Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

இப்போது நம் இருவரது கருத்தும், அவரவர் பார்வை (opinion) என்ற நிலைக்கு வந்து விட்டது. இதற்கு மேல் அடுத்த கட்டம் ஆளை ஆள், ஒருவர் சொல்வது சரி அல்லது பிழை என நிறுவும் நிலை.

ஆனால் இந்த திரியின் நோக்கம் தரவுகளை கண்டறிதல் (fact finding) என்பதால் இத்தோடு அமைகிறேன்.

ஆனால் நீங்கள் மேலே சொன்னதை பற்றி எனது பார்வையை சொல்லி விடுகிறேன்.

ஆங்கிலேயர்கள் வடையை தனியே அப்புவிடம் மட்டும் கொடுக்கவில்லை. அப்பு, சுப்பு இருவரிடமும்தான் கொடுத்தார்கள். 

அதில் அப்புவும் சுப்புவும் வடை பஞ்சாயத்துக்கு எப்போதும் தம்மை நம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகத்தை ஸ்தாபித்த பின் தான் அகன்றார்கள். எந்த நாட்டையும் சர்வாதிகாரிகள் கையில் கொடுக்கவில்லை.

நிச்சயம் இதற்கு அவர்களுக்கு ஒரு சபாஷ்.

அப்படி ஜனநாயக மயப்பட்ட இலங்கையில் அவர்களால் சிறுபான்மை கையில் நாட்டை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.

இத் திரியில் எனது நோக்கம் நான் சொல்வது சரி என நிறுவுவதில்லை  ...சிலவற்றை தெரிந்து கொள்ளவே எழுதினேன் ...என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை ....உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ...உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ....மீண்டும் வேறொரு தலைப்பில் சந்திப்போம் ...நன்றி 
 

  • Replies 147
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதல்வன்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.  அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒ

சண்டமாருதன்

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம்

goshan_che

தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், ப

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரதி said:

இத் திரியில் எனது நோக்கம் நான் சொல்வது சரி என நிறுவுவதில்லை  ...சிலவற்றை தெரிந்து கொள்ளவே எழுதினேன் ...என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை ....உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ...உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ....மீண்டும் வேறொரு தலைப்பில் சந்திப்போம் ...நன்றி 
 

நன்றி அக்கா.

உங்கள் கருத்து பகிர்வுக்கும் நன்றி.  நீங்களும் என்னை போலவே இந்த திரியில் சரி என்று நிறுவ முயற்சிக்கவில்லை என்பதை நீங்கள் கருத்தாடிய விதத்தில் இருந்தே புரிந்து கொண்டேன் 🙏🏾.

நாம் மட்டும் அல்ல, விசுகு அண்ணா, துல்பன் என பலரும் இப்படியே உரையாடுவது உண்மையில் மகிழ்சியை தருகிறது.

இன்னொரு திரியில் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, goshan_che said:

நன்றி அக்கா.

உங்கள் கருத்து பகிர்வுக்கும் நன்றி.  நீங்களும் என்னை போலவே இந்த திரியில் சரி என்று நிறுவ முயற்சிக்கவில்லை என்பதை நீங்கள் கருத்தாடிய விதத்தில் இருந்தே புரிந்து கொண்டேன் 🙏🏾.

நாம் மட்டும் அல்ல, விசுகு அண்ணா, துல்பன் என பலரும் இப்படியே உரையாடுவது உண்மையில் மகிழ்சியை தருகிறது.

இன்னொரு திரியில் சந்திப்போம்.

ஆனால் இங்கே ரதி  வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு?????

இயக்கத்துக்கு  போவதற்கு முக்கிய காரணம் தமிழரது  உரிமைக்காக அவர்களது எதிர்கால சுபீட்சத்துக்காக போராட வேண்டும் என்ற போராட்ட  மனநிலை  அல்ல

வேறு தனிப்பட்ட  காரணங்கள்  தான்  என்பது பேசப்படணும்

அது மாவீரர்களை அவமதிப்பதாகவே  நான்  பார்க்கின்றேன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

ஆனால் இங்கே ரதி  வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு?????

இயக்கத்துக்கு  போவதற்கு முக்கிய காரணம் தமிழரது  உரிமைக்காக அவர்களது எதிர்கால சுபீட்சத்துக்காக போராட வேண்டும் என்ற போராட்ட  மனநிலை  அல்ல

வேறு தனிப்பட்ட  காரணங்கள்  தான்  என்பது பேசப்படணும்

அது மாவீரர்களை அவமதிப்பதாகவே  நான்  பார்க்கின்றேன்?

