Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அப்படியா? எப்படி உங்களுக்கு பேரம் பற்றி தெரிந்தது? உங்களை போல இன்னொருவரின் கற்பனையை படித்ததில் இருந்தா? எங்கள் மக்களில் படித்தவர்கள், பெரியவர்கள் உங்களை போல சிந்திப்பவர்களாக இருந்தால், “இந்த இனத்தை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சுமந்திரனுக்கு மானிப்பாயில் கிடைத்த வாக்குகளில் ஒருபகுதி சரியாக எண்ணப்படாததால், சட்டப்படி மீள எண்ணப்பட்டதன் பின் அவருக்கு 4000 வாக்குகள் சித்தார்த்தனிலும் பார்க்க அதிகம் கிடைத்திருப்பது உறுதியானது. சசிகலாவுக்கு சித்தார்த்தனிலும் பார்க்க 700 வாக்குகளே குறைவு. தனது வாக்குகளையும் மீளவும் எண்ணவேண்டும் என்று கேட்க சட்டப்படி உரிமை இருந்தும், இதை செய்து சித்தார்த்தனை மேவி பாராளுமன்றம் போவதை விட்டு, 4000 வாக்குகளால் முன்னே நிற்கும் சுமந்திரனுக்கு எதிராக வீடியோவுக்கு ஒப்பாரி வைத்துவிட்டு வீட்டுக்கு போன சசிகலா, பாராளுமன்றம் போய் மக்களுக்கு என்னத்தை செய்திருக்க முடியும்? பரிதாபம்.
 
உங்களுக்கு பாராளுமன்றம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல தெரிகிறதே? பாராளுமன்றம் என்றால் என்ன, அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து பாருங்கள். 

பார்த்தேனே? உங்களைப் போல சிலர் தமது அறிவுக்கு எட்டியபடி தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபட, சசிகலா ஒப்பாரி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி தனது தேசிய கடமையை நிறைவேற்றியதை பார்த்தேன். நல்லவேளை, இவ வெற்றி பெறவில்லை.

கற்பகதரு..
சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது...
இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎

அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்...
அவருக்கு... நீங்கள், எவ்வளவு  முட்டுக் கொடுத்தாலும், 
எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. :grin:

சுமந்திரன்..  ஸ்ரீ லங்காவின், வைகோ   மாதிரி.
யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ...
அந்தாள்.. நொந்து  நூடில்ஸாக போயிடும். 😂

1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... 
இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, 
நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 😮 

2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்  வந்தார்...  
22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி,
"கழுதை,  தேய்ந்து...  கட்டெறும்பான மாதிரி"
9  இடத்துடன், முழி பிதுங்கி..  நிக்குது. :rolleyes:

அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது.

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 119
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

கற்பகதரு..

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

சிறித்தம்பி! கற்பகம் போன்றவர்கள்*** இருக்கும் வரை சுத்துமாத்து சுமந்திரன்ரை காட்டிலை எப்பவும் மழைதான் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! கற்பகம் போன்றவர்கள்*** இருக்கும் வரை சுத்துமாத்து சுமந்திரன்ரை காட்டிலை எப்பவும் மழைதான் 😎

என்ன செய்வது, குமாரசாமி அண்ணை...
ஒரு சிலர்... சுமந்திரன் மேலுள்ள, தங்களின் தனிப்பட்ட நட்பை.. பேணுவதற்காக,
ஒரு இனத்தை, விலை கொடுக்க..  துணிகிறார்கள்.

நட்பு  வேறு... இனத்தின் முக்கியத்துவம் வேறு என்பதனை.. 
புரிந்து கொள்ள.. அவர்களுக்கு தெரியவில்லையே.. என்பது கவலையான விடயம். 😢

4 hours ago, கற்பகதரு said:

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  உதவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

இல்லை. இங்கு கருது எழுதுபவர்களின் எண்ணத்தை பார்க்கும்போது யாழ்பாணத்து மக்கள் அறிவிலிகள் போலத்தான் தெரிகின்றது. ஒருவர் சுத்துமாத்து செய்து தேர்தலில் தெரிவு செய்வதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே என்று கவலையாக இருக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் கல்வி இந்தளவுக்கு தாழ்ந்த நிலைமைக்கு போனதையிட்டு கவலைதான்.ராஜபக்சேக்கள் எல்லாம் இப்படித்தான் வென்றிருப்பார்களோ ? யதார்த்தம் புரியாத ஜென்மங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகதரு..
சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது...
இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎

அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்...
அவருக்கு... நீங்கள், எவ்வளவு  முட்டுக் கொடுத்தாலும், 
எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. :grin:

சுமந்திரன்..  ஸ்ரீ லங்காவின், வைகோ   மாதிரி.
யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ...
அந்தாள்.. நொந்து  நூடில்ஸாக போயிடும். 😂

1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... 
இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, 
நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 😮 

2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்  வந்தார்...  
22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி,
"கழுதை,  தேய்ந்து...  கட்டெறும்பான மாதிரி"
9  இடத்துடன், முழி பிதுங்கி..  நிக்குது. :rolleyes:

அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது.

