Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இல்லை, dialect என்றால் என்ன எண்டு விளங்கினால் - நான் சொல்வது விளங்கும். நீங்கள் எடுத்து போட்ட தரவிலேயே இது இருக்கிறது.

இதுக்கு மேலே உங்களுக்கு இதை விளங்கபடுத்த எனக்கு நேரம் இல்லை தல.

இங்கே பிரன்ச், அரபிக், சைனிஸ் தெரிந்தவர்கள் இருக்கிறர்கள் அவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். 

அரபிக்

அனா கோசான் மாலூம் ஹபீபீ.சுக்ரான் மாசலாம். நம்ப‌ரு வாஹிட் 😁

  • Replies 269
  • Views 26.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது நாள் வரை தமிழன் என்றே நினைத்திருந்தேன். 

பண்டாரவன்னியன் நாடகம் எழுதி வீரவசனம் எல்லாம் போட்டு தோள் நிமிர்த்தி நின்றேன்.

பேசப்படும் மொழிகளில் என் மூத்த மொழி என இறுமாந்திருந்தேன்.

கீழடி என் மரபுரிமை என மார்தட்டினேன்.

ஏழரைக்கோடி (அதில எத்தனை கோடி நாய்க்கரோ 🤣) என “எண்ணி” இருந்தேன்.

5 மொழிகளின் தாய் என் மொழி என்றேன்.

இலங்கை தீவின் முதல் மொழி என் மொழி என்றேன்.

நித்திரை விட்டு முழிச்சிப்பார்த்தா ...

என்னை சுற்றி என் உறவுகள் நிற்கிறார்கள்..

செல்வநாயகம், ராஜநாயகம், கனகநாயகம், வேதநாயகம், வேல்நாயகம், பேரின்பநாயகம்...........

உங்கள் பண்டார”நாயக்க” தியரி நினைவுக்கு வந்து தொலைத்தது...

கூடவே ஒரு Encyclopedia Brittanica printout யாழ்பாண அரசு விஜய நகரத்துக்கு திறை செலுத்தியது ......

குழம்பி நிற்கிறேன் நான் தமிழனா, தெலுங்கனா....

அஸ்ஸலாமு அலைக்கும் கோசான் சாப். நான் இவ்வளோவ் நான் நெனைச்சிருந்தன். மூத்த சாச்சாமார் நல்ல கருத்தாளர் என்று செல்லிவா. கடைசிலா பாத்தா சரியான பொய்பொத்தல் வாப்பா. 

  • கருத்துக்கள உறவுகள்

அல் ஹம்துல்லா. மஸலாம் ஹபீபி. 

சுக்ரான் 🤣

Edited by முதல்வன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

அரபிக்

அனா கோசான் மாலூம் ஹபீபீ.சுக்ரான் மாசலாம். நம்ப‌ரு வாஹிட் 😁

3 minutes ago, முதல்வன் said:

அல் ஹம்துல்லா. மஸலாம் ஹபீபி. 

சுக்ரான் 🤣

large.935B3DC7-69F7-4D80-8AF7-6432A8B4A398.jpeg.d9761e133c0b76d9a6d69af26beb7465.jpeg

5 minutes ago, colomban said:

அஸ்ஸலாமு அலைக்கும் கோசான் சாப். நான் இவ்வளோவ் நான் நெனைச்சிருந்தன். மூத்த சாச்சாமார் நல்ல கருத்தாளர் என்று செல்லிவா. கடைசிலா பாத்தா சரியான பொய்பொத்தல் வாப்பா. 

வாப்பண்டே... என்னத்த வாப்பா செல்ல.

பற பற தோது பலாய் இல்லியா பேசிகொண்டு ஈக்காங்க.

கேந்தி ஆவாமா ஆன்சர் பண்ண பெய்த்து எனக்கு வாணாம்னு பெய்து வாப்பா🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்த பொய் ஆய்வுகளால் தமிழ் தேசியத்திற்கு நீர் வார்க்கிறேன் என்று கிளம்பியிருப்பேர் செய்வதெல்லாம் அந்த அறிவுடைமையை தங்கள் quackery ஆல் நீர்த்துப் போகச் செய்வது மட்டும் தான்!

இதுதான் நடக்கின்றது.

