Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) .

seranb-1200x826.jpg

உலகப் புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) எனப்படும் புது வகை அணு துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் பிரபஞ்சம் உருவானதன் ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

‘இந்தப் பிரபஞ்சம் எதனால் உருவானது’ எனும் கேள்விக்கு விடை காணும் முயற்சியாக " கடவுள் துகள் "  எனப்படும் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் தான் செர்ன் (CERN). செர்ன் நிறுவனத்தின் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் 157 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. விஞ்ஞானிகள் இங்குள்ள, வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவியில் நேர் மின் தன்மைகொண்ட புரோட்டான் துகள்களை அதிவேகத்தில் மோதவைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்தத் துகள் மோதல் கருவி 2009 – 2013 வரையிலும் பிறகு 2015 – 2018 வரையிலும் செயல்பட்ட போது கிடைத்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்த போதுதான் ’டெட்ரா குவார்க்’ எனப்படும் புதிய துகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம், பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் எது?’ எனும் கேள்விக்கான பதிலைத் தேடிச் செல்வதில் விஞ்ஞானிகள் ஒரு படி முன்னேறியுள்ளனர். ன்களை மேலும் பகுத்தால் குவார்க் எனப்படும் நுண்ணிய துகள்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது.

இதுவரை நடந்த ஆய்வு அடிப்படையில், இரண்டு குவார்குகள் ஒன்று சேர்ந்து மெசான்வகை ஹெட்ரான்களும்; மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து பேர்யான் வகை ஹெட்ரான்கள் மட்டுமே இருப்பது உறுதிபடுத்தப்பட்டன. ஆனால், கணக்கீடு அடிப்படையில் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான்கள் துகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.

இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

https://www.vanakkamlondon.com/பிரபஞ்சம்-உருவான-ரகசியத்/

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுவது பொழுது போகலைன்னா நெருப்பு கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவது  எண்டு .

முதலில் றோட்டிலை ஒருத்தன் நிம்மதியாய் தும்ம முடியலை அணுகுண்டு விழுந்ததை  போல் சனம் கொரனோ  கொரனோ  என்று கும்பிட்டுக்கொண்டு ஓடுதுகள்   .அதுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிந்து என்ன செய்யப்போகிறார்கள் இந்த விஞ்ஞானிகள்....? புதிதாகப் பிரபஞ்சங்களை உருவாக்கப் போகிறார்களா...?? அப்போ அந்தப் பிரபஞ்சங்களுக்குக் கடவுள்கள் யார்...??? என்னையும் ஒரு பிரபஞ்சத்துக்கு கடவுளாக்கும்படி விண்ணப்பிக்கலாமா....???? 

மனிதரை மனிதர் தீண்டமுடியாது அவதிப்படும் நிலையில் அதற்கொரு தீர்வைத் தேடமுடியாத மூஞ்சூறுகள் விளக்குமாற்றைத் தேடுகின்றன.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

இதைத்தான் சொல்லுவது பொழுது போகலைன்னா நெருப்பு கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவது  எண்டு .

முதலில் றோட்டிலை ஒருத்தன் நிம்மதியாய் தும்ம முடியலை அணுகுண்டு விழுந்ததை  போல் சனம் கொரனோ  கொரனோ  என்று கும்பிட்டுக்கொண்டு ஓடுதுகள்   .அதுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை .

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ் எண்டு   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ்   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செய்யும் வேலை அது ஏற்கனவே கடவுளின் துகள் என்பது குழப்பத்தில்  உள்ள ஒன்றாக்கி  விட்ட பெருமை அவர்களையே சேரும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ் எண்டு   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

சிலருக்கு இப்ப இதுதான் வேலை எது கெடுத்தாலும் போலி / மூடநம்பிக்கை என்ற சுலோகலங்களுடன்  சாரத்தை மடித்துக்கட்டிக்கிட்டு திரிகினம்😎

 

51 minutes ago, பெருமாள் said:

அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செய்யும் வேலை அது ஏற்கனவே கடவுளின் துகள் என்பது குழப்பத்தில்  உள்ள ஒன்றாக்கி  விட்ட பெருமை அவர்களையே சேரும் .

