Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம் - பிரான்ஸ் உள்துறை அமைச்சர்

Featured Replies

பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர்.

போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம்.
என்று கூறியுள்ளார்.

மேலும் அரசாங்க உயர் மட்டத்தில் பாதுகாப்பு கூட்டங்கள் நடந்து வருகின்றன.

https://www.bfmtv.com/police-justice/terrorisme/attentat-attaque-couteau-nice-eglise-basilique-notre-dame-terroriste-emmanuel-macron-vincent-loques-conseil-de-defense_LN-202010300015.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் ;திருக்கார்த்திகை  தோன்றிய விதம்!!! - Onetamil News

திருவெண்ணாமலை தீபம் போல் எரிய வாழ்த்துக்கள். 😎

இது தானே அன்று எம் பூமியில் நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

அல்லற்பட்டு வந்தோருக்கு இரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்தால், அவனையே கொல்வீர்களா? உங்களின் காட்டுமிராண்டி அரபுலகத்திற்கே திரும்பிச் செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இனியும்,  தாமதிக்காமல்... இந்த வருடத்துக்குள்ளேயே இவர்களை  விரட்டி 🏃🏽🏃🏽‍♂️அடிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியின் அருகாமையிலான நகர்புறத்திலுள்ள உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் தாக்குதலாளி எனச்சந்தேகப்படுபவர் ஒருவர் காவல்துறையால் கைதுசய்யப்பட்டுள்ளார் அத்துடன் அக்கல்லூரி வளாகம் மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தனது ருவீற்றர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விபரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அனேகமாக இங்கிருந்து வெளிவரும் இலங்கையின் மித்திரன் பத்திரிகைபோன்ற மாலைப்பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேயும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரஞ்சித் said:

அல்லற்பட்டு வந்தோருக்கு இரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்தால், அவனையே கொல்வீர்களா? உங்களின் காட்டுமிராண்டி அரபுலகத்திற்கே திரும்பிச் செல்லுங்கள்.

திண்ணையில் ஒதுங்க இடம் கொடுத்தால்..... திண்ணை சொந்தக்காரனையே கொல்கின்றார்கள்.

முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் நாடாக துருக்கியும் மாறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

திண்ணையில் ஒதுங்க இடம் கொடுத்தால்..... திண்ணை சொந்தக்காரனையே கொல்கின்றார்கள்.

முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் நாடாக துருக்கியும் மாறி விட்டது.

துருக்கி...  முஸ்லீம் நாடுகள்,  எல்லாத்துக்கும்... பெரிய தாதா. 

அவன், கிறிஸ்தவனுக்கு... எப்புடி ஆதரவு குடுப்பான்.

டிஸ்க்கி: குமாரசாமி அண்ணர், "துருக்கி"...   ஒரு, இந்து  நாடு என்று, நினைத்து விட்டார்  போலுள்ளது. கிக்கீகீ...  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

துருக்கி...  முஸ்லீம் நாடுகள்,  எல்லாத்துக்கும்... பெரிய தாதா. 

அவன், கிறிஸ்தவனுக்கு... எப்புடி ஆதரவு குடுப்பான்.

டிஸ்க்கி: குமாரசாமி அண்ணர், "துருக்கி"...   ஒரு, இந்து  நாடு என்று, நினைத்து விட்டார்  போலுள்ளது. கிக்கீகீ...  🤣

துருக்கி  விலாங்கு மீன் நாடாய் கடைசி கொஞ்சக்காலம் இருந்தது. இப்ப ஈரான் லெவலுக்கு வந்திட்டினம். அவையின்ரை பழைய படையெடுப்புகள் எல்லாம் இனி சரி வராது கண்டியளோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Familie des Nizza-Attentäters in BILD: Terrorist war erst einen Tag in Frankreich

தேவாலய கொலையாளி. இவர் ஒரு நாளுக்கு முன்னர்தான் பிரான்ஸ்சுக்கு வந்தாராம்....

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளும் அரசாங்கமும் ஒரே மாதிரியாக ஏட்டுக்கு போட்டியாக செயல்படமுடியாது.

தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்கவேண்டிய பொறுப்பும் பிரான்ஸ் அரசுக்கு உள்ளது.