நிச்சயமாக அது தவறான பார்வைதான். அதை அவரின் பார்வை என்பதாக மட்டுமே என்னால் கருத முடியும்.

எனது பார்வை என்ன என்பதை மேலே சொல்லியுள்ளேன். நான் கண்ட மட்டில் போராட்ட வாழ்வு மிக கடினமானது என தெரிந்தே போனார்கள் (எல்லா இயக்கங்களுக்கும்). 

ஆகவே நான் மட்டும் அல்லாது ஏனையோரும் தமது பார்வையை முன் வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் சாட்சியம் கொடுக்கும் போது உண்மையாக என்ன நடந்தது என்பது தானாக பதிவாகும்.

தவிர உங்கள் ஆதங்கம் புரிந்தாலும், அவமதிக்கும் நோக்கில் ரதி அக்கா எழுதியதாக நான் நினைக்கவில்லை. இறந்தவர்கள் அவரது சகோதர, சகோதரிகளும்தான்.

மிகுதியை அவரின் பதிலுக்கு விடுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

நிச்சயமாக அது தவறான பார்வைதான். அதை அவரின் பார்வை என்பதாக மட்டுமே என்னால் கருத முடியும்.

எனது பார்வை என்ன என்பதை மேலே சொல்லியுள்ளேன். நான் கண்ட மட்டில் போராட்ட வாழ்வு மிக கடினமானது என தெரிந்தே போனார்கள் (எல்லா இயக்கங்களுக்கும்). 

ஆகவே நான் மட்டும் அல்லாது ஏனையோரும் தமது பார்வையை முன் வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் சாட்சியம் கொடுக்கும் போது உண்மையாக என்ன நடந்தது என்பது தானாக பதிவாகும்.

தவிர உங்கள் ஆதங்கம் புரிந்தாலும், அவமதிக்கும் நோக்கில் ரதி அக்கா எழுதியதாக நான் நினைக்கவில்லை. இறந்தவர்கள் அவரது சகோதர, சகோதரிகளும்தான்.

மிகுதியை அவரின் பதிலுக்கு விடுகிறேன்.

நன்றி சகோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமக்குள் ஒரு பிரிவினருக்கு, அவர்கள் இன்று எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளினால் அல்லது அவர்கள் ஆதரிக்கும் அவர்களது அரசியல்த் தலைவர்களின் நிலைப்பாட்டினால், போராட்டத்தைத் தவறு என்றும், தேவையற்றது என்றும், போராட்டம் தொடங்கப்படுவதற்கான காரணங்கள் எவையுமே நீதியானவை அல்லவென்றும், போராட்டம் என்பது வெறும் ஆயுதக் கவர்ச்சியினாலும், தனிமனித வழிபாட்டினாலுமே இளைஞர்களை உள்வாங்கியது என்றும் நிறுவவேண்டியது அவசியமாகிவிட்டது.

தமது தவறுகளை, துரோகங்களை நியாயப்படுத்த, நியாயங்களைத் தவறென்றும், அநீதியானவை என்று நிறுவும் தேவை அவர்களுக்கு இருக்கிறது.

அதன் ஒரு அங்கமே போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும், தேவையற்றவை என்பதும், வடபகுதித் தமிழனால் மொத்தத் தமிழினத்தின்மீதும் திணிக்கப்பட்ட ஒரு அவலம் என்றும் நிறுவ முற்படும் கைங்கரியம்.

இவர்களின் இன்றைய புதிய அரசியலின் ( அதாவது 2004, பங்குனி  6 இன் பின்னரான)     அடிப்படையே இதுதான் என்பது நான் விளங்கிக் கொண்டது. 

  • Thanks 1
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்றிருக்கும் தமிழரின் அரசியத் தெரிவுகள் யார்?