நல்லது இப்படியாவது அவர்களை சிந்திக்க வைக்கின்றதே

இவ்வாறான ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்து  புதிய அறிவியல் கண்டு பிடிப்புக்களை  மேற்கொண்டு நிறுவினால் தானே அதை வைத்து   எதற்கும் வக்கற்ற மூடக்கூட்டம் பின்னர்  வந்து இதை எங்க முன்னோர் எப்பவோ கண்டு பிடித்தது தான் என்று போலி அறிவியல் பசப்பு கதைகளை கூறி எங்கள்  காலில் பூ சுற்ற முனைந்து அத்துடன் தங்களுக்குள்ளையே மெய்சிலிர்தது சுய இன்பம் காண முடியும்.

அதற்காகவாவது இயற்பியலாளர்கள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளட்டும். அது பற்றிய அறிவு அற்றவர்கள் ஒதுங்கி வடிவேலு, கவுண்டன்  நகைச்சுவையை ரசித்துக்கொண்டு  இருப்போம்.  

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புரட்சி,

நீங்கள் இணைத்த பதிவு பிபிசி தமிழில் இருந்து உருவப்பட்ட செய்தி.  ஒரு நன்றி அல்லது மூலம்   கூடக் கொடுக்காமல் தங்கள் ஆக்கங்கள் போல இப்படிப் பல தளங்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யாழிலும் இலவசமாக இந்த இப்படியான இணையங்களுக்கு விளம்பரம் கொடுக்கவேண்டுமா?

 

 

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புது வகை அணுத் துகள் கண்டுபிடித்த செர்ன் ஆய்வகம்

16 ஜூலை 2020
  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்

spacer.png

புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து 'டெட்ரா குவார்க்' என்னும் புது வகைத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது என்ற இயற்பியலின் அதிமுக்கியமான கேள்விக்கு விடை காணும் முயற்சியில் உத்வேகத்தோடு உழைக்கும் ஆர்வத்தை புதிய துகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்குத் தந்துள்ளது.

இந்த டெட்ரா குவார்க் என்றால் என்ன, இதன் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்பதற்கு இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.

அதில் முதல் காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் வாழும் இந்தப் பேரண்டம் எதனால் ஆனது என்ற கேள்வி பயணித்து வந்தப் பாதை மிகவும் முக்கியம். 

 

பேரண்டக் கட்டடத்தின் செங்கல் எது?

 

இந்த உலகம், இந்தப் பேரண்டம், எதனால் ஆனது என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தைத் துளைத்துக்கொண்டுள்ள கேள்வி. 

spacer.png

Getty Images

 

அணுத் துகள்களில் செய்யப்படும் ஆராய்ச்சி என்பது அந்த துகள்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்வதாக இருக்கிறது.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களால் ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள், நம்பினார்கள். இந்த ஐந்து பூதங்களை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல்கூட ஒன்று உண்டு. 

spacer.png

Getty Images

பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன. 

ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. 

பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.

ஹெட்ரான் என்னும் பெரிய துகள்களை மேலும் பிரித்தால்...

ஆனால், பயணம் அத்தோடு முடியவில்லை. அணுவுக்குள் இருக்கும் துகள்களிலும், அடிப்படைத் துகள்கள், கூட்டுத் துகள்கள் என்று இருவகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மிக மிகச் சிறியதான எதிர் மின் சுமையுடைய எலக்ட்ரான் போன்றவை பகுக்கமுடியாத துகள்களாக - ஆங்கிலத்தில் எலிமென்டரி பார்ட்டிகிள் - இருக்கின்றன. ஆனால், நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் தம்மினும் நுண்ணிய வேறு பொருள்களால் ஆனவை என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அணுவுக்குள் இருக்கிற துகள்களும் அடிப்படைப் பொருள்கள் அல்ல. அவற்றிலும் வேறொன்றால் செய்யப்பட்டவை உண்டு என்று ஆனது. அணுவுக்குள் இருக்கும் துகள்களில் நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன. இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால் அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று தெரியவந்தது. 

குவார்க்கில் ஆண் பெண் - ஒரு சின்ன கற்பனை

அதாவது நாம் கண்ணால் காணும் பொருள்களைப் பகுத்தால் தனிம மூலக்கூறுகள் வரும், அவற்றைப் பகுத்தால் அணுக்கள். அணுக்களைப் பகுத்தால், எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்கள், அவற்றில் பெரிய துகள்களான ஹெட்ரான் வகைத் துகள்களைப் பகுத்தால், குவார்க்குகள். இதுதான் புரிதல்.