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

உண்மையிலேயே கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவது சாத்தியம். அதேபோல் திடீரெனக் கண்பார்வைக்  தெரியாமல் வரும் ஒருவரைச் சமாளிப்பது சிரமம். அதேபோன்றதொரு துயரம்தான். நேற்றுத் நேரலையில் ஐபீசீ(தவிர்க்முடியாது) ஒளிபரப்பிய காட்சிகள் யாழிலும் இருக்கிறது.  சமூக ஊடகங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை      என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.             சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள். கள்ளா! டேய் கள்ளா ! என்பதைவிட என்ன அவமானம் தேவை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.
 
ஈற்றில் இரண்டாவது இடத்தில் இருந்த,  சசிகலா ரவிராஜ் களத்தில் இருந்து வெளியேற்றி... சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு மோசடி என்பதற்க்கப்பால்.
 
சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு பெரும் நெருக்கடியாக.. உருவெடுக்கும் சுமந்திரனின் இத்தகைய அடாவடி தமிழர்களை எத்தகைய நிலைக்கு தள்ளப்போகிறது என்பதை அல்லது சுமந்திரனின் வருகை சாதகமா பாதகமா என்பதை இன்னும் குறுகிய காலத்துக்குள் உணரமுடியும்.
 
சுமந்திரனின் வருகை தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் சந்தர்ப்பத்தில், தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு வன்முறையை நோக்கி நகரலாம்.
 
இங்கு நான் சுமந்திரனையோ கூட்டமைப்பையோ குறை சொல்வதை விட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், விக்னேசுவரனையுமே குறை சொல்வேன்.
 
காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை தமது ஈகோக்களால் இட்டு நிரப்பிய இருவரும் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்பது என்கருத்து. கூட்டமைப்புக்கான மாற்று என மக்கள் எண்ணியதை சீர்குலைத்தது கூட ஒரு வகையில் சமூகத் துரோகமே.

117403967_4011280208901530_4519314701381068350_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=KfojZ3pIAXAAX_WFChe&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e1d7eab687a92aedc96cb27027251b83&oe=5F51D363

மாமனிதர் ரவிராஜை இந்த அரசியல் கூத்திற்குள் இழுப்பது மிகவும் பண்பற்ற செயல். ☹️

6 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

துல்லியமாகக் கணித்துளீர்கள், இப்படியான இழி செயலுக்கு கண்டபடி ஒருவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க மாட்டினம்.  இப்படி பல சிக்கல்கள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது குறித்தே எனது கட்டுரையையும் எழுதி வாழும் புலத்தில் பதிவு செய்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள். கள்ளா! டேய் கள்ளா ! என்பதைவிட என்ன அவமானம் தேவை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

அவமானம் என்றால் என்னவென்று முதலில் சுமந்திரனுக்கும் அந்தாளின் அடிவருடிகளுக்கும் தெரியவேண்டுமே.🤔

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

Edited by Nathamuni

11 minutes ago, Paanch said:

அவமானம் என்றால் என்னவென்று முதலில் சுமந்திரனுக்கும் அந்தாளின் அடிவருடிகளுக்கும் தெரியவேண்டுமே.🤔

இதுதான் ராஜா அரசியல். இதெல்லாம் சகஜம். பெரிதாக எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடாது. அப்படி செய்தால் எங்களுக்குத்தான் பாதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உண்மையிலேயே கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவது சாத்தியம். அதேபோல் திடீரெனக் கண்பார்வைக்  தெரியாமல் வரும் ஒருவரைச் சமாளிப்பது சிரமம். அதேபோன்றதொரு துயரம்தான். நேற்றுத் நேரலையில் ஐபீசீ(தவிர்க்முடியாது) ஒளிபரப்பிய காட்சிகள் யாழிலும் இருக்கிறது.  சமூக ஊடகங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை      என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.             சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள்.

நொச்சி... இங்கு சிலரும், அதே... மன நிலையில் தான், 
இருக்கின்றார்கள் என்பது, கவலைக்குரிய விடயம்.  😢

நேற்று இரவு...  யாழ். மத்திய கல்லூரியில்,   
இராணுவம், போலீஸ்  புடை சூழ, ரோசமில்லாமல் சென்ற சுமந்திரனைப் பார்த்து....
"கள்ளா! டேய் கள்ளா..." என்று சொல்லிய பின்பும்... 
அவர்,  "பொலிடோல்" குடிக்காமல் இருக்கும் அளவுக்கு,
அவருக்கு... கொழுப்பும், திமிரும்... முத்தி இருக்குது என்றே... கருதுகின்றேன்.

