Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

நான் நினைக்கின்றேன் கபிதன் அவர்கள் மதம் என்பதை விட  தேவ/ஆலயங்கள் எங்கிருக்கின்றதோ அங்கே அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என நினைக்கின்றார் போலும்.

மனம் இறுக்கமில்லாமல் தளர்ந்து போவதற்கு அமைதியும் ஆன்மீகமும் உதவுகின்றது.

  • Replies 105
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 01:28, Kapithan said:

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

இவர்களை மட்டும் எதற்கு ??? அனைவரும் நன்றாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

  • தொடங்கியவர்
5 hours ago, Sasi_varnam said:

துல்பென் 
உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன்.
ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது.
எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும்  இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது.
அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது.
என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. 

இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட.

எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு  வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.

ச‍சிவர்ணம்,

இந்து என்ற வேத சமயத்தின் தோற்றுவாய் இந்தியாவே . அங்கு எவ்வளவு கயமை தனமாக இந்து குருமார் இருக்கிறார்கள் என்பதை எடுத்து காட்டவே இந்த வீடியோ இணைத்தேன். நீங்களை ஒப்பு கொள்ளாவிட்டாலும் ஈழத்தில் கடைப்பிடிகப்படும் சைவம் என்று நாம் அழைக்கும் மத‍ம் இந்து மதம் பரப்பிய  மூடத‍தனங்கள் பலவற்றை உள்வாங்கியே உள்ளது. அங்கு உள்ளது போல் வீரியத்துடன் அது இல்லை என்றாலும் அதன் அடுத்த‍ வீரியம் குறைந்த Verison  தான் ஈழத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்திய பார்பன மூடத்தனங்கள் பல மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்படும் போதெல்லாம் நீங்கள் இ்த இந்திய மூடத்தனங்களை ஏன் இங்கு இணைக்கிறீர்கள் என்று கோப‍ப்படுவதில்லை. ஏன் இந்த வீடியோவுக்கு மட்டும் இந்த கோபம்.

இந்திய பார்ப்பன மூடத்த‍னங்கள் பல ஈழ மக்களுக்கு திரைபடங்களை வாயிலாகவும் ஆனமீக சொற்பொழிவுக் காணொலிகள் மூலமாக்கவும் ஈழ மக்களுக்கு பிரசாரம் செய்யபடும் போதெல்லாம்  என் மீது உங்களுக்கு ஏற்பட்ட கோபம் ஏன் ஏற்படவில்லை?  ஏதோ இந்த வீடியோ மட்டும் தான் இந்தியாவில் ்இருந்து இணைக்கபடுவது போலவும் வேறு எந்த வீடியோவும் இணைக்கபடுவதில்லை என்பது போலவும் என் மீது கோப‍ப்படுகின்றீர்களே? 

நான் இணைத்த வீடியோ இந்திய இந்து பார்பன திமிர்  என்றால் அதற்கு ஏன் என் மீது கோபம் உங்களுக்கு. 

இந்திய பார்ப்பரனர்களுக்கு உள்ள வெளிப்படை திமிர் இலங்கை பார்பனர்களுக்கு இல்லை என்றாலும் அவர்களும் மூடத்தனத்தையே மக்களுக்கு பரப்புகிற்னார்கள். உண்மையாக கோவில் பக்தி உள்ள இறைவன் தொண்டையே முழு நேர தொழிலாக கொண்ட பலரை எனக்கு தெரியும். இறைவனுக்கு முன் அனைவரும் எல்லோரும் சம‍ம் என்றால்  ஈழத்தில் உள்ள நீங்கள் வக்காலத்து வாங்கும் அந்த   குருக்கள் எவரும்  ஏன் அவர்களை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை? 

இது தொடர்பாக புலம்பெயர் வானொலி ஒன்றில் நேயர்கள் கலந்து கொள்ளும் விவாதம் ஒன்று நடைபெற்ற போது நேரலையில் வந்த இந்து குருமார் ஏதோ ஏதோ காரணங்களை கூறி பிராமணர் மட்டும் தான் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்று வாதாடியதை நான் நேரே கேட்டேன்.  நீங்கள் கூறுகிறீர்கள் எமது பிராமணர்கள் எல்லோரும் சம‍ம் என்று கூறுகிறார்கள் என்று. அப்படி கூறிய எந்த ஈழத்து பிராமணரையும் நான் காணவில்லை. 

நல்லூர் கோவிலில் பிராமணராக பிறக்ககாத ஒருவர் கொடியேற்றி திருவிழா நடக்கும் நாள் என்னிடம் கூறுங்கள் ஈழத்து பிராமணர்கள் குருக்கள் எல்லாம் நியாயமானவர் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்களை மட்டும் எதற்கு ??? அனைவரும் நன்றாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

பிற சமய குருக்கள் துறவிகளுடன் ஒப்பிடும் போது சவ சமயக் குருக்களுக்கு போதிய வருமானமும், மரியாதையும் ஈழத்தில் வழங்கப்படுவதில்லை. கோவிற் காணிக்கையில் போதிய வருமானமின்றி குடும்பம் நடாத்தும் குருக்கள்  ஈழத்தில் அனேகர் உள்ளனர். பிற சமய முதல்வர்களுக்கு வழங்கப்படும் கெளரவம் சைவ சமயக் குருக்களுக்கும் வழங்கப்பட வெண்டும். 👍

பிராமணர்கள் என்கின்ற சாதீய அடிப்படையில் இதனை நான் குறிப்பிடவில்லை. பிராமணர்கள் அல்லாதோரும் குருக்களாக இருக்கும் பட்சத்தில் எனது நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும். 👍

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கின்றேன் கபிதன் அவர்கள் மதம் என்பதை விட  தேவ/ஆலயங்கள் எங்கிருக்கின்றதோ அங்கே அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என நினைக்கின்றார் போலும்.

மனம் இறுக்கமில்லாமல் தளர்ந்து போவதற்கு அமைதியும் ஆன்மீகமும் உதவுகின்றது.

நானும் மன அமைதிக்காக எல்லா இடமும் போயுள்ளேன், விகாரை, தேவாலயம், கோவில்...

Bahrain - முஸ்லிம் பெரியவர் இறந்த இடம் - எல்லோரும் அங்கு போகலாம், நல்ல பிரபல்யமான இடம்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்களை மட்டும் எதற்கு ??? அனைவரும் நன்றாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

இவர்களுடன் வீட்டுக்குள் வரை போய் இருந்து சாப்பிட்டுள்ளேன், வித்தியாசம் பார்பதில்லை, நன்றாக பழுகுவார்கள் ஊரில்.

