Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைகழக துணை வேந்தர் தாக்கினார்... சுடுவோம் என மிரட்டினார்: மாணவர்கள் போராட்டம், குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை மாணவர்கள் 21 பேருக்கு பல்கலை வளாகத்தினுள் நுழைய தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தப் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு, பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் நேற்று நண்பகல் கலைப்பீடச் சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம் நேற்றிரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய – காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

https://www.ilakku.org/யாழ்-பல்கலை-மாணவர்கள்-21-பே/

  • Replies 59
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் பள்ளிக்கூடமே போகேல்லை எண்டுறன்.....நீங்கள் என்னடாவெண்டால் யூனி கீனி எண்டு கொண்டு......🙃

நம்புறன் டங்கமே

9 hours ago, உடையார் said:

சம்பவத்துடன் தொடர்புடைய – காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

காணொளி எடுத்து தாங்கள் செய்கிறது தான் சரி எண்டு காட்ட வெளிக்கிட்டு கடைசியாக அதே காணொளியை வைச்சு இவைக்கு ஆப்பு வைக்கிற காலம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்புறன் டங்கமே

சொன்னால் நம்பமாட்டியள்.....நான் பள்ளிக்கூடமே போகேல்லை..

sadhu13.jpeg?resize=480%2C272&ssl=1

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இலங்கையில் தனிப்பட 'கல்லூரிகள்' என்ற கட்டமைப்பே இல்லையா..?

பட்டம்(Degree)/பட்டயம்(Diploma) போன்ற படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் போய்தான் படிக்க வேண்டுமா..? 🤔

உதாரணமாக, தமிழ் நாட்டில் பல்கலைக்கழமென்றால் சில குறிப்பிட்ட நிபுணத்துவம்(Specialized) கொண்ட  மேற்படிப்புகள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்தினுள் இருக்கும். இவற்றில் சேர்ந்து படிக்க முதலில் அந்த துறை சார்ந்தவற்றில் மற்ற சிறு நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக எந்த துறையிலும் பட்டம் படிக்க, பக்கத்து நகரங்களில் கல்லூரிகள் பல (பொறியியல், கலை, மருத்துவம், வேளாண்மை என) இருக்கும்.

இந்தக் கல்லூரிகள், அருகேயுள்ள பெருநகரத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துடன் நிர்வாக ரீதியாக(Affiliation) இணைக்கப்பட்டிருக்கும்.

  • மதுரை காமராசர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • மனோண்மனியம் சுந்தரனார்
  • அண்ணாமலை
  • பெரியார்
  • சென்னை
  • திருவாரூர்
  • **
  • **

இப்படி தோராயமாக 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் உண்டு..!

இல்லை வன்னியர்,

இலங்கையில் காலேஜ்/கல்லூரி என அழைக்கப்படுபவை பள்ளிகள்தான். அதாவது ஏ எல் எனப்படும் (பிளஸ்2) உயர்தரம் வரை படிக்கும் இடங்கள்.

ஏ எல் சோதனையில் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில், இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு அரச பல்கலையில் இடம் கிடைக்கும். இது முழுக்க முழுக்க பரிட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே. 

உதாராணமாக ஏ எல் பயோலாஜி படிப்பவர்களில், அதிக கூடிய புள்ளிகள் (மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்) எடுப்பவருக்கு மருத்துவம், அடுத்து, பல்மருத்துவம், அடுத்து மிருக வைத்தியம், அடுத்து பி எஸ் சி சையின்ஸ், படிப்பார்கள்.

இவை எல்லாமுமே கிடைப்பது மிக கடினம்.  இவை எதுவும் கிடைக்காதவர்கள் (ஏ எல் பரீட்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் (80% என நினைகிறேன்) இலங்கையின் அரச பல்கலை கழகங்களிக்கு போக முடியாது.

ஒரு 20/30 வருடம் முன்பு வரை அடுத்து பட்டபடிப்பு படிக்க இருக்கும் ஒரே தெரிவு வெளிநாடு போவது மட்டுமே.

அல்லது, பட்டய கணக்காளர், அல்லது சட்ட கல்லூரியில் சேர்ந்து (சட்ட பல்கலை அல்ல) கணக்காளர், வக்கீல் ஆகலாம்.

நீங்கள் சொல்வது போல தனியார் மருத்துவ காலேஜுகள் 70/80 களில் ஒருமுறையும், 2010-15 இலும் ஆரம்பித்து, எதிர்ப்பால் கைவிடப்பட்டு, அரச பலகலையுடன் இணைக்கப்பட்டன.