1. அரசுக்குச்சார்பானவர்கள்

2. அரசையும் சாராமல், தமிழ் மக்களையும் சாராமல் ஆனால் தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்பவர்கள்


அரசுக்குச் சார்பானவர்கள் 

டக்கிளஸ், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், ஆனந்த சங்கரி போன்றவர்கள்.  இவர்களால் தனித்து ஒரு முடிவினையோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்வினையோ எடுக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திற்குச் சேவகம் செய்யும் இவர்களினால் இவர்களுக்கும், இவர்களோடு கூடவிருக்கும் ஒரு சில தமிழருக்கும் நண்மைகள் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களால் தமிழருக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவை. போர்க்காலத்தில் மக்களினதும், போராட்டத்தினதும் அழிவோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இவர்கள், போரின் பின்னரான அரசின் எஜென்ட்டுகளாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பிலும், வளங்களைச் சூறையாடுவதிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் இவர்களைக் காட்டியே தான் தமிழ் மக்களுக்கு அரசியலில் சம அந்தஸ்த்தினை வழங்கிவருவதாகவும் அரசினால் காட்ட முடிகிறது. உள்நாட்டில் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை சிறிது சிறிதாகக் குரைத்து, தமிழர்களின் அரசியல்ப் பலத்தினை அழிப்பதில் இவர்களை முன்னிறுத்தியே அரசு செயற்பட்டு வருகிறது. தமிழர்கள் என்பதற்கு அடையாளமாக பெயர்களை மட்டுமே கொன்டிருப்பதைத்தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்று எவையுமே இல்லை.

 

2. தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய அரசியல்வாதிகள்.

சுமந்திரன், சம்பந்தன், சிறிதரன், அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், மணிவண்ணன், சித்தார்த்தன் போன்றவர்கள்.

புலிகளால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். அன்று எதற்காக அழைக்கப்பட்டார்களோ, அதற்கு நேர்மாறாக தமிழ்த் தேசிய அரசியலை, அதன் பலத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்குவதில் மட்டுமே தமது நேரத்தையும் வளங்களையும் பாவித்து வருபவர்கள். எடுப்பார் கைப்பிள்லைகளாக பிரிந்து நின்று உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நூற்பொம்மைகளாக ஆளாளுக்கென்று ஒவ்வொரு திசையில் பயணிப்பவர்கள். சம்பந்தன் சுமந்திரன் கூட்டு செய்யும் அரசியல் தமிழ்த் தேசியத்திற்கு அமைவானதில்லை என்பது கண்கூடு. புலிகளை விமர்சிப்பதிலும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவத்ன் மூலம் மட்டுமே சிங்களவர்களௌக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கமுடியும் என்று நம்புபவர்கள். இந்தியாவினதும், மேற்குலகினதும் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தமிழரின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிடவும், அல்லது விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஐ தே க கட்சியுடனான இவர்களின் நெருக்கத்தினைப் பாவித்து  2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் தமிழருக்குச் செய்யக்கூடிய சிறு உதவிகளான கைதிகளை விடுவித்தல், மாகாணசபை தேர்தலினை நடத்துதல், அரசியலமைப்பினை மாற்றுதல் ஆகிய எந்தவித முயற்சியினையும் எடுக்க விரும்பாது வாளாவிருந்தவர்கள். இன்றுவரை இவர்களின் பின்னால் நின்று ஆட்டுவிக்கும் சக்தியெது என்பதை மிகவும் லாவகமாக மறைத்து அரசியல் செய்பவர்கள். 

இவர்களுடன் அண்மையில் அணிசேர்ந்திருக்கும் சாணக்கியனின் அரசியல் பின்புலம் அலாதியானது. அரச ராணுவத்தின் துனைக்குழுவான பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக, பிள்லையானின் பேச்சாளராக தனது அரசியலை ஆரம்பித்தவர் இவர். தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்பி தமிழ்த் தேசிய அரசியலினையும், முஸ்லீம்களுடனான நட்பையும்பற்றிப் பேசும் கெட்டிக்காரன். சிங்கலத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பரீட்சயமுள்ள இவர் செய்யும் அரசியல் தனக்கானது மட்டும்தான். கிழக்கு மாகானசபை அல்லது இணைந்த வட - கிழக்கு மாகாணசபை முதல்வராகும் கனவில் வாழ்பவர். 

