Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Correct அவனவன் உழைத்தால் தான் அவனவனுக்கு சோறு .

ஆக, ஈழத்தமிழர்கள் என்கிற பொதுவான அடையாளம் தேவையில்லை. கிழக்குத் தமிழர்கள், வடக்குத் தமிழர்கள் என்று பிரிந்துவிட்டது என்கிறீர்கள். 

40 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Wrong கிழக்கு தமிழர்கள் முஸ்லிம்களுடன் வடக்கு தமிழர்களை விட அதிக முன் அனுபவம்  கொண்டிருப்பவர்கள் என்பதால் சாத்தியப்படாதவை பின்னே போய்  இருப்பையும் பறிகொடுக்க தயாரில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். வடக்கு தமிழர்கள் தமக்காக  ஒரு பிரதிநிதியை கூட தெரிவுசெய்யமுடியாமல் இனவிகிதாசாரத்தில் நொண்டும் போது சிலவேளை  ஞானம் பிறக்கலாம், 

Don't Worry அப்போதும் புலம் பெயர்சினால் தமிழ் தேசியம் நீரூற்றி பேணப்படும். ஆனால்  அவர்களது பிள்ளைகளாளோ வெள்ளைகளுடனும் காப்பிலிகளுடனும் கலந்து ஜனநாயக பன்மைத்துவம் பேணப்படும்   

சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதால் கிழக்கின் இருப்பு பாதிக்கப்படாது என்கிறீர்கள். ஆக, கிழக்கில் கல்லோய முதல், அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு என்று நடத்தப்படும் குடியேற்றங்கள் முஸ்லீம்களால்த்தான் என்றும், சிங்களவர்கள் குடியேறவில்லை என்றும் சொல்கிறீர்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இன்று தமிழருக்கான மிகப்பெரும் எதிரி முஸ்லீம்களேயன்றி சிங்களவர்கள் இல்லையென்கிற முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், சிங்கள அரசேதான் முஸ்ல்லிம்களுக்கும், தமக்குக் கீழ் சேவகம் செய்யும் தமிழர்களுக்கும் ஒன்றாகப் படியளக்கும்போது, எப்படி முஸ்லீம்களுக்கெதிராக அதே அரசில் இருந்துகொண்டு செயற்படப்போகிறீர்கள் என்று தெரியவில்லை. முஸ்லீம்களுக்கெதிரான இனவாத அரசியலைக் கருணா செய்யவில்லையென்பதும், கிழக்கில் தமிழ்ப் பிரதிநிதுத்துவத்தினை அழிக்கவே கருணா திகாமடுல்லையில் களமிறக்கப்படவில்லையென்பதும் சத்தியாம்கிறது. 

புலம்பெயர் தமிழர்கள் மேலிருக்கும் உங்களின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது. அவர்களை நீங்கள் தூக்கியெறிந்தபின்னர் அவர்கள் யாரை முடித்தால்த்தான் உங்களுக்கென்ன? போராட்டம் வளர்வதற்கும், சிங்களப் பேரினவாதம் செய்த இனக்கொலை வெளியே தெரிவதற்கும் புலம்பெயர் தமிழர் செய்த பங்களிப்பும்,  இன்றுவரை தாயகத்தில் , கிழக்கு மாகாணம் உட்பட புலம்பெயர் தமிழர் செய்யும் உதவிகளும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கு தமிழர்களின் முதல் பிரட்ச்சினை முஸ்லிம்கள் + அவர்களுடன் அரசியல் செய்யத்தெரியாத தமிழ் தலைமைகள் 

கிழக்குத் தமிழரின் முக்கிய பிரச்சினை முஸ்லீம்களா? சிங்களவர்களால் ஏதும் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லைபோலும். அப்படியானால் கடந்த 40 வருடகாலமாக எதற்காக அவர்களுக்கெதிராகப் போராட்டம்? சிலவேளை அது வடக்குத்தமிழருக்கும் சிங்களவருக்குமான பிரச்சினை என்று கூறவருகிறீர்களோ? 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

தேசிய தலைவர் போன்றொரு தலைவர் இனி வரப்போவதேயில்லை

எந்தத் தேசியத்தலைவரைக் குறிப்பிடுகிறீர்கள்? 2003 முன்னர் நீங்கள் அழைத்த தலைவரையா அல்லது அதற்குப்பிறகு நீங்கள் வரிந்திருக்கும் தலைவரையா? 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நீதி கேட்க்கும் பொறிமுறையை தெளிவாக மக்களிடம் விளக்கவேண்டியது நீதிகேட்பவர்களின் கடமை, எப்படி...? எதைவைத்து...?, யாரை வைத்து...? ,யார் கேட்பது...? என்ற இப்படியான கேள்விகளுக்கு  இந்த பத்தியை எழுதிய உங்களுக்கே பதில் தெரியாது என்பதுதான் உண்மை.

ஆக, நீதிகேட்கும் பொறிமுறை இல்லாததனால், அந்த அநீதிகளைச் செய்தவர்களிடமே அடைக்கலமாவதுதான் வழியென்கிறீர்கள்? போர்க்குற்றவாளிகளை ஆதரித்துக்கொண்டு அவர்களின் குற்றங்களை உங்களால் கேள்விகேட்க முடியுமா? அல்லது அது தேவையற்ற விடயம் என்கிறீர்களா? 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கு தமிழர்கள் கடைசி துரும்பாக தமது இருப்பையாவது  காப்பாற்றிவிடவேணும் என்றே பிரயத்தனப்படுகிறார்கள், சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதை விட வடக்கு தமிழர்கள் முற்றுமுழுதாக முஸ்லீம் மயாமாகிவிட்ட  கிழக்கிஸ்தானுடன் சேர்ந்து வாழும் நிலை வரக்கூடாது என்றே போராடுகிறார்கள்.  