அரச அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டிய தேவை உள்ளது. இது நாளைக்கு நாளன்றைக்கு முடிக்கக்கூடிய பிரச்சனை இல்லை.

உணர்ச்சிபூர்வமாக நாட்டின் சிறுபான்மையினரை சீண்டக்கூடிய அறிக்கைகள், செயல்பாடுகள் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் உக்கிரம் பெறவே வழிவகுக்கும்.

காதும் காதும் வைத்தாற்போல் களையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

Familie des Nizza-Attentäters in BILD: Terrorist war erst einen Tag in Frankreich

தேவாலய கொலையாளி. இவர் ஒரு நாளுக்கு முன்னர்தான் பிரான்ஸ்சுக்கு வந்தாராம்....

முஸ்லீமாக... பிறந்த, இந்த,  மீன் குஞ்சுக்கே...
இவ்வளவு... கொழுப்பு, என்றால்....

ஐரோப்பாவில்... பல ஆண்டுகளாக,
வாழும்.. இந்த இஸ்லாமியாருக்கு, எவ்வளவு கொழுப்பு...
முத்தி இருக்க வேண்டும்.... என்பதனை, கவனத்தில்  எடுக்க வேண்டும்.

****

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிலுவை யுத்தம் என்ற ஜரோப்பியகிறிஸ்தவர்கள் நடாத்திய மிக நீண்ட யுத்தத்தின் எதிர் தரப்பின் கதாநாயகன் துருக்கி.

மறுபுறம் வட பாரதத்துனுள் நுழைந்து, மொகாலயர் ஆட்சியை நிறிவியதும் அவர்கள் தான் பிரதான கதாநாயகர்கள்.

உந்த, ஆரியர்..... பிராமணர் எல்லாம் உங்க இருந்து வந்த கோஸ்டிகள் தானே.

55 minutes ago, குமாரசாமி said:

Familie des Nizza-Attentäters in BILD: Terrorist war erst einen Tag in Frankreich

தேவாலய கொலையாளி. இவர் ஒரு நாளுக்கு முன்னர்தான் பிரான்ஸ்சுக்கு வந்தாராம்....

கறுப்பின பெண்ணை கொலை செய்திருக்கிறான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பயங்கரவாதிகளும் அரசாங்கமும் ஒரே மாதிரியாக ஏட்டுக்கு போட்டியாக செயல்படமுடியாது.

காதும் காதும் வைத்தாற்போல் களையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம்.

அது தான் பிரிட்டிஸ்காரன் செய்யிறான்.  இணையத்தளத்தில், ஜிகாதி பத்தி அதிகம் கதைக்கிறது..... உளவாளிகள்.... மாட்டுபவர்களை தூக்க, வேறு யாரும் இணையப் பக்கமாக வருவதில்லை.

தனி ஓநாய்கள் தான் பிரச்சணை..... ஆனாலும்.... அவர்கள் இணையத்தினுள் நோண்டாமல் இருக்க மாட்டார்கள். நோண்டக்கூடிய, ஆவேசமாக்கும் கட்டுரைகள் போட்டு உளவர்கள் வலை விரித்தும் காத்திருப்பார்கள்.

அது தவிர வாற்சப் குறாப் எல்லாம் போட்டு.... நடாத்தி.... உண்மையான ஜிகாதிகளிலும் அமர்களமாக கத்தி..... மாட்டுவார்களா என கவனிப்பார்கள்.

அது மட்டுமல்ல, வேற்று மதத்தவரை வேலைக்கு எடுத்து, அடையாளம் மாத்தி, பள்ளிக்கு தொழுகைக்கு போக வைப்பார்கள். அவர்கள் உளவர்கள் என தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2020 at 06:33, இணையவன் said:

பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர்.

போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம்.
என்று கூறியுள்ளார்.

மேலும் அரசாங்க உயர் மட்டத்தில் பாதுகாப்பு கூட்டங்கள் நடந்து வருகின்றன.

https://www.bfmtv.com/police-justice/terrorisme/attentat-attaque-couteau-nice-eglise-basilique-notre-dame-terroriste-emmanuel-macron-vincent-loques-conseil-de-defense_LN-202010300015.html

பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை கடும்/ கொடும் கரங்கள் கொண்டு முறியடிக்கவேண்டும். குலத்துக்கு எதிரான  பயங்கரவாதிகளுக்கு ஈவிரக்கம் என்பதே  காட்டப்படக்கூடாது.