தூய தமிழினம் என்று பிளவுகளை உண்டாக்கி உட்சுருங்கி அழிக்கத்தான் பலர் தம்மையும் அறியாமல் செயற்படுகின்றனர்.

மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இருக்கின்றோம். அவர்களின் முன்னோர்கள் பூர்வீக இயக்க, நாகர்களா, அல்லது வந்தேறிகளான தமிழரா, தெலுங்கரா, சேரநாட்டு மலையாளிகளா என்ற ஆராய்ச்சி எந்த பலனும் தராது. இப்போது இருப்பவர்கள் தங்களைத் தமிழராக உணர்கின்றார்கள். அதுதான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

துல்பென்,

பெருமாளின் பிரச்சனை வேற. நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.

இங்கே உண்மையாக என்னிடம் உரையாடியவர்களுக்கு நான் என் நேரத்தை செலவழித்து முடிந்தளவு விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனா இது போன்றவ “என்ன கைய பிடிச்சி இழுத்தியா” கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.

ஆகவே பெருமாளிடம் “டீல்” பண்ணுவதை உங்களிடமே விட்டு விடுகிறேன். 

பெஸ்ட் ஓவ் லக் 😂

ஆம் என் பிரச்சனை வேறுதான் முதலாவது யாழ் கருத்து களத்தில்  தேவையில்லாமல் உங்கள் கருத்துக்களில் ஆங்கில சொல்லாடல்களை புகுத்துகிறீர்கள் ? 

தமிழ்நாட்டில் வந்தேறுகுடிகள் நிறைய வீட்டில் கன்னடா வெளியில் தமிழ் கதைக்க கஷ்ட்படுவதால்  இங்கிலீஸ் கொன்வெண்ட்  என்று அடித்துவிட்டு இலகுவாக தமிழ்ங்கிலீஸ் கதைப்பவர்கள்  ஏராளம் நீங்களும் அவ்வாறானவரா ?

உங்கள் ஆக்கம்களுக்குரிய மூலம் கேட்டால் ஓடக்கூடாது பதிலை  சொல்லுங்க ?

அடிக்கடி என்னை தயா என்று விளிப்பது  கொஞ்சம் பெருமையாக இருக்கிறது தயா உங்கள் என்னை விட சிறந்த கருத்தாளர் நான் அவரல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, colomban said:

அரபிக்

அனா கோசான் மாலூம் ஹபீபீ.சுக்ரான் மாசலாம். நம்ப‌ரு வாஹிட் 😁

காத்தான்குடி என்ற பெயரே சவூதி அரேபியாவில் இருக்கும் கஹ்தான் எனும் இடத்தில் இருந்து வந்து குடியேறியதால் வந்த பெயர் என்று சொல்லுகின்றார்கள். அப்படி ஒரு இடம் இருக்கின்றதா? (கொழும்பான் உலகில் பல இடங்களில் வாழ்ந்ததால் கேட்கின்றேன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஆம் என் பிரச்சனை வேறுதான் முதலாவது யாழ் கருத்து களத்தில்  தேவையில்லாமல் உங்கள் கருத்துக்களில் ஆங்கில சொல்லாடல்களை புகுத்துகிறீர்கள் ? 

தமிழ்நாட்டில் வந்தேறுகுடிகள் நிறைய வீட்டில் கன்னடா வெளியில் தமிழ் கதைக்க கஷ்ட்படுவதால்  இங்கிலீஸ் கொன்வெண்ட்  என்று அடித்துவிட்டு இலகுவாக தமிழ்ங்கிலீஸ் கதைப்பவர்கள்  ஏராளம் நீங்களும் அவ்வாறானவரா ?

உங்கள் ஆக்கம்களுக்குரிய மூலம் கேட்டால் ஓடக்கூடாது பதிலை  சொல்லுங்க ?

அடிக்கடி என்னை தயா என்று விளிப்பது  கொஞ்சம் பெருமையாக இருக்கிறது தயா உங்கள் என்னை விட சிறந்த கருத்தாளர் நான் அவரல்ல .

large.9F30B717-E73C-494C-B504-85570443FA03.jpeg.4cd3a548e7d0dc0764069fda49494929.jpeg

4 minutes ago, கிருபன் said:

காத்தான்குடி என்ற பெயரே சவூதி அரேபியாவில் இருக்கும் கஹ்தான் எனும் இடத்தில் இருந்து வந்து குடியேறியதால் வந்த பெயர் என்று சொல்லுகின்றார்கள். அப்படி ஒரு இடம் இருக்கின்றதா? (கொழும்பான் உலகில் பல இடங்களில் வாழ்ந்ததால் கேட்கின்றேன்)

தாரு வாப்பா இப்பிடி சென்ன?

