒரு நியூசையும் காணவில்லையே. 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

Link to comment
Share on other sites

வீர மரணம் அடைந்த தமிழக உறவிற்கு வீர வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட இந்திய படையினரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக பிபிசி உலக சேவை இந்திய அரச செய்தியை ஆதாரம் காட்டி வெளியிட்டுள்ளது. இது  சீனாவுடனான மோதலில் 45 வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட பெரும் இழப்பு என்கின்றனர்.

At least 20 Indian soldiers were killed in a clash with Chinese forces in Ladakh in the disputed Kashmir region, Indian officials say.

The incident follows rising tensions, and is the first deadly clash in the border area in at least 45 years.

The Indian army initially said three of its soldiers had been killed, adding that both sides suffered casualties.

But later on Tuesday, officials a number of critically injured soldiers had died of their wounds.

https://www.bbc.com/news/world-asia-53061476

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CNN)At least 20 Indian soldiers have died after a "violent face-off" with Chinese troops along the countries' de facto border in the Himalayas late Monday, the Indian army has said. 

The incident occurred during a "deescalation process" underway in the Galwan Valley in the disputed Aksai Chin-Ladakh area, where a large troop build-up has reportedly been taking place for weeks now on both sides of the border, before senior military commanders began talks earlier this month.
The Indian army had earlier said three soldiers had died, but added on Tuesday that a further 17 troops "who were critically injured in the line of duty at the standoff location and exposed to sub-zero temperatures in the high altitude terrain have succumbed to their injuries."
The deaths are the first military casualties along the two countries' disputed border for more than 40 years.
 
 
Content by CNN Underscored
The best coffee grinders of 2020, tried & tested
The key to making the perfect cup of coffee at home: a burr coffee grinder.
According to the earlier Indian army statement, there was loss of life "on both sides," but it did not specify any number of Chinese casualties.
Senior military officials from both sides are currently meeting to defuse the situation, the statement added. 
"India and China have been discussing through military and diplomatic channels the de-escalation of the situation in the border area in Eastern Ladakh," said India's External Affairs Ministry spokesman Anurag Srivastava on Tuesday.
He said senior commanders had "agreed on a process for such de-escalation" during a "productive meeting" on Saturday, June 6, and ground commanders had met regarding the implementation.
"While it was our expectation that this would unfold smoothly, the Chinese side departed from the consensus to respect the Line of Actual Control (LAC) in the Galwan Valley," he said in the statement.
"Both sides suffered casualties that could have been avoided had the agreement at the higher level been scrupulously followed by the Chinese side," he added.
"Given its responsible approach to border management, India is very clear that all its activities are always within the Indian side of the LAC. We expect the same of the Chinese side. We remain firmly convinced of the need for the maintenance of peace and tranquility in the border areas and the resolution of differences through dialogue. At the same time, we are also strongly committed to ensuring India's sovereignty and territorial integrity."
 
Indian Defense Minister Rajnath Singh met with the External Affairs Minister, the Chief of Defense Staff, and the chiefs of the Army, Navy and Air Force and to review the "operational situation in Eastern Ladakh" earlier on Tuesday, the army said. 
At a regular news conference Tuesday, Chinese Foreign Ministry spokesman Zhao Lijian said that on Monday, "Indian troops seriously violated our consensus and twice crossed the border line for illegal activities and provoked and attacked Chinese personnel which lead to serious physical conflict between the two sides." 
"China has lodged strong protest and representation with the India side, and we once again we solemnly ask the India side to follow our consensus and strictly regulate its front line troops and do not cross the line and do not stir up troubles or take unilateral moves that may complicate matters," Zhao added. 
"We both agreed to resolve this issue through dialogue and consolation and make efforts for easing the situation and upholding peace and tranquility in the border area."
Zhao did not comment on whether there had been any Chinese casualties. 
China's People's Liberation Army (PLA) released a statement Tuesday night calling on the Indian army to immediately stop what it described as "provocative actions" and to "resolve the issue through the correct track of dialogue and talks."
"The sovereignty of the Galwan Valley region has always belonged to China," Zhang Shuili, the spokesman of the Western Theater said in a statement on China's Ministry of Defense website. "Indian troops violated its commitment, crossed the borderline for illegal activities and deliberately launched provocative attacks."
Zhang added that the "serious physical conflict between the two sides" had "resulted in casualties."
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடனான எல்லைப்பகுதியில், லடாக் பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக தனது ராணுவ பலத்தை அதிகரித்துவந்த இந்தியா, எதிர்பாராத விதமாக திங்கட்கிழமை அடிவாங்கியிருக்கிறது. 