நான் காதலித்த முதல் பெண்ணும் ஜயர் பொண்ணுதான், தேவதை 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கின்றேன் கபிதன் அவர்கள் மதம் என்பதை விட  தேவ/ஆலயங்கள் எங்கிருக்கின்றதோ அங்கே அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என நினைக்கின்றார் போலும்.

மனம் இறுக்கமில்லாமல் தளர்ந்து போவதற்கு அமைதியும் ஆன்மீகமும் உதவுகின்றது.

என்னைப் பொறுத்தவரை சமயங்கள் என்பன மனிதரை வழி நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. சமயங்கள் மனிதர்களிடையே வேறுபாடு பார்ப்பதில்லை. அதனைப் பின்பற்றும் மனிதர்கள்தான் எனது சமயம்தான் உயர்ந்தது உனது சமயம் தாழ்ந்தது என உயர்வு தாழ்வை செயற்கையாக உருவாக்குகின்றனர். 👍

நான் ஒரு கிறீத்துவன் எனத் தெரிந்தும், இதுவரை எந்த ஒரு சைவக் கோவில்களிலிருந்தும் என்னை நோக்கி ""நீ ஒரு கிறீத்துவன். நீங்கள் இங்கே வரக் கூடாது """ எனச் சொல்லப்படவில்லை. அந்த அளவில் இலங்கையில் சைவசமயம் பிற சமயங்களை மதிக்கும் தன்மையுள்ளதாக நான் உணர்கிறேன். 👍

ஆனால் தற்போது நாட்டில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை தருவனவாக இல்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஆனால் தற்போது நாட்டில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை தருவனவாக இல்லை. ☹️

வேணுமென்று ஒரு சில விஷமிகளால் திட்டமிடப்பட்டு செய்யும் வேலை. கஞ்சாவிற்கு 

  • தொடங்கியவர்
16 hours ago, Sasi_varnam said:

 

ச‍சிவர்ணம்

நீங்கள் என்மீது கோப‍ப்பட்டது போல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு எனது ஞாபகத்திற்கு வந்த‍தால் அதை இங்கு பதிவு செய்கிறேன். 2018 ம் ஆண்டு ஜுலை 27 ம் திகதி சந்திரகிரணகம் நடைபெற்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது நடக்க சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்திருந்த ஒரு இந்து குரு  அது பற்றி  இங்குள்ள ஒரு கோவிலில் பிரசங்கம் நடத்தும்போது சந்திர கிரகணம் குறித்து அறிவுக்கு ஒவ்வாத பல கதைகளை கூறினார்.

அடுத்த நான் ஒரு தனிப்பட்ட சந்திப்பு ஒன்றில் அவரை காண நேர்ந்த‍து. அப்போது நான் அவரிடம் கேட்டேன் ஐயா நீங்கள் சந்திரகிரணகத்தை பற்றி கூறியவற்றை கேட்டேன். கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன் இந்த உலகில் பிறக்காமல் விட்டிருந்தால் நீங்கள் கூறிய விடயங்கள் தான் பாடப்புத்தகங்களிலும் பிள்ளைகளுக்கு படிப்பித்திருப்பார்கள் என்ன என்று.  

மக்களிடையே அறியாமையை பரப்புவதைத் தான் நான் சுட்டிக்காட்டுவதை உணர்ந்த அவர் அசடு வழிந்து  சிரித்து சமாளித்தார். ஆனால் அங்கிருந்த பல எனது நண்பர்கள்  அவரை நான் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேன் அவமதித்து விட்டேன்  என்று என்மீது கோப‍பட்டார்கள். அதே போல நான் உங்களது கோபத்தையும் நான் எடுத்துக்கொள்ளுகிறேன். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 00:41, குமாரசாமி said:

நாங்கள் மதம் மாத்துற கோஷ்டியள் இல்லையெல்லோ.:cool:

அது உண்மை தான்.

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்களை மட்டும் எதற்கு ??? அனைவரும் நன்றாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

👍

யாழ்பாணத்தில் சாதி பார்த்து ஒடுக்கபடுகிறவர்களும் கூலி தொழிளாளர்களும் கவுரவமாக நடத்தபட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

இந்திய பார்பன மூடத்தனங்கள் பல மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்படும் போதெல்லாம் நீங்கள் இ்த இந்திய மூடத்தனங்களை ஏன் இங்கு இணைக்கிறீர்கள் என்று கோப‍ப்படுவதில்லை. ஏன் இந்த வீடியோவுக்கு மட்டும் இந்த கோபம்.

எனக்கும் இதுபற்றி விளங்கவில்லை. இந்தியாவில் இருந்து வந்த சத்ய சாயி பாபா  ஆஞ்சநேயர் பக்தி எல்லாம் இலங்கை தமிழர்களிடம் கரைபுரண்டு ஓடுகிறது இந்த வீடியோவுக்கு என்ன பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

வேணுமென்று ஒரு சில விஷமிகளால் திட்டமிடப்பட்டு செய்யும் வேலை. கஞ்சாவிற்கு 

காரணங்கள் எவ்வாறு இருந்தாலும் நாங்கள் அவற்றைக் காட்டித் தப்பிக்க முடியாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தானே. 👍

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

இவர்களுடன் வீட்டுக்குள் வரை போய் இருந்து சாப்பிட்டுள்ளேன், வித்தியாசம் பார்பதில்லை, நன்றாக பழுகுவார்கள் ஊரில்.

நான் காதலித்த முதல் பெண்ணும் ஜயர் பொண்ணுதான், தேவதை 😀

தேவதையை எங்களுக்கும் ஒருமுறை காட்டுங்கோவன். 😀 

கண் வைத்தியர் தேவையா இல்லையா என்று முடிவு சொல்லலாம்தானே.😂

 

இந்து மதம் என்று ஒரு சொல் எந்த ஒரு வேதத்திலும் இல்லை. சிந்து எனும் நதியின் பாரசீகப் பதமே ஹிந்து ஆகி இந்து ஆனது.

இந்து மதம் என்பதும் இந்தியா என்பதும் வெள்ளைக்காரர் இந்தியாவை ஆண்ட போதுஉருவாகிய சொற்பதங்கள்.

சிந்து வெளியை அழித்த வந்தேறிகள் உருவாக்கிய சம்ஸ்கிருதமும் சனாதன தர்மமும் ஆதியில் இருந்த சித்தர், ஆசீவக வழிபாட்டுமுறைகளை கொச்சைப்படுத்தி உருவாக்கப்பட்டவையே.