எங்கட சோப்பு தொப்பி முபாரக் மெளவியா🤣

அவருதானே வாப்பா ரெஹ்மான் தான் ராவணன் எண்டு சென்ன?

எங்கட பண்டார “நாயக்க” தியரிக்கெல்லாம் அவர்தான் வாப்பா inspiration 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்கட்டியால் சுவரில்  நன்றாய் கதைக்கட்டு கட்டியாகிவிட்டுது இனி என்ன ஓடி ஒழியவேண்டியதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

தாரு வாப்பா இப்பிடி சென்ன?

எங்கட சோப்பு தொப்பி முபாரக் மெளவியா🤣

அவருதானே வாப்பா ரெஹ்மான் தான் ராவணன் எண்டு சென்ன?

எங்கட பண்டார “நாயக்க” தியரிக்கெல்லாம் அவர்தான் வாப்பா inspiration 🤣

வைத்திய நிபுணர் சி. சிவச்சந்திரன் எழுதிய “கிழக்கு மண்” என்ற புத்தகம் படிக்கிறேன். அதில் கண்டது!large.FB9D5C31-0975-4EA9-8F15-4AAAC6A7A551.jpeg.051c97aef761b58ba25d943f02003032.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

வைத்திய நிபுணர் சி. சிவச்சந்திரன் எழுதிய “கிழக்கு மண்” என்ற புத்தகம் படிக்கிறேன். அதில் கண்டது!large.FB9D5C31-0975-4EA9-8F15-4AAAC6A7A551.jpeg.051c97aef761b58ba25d943f02003032.jpeg

நான் அறிந்த வரலாறும் காத்தானின் -குடி என்பதே.

மட்டகளப்பு தமிழகம் என்ற புத்தகத்தில் - காத்தான் குடி, ஏறாவூர் (தேர் மேலே போகாமல் நின்ற ஊர்), வந்து-ஆறு-மூலை (படைகள் வந்து ஆறிய இடம்) இன்னும் பல பல ஊர்களின் காரணப் பெயர்களுக்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

கீழே முபாரக் மெளவியின் கோமாளித்தன வீடியோவை இணைக்கிறேன். இப்படி உருவான கதைதான் காத்தான்குடிக்கு இவர்கள் சொல்வது.

large.0D784827-79DF-4674-A13D-F39320D7AFA1.jpeg.24d82aaddcbf8fcfb607e8007b45d6bf.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மட்டகளப்பு தமிழகம் என்ற புத்தகத்தில் - காத்தான் குடி, ஏறாவூர் (தேர் மேலே போகாமல் நின்ற ஊர்), வந்து-ஆறு-மூலை (படைகள் வந்து ஆறிய இடம்) இன்னும் பல பல ஊர்களின் காரணப் பெயர்களுக்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மண் நூலிலும் பல ஊர்களின் பெயர்களின் காரணங்கள் விரிவாக உள்ளன.

கிழக்கில் இருக்கும் தமிழர்களில் அநேகர் பூர்வீக நாகர்களினதும், பின்னர் வந்த திமிலர்கள், அவர்களைத் துரத்திய முக்குவர்கள் (சேரநாட்டினர்), உலக நாச்சியும் அவரின் குடிமைகளும் என்று பல தகவல்கள் போகின்றன. 

கிழக்கு மலையாள வந்தேறிகளாலும், வடக்கு தெலுங்கு வந்தேறிகளாலும் தெற்கு கலிங்க வந்தேறிகளாலும் பின்னர் மலபார் சோனக வந்தேறிகளாலும்  நிரப்பப்பட்டுள்ளதாகச் சொல்லலாம்!😆

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

வைகோ டெல்லி போனது  இப்போது அல்ல. 1987 ல் தலைவர் பிரபாகரனை சந்தித்து அவருக்கு சகல உதவிகளையும் செய்யும் போதே அவர் டெல்லியில் ராஜ்யசபை உறுப்பினராகத்தான் இருந்தார். 

