Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

On Aug 6, 2020

நடந்து முடிந்த தேர்தலில்  செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார்.

கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே திட்டமிட்ட படி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மாவட்ட செயலக வாக்கெண்ணலில் நேரடியாக நின்றிருக்கின்றமையும் அவர் சுமந்திரனின் தீவீர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
https://www.thaarakam.com/news/146459

  • Replies 119
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த, ஒன்று.
சென்ற முறைமாதிரி... இந்த முறையும், ஜில்லாலங்கடி  வேலை செய்து, 
பாராளுமன்றதுக்குள்  போக நினைக்கின்றார். சுமந்திரன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீறு கொண்ட தமிழினத்தால்  வீழ்த்தப்பட்ட சுமந்திரன்

Last updated Aug 6, 2020

cartoon-sampanthar-sumanthiran-copy.jpgநடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
 
https://www.thaarakam.com/news/146462

  • கருத்துக்கள உறவுகள்

விகிதசார வாக்கெடுப்பு எனும் சுத்துமாத்து இன்று இரவுக்குள் முடிவுகள் தலைகீழாக்கி தமக்கு வேண்டியவர்களை வெற்றி  பெற்றதாக காலையில் அறிவிப்பார்கள் சுமத்திரன் கடைசியாக நம்புவது இந்த கோல்மாலத்தான் இந்த வாக்களிப்பு முறையை குள்ளநரி  ஜேஆர் கொண்டுவந்தவர் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’எங்கள் கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்லும்: சம்பந்தர் mt மக்கள் *சம்பந்தர்’ எனச்சொல்லும் உரை

40 minutes ago, பெருமாள் said:

விகிதசார வாக்கெடுப்பு எனும் சுத்துமாத்து இன்று இரவுக்குள் முடிவுகள் தலைகீழாக்கி தமக்கு வேண்டியவர்களை வெற்றி  பெற்றதாக காலையில் அறிவிப்பார்கள் சுமத்திரன் கடைசியாக நம்புவது இந்த கோல்மாலத்தான் இந்த வாக்களிப்பு முறையை குள்ளநரி  ஜேஆர் கொண்டுவந்தவர் 

விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தற் செய்திகளில்  இந்தச்   செய்தி குறித்து ஐபீசீ மூச்சுக்கூட விடவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. மத்திய கல்லூரி வளாகத்தில் கூச்சல் குழப்பம். தகவல் ஐபீசீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி 

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 

யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026

யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி)

August 7, 2020

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

mq2.jpg
அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

http://thinakkural.lk/article/60600

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா தோல்வி? சித்தார்த்தனின் நிலை என்ன?

August 7, 2020

mavai-000-300x162.jpg
 
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாலை வரையில் குழப்பமான நிலை காணப்பட்ட போதிலும், மாவை தோல்வியடைந்திருப்பதை செயலக வட்டாரங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்தன.

கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவானதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்கள் யார் என்பது இன்று அதிகாலை உரை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

எஸ்.சிறீதரன் வெற்றிபெற்றிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரைவிட த.சித்தார்த்தன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. சித்தார்த்தன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் நான்காது இடத்தில் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அவர் நான்காவது இடத்துக்கு வந்தது எப்படி என? யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை 2.00 மணிவரையில் உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
 
http://thinakkural.lk/article/60589

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெண்ணும் மையத்திற்கு சென்ற சுமந்திரனுக்கு எதிர்ப்பு: அதிரடிப்படை தாக்குதல்; மாவையின் மகன் மீதும் தாக்குதல்!

August 7, 2020
14ecab9b-68de-4b2c-927a-de036d549301-696

யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம் கலவர பூமியானது.

யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன்னர் வாக்கெண்ணும் மையத்திற்கு சென்றார்.

இதன்போது, அங்கு குவிந்திருந்த பலரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வெறு கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்த்து குரல் எழுப்பினர்.

கோட்டாபய ராஜபக்சவின் விசேட உத்தரவில் அண்மையில் எம்.ஏ.சுமந்திரனுக்கு மேலதிக விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பெரும் படைப்பாதுகாப்புடனேயே சுமந்திரன் அங்கு சென்றார்.

