Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.

இவரும் அங்கிருந்து  தான்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ அண்ணன் கூட்டமைப்பு மீட்டு தரும் என்று நினைக்கிறாறோ என்னவோ தெரியல😜🤠

கிழக்கை அல்ல வடக்கை கூட மீட்க முடியாது என்று அண்ணனுக்கு விளங்க நாள் எடுக்கும் காரணம் நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை அரசின் நிகழ்ச்சி நிரல் வேறு வடக்கில் ஓர் ராணுவ கெப்டன் தேர்தலில் நிற்கிரார் அவருக்கு வடக்கு மக்கள் பிரியாவிடை எப்படி கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை கர்ணாவோ அரசோ மீட்டு தமிழர்களிடம் கொடுக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை மக்கள் பிரச்சினைய கதைக்க ஒருத்தர் வேண்டும் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது 

ரதி அண்ணன் இப்பவும் வடகிழக்கு தமிழர் கைகளில்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கிறார் ஊர்ல நிலவரம் என்ன நடக்கிறது ஒரு வியாபாரத்தை கூட எப்படி தடுக்கிறார்கள் என்று அண்ணனுக்கு தெரியாது குறிப்பா தமிழர் ஒரு கிலோ மரக்கறி 100 ரூபாவுக்கு விற்றால் அதை உடைக்க 50  ருபாய்க்கு விற்கிரார்கள் வியாபார தந்திரமும் நஸ்டம் ஏற்படுத்தி அவர்கள் காலில் வீழ்ந்து கிடக்க வேண்டுமெனவும் இதையெல்லாம் சொல்ல நேரம் எடுக்கும்  விளங்கவும் மாட்டாது 

பழைய புராணத்தை அந்த இடத்திலே நிற்பதை விட புதியதை பயன்படுத்தி செல்ல வேண்டும் இல்லையென்றால் இன்னும் தெருவில்தான் நிற்க வேண்டும் வடகிழக்கு மக்கள் கிழக்கு வீழ்ந்துவிட்டது வடக்கு வெகுதொலைவில் இல்லை 

கிழக்கு மக்களுக்கு புடுங்கிற வரைக்கும் லாபமே காளிகோவிலை உடைத்து நொருக்கி கடை கட்டுகிறான் , தனக்கு சாதமாக்க வழக்கில் நீதிபதியை மாற்றுகிறான் இதையெல்லாம் தெரிந்தும் கூத்தமைப்பு முதலைமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது இதை பார்ர்த்து கிழக்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் கூத்தமைப்பு கொடுக்கும் அடி  அவர்கள்  உணரவேண்டும் ஆனால் உணர வாய்ப்பில்லை அவர்களுக்கு வடக்கு மட்டுமே வேண்டும் 

நாங்கள் இப்ப எறியிறவன் கையில் பொல்லை கொடுக்கிறோம் கிடைத்தாலும் நன்மை கிடைக்காவிட்டால் பழகிப்போன ஒன்று 

மட்டக்களப்பில் பிள்ளையான் அம்பாறையில் கர்ணா அம்மான் வரலாம் வயது வந்தவர்களை விட பல இளையவர்கள் கர்ணாவை விரும்புகிறார்கள் பழையதை மறந்து 

எப்பா கல்முனையில் பாண்டிருப்பில் மக்கள் வெள்ளம் பழைய கோட்டை ஆச்சே பாண்டிருப்பு கோமாரு பொத்துவில் அக்கறைப்பற்று கொலனி , பொத்துவில் தம்பிலுப்ல் எல்லாம் சனக்கூட்டம் கூட்ட்மைப்பு அடங்கி விட்டது மக்கள் யார் பக்கம் என தெரிந்து கொண்டு 

தாயகத்தில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்பேன் யுத்தம் முடிந்த பிறகும் அதனால்தான் பாரிய இடைவெளி நிலவுகிறது இது இன்னும் விரிசல்தான் அடையும் 

இதுவரைக்கும் என்ன கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்😬

உடனேயே எனக்கு  ஒரு அரசியல்  முத்திரை???

எந்தக்:கட்சிக்கும் வாக்கு  கேட்கல  ராசா

அந்த  தகுதியும்  எனக்கில்லை

ஆனால்  உண்மையை சொல்லணும்

பேசணும்

வாழப்பழகிக்கொள்ளப்போகின்றோம் என்று  சொல்லுங்கள்

அதை  சுயநலம்  எனச்சொல்லமாட்டேன்

ஆனால் தமிழரின்  நிலத்தை  காக்கப்போகின்றோம் என்று  சொல்லாதீர்கள்

அது  உங்களால் முடியாது எனச்சொல்ல  ஒவ்வொரு  தமிழனுக்கும்  உரிமையுண்டு

  • Replies 138
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா அமைச்சராக, மகிந்தவின் கட்சியின் உபதலைவராக இருந்து கிழக்குக்கு சொல்லுமளவில் எதுவும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. இப்போ மட்டும் ஒரு  பாரளுமன்ற உறுப்பினராக எதனை பெரிதாக செய்வார் என்று அம்பாறை மக்கள் நம்புகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஓம்....அந்த பெரிய இடை வெளி என்னவெண்டால்