ஆனால் இப்போ அவுஸ்ரேலிய, யூகே உட்பட பல பல்கலைகழகங்கள் தமது affiliated campus களை இலங்கையில் திறந்துள்ளமையால், அங்கே இருந்தபடியே ஒரு முழு பட்டபடிப்பையும் முடிக்க முடிகிறது. சிலர் கடைசி வருடம் மட்டும் வெளிநாடு வந்தும் படிப்பார்கள்.

ஆனால் இலங்கையில் இலவசமாக கொடுக்கப்படும் அரச கல்வியை, ஒரு இலங்கை அரச பலகலையில் மட்டும்தான் பெற முடியும்.

எனக்கு தெரிந்தவரை இதுதான் நிலமை.

 இப்போ நிலைமை மாறி இருக்கலாம் ஆனால் வாய்பில்லை என்றே நினக்கிறேன்.

பிகு: ஆனால் அந்த காலம் முதலே மதுரைகாமராசர் பல்கலைக்கு இலங்கையில் இருந்து படிக்க முடியும் என நினைக்கிறேன்.

மட்டகளப்பில் 90களில் இந்த கற்கைக்கான விளம்பரத்தை பார்த்த நியாபகம்.

பிற் சேர்க்கை:

நான் மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன - கீழே கற்பகதரு அவற்றை சுட்டியுள்ளார். தகவல்களை கீழே எனக்கும் கற்பகதருவுக்குமான உரையாடலில் காணலாம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை வன்னியர்,

இலங்கையில் காலேஜ்/கல்லூரி என அழைக்கப்படுபவை பள்ளிகள்தான். அதாவது ஏ எல் எனப்படும் (பிளஸ்2) உயர்தரம் வரை படிக்கும் இடங்கள்.

ஏ எல் சோதனையில் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில், இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு அரச பல்கலையில் இடம் கிடைக்கும். இது முழுக்க முழுக்க பரிட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே. 

உதாராணமாக ஏ எல் பயோலாஜி படிப்பவர்களில், அதிக கூடிய புள்ளிகள் (மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்) எடுப்பவருக்கு மருத்துவம், அடுத்து, பல்மருத்துவம், அடுத்து மிருக வைத்தியம், அடுத்து பி எஸ் சி சையின்ஸ், படிப்பார்கள்.

இவை எல்லாமுமே கிடைப்பது மிக கடினம்.  இவை எதுவும் கிடைக்காதவர்கள் (ஏ எல் பரீட்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் (80% என நினைகிறேன்) இலங்கையின் அரச பல்கலை கழகங்களிக்கு போக முடியாது.

ஒரு 20/30 வருடம் முன்பு வரை அடுத்து பட்டபடிப்பு படிக்க இருக்கும் ஒரே தெரிவு வெளிநாடு போவது மட்டுமே.

அல்லது, பட்டய கணக்காளர், அல்லது சட்ட கல்லூரியில் சேர்ந்து (சட்ட பல்கலை அல்ல) கணக்காளர், வக்கீல் ஆகலாம்.

நீங்கள் சொல்வது போல தனியார் மருத்துவ காலேஜுகள் 70/80 களில் ஒருமுறையும், 2010-15 இலும் ஆரம்பித்து, எதிர்ப்பால் கைவிடப்பட்டு, அரச பலகலையுடன் இணைக்கப்பட்டன.

ஆனால் இப்போ அவுஸ்ரேலிய, யூகே உட்பட பல பல்கலைகழகங்கள் தமது affiliated campus களை இலங்கையில் திறந்துள்ளமையால், அங்கே இருந்தபடியே ஒரு முழு பட்டபடிப்பையும் முடிக்க முடிகிறது. சிலர் கடைசி வருடம் மட்டும் வெளிநாடு வந்தும் படிப்பார்கள்.

ஆனால் இலங்கையில் இலவசமாக கொடுக்கப்படும் அரச கல்வியை, ஒரு இலங்கை அரச பலகலையில் மட்டும்தான் பெற முடியும்.

எனக்கு தெரிந்தவரை இதுதான் நிலமை.

 இப்போ நிலைமை மாறி இருக்கலாம் ஆனால் வாய்பில்லை என்றே நினக்கிறேன்.

பிகு: ஆனால் அந்த காலம் முதலே மதுரைகாமராசர் பல்கலைக்கு இலங்கையில் இருந்து படிக்க முடியும் என நினைக்கிறேன்.

மட்டகளப்பில் 90களில் இந்த கற்கைக்கான விளம்பரத்தை பார்த்த நியாபகம்.