புராணக்கட்டுக்கதைகள், இதிகாசங்கள் எல்லாம் ஆதி வழிபாட்டு முறைகளை இழிவு படுத்தி எழுதப் பட்டவையே. விஷயம் விளங்காமல் எழுதியவன் உருவாக்கிய மதமே இந்து மதம். மகாவம்சம் எப்படி கட்டுகதையோ அப்படித்தான் புராணங்களும் இதிகாசங்களும் . ஐயப்பன் எப்படிப் பிறந்தார் என்பது எவ்வளவு அசிங்கமான கட்டுக்கதை. இதை ஒரு காவாலிப்பிராமணிதானே திட்டமிட்டுத்தானே எழுதியிருக்கவேணும்.

வந்தேறிகளின் பிரித்தாழும் சூழ்ச்சியில் உருவானதே சைவம், வைணவம் எனும் பிரிவுகள்.

ஆதியில் தமிழரிடமிருந்த குலத்தொழில் வழக்கங்களை சாதியாக்கி, அறிவு புகட்டும் ஆசான்களாகிய பிராமண குலத்தைத் தமதாக்கி, மற்றவர்களை இழிசாதியாக்கி சுரண்டினார்கள்.

ஆதியில் இருந்த தமிழ் பிராமணர்களில் ஒரு பகுதியினர் எதிர்த்துப்போராட இயலாமையினால் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர், பார்ப்பனர் ஆனார்கள் (தற்போதைய போராட்ட நிகழ்வுகள் தெரிந்ததே).

பூசைகள், மந்திரங்கள் எல்லாம் இந்த பொய்ப் பிராமணர்களே செய்து உடலுழைப்பில்லாமல் சம்பாதிக்க வேண்டும். மற்றவர்கள் இவர்களைத் தெய்வத்துக்கு சமமாக மதிக்க வேண்டும் என்று விதித்தார்கள்.

ஈழத்துக்குருக்களும் இவர்களது பரம்பரயினரே.

வேதங்கள் ஆகமங்களை சம்ஸ்கிருதத்துக்கு மாற்றி மூலப் பிரதிகளை அழித்தார்கள்.

தம்மைத் தவிர தாங்கள் எழுதிய பொய் வேதங்களை கீழ்சாதியார் படிக்கத்தடை செய்தார்கள், படித்தாலோ, படிப்பதைக்கேட்டாலோ காதுக்குள் ஈயம் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று தங்களது மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதி வைத்தார்கள். உண்மையான மனு தர்ம சாஸ்திரம் வேறு, அது எரிக்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஆயிரம் இருக்குது. இவைகள் இன்றுவரை தொடர்கின்றன. கீழடி தொல்பொருள் ஆய்வு, பூம்புகார் கடலடி ஆய்வுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடப்பதை அவதானியுங்கள்.

 

முதலில் நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். 

நாங்கள் விழிப்பதற்கு, நாங்கள் கண்மூடியிருக்கிறோமா என்பது உணரப்படவேண்டும்.

எவனோ எங்களைப் பற்றித் தவறாக எழுதி வைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  எங்களை அடிமையாக்கி அவன் ஆண்டு அனுபவித்ததை நாங்களும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். விழிப் படைய முயற்சித்தோமா?

எக்சத் ராச்சிய என்றும் எக்கிய ராச்சிய என்றும் சிலர் விளக்குவது போல.

எங்களை ஆள அவன் வகுத்த வழிமுறைகளை பகுப்பாய்வு செய்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம், நல்ல முயற்சி.

 

(இந்த விழிப்பின் ஒரு முயற்சியாகவே, தமிழைப்பற்றிய ஆய்வு, ).

 

தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று Dr pandian (Physics), இவைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் சொல்வதன் அடிப்படையான விடயங்கள் சரியானதே, எல்லாம் சரியென்று எடுக்கத் தேவையில்லை. அதுபற்றி விவாதியுங்கள். 

தமிழரின் மொழி, வழிபாட்டு முறைகள் எல்லாம் சித்தர்கள் உருவாக்கியதே. முதலில் சித் தர்களைப் பற்றியும் அவர்கள் வகுத்த வழிமுறகள் பற்றியும் அறியுங்கள், அதுபற்றி விவாதியுங்கள். இந்த சித்தர்களைத்தான் அவர்கள் தேவாரம் பாடி அரசனைக் கைக்குள் போட்டுக் கழுவேறினார்கள்.

 

Part-1 Siddhar Phenomenon & Color Concept

 

 

On 22/6/2020 at 18:33, tulpen said:

ச‍சிவர்ணம்,

இந்து என்ற வேத சமயத்தின் தோற்றுவாய் இந்தியாவே . அங்கு எவ்வளவு கயமை தனமாக இந்து குருமார் இருக்கிறார்கள் என்பதை எடுத்து காட்டவே இந்த வீடியோ இணைத்தேன். நீங்களை ஒப்பு கொள்ளாவிட்டாலும் ஈழத்தில் கடைப்பிடிகப்படும் சைவம் என்று நாம் அழைக்கும் மத‍ம் இந்து மதம் பரப்பிய  மூடத‍தனங்கள் பலவற்றை உள்வாங்கியே உள்ளது. அங்கு உள்ளது போல் வீரியத்துடன் அது இல்லை என்றாலும் அதன் அடுத்த‍ வீரியம் குறைந்த Verison  தான் ஈழத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்திய பார்பன மூடத்தனங்கள் பல மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்படும் போதெல்லாம் நீங்கள் இ்த இந்திய மூடத்தனங்களை ஏன் இங்கு இணைக்கிறீர்கள் என்று கோப‍ப்படுவதில்லை. ஏன் இந்த வீடியோவுக்கு மட்டும் இந்த கோபம்.

இந்திய பார்ப்பன மூடத்த‍னங்கள் பல ஈழ மக்களுக்கு திரைபடங்களை வாயிலாகவும் ஆனமீக சொற்பொழிவுக் காணொலிகள் மூலமாக்கவும் ஈழ மக்களுக்கு பிரசாரம் செய்யபடும் போதெல்லாம்  என் மீது உங்களுக்கு ஏற்பட்ட கோபம் ஏன் ஏற்படவில்லை?  ஏதோ இந்த வீடியோ மட்டும் தான் இந்தியாவில் ்இருந்து இணைக்கபடுவது போலவும் வேறு எந்த வீடியோவும் இணைக்கபடுவதில்லை என்பது போலவும் என் மீது கோப‍ப்படுகின்றீர்களே? 

நான் இணைத்த வீடியோ இந்திய இந்து பார்பன திமிர்  என்றால் அதற்கு ஏன் என் மீது கோபம் உங்களுக்கு. 