இரு சிறுபான்மையினங்களையும் பிரித்தாண்டு, இரு இனங்களையும் மோதவிட்டு இன்று இருவரையும் கொன்புசீவுவது நீங்கள் அடைக்கலமாகியிருக்கும் சிங்களப் பேரினவாதம் என்கிறபோது, நீங்கள் உங்கள் இறுதி இருப்பைத் தக்கவைக்கப் போராடுவது முஸ்லீம்களுடன் அல்லாமல், அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சிங்கள்ப் பேரினவாதத்துடன் தான் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?  வடக்குத் தமிழர்கள் கிழக்குஸ்த்தானுடன் வாழக்கூடாதெனும் நல்லெண்ணத்துடன் இன்று அயராது பாடுபடும் நீங்கள் எங்கள் மொத்தத் தமிழ்த் தாயகத்தையும் சிங்களமயமாக்கக் காத்திருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லையா? 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னும் தமிழ் தேசிய நீரோட்டத்தில் வடக்குடன் சேர்ந்து பங்கெடுத்தவர்கள் தான் ,ஆனால் வடக்கும் கிழக்கும் சேர்ந்து தேசியத்தை ஒப்படைத்தது கசப்போக்கிலிகளிடம், ஐந்தைந்து வருடம் குத்தகைக்கு எடுத்து இலங்கையிலே மிகவும் நலிவுற்ற இனமாக தமிழர்களை மாற்றிய சாதனையை மட்டுமே செய்திருக்கிறார்கள்

ஆக, நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளுக்கோ அல்லது அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களுக்கோ தலைமை தாங்கக்கூடியவர்கள் இன்று இல்லாததனால், பேசாமல் அவற்றை செய்தவனிடமே அடைக்கலமாவதன் மூலம் சாதித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். கூட்டமைப்பு மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்திற்குச் செய்ததாக நீங்கள் கூறும் உதவியை, நீங்கள் அவர்களிடம் அடைக்கலமாகியதன் மூலம் வெளிப்படையாகவே செய்துவிடலாம், அதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள்? 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஈழ தேசியவாதிகள் ஒழுக்கெடுக்கும் குடிசைகளில் பீத்தல் ,விழுந்த சோட்டி ,சாரனுடன் தேசியம் தலைக்குத்தாக விழாமல் முரட்டு முட்டை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்  

இந்த ஈழத் தேசியவாதிகளின் நல்வாழ்வுக்காகத்தான் நீங்கள் போர்க்குற்றவாளிகளுடன் ஒன்றித்துப் பயணிக்கிறீர்கள் என்று சொல்ல வருகிறீர்கள். 

2 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையிலே மிகவும் நலிவுற்ற இனமாக தமிழர்களை மாற்றிய சாதனையை மட்டுமே செய்திருக்கிறார்கள்

இப்போது போர்க்குற்றவாளிகளை நீங்கள் ஆதரிப்பதாக எடுத்திருக்கும் முடிவு இந்த நலிந்த மக்களை மீண்டும் வலுவானோர் ஆக்கும் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பது தெரிகிறது.

  • Replies 98
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஆக, ஈழத்தமிழர்கள் என்கிற பொதுவான அடையாளம் தேவையில்லை. கிழக்குத் தமிழர்கள், வடக்குத் தமிழர்கள் என்று பிரிந்துவிட்டது என்கிறீர்கள். 

சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதால் கிழக்கின் இருப்பு பாதிக்கப்படாது என்கிறீர்கள். ஆக, கிழக்கில் கல்லோய முதல், அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு என்று நடத்தப்படும் குடியேற்றங்கள் முஸ்லீம்களால்த்தான் என்றும், சிங்களவர்கள் குடியேறவில்லை என்றும் சொல்கிறீர்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இன்று தமிழருக்கான மிகப்பெரும் எதிரி முஸ்லீம்களேயன்றி சிங்களவர்கள் இல்லையென்கிற முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், சிங்கள அரசேதான் முஸ்ல்லிம்களுக்கும், தமக்குக் கீழ் சேவகம் செய்யும் தமிழர்களுக்கும் ஒன்றாகப் படியளக்கும்போது, எப்படி முஸ்லீம்களுக்கெதிராக அதே அரசில் இருந்துகொண்டு செயற்படப்போகிறீர்கள் என்று தெரியவில்லை. முஸ்லீம்களுக்கெதிரான இனவாத அரசியலைக் கருணா செய்யவில்லையென்பதும், கிழக்கில் தமிழ்ப் பிரதிநிதுத்துவத்தினை அழிக்கவே கருணா திகாமடுல்லையில் களமிறக்கப்படவில்லையென்பதும் சத்தியாம்கிறது. 

புலம்பெயர் தமிழர்கள் மேலிருக்கும் உங்களின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது. அவர்களை நீங்கள் தூக்கியெறிந்தபின்னர் அவர்கள் யாரை முடித்தால்த்தான் உங்களுக்கென்ன? போராட்டம் வளர்வதற்கும், சிங்களப் பேரினவாதம் செய்த இனக்கொலை வெளியே தெரிவதற்கும் புலம்பெயர் தமிழர் செய்த பங்களிப்பும்,  இன்றுவரை தாயகத்தில் , கிழக்கு மாகாணம் உட்பட புலம்பெயர் தமிழர் செய்யும் உதவிகளும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. 

கிழக்குத் தமிழரின் முக்கிய பிரச்சினை முஸ்லீம்களா? சிங்களவர்களால் ஏதும் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லைபோலும். அப்படியானால் கடந்த 40 வருடகாலமாக எதற்காக அவர்களுக்கெதிராகப் போராட்டம்? சிலவேளை அது வடக்குத்தமிழருக்கும் சிங்களவருக்குமான பிரச்சினை என்று கூறவருகிறீர்களோ? 

எந்தத் தேசியத்தலைவரைக் குறிப்பிடுகிறீர்கள்? 2003 முன்னர் நீங்கள் அழைத்த தலைவரையா அல்லது அதற்குப்பிறகு நீங்கள் வரிந்திருக்கும் தலைவரையா? 

ஆக, நீதிகேட்கும் பொறிமுறை இல்லாததனால், அந்த அநீதிகளைச் செய்தவர்களிடமே அடைக்கலமாவதுதான் வழியென்கிறீர்கள்? போர்க்குற்றவாளிகளை ஆதரித்துக்கொண்டு அவர்களின் குற்றங்களை உங்களால் கேள்விகேட்க முடியுமா? அல்லது அது தேவையற்ற விடயம் என்கிறீர்களா? 

இரு சிறுபான்மையினங்களையும் பிரித்தாண்டு, இரு இனங்களையும் மோதவிட்டு இன்று இருவரையும் கொன்புசீவுவது நீங்கள் அடைக்கலமாகியிருக்கும் சிங்களப் பேரினவாதம் என்கிறபோது, நீங்கள் உங்கள் இறுதி இருப்பைத் தக்கவைக்கப் போராடுவது முஸ்லீம்களுடன் அல்லாமல், அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சிங்கள்ப் பேரினவாதத்துடன் தான் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?  வடக்குத் தமிழர்கள் கிழக்குஸ்த்தானுடன் வாழக்கூடாதெனும் நல்லெண்ணத்துடன் இன்று அயராது பாடுபடும் நீங்கள் எங்கள் மொத்தத் தமிழ்த் தாயகத்தையும் சிங்களமயமாக்கக் காத்திருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லையா? 