கோசான்,

நீங்கள் எழுதியதில் ஓரளவே சரியானது. கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் இலவசமாக Diploma கல்விநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி தனியார் நிறுவனம். யாழ்ப்பாண கல்லூரிக்கு சொந்தமானது இது. இங்கு பிரித்தானிய Charted Engineering பரிட்சைக்கான கற்கைநெறிகள் 1982இல் இருந்தே வழங்கப்படுகின்றன. Diploma கற்கை நெறிகளும் உண்டு. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான கல்லூரிகள் உண்டு. இவை தவிர பிற்காலத்தில், 1990இல் இருந்து Affiliated  University Colleges அமைக்கப்பட்டன. இவற்றில் சில இன்று பல்கலைக்கழகங்களாக மாறி விட்டன.

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_உயர்_தொழில்நுட்ப_கல்வி_நிறுவனம்

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

நானும் இந்த தொழில் நுட்ப கல்லூரிகளை பற்றி நினைத்தேன்.

ஆனால் இவற்றில் எதிலும் பட்டபடிப்பு வழங்கபடுவதில்லையே? நான் அறிந்தவரையில் துறைசார் தொழில்நுட்ப டிப்ளோமக்கள்தான் இங்கே வழங்கபடுவன, டிகிறிகள் அல்ல என நினைவு.

கட்டுபெத்த கல்லூரி பின்னாளில் மொரட்டுவ பல்கலையாக மாறியது, ஆனா மாறியபின் அனுமதி பலகலைகழக வழிமுறைபடியேதான் என நினக்கிறேன்.

நீங்கள் சொல்லும் affiliated university colleges பற்றி நான் கேள்விபடவில்லை. 

Kottalawala Defense Academy, பெளத்த பிரிவேனா கல்லூரி இவற்றை சொல்கிறீகளா? அவையும் துறைசார் அமைபுகளே அன்றி, தமிழக முறை போல அல்லவே?

ஆனால் பள்ளிகள் மட்டும் இன்றி இப்படியான தொழில் நுட்ப கல்லூரிகளும், கல்லூரி என அழைக்கப்பட்டன என்பதை ஏற்று கொள்கிறேன்.

ஆனால் இவை தமிழ் நாட்டில் இருக்கும் - affiliated colleges of a university அமைப்பில் வராது என நினைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்லும் affiliated university colleges பற்றி நான் கேள்விபடவில்லை. 

ஆனால் இவை தமிழ் நாட்டில் இருக்கும் - affiliated colleges of a university அமைப்பில் வராது என நினைகிறேன்.

கண்டி, பொல்கொல்ல affiliated university college இன் பௌதீகவியல் ஆய்வுகூடத்தை, நான் அங்கு பணியாற்றிய போது அமைத்து கொடுத்தேன். அந்த கல்லூரி இப்போது  மத்திய மாகாண பல்கலைக்கழகமாக மாறி விட்டது. வவுனியாவில் இருந்த affiliated university college இப்போது யாழ். பல்கலைக்கழகத்துடன் முழுமையாக இணைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

தகவலுக்கு நன்றி.

இந்த affiliated university colleges இற்கான மாணவர் சேர்க்கை எப்படி நிகழ்ந்தது? ஏ எல் முடிவுகளை வைத்தா?

யாழ் பல்கலையின் இப்போதைய வவுனியா வளாகம் முன்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

இந்த முறை எப்போ கைவிடபட்டு இவை பல்கலைகளோடு இணைக்கப்பட்டன?

ஏன்?

தகவல்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி.

இந்த affiliated university colleges இற்கான மாணவர் சேர்க்கை எப்படி நிகழ்ந்தது? ஏ எல் முடிவுகளை வைத்தா?

யாழ் பல்கலையின் இப்போதைய வவுனியா வளாகம் முன்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

இந்த முறை எப்போ கைவிடபட்டு இவை பல்கலைகளோடு இணைக்கப்பட்டன?

ஏன்?

தகவல்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

ஏ.எல். முடிவுகளில் பல்கலைக்கழக அனுமதி பெற முடியாமல் போனவர்களுக்கு இங்கே அனுமதி கிடைத்தது. பின்னர் இடம்பெற்ற மாற்றங்களுக்கான காரணங்களை நான் ஆராயவில்லை. இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Junior_University_Colleges_(Sri_Lanka)

https://www.ugc.ac.lk/en/universities-and-institutes/other-recognized-degrees.html
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

நன்றி இணைப்புக்களை பார்க்கிறேன்.

நான் நினைக்கிறேன் பல்கலை மாணவர் எதிர்பு, தொழில்சங்க எதிர்ப்பால் இந்த முறை ஆரம்பித்து குறைந்த வருடங்களிலேயே கைவிடபட்டிருக்கும் என.

அண்மையில் தனியார் மருத்துவ கல்லூரியையும் மாணவர்களும், தொழில்சங்கங்களுமே எதிர்த்ததாக நினைவு.