மற்றவன் எண்டால், இந்த நேரம்... 
அந்த,  அவமானம் தாங்கேலாமல்...  புழுங்கி, வெந்திருப்பான்.  

அந்த நேரம்... மாவையின்  மகனுக்கு, அதிரடிப் படை... 
சரியான அடி கொடுத்து, பூட்ஸ்... காலால்... மிதித்து எடுத்து விட்டார்களாம். 😮

நீதி: மாவை... தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் போது தான்...
சுமந்திரன்... சம்பந்தனால், கட்சிக்குள் உள் வாங்கப் பட்டவர்.

அந்த, நேரம்... மாவை, ஒரு கணிப்பும் தெரியாமல்.. எல்லாருக்கும்..
"ஜால்ரா" அடித்து விட்டு.. மாவையையே வெளியே.. குந்த வைத்தது மட்டுமல்லாமல்..
மகனுக்கும்... நெருப்படி  கொடுத்து அனுப்பியுள்ளார்கள். 

பதவியில் இருக்கும் போது... பொறுப்பாக நடக்க வேண்டும், என்ற பாடத்தை...
நேற்று.. மாவை,  கற்றுக் கொண்டு இருப்பார் என, நினைக்கின்றேன்.
ஆனால்... காலம் கடந்து, கற்று... எந்தப்  பிரயோசனமும் இல்லை, என்பதே.. உலக வழக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

துல்லியமாகக் கணித்துளீர்கள், இப்படியான இழி செயலுக்கு கண்டபடி ஒருவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க மாட்டினம்.  இப்படி பல சிக்கல்கள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது குறித்தே எனது கட்டுரையையும் எழுதி வாழும் புலத்தில் பதிவு செய்துள்ளேன்.

தோழி... கட்டாயம், உங்கள் பதிவை பார்ப்பேன்.   :)

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

நாதமுனி´ஸ்...  சர்வ தேசத்துடன், பேசக் கூடிய ஆட்களில்.
விக்கி, கஜேந்திரகுமார்... புதிதாக பாராளுமன்றத்துக்குள் வந்த ஆட்கள். ❤️

அதுக்குள்ளை... சுமந்திரனை, ஏன் செருகுகிறீர்கள்?
சுமந்திரன்.. இதுவரை செய்தது,  போதாதா...‼️  நாதா...   ⁉️

சர்வதேச விசாரணைகள், கருத்தரங்குகள் வரும் போதெல்லாம்...
தெம்பாக... இருந்த சம்பந்தனும், சுமந்திரனும், மாவையும்...
கோட்டு, சூட்டு....  போட்டுக் கொண்டு... 🛩️ ஜெனிவாவுக்கும், ✈️ நியூ யோர்க்கும்.. பறந்து  போய்,

ஸ்ரீ லங்கா... போர்க் குற்ற விசாரணையை,  உள்ளூர் நீதி மன்றங்களிலிலேயே...
விசாரித்துக் கொள்கின்றோம் என்று,
பச்சைப் பொய்.. சொல்லி விட்டு வந்த ஆட்கள்.  
இவற்றை... நீங்கள், இலகுவாக மறந்தாலும்... நாங்கள் மறக்க மாட்டோம்.

சுமந்திரன்,  தமிழருக்கு... "தேவையற்ற, ஆணி"  என்பதே... எனது கருத்து. :)

டிஸ்கி: ஒருவனின்... மூஞ்சையை, பார்த்தால்... 
அவனின் குணாதிசயங்களை, கண்டு பிடிக்கும்.. அரிய திறமையை,
ஆண்டவன் எனக்கு வழங்கி உள்ளார். :grin:
அதனால்.. சுமந்திரன்... "அவுட்டு" ஐயா.... 😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

சித்தரை அனுப்பி உள்ளனரே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆட தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றாளாம்.