ஆக, நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளுக்கோ அல்லது அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களுக்கோ தலைமை தாங்கக்கூடியவர்கள் இன்று இல்லாததனால், பேசாமல் அவற்றை செய்தவனிடமே அடைக்கலமாவதன் மூலம் சாதித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். கூட்டமைப்பு மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்திற்குச் செய்ததாக நீங்கள் கூறும் உதவியை, நீங்கள் அவர்களிடம் அடைக்கலமாகியதன் மூலம் வெளிப்படையாகவே செய்துவிடலாம், அதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள்? 

இந்த ஈழத் தேசியவாதிகளின் நல்வாழ்வுக்காகத்தான் நீங்கள் போர்க்குற்றவாளிகளுடன் ஒன்றித்துப் பயணிக்கிறீர்கள் என்று சொல்ல வருகிறீர்கள். 

இப்போது போர்க்குற்றவாளிகளை நீங்கள் ஆதரிப்பதாக எடுத்திருக்கும் முடிவு இந்த நலிந்த மக்களை மீண்டும் வலுவானோர் ஆக்கும் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பது தெரிகிறது.

ஓவராக யோசிக்காதீங்கோ....
கிழக்கில் தமிழர்களது இருப்பையும் (முஸ்லிம்கள் ,சிங்களவர்களிடமிருந்து)
வடக்கில் தமிழர்களது இருப்பையும் (அதே முஸ்லிம்கள் ,சிங்களவர்களிடமிருந்து) எப்படி தக்க வைக்கப்போகிறீர்கள் ....?
சிங்கள அரச எதிர்ப்பு, தமிழ் தேசியம் ,போர் குற்ற விசாரணை எல்லாம் கண்டிப்பாக இருக்கவேண்டியவை தான் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இருப்பை கேள்விக்குறியாக்கி விட்டு யாருக்காக இதையெல்லாம் சாதிக்கப்போகிறீர்கள் ...? 
முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள் என்கிறீர்களே ஏன் முஸ்லீம் மக்களுக்கு அறிவில்லையா ...? தாம் கொம்பு சீவப்படுகிறோம் என்பதே தெரியாதா...? கல்முனை தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைக்கான பிரதேச செயலக  கோரிக்கையை ஏன் தங்கள் உயிரை கொடுத்து உண்ணாவிரதமிருந்து  எதிர்த்தார்கள் என்று தெரியுமா...? இதற்கும் சிங்கள இனவாதிகள் தான் காரணமா.

சுமந்திரன் வென்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில்  அதிகமானோர் யாரென்று அவரது முகப்புத்தகம் சென்று பாருங்கள், ஏன் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள் செய்த உதவிக்காவா என்று கேட்க அதிலொரு நபர் சொன்னது இவர் போன்றவர்கள் தான் பேரினவாதத்தின் சர்வாதிகாரத்திற்கு தடைக்கல் என்று. ஏன் அவர்களுக்கு மாற்றினத்தின் அரசியல்வாதிதானோ தேவை பேரினவாதத்திற்கு எதிராக போராட ...வகை வகையாக அவர்கள் தெரிவு செய்து அனுப்பிய அரசியல்வாதிகள் ? ஏனென்றால் தமிழன் உசார் மடையன் கொஞ்சம் ஏத்திவிட்டால் போதும் ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு மட்டும் தான் இருக்கு என்று பேரினவாதத்தின் மொத்த தரித்திரத்தையும் 
வாங்கி தானும் தின்று மிகுதியை தனக்கு வாக்களித்த மக்கள்  மேலும் வாந்தி எடுத்துவிடுவார், 
ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகள் எந்த அரசு ஆட்சிக்குவருகிறதோ அதன் பக்கம் உட்க்காந்து அபிவிருத்தியை அவர்களது மக்களுக்கு  பெருக்கி  நமது தமிழ் அரசியல் வியாதிகள் அடிக்கும் கூத்தை பார்த்து மகிழ்வார்கள் ,இதைத்தானே காலம் காலமாக செய்து வந்திருக்கிறீர்கள் 

இறுதியாக மில்லியன் டாலர் கொஸ்ட்டின் 
இங்குள்ள மக்கள் போராடியும் சரி புடுங்குப்பட்டும்  சரி சோர்ந்து ஒடிந்து போய்விட்டார்கள் 
இனிமேல் அவர்களுக்கு திராணியில்லை , புலம்பெயர் தேசியவாதிகள் அனைவரும் நாடு திரும்பி 
அவர்களது  Road Map and Duration ஐ விளக்கி  ஈழத்தமிழர்களின் அரசியலை மேற்கொண்டு முன்னெடுக்க தயாரா.....? நீங்கள் எந்த வழியில் செல்வதென்றாலும் சரி முழு ஆதரவை தமிழர்கள் வழங்கத்தயார்  ஆனால் எல்லோரும் இங்கே வரவேண்டும், இங்கேயிருந்து கொண்டு அரசியல் செய்யவேண்டும் தயாரா....?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஈழத்தமிழர்களின் அரசியலை மேற்கொண்டு முன்னெடுக்க தயாரா.....? நீங்கள் எந்த வழியில் செல்வதென்றாலும் சரி முழு ஆதரவை தமிழர்கள் வழங்கத்தயார்  ஆனால் எல்லோரும் இங்கே வரவேண்டும், இங்கேயிருந்து கொண்டு அரசியல் செய்யவேண்டும் தயாரா....?

உங்களின் ஏனைய கேள்விகளுக்கு பதில் நான் ஏற்கனவே எழுதியதில் இருக்கிறது. நீங்கள் உங்கள் எதிர்க்கேள்விகளை எவ்வளவு சிக்கலாகக் கேட்டாலும், நான் விளக்கமாகப் பதிலளித்திருக்கிறேன்.