காசு கொடுத்துவிட்டு நீங்கள் இங்கே சுகமாக இருந்தபடி உங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைபடுவது நியாயமற்றது.
காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிடுவதற்கு காசு தரமாட்டேன் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

கருணா யாருக்காக திகாமடுல்லையில் தேர்தலில் நிற்கிறான் என்கிற தெளிவிருந்தாலே போதும், நடப்பதை அறிவதற்கு. ஆனால், சிலருக்குத் தெரியாது, யாழ்ப்பாணத்தானிற்குச்  சகுனம் பிழக்க வேண்டும் என்பதற்காக தமது தலையையும் இழக்கத் தயார் சிலர்.

உங்கள் தெரிவு, உங்கள் முடிவு, அனுபவிக்கப்போவதும் நீங்கள். ஏதோ செய்யுங்கள். 

பழதை மறந்துவிட்டார்களாம். நீங்கள் அப்படி இலகுவாக மறந்துவிட்டு துரோகிகளின் பின்னாலும், எதிரியின் பின்னாலும் செல்வதற்கு நடத்தப்பட்டது ஒன்றும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினையில்லை. அது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவிகளினது உயிரும், எமது உயிரிலும் மேலான தாயக விடுதலைப் போராட்டத்தினதும் அழிப்பும், எமக்கு இருந்த ஒரே காவல் அரணின் நிரந்தரமான முடிவும்தான்.

சலுகைகளுக்காகவும், பிரதேசவாதத்திற்காகவும் இனத்தைக் காட்டிக்கொடுத்துச் சோரம்போகும் அடிவருடிகளுக்கு இது புரியப்போவதில்லை.  

வாக்களிக்க போவது மக்கள் அதில் நானும் ஒருவன் அம்மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் ரகுநாதன் 

நடந்தவற்றை மறக்க இயலாது மறுக்கவும் ஏலாது விட்ட இடத்தில் மீண்டும் நிற்கவும் முடியாது காலம் கடக்கிறது எம்மையும் இருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பும் 

சிலவற்றை நான் விரும்புவதில்லை ஆனால் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ் நிலையில் 

5 hours ago, குமாரசாமி said:

ஓம்....அந்த பெரிய இடை வெளி என்னவெண்டால் நாங்கள் கோப்பை/ கக்கூஸ் கழுவி உழைச்ச காசிலை அவையள் ஜாலியாய் மோட்டச்சைக்கிள் அது இது எண்டு காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம்.
அவையின்ர நக்கல் சொல்லி வேலையில்லை.

வெளிநாட்டில் யார் யார் என்னென்ன வேலைகள் செய்கிரார்கள் என்று தெரியாது அதே தொழிலை தமிழர்கள் தமிழ் பெண்கள் சில இடங்களில் செய்கிறார்கள் அதற்க்காக அவர்களை குற்றம் சொல்ல முடியாது. இப்படியானவர்களை சமூகம் அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை . அவர்களுக்கு உங்களைப்போல் சொந்தங்கள் கிடையாது வெளிநாட்டில்  பல ஆஸ்பத்திரிகள், பணம் படைத்தவர்கள் வீட்டில் நம்ம  சனம் வேலை செய்கிறது நீங்கள் சொன்ன அனைத்து வேலைகளும்.

எனக்கும் பல சொந்தங்கள் இருக்கிறார்கள் வெளிநாட்டில் இத்தவரைக்கும் ஒருவரிடமும் ஒரு ரூபாய் காசு வாங்கியது கிடையாது சனி , ஞாயிறு கிழமைகளில் வேற வேலைக்கும் போவேன்  வேலைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் உழைக்க பஞ்சப்பட்டவர்களுக்கும் காசை அனுப்பினால் குத்தித்தான் பேசுவார்கள் உதவி தேவையானவனுக்கு உதவினால் அதன் பெறுமதி தெரியும் முடிந்தால் உதவி தேவையானவர்களுக்கு உதவி செய்யப்பாருங்கள் 

5 hours ago, Kadancha said:

கதைப்பதற்கு, கருணாவை, பிள்ளையானை  விட  மாற்று அணி தெரிவு நல்லது. 

எவர் என்றாலும் பலன் இல்லை முடிவெடுத்து விட்டதால். 

கோத்த, மகிந்தவின் திட்டம் பொருளாதார அபிவிருத்தி என்பதால், கருணா, பிள்ளையான்  வந்தால் கதைக்க கூட முடியாமல் போகும்.