1a98b8c6-cdfd-4175-b1dc-c931e6e10f17-150கூட்டத்தின்பெரும் எதிர்ப்பிலிருந்து சுமந்திரனை பாதுகாத்து அதிரடிப்படை பெரும் அரண் அமைத்தது. அத்துடன், கூட்டத்தினரை கலைந்து செல்ல பணித்தனர். எனினும், இளைஞர்கள் அங்குகுழுமியிருந்தனர்.

இதையடுத்து நிலைமை கட்டுமீறி செல்ல, இளைஞர்கள் மீது சுமந்திரனின் பாதுகாப்பு அதிரடிப்படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதன்போது, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனையும் அதிரடிப்படையினர் பிடித்து கொடூரமாக தாக்கினர்.

தாக்குதல் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து சுமந்திரனை பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்றினர். எனினும், இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று துரோகி என குரல் எழுப்பினர்.

137705e9-16a8-4708-887d-fa81f88a191a-150

எனினும், இளைஞர்கள் நெருங்காமல் சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் அரண் அமைத்திருந்தனர்.
 
http://www.pagetamil.com/139083/

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா! இவர்களின் தோல்வியை தடுத்து நிறுத்துவதற்கு பாவிக்கப்பட்ட பகடைக்காய். அனந்தி சசிதரன், முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன், இப்போது இவர். வருங் காலங்களில் இந்த வரிசை நீளும். இவர் இத்துடன் அரசியல் பாதையை நிறுத்திக்கொண்டு தன் பணியைத் தொடருவது இவருக்கு நல்லது. இல்லையேல் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டோடு, அவர் பணிகளுக்கும் தடை போட்டு, மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இவர் பெயரை  நாறடித்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வீறு கொண்ட தமிழினத்தால்  வீழ்த்தப்பட்ட சுமந்திரன்

Last updated Aug 6, 2020

cartoon-sampanthar-sumanthiran-copy.jpgநடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
 
https://www.thaarakam.com/news/146462

அதே தமிழினம்தான் அங்கயனையும் அனுப்பி வைத்திருக்கிறது. 

நல்லவேளை இந்த சைக்கிள் க(g)ப்பில் முஸ்லீம் காங்கிறஸ் வடக்கில் ஒரு ஆசனமும் எடுக்கவில்லை. 

கவலை என்னவென்றால் இவ்வளவு தோல்வி (2009) அடைந்தும் ஓரணியால் நின்று பெரிய வெற்றியடைந்து தமிழரின் பலத்தை காட்ட முடியாத ஒரு கேவலங்கெட்ட இனம். சிங்ஙளவங்கள் எங்கேஐப்பார்த்து சிரிப்பார்கள். 

3 hours ago, தமிழ் சிறி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’எங்கள் கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்லும்: சம்பந்தர் mt மக்கள் *சம்பந்தர்’ எனச்சொல்லும் உரை

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

அதுக்குள எங்களுட்ட ஒரு பழமொழி   வைச்சிருக்கிறம் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” இதை மேடைகளில் இடைக்கிடை தூசி தட்டி பாவிக்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏமாளிகளாக தொடர்ந்தும் இருந்து ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து, ஐந்து வருடம் கோமாளிகளின் கூத்தைப் பார்க்கலாம் என்றுதான் சம்பந்தர், சிறிதரன், சித்தார்த்தன்(?), சுமந்திரன்(?), கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன்(?), செல்வம்(?), பிள்ளையான், வியாழேந்திரன், சாணக்கியன், ஜனா (கோவிந்தம்
கருணாகரன்), டக்ளஸ் என்று பன்மைத்துவத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்.