பிரான்சின் இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கெதிரான போரை மனித குலத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் ஆதரிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாலி said:

இதற்காகத்தான் விடுதலைப்புலிகள் முளையிலையே கிள்ளினார்கள். கிடைத்ததோ கெட்ட பெயர். அதை இன்று பிரான்ஸ் செய்ய முனைகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் உளவு அமைப்பு முன்னாள் தலைவரின் சகோதரி உள்பட 183 பேரின் விசாவை நிராகரித்தது பிரான்ஸ்

பாகிஸ்தான் உளவு அமைப்பு முன்னாள் தலைவரின் சகோதரி உள்பட 183 பேரின் விசாவை நிராகரித்தது பிரான்ஸ்

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் பள்ளி ஆசிரியரான சாமுவேல் பதி பாடம் நடத்தி கொண்டிருந்தபொழுது முகமது நபியின் கார்ட்டூன்களை காண்பித்த சர்ச்சையில் 18 வயது இளைஞர் ஒருவரால் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இதன்பின் பாரீஸ் நகரில் சார்போன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் லெஜன் டி ஹானர் என்ற பிரான்சின் உயரிய விருது பதிக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

பிரான்சில் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அந்நாட்டு அதிபர் மேக்ரான் இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக போரிடுவேன் என உறுதி எடுத்து கொண்டார்.

எனினும், இஸ்லாமுடனும், முஸ்லிம்களுடனும் மேக்ரானுக்கு என்ன பிரச்னை? என்று துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 183 பேரது விசாக்களை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர்.  அவர்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷாவின் சகோதரியின் பெயரும் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், 183 பேரும் உரிய ஆவணங்களுடன் இருந்தும் வலுகட்டாயத்தின்பேரில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதன்பின்னர் பிரெஞ்சு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாஷாவின் சகோதரியை நாட்டில் அனுமதிக்கும்படி தூதரகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.  அவரது மாமியாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை காண்பதற்காக பாஷாவின் சகோதரி விருப்பம் தெரிவித்து உள்ளார்.  அதனால் அவரை தற்காலிகம் ஆக பிரான்சில் தங்க அனுமதி தரும்படி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/01114722/France-rejects-visa-of-sister-of-former-Pakistani.vpf

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இதற்காகத்தான் விடுதலைப்புலிகள் முளையிலையே கிள்ளினார்கள். கிடைத்ததோ கெட்ட பெயர். அதை இன்று பிரான்ஸ் செய்ய முனைகின்றது.

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது! உலக பயங்கரவாதத்திற்கும் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும் அன்று தொடர்பிருக்கவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது! உலக பயங்கரவாதத்திற்கும் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும் அன்று தொடர்பிருக்கவில்லை! 

எங்களைப் பொறுத்தவரை....எம்மினத்தை காட்டிக்கொடுத்து அழிக்க வெளிக்கிட்ட கூட்டம்....அந்த நேரம் புலிகள் சரியான முடிவைத்தான் எடுத்தார்கள்...பிரான்சும் அவ்வழி முனைவது நன்று.

40 minutes ago, alvayan said:

எங்களைப் பொறுத்தவரை....எம்மினத்தை காட்டிக்கொடுத்து அழிக்க வெளிக்கிட்ட கூட்டம்....அந்த நேரம் புலிகள் சரியான முடிவைத்தான் எடுத்தார்கள்...பிரான்சும் அவ்வழி முனைவது நன்று.

எம்மினத்தை அழிக்கும் கூட்டமே தமிழர்கள் என்ற துட்டகைமுனுவின் வாதத்தை தான் சிங்கள இனவெறி பேசும் அதை வைத்து அரசியல் செய்யும் அமைப்புகளும் கூறுகின்றன. 

புலிகளே அதை தவறு என்று பின்னாளில் உணர்ந்து முஸ்லீம் மக்களை மீள அழைத்தார்கள். 

பிரான்ஸ் குறி வைப்பது  இஸ்லாமிய மத தீவிரம் பேசும் நபரகளை மட்டுமே. மக்களை அல்ல. ஆகவே இரண்டும் ஒன்று என்று பேசுவதே மடமை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

எம்மினத்தை அழிக்கும் கூட்டமே தமிழர்கள் என்ற துட்டகைமுனுவின் வாதத்தை தான் சிங்கள இனவெறி பேசும் அதை வைத்து அரசியல் செய்யும் அமைப்புகளும் கூறுகின்றன. 

