Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

இலவசக் கல்வி பற்றி ஏன் கேள்வி வந்தது என்று உங்களுக்கு விளங்கியதா? இல்லையல்லவா? அது தான் பொயின்ற்.

இந்த திரியில் மட்டுமல்ல வேறு திரிகளிலும் இலவச என்பது கிடந்து இழுபடுகுது.அதற்காகவே ரஞ்சித்தின் விளக்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்தேன்.

  • Replies 94
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்! 

சக கருத்தாளரை உளரீதியாகத் தாழ்த்தி, அவர் தொடர்ந்தும் எழுதுவதைத் தடுக்க சிலர் பயன்படுத்தும் இருவிடயங்கள்தான் "உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள்" அல்லது "பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள்" என்னும் பதங்கள். ஆனால், அதையே தாம் செய்யும்போது அறிவாளிகளாக, மேதைகளாக தம்மைக் காட்டுவதற்குச் செய்வார்கள். ஆகவே இதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

3 hours ago, Justin said:

நீங்கள் பட்டியலிட்ட நாடுகளின் சமூக நலன் திட்டங்களும் சோசலிசத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டவையேயொழிய முதலில் இருந்த மன்னராட்சியாலோ, முதலாளித்துவத்தாலோ மட்டுமே வந்தவையல்ல.

நீங்கள் சொல்லும் சோஷலிசத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் அங்கே இன்றும் நடைமுறையில் உள்ளன, ஆனால் சோசலிசம்தான் அங்கு தற்போது இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பதையும் நீங்களே கூறிவிடுங்கள். 

4 hours ago, Justin said:

இலங்கையில் சோசலிசப் பொருளாதார சமூகக் கொள்கைகளின் எல்லா நலன்களையும் அனுபவித்து விட்டு "சோசலிசம் அழிவே"

நான் அனுபவித்த அதே நலன்களைத்தான் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால் எனது கேள்வியென்னவென்றால், உலகின் மிகப்பலமான பொருளாதாரத்தையும், சோசலிசத்தின் மிகச்செழிப்பான மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டிருக்கும் இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்து, உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் திட்டங்களேயில்லாத அன்றாட வாழ்க்கைக்கே சனத்தொகையில் பெரும்பங்கு அல்லற்படும் முதலாளித்துவ அமெரிக்காவிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாகப்பார்த்தார்கள், இளையவர்கள் தமது சகோதரனாகப்பார்த்தார்கள், புலியாகவோ அல்லது போராளியாகவோ அல்ல.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான கொலை முயற்சி தியாகி திலீபனின் உண்ணாவிரதத்திற்கு முன்பாக ஒரு முறையும் (மற்றவர்கள் கூறகேட்டது) புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகளின் மரணத்தை தொடர்ந்து வடமராட்சிக்கு சென்ற புலிகளின் தலைவரை கொலை செய்ய இரண்ட்டாவது முறையாக முயற்சி செய்யப்பட்டது.
தியாகி திலீபன் மரணம், பன்னிரு போராளிகள் மரணம் தமிழ் மக்களின் போராட்ட தலமைய அழிக்க முற்பட்ட நிலை அனைத்தும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போரிட வேண்டும் என்றும் அதற்கு உடன்பாடில்லாதவர்கள் தாரளமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி செல்லலாம் என்று கூறப்பட்டதாம் அதில் பல போராளிகள் அமைப்பிலிருந்து விலகி சென்றார்களாம் அதில் பசீர் காகாவும் ஒருவர் (மற்றவர்கள் கூறகேட்டது).