நான் வழங்கிய தகவலை திருத்தியமைக்கும், புதிய தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி 🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் மற்றும் கற்பகதரு இருவரின் பதிவுகளுக்கும் நன்றி.

இதன்படி பார்த்தால் ஒருவர் பள்ளி இறுதித் தேர்வில் அதாவது ஏ.எல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால் (50 சதவீதத்தும் கீழே, Say 35% Just Pass) அவர் உயர்கல்வி கற்க இயலாதே..?

கல்வி மறுக்கப்படும் நிலை தோன்றுமே..? 🤔

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தொழில்முறை (பொறியியல், மருத்துவம், வேளாண்மை) கல்விகளுக்கு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் பள்ளி இறுதிதேர்வில் 50 சதவீதம் எடுத்தால் அவர் அக்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற கல்விகளுக்கு (கலை, பட்டயம்-Diploma முதலியன)35% சதவீதம் மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.

கல்லூரியில் இறுதி அனுமதி என்பது கிடைக்கும் இருக்கைகளின் எண்ணிகையை பொறுத்து ரேங்க் (Merit List) அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கப்படும் அல்லது நாமே தெரிவு செய்து கொள்ளலாம்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

கோசான் மற்றும் கற்பகதரு இருவரின் பதிவுகளுக்கும் நன்றி.

இதன்படி பார்த்தால் ஒருவர் பள்ளி இறுதித் தேர்வில் அதாவது ஏ.எல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால் (50 சதவீதத்தும் கீழே, Say 35% Just Pass) அவர் உயர்கல்வி கற்க இயலாதே..?

கல்வி மறுக்கப்படும் நிலை தோன்றுமே..? 🤔

இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு அதுதான் சரியான தெரிவு வன்னியர் 
இப்போ கொஞ்சம் சனத்தொகை கூடியதால் கொஞ்சம் விரிவாக்கமும் 
தேவைப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் சாராசரியாக எத்தனை 
இதய வைத்தியர் எத்தனை பல் வைத்தியர் தேவை என்பதை சரியாக 
கணக்கிட்டு அதன் தேவைக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்கி கொள்ளலாம்.

கொம்பியூட்டர் மற்றும் எஞ்சினீரிங் தான் கொஞ்சம் வில்லங்கம் 
காரணம் அது எவ்வளவு தேவை என்பதை கணக்கிட முடியாது 
திடீரென ஒரு பாரிய சாப்ட்வேர் கொம்பனி இலங்கையில் வெற்றி பெற்றால் 
அவர்களுக்கு 2000 பேர் தேவை என்றால் பூர்த்தி செய்ய முடியாது

சுவிஸ் போன்ற மேலை நாட்டில் கூட கல்விமுறை இப்படித்தான் 
வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன்? 
சுவிஸ் சிறிய நாடு 1990களில் சனத்தொகை வெறும் 6.5 மில்லியன்கள்தான் 
இப்போ எங்கட ஆக்க்களையும் முஸ்லிமையும் உள்ளுக்கு விட்டு 
அதுகள் ஒரு 2 மில்லியன் குட்டி போட்டிருக்கு இப்போ 8.5 மில்லியன் 
அதலால் பல்கலைப்படிப்பு  இலங்கை போல ஓ/ல் எ/ல் பாஸ் ஆனால்தான் உண்டு 
அங்கு ஓ/ல் ஏ/ல் இல்லை கிட்டதட்ட அதுக்கு ஒப்பான ஒரு முறைமைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு அதுதான் சரியான தெரிவு வன்னியர் 
இப்போ கொஞ்சம் சனத்தொகை கூடியதால் கொஞ்சம் விரிவாக்கமும் 
தேவைப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் சாராசரியாக எத்தனை 
இதய வைத்தியர் எத்தனை பல் வைத்தியர் தேவை என்பதை சரியாக 
கணக்கிட்டு அதன் தேவைக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்கி கொள்ளலாம்.

...

கல்வி என்பது வேலை தேவைக்கு ஏற்ப மட்டும்தானா..?

படிப்பறிவற்ற சமூகம் கொண்ட மூன்றாம் தர நாட்டிற்கும், ஓரளவு படிப்பறிந்த சமூகம் கொண்ட நாட்டிற்கும் பாரிய வித்தியாசமுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விதி மீறல்கள் இருந்தாலும், படித்து முன்னேறி வரும் சமூகம் என்பதால் கட்டுக்குள் கொணர்ந்து சுமூகமான மக்கள் வாழ்க்கைக்கு சூழ்நிலை அமைப்பது எளிது அல்லவா..?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

இது ஒரு சிக்கலான விடயம் வன்னியர் 
எடுத்த எடுப்பில் இது சரி இது பிழை என கூற முடியாது 