எல்லோருக்கும் மக்களால் சந்தர்ப்பம் வழங்கப்படும் ஆனால்  அதைப்பயன்படுத்துவது அவர்களை பொறுத்தது அடுத்த தடவை இல்லாமல் போகலாம் அல்லவா

4 hours ago, Kapithan said:

ஆகக் குறைந்தது,  நாங்கள் எல்லோரும் ஒன்றாக, தமிழராக இருந்தோம். (எனது கேள்வியின் அர்த்தம் புரியாத ஆளல்ல நீங்கள். இருந்தும் உங்களால் முன்வைக்கப்பட் வெற்றுக் கேள்விக்கான பதில் மட்டுமே இது) ☹️

இருந்தோம் இருக்கிறோம் ஆனால் வடக்கு தலைமைகளிடம் கிழக்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் மீது துளியளவும் கரிசனை இல்லையென்பது வெளிப்படை தேர்தலுக்கு மட்டும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது அந்த நிகழ்வு தான் சுமந்திரனை ஓட ஓட விரட்டியது கல்முனையில்  

2 hours ago, விசுகு said:

உடனேயே எனக்கு  ஒரு அரசியல்  முத்திரை???

எந்தக்:கட்சிக்கும் வாக்கு  கேட்கல  ராசா

அந்த  தகுதியும்  எனக்கில்லை

ஆனால்  உண்மையை சொல்லணும்

பேசணும்

வாழப்பழகிக்கொள்ளப்போகின்றோம் என்று  சொல்லுங்கள்

அதை  சுயநலம்  எனச்சொல்லமாட்டேன்

ஆனால் தமிழரின்  நிலத்தை  காக்கப்போகின்றோம் என்று  சொல்லாதீர்கள்

அது  உங்களால் முடியாது எனச்சொல்ல  ஒவ்வொரு  தமிழனுக்கும்  உரிமையுண்டு

அண்ண இப்படியான பல வீடியோக்கள் உலாவுகின்றன , தயா மோகன் என்பவரும் உலாவ விட்டிருக்கார் 

தமிழரின் நிலத்தை யாராலும் காக்க முடியாது என்றுதான் நானும் சொல்கிறேன் எந்த அரசியல் வாதியாலும் காப்பாற்ற முடியாது நாங்கள் வாழப்பழகி கொண்டோம் பழகி கொள்கிறோம் எல்லாம் சுய்நலவாதிகள் அரசியல் வாதிகள் 

மக்கள் மட்டும் முட்டாள்கள் ஆட்களை தெரிந்து பாராளுமன்றம் அனுப்பிவிட்டு புலம்பி திரிவோம் சிங்களவர்களிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும் பெற்றுக்கொள்ளமுடியும் சொல்லுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கருணா அமைச்சராக, மகிந்தவின் கட்சியின் உபதலைவராக இருந்து கிழக்குக்கு சொல்லுமளவில் எதுவும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. இப்போ மட்டும் ஒரு  பாரளுமன்ற உறுப்பினராக எதனை பெரிதாக செய்வார் என்று அம்பாறை மக்கள் நம்புகிறார்கள்?

மட்டக்களப்பில் உபதலைவராக இருந்து ,  பிரதி அமைச்சராக இருந்து என்ன செய்யலாம் என நீங்கள் எதிர்பார்க்கிறீகள் அங்குள்ள எம்பியால் ஒரு பேருந்து நிலையத்தை கூட வாழைச்சேனையில் கட்டமுடியவில்லை இது நிஜம் 

அம்பாறையில் செய்ய நிறைய இருக்கு அதை செய்வாராக இருந்தால் மக்கள் மனதை வெல்வார் மீண்டும் எம்பியாகலாம் 

8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காசு கொடுத்துவிட்டு நீங்கள் இங்கே சுகமாக இருந்தபடி உங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைபடுவது நியாயமற்றது.
காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிடுவதற்கு காசு தரமாட்டேன் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது.

நிதர்சனமான கருத்து   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

காசு கொடுத்துவிட்டு நீங்கள் இங்கே சுகமாக இருந்தபடி உங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைபடுவது நியாயமற்றது.
காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிடுவதற்கு காசு தரமாட்டேன் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது.

இப்படியான   விதிகளை நீங்களே போட்டுக்கொள்வீர்களா  அல்லது யாரோ சொல்ல கேட்டு எழுதுகிறீர்களா?