தனது ராணுவ பலத்தைக் கண்டு சீனா பின்வாங்கிவிடும் என்று நம்பிய இந்திய ராணுவம், எல்லையில் பிலிம் காட்டா, சீனா செல்லமாக தலையில் தட்டி இந்தியர்களுக்கு கள யதார்த்தத்தை உணரவைத்திருக்கிறது. 

விளைவு, 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இன்னும் பலர் காயமடந்திருக்கின்றனர்.

அடவாங்கியபின், வாலைநன்றாகச் சுருட்டி, பின்னங்கால்களுக்கு நடுவே மறைத்து வைத்திருக்கும் இந்தியா சமாதானம் பேசலாம் என்று முனகியவாறு பம்முகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 20 பேரில் எத்தனை தமிழ்நாட்டுக்காரனோ போலி இந்திய தேசிய வெறி ஊட்டப்பட்டு அநியமாய் தமிழர்களை இழக்கின்றோம் .

35 minutes ago, ரஞ்சித் said:

அடவாங்கியபின், வாலைநன்றாகச் சுருட்டி, பின்னங்கால்களுக்கு நடுவே மறைத்து வைத்திருக்கும் இந்தியா சமாதானம் பேசலாம் என்று முனகியவாறு பம்முகிறது.

நேருக்கு நேர் சண்டைபிடிக்க முடியாத ஹிந்திய  பெண்ணைக்கூட்டம் அப்படி செய்வது புதிதல்ல வாலியை கொன்றதில் இருந்து ஆரம்பிக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தமிழ்நாடே. எனக்கு இதனை கொண்டாடுவததைத் தவிர வேறு வழியில்லை. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 வீரர்கள் வீரமரணம் - இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20 வீரர்கள் வீரமரணம் - இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

புதுடெல்லி:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்டாக தெரியவந்தது.


 
இந்நிலையில், இந்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த மோதலில் சீன தரப்பில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.   

நேற்று நடந்த இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு எதும் நடைபெறவில்லை எனவும், இரு தரப்பு வீரர்களும் கற்கள், இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதால் இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/16234152/1618105/20-Indian-soldiers-killed-in-a-clash-with-Chinese.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம் பெரிய மோதலாக மாறுமா? என்.ராம் என்ன சொல்கிறார்?

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

இந்தியா சீனா இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சீனத் தரப்பிலும் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் என்ன பாதிப்பு என்பதை சீனா வெளியிடவில்லை.

ஜூன் 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையை ஒட்டி இரு நாட்டு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கியதாக இந்திய ராணுவத் தளபதி கூறியிருந்த நிலையில் இப்போது திடீரென உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. சூழ்நிலை மேலும் மோசமாகுமோ, பெரிய மோதல் வெடிக்குமோ என்ற ஐயம் பலருக்கும் நிலவுகிறது.

எனவே இது குறித்து மூத்த பத்திரிகையாளரும், தி ஹிந்து குழுமத் தலைவருமான என்.ராமிடம் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம்.

எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் எப்படிச் செல்லும் என்று அவரிடம் கேட்டோம்.

"இது பெரிய மோதலாக மாறாது. உயர் மட்டத்தில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மட்டத்தில் புரிதல் இருக்கிறது. இரு தரப்பிலும் ராணுவத்தினர் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்" என்றார் ராம்.

இந்தியா - சீனா இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) வரையறுக்கப்படவில்லை. அதனால், ராணுவங்கள் முன்னேறுவதும், பின் வாங்குவதுமாகத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகிறது. ஆனால், பல விஷயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. பொய்யான கணிப்புகள் வெளியாகி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வரும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

என். ராம் (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎன். ராம் (கோப்புப்படம்)

ராஜீவ் காந்தி - டெங் ஜியாவோ பிங் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்திய சீன உறவில் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து விரிவாக கேட்டபோது, "1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றார். அந்தப் பயணத்தில் நானும் சென்றிருந்தேன். அங்கு ராஜீவ் காந்தி - சீனத் தலைவர் டெங் ஜியாவோ பிங் இடையிலான பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுவரை நிலவி வந்த தேக்க நிலையை உடைப்பதாக அந்த முடிவுகள் அமைந்தன.