:rolleyes: உங்கள்... தமிழ்ப் பழமொழியில், மிகப் பெரிய தவறு உள்ளது. 😎 
அதனைத் திருத்திப் போட்டு, எமக்கு... "அட்வைஸ்" பண்ணுங்கோ... சரியா.. :grin: 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

:rolleyes: உங்கள்... தமிழ்ப் பழமொழியில், மிகப் பெரிய தவறு உள்ளது. 😎 
அதனைத் திருத்திப் போட்டு, எமக்கு... "அட்வைஸ்" பண்ணுங்கோ... சரியா.. :grin: 😂 🤣

மன்னிக்க வேண்டும் புலவர் சிறி அவர்களே.🤓

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

மன்னிக்க வேண்டும் புலவர் சிறி அவர்களே.🤓

இதுக்கெல்லாம்... மன்னிப்பு, வேண்டாமே.
சும்மா... கலாய்த்துப் பார்த்தேன்.
நீங்கள்.. புலவர், அது. இது... எண்டு... 
என்னை.. மேலும், கலாய்த்து விட்டீர்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

அதென்ன நாதம்ஸ் ,ஒவ்வொரு தேர்தலுக்கும் சுமத்திரனுக்கு மட்டும் இப்படி நடக்குது?...அவர்கள் போய் பேசாமல் இருந்த்திட்டு வந்தார்கள் சரி ...சுமத்திரன் இது வரை தமிழ் மக்களுக்காய் பார்லிமென்ட் போய் என்ன பேசினார் /செய்தார் என்று சொன்னால் நானும் அறிந்து கொள்வேன் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு வலிமிகுந்த வார்த்தை மாமனிதர் ரவிராஜ் ஐயாவின் பிள்ளைகள் "அப்பாவை கொன்ற மாதிரி அம்மாவையும் கொன்று விடுவார்கள் வா அம்மா போவம்"

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் புலமை இருந்தும் இது வரை சர்வதேசத்துடன் பேசாமல் இருந்த சுமத்திரன் இனி மேல் தான் பேச போறாராக்கும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜை இந்த அரசியல் கூத்திற்குள் இழுப்பது மிகவும் பண்பற்ற செயல். ☹️

இதுகும்...  மாமனிதர், ரவிராஜ் பிறந்த மண்ணில் தான்..  இன்று, நடந்தது.
சம்பந்தப் பட்ட,  அவர்களுக்குத்தான்... அந்த வேதனை புரியும். 

இதனை.. விட,  உணர்ச்சிகரமான சம்பவங்கள்... நடந்து முடிந்துள்ளது.
அதனை.. மீண்டும் கிளறிப்  பார்ப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.  :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுகும்...  மாமனிதர், ரவிராஜ் பிறந்த மண்ணில் தான்..  இன்று, நடந்தது.
சம்பந்தப் பட்ட,  அவர்களுக்குத்தான்... அந்த வேதனை புரியும். 

இதனை.. விட,  உணர்ச்சிகரமான சம்பவங்கள்... நடந்து முடிந்துள்ளது.
அதனை.. மீண்டும் கிளறிப்  பார்ப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.  :rolleyes:

இந்திய அரசியல் கூத்துக்களை நையாண்டிசெய்வதற்கு எமக்குத் தகுதியில்லை. ☹️

2 hours ago, குமாரசாமி said:

எவ்வளவு வலிமிகுந்த வார்த்தை மாமனிதர் ரவிராஜ் ஐயாவின் பிள்ளைகள் "அப்பாவை கொன்ற மாதிரி அம்மாவையும் கொன்று விடுவார்கள் வா அம்மா போவம்"

அவர்களின் அச்சத்திற்கு நியாயமான காரணங்களுண்டு. திருமலையின் முன்னாள் பா.உ. தங்கத்துரையை கொல்வதற்கான சகல உள்வீட்டு வேலைகளையும் இந்த TNA யின் த.....வர்தானே ஒழுங்கு செய்தவர். ☹️

காலங்கள் மாறினாலும் உண்மைகள் மட்டும் மாறா 😡

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமத்திரனுக்கு சார்பாக கருத்து  இடுபவர்களுக்கு உண்மை தெரிந்தும் தங்களின் ஈகோ அடிபடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் இனி இங்கு எவ்வளவுதான் உண்மையை தேடிகொண்டுவந்து கொட்டினாலும் முயலுக்கு மூன்று கால்தான் .

ஆனால் சுமத்திரன் எனும் பதவி வெறி பிடித்தவர் எப்படியும் சுத்துமாத்து பண்ணி வருவார் என்பது முன்னமே தெரியும் எழுதியும் உள்ளோம் இனி கொலை கொள்ளை விபத்துக்கள் பெண்கள் மீதான வன்முறைகள் காரணமில்லா தற்கொலைகள் மலிந்த இடமாக வடகிழக்கு மாறும் வடமராட்ச்சியில் இன்றே பெண் விதானையின் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுக்கப்பட்டுள்ளது .போதைவஸ்த்து பாவனைகள் குடிவகைகள் மலிந்த பூமியின் நரகமாய் மாறும் கடவுள் கூட காப்பற்ற முடியாத மக்களாய் நம் சொந்தங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும்  .

(1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்?
(2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது?
(3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது?
மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?  எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.