அது தெரிந்த விடயம்தான். இடையில் எம்பி பதவிக்கும், சட்டசபைக்கும் போட்டியிடாமல் தவிர்த்து வந்தார். காரணம் தமிழகத்தில் அவருக்கென ஒரு செல்வாக்கு இருந்தது. என்று தமிழ்தேசியம் ஆபத்தானது என பேச ஆரம்பித்தாரோ அப்போது அவரது வீழ்ச்சி நடந்து கொண்டுள்ளது என்பது உறுதி ஆயிற்று. இன்று ஒரு பதவியை பெற்றுக்கொண்டு டெல்லி சென்றுவிட்டார். காரணம் அவர் பூர்வீகமாக தமிழரல்ல என்பது இளைய தலைமுறைக்கு தெரிந்துபோனது.

திமுகவின் பதவி, பணம், ஊடக பலம் இவை மட்டுமே இனி தடைக்கற்கள். காலப்போக்கில் இவை உதிர்ந்து விழப்போவது உறுதி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

கிழக்கு மண் நூலிலும் பல ஊர்களின் பெயர்களின் காரணங்கள் விரிவாக உள்ளன.

கிழக்கில் இருக்கும் தமிழர்களில் அநேகர் பூர்வீக நாகர்களினதும், பின்னர் வந்த திமிலர்கள், அவர்களைத் துரத்திய முக்குவர்கள் (சேரநாட்டினர்), உலக நாச்சியும் அவரின் குடிமைகளும் என்று பல தகவல்கள் போகின்றன. 

கிழக்கு மலையாள வந்தேறிகளாலும், வடக்கு தெலுங்கு வந்தேறிகளாலும் தெற்கு கலிங்க வந்தேறிகளாலும் பின்னர் மலபார் சோனக வந்தேறிகளாலும்  நிரப்பப்பட்டுள்ளதாகச் சொல்லலாம்!😆

சொல்லலாம் 🤣 விளங்கும் என்று எதிர்பார்பதுதான் பிழை.

3 minutes ago, கிருபன் said:

இதுதான் நடக்கின்றது.

தூய தமிழினம் என்று பிளவுகளை உண்டாக்கி உட்சுருங்கி அழிக்கத்தான் பலர் தம்மையும் அறியாமல் செயற்படுகின்றனர்.

மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இருக்கின்றோம். அவர்களின் முன்னோர்கள் பூர்வீக இயக்க, நாகர்களா, அல்லது வந்தேறிகளான தமிழரா, தெலுங்கரா, சேரநாட்டு மலையாளிகளா என்ற ஆராய்ச்சி எந்த பலனும் தராது. இப்போது இருப்பவர்கள் தங்களைத் தமிழராக உணர்கின்றார்கள். அதுதான் முக்கியம்.

பிராமணர்களை  போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறி ஆரியர்கள் என்று திராவிடம்  அரசியல் செய்தது. இப்போது தமிழ்தேசீய அரசியல் திராவிட போர்வைக்குள் இருக்கும் வேற்று இனங்களை குறிவைக்கின்றது. 

ஆரிய திராவிட போர்வைகளால்சுருட்டிகட்டப்பட்டுள்ள நிலையில்தான் தமிழினம் உள்ளது. இதில் உட்சுருங்கி அழிய எதுவும் இல்லை. ஆரிய திராவிட போர்வைகளை தமிழினம் என்று ஏற்பது உட் சுருங்கி அழிவதை விட மோசமான நிலை. 

41 minutes ago, இசைக்கலைஞன் said:

அது தெரிந்த விடயம்தான். இடையில் எம்பி பதவிக்கும், சட்டசபைக்கும் போட்டியிடாமல் தவிர்த்து வந்தார். காரணம் தமிழகத்தில் அவருக்கென ஒரு செல்வாக்கு இருந்தது. என்று தமிழ்தேசியம் ஆபத்தானது என பேச ஆரம்பித்தாரோ அப்போது அவரது வீழ்ச்சி நடந்து கொண்டுள்ளது என்பது உறுதி ஆயிற்று. இன்று ஒரு பதவியை பெற்றுக்கொண்டு டெல்லி சென்றுவிட்டார். காரணம் அவர் பூர்வீகமாக தமிழரல்ல என்பது இளைய தலைமுறைக்கு தெரிந்துபோனது.