100 டொக்டர்களுக்கு மட்டுமே வேலை இருக்கும் இடத்தில் 
200 டாக்ட்டர்களை உருவாக்கினால். வேலையில்லாத 
100இல் ஒரு 20 என்றாலும் படித்த படிப்பை சமூகத்துக்கு 
எதிரான வழியில் பணத்துக்கு ஆக பயன்படுத்தும் 

மற்றது தொட்டில்பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல 
பருவத்தில் கல்வியில் ஆர்வம் இல்லாதவர்கள் பின்பு 
ஏதும் சுத்துமாத்து வேலைக்குத்தான் கல்வியை நாடுவார்கள் 
அதுதான் ஹாக்கர்ஸ் 

இவை எல்லாம் 1910-1940க்கு உட்பட்ட காலப்பகுதியில் 
இருந்த உலக அமைப்பிற்கு ஏற்றவாறு உருவாக்க பட்டவை 

இப்போதைய உலகுக்கு ஒத்துவருமா? என்பது கொஞ்சம் சிக்கலானதுதான் 
இலங்கையில் படித்துவிட்டு அமேரிக்கா கனடா லண்டன் வந்தவர்கள் முன்னேறியதுக்கும் 
மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்களால் இவ்வாறு முன்னேற முடியாமல் 
போனதுக்கும் இதுதான் காரணம். அங்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் 
உயர்கல்வியை குறித்த முறையில்தான் கற்க முடியும் 
இங்கு அமெரிக்காவில் காசு இருந்தால் படித்துக்கொண்டே இருக்கலாம் 
இங்கு கல்லூரிகளும்  வியாபாரம்தான் ஆதலால்தான் ட்ராம் போன்றவர்கள் 
ஜனாதிபதி ஆக முடிகிறது. 

சமூதாய சீர் சீர்கேடு போன்றவை கணக்கில் எடுக்க படுகிறது 
மற்றையபடி குறித்த வயதுவரை கட்டாய கல்வி உண்டு 

1970களிலேயே தெற்காசியாவில் இலங்கை எழுத்து/வாசிப்பு கல்வியறிவு 98வீதம் 
இந்தியா இப்போதும் இல்லை என்றுதான் எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முன் தானே இந்த உபவேந்தரை வாழ்த்தி வரவேற்றார்கள்.. அதற்குள் இவ்வளவு பிரச்சனையா.

இவருக்கு அண்மையில்.. கோத்தா என்ற தமிழின அழிப்பாளன்.. புதிய பதவி ஒன்றையும் வழங்கி இருந்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நன்றி இணைப்புக்களை பார்க்கிறேன்.

நான் நினைக்கிறேன் பல்கலை மாணவர் எதிர்பு, தொழில்சங்க எதிர்ப்பால் இந்த முறை ஆரம்பித்து குறைந்த வருடங்களிலேயே கைவிடபட்டிருக்கும் என.

அண்மையில் தனியார் மருத்துவ கல்லூரியையும் மாணவர்களும், தொழில்சங்கங்களுமே எதிர்த்ததாக நினைவு.

நான் வழங்கிய தகவலை திருத்தியமைக்கும், புதிய தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி 🙏🏾.

கோசான், கல்வியியல் கல்லூரிகளை விட்டுட்டியள் ஆனால் இதில் படித்தால் ஆசிரியராக மட்டுமே முடியும். இதுவும் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 06:46, ராசவன்னியன் said:

இலங்கையில் தனிப்பட 'கல்லூரிகள்' என்ற கட்டமைப்பே இல்லையா..?

பட்டம்(Degree)/பட்டயம்(Diploma) போன்ற படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் போய்தான் படிக்க வேண்டுமா..? 🤔

உதாரணமாக, தமிழ் நாட்டில் பல்கலைக்கழமென்றால் சில குறிப்பிட்ட நிபுணத்துவம்(Specialized) கொண்ட  மேற்படிப்புகள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்தினுள் இருக்கும். இவற்றில் சேர்ந்து படிக்க முதலில் அந்த துறை சார்ந்தவற்றில் மற்ற சிறு நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக எந்த துறையிலும் பட்டம் படிக்க, பக்கத்து நகரங்களில் கல்லூரிகள் பல (பொறியியல், கலை, மருத்துவம், வேளாண்மை என) இருக்கும்.

இந்தக் கல்லூரிகள், அருகேயுள்ள பெருநகரத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துடன் நிர்வாக ரீதியாக(Affiliation) இணைக்கப்பட்டிருக்கும்.

  • மதுரை காமராசர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • மனோண்மனியம் சுந்தரனார்
  • அண்ணாமலை
  • பெரியார்
  • சென்னை
  • திருவாரூர்
  • **
  • **

இப்படி தோராயமாக 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் உண்டு..!