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்தது கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் கூட்டு. சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடியவர்கள் என்று மக்களால் கருதப்பட்டவர்கள். ஆனால், தாந்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், சுயநல அரசியலைனாலும் கூடவிருந்தவர்களின் நம்பிக்கையினை இழந்து பலர் வெளியேறக் காரனமாகவிருந்தவர்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், இதர கட்சித் தலைமைகளுக்கும் எதிரான பிடிவாதமான அரசியல் நிலைப்பாட்டினால் இன்றுவரை தமிழ்த் தேசியப் பரப்பில் பல கட்சிகள் ஒன்றுபடுவதை விரும்பாதவர்கள். கூட்டமைப்பிலிருந்து பிரிந்ஹ்டு வந்ததன் பின்னர் தமக்குள் மோதுண்டு, மணிவண்ணன் வெளியேறவும், அரசுக்குச் சார்பான துனைராணுவக் குழுவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யவும் காரனமானவர்கள். பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகக் கதைப்பதே அரசியல் எனும் நிலைப்பாட்டில் வாழ்பவர்கள். 

சித்தார்த்தன், அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு. முன்னாள் அரச ராணுவத் துனைக்குழுக்களின் தளபதிகள் அல்லது தலைவர்கள். இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்துடன் நேரடியான தொடர்பை நெடுங்காலம் பேணிவந்தவர்கள். பல தமிழர்களின் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புகொணடிருந்தவர்கள். தொடர்ச்சியாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துவரும் இவர்கள், சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிரானவர்கள். தமது அரசியல் எதிர்காலமே இவர்களின் ஒரே இலக்கு. தொடர்ந்து அரச ராணுவ குழுக்களாக இயங்கமுடியாத பட்சத்தில் தமது இருப்பிற்காக அரசியலைத் த்ர்ரெந்தெடுத்தவர்கள். 

அடுத்தது விக்னேஸ்வரன். சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு பதிலாக தமிழ் மக்களால் தலைவராகப் பார்க்கக்கூடியவர் எனும் மாயையினை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் நம்பிக்கையினைத் தந்து பல மேடைகளில் தமிழரின் இழப்புக்கள் குறித்து வெளிப்படையாகப்பேசியவர். ஆனால், கூடவிருக்கும் இதர அரசியல்வாதிகளினதும், ஆதரவாளர்களினது பேச்சிற்கு அடிபணிந்து, இலக்கு மாறி இன்று பத்தோடு  பதினொன்றாக நிற்பவர். 

 சிறிதரன். கிளிநொச்சி மக்களால் முன்னர் ஆதரிக்கப்பட்டவர். வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தமிழரசுக் கட்சியூடாக பாராளுமன்ற ஆசனம் என்பதைத்தவிர இவரின் அரசியல் அதிக தூரம் செல்வதில்லை. ஒரு சில பாராளுமன்ற உரைகளும், மாவீரர்களுக்கான வணக்கமும் தன்னைத் தொடர்ந்தும் அரசியலில் வைத்திருக்க உதவும் என்று நம்புபவர்.

இவர்கள் எவராலும் தமிழருக்கான விடிவு கிடைக்கப்போவதில்லை. இது இவர்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும், ஆனாலும் தமது அரசியல் எதிர்காலத்திற்காக, வருவாய்க்காக அதனைச் செய்கிறார்கள். 

தமது சொல்கேட்டு, தமது சுரண்டல்களை ஏற்றுக்கொன்டு, தமது பிராந்திய நலன்களுக்கான பகடைகளாகவிருந்து தமக்கு சலாம்போடும் அமைப்பாக புலிகள் இருக்கவேண்டும் என்று இந்தியாவும், மேற்குலகும் எதிர்பார்த்தது. அப்படி புலிகள் இருக்காதவிடத்து அவர்களை அழித்து நாடு முழுவதையும் சிங்களப் பேரினவாதிகளிடம் கொடுப்பதன்மூலம் மொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தமக்குத் தேவையானதை அடைந்து கொள்ளலாம் என்று இந்த அந்நிய சக்திகள் விரும்பியதன் விளைவே எமது மக்களின் அழிப்பும், போராட்டத்தின் வீழ்ச்சியும்.