இந்திய பார்ப்பரனர்களுக்கு உள்ள வெளிப்படை திமிர் இலங்கை பார்பனர்களுக்கு இல்லை என்றாலும் அவர்களும் மூடத்தனத்தையே மக்களுக்கு பரப்புகிற்னார்கள். உண்மையாக கோவில் பக்தி உள்ள இறைவன் தொண்டையே முழு நேர தொழிலாக கொண்ட பலரை எனக்கு தெரியும். இறைவனுக்கு முன் அனைவரும் எல்லோரும் சம‍ம் என்றால்  ஈழத்தில் உள்ள நீங்கள் வக்காலத்து வாங்கும் அந்த   குருக்கள் எவரும்  ஏன் அவர்களை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை? 

இது தொடர்பாக புலம்பெயர் வானொலி ஒன்றில் நேயர்கள் கலந்து கொள்ளும் விவாதம் ஒன்று நடைபெற்ற போது நேரலையில் வந்த இந்து குருமார் ஏதோ ஏதோ காரணங்களை கூறி பிராமணர் மட்டும் தான் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்று வாதாடியதை நான் நேரே கேட்டேன்.  நீங்கள் கூறுகிறீர்கள் எமது பிராமணர்கள் எல்லோரும் சம‍ம் என்று கூறுகிறார்கள் என்று. அப்படி கூறிய எந்த ஈழத்து பிராமணரையும் நான் காணவில்லை. 

நல்லூர் கோவிலில் பிராமணராக பிறக்ககாத ஒருவர் கொடியேற்றி திருவிழா நடக்கும் நாள் என்னிடம் கூறுங்கள் ஈழத்து பிராமணர்கள் குருக்கள் எல்லாம் நியாயமானவர் என்று. 

 

 

கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன் இந்த உலகில் பிறக்காமல் விட்டிருந்தால் நீங்கள் கூறிய விடயங்கள் தான் பாடப்புத்தகங்களிலும் பிள்ளைகளுக்கு படிப்பித்திருப்பார்கள்.  

உண்மைதான்.

இங்கு விடயம் மட்டுமே அலசப்படுகிறது, தனிப்பட்ட ஒருவரையல்ல tulpen ஐயா. தவறு இருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டவும். கற்றது கைமண்ணளவே.

Copernicus:  a Renaissance-era mathematician and astronomer, who formulated a model of the universe that placed the Sun rather than Earth at the center of the universe, in all likelihood independently of Aristarchus of Samos, who had formulated such a model some eighteen centuries earlier.

ஐரோப்பியர் விஞ்ஞான அறிவு பெற்றது, முஸ்லிம்கள் ஸ்பெயினைக் கைப்பற்றி ஆட்சி செய்தபிறகே. அராபியர் மூலமாகவே ஐரோப்பியர் எண்களையும் கணித, வானசாஸ்திர அறிவையும் பெருக்கிக் கொண்டனர். ரோமர், கிரேக்கர் மூலம் அரசியல், தத்துவ சாஸ்திரங்களை அறிந்து கொண்டனர்.

அராபியர் எண்களையும் கணித அறிவையும், வானசாஸ்திரத் தையும்   கற்றது இந்தியரிடமிருந்தே. (இந்த இந்தியர் தமிழர்கள் என்பது வேறுவிடயம், பின்னர் பார்ப்போம்).

Wikipedia: Al-Khwārizmī's contributionson the Calculation with Hindu Numerals written about 820, was principally responsible for spreading the Hindu–Arabic numeral system throughout the Middle East and Europe.

Albert Einstein said: "We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made."

ரோமரின் இலக்கத் தைக் கொண்டு ஒரு கூட்டல் கழித்தலே செய்யேலாது, எப்படி Algebra, Trigonometry, Calculus எல்லாம், யோசிச்சுப் பாருங்கள்.

 

சரி, விடயத் துக்கு வருவோம். கோயில்களில் நவக்கிரகங்கள் என்று ஒன்று இருக்குதே அது என்ன.

அப்போதைய அறிவின்படி இருந்த கிரகங்கள்தான் அவை. நடுவில் இருப்பது சூரியன், மற்றவைகள் சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள். அப்பவே சூரியனை மையப்படுத்திய கோட்பாடு இருந்ததுதானே. “கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன்ர பாட்டன்ர, பாட்டன்ர … பாட்டனே இன்னும் படைப்பு waitinglist இல் இருந்திருக்க மாட்டார்.

இவைகள் சூரியனைச் சுற்றி வருவதற்கு சூரியன் ஒரு கோளமாகவும், சுற்றுபவைகளும் கோளமாகவும் இருக்க வேண்டும். சந்திரன் பூமியைச் சுற்றுவதால் பூமி ஒரு கோளமாகவும் இருக்க வேண்டும் என்று கொள்ளப்பட்டிருக் கவேண்டும். கோளமாயிருப்பதால்தான் கோள் என்று பெயர்.

கோயில்களில் நவக்கிரக வழிபாடு வந்தது கற்றுக்குட்டி கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன் பிறப்பதற்கு ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர்.

அடுத்த வருடம் நிகழப்போகும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ நிகழும் என்று துல்லியமாக யார் கணிக்கிறார்கள். ஐரோப்பியர் கிரகணத்தைக் கணித்த வரலாறு ஏதும் உண்டா.

பாமர மக்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள் என்பதற்காகவே கதைகள் கட்டப்பட்டன. அதிலும் பாம்பு விழுங்குவது விசேஷம்.

பாம்பு ஏன் என்பதே அறிவின் உச்சம்.  இது தான் அது:

சந்திரன் (நீள்) வட்டப் பாதையில் சுற்றுகிறது. அந்தப் பாதை ஒரு சீரான வட்டம் இல்லை, தளம்பலான பாதை. குன்றும் குழியும் உள்ள நேரான பாதையில் வண்டி ஓடுவது போல.

பாதை நேர்தான், ஆனால் மேலும் கீழுமாக ஒரு அசைவு இருக்கும். பக்கவாட்டில் பார்த் தால் ஒரு sine wave (approx.) மாதிரி இருக்கும். இது பாம்பு ஊர்வது போலத்தானேயிருக்கும்.

சரி, அங்க எப்படி குன்றும் குழியும் வந்தது. அங்கதான் physics அறிவு இருக்குது, இருந்தது.

பூமியோ, சந்திரனோ பூரணமான (perfect) கோளங்களல்ல. அத்துடன் அதன் உட்பகுதியும் ஒரே சீரானதல்ல (not homogenous and, not equally distributed mass). அதனால் அவை உருளும் போது தளம்பல் ஏற்படும். அரைகுரையாக நீர் நிரம்பிய கோளம், பந்து எப்படி உருளும் என்று தெரியும். இது தான் சந்திரன், பாம்பு ஊர்வது போல என்று பாமர மக்களுக்கு சொல் லப்பட்டது. சந்திரனின் நிழல் மறைப்பதைப் பாம்பு விழுங்குவது என்றும் கக்குவது என்றும் சொல்லப்பட்டது. இதற்கு எவ்வளவு அறிவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு காலமாக அவதானித்திருக்க வேண்டும். எவ்வளவு கணித அறிவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு விவாதங்கள் கருத்தாடல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ( இது தமிழ் சிந்தனையாளர் பேரவை வெளிப்படுத்தியது. )

500 வருடத்துக்கு முதல் பூமி தட்டையென்று சொன்ன ஐரோப்பா எங்கே, உருண்டையென்று சொல்ல வெளிக்கிட்ட கலிலியோவை இருட்டறையில் தள்ளி குருடாக்கிய ஐரோப்பா எங்கே, சூரிய, சந்திர கிரகணங்களை துல்லியமாக கணித்த நமது சாத்திரம் எங்கே.