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் உபதலைவராக இருந்து ,  பிரதி அமைச்சராக இருந்து என்ன செய்யலாம் என நீங்கள் எதிர்பார்க்கிறீகள் அங்குள்ள எம்பியால் ஒரு பேருந்து நிலையத்தை கூட வாழைச்சேனையில் கட்டமுடியவில்லை இது நிஜம் 

அம்பாறையில் செய்ய நிறைய இருக்கு அதை செய்வாராக இருந்தால் மக்கள் மனதை வெல்வார் மீண்டும் எம்பியாகலாம் 

பேருந்து     நிலையத்தையே  மட்டக்களப்பில் கட்ட முடியாதவர் அம்பாறையில் நிறைய செய்வார் என் கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருந்தோம் இருக்கிறோம் ஆனால் வடக்கு தலைமைகளிடம் கிழக்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் மீது துளியளவும் கரிசனை இல்லையென்பது வெளிப்படை தேர்தலுக்கு மட்டும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது அந்த நிகழ்வு தான் சுமந்திரனை ஓட ஓட விரட்டியது கல்முனையில்   

திரும்பபும் முதலிலிருந்தா ? ☹️

கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனை தனித்துவமானது என்பது உண்மை. அதற்குள் ஏன் பிரதேச வேறுபாட்டை வலிந்து திணிக்கிறீர்கள்(எனது கருத்திற்கு). உண்மையில் வேதனையாக இருக்கிறது. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

காசு கொடுத்துவிட்டு நீங்கள் இங்கே சுகமாக இருந்தபடி உங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைபடுவது நியாயமற்றது.

 எனக்கு பட்டாளம் போனவர்களை பற்றி கதைக்க அருகதையில்லை.பாராளுமன்றம் போகின்றவர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க ஆசை இருக்கின்றது.அருகதையும் இருக்கின்றது.
 
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிடுவதற்கு காசு தரமாட்டேன் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது.

போர் நடந்த பூமியில் புலம்பெயர் தமிழர்களும் இல்லையென்றால் எமது மண்ணை எத்தியோப்பியா போல் ஆக்கியிருப்பார்கள்.

16 minutes ago, குமாரசாமி said:

 எனக்கு பட்டாளம் போனவர்களை பற்றி கதைக்க அருகதையில்லை.பாராளுமன்றம் போகின்றவர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க ஆசை இருக்கின்றது.அருகதையும் இருக்கின்றது.

அப்படி பட்டாளம் போனவைய சட்டையை பிடிச்சு கேள்வி கேட்டுட்டு திரும்பி ஜேர்மனி  வந்திருக்க ஏலாது  என்று உங்களுக்கும் தெரியும் தானே. அந்த முன்னெச்ரிக்கை தான்.  அந்த ஆசைய இப்ப தீர்க்கலாம். பயம் இல்லை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

அப்படி பட்டாளம் போனவைய சட்டையை பிடிச்சு கேள்வி கேட்டுட்டு திரும்பி ஜேர்மனி  வந்திருக்க ஏலாது  என்று உங்களுக்கும் தெரியும் தானே. அந்த முன்னெச்ரிக்கை தான்.  அந்த ஆசைய இப்ப தீர்க்கலாம். பயம் இல்லை தானே.

நாங்க அவர்களையும் சட்டையை பிடித்து கேட்டு இருக்கிறோம் உயிரோடும் இருக்கிறோம் காரணம் எங்களது பைல். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஓம்....அந்த பெரிய இடை வெளி என்னவெண்டால் நாங்கள் கோப்பை/ கக்கூஸ் கழுவி உழைச்ச காசிலை அவையள் ஜாலியாய் மோட்டச்சைக்கிள் அது இது எண்டு காலுக்கு மேலை கால் போட்டுக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம்.
அவையின்ர நக்கல் சொல்லி வேலையில்லை.

அவையள் அங்கை உயிரைக்குடுத்து சண்டைபிடிச்சு உங்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்க உதவியிருக்காவிட்டால் இப்பிடி வெள்ளைக்காரனுக்கு கக்கூஸ் கழுவும் பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்குமா? செய்த உதவிக்கு நன்றியாக ஆவது இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 போர் நடந்த பூமியில் புலம்பெயர் தமிழர்களும் இல்லையென்றால் எமது மண்ணை எத்தியோப்பியா போல் ஆக்கியிருப்பார்கள்.

எத்தியோப்பியா எங்கள் மண்ணிலும் பார்க்க எவ்வளவோ  உயர்வான நிலையில் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

காசு கொடுத்துவிட்டு நீங்கள் இங்கே சுகமாக இருந்தபடி உங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைபடுவது நியாயமற்றது.

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். பந்தய குதிரைக்கு காசு கட்டயவர்கள் போல புலிகள் மேல் காசு கொடுத்து + ஐநா முன்றலில் நின்றும் அகதி அந்தஸ்தும் எடுத்து விட்டு இது தான் பொதுமக்களின் பங்களிப்பு போராட்டத்தை தூக்கி தாங்கினோம் என்பவர்கள் என்ன செய்வது

மேலும் இன்று அந்த போராளிகளையே வசை பாடிக்கொண்டு திரிகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 06:36, அக்னியஷ்த்ரா said:

.ஞாபகம் வச்சிக்கொள்ளுங்கோ போனஸ் முக்கியம்

அம்பிகா அவர்கள் போனஸ் ஆசனம் மூலம் தேசியப்பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்யப்படுவது நல்லதே. பாராளுமன்றம் சட்டவாளர்களுக்கானது. விவாதம் செய்யத் தெரியாமல் எழுதியதையே வாசிக்கத் தெரியாமல் நித்திரை கொள்ளப் போவர்களைவிட ஆளுமையுள்ளவர்கள், புலமையுள்ளவர்கள் போகலாம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கூத்தமைப்பு முதலைமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது இதை பார்ர்த்து கிழக்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் கூத்தமைப்பு கொடுக்கும் அடி  அவர்கள்  உணரவேண்டும்

சம்பந்தர் செய்த முட்டாள்தனமான முடிவு கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக வர ஒத்துக்கொண்டது. இது சாணக்கிய அரசியலுக்குள் வராது.  கிழக்கு மாகாண/தென் தமிழீழ மக்களின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இதைவிட ஆளுநர் ஆட்சிக்குள் போக அனுமதித்திருக்கலாம்.

கிழக்குவாழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஒரு பாடம் கொடுத்து இரண்டு எம்பிகளுக்கு மேல் அவர்களுக்கு கிடைக்காமல் பண்ணவேண்டும். 

மட்டக்களப்பில் பிள்ளையானும், அம்பாறையில் கருணாவும், திருகோணமலையில் ஒரு தமிழரும் இல்லாமலும் முடிவுகள் இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

திரும்பபும் முதலிலிருந்தா ? ☹️

கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனை தனித்துவமானது என்பது உண்மை. அதற்குள் ஏன் பிரதேச வேறுபாட்டை வலிந்து திணிக்கிறீர்கள்(எனது கருத்திற்கு). உண்மையில் வேதனையாக இருக்கிறது. ☹️

கப்பித்தன் , நாங்கள் இங்க நின்று கொண்டு ஏன் கருணாவுக்கு வோட் போடுறாய் ,சும்முக்கு போடுறாய் என்று அடுபடுறது வீண் ...எதுவாயினும் தீர்மானிப்பது அங்கிருக்கும் மக்கள் ...எதையும் நேரில் எதிர் கொள்பவர்கள் அவர்கள் தான் .
தலைவர் இருக்கும் போது அவரால் தீர்வு எடுத்து தரப்படும் என்று நம்பி அவர் பின்னே வட ,கிழக்கு இந பேதம் மறந்து ஓரணியில் திரண்டார்கள்...அவர் கடைசி வரை முயன்றார் . முடியவில்லை . மறைந்து விடடார் .
அவர் இருக்கும் போது கூட வட,கிழக்கு பேதம் இருந்தது ...ஆனால் அதை  விட எங்களுக்கென்று தனி நாடே முக்கியமாய் இருந்ததால்  இதெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் வட ,கிழக்கை  இணைத்து தலைமை தாங்க கூடிய ஒரு தலைவரும் இல்லை.
கிழக்கில் தமிழருக்கு போட்டியாய் முஸ்லீம்கள் இருக்கின்ற மாதிரி வடக்கில் இல்லை .. ஆகவே அவர்களுக்கு ஒரு சொத்தையை பார்லிமென்ட் அனுப்பினாலும் பிரச்சனை இல்லை ..பேருக்கு ஒரு தமிழர் சும்மா போய் இருந்திட்டு வரட்டுமேன் ...கிழக்கில் அப்படி அனுப்ப முடியாது.
டெலோ ,புளொட் ....போன்ற கொடூர கொலைகளை செய்தவர்களை எல்லாம் உங்களால் மன்னித்து கூட்டமைப்பிற்குள் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால் ஏன் கருணாவை ஏற்க முடியாது உள்ளது?
இங்கே இருந்து கொண்டு வடக்கும் ,கிழக்கும் சமம் என்று விசைப்பலகையில் எழுதலாம்....ஆனால் உங்கள் மனசாட்சிக்கு தெரியும் 
கிழக்கு மக்கள் கல்வியில் ,பொருளாதரத்தில் ,அபிவிருத்தியில் முதலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்...அதன் பின்னர் வட ,கிழக்கு இணைப்பை பற்றி யோசிக்கலாம்.
போரைக் காட்டி ,புலிகளை காட்டி  அசைலம் அடித்து வடக்கு மக்கள் தங்கள் பகுதிகளை ஓரளவுக்குகேனும் அபிவிருத்தி செய்து விட்டார்கள்[ஓவராய் காசு அனுப்பி  சனத்தை நாசமாக்குறார்கள் .].
கிழக்கு மக்களுக்கு வெளிநாட்டு காசில்லை ,வறுமை,வேலை வாய்ப்பில்லை ...போன்ற காரணங்களை பயன்படுத்தி அந்த மக்கள் விரும்பியோ ,விரும்பாமலோ மதம் மாற்றுகிறார்கள்.
இதுகள் எல்லாம் ஒழிய வேண்டுமானால் அந்த மண்ணையும்,மக்களையும் உண்மையாய் நேசிக்கும் ஒருவர் பதவிக்கு வரட்டுமேன் .
எது எப்படியாயினும் அந்த மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் ...நாங்கள் இங்கிருந்து குத்தி முறிவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