இன்று தமிழருக்கான தீர்வு எதனையும் கொடுக்கவேண்டிய தேவை இந்த சக்திகளுக்கு இல்லை. தமக்குத் தேவையானவற்றை சிங்களமே கொடுத்துவரும்வேளையில், சிங்களத்திற்கு எதிராகச் சென்று எதுவுமேயற்ற தமிழர்களை ஆதரிக்க இந்த சக்திகளுக்கு தேவையென்று ஒன்றில்லை. ஆகவேதான் இன்றுவரை தமது பிணாமிகளாக தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளைக் குழுக்களாகப்பிரித்து தம்பாட்டிற்கு இயக்கி வருகிறார்கள். மனிதவுரிமை மீறள்கள், போர்க்குற்ற விசாரனைகள், சிறுபான்மையினங்களுக்கான அரசியல் பாதுகாப்பு, சிறுபான்மையினக் குழுக்கள் என்று வார்த்தை ஜாலங்களைப் பாவித்து கானல்நீரைப் போன்று இன்றுவரைத் தமிழர்களை நம்பிக்கையுடன் ஏங்கவைத்து தமது நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சக்திகள். இந்தியாவென்றும், அமெரிக்காவென்றும், ஐரோப்பாவென்றும் தொடர்ச்சியாக தமது பிணாமிகளை வரவழைத்து தமிழர்களை "அரசியல்த் தீர்வு ஒன்று வரப்போகிறது" எனும் மாயைக்குள் அடைத்துவைத்திருப்பவர்கள். பலமுறை தாம் பாவித்து வெற்றிபெற்ற "தமிழர்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன் பேணல்" எனும் அதே கைங்கரியத்தை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கத் தயங்காத சுத்த சுயநல சக்திகள். 

இவர்களாலும் தமிழருக்கென்று தீர்வொன்றும் கிடைக்கப்போவதில்லை. 
 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன?

நிச்சயமாக நடக்கப்போவது இவைதான்

1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும்.

2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும்.

3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும்.

4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே). 

5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம்.

6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும். 

7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்?

ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது. 

நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது. 

இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது.

அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ரஞ்சித் அவர்களே, புதன்கிழமையின் முதலிரு மறுமொழிப் பெட்டியிலும் உள்ள அரசியல் கோமாளிகள் பற்றிய தங்களின் அரத்தின சுருக்க கருத்து அருமை. 

எம்முடைய கோமாளிகளின் கடந்தகாலத்தைப் பற்றி அறியாதோருக்கு  சிறப்பாக சுருக்கமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. நன்றி!

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை. எமது இருப்பும், எமது தொன்மையும், கலாசாரமும், தாயகமும் பாதுக்கக்கப்பட வேண்டும் என்றால் நாம் மீண்டும் போராடவேண்டும். பாராளுமன்ற தேர்தல் வழி அரசியல்ப் போராட்டம் பயனற்றது. 70 களின் இறுதிப்பகுதியில் உருவாகிவந்த அடக்குமுறைகளையும், சிங்கள பெளத்த மயமாக்கலையும் போன்று பல நூறுமடங்கு சிங்கள பெளத்த மயமாக்கல் இப்போது நடைபெற்று வருகிறது. அன்றைக்குப் பிரபாகரனின் போராட்டம் எவ்வளவு அவசியமாக இருந்ததோ அதைவிடவும் அதிக அவசியத்தை தமிழர்களின் இன்றைய கையறு நிலை வேண்டி நிற்கிறது.

மீதியை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவன் எங்கள் வழிகாட்டி !

  • Like 1
  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/6/2023 at 06:31, ரஞ்சித் said:

அவன் எங்கள் வழிகாட்டி !

 

 

நன்றி ரகு...

  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/6/2023 at 14:17, ரஞ்சித் said:

மீதியை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

எனக்கென்னவோ முதலில் நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை, தமிழ் மொழியை, கலாச்சாரத்தை பேண வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்கட்டும்.. அதன் பிறகே அவர்களால் உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில்  போதைவஸ்து ஒரு புறம். போட்டி பொறாமையால்  சமூக சீர்கேடுகளைக் கூட தட்டிக் கேட்க முடியாமல் தடுமாறும் சமூகத்தில், எமது தொன்மையை எப்படி பாதுகாக்க முடியும்? .

மக்களின் எண்ணங்கள் இப்பொழுது வேறு. அதற்காக அவர்களை பிழையெனவும் கூற இயலாது. 

எனக்கு உங்களைப் போல அரசியல் கதைக்க முடியாது ஆனால் என் மனதில் பட்டதை எழுதினேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்கள் தமது இருப்பையும், மொழியையும், தாயகத்தையும், கலாசாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேவை இருக்கின்றதா என்பதே முதலாவது கேள்வியாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், அப்படியொரு தேவை இல்லையென்றால், தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதுபற்றி அலசி தமது நேரத்தை அநியாயமக்கவேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. 