Trigonometry இலுள்ள Sine, Cosine, Tangent எல்லாம் இந்தியவிலிருந்து போனவையே, அவை தமிழ் சொற்களே. எப்படியிருந்திருக்கும் அந்தக் காலத்து கணித அறிவு. எவ்வளவு busy யாக அந்தக்காலத் து மாணவர்கள் இருந்திருப்பார்கள், tuition அது இது என்று.

நம்ம சாத்திரம் ஒரு பெரிய விஞ்ஞான அறிவு, அதை நாமே தாழ்திக்கொள்ளுகிறோம்.

இடையில் வந்த வந்தேறிகளால் அடிமைப்படுத்தப்பட்டோம், கல்வி மறுக்கப்பட்டோம் அறிவை இழந்தோம். காதுக்குள் உருக்கிய ஈய வேதனை, படிப்பை யாரும் நினைத் திருப்பார்களா.

விஷயம் தெரியாத வந்தேறிகளால் உருவாக்கப்பட்டு எங்கள் மீது  திணிக்கப்பட்ட கதைகளை நம்முடைய மூதாதையர் உருவாக்கியதென்று எங்களையே எள்ளி நகையாடுகிறோம்.  அதன் உண்மைத் தன்மையை அறிய முயற்சித்தோமா.

எவனாவது ஒருவன் கண்துஞ்சாது, பசி நோக்காது, காலம் பாராது ஆராய்ந்து சொன்னால், இது வெள்ளக்காரன் சொல்லியிருக்கிறானா, அவன்ட எதாவது ஒரு பல்கலைக்கழகம் இதை ஏற்றுக்கொண்டிருக்குதா, international magazine எதிலும் வந்திருக்குதா என்று கேட்பார்கள்.

அதே நேரத்தில், சிங்களவன் எப்படி,தானே செய்த போர்க்குற்றத்தை, தானே ஆராய கமிசன் அமைக்கலாம்” என்றும் கேட்பார்கள்.

ஆள்பவனின் மொழியில் பேசுவதே நாகரீகம், அவன் நிறத்துக்கே முதலிடம், அவன் சொல்வதற்கே மதிப்பு, அவன் ஏற்றுக்கொண்டால் தான் விதி, சட் டம், theory என்பது , என்று அன்று சமஸ்கிருதத்துக்கு இருந்தது, இன்று ஆங்கிலத்துக்கு இருக்குது. இதில் தவறு ஏதும் இல்லை, இல்லவேயில்லை. இது தான் வாழ்வியல்.

Jaffna, Colombo, Batticaloa, Trincomalee, Bombay, Trivandrum என்றுதானேபடித்த”வர்கள், இப்பவும் பேசுவர்.

 

நாம் ஏதும் கண்டு பிடித்தாலும் அவன் ஏற்றுக்கொண்டால் தான் அது செல்லுபடியாகும்.

உதாரணத்துக்கு ஒன்று:

Boson ஐப் பற்றி எதிர்வு கூறி நிரூபித்தவர் சத்தியேந்திர போஷ் என்னும் இந்தியர். இதனால் அவரின் பெயரால், அதற்கு போசோன் boson என்னும் பெயர். அதற்காக அவருக்கு நோபல் பரிசுக்காக எத்தனையோ பேர், வெள்ளைக்காரரும் சேர்ந்து, பரிந்துரைத்தார்கள், ஊஹூம், கொடுக்கவில்லை. ஆனால் இதை வைத்து மேலும் ஆய்வு செய்து இப்படியொரு வகை போசோன், Higgs boson இருக்கிறது என்று தற்போது ஒருவர், Peter Higgs நிரூபித்து நோபல் பரிசு பெற்றிருக்கிறார். பகிடியில்லையா இது.

Black Hole ஐ எதிர்வு கூறி அதற்குரிய கணித நிறுவல்களையும் கொடுத்தவர் சந்திரசேகர் என்னும் இந்தியர், தமிழர். அப்படியொன்று இருக்க சாத்தியமேயில்லை என்று கூறி கிடப்பில் போடப்பட்டது அவரது theory. இப்போ, quantum blackhole, mini blackhole, micro blackhole என்று வகையாறா blackhole பற்றி ஆய்வு செய்த Stephen Hawkins ஐ தூக்கிப்பிடிக்கிறார்கள்.

இது எப்படியிருக்கு என்றால், பறவை என்று ஒன்று இருக்க வேணும் என்று சொன்னால் சே, சே அப்படியொன்றிருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் குருவி என்று ஒரு பறவை இருப்பதாக கண்டு பிடித்துள்ளோம். அத்தோடு, தும்பியென்று இன்னுமொன்று பறந்து கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. என்ன கதையிது.

இலங்கையில் சிங்களவன் ஏதும் செய்தால் பெரிசு, இந்தியவில் வடக்கத்தையான் ஏதும் செய்தால் பெரிசு.

இப்படித்தான் கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன் கதையும்.

பாவம் அந்த ஐயர், அவர் காலங்காலமாக தனக்கு தெரிந்தவற்றைச் சொல்லிப் பிழைப்பை நடத்துகிறவர்.

ஆனால் ஐரோப்பியர் தாங்கள் கற்றதிலிருந்து வெகுவாகவே முன்னேறியிருக்கிறார்கள், மற்றவர்கள் முன்னேறுவதைத் தடுத்தும் இருக்கிறார்கள், தங்களது கல்விக் கொள்கையால். இது தான் வாழ்வியல்.

பி.கு:

அதென்ன நவக் கிரகங்கள், சூரியன் ஒரு கிரகமேயில்லையே….. கேக்குது, கேக்குது.

கிரகமும், Planet உம் ஒன்று என்று யார் ஐயா சொன்னார்கள். அது பிழை!

planet ஐ கிரகமாக எடுத்துக்கொண்டது தவறு.

கர அகம் = கரகம் = கிரகம்.