பி;கு; இது உங்களுக்கு மட்டுமான பதில் இல்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அம்பிகா அவர்கள் போனஸ் ஆசனம் மூலம் தேசியப்பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்யப்படுவது நல்லதே. பாராளுமன்றம் சட்டவாளர்களுக்கானது. விவாதம் செய்யத் தெரியாமல் எழுதியதையே வாசிக்கத் தெரியாமல் நித்திரை கொள்ளப் போவர்களைவிட ஆளுமையுள்ளவர்கள், புலமையுள்ளவர்கள் போகலாம்தானே.

ஏன் அம்பிகா பார்லிமென்ட் போய் இலங்கையில் இனப்படுகொலையே நடைபெயவில்லை என்ற சும்மின் கருத்திற்கு வலு சேர்க்கவா ?
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

கப்பித்தன் , நாங்கள் இங்க நின்று கொண்டு ஏன் கருணாவுக்கு வோட் போடுறாய் ,சும்முக்கு போடுறாய் என்று அடுபடுறது வீண் ...எதுவாயினும் தீர்மானிப்பது அங்கிருக்கும் மக்கள் ...எதையும் நேரில் எதிர் கொள்பவர்கள் அவர்கள் தான் .
தலைவர் இருக்கும் போது அவரால் தீர்வு எடுத்து தரப்படும் என்று நம்பி அவர் பின்னே வட ,கிழக்கு இந பேதம் மறந்து ஓரணியில் திரண்டார்கள்...அவர் கடைசி வரை முயன்றார் . முடியவில்லை . மறைந்து விடடார் .
அவர் இருக்கும் போது கூட வட,கிழக்கு பேதம் இருந்தது ...ஆனால் அதை  விட எங்களுக்கென்று தனி நாடே முக்கியமாய் இருந்ததால்  இதெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் வட ,கிழக்கை  இணைத்து தலைமை தாங்க கூடிய ஒரு தலைவரும் இல்லை.
கிழக்கில் தமிழருக்கு போட்டியாய் முஸ்லீம்கள் இருக்கின்ற மாதிரி வடக்கில் இல்லை .. ஆகவே அவர்களுக்கு ஒரு சொத்தையை பார்லிமென்ட் அனுப்பினாலும் பிரச்சனை இல்லை ..பேருக்கு ஒரு தமிழர் சும்மா போய் இருந்திட்டு வரட்டுமேன் ...கிழக்கில் அப்படி அனுப்ப முடியாது.
டெலோ ,புளொட் ....போன்ற கொடூர கொலைகளை செய்தவர்களை எல்லாம் உங்களால் மன்னித்து கூட்டமைப்பிற்குள் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால் ஏன் கருணாவை ஏற்க முடியாது உள்ளது?
இங்கே இருந்து கொண்டு வடக்கும் ,கிழக்கும் சமம் என்று விசைப்பலகையில் எழுதலாம்....ஆனால் உங்கள் மனசாட்சிக்கு தெரியும் 
கிழக்கு மக்கள் கல்வியில் ,பொருளாதரத்தில் ,அபிவிருத்தியில் முதலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்...அதன் பின்னர் வட ,கிழக்கு இணைப்பை பற்றி யோசிக்கலாம்.
போரைக் காட்டி ,புலிகளை காட்டி  அசைலம் அடித்து வடக்கு மக்கள் தங்கள் பகுதிகளை ஓரளவுக்குகேனும் அபிவிருத்தி செய்து விட்டார்கள்[ஓவராய் காசு அனுப்பி  சனத்தை நாசமாக்குறார்கள் .].
கிழக்கு மக்களுக்கு வெளிநாட்டு காசில்லை ,வறுமை,வேலை வாய்ப்பில்லை ...போன்ற காரணங்களை பயன்படுத்தி அந்த மக்கள் விரும்பியோ ,விரும்பாமலோ மதம் மாற்றுகிறார்கள்.
இதுகள் எல்லாம் ஒழிய வேண்டுமானால் அந்த மண்ணையும்,மக்களையும் உண்மையாய் நேசிக்கும் ஒருவர் பதவிக்கு வரட்டுமேன் .
எது எப்படியாயினும் அந்த மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் ...நாங்கள் இங்கிருந்து குத்தி முறிவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

பி;கு; இது உங்களுக்கு மட்டுமான பதில் இல்லை 
 
இவர் மண்ணையும் மக்களையும் நேசிப்பவராக இருந்தால் 2004 சம்பவம் நடைபெற்று இருக்காது.

மேலும் பிரதி அமைச்சராக இருந்த போது ஒன்றும் செய்யாதவர் / புடுங்தகாதவர் தற்போது செய்வார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்??