இந்த குவார்க்குகளில் அப் - டவுன், சார்ம்-ஸ்ட்ரேஞ்ச், டாப்-பாட்டம் ஆகிய மூன்று ஜோடிகளாக, ஆறு வகை உண்டு. தவிர, இந்த ஆறிலும் குவார்க் - எதிர் குவார்க் என்ற முரண்பட்ட மின்சுமை உடைய வகையும் உண்டு. அதாவது ஆறு இனத்திலும் ஆண்-பெண் இருப்பது மாதிரி. 

இது வரையில், இரண்டு குவார்க்குகள் சேர்ந்து உருவான மெசான் வகை ஹெட்ரான்களும், மூன்று குவார்க்குகள் சேர்ந்து உருவான பேர்யான் வகை ஹெட்ரான்களும் மட்டுமே பொதுவாக காணப்பட்டன. ஆனால், கணித கணக்கீடுகள் மூலம் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கணித்தார்கள். 

அப்படி நான்கு, ஐந்து குவார்க் கொண்ட கற்பனையில் மட்டுமே கண்ட அரியவகை ஹெட்ரான்களை எக்ஸோடிக் ஹெட்ரான் என்று அழைத்தார்கள். 

கற்பனையாகவே இருந்து வந்த இந்த நான்கு, ஐந்து குவார்க் கொண்ட அரிய வகை ஹெட்ரான்களை கடந்த சில ஆண்டுகளில் சில முறை ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள். 

ஆனால், அப்படிக் கண்டுபிடித்தவற்றில் எவையும், இரண்டுக்கும் மேற்பட்ட ஒரே வகை குவார்க்குகளைக் கொண்டவையோ, நான்குமே வலுவானவையோ இல்லை.

 

நான்கும் பெரிய குவார்க் - புதிய கண்டுபிடிப்பு

 

இந்நிலையில், செர்ன் நிறுவனத்தின் எல்.எச்.சி.பி. (LHCb) எனப்படும் ஆய்வுத் திட்டம் கடந்த மாதம் இரண்டு சார்ம் வகை குவார்க்குகளையும், இரண்டு சார்ம் வகை எதிர் குவார்க்குகளையும் கொண்ட ஒரு அரிய ஹெட்ரான் துகளை கண்டுபிடித்தது. இத்தகவலை செர்ன் தனது இணைய தளத்திலேயே அறிவித்துள்ளது. முன்னெப்போதும் நான்கும் ஒரே வகையை சேர்ந்த, வலுத்த வகை குவார்க்குகளைக் கொண்ட துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செர்ன் செய்தித் தொடர்பாளர் கியோவானி பசலேவா தெரிவித்தார். 

செர்ன் நிறுவனத்துக்கு நிலத்துக்கடியில் 27 கி.மீ. நீளமுள்ள வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவி இருப்பது பிரபலம். கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசானைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி இங்குதான் நடக்கிறது. லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும் இந்த துகள் மோதல் கருவி 2009 முதல் 2013 வரையிலும், பிறகு 2015 முதல் 2018 வரையிலும செயல்பட்டபோது கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இப்படிப் புதிய வகை டெட்ராகுவார்க் என்னும் துகள் இருப்பதற்கான தடயம் கண்டறியப்பட்டது என்று இந்த மாதம் முதல் தேதி அறிவித்தது செர்ன். 

spacer.png

Getty Images

புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்' என்பதை ஆராய்வதற்கான 'ஆராய்ச்சிக்கூடமாக' இந்த புதிய, அரிய வகை ஹெட்ரான்கள் இருக்கும் என்றும் செர்ன் அறிவித்துள்ளது. 

 

புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி - அமோல் திகே

 

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் பற்றி மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் அமோல் திகே-விடம் பிபிசி தமிழின் சார்பில் கேட்டோம். 

'குவான்டம் குரோமோடைனமிக்ஸ்' எனப்படும் முழுமையான ஸ்ட்ராங் இன்டராக்ஷன் கோட்பாட்டின் கீழ் இப்படி, நான்கு, ஐந்து குவார்க்குகளைக் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்கலாம் என்று முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கணிப்பை மெய்யாக்கியது மட்டுமல்ல, அந்தக் கோட்பாடும் சரி என்று நிரூபித்துள்ளது. அந்த வகையில் இது முக்கியமானது. நான்கும் பெரிய குவார்க்குகள் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படி ஆனாலும், புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி இது என்றார் அவர்.