இங்கு பல கருத்தாளர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது அஞ்சலி செலுத்துவர்களின் மேல் சேறு பூசுவதினூடாக மறைமுகமாக தியாகி திலீபனை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது.
90 களில் (கால கட்டம் சரியாகநினைவில்லை)பிரித்தானியாவினால் மாகாத்மா காந்தி இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எழுதிய கடிதங்களை வெளியிடுவதற்கெதிராக அங்கு வாழ்ந்த இந்திய மக்களினால் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது ( பல சர்ச்சைக்குரிய கடிதங்கள்) 

நேரடியாக தியாகி திலீபனின் மேல் சேறு பூசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால் என்ன அவருக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது, ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக கீழ்த்தரமாக தரம்தாள வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது

இன்னும் பத்து வருடங்களில் ராஜபக்‌ஷக்களில் நாமல் போன்ற ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போமா?

பழைய விடயங்களை மறப்போம் என்றால் இனப்படுகொலை கூட விரைவில் மறக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

உலக அரசியலில் யார் சுத்தம் எண்டு ஒருக்கால்  சொல்லுங்கோ பாப்பம் தங்கச்சி?
 
இதை எப்பவுமே நினைவில் வைத்திருந்தால் நல்லது அண்ணா 

12 hours ago, ரஞ்சித் said:

அவர் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவில்லையென்பதை எவரும் நம்பவில்லை. ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடம் இங்கே எழுதினால் இக்கட்டுரைபற்றிய தெளிவு கிடைக்கும் என்கிற நோக்கிலேயே எழுதப்பட்டது.

அவ்வாறே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான எழுந்தமானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும். தான் எழுதும் அபத்தமான விமர்சனத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக மட்டுமே போகிறபோக்கில் புலிச் சந்தேக நபர்களுக்கு அதியுட்ச தண்டனைகளை அவர் வாங்கிக்கொடுத்தார் எனும் கட்டுரையாளரின் விசமத்தனத்திற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் படிப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத்தன்மை புரியும் என்பதனாலேயே அது கேட்கப்பட்டது.

மற்றும்படி சுரேஷின் கடந்தகாலம் பற்றிப் பலருக்கும் தெளிவான பார்வையே இருக்கிறது.

ஓ அப்படியா சம்/சும்  பற்றி இப்படி கட்டுரை யாராவது கொண்டு வந்து இணைத்து நான் ஆதாரம் கேட்டால் நீங்கள் தருவீர்களா?
விக்கி அரசியலுக்கு வருகிறார் என்றவுடன் அவர் நீதிபதியாய் இருக்கும் போது  புலிகளுக்கு கொடுத்த தண்டனைகள் பற்றிய பதிவுகள் இதே யாழில் இருக்கு ...உங்களுக்கு நேரம் இருந்தால் தேடிப் பாருங்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்னும் பத்து வருடங்களில் ராஜபக்‌ஷக்களில் நாமல் போன்ற ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போமா?

பழைய விடயங்களை மறப்போம் என்றால் இனப்படுகொலை கூட விரைவில் மறக்கப்படும். 

மன்னிப்பு கேட்டு தமிழருக்கு சுய ஆட்சி தந்தால் ஏற்போம்,

உலகில் உள்ள அத்தனை நாடுகளின் அரச கரங்களிலும் கறை படிந்திருக்கு,

பூர்வ குடிகளை கொலைசெய்துவிட்டு, நல்லவர்களாக நடமாடும் வேஷதார உலகமிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

இதை எப்பவுமே நினைவில் வைத்திருந்தால் நல்லது அண்ணா 

இதை வைச்சு வேறை எங்கையும் மடக்கிற பிளான் போலை கிடக்கு...😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

சக கருத்தாளரை உளரீதியாகத் தாழ்த்தி, அவர் தொடர்ந்தும் எழுதுவதைத் தடுக்க சிலர் பயன்படுத்தும் இருவிடயங்கள்தான் "உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள்" அல்லது "பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள்" என்னும் பதங்கள். ஆனால், அதையே தாம் செய்யும்போது அறிவாளிகளாக, மேதைகளாக தம்மைக் காட்டுவதற்குச் செய்வார்கள். ஆகவே இதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

நீங்கள் சொல்லும் சோஷலிசத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் அங்கே இன்றும் நடைமுறையில் உள்ளன, ஆனால் சோசலிசம்தான் அங்கு தற்போது இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பதையும் நீங்களே கூறிவிடுங்கள். 