திமுகவின் பதவி, பணம், ஊடக பலம் இவை மட்டுமே இனி தடைக்கற்கள். காலப்போக்கில் இவை உதிர்ந்து விழப்போவது உறுதி!

ஈழத்தமிழருக்கு  எவ்வளவு உதவி செய்திருந்தாலும் அந்த நன்றிகள் எல்லாவற்றையும்  மறந்து அவர்களை எல்லாம் இகழும்  அளவுக்கு நீங்கள் சீமான் என்ற நபரின்  ஆதரவாளர் என்பது தெரியும். இந்திய இராணுவத்தின் காலத்தில் அவர் எமக்கு செய்த உதவிக்கு அளவே  இல்லை. திரு ஜோர்ச் பெர்ணாண்டஸிற்கு எமது பிரச்னைகளைப் புரியவைத்து அவரை ஈழத்தமிழர் ஆதரவாளராக மாற்றியதே வை. கோபாலசாமி தான். ஜோர் பெர்ணாண்டஸ் மூலம் பல உதவிகளை புலிகள் பெற்றுக்கொண்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  

இப்ப சீமான் எனற நபருக்காக  அவர் கறிவேப்பிலை. விடுதவைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லாததை சீமான் என்ற அரசியலவாதி  பயன்படுத்துகிறார். கூடவே தமிழ் தேசியத்தையும் பயன்படுத்த முயலகிறார்.

வை கோவின் செல்வாக்கு குறைந்த‍தற்கு காரணம் அவரின் அதிக கோபம். மிக உணர்ச்சி பூர்வமான செயற்பாடு. சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அவருக்கு இருந்த இயல்பான கோபம் தடையாக இருந்த‍து. அது காலப்போகில் அவரின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தியது. கூட்டணி அமைப்பதில் பல முரண்பாடான தீர்மானங்களை மேற்கொள்ள அவருக்கு இருந்த கோப உணர்ச்சி என்ற பலவீனம் காரணம். 

அவர் தமிழ் தேசியத்தை எதிர்க்கவில்லை. எதிர்த்திருந்தால் ஈழத்திற்காக  இவ்வளவு உதவிகளை செய்து அதன் மூலம் சிறைவாசம் அனுபவத்திருக்க மாட்டார். அவர் எதிர்த்த‍து தமிழ் தேசிய போர்வையில்  சீமானின் சுயநல அரசியலை

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

காத்தான்குடி என்ற பெயரே சவூதி அரேபியாவில் இருக்கும் கஹ்தான் எனும் இடத்தில் இருந்து வந்து குடியேறியதால் வந்த பெயர் என்று சொல்லுகின்றார்கள். அப்படி ஒரு இடம் இருக்கின்றதா? (கொழும்பான் உலகில் பல இடங்களில் வாழ்ந்ததால் கேட்கின்றேன்)

இருக்கலாம் கிருபன் உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஆனால் பெரும்பாலான அரபி வார்த்தைகளில் "ஹ்க்" என்னும் ஒலி வடிவம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

குளம் தூர்ந்து போய்விட்டது என்பதால் மழை பொழிவதை நிறுத்துவதில்லையே.

குளம் தூர்ந்துபோனபின் அங்கு மழை பெய்தாலென்ன பெய்யாவிட்டால்தான் என்ன? அதனால் யாருக்கு லாபம் கிடைக்கப்போகிறது? பெய்யும் மழையால் நன்மை கிடைக்கவேண்டுமென்றால் முதலில் குளத்தை தூர்வார வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்வதாக தெரியவில்லை. மென்மேலும் குளத்தை மூடி அதன்மேல் வீடுகட்டுவது போலல்லவா இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

கிழக்கு மண் நூலிலும் பல ஊர்களின் பெயர்களின் காரணங்கள் விரிவாக உள்ளன.

கிழக்கில் இருக்கும் தமிழர்களில் அநேகர் பூர்வீக நாகர்களினதும், பின்னர் வந்த திமிலர்கள், அவர்களைத் துரத்திய முக்குவர்கள் (சேரநாட்டினர்), உலக நாச்சியும் அவரின் குடிமைகளும் என்று பல தகவல்கள் போகின்றன. 