இரண்டு குவார்க் உள்ள ஹெட்ரான்களை மெசான் என்றும், மூன்று குவார்க் உள்ளவற்றை பேர்யான் என்றும் அழைக்கிறார்கள். இப்போது, நான்கு, ஐந்து உள்ளவற்றை கண்டுபிடித்தால், அதற்கும் புதிய வகை உருவாகுமா? என்று அவரிடம் கேட்டோம். இப்போதைக்கு புதிதாக கண்டுபிடிக்கும் இத்தகைய நான்கு குவார்க் கொண்ட டெட்ராகுவார்க்குகள், 5 குவார்க் கொண்ட பென்டா குவார்க்குகளுக்கு x, y, z என்று பெயர் வைத்துக்கொண்டு போவார்கள், நிறைய வந்த பிறகு ஒருவேளை புதிய வகைகளுக்குப் பெயர் சூட்டலாம் என்றார் திகே. 

இது ஒருவேளை உண்மையிலேயே நான்கு குவார்க்குகள் வலுவாக பிணைந்து உருவான டெட்ரா குவார்க் ஆகவும் இருக்கலாம், அல்லது இரண்டு மெசான்கள் வலுவற்ற முறையில் இணைந்து இப்படி ஒரு தோற்றம் தரலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டோம். ஆமாம் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது. இன்னும் கூர்ந்து கவனித்து இதற்கான சாத்தியக்கூற்றை ஆராயும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் திகே. 

கோட்பாட்டைத் தெளிவுபடுத்த உதவும் - அர்ச்சனா ஷர்மா

செர்ன் ஆய்வகத்தில் பணியாற்று மூத்த துகள் இயற்பியலாளரான அர்ச்சனா ஷர்மாவுடன் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம். எக்ஸோடிக் ஹெட்ரான் எனப்படும் அரிய வகை ஹெட்ரான்கள் தொடர்பான மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் நடக்கின்றன. இது போன்ற அரிய வகை ஹெட்ரான்களை பலமுறை பார்க்க நேர்வது இந்த மாதிரிகளை தெளிவுபடுத்தி உரைக்க உதவியாக இருக்கும் என்கிறார். புதிதாக கண்டறியப்பட்ட துகளில் நான்கும் பெரிய வகை குவார்க்காக இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் அர்ச்சனா. 

பேரண்டம் எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காண்பதற்கான பயணத்தில், இந்த கண்டுபிடிப்பு அறிவியலை ஒரு படி அருகே நகர்த்திச் சென்றதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு, ஆம் என்கிறார் அமோல் திகே. 

 

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது?

spacer.png

Getty Images

 

பெருவெடிப்புக்குப் பிறகு எப்படி இந்தப் பேரண்டம் விரிவடைந்தது என்பது குறித்த கோட்பாட்டை விளக்கும் வரைபடம்.

குவார்க் துகள் வகைகளில், குவார்க் - எதிர் குவார்க் (ஆங்கிலத்தில் ஆன்டி குவார்க்) என்று முரண் வகை இருக்கிறது என்று மேலே பார்த்தோமில்லையா. அதைப் போல அணுத் துகள் அனைத்துக்கும் கூட எதிர் துகள்கள் உண்டு. அணுவிலும் எதிர் அணு உண்டு. அணுக்களால் ஆன பொருளிலும் எதிர்ப் பொருள்கள் இருக்கவேண்டும் என்று 20ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டைராக் கணித்தார்.

ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறிவிடும். 

ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பால் இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது. 

ஆனால் பல லட்சம் கோடி விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், அண்டசராசரம் அத்தனையும் வெறும் பொருள்களால் ஆனவை மட்டுமே. எதிர்ப் பொருள் எங்குமே இல்லையே ஏன்?