தமிழர்களை இன்றைய இழிநிலைக்குக் கொண்டுவந்த சுமந்திரன் எனும் கோடரிக் காம்பின் முகப்புத்தகத்தில் இருப்பது அவரது அடிவருடிகள்தான் என்கிறபடியால் நான் அதைப் பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

உங்களின் மில்லியன் டாலர் கொஸ்ட்டினுக்கான எனது பதில்...இப்போதைக்கு இங்கிருந்துதான் போராட முடியும்

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஓவராக யோசிக்காதீங்கோ....
கிழக்கில் தமிழர்களது இருப்பையும் (முஸ்லிம்கள் ,சிங்களவர்களிடமிருந்து)
வடக்கில் தமிழர்களது இருப்பையும் (அதே முஸ்லிம்கள் ,சிங்களவர்களிடமிருந்து) எப்படி தக்க வைக்கப்போகிறீர்கள் ....?
சிங்கள அரச எதிர்ப்பு, தமிழ் தேசியம் ,போர் குற்ற விசாரணை எல்லாம் கண்டிப்பாக இருக்கவேண்டியவை தான் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இருப்பை கேள்விக்குறியாக்கி விட்டு யாருக்காக இதையெல்லாம் சாதிக்கப்போகிறீர்கள் ...? 
முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள் என்கிறீர்களே ஏன் முஸ்லீம் மக்களுக்கு அறிவில்லையா ...? தாம் கொம்பு சீவப்படுகிறோம் என்பதே தெரியாதா...? கல்முனை தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைக்கான பிரதேச செயலக  கோரிக்கையை ஏன் தங்கள் உயிரை கொடுத்து உண்ணாவிரதமிருந்து  எதிர்த்தார்கள் என்று தெரியுமா...? இதற்கும் சிங்கள இனவாதிகள் தான் காரணமா.

சுமந்திரன் வென்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில்  அதிகமானோர் யாரென்று அவரது முகப்புத்தகம் சென்று பாருங்கள், ஏன் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள் செய்த உதவிக்காவா என்று கேட்க அதிலொரு நபர் சொன்னது இவர் போன்றவர்கள் தான் பேரினவாதத்தின் சர்வாதிகாரத்திற்கு தடைக்கல் என்று. ஏன் அவர்களுக்கு மாற்றினத்தின் அரசியல்வாதிதானோ தேவை பேரினவாதத்திற்கு எதிராக போராட ...வகை வகையாக அவர்கள் தெரிவு செய்து அனுப்பிய அரசியல்வாதிகள் ? ஏனென்றால் தமிழன் உசார் மடையன் கொஞ்சம் ஏத்திவிட்டால் போதும் ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு மட்டும் தான் இருக்கு என்று பேரினவாதத்தின் மொத்த தரித்திரத்தையும் 
வாங்கி தானும் தின்று மிகுதியை தனக்கு வாக்களித்த மக்கள்  மேலும் வாந்தி எடுத்துவிடுவார், 
ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகள் எந்த அரசு ஆட்சிக்குவருகிறதோ அதன் பக்கம் உட்க்காந்து அபிவிருத்தியை அவர்களது மக்களுக்கு  பெருக்கி  நமது தமிழ் அரசியல் வியாதிகள் அடிக்கும் கூத்தை பார்த்து மகிழ்வார்கள் ,இதைத்தானே காலம் காலமாக செய்து வந்திருக்கிறீர்கள் 

இறுதியாக மில்லியன் டாலர் கொஸ்ட்டின் 
இங்குள்ள மக்கள் போராடியும் சரி புடுங்குப்பட்டும்  சரி சோர்ந்து ஒடிந்து போய்விட்டார்கள் 
இனிமேல் அவர்களுக்கு திராணியில்லை , புலம்பெயர் தேசியவாதிகள் அனைவரும் நாடு திரும்பி 
அவர்களது  Road Map and Duration ஐ விளக்கி  ஈழத்தமிழர்களின் அரசியலை மேற்கொண்டு முன்னெடுக்க தயாரா.....? நீங்கள் எந்த வழியில் செல்வதென்றாலும் சரி முழு ஆதரவை தமிழர்கள் வழங்கத்தயார்  ஆனால் எல்லோரும் இங்கே வரவேண்டும், இங்கேயிருந்து கொண்டு அரசியல் செய்யவேண்டும் தயாரா....?

உங்களுடன் வாதாடியதில் எனக்குள் இருந்த கோபம் ஓய்ந்துவிட்டது. சரி, ஒரு முடிவுடன் தான் செயற்படுகிறீர்கள். கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இதனால் நன்மை வந்தால் மகிழ்ச்சியே. நாம் குறுக்கே நிற்கத் தேவையில்லை.

ஆனால், ஏதும் சிக்கல் என்றால் சென்ற வழியிலேயே மீண்டும் வாருங்கள், நாங்கள் காத்திருப்போம். மீண்டும் சேர்ந்தே பயணிக்கலாம்.

முயற்சி ஈடேற வாழ்த்துக்கள் அக்னி!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

இதில் கோவிக்க என்ன இருக்கண்ணை 
யாழ் களத்தில் நான் பெருமளவில் மதிப்பு வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர் 
அதனால் தான் நீங்கள் ரஞ்சித் என்று பெயர்மாற்றினாலும் நான் ரகு அண்ணை  என்று அழைப்பது ,
இங்குள்ள மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டு விட்டார்கள் , எல்லை கிராமங்களில் அளவுக்கதிகமான மதமாற்றங்கள் (மதம் மாறி வர்த்தமானியில் பெயர்  மாற்றி  வந்தால் பள்ளி வாசலால் 5 லட்சம் பணமும் தொழில் முயற்சியும் செய்துதரப்படும் (பெட்டிக்கடை அல்லது இடியப்பம் அவித்தல் இத்தியாதி ...இத்தியாதி ) ), லவ் ஜிஹாத் (அவர்கள் இல்லை என்றாலும் அதுதான் உண்மை உ+ம் சாரா )  இப்படி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுதான் இவர்கள் வேலை, இப்படியான இழிநிலைக்கு கொண்டுவந்து மக்களை விட்டது சாட்சாத் கூத்தமைப்பும் அவர்களை தொடர்ந்து தூரநோக்கற்று திரும்ப திரும்ப தெரிவுசெய்தவர்களும் தான் 

இம்முறை அபிவிருத்தி அரசியலை கையிலெடுத்து பார்ப்போம் குறைந்தபட்சம் இப்படியான அவலநிலையிலிருந்து  அவர்களுக்கு சுதாரித்துக்கொள்வதற்காக கூட  ஒரு இடைவெளி (Gap) கிடைக்கிறதா என்று  