கிழக்கு மலையாள வந்தேறிகளாலும், வடக்கு தெலுங்கு வந்தேறிகளாலும் தெற்கு கலிங்க வந்தேறிகளாலும் பின்னர் மலபார் சோனக வந்தேறிகளாலும்  நிரப்பப்பட்டுள்ளதாகச் சொல்லலாம்!😆

அப்ப... கோசனுக்கு இப்ப நல்ல தெளிவு கிடைச்சிருக்கும்.

செல்வநாயகம் தெலுங்கராக இருக்கலாம் எண்டு....

நண்பர் கோசன், பக்கம் பக்கமா எழுதினாலும், இப்படி சிம்பிள் ஆக முடிவுரை எழுதி போட்டியள்...

நன்றி கிருபன்.

எனக்கு கோசனை நினைக்கும் போது, மாமா சொன்ன நச்சத்திரம் என்பவர் கதை நினைவுக்கு வரும். முன்னர் எங்கோ பகிர்ந்திருக்கிறேன்.

கோசனும் இதிலுள்ள நகைச்சுவையினை மட்டும் பார்ப்பார் என்று நினைக்கிறேன்.

நச்சத்திரம், எம்ஜிஆர் இன் மிக தீவிர விசுவாசி. சீவல் தொழிலாளி.

இறங்கின கள்ளினை தவறணையில் கொடுத்து விட்டு, நிறை மப்பில் வீட்டுக்கு கிளம்புவார் அவரது பழைய ரலி சைக்கிளில். எம்ஜிஆர் பாட்டுடன் வரும் போதே, கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருக்கும் பொடியள் அலெர்ட் ஆகிவிடுவார்கள். மரங்கள் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு, எம்ஜிஆர் ஒழிக என்பார்கள்.

வேகமாக இறங்கி, இல்லை வாழ்க என்பார். அப்படியே நின்று தான் வென்றதாக உறுதி செய்து வண்டியில் ஏறுவார். மீண்டும் கத்தல்.... மீண்டும் இறங்குவார்.... பொடியளும் விடமாட்டார்கள்..... அவரும் வீடு போய் சேர மாட்டார்.....

கடைசியில் பாவமடா, விடுங்கடா என்கிற நிலைமையில்.... அவரும் நிம்மதியாக வீடு போவார். 😁
 
Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

குளம் தூர்ந்துபோனபின் அங்கு மழை பெய்தாலென்ன பெய்யாவிட்டால்தான் என்ன? அதனால் யாருக்கு லாபம் கிடைக்கப்போகிறது? பெய்யும் மழையால் நன்மை கிடைக்கவேண்டுமென்றால் முதலில் குளத்தை தூர்வார வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்வதாக தெரியவில்லை. மென்மேலும் குளத்தை மூடி அதன்மேல் வீடுகட்டுவது போலல்லவா இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.🤔

எ. பொ. த,

இப்போ - என்றோ இங்கு ஒரு குளம் இருந்தது என்ற செய்தி உங்களுக்கு வந்து விட்டதல்லவா?

இனி  குளத்தை தூர்வாற வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?

என் எழுத்தின் வேலை முடிந்தது.

பிகு: நான் சண்டமாருதனுக்கு எழுதிய நீண்ட  பதிலில் என் எழுத்தின் நோக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, இசைக்கலைஞன் said:

அது தெரிந்த விடயம்தான். இடையில் எம்பி பதவிக்கும், சட்டசபைக்கும் போட்டியிடாமல் தவிர்த்து வந்தார். காரணம் தமிழகத்தில் அவருக்கென ஒரு செல்வாக்கு இருந்தது. என்று தமிழ்தேசியம் ஆபத்தானது என பேச ஆரம்பித்தாரோ அப்போது அவரது வீழ்ச்சி நடந்து கொண்டுள்ளது என்பது உறுதி ஆயிற்று. இன்று ஒரு பதவியை பெற்றுக்கொண்டு டெல்லி சென்றுவிட்டார். காரணம் அவர் பூர்வீகமாக தமிழரல்ல என்பது இளைய தலைமுறைக்கு தெரிந்துபோனது.

திமுகவின் பதவி, பணம், ஊடக பலம் இவை மட்டுமே இனி தடைக்கற்கள். காலப்போக்கில் இவை உதிர்ந்து விழப்போவது உறுதி!

நானும் வைகோவில் மிக பெரிய மதிப்பு வைத்திருந்தேன். அவர் அடுத்த தமிழக தலைவராக வரவேண்டும் என்று சீமான் வளர்ந்து கொண்டிருக்கும் போதே இங்கே பதிய, நந்தன் வந்து, அது நடக்காது என்றார்.