அதாவது, தன்னை நோக்கி இழுத்து கர அகப்படுத்த முயலும் எதுவாகிலும் அது ஒரு கிரகம் ( கிறகம்). ஆக, அந்த வகையிலே, சூரியன் மட்டுமில்ல  அவன்ட அப்பன் galaxy யும் ஒரு கிரகமே. Galaxy தான் எல்லாத்தையும் தன்னை நோக்கி அகப்படுத்த இழுக்குதே.

சந்திரனும் ஒரு கிரகம். வீடும் ஒரு கிரகம் - கிரகப் பிரவேசம். வீட்டுக்குள்ள “இருக்கிறதும்” ஒரு கிறகம்.

ராகு, கேது என்பது virtual கிரகங்கள்,

From Wikipedia:

Rahu : north lunar node. Moon is ascending from its nodal plane.

Ketu : south lunar node. Moon is descending from its nodal plane.

 

File:Lunar eclipse diagram-en.svg

 

 

இதெல்லாம் எந்த satellite, telescope வைத்து எந்த supercomputer ஆல் கணித்தார்கள். ஆத்தாக்கொடுமைக்கு  aliens என்று ஒரு கதையளப்பு.

பாவம் கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன்!

நாங்களும் பவம்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

பாவம் கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன்!

நாங்களும் பவம்தான்!

அகத்தான் நல்லதொரு விரிவான பதிவு, சிலருக்கு வெள்ளைகள் சொன்னால் சரி, எம்மவர் சொன்னால் மூட நம்பிக்கை. தொடர்ந்து பகிருங்கள். 

54 minutes ago, உடையார் said:

அகத்தான் நல்லதொரு விரிவான பதிவு, சிலருக்கு வெள்ளைகள் சொன்னால் சரி, எம்மவர் சொன்னால் மூட நம்பிக்கை. தொடர்ந்து பகிருங்கள். 

நன்றி நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அகத்தான் said:

கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன் இந்த உலகில் பிறக்காமல் விட்டிருந்தால் நீங்கள் கூறிய விடயங்கள் தான் பாடப்புத்தகங்களிலும் பிள்ளைகளுக்கு படிப்பித்திருப்பார்கள்.  

 

உண்மைதான்.

இங்கு விடயம் மட்டுமே அலசப்படுகிறது, தனிப்பட்ட ஒருவரையல்ல tulpen ஐயா. தவறு இருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டவும். கற்றது கைமண்ணளவே.

பாவம் கொப்பர்ஸ்நிக்கஸ் என்று ஒருவன்!

நாங்களும் பவம்தான்!

 

கொப்பநிக்கல்ஸ் தொடர்பாக எனக்கு பெரிய அளவு ஏதும் தெரியாது (நினைவில் இல்லை)

ஆனால் துல்பன் சொல்ல விரும்பிய விடயம் ""இந்தக் காலத்தில் கூட சமயத்தின் பெயரால் எந்த அளவு பிற்போக்கான விடயங்களையும் மூட நம்பிக்கைகளையும் மக்களிடையே பரப்புகிறார்கள்"" என்பதாகத்தான் நான் விளங்கிக் கொள்கிறேன். 

தமிழர் அறிவியல் தொடர்பாக துல்பன் எதனுடனும் (இந்தத் திரியில்)  முரண்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

தமிழர் அறிவியல் தொடர்பாக மிகச் சரியான, விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து நிறுவப்பட்ட எந்த உண்மைகளையும் எவரும் கேள்விக்குட்படுத்தலாமே தவிர, புறந்தள்ள முடியாது. நவக் கிரகங்கள், பாம்பு விழுங்குதல் போன்ற கதைகளுக்கு விளக்கங்கள் கூறி எம்மை நாமே பாராட்டலாமே தவிர எமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக படிப்பிக்கவோ விளங்கப்படுத்தவோ முடியாது.

அதுவரை , ஐரோப்பியர்களின் வழிவந்த விஞ்ஞான, வராலாற்றை மட்டும்தான் எமது சந்ததி கற்றுக் கொள்ளும்.

இல்லையெனில் எமது பிள்ளைகளால் கேட்கப்படும் கீழ்வரும் கேள்விக்கு எம்மிடம் பதில் இருக்கப் போவதில்லை.

"""அறிவியலில் இவ்வளவு முன்னேற்றம் கண்ட தமிழர், எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து தாழ்வுற்றார்கள். அதற்கு என்ன காரணம் ?"""

🤔🤔🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்  மட்டுமல்ல இந்த உலகமே ஒரு கட்டத்தில் இப்படியான பழமை வாய்ந்த சிந்தனைகள் மூட நம்பிக்கைகள் பழக்கவழக்கங்களால் இன்று வரையிலும் ஆற்பட்டுதான் இருக்கிறது.
என்ன வெள்ளைக்காரன் சுரண்டுவதை சுரண்டி,  அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதை செய்து முத்திரை பதித்து தரமான விடயங்களாக காட்டிக்கொண்டான். நாங்கள் என்ன செய்தோம் எங்கள் கண்ணையே நொண்டி நொண்டி, எங்கள் பல்லையே குதித்தி , குத்தி ஆர்பாட்டம் செய்வோம்.
666 தீண்டத்தகாத ஒரு இலக்கம்...
கறுப்புப் பூனை குறுக்கே போகக்கூடாது...
கண்ணாடி உடையக்கூடாது.. 
வெள்ளிக்கிழமை 13 ஆகாது...
சிலுவையும், உள்ளியும் ஷைத்தானுக்கு அலர்ஜி... 
வீட்டுக்குள் குடை, உயிருக்கு சேதம்...
பலகையில் இரண்டுமுறை தட்டினால் சேமம் ...
இப்படி அவர்களும் ஆயிரத்தை வைத்திருக்கிறார்கள்...

நமது மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டுவது தவறல்ல ஆனால் அது மட்டுமே நம்மில் பரவி இருப்பதாக காட்டும் இந்த பண்பு தானே மூக்கை சுளிக்க வைக்கிறது.

உலகின் தாய் மொழி, மூத்த மொழி அதுவே எமக்கு தாய் மொழி 
சரியை , கிரியை யோகம் ஞானம் ... ஆத்திசூடி, பொய்யா மொழியாம் அந்த திருக்குறள் இதை தந்த இனத்தை சேர்ந்தவர்  நாங்கள் ... கொஞ்சம் தான் காலரை தூக்கிப்போட்டு பெருமை பேசலாமே.

 

9 hours ago, அகத்தான் said:

ஐரோப்பியர் விஞ்ஞான அறிவு பெற்றது, முஸ்லிம்கள் ஸ்பெயினைக் கைப்பற்றி ஆட்சி செய்தபிறகே. அராபியர் மூலமாகவே ஐரோப்பியர் எண்களையும் கணித, வானசாஸ்திர அறிவையும் பெருக்கிக் கொண்டனர். ரோமர், கிரேக்கர் மூலம் அரசியல், தத்துவ சாஸ்திரங்களை அறிந்து கொண்டனர்.