சுமார் 35 வருடங்கள் நடைபெற்ற ஜனநாயக வழி, பாராளுமன்ற அரசியலின் தோல்வியும், அதன்பின்னரான 30 வருட ஆயுதப்போராட்டத்தின் கொடுமையான இழப்புக்களும், இன்று எவையுமே அற்று நிர்க்கதியாக்கப்பட்டிருக்கிற நிலையும், எமது தாயகம் முற்றான ராணுவ ஆக்கிரமிற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் அவலமும் எம்மை எதுவித போராட்டங்களிலும் ஈடுபடுவதைத் தடுத்து வைத்திருக்கிறது என்பதே எனது நிலைப்பாடு.  நாம் இன்னொரு போராட்டம்பற்றிச் சிந்திப்பதை முற்றாகவே அழித்துவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் , தனக்கு எம்மீதிருக்கும் அதிகாரத்தைக் கேள்விகேட்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயற்பட்டு வருகிறது. 


எனது கேள்விக்கு ஒரு சிலர் நகைப்புடன் பதிலளித்ததும், கேலிச் சித்திரம் வரைந்து கிண்டலடித்ததும் நடந்தது. ஆனால், இவர்கள் எவருக்குமே தமிழரின் அரசியல் இனிமேல் எத்திசையில் பயனிக்க வேண்டும் என்பதுபற்றிய தெளிவோ அல்லது ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றீடான வழிகள் என்று எதுவுமே இவர்களிடத்தில் இல்லை. குறைந்தது, எனது கருத்திற்கு நேரடியான பதிலையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் பண்புகூடக் கிடையாது. அவர்களை விட்டு விடலாம், ஏனென்றால் இவர்கள் எக்காலத்திலும் தமிழர் போராட்டத்தில் தம்மை செயற்திறனுடன் ஈடுபடுத்திக் கொண்டது கிடையாது, இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை. 

ஆக, நாம் இன்று செய்யக்கூடியது இதுதான், 

இன்று ஒரு சிலர் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டங்களின் மேல் எமது இருப்பைச் சுமத்திவிட்டு நாம் ஒரு இனமாக ஓய்வெடுக்கலாம். அல்லது, அவர்களையும் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓய்வெடுக்குமாறு நாம் கேட்கலாம்.  

அப்படி எதுவுமே தேவையில்லை அல்லது சாத்தியமில்லையென்றால், நாம் எமது அடையாளங்களைத் திறக்கலாம். இனத்திலிருந்து ஆரம்பித்து, மொழி, மதம் என்று அனைத்திலும் சிங்களத்தின் இன்னொரு பகுதியாக விருப்புடன் உள்வாங்கப்படலாம். நேற்று நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் தமிழர்களாக இருந்து அடையாளம் திறந்து சிங்களவர்களாக மாறியிருக்கும் அவர்களைப் போன்று இன்று மீதமாயிருக்கும் வடக்குக் கிழக்கின் தமிழர்களும் மாறிப்போகலாம்.  அதன்பின்னர், இனக்கொலை என்றோ, போர்க்குற்றம் என்றோ, தாயக விடுதலை என்றோ எவரும் பேசவேண்டிய தேவை இருக்காது. 

On 8/8/2023 at 00:00, பிரபா சிதம்பரநாதன் said:

மக்களின் எண்ணங்கள் இப்பொழுது வேறு. அதற்காக அவர்களை பிழையெனவும் கூற இயலாது. 

உண்மை. ஆனால், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. எமது இளைய சமுதாயம் விடுதலைக்கான பாதையில் சிந்திப்பதையோ அல்லது செயற்படுவதையோ முற்றாகத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னாலிருப்பதே எம்மை எக்காலத்திற்கும் ஆக்கிரமித்து எமது இருப்பை சிறுகச் சிறுக அழிக்க கங்கணம் கட்டியிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம் தான். ஆகவே, எமது மாற்றம் என்பது இதனை அடையாளம் கண்டு அங்கிருந்து எமது செயற்பாட்டினை ஆரம்பிப்பதுதான். வெறுமனே மக்கள் சலித்துவிட்டர்கள் என்றோ, இளைய சமுதாயம் வேறு திசையில் பயணிக்கிறது என்றோ நாம் இருந்துவிட்டால் எதுவுமே மாறப்போவது கிடையாது. 