இந்த ஒரு வீடியோ தான் வைகோவின் அரசியலையே கவுத்து போட்டது. உணர்ச்சி வசப்பட்டால் என்ன பேசுவது என்று தெரியாமல், தனது நீண்ட நெடிய அரசியலையே குழி தோண்டி புதைத்தார்.  

அவரே தனது 50 வருட அரசியலை , உழைப்பினை மதிக்காத போது, ஈழத்தமிழர் எப்படி மதித்து நம்ப முடியும்?

இந்த பேச்சினால், மக்களை சந்திக்க பயந்து, எந்த ஸ்டாலினை எதிர்த்தாரோ, அவர் காலடியில் விழுந்து ராஜ்ய சபை உறுப்பினர் ஆகி உள்ளார்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அப்ப... கோசனுக்கு இப்ப நல்ல தெளிவு கிடைச்சிருக்கும்.

செல்வநாயகம் தெலுங்கராக இருக்கலாம் எண்டு....

நண்பர் கோசன், பக்கம் பக்கமா எழுதினாலும், இப்படி சிம்பிள் ஆக முடிவுரை எழுதி போட்டியள்...

நன்றி கிருபன்.

எனக்கு கோசனை நினைக்கும் போது, மாமா சொன்ன நச்சத்திரம் என்பவர் கதை நினைவுக்கு வரும். முன்னர் எங்கோ பகிர்ந்திருக்கிறேன்.

கோசனும் இதிலுள்ள நகைச்சுவையினை மட்டும் பார்ப்பார் என்று நினைக்கிறேன்.

நச்சத்திரம், எம்ஜிஆர் இந்த மிக தீவிர விசுவாசி. சீவல் தொழிலாளி.

இறங்கின கள்ளினை தவறணையில் கொடுத்து விட்டு, நிறை மப்பில் வீட்டுக்கு கிளம்புவார் அவரது பழைய ரலி சைக்கிளில். எம்ஜிஆர் பாட்டுடன் வரும் போதே, கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருக்கும் பொடியள் அலெர்ட் ஆகிவிடுவார்கள். மரங்கள் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு, எம்ஜிஆர் ஒழிக என்பார்கள்.

வேகமாக இறங்கி, இல்லை வாழ்க என்பார். அப்படியே நின்று தான் வென்றதாக உறுதி செய்து வண்டியில் ஏறுவார். மீண்டும் கத்தல்.... மீண்டும் இறங்குவார்.... பொடியளும் விடமாட்டார்கள்..... அவரும் வீடு போய் சேர மாட்டார்.....

கடைசியில் பாவமடா, விடுங்கடா என்கிற நிலைமையில்.... அவரும் நிம்மதியாக வீடு போவார். 😁
 
நாதம்ஸ்,

இப்படி, செல்வநயகத்தை தெலுங்கன் என்று நாமே எம் வாயால் சொல்லுவதின் ஆபத்தை சிந்தியுங்கள் என்பதே நான் இந்த திரியில் முதலில் இருந்து சொல்வது.

இலங்கையில் வேடுவர் தவிர மிகுதி எல்லாருமே வந்தேறிகள் எனும் ஏடுகோள் எப்போதோ இருக்கிறது.

1. சிங்களவர் ஒரு super own goal ஐ மஹாவம்சத்தில் அடித்து -தாம் வந்தேறி விஜயன் வம்சம் என சொல்லி, தாம் ஏலவே வந்தேறிகள் என ஏற்று கொண்டுவிட்டனர்.

2. நாம் இதுவரை நாங்கள் இலங்கையின் பூர்வ குடிகள் என்றே சொல்லி வருகிறோம்.  நாகரும், இயக்கரும் ஆதி தமிழ்க்குடிகள் -அவர்களின் வழித்தோன்றலே நாம் என்பதே - நமது நிலைப்பாடு. நேற்று சீவி சொன்னதும் இதையே.

இந்த நிலையில்தான் உங்கள் தியரி அவர்களும் தெலுங்கர், நாங்களும் தெலுங்கர் என்று நிறுவ முயல்கிறது. 