அதாவது எல்லைப் பிரச்சனையில் தீர்வு எட்டும் வரை உறவில் மேம்பாடு இல்லை என்று இருந்த நிலையை மாற்றி, எல்லைப் பிரச்சனை முடியும் வரை காத்திருக்காமல் உறவுகளை மேம்படுத்தவேண்டும் என்பது அந்த சந்திப்பில் எட்டிய முடிவுகளில் ஒன்று. இரு நாடுகளும் எல்லையில் படை பலத்தை பிரயோகிப்பதில்லை என்பதும், எல்லையில் இருக்கும் நிலையை மாற்றுவதில்லை என்பதும் அப்போது எடுத்த முடிவுகள்தான். இந்தியாவில் அப்போது முதல் நரேந்திர மோதி வரையிலான எல்லாப் பிரதமர்களும் அந்தப் பேச்சுவார்த்தை உருவாக்கிய கட்டமைப்புக்கு உட்பட்டே செயல்பட்டும், உறவை வளர்த்தும் வந்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்ட ராம், அவ்வப்போது சிறிய விஷயங்கள், கேந்திர விவகாரத் துறை வட்டாரங்களால் மிகைப்படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

 

சீனா முன்னதாகவே கோவிட்-19 நோய்த்தாக்குதல் பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிட்டது. அதே நேரம் இந்தியா அதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, இன்னும் மீண்டுவரவில்லை. இந்நிலையில் சீனா தமக்கு உள்ள சாதக நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேட முயற்சிப்பதாக நிலவும் கருத்தைப் பற்றி அவரிடம் கேட்டோம்.

இதை என்.ராம் முற்றாக மறுத்தார்.

"சிறிய நாடுகள் பல கோவிட்-19 சிக்கலை சமாளிக்கும் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், பெரிய நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்சனையை சிறப்பாக சமாளித்த நாடு சீனா என்பது உண்மைதான். ஆனால், இதனால் ஏற்பட்ட சாதக நிலையை, இந்திய எல்லை விவகாரத்தில் பயன்படுத்திக்கொள்ள சீனா முயலாது. அதற்கு வாய்ப்பில்லை" என்று அவர் கூறினார்.

இப்போது ஏற்பட்டுள்ள பதற்றம், இழுபறியாக இருக்கும் எல்லைப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கான அழுத்தத்தை இரு நாடுகளுக்கும் வழங்குமா என்று கேட்டோம்.

"இல்லை. இது அத்தகைய அழுத்தத்தைத் தராது" என்று குறிப்பிட்ட அவர் "நம் வாழ்நாளில் இந்த எல்லைப் பிரச்சனை தீர்வதை நாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே" என்றார்.

https://www.bbc.com/tamil/global-53067587

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி முதலில் தாக்கியது இந்திய படைகளே -சீனா தெரிவிப்பு

இந்தியப்படைகளே எல்லை தாண்டி வந்து தமது படையினர்மீது தாக்டகுதல் நடத்தியதாக சீனா தெரிவித்துள்ளது.

லடாக் பிராந்தியத்தில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு சீன படையுடன் நடந்த மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா உடனான மோதலில், இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதன்முறையாகும். இரு தரப்பிலும் பதற்றத்தை தணிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக லடாக் பிராந்தியத்தில் உள்ள எல்.ஏ.சி பகுதியில் சீனா - இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவியதால் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.

இதனை அடுத்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு தரப்பிலும் படைகள் விலக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக படைகள் விலக்கப்பட்டு வரும் நிலையில், கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு இரு தரப்பு மோதல் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் எல்லை தாண்டி வந்து சீனப் படைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்த சம்பவம் குறித்து சீனா விளக்கமளித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

https://www.ibctamil.com/india/80/145323?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.