அல்லது சம எண்ணிக்கையில் எதிர்ப் பொருள், எதிரணு இருந்து பொருளை, பொருளணுவை அழித்திருந்தால், இந்தப் பேரண்டத்தில் எந்தப் பொருளுமே, விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், சூரியனும், பூமியும் எதுவுமே இருந்திருக்கக் கூடாது. ஆனால், இவையெல்லாம் இருக்கிறன்றனவே ஏன்? இந்தக் கேள்விதான் இன்றைய உலக இயற்பியலின் அதிமுக்கியமான கேள்வி. விண்வெளி அறிவியல் முதல், துகள் அறிவியல் வரை எல்லாவற்றையும் குடையும் அதிமுக்கியப் பிரச்சனையாக இதுதான் இருக்கிறது. 

பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை. 

தற்போது நான்கு 'சார்ம்' வகை குவார்க்குகள் கொண்ட முக்கியமான இந்த டெட்ராகுவார்க் கண்டுபிடிப்பை நிகழ்த்திய LHCb திட்டத்தின் முழுப்பெயர் Large Hadron Collider beauty என்பதாகும். இந்த ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டதன் நோக்கமே பெருவெடிப்புக்குப் பிறகு, எதிர்ப்பொருள்களால் அழிக்கப்படாமல் பொருள்கள் தப்பிப் பிழைத்து நமது இந்தப் பேரண்டத்தை உருவாக்கியது எப்படி என்பதை ஆராய்வதுதான்.

தமது அடிப்படை நோக்கமான இந்த ஆய்வுக்கு இந்தக் கண்டுபிடிப்பு எல்.ஹெச்.சி. பியூட்டிக்கு எப்படி உதவி செய்யப்போகிறது என்பதுதான் இப்போது ஆர்வமூட்டும் கேள்வி.

 

 

https://www.bbc.com/tamil/science-53410739

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தோழர் புரட்சி,

நீங்கள் இணைத்த பதிவு பிபிசி தமிழில் இருந்து உருவப்பட்ட செய்தி.  ஒரு நன்றி அல்லது மூலம்   கூடக் கொடுக்காமல் தங்கள் ஆக்கங்கள் போல இப்படிப் பல தளங்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யாழிலும் இலவசமாக இந்த இப்படியான இணையங்களுக்கு விளம்பரம் கொடுக்கவேண்டுமா

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புது வகை அணுத் துகள் கண்டுபிடித்த செர்ன் ஆய்வகம்

16 ஜூலை 2020
  • அ.தா.பாலசுப்ரம

 

 

 

ஓம் கோட் செய்யாததால் இப்போதுதான் கவனித்தன் தோழர் .. இது மொத்தமாக ctrl +a , ctrl + c , ctrl + v போல தெரிய வில்லை.. உள்ளடக்கத்தில் மாறுபாடு தெரிகிறது..👍

அதிலும் பார்க்க..,

வணக்கம்லண்டன் ..

<time class="entry-date published updated" datetime="2020-07-16T17:09:28+00:00">July 16, 2020</time>

பிபிசிதமிழ்..

பேரண்டம்+உருவானதன்+ரகசியம்+என்ன?+புது+வகை+அணுத்+துகள்+கண்டுபிடித்த+செர்ன்+ஆய்வகம்+-+BBC+News+தமிழ்]&amp;x11=[2020-07-16T05:51:04.000Z]&amp;x12=[2020-07-16T10:29:52.000Z]&amp;x13=[Science~Physics~Nuclear+power]&amp;

இரு தள பதிவேற்ற திகதி மற்றும் நேரத்தை ஒப்பீடு செய்கையில்  பெரிய வேறுபாடு இல்லை.. மற்ற ஆக்கங்கள் குறித்து தெரியாது.. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த ஆக்கங்களை இருவருமே வேறு எங்கோ இருந்து சுட்டு இருக்கிறார்கள் அல்லது தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல...👌

நன்றி..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இரு தள பதிவேற்ற திகதி மற்றும் நேரத்தை ஒப்பீடு செய்கையில்  பெரிய வேறுபாடு இல்லை.. மற்ற ஆக்கங்கள் குறித்து தெரியாது.. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த ஆக்கங்களை இருவருமே வேறு எங்கோ இருந்து சுட்டு இருக்கிறார்கள் அல்லது தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல...👌

தோழர், 

பிபிசி சுட்டமாதிரி தெரியவில்லை.  பிபிசி தமிழ் நிருபர் இந்தியாவில் சிலருடன் உரையாடிய தகவல் கட்டுரையில் உள்ளது. பிபிசியின் கட்டுரையை அப்படியே வெட்டி ஒட்டினால் பிபிசி ஆக்கம் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும் என்று வணக்கம் லண்டன்காரர்கள் முக்கியமான பகுதியை மாத்திரம் போட்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விவசாயி விக் said:

எமது சாதுக்கள் சித்தர்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்து எல்லாவற்றையும் கண்டார்கள்.   கடவுள் இல்லை என்று விட்டு கடவுள் துகள் என்று பேரையும் வைத்து நடராசாரையும் வாசலிலே வைத்திருக்கிறார்கள்.  