11 வருஷம் பாராளுமன்றக் கதிரையில் இருக்கமுடியாமல் பின்பக்கம் நொந்திருந்த கஜேந்திரகுமார்தான் இவர்களுக்குள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்😁

கருணா அம்மானும், அம்பிகா அம்மையாரும் போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்🤓

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ragaa said:

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

சிலருக்கு தூக்கம் கலைவது  இப்போதுதானாக்கும் வேலைவாய்ப்பு கேட்டு போன முன்னாள் போராளிகளை பேப்பர் படித்துக்கொண்டு ஏறெடுத்தும் பார்க்காமல் தீர்வை கேட்க்காமல்  வேலையை கேட்டால் தீர்வு தள்ளி போய் விடும் என்றவர்  கொழும்பில் சொகுசு மாளிகை சிங்கள அரசிடம் வாங்கும்போது என்ன நியாயம் சொன்னவர் ?

சுமத்திரன் எனும் கோடாலி காம்பு இதுவரை தமிழ் இனத்துக்கு செய்தது எல்லாம் துரோகம் ஒன்றே அது தவிர வேறு ஒன்றில்லை . இவர்கள் சூடு சுரணை இல்லாதவர்கள் மீண்டும் பின்கதவால் உள்ளே வருவினம் இன்னும் தமிழனுக்கு அழிவைத்தவிர  வேறொன்றுமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எப்போதாவது இரண்டாவது முறை அதுவும் சாமம்  12 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது உண்டா ?  சுமத்திறனை வெறியாளர்  என்று அறிவிக்கினம் அவரும் வருகிறார் மாவையின்  மகனுக்கும் அடி விழுது எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலின்படி .

இனி என்ன வீட்டை இரண்டாய் உடைப்பது தானே 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான முறையில் தெரிவத்தாட்சி அலுவலர் உட்படச் செயற்பட்டுள்ளார்கள். ஒரு பெண். மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படி இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளார். வட-கிழக்கு மற்றும் புலம்பெயர் பெண்களமைப்புகள் தமது கண்டனங்களைத் தெரிவிப்பதோடு போராட்டுங்களை நடாத்தி நீதியை நிலைநாட்டுதல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

4 ம் இடத்தின் கீழ்  இருந்தார்  சம் …
2 ம் இடத்திற்கு தாவினார் குதிரையில் ….
கோத்தாவின் கையிலும் கொள்ளு கொள்ளை
குதிரைகளும் தேவை ஒன்றிரண்டு
இரண்டும் இரண்டும் நாலு …
கொழும்பில் புது வீடு …
கொரோன முடிய புஸ்பகத்தில் ஊர்கோலம் ..
கோமணத்தை தைச்சுப் போடும் ஏமாளிக்  கூட்டம்
கச்சியேகம்பனே …

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

இவர்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கைகொடுத்து தூக்கிவிட, இவர்கள் ஏத்திவிட்டவர்கள் மேலேயே சவாரி செய்ய வெளிக்கிட்டதால் விளைந்த பயன் இது. முடியாவிட்டால் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். தன் மூக்குப் போனாலும் பிறருக்கு சகுனப் பிழையாக வேண்டும் என்று அடம்பிடித்தது யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள வில்லை! எனக்காக பிரசாரம் செய்த தம்பி உமாகரன்
சுமந்திரனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள வில்லை! எனக்காக பிரசாரம் செய்த தம்பி உமாகரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி 

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 

யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026

யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி)

August 7, 2020

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

mq2.jpg
அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

http://thinakkural.lk/article/60600

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்துமாத்து சுமந்திரன் எனும் பெயருக்கேற்றாப்போல் நடந்திருக்கின்றார். இவருக்கு இனிவரும் காலங்கள் மிக கடுமையானதாகவே இருக்கப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?

நீங்கள்தானே அவர் வந்தால் நல்லது வல்லது என்றெல்லாம் முந்தநாள்  எழுதினது நாங்க சொல்றதை கொஞ்சம் காது  குடுத்து கேட்டிங்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

நீங்கள்தானே அவர் வந்தால் நல்லது வல்லது என்றெல்லாம் முந்தநாள்  எழுதினது நாங்க சொல்றதை கொஞ்சம் காது  குடுத்து கேட்டிங்களா ?

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 
இதையும் விட கேவலமாக இறங்குவார்

IMG-0750.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.