நான் அனுபவித்த அதே நலன்களைத்தான் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால் எனது கேள்வியென்னவென்றால், உலகின் மிகப்பலமான பொருளாதாரத்தையும், சோசலிசத்தின் மிகச்செழிப்பான மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டிருக்கும் இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்து, உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் திட்டங்களேயில்லாத அன்றாட வாழ்க்கைக்கே சனத்தொகையில் பெரும்பங்கு அல்லற்படும் முதலாளித்துவ அமெரிக்காவிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பதுதான். 

பந்தி பந்தியாக எழுதுவதை நான் ஊக்குவிக்கிறேன், ஆனால் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் அவசியமற்றது என்கிறேன். இதில் உங்களை தாழ்த்துகிறேன் என்று எங்கே தோற்றம் தெரிகிறதோ நானறியேன்.

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதை வைச்சு வேறை எங்கையும் மடக்கிற பிளான் போலை கிடக்கு...😁

சந்தர்ப்பம் வரும் வரை காத்துகிட்டு இருப்பேன் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

பொருளாதார நலன்களுக்காகத்தான் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். வேலை பிடித்துவிட்டது அதனால் இங்கிருக்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதே உங்கள் மனதுக்கு பிடித்த வேலையை சிறிலங்கா பல்கலைக்கழகங்களிலும் செய்யலாம் அது சோஷலிச ஜனநாயக குடியரசு என்று நீங்கள் நம்பினால்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பந்தி பந்தியாக எழுதுவதை நான் ஊக்குவிக்கிறேன், ஆனால் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் அவசியமற்றது என்கிறேன். இதில் உங்களை தாழ்த்துகிறேன் என்று எங்கே தோற்றம் தெரிகிறதோ நானறியேன்.

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

நம்பீட்டன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

சந்தர்ப்பம் வரும் வரை காத்துகிட்டு இருப்பேன் 🙂

அது நடக்காது தங்கச்சி நடக்காது.
 இந்த அண்ணன் இங்கே கோசான் மற்றும் ஜஸ்டின், துல்பன் போன்ற ஜாம்பவான்களுடன் போராடியிருக்கின்றான். போர்க்கள அனுபவங்கள் அண்ணனுக்கு எக்கச்சக்கம். பகல் கனவு காணாத தங்கச்சி பகல் கனவு காணாத.... :cool:

Tamil comedians vadivelu Reactions

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நம்பீட்டன்

மிக்க நன்றி ரஞ்சித் நம்பினதுக்கு! உங்களைப் போல நாலு பெரியமனுசர் நம்பினாத் தான் எனக்கு சோறு, இல்லயேல் சேறு தான்! 😇

2 hours ago, Eppothum Thamizhan said:

பொருளாதார நலன்களுக்காகத்தான் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். வேலை பிடித்துவிட்டது அதனால் இங்கிருக்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதே உங்கள் மனதுக்கு பிடித்த வேலையை சிறிலங்கா பல்கலைக்கழகங்களிலும் செய்யலாம் அது சோஷலிச ஜனநாயக குடியரசு என்று நீங்கள் நம்பினால்??

இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊

சும்மா சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையை ஒத்துக்கொள்ள பழகுங்கள். இதில மற்றவர்களுக்கு அட்வைஸ் வேற!! 

"வேலை பிடித்துக்கொண்டதால் இங்கிருக்கிறேன்" இந்தத்தமிழ் பாலர் தமிழ்தான்.எல்லோருக்கும் விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2020 at 11:20, கிருபன் said:

ரஞ்சித்,

பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு? 

கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம். 

இந்த பொன் வாய்தான் சீமானின் திரியை பூட்ட வேண்டும் என்று 
தெய்வவாக்கு உதிர்த்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த பொன் வாய்தான் சீமானின் திரியை பூட்ட வேண்டும் என்று 
தெய்வவாக்கு உதிர்த்தது.