இதுதான் உலகம் 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா , கொரோனா எண்டு பொத்திக் கொண்டிருந்து விட்டு எழும்பி வந்து பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரன் எல்லையைக் கொஞ்சம் தள்ளி அடைச்சிருப்பான்.  அதை தவிர்க்க முயல்பவர்களின் முயற்சியே தவிர கொள்ளிக்கட்டை மாதிரி தெரியவில்லை .

எதை செய்தாலும் ,ஏதாவது இசகுபிசகாக சொல்லுவதே வாடிக்கையாக போய் விட்டது . பின் நிலைமை கை மீறியவுடனும் “ஆத்தர பீத்தர”  என்று ‘மல்லாத்தும்’  போது கத்த வேண்டியது….

Edited by சாமானியன்
spelling

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது முதலே தெரிந்தபடியால் ஒரு தகவலுக்காக மாத்திரம் இங்கே பதிகிறேன்: Leon Lederman என்ற விஞ்ஞானி 90களில் தனது புத்தகத்தில் இந்த ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) துகளுக்கு ஆரம்பத்தில் வைத்த செல்ல பெயர் "God Damn Particle". இந்த துகளை இப்பிடி, இப்பிடி இருக்க வேண்டும் என்று முதலே வரையறை செய்துவிட்டார்கள், ஆனால் இதை தேடுவதில் அல்லது உருவாக்குவதில் உள்ள கஷ்டத்தை கருத்தில் கொண்டு நகைச்சுவையாக அவர் இவ்வாறு "God Damn Particle" என்று பெயர் வைத்தார், இந்த புத்தகத்தை வெளியிட முன்வந்த publisher இந்த பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த பெயர் வாசிப்பவர்களுக்கு நன்றாக இருக்காது என்பதால், இதை "God Particle - கடவுளின் துகள்" என்று மங்களகரமாக மாற்றினார்கள். மற்ற துகள்கள் போன்று இதுவும் ஒரு அடிப்படை துகள், வேறு விசேசம் ஒன்றும் கிடையாது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் பலர் கடவுளின் துகள் (God Particle) என்ற பெயரையும்  ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சொல்லியது போல் பின்னாளில் இந்த துகள் தேவை அற்ற முறையில் கடவுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது  

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டு ஆரம்பத்தில் சேர்ன் (CERN) என்ற இடத்தில் (ஜெனிவாவுக்குள் சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை அண்டி.. இருக்கும் ஓர் இடத்தின் பெயர் தான் CERN.) உள்ள large Hadron collider இருக்கும் ஆய்வகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்த ஆய்வின் தொடக்கம்.. தற்போதைய நிலை வரை விளக்கி இருந்தார்கள். எங்குமே தாங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை கூறைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லவில்லை. சொல்லப்பட்டிருக்கும் விடயம்.. அணுவை..உடைக்க உடைக்க புதிசு புதிசா வந்து கொண்டிருக்கிறதே தவிர.. முடிவாக ஒன்றையும் சொல்ல முடியவில்லை என்பதே. அங்கும் முடிவிலி தான் கதை. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

எங்குமே தாங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை கூறைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லவில்லை

உண்மை. மேலே உள்ள செய்தியிலும் அடிப்படைத் துகளை கண்டுபிடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் என்றுதான் உள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

உண்மை. மேலே உள்ள செய்தியிலும் அடிப்படைத் துகளை கண்டுபிடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் என்றுதான் உள்ளது.