வன்னியர்,

உங்கள் கேள்விகளுக்கு, கள உறுப்பினர்கள் பதில் தந்துள்ளனர்.

அவர்கள் தர தவறிய சில விடயங்களை முன்னர் உங்களுடன் பகிர்ந்துளேன்..... மீண்டும்...

தமிழகத்தில் கல்லூரி என்பது, அமெரிக்க மிஷன் அறிமுகப்படுத்திய, தமிழகம் முழுவதும் இன்றும் உள்ள, அதே  அமெரிக்க  ஸ்டைல். ( மதுரை அமெரிக்க மிஷன் கல்லூரி)

இலங்கையில் மிஷன் பாடசாலைகள் ஆக அதே அமெரிக்க மிஷன் தான் ஆரம்பித்தாலும், பிரிட்டிஷ் காலத்தில் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்கு தயார் படுத்துவனவாக இருந்ததால், அவை கல்லூரிகள் என்றே அழைக்கப்பட்டன. இத்தேர்வுகளில் சித்தி அடைந்தோர், பிரிட்டன் பல்கலைகழகங்களுக்கும், கல்கத்தா பல்கலைகழகம், சென்னைப் பல்கலைகழகளுக்கும் மேல் படிப்புக்கு சென்றனர்.

இந்தியாவில் இருந்து பலர் வந்து படித்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு மலையாளி, யாழ்ப்பாணம் வந்து தனது தாத்தா படித்த, கல்லூரி என்று நினைவு கூர்ந்ததை இங்கே யாழில் பகிர்ந்தனர்.

அவ்வகையில் யாழ்ப்பாணம் வந்து படித்து இங்கேயே தங்கிய ஒருவர், தெலுங்கர்... ரெட்டி... யாழ்பாண இந்துக் கல்லூரி அதிபராக 1920 களில் இருந்து இருக்கிறார்.

பின்னர் இலங்கை பல்கலைக்கழகங்கள், முதலாவதாக கொழும்பு பல்கலைக்கழகமும், பின்னர் பேராதனை (கண்டி) பல்கலைக்கழகமும் ஆரம்பமாகின.

இவை தமிழக ஸ்டைலில் இல்லாது, பிரிட்டிஷ் ஸ்டைலில் ஆரம்பமாகின. அதாவது, மாணவர்கள் பல்கலைக்கழங்கள் சென்று அங்கேயே விடுதிகளில் தங்கி இருந்து படிப்பது.

1948 சுதந்திரத்தின் பின்னர், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சை மெதுவாக நின்று போக, கல்லூரிகள், பல்கலைக்கழக தெரிவுக்கு தயார் செய்யும் (அதாவது உங்கள் +2 ) அட்வான்ஸ்ட் லெவல் உடன் நின்று கொண்டன. 

மாணவர்கள், பெற்றவர்கள் விருப்பம்  காரணமாக, சுதந்திரத்துக்கு முன்னர் கல்லூரிகள் என அழைக்கப்படவை அதே பெயரிலும், புதிய பாடசாலைகள், மகா வித்தியாலயம் என்றும் அழைக்கப்படுகின்றன. (உதாரணம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், வேலணை மத்திய மகா வித்தியாலயம்). ஆனாலும் மக்கள், பழக்க வழக்கத்தால், கிளிநொச்சி சென்றல் காலேஜ், வேலணை சென்றல் காலேஜ் என்பர்.

இலங்கை முதலாவது பிரதமர் நினைவாக, கொழும்பில் 1967ல் ஆரம்பமானது, டி எஸ் சேனநாயக்கா வித்தியாலயா. இது பழக்க தோசத்தால் டி எஸ் சேனநாயக்கா காலேஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால் அடிப்படையில் அவை உயர் நிலைப் பள்ளிகள்.

1983ன் பின்னர் தமிழகத்துக்கு படிக்கச் சென்ற பலர், அங்குள்ள கல்லூரி நண்பர்களுக்கு, இந்த விடயங்களை புரிய வைக்க தடுமாறினார். சிலருக்கு நான் சொன்ன இந்த விபரங்கள் தெரியாமல் இருந்தமையும் ஒரு காரணம். 

கல்லூரி ஒன்றில் படித்தவர் மீண்டும் ஏன் தமிழக கல்லூரியில் சேர்ந்து ஆரம்பத்தில் இருந்து படிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தர முடியாமல் தடுமாறினார். அது கல்லூரி இல்லை, மேல் நிலைப் பள்ளி என்று சொல்வது எங்கனம் என்று குழம்பியவர்களை குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிலர் அது வேறு கோர்ஸ், முடிக்க முடியல.... சண்டை... அது இங்கே இல்லை, அதனால் புதிதாக ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி.... 'ஆ... அதுதானே பார்த்தேன்'... என்று பதில் வாங்கியவர்களும் உண்டு.