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

கப்பித்தன் ,

1) நாங்கள் இங்க நின்று கொண்டு ஏன் கருணாவுக்கு வோட் போடுறாய் ,சும்முக்கு போடுறாய் என்று அடுபடுறது வீண் ...எதுவாயினும் தீர்மானிப்பது அங்கிருக்கும் மக்கள் ...எதையும் நேரில் எதிர் கொள்பவர்கள் அவர்கள் தான் .
தலைவர் இருக்கும் போது அவரால் தீர்வு எடுத்து தரப்படும் என்று நம்பி அவர் பின்னே வட ,கிழக்கு இந பேதம் மறந்து ஓரணியில் திரண்டார்கள்...அவர் கடைசி வரை முயன்றார் . முடியவில்லை . மறைந்து விடடார் .
அவர் இருக்கும் போது கூட வட,கிழக்கு பேதம் இருந்தது ...ஆனால் அதை  விட எங்களுக்கென்று தனி நாடே முக்கியமாய் இருந்ததால்  இதெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் வட ,கிழக்கை  இணைத்து தலைமை தாங்க கூடிய ஒரு தலைவரும் இல்லை.
கிழக்கில் தமிழருக்கு போட்டியாய் முஸ்லீம்கள் இருக்கின்ற மாதிரி வடக்கில் இல்லை .. ஆகவே அவர்களுக்கு ஒரு சொத்தையை பார்லிமென்ட் அனுப்பினாலும் பிரச்சனை இல்லை ..பேருக்கு ஒரு தமிழர் சும்மா போய் இருந்திட்டு வரட்டுமேன் ...கிழக்கில் அப்படி அனுப்ப முடியாது.

2) டெலோ ,புளொட் ....போன்ற கொடூர கொலைகளை செய்தவர்களை எல்லாம் உங்களால் மன்னித்து கூட்டமைப்பிற்குள் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால் ஏன் கருணாவை ஏற்க முடியாது உள்ளது?

3)இங்கே இருந்து கொண்டு வடக்கும் ,கிழக்கும் சமம் என்று விசைப்பலகையில் எழுதலாம்....ஆனால் உங்கள் மனசாட்சிக்கு தெரியும் 
கிழக்கு மக்கள் கல்வியில் ,பொருளாதரத்தில் ,அபிவிருத்தியில் முதலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்...

4) அதன் பின்னர் வட ,கிழக்கு இணைப்பை பற்றி யோசிக்கலாம்.

5) போரைக் காட்டி ,புலிகளை காட்டி  அசைலம் அடித்து வடக்கு மக்கள் தங்கள் பகுதிகளை ஓரளவுக்குகேனும் அபிவிருத்தி செய்து விட்டார்கள்[ஓவராய் காசு அனுப்பி  சனத்தை நாசமாக்குறார்கள் .].
கிழக்கு மக்களுக்கு வெளிநாட்டு காசில்லை ,வறுமை,வேலை வாய்ப்பில்லை ...போன்ற காரணங்களை பயன்படுத்தி அந்த மக்கள் விரும்பியோ ,விரும்பாமலோ மதம் மாற்றுகிறார்கள்.
இதுகள் எல்லாம் ஒழிய வேண்டுமானால்

6) அந்த மண்ணையும்,மக்களையும் உண்மையாய் நேசிக்கும் ஒருவர் பதவிக்கு வரட்டுமேன் .
எது எப்படியாயினும் அந்த மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் ...நாங்கள் இங்கிருந்து குத்தி முறிவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

பி;கு; இது உங்களுக்கு மட்டுமான பதில் இல்லை 
 
இரதி,

1) கிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிப்பது தொடர்பாக நான் எதனையும் கூறவில்லை

2) உங்கள் கேள்வியிலுள்ல Logic புரிகிறது. ஆனாலும் நியாயமான கேள்வியாகப்படவில்லை. ஆதலால் வீண் விவாதங்களைத் தவிர்க்க விரும்புகிறேன்.

3) வடக்கும் கிழக்கும் பொருளாதார ரீதியில் சம நிலையில் இல்லை என்பது உண்மை. இதில் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

4) ஐயோ அம்மா !! இப்போதைய நிலையிலேயே இவ்வளவு துவேசம் இருக்கும்போது அபிவிருத்தி அடைந்தால் மட்டும் பாசம் வழிந்தோடுமா ? வேண்டாம் இந்த போலிப் பேச்சு. 

5) ஏன் இந்த வேண்டாத வேலை. சும்மா வாயைக் கிளறாதீர்கள். 

6) இது உண்மையில் நியாயமான பேச்சு. ஆனால் அந்த மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிப்பவர் யார் ? Million dollar question. Isn't it ?

