Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ சிக்கன் கறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சிக்கன் கறி / போலி சிக்கன் கறி

தேவையான பொருட்கள்:
சைவ கோழி / போலி சிக்கன் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
தக்காளி - 1
நொறுக்கப்பட்ட இஞ்சி - 1/2 தேக்கரண்டி
நொறுக்கப்பட்ட பூண்டு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பெருஞ்சீரகம் விதைகள் - 1/2 தேக்கரண்டி
வளைகுடா இலை - 1
இலவங்கப்பட்டை - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 டம்ளர்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தேங்காய் பால் - முதல் மற்றும் இரண்டாவது சாறு.
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 tbs
கறிவேப்பிலை

Vegetarian Chicken Curry / Mock Chicken Curry

Ingredients:
Vegetarian Chicken / Mock Chicken - 1 Packet
onion - 1
Tomato - 1
Crushed ginger - 1/2 tsp
Crushed Garlic - 1/2 tsp
Green chillies - 2
Fennel seeds - 1/2 tsp
Bay leaf - 1
Cinnamon - 2
Turmeric powder - 1/2 tsp
Chilli powder - 1 tsp
Coriander powder - 1 tbs
Garam masala - 1 tsp
Coconut milk - first and second extract.
Salt - as required
oil - 1 tbs
Curry leaves

VMAS Vegan Soya Chicken 500g [CVSC500/24] - $8.55 : Lamyong ...

எல்லா சைனீஸ் கடைகளிலும் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குஇதுதான் புரியவில்லை உடையார். உங்களுக்குக் கோழிக்கறி விருப்பம் என்றால் கோழியையே சமைப்பதுதானே. பிறகு எதற்கு கோழியின் வாசனையில் சோயா. என் நண்பர் ஒருவரும் மனைவியுடன் உணவகத்துக்கு சாப்பிட வந்துவிட்டு மீன் veg என்கிறார். நான் நல்ல ஏச்சுக் கொடுத்தேன். அதுக்காக உங்களை ஏசுகிறேன் என்பதல்ல.😂

கறியைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குஇதுதான் புரியவில்லை உடையார். உங்களுக்குக் கோழிக்கறி விருப்பம் என்றால் கோழியையே சமைப்பதுதானே. பிறகு எதற்கு கோழியின் வாசனையில் சோயா. என் நண்பர் ஒருவரும் மனைவியுடன் உணவகத்துக்கு சாப்பிட வந்துவிட்டு மீன் veg என்கிறார். நான் நல்ல ஏச்சுக் கொடுத்தேன். அதுக்காக உங்களை ஏசுகிறேன் என்பதல்ல.😂

கறியைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கு 😀

நண்பர் நல்ல அறிவாளியாய் இருக்கிறாரே.😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

நண்பர் நல்ல அறிவாளியாய் இருக்கிறாரே.😀

அந்த உணவகத்தில் ஆடு கோழி மீன் இறால் போன்ற வாசனையுடன் நான் நினைக்கிறேன் சோயாவைத்தான் அப்படிச் செய்கின்றனர் என்று

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த உணவகத்தில் ஆடு கோழி மீன் இறால் போன்ற வாசனையுடன் நான் நினைக்கிறேன் சோயாவைத்தான் அப்படிச் செய்கின்றனர் என்று

இது எங்கட சோயாமீற் தான. நான் சின்ன வயதில் சோயாமீற்றை இறைச்சி எண்டுதான் சாப்பிட்டனான்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

சைவ சிக்கன் கறி / போலி சிக்கன் கறி

உடையார் சொன்ன சிக்கன் கறி 
ஒரு பிடி பிடிக்க வைக்கும் வொடி
வொட்க்கா ஒரு பெக் அடிச்சு போட்டு 
பச்சை அரிசி சோத்தோட 
பருப்பும் கொஞ்சம் 
பினைஞ்சு அடிக்க 
சோக்காய் இருக்கும் 
சோயா கறி.