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

சும்மா பின்னிடிங்க போங்க 
எந்த ஆதரமமுமற்ற வெறும் வாந்திகளை சுமந்திருக்கும் 
ஒரு வெறுப்பு கட்டுரையை காவிவந்து வக்காலத்து வாங்கிக்கொண்டு 
இப்படியும் கூசாமல் எழுதலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். 

அதை விடுங்கள் ... நீங்கள் எழுதிதானால்தான் சூரியன் உதிக்கும் என்று 
ஏதாவதொரு நிலை இருந்தால்தான் அதைப்பற்றி நான் அக்கறை கொள்ளவேண்டும் 

இந்த கின்னி மின்னி புத்தகம் வாசித்தீர்களா?
இது பற்றி அறிய விரும்புகிறேன் ஏதும் மேலதிக தகவல் தெரியுமா? 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

இலங்கையில் மகிந்த கொம்பனிதான் வெறுப்பரசியல் செய்கிறார்கள். எங்கோ இருப்பவர்கள் எமது தமிழினம் என ஆதங்கப்பட்டால் அது வெறுப்பரசியல்.

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் மகிந்த கொம்பனிதான் வெறுப்பரசியல் செய்கிறார்கள். எங்கோ இருப்பவர்கள் எமது தமிழினம் என ஆதங்கப்பட்டால் அது வெறுப்பரசியல்.

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

ஏன் அண்ணே இலங்கை இந்தியா என்று ஏரோப்பிளேன் ஏறுறீர்கள் 
நீங்கள் நிற்கும் 
இந்த கட்டுரை என்ன வடிவம்?

எல்லவற்றையும் மன்னர்கள்தான் முடிவெடுப்பார்கள் 
நாங்கள் ஆமாம் மன்னா போட்டால் சரி 

அவர்கள் அது வெறுப்பு அரசியல் என்றால் 
அது அப்பிடித்தான் ... ஏன் எதுக்கு என்று காரணம் எல்லாம் கேட்க கூடாது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

எந்த ஆதரமமுமற்ற வெறும் வாந்திகளை சுமந்திருக்கும் 
ஒரு வெறுப்பு கட்டுரையை காவிவந்து வக்காலத்து வாங்கிக்கொண்டு 
இப்படியும் கூசாமல் எழுதலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும்

ஆதாரங்களை தந்தால் மட்டும் ருசித்துப் புசிப்பீர்களா? 😁பிடிக்காததை வாந்தி என்று சொல்லிக்கொண்டுதானே இருப்பீர்கள்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் என்ன செய்தார் என்று உங்களுக்கும் தெரியும். அவர் இப்போது தேசியவாதி. ஆனால் அவருக்கு அப்போது தலைவராக இருந்த பத்மநாபா தமிழின துரோகி.  ஆனால் எனக்கு இருவரும் ஒன்றுதான்.

அதே மாதிரி விக்கியர் 2009 க்கு முன்னர் என்ன செய்தார் என்பதும் கற்பனை அல்ல.

7 hours ago, Maruthankerny said:

இந்த கின்னி மின்னி புத்தகம் வாசித்தீர்களா?
இது பற்றி அறிய விரும்புகிறேன் ஏதும் மேலதிக தகவல் தெரியுமா? 

இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கின்றேன்

6 hours ago, குமாரசாமி said:

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

இவர் என்று யாரைச் சொல்லுகின்றீர்கள்? 

சும்மா கருத்து எழுதுகின்றேன் என்று குதர்க்கமாக எழுதுவதன் மூலம் கிச்சுகிச்சு மூட்டுவதை நானும் ரசிப்பதுண்டு.

அது என்னைச் சுட்டினால் பச்சைப்பொய் என்று  உங்களுக்கே தெரியும் 😁

இனியொரு இணையதளத்தை என்றால் அங்கு உள்ள கட்டுரைகளின் தலைப்புக்களை மட்டும் படித்தாலே விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.