இது குறித்து, ஈழத்தமிழர் எழுதிய விபரங்கள் ஒரு தமிழக வாரப்பத்திரிக்கையில் வந்ததாக அங்கே படித்த ஒருவர் சொல்லி உள்ளார்.

இன்னுமொரு முக்கியமான விடயம், இலங்கையில் இலவசகல்வி முழுமையாக அமுலில் உள்ளது. முதலாம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம்  வரை இலவசம்.

இடையே சில தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்க முனைந்தாலும், இலவச கல்விக்கு ஆப்பு என்று கருதிய, மாணவர் பேரெதிர்ப்பு காரணமாக அவை பின்வாங்கின.

இலங்கையின் சில புகழ் மிக்க கல்லூரிகள் 

ராயல் காலேஜ், கொழும்பு,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,
கொழும்பு இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, 
பருத்தித்துறை ஹாட்டலி கல்லூரி,
ஆனந்தா காலேஜ், கொழும்பு,
ரிச்மண்ட் காலேஜ், காலி,
ட்ரினிட்டி காலேஜ், கண்டி,

மெதடிஸ் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு

இவைகள் மாணவர்களை, சேர்த்துக் கொள்ளவே பரீட்சை வைக்கும் அளவுக்கு புகழ் மிக்கவை. ஆனால் இவை அனைத்துமே மேல் நிலைப் பள்ளிகள்.

Edited by Nathamuni
Added

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்...  வேம்படி, சுண்டுக்குளி, யாழ். இந்து மகளிர் போன்ற பெண்கள் கல்லூரிகளை...
நீங்கள், சேர்க்காமல் விட்டதற்கு  வன்மையான  கண்டனங்கள்.  😜

***********************

எதிர்பார்த்து, ஒரு கும்புடுதலுடன் ஒரு இடம் துண்டு போட்டு வைத்திருக்கிறன். 

வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, யாழ். இந்துமக்களிர் கல்லூரி.

நான்... சுமே அக்கா வருவா எண்டு பார்த்தால்.... நீங்கள் வந்து இருக்கிறியள்.... பரவாயில்லை....

அது சரி, எந்த பள்ளிக்கூடத்து, ச****க்கு லவ் லெட்டர், ராக்கெட் மாதிரி எறிய , அது சுழன்று வந்து, பின்னால சைக்ளில் வந்த, அப்பா கையில் சிக்கினது என்றும் சொல்லலாம் தானே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

இலங்கையின் சில புகழ் மிக்க கல்லூரிகள் 

ராயல் காலேஜ், கொழும்பு,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,
கொழும்பு இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, 
பருத்தித்துறை ஹாட்டலி கல்லூரி,
ஆனந்தா காலேஜ், கொழும்பு,
ரிச்மண்ட் காலேஜ், காலி
ட்ரினிட்டி காலேஜ், கண்டி

இவைகள் மாணவர்களை, சேர்த்துக் கொள்ளவே பரீட்சை வைக்கும் அளவுக்கு புகழ் மிக்கவை.

நாதம்ஸ்...  வேம்படி, சுண்டுக்குளி, யாழ். இந்து மகளிர் போன்ற பெண்கள் கல்லூரிகளை...
நீங்கள், சேர்க்காமல் விட்டதற்கு  வன்மையான  கண்டனங்கள்.  😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்...  வேம்படி, சுண்டுக்குளி, யாழ். இந்துமக்களிர் போன்ற பெண்கள் கல்லூரிகளை...
நீங்கள், சேர்க்காமல் விடடதற்கு ஆழ்ந்த கண்டனங்கள்.  

பதில் மேலே.... 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நாதமுனி மற்றும் தமிழ்சிறி.

ஒருசமயம் "இவர்களென்ன கல்லூரி என்கிறார்கள், ஏ.எல்  என்கிறார்கள், பிறிதொரு சமயம் பல்கலைக்கழகம் என்கிறார்களே..?" எனக்கு பலகாலம் இந்த குழப்பம் இருந்தது.

குழப்பம் தீர்ந்தது.

நான் படிக்கும்போது இந்த +2 இல்லை.

உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். அதற்கு பெயர் எஸ்.எஸ்.எல்.சி. (Secondary School Leaving Certificate-SSLC)அந்த பள்ளி இறுதியாண்டில் கிட்டிய மதிப்பெண்கள் மூலம் ஏதாவதொரு கலைக் கல்லூரியில் சேர்ந்து பி.யூ.சி(Pre-University Course - PUC) ஒரு வருடம் படிக்க வேண்டும்.