நன்றி உடையார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குஇதுதான் புரியவில்லை உடையார். உங்களுக்குக் கோழிக்கறி விருப்பம் என்றால் கோழியையே சமைப்பதுதானே. பிறகு எதற்கு கோழியின் வாசனையில் சோயா. என் நண்பர் ஒருவரும் மனைவியுடன் உணவகத்துக்கு சாப்பிட வந்துவிட்டு மீன் veg என்கிறார். நான் நல்ல ஏச்சுக் கொடுத்தேன். அதுக்காக உங்களை ஏசுகிறேன் என்பதல்ல.😂

கறியைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கு 😀

எனக்கும் கோழிக்கறி , ஆட்டுக்கறி விருப்பம் சுமேரியர் . ஆனால் கடந்த 7 வருடங்களாக அவற்றை சாப்பிடாமல் விட்டுட்ட்டேன். அதனால் நானும் இப்படித்தான் சோயா, பிஞ்சு பிலாக்காய் இவற்றை மச்ச கறிகள் போல சமைக்கிறேன். இப்போது உலகெங்கும் மக்கள் கடல் உணவை, மரக்கறிகளை தான் விரும்புகிறார்கள். மிருக வதை, அதிக ஹோர்மோன்கள் பாவிப்பது என்று நிறைய சனம்  ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சிகளை வாங்க விரும்புவதில்லை . ஒருவிதமான மரக்கறி Sausage ஆடு ஈரல் மாதிரியே இருக்கும். நானும் தங்கையும் இப்படி நிறய Meat Substitute களை கண்டுபிடித்து வாங்கி சமைப்போம்.

6 hours ago, உடையார் said:

சைவ சிக்கன் கறி / போலி சிக்கன் கறி

சமைத்துவிட்டு படத்துடன் பதிவிடுகிறேன். மிகவும் நன்றி 

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, uthayakumar said:

உடையார் சொன்ன சிக்கன் கறி 
ஒரு பிடி பிடிக்க வைக்கும் வொடி
வொட்க்கா ஒரு பெக் அடிச்சு போட்டு 
பச்சை அரிசி சோத்தோட 
பருப்பும் கொஞ்சம் 
பினைஞ்சு அடிக்க 
சோக்காய் இருக்கும் 
சோயா கறி.

நன்றி உடையார்.
 
உண்மைதான் பாருங்கோ..மரக்கறி சமைக்கிறவன் சமைச்சால் உந்த கோதாரிவிழுந்த கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி எல்லாம் வாழ்க்கையிலை எட்டிப்பார்க்கவே மனம் வராது

உள்ளதை சொல்லுறதெண்டால் நான் சிலோனிலை இருக்கும் வரைக்கும் மச்சம் மாமிசத்தை தேடி அலைஞ்சதே கிடையாது. இஞ்சையும் இல்லை.சில நேரம் கட்டாயத்தின் பேரில்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உண்மை. வித்தியாசமான மரக்கறிகள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி சமைச்சு , நெய், தயிர், மோர்மிளகாய் , ரசம், ஊறுகாய், அப்பளம், வடகம் என்று சேர்த்து சாப்பிட்டுப்பார்த்தால் மச்சப்பக்கமே போகாதவை இல்லை. அதைத்தான் நான் செய்கிறேன். நல்ல விளமீன், இறால் கிடைக்கும்போது வாங்கி சமைப்பேன் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குஇதுதான் புரியவில்லை உடையார். உங்களுக்குக் கோழிக்கறி விருப்பம் என்றால் கோழியையே சமைப்பதுதானே. பிறகு எதற்கு கோழியின் வாசனையில் சோயா. என் நண்பர் ஒருவரும் மனைவியுடன் உணவகத்துக்கு சாப்பிட வந்துவிட்டு மீன் veg என்கிறார். நான் நல்ல ஏச்சுக் கொடுத்தேன். அதுக்காக உங்களை ஏசுகிறேன் என்பதல்ல.😂

கறியைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கு 😀

கீழே உள்ள சோயாதான் நான் வாங்குவது, கறிவைக்கலாம். பொரிக்காலம், வறுக்காலம்.... நல்ல சுவை. வீட்டில் மனைவி சைவம் அதானல் இந்த சோயா அடிக்கடி சமைப்போம். சமைத்துப்பாருங்கள், நல்ல சத்து

20200802-082325.jpg

14 hours ago, nige said:

இது எங்கட சோயாமீற் தான. நான் சின்ன வயதில் சோயாமீற்றை இறைச்சி எண்டுதான் சாப்பிட்டனான்...

இது அந்த சோயாவைவிட நல்லா இருக்கும்

13 hours ago, uthayakumar said:

உடையார் சொன்ன சிக்கன் கறி 
ஒரு பிடி பிடிக்க வைக்கும் வொடி
வொட்க்கா ஒரு பெக் அடிச்சு போட்டு 

பச்சை அரிசி சோத்தோட 
பருப்பும் கொஞ்சம் 
பினைஞ்சு அடிக்க 
சோக்காய் இருக்கும் 
சோயா கறி.

நன்றி உடையார்.
 
சரியாக சொன்னீர்கள் 👍

11 hours ago, nilmini said:

எனக்கும் கோழிக்கறி , ஆட்டுக்கறி விருப்பம் சுமேரியர் . ஆனால் கடந்த 7 வருடங்களாக அவற்றை சாப்பிடாமல் விட்டுட்ட்டேன். அதனால் நானும் இப்படித்தான் சோயா, பிஞ்சு பிலாக்காய் இவற்றை மச்ச கறிகள் போல சமைக்கிறேன். இப்போது உலகெங்கும் மக்கள் கடல் உணவை, மரக்கறிகளை தான் விரும்புகிறார்கள். மிருக வதை, அதிக ஹோர்மோன்கள் பாவிப்பது என்று நிறைய சனம்  ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சிகளை வாங்க விரும்புவதில்லை . ஒருவிதமான மரக்கறி Sausage ஆடு ஈரல் மாதிரியே இருக்கும். நானும் தங்கையும் இப்படி நிறய Meat Substitute களை கண்டுபிடித்து வாங்கி சமைப்போம்.

மைத்துவிட்டு படத்துடன் பதிவிடுகிறேன். மிகவும் நன்றி 

இன்னும் சில வருடத்தின் பின் நானும் மீனும் சோயாக்களும் தான் தேடனும்; செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் எல்லா விதமான உணவுகளையும் உண்பதற்கான species. இது இயற்கை.  அந்தந்த சூழலில் கிடைத்து இருக்க கூடிய உணவுகளை உட்கொண்டே கூர்ப்பு ஏற்பட்டது.

மரக்கறி மட்டும் உண்பவராக ஒரு போதும் மாறுவதற்கு வாய்ப்பில்லை. 

முக்கியமாக இந்த formed foods - இதில் சோயாமீற் - எதை கலந்து செய்கிறார்கள் என்பதே தெரியாது.  

உ.ம். Burgers ஐ ஒரு போதுமே நான் வெளியில் வாங்குவதில்லை. நானே செய்வது, அளவான கொழுப்பும் கலந்து. இதற்கும் ஏனைய உணவில் அளவான பாவனைக்கு  chicken, mutton fat ஐ render பண்ணியே செய்வது.   

சைவ சிக்கன் முறையில்,  உண்மையான chicken breast ஐ மட்டும் 2-3 cm cubes அளவில் வெட்டி சமைத்தால், சில வேளைகளில் நீங்கள் இதை ஒதுக்கி விடுவீர்கள். 

சமைத்து கடைகளில் வாங்குவதில், நிம்மதியான உணவு KFC போன்றவை. எந்த விலங்கின் / மரக்கறியின், எந்த பகுதி என்பது தெரியும் என்பதால்.   
 