இதற்கு மேல் இந்த தியரின் ஆபத்தை எப்படி விளங்கபடுத்த முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழ் அரசர்களை எல்லாம் சிங்கள மயப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 

யாழ்பாண அரசு சில கலக நாட்களை விடுத்து எப்போதும் தமக்கு கீழ் சிற்றரசாகவே இருந்தது என்கிறார்கள். 

குளக்கோட்டனை மறைத்தே விட்டார்கள். பாண்டிய, சோழ ஆட்சியை அவை தென்னிந்திய படை எடுப்புகள் என்று ஒரு வரியில் கடந்து போகிறார்கள்.

எல்லாளனை கூட துட்டு காமினியை சொல்வதற்க்காகவே சொல்கிறார்கள்.

இப்போ நீங்களே போய் ஒரு own goal ஐ அடித்து நாங்களும், நீங்களும் தெலுங்கர் என்று சொல்லுங்கள்.

விளங்கிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நாதம்ஸ்,

இப்படி, செல்வநயகத்தை தெலுங்கன் என்று நாமே எம் வாயால் சொல்லுவதின் ஆபத்தை சிந்தியுங்கள் என்பதே நான் இந்த திரியில் முதலில் இருந்து சொல்வது.

இலங்கையில் வேடுவர் தவிர மிகுதி எல்லாருமே வந்தேறிகள் எனும் ஏடுகோள் எப்போதோ இருக்கிறது.

1. சிங்களவர் ஒரு super own goal ஐ மஹாவம்சத்தில் அடித்து -தாம் வந்தேறி விஜயன் வம்சம் என சொல்லி, தாம் ஏலவே வந்தேறிகள் என ஏற்று கொண்டுவிட்டனர்.

2. நாம் இதுவரை நாங்கள் இலங்கையின் பூர்வ குடிகள் என்றே சொல்லி வருகிறோம்.  நாகரும், இயக்கரும் ஆதி தமிழ்க்குடிகள் -அவர்களின் வழித்தோன்றலே நாம் என்பதே - நமது நிலைப்பாடு. நேற்று சீவி சொன்னதும் இதையே.

இந்த நிலையில்தான் உங்கள் தியரி அவர்களும் தெலுங்கர், நாங்களும் தெலுங்கர் என்று நிறுவ முயல்கிறது. 

இதற்கு மேல் இந்த தியரின் ஆபத்தை எப்படி விளங்கபடுத்த முடியும்?

ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன், வரலாறு என்னும் கடலில் இறங்கி குண்டூசி தேடி எடுத்தாலும் எடுக்கலாம், உப்பு கட்டி எடுக்க முடியாது என்று.

நீங்கள் உங்கள் சக்தி அனைத்தயும் செலவழித்தாலும், பப்பாளி மரத்தில் ஏத்த தான் ஆள் இருக்குதே ஒழிய... உங்கள் தேடலுக்கு விடை கிடைக்காது.

வரலாற்றினை நேசிக்கும் ஒரு மாணவன், வாசகன் என்னும் முறையில் இதனை சொல்கிறேன்.

பல மில்லியன் வயது கொண்ட பூமியின் மனித வரலாறு 200,000 வருடம் மட்டுமே. அதிலும் கடந்த 2020 வருட காலம், ஜேசுவுக்கு பின்னர் தான் ஓரளவுக்கு தொடர் வரலாறு உண்டு. இது ஆசியாவிலும் பார்க்க, ஐரோப்பவில் தான் கூடுதல் தெளிவாக உண்டு.

அதுக்கு முன்னர், எகித்திய பிரமிட், இந்து சமவெளி என ஆங்கொன்றும், இங்கொன்றும் தான்.

ஒரு தெளிவில்லாத, ஆசிய வரலாறுக்குள், விவாதம் நடாத்துவது, உங்கள் நேர விடயம். அப்புறம் உங்கள் இஷடம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இது உங்களுக்கும் பொருந்தும்.

நான் இங்கே வரலாற்றை நிறுவவோ, படிப்பிக்கவோ வரவில்லை உங்கள் “நாயக்க” தியரி, இலங்கை தீவில் தமிழர் கொண்டுள்ள “claim” ற்கு, அதன் தொடர்சியாக தமிழ் தேசியத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை மட்டுமே சொல்ல வருகிறேன்.

உங்களுக்கு விளங்கி விட்டது என நினக்கிறேன். 

மிகுதி உங்கள் இஸ்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.