  • Thanks 1
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு கருத்தாடல்களை பார்க்கும்போது தமிழ் மக்களுக்கு சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும், போராட வேண்டும் என்பது போலத்தான் இருக்கின்றது. அனாலும் கள நிலவரம் அப்படி இல்லை.

இனி தனி ராஜயமோ, சமஷடியோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையோ கிடைக்க போவதில்லை. ஆக கூடியது மாகாண சபை எனப்துடன் முழு அதிகாரம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

எனவே அவர் அப்படி, இவர் இப்படி என்று கதைப்பதில் இனி ஒரு பிரயோசனமும் இல்லை. இந்திய நிச்சயமாக மாகாண சபைக்கு மேலே போகாது, இலங்கை அரசை பகைத்து கொள்ளவும் மாடடாது. சிலர் மக்களை உசார் மடயர்களாக்குவதட்கு வேஷ்ட்டியை மடித்துக்கொண்டு போகலாம், ஆனால் ஒன்றுமே நடக்க போவதில்லை.

இந்தியாவில் இருந்து சாந்தன் இங்கு வர அனுமதி கொடுத்தாலும் அவர் சுதந்திரமாக செயட்பட முடியாது. அதே போல விடுதலை புலிகள் பற்றி அவர்களது சொந்த காரர்களே இப்போது அதைப்பற்றி பேசுவதில்லை. இப்படி கதைத்தால் சிலர் அடிக்கவும் வருகிறார்கள். அதாவது தங்களை நிம்மதியுடன் வாழ் விட சொல்லுகிறார்கள்.

எனவே இங்குள்ள யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெரிய பெரிய கட்டுரைகள் எழுதலாம் , மீண்டும் மீண்டும் வாசித்து அவர்கள் சந்தோச படலாம். வெளி நாடுகளில் இருந்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எழுதுவதையே இது காண்பிக்கிறது. எனவே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நல்லது. 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன செய்வது? வரலாறு தெரியாத மூடக்களுக்கு யாராவது வரலாற்றை எழுதித்தான் ஆகவேண்டி இருக்கிறது.

இன்றிருக்கும் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சுதந்திரத்திற்குப் பின்பிருந்தே இருந்து வந்தது என்பதும், அதனாலேயே தமிழர்கள் ஆயுதமேந்தினார்கள் என்பதும் இந்த வீணர்களுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் தெரியப்போவதில்லை.

மேற்குலக மயக்கத்தில், மத அடிப்படைவாதத்தின்பால் உந்தப்பட்டு, அடக்குமுறையாளர்களுக்கு ஒத்தூதி அப்பாவிகளின் விடுதலைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று எள்ளி நகையாடும் கோடரிக் காம்புகள் ஒரு இனத்தின் இருப்புக் குறித்துப் பேசும் எந்த அருகதையும் அற்றவர்கள். மற்றையவர்களுக்கு அரசியற்பாடம் எடுப்பதை இந்த அற்பர்கள் முதலில் நிறுத்தட்டும். 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன செய்வது சில பயனதான் கொள்ளிகள் இங்கிருந்து  ஓடிப்போய் வெளி நாடுகளில் பதுங்கி இருந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள். இதனை ஆமோதிப்பதட்கும் ஒரு மடயர் கூடடம் இருக்கத்தான் செய்கிறது. கள நிலவரம் என்னவென்றே தெரியாத மடயர் கூடடம். சங்கிகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள். இந்தியாவின் அடிமைகளுக்கு சொல்லுவதட்கு வேறொன்றும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விடுதலைப் புலிகளை பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்கு காரணம் சிங்கள அடக்குமுறை.

சில *** யதார்த்தம் விளங்குவதில்லை….

Edited by மோகன்
  • Thanks 1
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

On 13/2/2024 at 12:07, MEERA said:

சில *** யதார்த்தம் விளங்குவதில்லை….

இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 13/2/2024 at 02:07, MEERA said:

விடுதலைப் புலிகளை பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்கு காரணம் சிங்கள அடக்குமுறை.

சில *** யதார்த்தம் விளங்குவதில்லை….

முற்றிலும் உண்மை
ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா

2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ரஞ்சித் said:

 

இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 

இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்

 

ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்

 

பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.