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கிழக்கு மக்கள் தங்கள் உரிமைகளுக்குகாய் கதைத்தால் அவர்கள் பிரதேசவாதம் கதைக்கிறார்கள் என சொல்லி அவர்கள் எப்பவும் உங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்பதே வடக்கர்களின் விருப்பம் .
சிங்களவர்கள் ,கிழக்கு மக்கள் மீது பரிதாபப்பட்டு கிழக்கு மண்ணுக்கு நல்லது செய்ய விழைந்தாலும் உங்களை மாதிரியான ஆட்கள் விட மாட்டீர்கள் .
எப்பவும் உங்கள் காலடியில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதே நீங்கள் நினைப்பது  .
அது முடியாதவிடத்து துரோகி ,பிரதேசவாதம் கதைக்கிறார் என்னும் பட்ட பெயர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு எழுதப்படும்  கருத்துக்களை  பார்க்க மீண்டும் ஆயுதமே வெற்றி தரும்

அல்லது சிறந்த தேர்வு என்பதாக  படுகிறது

ஆனால்  அதனை  எழுதுபவர்களைப்பார்த்தால்

பிரபாகரனின்  ஆயுதப்போராட்டம்  முடிவுக்கு  வந்ததை முழுமையாக  ஆதரித்தவர்களாகவே இருக்கிறார்கள்

தலை  சுத்துது

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ,ஓம் நீங்கள் ,உங்கள் சகோதரர்கள் ,உங்கள் பிள்ளைகள் இங்கேயிருந்து தங்கள் எதிர்கால சந்ததியை பெருக்கட்டும் ...அங்கிருக்கும் சனம் அடிபட்டு  சந்ததியே இல்லாமல்  சாகட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓம் ,ஓம் நீங்கள் ,உங்கள் சகோதரர்கள் ,உங்கள் பிள்ளைகள் இங்கேயிருந்து தங்கள் எதிர்கால சந்ததியை பெருக்கட்டும் ...அங்கிருக்கும் சனம் அடிபட்டு  சந்ததியே இல்லாமல்  சாகட்டும் 

முதலில் எழுதியதை  வடிவாக  வாசித்தீர்களா  சகோதரி???

நீங்க  தானே சொல்கிறீர்கள்

முரளிக்கு  பயம்  இருக்கு என்று???

அப்ப தடிக்குத்தானே  முதலிடம்???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஏன் அம்பிகா பார்லிமென்ட் போய் இலங்கையில் இனப்படுகொலையே நடைபெயவில்லை என்ற சும்மின் கருத்திற்கு வலு சேர்க்கவா ?
 
சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. அப்படி எங்காவது கூறியிருந்தால் இணைப்பைக் காட்டுங்கள்.

இனப்படுகொலை என்று ஐ.நா.இல் நிரூபிப்பது கடினம் என்பதால்தான், அவர் கஜேந்திரகுமாரைப் போல ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குப் போய் வடையும் ரீயும் குடிப்பது ஒரு பலனையும் தராது என்று சட்டரீதியாக அபிப்பிராயப்படுகின்றார்.

அம்பிகா சற்குணநாதன் மனிதயுரிமை ஆணையாளராக வேலை செய்ததால், இலங்கை யாப்பில் அடிப்படை உரிமைகளுக்குள் அடங்கி இருக்கும் மனிதயுரிமைச் சட்டங்களை மகிந்த/கோத்தபாய புதிய யாப்பை உருவாக்கும்போது தனித்துவமான சட்டமாகக் கொண்டுவர வேலைசெய்வார்.

உலகில் பாராளுமன்றங்களின் வேலையே சட்டங்களை ஆராய்ந்து, திருத்துவதும், புதிய சட்டங்களை ஜனநாயகமுறைப்படி உருவாக்குவதும்தான். 

மக்களைப் பிரதிநிதிப்படுத்துவர்கள், மக்களின் நலன்களை முன்னிறுத்தி சரியான சட்டங்களை, யாப்புத் திருத்தங்களை உருவாக்க பாடுபடவேண்டும். அனுபவம் இல்லாத சுயநலமிகளைவிட, துறைசார் அனுபவம் உள்ளவர்கள் போவதால் நன்மைதான் கிட்டும்.

45 minutes ago, விசுகு said:

எனக்கு இங்கு எழுதப்படும்  கருத்துக்களை  பார்க்க மீண்டும் ஆயுதமே வெற்றி தரும்

அல்லது சிறந்த தேர்வு என்பதாக  படுகிறது

இதைக் கேட்டால் நிதி சேர்க்கவும், பினாமியாக பிஸினஸ் செய்யவும் ஒரு கூட்டம் குஷியாக வெளிக்கிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இதைக் கேட்டால் நிதி சேர்க்கவும், பினாமியாக பிஸினஸ் செய்யவும் ஒரு கூட்டம் குஷியாக வெளிக்கிடும்.

சீ

அதை சிங்களவனே அவர்களது  தலைவருக்கு  கொடுத்து வருகிறான்

எனவே நிதி மற்றும்  பிசினசையும்  அவரே  பார்த்துக்கொள்வார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.