Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ஞானசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

கேலிக்கூத்தான சொறீலங்காவின் சனநாய் அகம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

பாராளுமன்றத்தில் நல்லாக நாடகம் பார்க்கலாம். சிலம்படியும் இருக்குமோ? இல்லை தளமொன்று இல்லாமலே அந்த ஆட்டம் ஆடியவர், இனி சொல்லி வேலை இல்லை.

அவர் நல்ல மனிதன். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். சிலவேளைகளில் மூலக்கொதியால் உசாரமடையனாக இருப்பதும் உண்மை. இப்போது இவரை அரசும் கணக்கிலெடுப்பதில்லை. இருந்தாலும் நல்ல விவாதங்களை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் நல்லவர்கள் என்று கூறும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது.  சிங்களவரின் தொழில் லஞ்சசம் அழகிகள் கொடுக்கும்  சுகம் பெற்ற தாயையே மறந்து விடுவார்கள்.  மடப்பயலுகள் இப்படி சிந்தித்து இருந்தால் குடியும், குட்டியுமாய் வாழ்ந்து அனுபவித்து இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் அரைக்காற்சட்டையுடன் ...

விஜயகலா கூறியது தவறு எனின், ஞானசார ...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை | ilakkiyainfo

இவர் பிக்குகளிலேயே... வித்தியாசமானவர். 
படத்தில்... அரைக் கால் சட்டையுடன்  ஆமாத்துறு.  

இவர் திருமணம் செய்தவர் என்றும்.. அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் பிரான்சில் வசிப்பதாக.. அவரின் வாகன சாரதி,  முன்பு தெரிவித்து இருந்தார். 

இவர் காவி உடுத்தியவர்களுடன் இருந்ததை விட...
காக்கி சட்டை உடுத்தியவர்களுடன்  தான்... அதிகமாக இருந்துள்ளார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

 

ஞானசார தேரர் பிணையில் விடுதலை | ilakkiyainfo

 

ஆளின்ர தோரணை பார்க்கையில்  தூள் , முட்டை வீச்சு நடக்கும் பட்சத்தில்

0SjpEWURRzKZt1avUq9h_omlet.jpg

பாராளுமன்றில் வெங்காயம் கொண்டு சென்றா அங்கேயே  "ஒம்லெற்' போடலாம் என்டு தோன்றுகிறது தோழர்..👌

  • கருத்துக்கள உறவுகள்

காவி உடுத்ததெல்லாம் முற்றுந்துறந்த  துறவி என்று நம்பி ஏமாந்திடாதேங்கோ. முறுக்கேறி அலையிறதுகளும் நிறைய உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, பெருமாள் said:

எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending

ஏற்கனவே பாராளுமன்றம் குத்துக்கொட்டகை மாதிரி. இனி சொல்லவே தேவையில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

116871798_939451796523931_26626513436987

 

117351017_2652974091629868_3978029394870

பாவம் மனுஷன். இப்போது அந்த கட்சியின் காரியதரிசி தன்னுடைய பெயரை போட்டு அனுப்பி விடடாரம்.

சிலருக்கு சிங்களவனை பற்றி ஒரு வார்த்தை நல்லாக எழுதி விடடால் ரத்த கொதிப்பு வருகின்றது. கொஞ்சம் உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.

தமிழர்களில் நல்லவர்கள் இருப்பதுபோல நல்ல சிங்களவர்களும் இருக்கிறார்கள். ஞானத்தை சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2020 at 23:09, satan said:

சிங்களவர் நல்லவர்கள் என்று கூறும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது.  சிங்களவரின் தொழில் லஞ்சசம் அழகிகள் கொடுக்கும்  சுகம் பெற்ற தாயையே மறந்து விடுவார்கள்.  மடப்பயலுகள் இப்படி சிந்தித்து இருந்தால் குடியும், குட்டியுமாய் வாழ்ந்து அனுபவித்து இருந்திருக்கலாம். 

நீங்கள் எப்படி, மனைவியிலும் பார்க்க அம்மாவுக்கு முதலிடமா? 

யாழ் களம் படிக்கும் மனைவியாக இருந்தால் நன்று.

சிங்கள அழகிகள் தரும் சுகம் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள், நல்ல அனுபவசாலி என்று தெரிகிறது.😀என்னவாக இருந்தாலும் இப்படியொரு வாக்குமூலத்தை உணர்ச்சிவசப்பட்டு பகிரங்கதளத்தில் பதியலாமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

நீங்கள் எப்படி, மனைவியிலும் பார்க்க அம்மாவுக்கு முதலிடமா? 

பெற்ற தாயையே மறந்து ஒருவன் பிதற்றுகிறான் என்றால், மையல் தலைக்கு ஏறிவிட்டது என்பது எமது சமுதாயத்தில் நடக்கிற ஒன்று.  ஆமா! சட்டை உங்களுக்குத் தான் அளவோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

தமிழர்களில் நல்லவர்கள் இருப்பதுபோல நல்ல சிங்களவர்களும் இருக்கிறார்கள்.