...

அகத்தான்,
நீங்கள் குறிப்பிட்ட தமிழரின் கண்டுபிடிப்புகள் அனைவரும் அறிந்ததுதான்.

எல்லோரையும்போல் நீங்களும் மூட நம்பிக்கையில் மூழ்குவதற்காக அறிவியலை இழுக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

வான சாஸ்திரத்தையும் சாத்திரத்தையும் ஒன்றாகக் குழப்பியுள்ளீர்கள். இன்று இந்தியாவில் சாத்திரிகளால் சூரிய சந்திர கிரகணங்கள் கணிக்கப்படுவது மூட நம்பிக்கைகளுக்காகவே. இவற்றைக் கணிப்பதற்காக அன்று உருவாக்கப்பட்ட சமன்பாடுகளை வைத்து இதற்குமேல் எதுவும் செய்ய முடியவில்லை. பாம்பு சந்திரனை விழுங்கும் நம்பிக்கையுடனேயே இவற்றை இன்றும் கணிக்கிறார்கள். 

அன்றைய அறிவியலின்படி சந்திரனையும் சூரியனையும் கிரகங்களாக்கி ஏழு கிரகங்களை மட்டுமே கண்டவர்கள் இன்று அதிலிருந்து மீழ முடியவில்லை.

அன்று மதத்திற்கு எதிரான அறிவியல் கருத்துக்களைக் கூறியவர்களைக் கொலை செய்த வத்திக்கான் இன்று அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.

அரேபியர் மூலமாக ஐரோப்பாவுக்குக் கணிதம் படிப்பித்தவர்கள் இப்போது எங்கே ? 

ஒன்று தவறு என்று தெரிந்தால் அதைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.

இதை விட்டு வெளியே வராமல் பழைய பெருமை பேசிக் குறுகிக் கொண்டே போக வேண்டுமா ? 

தமிழ் இனத்தைப் படிப்படியாக அழிப்பது இந்த மூட நம்பிக்கைதான். தமிழரின் கலாச்சாரம் பண்பாடு அழியாமல் இருக்க வேண்டுமானால் மூட நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று ஒத்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்து சரியானவற்றைக் காவிச் செல்லவேண்டும். பழங்காலத்தில் செய்யப்பட்ட நல்ல சடங்குகளைத் தொடர வேண்டும்.  

எல்லாம் முடிந்த பின்னர் பழைய பெருமை பேசி என்ன பயன் ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

தமிழர்கள்  மட்டுமல்ல இந்த உலகமே ஒரு கட்டத்தில் இப்படியான பழமை வாய்ந்த சிந்தனைகள் மூட நம்பிக்கைகள் பழக்கவழக்கங்களால் இன்று வரையிலும் ஆற்பட்டுதான் இருக்கிறது.
என்ன வெள்ளைக்காரன் சுரண்டுவதை சுரண்டி,  அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதை செய்து முத்திரை பதித்து தரமான விடயங்களாக காட்டிக்கொண்டான். நாங்கள் என்ன செய்தோம் எங்கள் கண்ணையே நொண்டி நொண்டி, எங்கள் பல்லையே குதித்தி , குத்தி ஆர்பாட்டம் செய்வோம்.
666 தீண்டத்தகாத ஒரு இலக்கம்...
கறுப்புப் பூனை குறுக்கே போகக்கூடாது...
கண்ணாடி உடையக்கூடாது.. 
வெள்ளிக்கிழமை 13 ஆகாது...
சிலுவையும், உள்ளியும் ஷைத்தானுக்கு அலர்ஜி... 
வீட்டுக்குள் குடை, உயிருக்கு சேதம்...
பலகையில் இரண்டுமுறை தட்டினால் சேமம் ...
இப்படி அவர்களும் ஆயிரத்தை வைத்திருக்கிறார்கள்..
.

நமது மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டுவது தவறல்ல ஆனால் அது மட்டுமே நம்மில் பரவி இருப்பதாக காட்டும் இந்த பண்பு தானே மூக்கை சுளிக்க வைக்கிறது.

உலகின் தாய் மொழி, மூத்த மொழி அதுவே எமக்கு தாய் மொழி 
சரியை , கிரியை யோகம் ஞானம் ... ஆத்திசூடி, பொய்யா மொழியாம் அந்த திருக்குறள் இதை தந்த இனத்தை சேர்ந்தவர்  நாங்கள் ... கொஞ்சம் தான் காலரை தூக்கிப்போட்டு பெருமை பேசலாமே.👍

 

இந்த மூட நம்பிக்கைகளை இப்ப யாரும் நம்புவதில்லை, ஆனா எல்லாதையும் மூட நம்பிக்கை என்றால்??? இப்ப அவன் யோகாவையும் எல்லா இடமும் பரப்ப வெளிக்கிட்டான் 

 

1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
===============
நாங்களும் மாறினோம்.
================
இன்று அதையே
==============
BARBECUE என்று BC,
KFC ,
MACDONALD இல் விக்கிறான்.
===============
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை அறிமுகப் படுத்தினான்.
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்
*SALT + CHARCOAL இருக்கா ?
*என்று கேட்கிறான்.
==============
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.
===============
உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
==============
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .
=============
4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.
=============
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
=============
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.
===============
5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.
==============
COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
==============
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.
==============
6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த
================
" முட்டாள் "
================
இனம் நாமாகத்தானிருப்போம்.
===============
7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
==============
8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
===============
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,
===============
ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,
===============
காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,
==============
வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,
===============
நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,
==============
திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,
==============
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
==============
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
=============
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.
===============
நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி
================
" நாகரிக கோமாளி "
================
ஆகி விட்டோம்.

படித்ததில் பிடித்ததை
பகிர்கிறேன் ...
___________________

https://sr-rs.facebook.com/gojaffna/posts/1633693873428648
🙏🙏🙏🙏🙏🙏

 

 

பழச்சோறு என்ன விலையில் விற்கின்றார்கள் Hotel இல்??? 😂   

நாம , Pizza, Bruger, KFC,...... 

  • தொடங்கியவர்
12 hours ago, அகத்தான் said:

 

 

அகத்தான், நீங்கள் எதுவும் புதுமையாக கூறிவிடவில்லை. வழமையாக சிலரால் பாடப்படும் பல்லவியை தான் கூறியுள்ளீர்கள்.