19 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சரியாக சொன்னீர்கள் அக்கினியஸ்த்ர , இதே வண்ணமாக வன்னி மக்களும் முடிவை எடுக்க வேண்டும். இன்று தளி மன்னாரில் இருந்து மன்னர் ஊடக சிலாபத்துக்கு சென்றால் வீதி இரு மருங்கிலும் முஸ்லீம் குடியேற்றங்களை நிறையவே காணாலாம். வேறு வேறு மாவட்ட்ங்களில் இருந்து எல்லாம் அங்கு கொண்டு வந்து குடியற்றி விடடான். இந்த ஆட்சி வந்தபடியால் ஓரளவுக்கு அவனது தொல்லை குறையும். எனவே இனி வரும் காலங்களில் வன்னி மக்கள் மடடக்கலப்பு , யாழ்ப்பாண மக்களைப்போல ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். வன்னியில் டக்ளசுக்கு ஒரு ஆசனம் கொடுத்தாலும் அது போதுமாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

இத்தால் நீங்கள் சொல்லவருவதாவது அப்பாவிப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தை மீள பதிவு செய்தது கூட நியாயமற்ற செயல் என்பதேயாகும். அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில் இணைய நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை  தொடர்புகொண்டு எங்கள் தலைவர் பிள்ளையான் தலமையிலான குழு முன்னர் செய்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் குறித்த செய்திகள் இன்னும் இணையத்தில் இருக்கின்றது . அவை நியாயமற்ற செயல்  ஆகவே  இந்த செய்திகளை நீக்குங்கள் என்று கோருங்கள்.  நான் எதோ மட்டக்கிளப்பில் நின்று ஆர்பாட்டம் செய்வதுபோல் என்னை தட்டிகேட்பதாக கற்பனை செய்து பதிவிடுவது பொருத்தமற்ற கருத்து. நான் பழைய யாழ்பதிவை இணைத்தேன் அவ்வளவுதான். முதலில் மீனகத்தை தொடர்பு கொண்டு நீக்க கோருங்கள். 

https://www.meenagam.com/?p=12004

இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. 

யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும்? யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் ? புரியவில்லை. 

கருணாவும் பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்தவர்ள் தானே ? அவர்களைத் தான் சொல்கின்றீர்களா ?

-------

எனது கருத்தை தெளிவாக எழுதி விட்ட பின்னும் அதில் இருந்து ஓர் ,இரு வரிகளை எடுத்து மீனகத்தை தொடர்பு கொள்ளுங்கோ ,மண்ணாங்கட்டியை தொடர்பு கொள்ளுங்கோ என்று எழுதுவது உங்கள் கருத்து வரட்சியை காட்டுகிறது .

பொதுவாக வட,கிழக்கு சம்மந்தமாய் எழுதிய கருத்தை பாலியல் சார்ந்து எழுதியது உங்கள் கருத்துக்களின் அறத்தை கேள்விக்குறியாக்குகிறது 
இதன் பின்னரும் உங்களுடன் கருத்துரையாடினால் நான் மடச்சியாயத் தான் இருப்பேன் .

பி;கு ;நான் எழுதியது  கீழே ரகுவிற்கு நன்றாக விளங்கி இருக்குது...அப்படி இருந்தும் உங்களுக்கு பச்சை குத்தி இருக்கிறார்...இப்படித் தான் ஆட்கள்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/8/2020 at 20:10, பெருமாள் said:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார்.

https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/

கொலை செய்து போட்டு ஜெயில்லை இருக்கிறனவனையும் தியாகி எண்டு சொல்ல கூட்டம் இருந்தால் நாட்டின்ரை பிரதமராயும் வரலாம். எல்லாம் பக்கத்து நாட்டைப்பாத்து வாற வினையள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கொலை செய்து போட்டு ஜெயில்லை இருக்கிறனவனையும் தியாகி எண்டு சொல்ல கூட்டம் இருந்தால் நாட்டின்ரை பிரதமராயும் வரலாம். எல்லாம் பக்கத்து நாட்டைப்பாத்து வாற வினையள் 😎

யாரு செய்தாலும் கொலை கொலை தான். அது பிரபாகரன் சொல்லி செய்தால் என்ன ? பிள்ளையான் சொல்லி செய்தால் என்ன ?
பிரபாகரன் செய்யும் போது விசிலடிக்க கூட்டம் பிள்ளையான் செய்யும் போது கேள்வி கேட்குது 🤔
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அது பிரபாகரன் சொல்லி செய்தால் என்ன ?

பிரபாகரன் ஒருபோதுமே செய்யவில்லை. புலிகள் அமைப்பே சொல்லி செய்தது, பிரபாகரன் புலிகளின் விதிகளுக்கு கட்டுப்பட்டு எடுத்த முடிவினால்.

அதுவும் பிரபாகரனின் தனிப்பட்ட முடிவல்ல, புலிகளின் பல்வேறு பகுதிகளின் நியாயாதிக்க தர்க்கத்திற்கு உட்பட்டே வந்திருக்கும்.

விதி விலக்குகள் இருந்து இருக்கலாம். அதை கூட பொறுப்பு கூறக் கூடிய விதிமுறை கட்டமைக்குள்ளேயே எடுத்து இருக்க முடியும், தன்னிச்சையாக அல்ல.   

விதிகளுக்கு கட்டுப்பட்டு  வன்முறை பிரோயகிகப்படும் போது, அது நியாயாதிக்கதுக்கு உட்பட வலிமை. 

இதை விட, புலிகள் societal legitimacy ஐ இரு வழியாக, தமாகவும் கொண்டிருதனர், மக்கள் இடத்திலும் இருந்தது.  

இராணுவ தாக்குதல்களை புலிகள் காலஅவகாசம் இன்றியே செய்தனர். 

அரசியல், சமூக தாக்குதல்களில், காலஅவகாசம் மற்றும்  எச்சரிக்கை உடனே செய்தனர். 

ஆகவே பிள்ளையான், கருணை போன்றவர்கள், காடையர் எனும் பெயரில் இருந்து எந்த பெயரிலும் அழைக்க முடியும்.    