அந்த பி.யூ.சி யில் கிட்டிய மதிப்பெண்களின் தரவரிசைப்படி பொறியியல், மருத்துவம் அல்லது வேளாண்மை கல்லூரியில் இடம் கிட்டலாம். அப்பொழுது பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பிற்கு குறைந்தது 90% கூட்டுத்தொகையில்(Aggregate) மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (இப்பொழுது 50% இருந்தால் போதுமானது)

இந்த கூட்டுத்தொகை கணிதம், பெளதீகம், இரசாயணம் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி (Aggregate)அதன் சதவீத அடிப்படையில் கிட்டுவதாகும்.

குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கலைக் கல்லூரிகளில் மற்ற பாடங்களுக்கான பட்டப் படிப்பு படிக்கலாம். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பள்ளிப் படிப்பு வரை(+2) இலவசக் கல்வியாகும். பட்டப் படிப்பிற்கு நாம்தான் செலவு செய்ய வேண்டும்.

1985ம் ஆண்டிற்கு பிறகே பள்ளியின் 11ம் வகுப்பையும், பி.யூ.சி வருடத்தையும் இணைத்து +2 என்ற முறையில் பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார்கள்.

இதில் சிறிய அசெளகரியம் இருந்தது. அதாவது +2 முடித்துவிட்டு கல்லூரிக்கு முதல் வருடம் படிக்க செல்லும்போது போதிய அளவு பக்குவம் இருக்காது, தடுமாற்றம் இருக்கும். ஏனெனில் வீட்டில் பெற்றோரின் கண்காணிப்பிலேயே +2 வரை படித்திருப்பதால்.

அதே பி.யூ.சி யில் ஒரு வருடம் தனியாக கல்லூரியில் படித்தவரிடம் சிறிது பக்குவம், துணிவு இருக்கும், ஒரு வருடம் வீட்டை விட்டு தனியாக இருந்ததால்..(இது சில பேராசிரியர்களின் அனுபவச் சொல்)

நான் பி.யூ.சி ஒரு வருடம் நகரத்திலுள்ள கலைக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துவிட்டு, பின்னர் கிராமத்தை விட்டு வெகுதூரம் சென்று பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பொறியியலில் ஐந்து வருடங்கள் படித்தேன். (அப்பொழுது பொறியியல் படிப்பு ஐந்து வருடங்கள் படிக்க வேண்டும்).

ஏற்கனவே தனியாக இருந்த துணிவு, சக அறைத் தோழர்களிடம் பழகும் பக்குவம் இருந்ததால், விடுதி/கல்லூரியில் இரண்டரை மாதங்கள் தொடர்ந்த ராகிங்-கை எளிதாக சமாளிக்க முடிந்தது. (இவை எனது அனுபவம். :))

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

மாணவர்கள், பல்கலைக்கழக தெரிவானது, மிகவும் சிக்கலானது. கடும் போட்டி நிறைந்தது. A/L பரீட்சைகள்  கடினமானவை.

கல்வி, மாணவர்களுக்கு தமிழ், சிங்களம் ஆகிய வேறு மொழிகளில் இருந்தாலும், ஒரே கேள்விகளே, தமிழ், சிங்களம், ஆங்கிலத்திலும் ஒரே நாளில், தீவு முழுவதும் நடாத்தப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமையவே தெரிவு நடக்கும்.

ஒரு காலத்தில் தரப்படுத்தல் முறையில் தமிழ் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

குறிப்பாக யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் 1960களில் ஓர் ஆண்டில் ஒரு வகுப்பில் இருந்து 29 மாணவர்கள், பொறியியல் பீடத்துக்கு தெரிவாக அரண்டு போன சிங்கள அரசு தரப்படுதலை கொண்டு வந்தது என்பர்.

இப்போது.... பல பல்கலைக்கழங்கள்.... தவிர தமிழர்கள் குடி பெயர்ந்தும் விட்டனர். ஆகவே முறைப்பாடுகள் குறைவு.

மறுபுறம்.... வெளிநாடுகளில் சக்கை போடு போடுகின்றனர். கள உறவுகள், விசுகர், தமிழ்சிறி பிள்ளைகள் சான்று. பிரிட்டனில் தமிழ் மாணவர் இல்லாத மருத்துவ பீடமே இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரியில் ஸ்ட்ரைக், கலாட்டா, அடிதடி எல்லாம் நடந்தது.. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது போல ஆசிரியர்களிடம் மோதுவது இல்லை. 🤔

ஏனெனில் ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான், உள்ளக மதிப்பிட்டு எண்கள் (Internal marks) வழங்க வேண்டும். அவையும் அந்த குறிப்பிட்ட பாடத்தின் செமஸ்டர் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையில் சேரும்.

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.