1 hour ago, உடையார் said:

இன்னும் சில வருடத்தின் பின் நானும் மீனும் சோயாக்களும் தான் தேடனும்; செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

?

மங்கோலியா normads  உடன் இருந்து, அவர்களின் உணவுகளை ரசிப்பதற்கு, ருசிப்பதற்கு தயார் செய்து விட்டீர்களா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

மங்கோலியா normads  உடன் இருந்து, அவர்களின் உணவுகளை ரசிப்பதற்கு, ருசிப்பதற்கு தயார் செய்து விட்டீர்களா? 

அப்படியில்லை, சிங்கபூர் போனபோது சுவைத்த து, பிடித்துவிட்டது😀

இங்கு இப்ப பலர் இதைதான் பாவிக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

கீழே உள்ள சோயாதான் நான் வாங்குவது, கறிவைக்கலாம். பொரிக்காலம், வறுக்காலம்.... நல்ல சுவை. வீட்டில் மனைவி சைவம் அதானல் இந்த சோயா அடிக்கடி சமைப்போம். சமைத்துப்பாருங்கள், நல்ல சத்து

20200802-082325.jpg

இதில் சோயாவை மட்டும் தான் சேர்க்கிறார்களா ???
நாம் மீன் நன்றாக உண்போம் அதனால் எமக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு வேறு வழியில்லை 😂

நான் ஒரு தடவை வாங்கிச் சமைத்துப் பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் சோயாவை மட்டும் தான் சேர்க்கிறார்களா ???
நாம் மீன் நன்றாக உண்போம் அதனால் எமக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு வேறு வழியில்லை 😂

நான் ஒரு தடவை வாங்கிச் சமைத்துப் பார்க்கிறேன்.

இன்று இந்த கறி கொழம்பு வைத்தேன், மத்திய மரக்கறி பிரியானிக்கும் இரவு புட்டுக்கும், முடிந்துவிட்டது மிச்சமில்லை, பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

இன்று இந்த கறி கொழம்பு வைத்தேன், மத்திய மரக்கறி பிரியானிக்கும் இரவு புட்டுக்கும், முடிந்துவிட்டது மிச்சமில்லை, பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்👍

குழம்புதான் எங்கடை கொழம்பு இந்தியர்கள் பயன்படுத்துவது 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குழம்புதான் எங்கடை கொழம்பு இந்தியர்கள் பயன்படுத்துவது 😀

அப்படியா, எனக்கு தெரியவில்லை இதுவரை 👍

  • கருத்துக்கள உறவுகள்

இதை low flame இல் வறட்டி பொரியல் போல செய்தால் அசல் கோழிக்கறி போலவே இருக்கும். நானும் வெஜிடேரியன் என்பதால் அடிக்கடி உண்பதுண்டு!  இதில் வேறு கலப்படங்கள் இல்லை. (Soya   chunk).

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

இதை low flame இல் வறட்டி பொரியல் போல செய்தால் அசல் கோழிக்கறி போலவே இருக்கும். நானும் வெஜிடேரியன் என்பதால் அடிக்கடி உண்பதுண்டு!  இதில் வேறு கலப்படங்கள் இல்லை. (Soya   chunk).

வணக்கம் Eppothum Thamizhan. எப்படி செய்தீர்கள் என்று செய்முறையை அறியத்தரவும் . இதே பக்கெட் அமெரிக்காவிலும் விக்குதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன் கடைகளில் கிடைக்கின்றது.நாங்கள் அடிக்கடி வாங்கி சமைத்திருக்கின்றோம். நல்ல சுவையானது.

Soja.png

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

999999-8906032016977.jpg 

இந்த டூப்பிளிகேட் கறிக்கு பெயர் "மீல் மேக்கர்"

'சிக்கன் கறி' என என் பேரனுக்கு பேக் காட்டி சாப்பிட சொல்வதுண்டு..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.