இதை நீங்கள் ஏற்க மாடீர்கள் என்பது தெரியும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

யாரு செய்தாலும் கொலை கொலை தான். அது பிரபாகரன் சொல்லி செய்தால் என்ன ? பிள்ளையான் சொல்லி செய்தால் என்ன ?
பிரபாகரன் செய்யும் போது விசிலடிக்க கூட்டம் பிள்ளையான் செய்யும் போது கேள்வி கேட்குது 🤔
 
போரில் எதிரிகளை கொல்வதுக்கும் தான் தோன்றி தனமாய் சொத்துக்கு ஆசைப்பட்டு கொள்ளையடிக்கும்போது  ஆளை கொல்வதுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளறக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kadancha said:

பிரபாகரன் ஒருபோதுமே செய்யவில்லை. புலிகள் அமைப்பே சொல்லி செய்தது, பிரபாகரன் புலிகளின் விதிகளுக்கு கட்டுப்பட்டு எடுத்த முடிவினால்.

அதுவும் பிரபாகரனின் தனிப்பட்ட முடிவல்ல, புலிகளின் பல்வேறு பகுதிகளின் நியாயாதிக்க தர்க்கத்திற்கு உட்பட்டே வந்திருக்கும்.

விதி விலக்குகள் இருந்து இருக்கலாம். அதை கூட பொறுப்பு கூறக் கூடிய விதிமுறை கட்டமைக்குள்ளேயே எடுத்து இருக்க முடியும், தன்னிச்சையாக அல்ல.   

விதிகளுக்கு கட்டுப்பட்டு  வன்முறை பிரோயகிகப்படும் போது, அது நியாயாதிக்கதுக்கு உட்பட வலிமை. 

இதை விட, புலிகள் societal legitimacy ஐ இரு வழியாக, தமாகவும் கொண்டிருதனர், மக்கள் இடத்திலும் இருந்தது.  

இராணுவ தாக்குதல்களை புலிகள் காலஅவகாசம் இன்றியே செய்தனர். 

அரசியல், சமூக தாக்குதல்களில், காலஅவகாசம் மற்றும்  எச்சரிக்கை உடனே செய்தனர். 

ஆகவே பிள்ளையான், கருணை போன்றவர்கள், காடையர் எனும் பெயரில் இருந்து எந்த பெயரிலும் அழைக்க முடியும்.    

இதை நீங்கள் ஏற்க மாடீர்கள் என்பது தெரியும். 

இதை எழுதும் போது உங்களுக்கு கொஞ்சம் கூட சிரிப்பு வரேல்லையா ...நீங்கள் எழுதினதை நீங்கள் கூட நம்பி இருக்க மாட்டார்கள் ...இதில நான் வேற நம்போனுமாக்கும்.
 
22 minutes ago, பெருமாள் said:

போரில் எதிரிகளை கொல்வதுக்கும் தான் தோன்றி தனமாய் சொத்துக்கு ஆசைப்பட்டு கொள்ளையடிக்கும்போது  ஆளை கொல்வதுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளறக்கூடாது .

பெருமாள் ,உங்களுக்கே நல்லது தெரியும் சும்மா எழுத வேண்டும் என்பதற்காய் எழுத கூடாது .
நான் யுத்தத்தை குறிப்பிடவில்லை தனிப்பட்ட கொலைகளையே குறிப்பிட்டேன் 
டக்கி ,செல்வம் ,சித்தர்  போன்றவர்களை அமைதியாய் ஏற்றுக் கொள்பவர்கள் தான் பிள்ளையானை எதிர்க்கிறார்கள்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

பெருமாள் ,உங்களுக்கே நல்லது தெரியும் சும்மா எழுத வேண்டும் என்பதற்காய் எழுத கூடாது .
நான் யுத்தத்தை குறிப்பிடவில்லை தனிப்பட்ட கொலைகளையே குறிப்பிட்டேன் 
டக்கி ,செல்வம் ,சித்தர்  போன்றவர்களை அமைதியாய் ஏற்றுக் கொள்பவர்கள் தான் பிள்ளையானை எதிர்க்கிறார்கள்  

இப்படி கருத்தை  சொல்வதை விட்டு பிரபாகரனையேன் இழுக்கிறீர்கள் .........

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

இதை எழுதும் போது உங்களுக்கு கொஞ்சம் கூட சிரிப்பு வரேல்லையா ...நீங்கள் எழுதினதை நீங்கள் கூட நம்பி இருக்க மாட்டார்கள் ...இதில நான் வேற நம்போனுமாக்கும்.

ஆய்வு பூர்வமான பதில் உங்களிடம் இல்லை.

நீங்கள் கூறியதான, புலிகள்-கருணை சண்டையில் இறந்த கருணாவின் பெண் சகபடிகளை புலிகள் நிர்வாணமாகினர் என்ற உணர்வு பூர்வமான, கருணாவால் கூட மேய்ச்சப்பட புலிகளின் ஒழுக்கத்தை, எழுதுவது என்று எழுதப்பட்டதல்ல.     

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இப்படி கருத்தை  சொல்வதை விட்டு பிரபாகரனையேன் இழுக்கிறீர்கள் .........

இழுத்தது பிழை தான் ...எனக்கும் தெரியும் ...ஆனால் சில பேருக்கு அப்படி சொன்னால் தான் உறைக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இப்படி கருத்தை  சொல்வதை விட்டு பிரபாகரனையேன் இழுக்கிறீர்கள் .........

அவர் உணர்ச்சியாக எழுதி, வாதத்தின் மையத் தன்மையை தேவ்யாற்ற பகுதிக்கு திருப்புவது. வேண்டும் என்றே செய்கிறாரா அல்லது அவரது இயல்பா தெரியவில்லை?  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

அவரது இயல்பா தெரியவில்லை?

 அதே, இவரின் பல  பழைய   பதிவுகளை படித்தால் புரியும். அடாவடியோடு விடைபெறுவார். 

On 10/8/2020 at 20:56, ரஞ்சித் said:

இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா சண்டமாருதன்?

இவர்கள் சொல்லவருவது இதனைத்தான் என்று நினைக்கிறேன்.

1. வடக்குத் தமிழர்கள் வேறு கிழக்குத் தமிழர்கள் வேறு.

2. கிழக்குத் தமிழர்கள் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை எதிர்க்கிறார்கள்.

3. வடக்குத் தமிழனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் கிழக்குத் தமிழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4. வடக்கிலிருந்து வரும் எந்தத் தலைமையையும் இனிமேல் கிழக்கு மக்கள் ஏற்கமாட்டார்கள். பிரபாகரனையே தூக்கியெறிந்துவந்தவர்கள் கிழக்கு மக்கள், இனிமேல் இது நடவாது.