இங்கு நாங்கள் விவாதித்துக் கொண்டடிருக்கும் விடயம் தற்போதைய காலத்தில் தமிழரின் வாழ்வியலில் உள்ள மூடநம்பிக்கைகளை பற்றியும், அது எவ்வாறு நவீன சமூகவலைத்தளங்கள் மூலமாக கூட பார்ப்பனர்களாலும் அந்த சிந்தனை உள்ளவர்களாலும்  மேலும் மேலும் பரப்பப்படுறது என்பதைப்பற்றி தான். தமிழர் நாகரீகத்தின் தொன்மைகள் குறித்தோ உலகத்தின் வானியல் ஆய்வுகள் எப்போது நடைபெற்றது என்பது பற்றியோ அல்ல.

வானியல் ஆய்வுகள் உலகத்தில் மிகவும் பழமையானது.  உலகம் தோன்றிய காலத்தில் இருந்து மனிதசமுதாயத்தின் முக்கிய அக்கறைகளில் ஒன்றாக இந்த வானியல் ஆய்வு இருந்தது. காலப்போக்கில் மனித சமுதாயத்தில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட அதன் ஆய்வு முடிவுகளிலும் துல்லியத்திலும் மாறுபாடு ஏற்பட புதிய புதிய கோட்பாடுகள் காலத்திற்கு காலம் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. கொப்பர் நிக்கஸால் நிறுவப்பட்ட சூரிய மையக்கொள்கை கூட  கி. மு  3 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்ராட்டஸ் ராலமி என்ற வானியல் ஆய்வாளரால் (சரியாக நிறுவப்படாமல்)  கூறபட்ட கருத்து தான். ஆனால் நாம் இங்கு  விவாதிக்கும் விடயத்திற்கும் இதற்கும் அறவே தொடர்பு இல்லை. உலகம் முழுவததும் நடத்தபட்ட  வானியல் ஆய்வு பழைய வரலாறுகள் குறித்து ஆழமாக விவாதிப்பதானால் அதற்கான நிபுணத்துவம் இல்லாத நானோ நீங்களோ அதை செய்ய முடியாது என்பது எனது கருத்து.

அகத்தான், நீங்கள் தமிழர் அறிவியல் பற்றி கூறி தமிழர் மீது ஆரியரால் மூடப்பழக்கங்களை திணிக்கபட்டதாகவும் முதலில்  கூறிவிட்டு பின்னர் வானியலை வைத்து மூடநம்பிக்கைகளை உருவாக்கிய பார்பனர்களின்  நவகிரகங்கள் வழிபாட்டுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா? இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் நவகிரகங்கள், கிரகதோஷம் என்ற அறிவுக்கு ஒவ்வாத வழிபாடுகள் மூட நம்பிக்கைகளே. தமிழரின் தொன்மையான கீழடி, ஆதிச்சநல்லூ் போன்ற இடங்களில் இப்படியான Stupidness இருந்ததற்கான எந்த சான்றும் இல்லை. அப்படியே கண்டுபிடிக்கபட்டாலும் அது அந்த காலத்து அறிவியல் வளர்ச்சியின் பிரகாரம் அவர்களின் முடிவு.  அது இந்த மேலதிக அறிவியல் வளர்ச்சியடைந்த  காலத்துக்கு பொருந்தவே பொருந்தாது. அதை நாம் எடுத்து அது சரி என்று எடுத்து கொண்டாடவேண்டிய எந்த தேவையும் எமக்கு இல்லை.

நாங்கள் தமி்ழர்கள் வீண் பழம் பெருமை பேசுவதால் அதுவும் எமக்குள் மட்டும் இதைப் பேசி சுய இன்பம் அடைவதால் தமிழருக்கு  ஆகப்போவது ஒன்றும் இல்லை. வளர்ந்து வரும் புதிய அறிவியல் காலத்தின் நிஜத்தை ஏற்றுக்கொள்வதால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய்விடப்போவதில்லை. உலகமே ஏற்றுக்கொண்ட விடயங்கள் தான். உங்களை போல் பேசுவர்கள் எல்லோருமே எம் முன்னோர்கள் தான் உலகில் மிக சிறந்தவர்கள், உலகில் அத்தனை அறிவியலும் அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பது போல் கதை விடுவது. பின்னர் அப்படியான வல்லமை பெற்ற எமது முன்னோர்கள் எப்படி வந்த அந்நியருக்கெல்லாம் அடிமைப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கு சரியான பதிலை கொடுப்பதில்லை. எமது முன்னோர்கள் ரொம்ப நல்லவர்கள் அதனால் வந்தவர்களுக்கெல்லாம் வழிவிட்டு அடிமைப்பட்டார்கள் என்று வடிவேலு பாணியில் கூட ஒருவர் இதற்கு யாழ்களத்தில் பதிலளித்திருந்தார்.

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி தீத்திவிடும் பல பதிவுகள் ஏதோ நாங்கள் எல்லாவற்றையும் கண்டு பிடிக்க ஐரோப்பியன் வந்து திருடிச் சென்றது மாதிரி ஒரு தோற்றம் தருவது உண்மையே! 

யாரும் யாரிடமும் இருந்து எதையும் திருடவும் இல்லை அழிக்கவும் இல்லை! அந்தந்த காலத்து தேவைகளுக்கேற்ப சில நம்பிக்கைகளும் நடைமுறைகளும் உருவாகின. ஆனால், காலாகாலமாக இருந்த இந்த நடைமுறைகளை இடையிடையே வந்த மனிதர்கள் கேள்விக்குள்ளாக்கியதில், எது பயன் தருவது, எது நிரூபிக்கக் கூடியது என்ற தெளிவினால் அர்த்தமற்ற நடைமுறைகள் சில சமூகங்களால் கை விடப்பட்டன. இது தான் மனித சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியது. அர்த்தமற்ற நடைமுறைகளை இன்னும் முன்னேற்றகரமான விடயங்கள் என எங்கள் முதுகை நாங்களே  தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒட்டு மொத்த மனித வளர்ச்சி என்ற அளவீட்டில் இப்படி இருக்கும் சமூகங்கள் எங்கே நிற்கின்றன இன்று என்று பார்த்தால், இப்படி எங்கள் முதுகை நாமே சொறிந்து கொண்டிருப்பதன் விளைவு தெரியும்!    

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

நீங்கள் எதுவும் புதுமையாக கூறிவிடவில்லை. வழமையாக சிலரால் பாடப்படும் பல்லவியை தான் கூறியுள்ளீர்கள்.

இப்படியான பல்லவிகள் இப்போது இந்திய பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களினால் வலைதளங்களில் எழுதபடுவதை காணலாம். அர்த்தமற்ற கைவிடபடி வேண்டியவைகள புகழ்ந்து அறிவியல் பெயின்ற் அடித்து பாதுகாப்பதில் இலங்கையில்  உள்ளவர்களை விட முன்னேறிய மக்களோடு வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் பலர் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.