ஒரு படி தானே. போக இன்னும் எத்தனை படி இருக்கு என்றே யாருக்கும் தெரியாத நிலையில்.. அது ஒரு படியோ.. அரைப்படியோ.. கால் படியோ.. யாருக்குத் தெரியும்...!! 😃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஒரு படி தானே. போக இன்னும் எத்தனை படி இருக்கு என்றே யாருக்கும் தெரியாத நிலையில்.. அது ஒரு படியோ.. அரைப்படியோ.. கால் படியோ.. யாருக்குத் தெரியும்...!! 😃

பல பில்லியன்கள் செலவழித்து படிப்படியாக நடந்து கண்டுபிடிப்பவற்றை எல்லாம் வெறும் “பாங்க்” ஐ உருட்டி வாயில் போட்டு சித்தர்கள் அப்போதே ஞானக்கண்ணால் பார்த்துச் சொல்லிவிட்டார்கள். 

இந்தப் பூமியில் இருக்கும் மனிதன் பூமி அழியமுதலே அருகிக் காணாமல் போவான். அப்படி இருக்க ஏன் இப்படி பணத்தை வாரி இறைத்து இப்படி ஆராய்ச்சி செய்கின்றார்கள் என்பதும் நியாயமான கேள்விதான்!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் ஒரு திரியில் இது பற்றி நான் குறிப்பிட்டதாக ஞாபகம். CERN என்பதின் உண்மையான விரிவாக்கம் பிரென்ச் மொழியில் Conseil européen pour la recherche nucléaire என்பதாகும். அதற்கு ஈடாக ஆங்கிலத்தில் சொல்வதாயின் European Organization for Nuclear Reseach. பொறுப்பான நாடுகள் பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், யூகோசுலோவியா, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், சுவிற்சலாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

முன்பும் ஒரு திரியில் இது பற்றி நான் குறிப்பிட்டதாக ஞாபகம். CERN என்பதின் உண்மையான விரிவாக்கம் பிரென்ச் மொழியில் Conseil européen pour la recherche nucléaire என்பதாகும். அதற்கு ஈடாக ஆங்கிலத்தில் சொல்வதாயின் European Organization for Nuclear Reseach. பொறுப்பான நாடுகள் பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், யூகோசுலோவியா, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், சுவிற்சலாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி.

இன்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் உள்ள பிரதேசம்... சுற்றயல் எல்லாமே.. CERN என்று தான் அழைக்கப்படுகிறது. 

ஊரில் அறிவியல் நகர் என்ற ஒன்று கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டது போன்று. 

  • 4 weeks later...

இந்த யுகம் சமன்பாடுகளுக்கானது. எனக்கு தெரிந்த வகையில்இ பௌதிகவியலில் இரண்டே இரண்டு முறைதான் எமது புரிதல்கள் இருவேறு தளங்களுக்கு உந்தித்தள்ளப்பட்டன. 

முதலாவதாக சேர் ஐசாக் நியூட்டன் தன் இயக்க விதிகளை தந்தபோது
இரண்டாவது ஆல்பேட் ஐன்ஸ்டைன் பொது சார்பியல் கொள்கைகளை வெளியிட்டபோது

இரண்டுக்கும் கிட்டத்தட்ட 200 வருடங்கள் இடைவெளி. இந்த காலவெளியில் தரப்பட்ட கொள்கைகளை வைத்து சமன்பாடுகள்மூலம் இயந்திரங்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்வது வியாபாரமாக்குவதாக உலகம் அசைந்து வந்திருக்கிறது. இதுவும் தொடரும். வியாபார உத்திகள் மட்டும் மாறும்.

இவை அனைத்தையும் கடந்து ஒவ்வொருகணமும் இயங்கியபடி ஏதோவொன்று உயிர்ப்புடன் இருக்கிறது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் அதை அறிய முனைகின்றன.

சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக
புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று
நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே.
விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eelathirumagan said:

சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக
புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று
நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே.
விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.

ஈழத்திருமகனை காண்பதில் மகிழ்ச்சி.

மனிதன் cyborg ஆக மாறினாலும் தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஈழத்திருமகனை காண்பதில் மகிழ்ச்சி.

மனிதன் cyborg ஆக மாறினாலும் தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்😀

யார்கண்டது  cyborg கிழும்  மேம்பட்ட தலைமுறை  குடுவையொன்றினுள் நமது எண்ணம்களும் நினைவுகளும் அடைபட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் இருக்கலாம் அப்போதும் யாழை மறக்காது நினைவு மீட்டல்களுக்கு குடுவையான பாதி சிப்கள்  கொல்லுப்படலாம் 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.