5. வடக்குத் தமிழர்கள் சொல்வதுபோல் போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை ( உபயம் அண்மைய கருணாவின் செவ்வி - அது யுத்தம் மட்டும்தானாம்). அத்துடன் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தில் புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பாவித்ததனாலேயே பலர் கொல்லப்பட்டிருக்கலாம். அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வடக்குத் தமிழர்கள் அல்லது வன்னிப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதால், கிழக்குத் தமிழர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.. அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வழங்க  கிழக்கு மாகாண மக்களிடம் உதவி கேட்க முடியாது, அவர்கள் இனிமேல் இதற்கு ஆதரவு வழங்கப்போவதுமில்லை.

6. வடக்குத் தமிழர்களிடம் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் கிழக்குத் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.

7. இனிமேல் வடக்குத் தமிழர்களுக்கும், அவர்களின் மொழி, தாயக, சுயநிர்ணயப் போராட்டத்திற்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், இவை எதுவுமே கிழக்குத் தமிழர்களுக்கு ஒருபோதுமே தேவையாக இருந்ததில்லை. வடக்குத் தமிழரின் தேவைகளுக்காகவே கிழக்குப் போராளிகள் மரணிக்கவேண்டியதாயிற்று.

8. இனிமேலும் தேசியம் என்று நீங்கள் பேசினால், சிங்களவர்களுடன் சேர்ந்து அதை அழிப்பதைத்தவிர கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

முதலில் தேசியம் என்றால் என்னவென்று சற்றுத் தெளிவுபடுத்துங்கள் சண்டமாருதன். ஏனென்றால், இங்கு பலருக்கு தேசியம் என்றால் சுமந்திரனின் சுத்துமாத்து அரசியல் என்றுதான் விளக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் எதற்கெடுத்தாலும் சுமந்திரனின் அரசியலை எதிர்க்கிறோம் என்கிற போர்வையில் தேசியத்தை தேசியத்தை எதிர்க்கிறோம் என்று கூவுகிறார்கள்.

நீங்கள் பட்டியலிட்ட நிலைப்பாடுதான் போராட்ட காலங்களுக்கு முற்பட்ட ஈழத்தின் சூழல். பிரதேசவாதங்களாலும் ஏற்றதாழ்வுகளாலும் பிழவுபட்ட நிலையில் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள். வடகிழக்கு என்ற நிலைப்பாடு மட்டுமில்லாமல், உள்ளகமா மத முரண்பாடுகள்,  யாழ் மாவட்டத்திற்கு உள்ளேயே பிரதேச ஏற்றதாழ்வுகள். சாதீய ஏற்றதாழ்வுகள் என இனமாக வலிமையற்று இருந்தது உண்மையே. இந்த முரண்பாடுகளை ஒன்றிணைத்தது சிங்களம் தன். ஆரம்பத்தில் சிங்களம் இந்த முரண்பாடுகளை பயன்படுத்தத் தெரியாமல் பொதுவாக தமிழர் என்று அடிபோட்டது. தமிழராக சிங்களத்திற்கு திருப்பி அடிக்கவேண்டிய நிற்பந்தம் முரண்பாடுகளை கடந்து ஏற்பட்டது. இதன் நிமிர்த்தம் கருணாவும் பிள்ளையானும் வடக்கு கிழக்கு என்ற நிலையை கடந்து புலியாக இருந்தார்கள். இஸ்லாமியத் தமிழர்களும் புலியாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் சிங்களம் விழித்துக்கொண்டது. தாங்களாக அழியவேண்டிய ஒரு இனத்தை எதற்காக பெரும் பொருட்செலவில் உயிர்ப்பலி கொடுத்து அழிக்கவேண்டும் என்று முரண்பாடுகளை பயன்படுத்தத் தொடங்கினார்கள். முதலில் அரசோடு அண்டியிருந்த வர்க்க மேலாண்மைவாதிகளை அரவணைத்தார்கள், மதவாரியாக இஸ்லாமியர்களை அரவணைத்தார்கள். பல சிங்களவர்கள் பலியாகக் காரணமான கருணா பிள்ளையான் போற்வர்களை பிரதேவாதமாக அரவணைத்துக்கொண்டார்கள். இப்போது பழைய மாதிரி  சூழல் வந்துவிட்டது. இனி இன எழுச்சிக்கும் ஐக்கியப்பாட்டுக்குமான சாத்தியங்கள் மிகப் பெரும் சவாலானது. பழையமாதிரி இனத்திற்குள் இரைதேடி வேட்டையாடும் நிலைக்கு வந்தாகிவிட்டது. 

பல நூறு வருடம் முரண்பட்டு கிடந்த ஈழச் சமுதாயத்தில் இடையில் ஒரு முப்பது வருட போராட்டகாலம் இனமாக எழுச்சிபெற்று முரண்பாட்டை கடக்க முற்பட்டது. இது ஒரு பெரும் சமுத்திரத்தை சிறிய வள்ளத்தில் கடப்பதை விட மோசமானது. பாம்பு பூரான் புலி நாய் நரி மான் எலி புனை என விதவிதமானதுகளையும் வள்ளத்தில் ஏற்றிக்கொண்டு கடப்பது . வள்ளத்துக்குள்ளேயே கடித்து பிறாண்டி செத்து கடசியில் எல்லாம் கவுண்டு போனது. மிச்சமிருப்பவர்கள் படகை ஓட்டினவன் சரியில்லை துடுப்பை ஆட்டினவன் சரியில்லை என்று பினாத்த வேண்டியதுதான். 

இங்கே பேசப்படும் வடக்கரசியல் கிழக்கு அரசியல் தேர்தல் மக்கள் தீர்ப்பு என்பதெல்லாம் சிங்கள பொளத்த பேரினவாத பிடிக்குள் நடப்பவை. 

z_p04-Is-Karuna1.jpg?itok=3161pSQN

Pillaiyan_2.png listening to former President - File P

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதனின்... அருமையான ஒரு பதிவு.
பலர் கண்களில்... படாமல் போனது, கவலையான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சண்டமாருதனின்... அருமையான ஒரு பதிவு.
பலர் கண்களில்... படாமல் போனது, கவலையான விடயம். 

ஏன் படவில்லை! எல்லாம் பார்த்துவிட்டு மூச்!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அப்படியே இருக்கிறான். பிரச்சனை அப்படியே இருக்கு. அப்போ ஏன் நாங்க பிரிஞ்சு இருக்கிறோம்.