இருக்கலாம், ஆனால் தமிழர் தலை நிமிர்ந்து, சுதந்திரமாய் வாழ விரும்புவோர் மிகச் சிலரே. அவர்களும் உரத்து கதைக்க மாட்டார்கள். அவர்களும் இனி வருங்காலங்களில் மாற்றப்படுவார். கொழும்பில் தங்கியிருந்த தமிழரை; சோதனை என்கிற பெயரில்  நடு ராத்திரிரியில் வாகனங்களில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றி கொண்டு போனதை டிவி யில் பார்த்த அநேக சிங்களவர் அன்று கூறியது அத்தனையும் புலிகள் என்றே.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, satan said:

பெற்ற தாயையே மறந்து ஒருவன் பிதற்றுகிறான் என்றால், மையல் தலைக்கு ஏறிவிட்டது என்பது எமது சமுதாயத்தில் நடக்கிற ஒன்று.  ஆமா! சட்டை உங்களுக்குத் தான் அளவோ?

உங்களது நிலை புரிகிறது - அனுதாபங்கள்.

32 minutes ago, satan said:

இருக்கலாம், ஆனால் தமிழர் தலை நிமிர்ந்து, சுதந்திரமாய் வாழ விரும்புவோர் மிகச் சிலரே. அவர்களும் உரத்து கதைக்க மாட்டார்கள். அவர்களும் இனி வருங்காலங்களில் மாற்றப்படுவார். கொழும்பில் தங்கியிருந்த தமிழரை; சோதனை என்கிற பெயரில்  நடு ராத்திரிரியில் வாகனங்களில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றி கொண்டு போனதை டிவி யில் பார்த்த அநேக சிங்களவர் அன்று கூறியது அத்தனையும் புலிகள் என்றே.

புலிகளையும் ஏற்றி சென்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Robinson cruso said:

அத்தனையும் புலிகள் என்றே.

 

  • கருத்துக்கள உறவுகள்

  தமிழரின் பணத்தையும், உயிரையும்  பிடுங்குவதற்கு பல வழிகள். அதில் இதுவும் ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் எம்பியாவதில் சிக்கல்! – கட்சி பொது செயலாளர் காணாமல் போனார்?

gnaaaaaaaaaaaaaaaaaaaaa.jpg?189db0&189db0

 

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொது செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் ஞானசார தேரரின் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறித்த தேரரை கண்டறிய உதவுமாறு கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ஆனந்த சாகர தேரர் பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,

“ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வதை தடுப்பதற்கு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் நடைபெறுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போயுள்ளார். இதன்காரணமாக தேசிய பட்டியல் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சி 17 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு 67 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளோம். எமது கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் விமலதிஸ்ஸ தேரர் தேர்தலின் பெறுபேறுகள் வெளியான தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். தொலைப்பேசியின் ஊடாக அழைப்பு ஏற்படுத்திய போதும் இது வரையில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை. அவர் காணாமல் போயுள்ளாரா? அல்லது கடத்தப்பட்டுள்ளரா? என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.

தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்ல கூடாது என்பதை நோக்கமாக கொண்டு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளோம். தேசிய பட்டியல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதை தாமதப்படுத்துவதாகவும், அதற்குள் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள கட்சியின் பொதுச் செயலாளரை கண்டுப்பிடிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். 14ம் திகதிக்கு முன்னர் இவர் கிடைக்காவிடின் கட்சியின் யாப்பிற்கு அமைய நீதிமன்றத்தை நாடி செயற்குழுவின் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்வோம்” – என்றார்.

https://newuthayan.com/ஞானசார-தேரர்-எம்பியாவதில/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமத்துறுவே.... காணாமல் போகிற அளவுக்கு, காட்டாட்சி நடக்கிறது.

வினை விதைத்தவன், வினை தான்... அறுப்பான். 

அறுக்கட்டும்... நாங்க வேடிக்கை பார்ப்போம்.

🍿 பொப் கோன் எங்கே? 😁

4 hours ago, தமிழ் சிறி said:

ஆமத்துறுவே.... காணாமல் போகிற அளவுக்கு, காட்டாட்சி நடக்கிறது.

வினை விதைத்தவன், வினை தான்... அறுப்பான். 

அறுக்கட்டும்... நாங்க வேடிக்கை பார்ப்போம்.

🍿 பொப் கோன் எங்கே? 😁

தமிழசிறி, ஆமாத்தூரு காணாமலாக்கப்படவில்லை. அவர் இரண்டு மூன்று வாகனங்களில் ஏறி கடைசியாக நுகேகொடவில் இருந்து எங்கோ போய் ஒளிந்துவிடடார். அதட்குமுதல் தன்னுடைய பெயரை தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைத்துவிட்டுதான் போயிருக்கிறார். இந்தக்கூடடம் நுகேகொட வரைக்கும் தேடி அலைந்துவிட்டு திரும்பிவிடடார்கள். ஞானத்துக்கு கொடுப்பதில் இவருக்கு விருப்பமில்லையாம். அதுதான் இங்கு பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை கடத்தி, நாடகமாடி கப்பம் பெற்ற நாடு அவனுகளே ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுகிறானுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D.jpg

தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நானே முடிவெடுப்பேன் – அத்துரலியே ரத்ன தேரர்

தேசியப் பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தன் வசமே உள்ளதாக  அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ”அபே ஜன பல கட்சியின் அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக வெவ்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுதல் பொருத்தமான ஒரே நடவடிக்கையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

அபே ஜனபல கட்சியின் செயலாளராக கூறப்படும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட போதும், நெருக்கடிக்கு மத்தியில் ஞானசார தேரரின் பெயரிடப்பட்டுள்ளமையினால் பல பிரச்சினைகள் உருவெடுததுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/தேசிய-பட்டியல்-உறுப்பின-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.