எங்களை ஒற்றுமைப்படுத்த தலைவர் பிரபாகரன் மாதிரி ஒருவர் இல்லை என்ற ஒரே காரணம் தான் மக்காள்.

அது இந்த தலைமுறையில் சாத்தியமே இல்லை. சரி இருக்கிறதையாவது இழக்காமல் பாதுகாத்தால்...

ஒரு தலைவன் வரவிற்காய் காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சண்டமாருதனின்... அருமையான ஒரு பதிவு.
பலர் கண்களில்... படாமல் போனது, கவலையான விடயம். 

இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள் ...கஜேந்திரகுமார் ,கஜேந்திரன், சீவி போன்றவர்களையும் பார்க்கலாம் ...அப்ப நீங்கள் என்ன சொல்லப் போறீங்கள் என்று இப்பவே ஆவலாய் காத்திட்டு இருக்கிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

சிங்களவன் அப்படியே இருக்கிறான். பிரச்சனை அப்படியே இருக்கு. அப்போ ஏன் நாங்க பிரிஞ்சு இருக்கிறோம்.

எங்களை ஒற்றுமைப்படுத்த தலைவர் பிரபாகரன் மாதிரி ஒருவர் இல்லை என்ற ஒரே காரணம் தான் மக்காள்.

அது இந்த தலைமுறையில் சாத்தியமே இல்லை. சரி இருக்கிறதையாவது இழக்காமல் பாதுகாத்தால்...

ஒரு தலைவன் வரவிற்காய் காத்திருக்கிறோம்.

தலைவனல்ல கடவுளே வந்தாலும் நாங்கள் திருந்தமாட்டோம். உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து கருத்தறிய முயலும் யாழ் களத்திலேயே பிரதேசவாதத்தை ஊதிப் பெருப்பித்து தமிழர்களைப் பிரித்துவைக்கும் சேவையை எங்களால் செய்ய முடிகிறதே. 

On 11/8/2020 at 11:38, அக்னியஷ்த்ரா said:

ஓவராக யோசிக்காதீங்கோ....
கிழக்கில் தமிழர்களது இருப்பையும் (முஸ்லிம்கள் ,சிங்களவர்களிடமிருந்து)
வடக்கில் தமிழர்களது இருப்பையும் (அதே முஸ்லிம்கள் ,சிங்களவர்களிடமிருந்து) எப்படி தக்க வைக்கப்போகிறீர்கள் ....?
சிங்கள அரச எதிர்ப்பு, தமிழ் தேசியம் ,போர் குற்ற விசாரணை எல்லாம் கண்டிப்பாக இருக்கவேண்டியவை தான் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இருப்பை கேள்விக்குறியாக்கி விட்டு யாருக்காக இதையெல்லாம் சாதிக்கப்போகிறீர்கள் ...? 
முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள் என்கிறீர்களே ஏன் முஸ்லீம் மக்களுக்கு அறிவில்லையா ...? தாம் கொம்பு சீவப்படுகிறோம் என்பதே தெரியாதா...? கல்முனை தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைக்கான பிரதேச செயலக  கோரிக்கையை ஏன் தங்கள் உயிரை கொடுத்து உண்ணாவிரதமிருந்து  எதிர்த்தார்கள் என்று தெரியுமா...? இதற்கும் சிங்கள இனவாதிகள் தான் காரணமா.

சுமந்திரன் வென்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில்  அதிகமானோர் யாரென்று அவரது முகப்புத்தகம் சென்று பாருங்கள், ஏன் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள் செய்த உதவிக்காவா என்று கேட்க அதிலொரு நபர் சொன்னது இவர் போன்றவர்கள் தான் பேரினவாதத்தின் சர்வாதிகாரத்திற்கு தடைக்கல் என்று. ஏன் அவர்களுக்கு மாற்றினத்தின் அரசியல்வாதிதானோ தேவை பேரினவாதத்திற்கு எதிராக போராட ...வகை வகையாக அவர்கள் தெரிவு செய்து அனுப்பிய அரசியல்வாதிகள் ? ஏனென்றால் தமிழன் உசார் மடையன் கொஞ்சம் ஏத்திவிட்டால் போதும் ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு மட்டும் தான் இருக்கு என்று பேரினவாதத்தின் மொத்த தரித்திரத்தையும் 
வாங்கி தானும் தின்று மிகுதியை தனக்கு வாக்களித்த மக்கள்  மேலும் வாந்தி எடுத்துவிடுவார், 
ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகள் எந்த அரசு ஆட்சிக்குவருகிறதோ அதன் பக்கம் உட்க்காந்து அபிவிருத்தியை அவர்களது மக்களுக்கு  பெருக்கி  நமது தமிழ் அரசியல் வியாதிகள் அடிக்கும் கூத்தை பார்த்து மகிழ்வார்கள் ,இதைத்தானே காலம் காலமாக செய்து வந்திருக்கிறீர்கள் 

இறுதியாக மில்லியன் டாலர் கொஸ்ட்டின் 
இங்குள்ள மக்கள் போராடியும் சரி புடுங்குப்பட்டும்  சரி சோர்ந்து ஒடிந்து போய்விட்டார்கள் 
இனிமேல் அவர்களுக்கு திராணியில்லை , புலம்பெயர் தேசியவாதிகள் அனைவரும் நாடு திரும்பி 
அவர்களது  Road Map and Duration ஐ விளக்கி  ஈழத்தமிழர்களின் அரசியலை மேற்கொண்டு முன்னெடுக்க தயாரா.....? நீங்கள் எந்த வழியில் செல்வதென்றாலும் சரி முழு ஆதரவை தமிழர்கள் வழங்கத்தயார்  ஆனால் எல்லோரும் இங்கே வரவேண்டும், இங்கேயிருந்து கொண்டு அரசியல் செய்யவேண்டும் தயாரா....?

இங்கிருந்து ஓடிப்போய் வெளி நாட்டில் நல்ல வசதியாக வாழும் சிலருக்கு ஒன்றும் விளங்கப்போவதுமில்லை , விளங்கினாலும் கட்டிக்கொள்ளப்போவதுமில்லை.

சுகபோகமாக வாழப்பவர்கள் உயிரோடே செத்தவர்கள். எனவே நீங்கள் செத்தவர்களுக்கு எழுதுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.