புலிகளே அதை தவறு என்று பின்னாளில் உணர்ந்து முஸ்லீம் மக்களை மீள அழைத்தார்கள். 

பிரான்ஸ் குறி வைப்பது  இஸ்லாமிய மத தீவிரம் பேசும் நபரகளை மட்டுமே. மக்களை அல்ல. ஆகவே இரண்டும் ஒன்று என்று பேசுவதே மடமை. 

நீங்கள்..அப்படி நினைக்கெல்லாம்... அந்த பாதிக்கப்பட்ட இனம் இப்பவும் ஒரு மாதம்  செத்தவீடு கொண்டாடி இப்பவும் எமது இன த்தை  கருவறுக்க நினைப்பதை  என்ன சொல்கிறீர்கள்.... அதனை ஆதரிப்பவராகிய உங்களுக்கு தமிழும் தேவையில்லை ...இனமும் தேவையில்லை...ஏன் யாழும் தேவையில்லைத்தானே...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது!

இவரே தான் பிரான்ஸ்சில் பேராசிரியர்  Samuel Paty கொல்லபட்டதிற்கு முஸ்லிம் மதவாதத்தை கண்டிக்காமல் ஏன் முஸ்லிம் சமயத்தை கேலி செய்ய வேண்டும் என்ற கருத்து பட கருத்து தெரிவித்தவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

அண்ணை , சும்மா "கெப்" பில கடா வெட்டக் கூடாது! உலக பயங்கரவாதத்திற்கும் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும் அன்று தொடர்பிருக்கவில்லை! 

அவர்கள்!  உலக பயங்கரவாதம் எப்படியிருக்கும் என்பதை அன்றே கிரகித்தவர்கள்.இன்று அந்த பயங்கரவாதிகளினால் உலகமே தள்ளாடுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்கள்!  உலக பயங்கரவாதம் எப்படியிருக்கும் என்பதை அன்றே கிரகித்தவர்கள்.இன்று அந்த பயங்கரவாதிகளினால் உலகமே தள்ளாடுகின்றது. 

அப்படியா அண்ணை? அந்தக் கிரகிப்பு எப்படி அவர்களை உலக பயங்கரவாதத் தடைப்பட்டியல்களில் இணையாமல் காத்தது என்று விளக்க முடியுமா?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவரே தான் பிரான்ஸ்சில் பேராசிரியர்  Samuel Paty கொல்லபட்டதிற்கு முஸ்லிம் மதவாதத்தை கண்டிக்காமல் ஏன் முஸ்லிம் சமயத்தை கேலி செய்ய வேண்டும் என்ற கருத்து பட கருத்து தெரிவித்தவர்.

தீவிர வலது சாரிகளின் ஒரு இயல்பே அவர்கள் consistent ஆக இருப்பதில்லை! அந்தப் பிரச்சினை தான் அவருக்கும்.

உங்களுக்கு எங்கள் நாட்டிலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன். இங்கே தீவிர வலது சாரிகளுக்கு மத சுதந்திரம் மிக முக்கியம் - அது கிறிஸ்தவ மதமாக இருக்கும் வரை!. ஆனால் ஒரு முஸ்லிம் அமைப்பு கிடைத்து விட்டால் , அந்த மத சுதந்திர வேட்கை மறைந்து மதத்தை அடக்கும் வேட்கை வந்து விடும்!

ஒரே கொள்கையை எல்லாப் பிரச்சினைகளுக்கும் பிரயோகிக்க இயலாத வலது சாரித் தனம் எங்கே இருந்தாலும் அதன் உள்ளீடு வெறுப்பே தவிர வேறெதுவும் இல்லை!
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Justin said:

அப்படியா அண்ணை? அந்தக் கிரகிப்பு எப்படி அவர்களை உலக பயங்கரவாதத் தடைப்பட்டியல்களில் இணையாமல் காத்தது என்று விளக்க முடியுமா?

உங்களை போன்றவர்களுக்கெல்லாம் விளக்கம் விசாரணைகள் எதுவுமே நடைமுறைக்கு ஒத்து வராதவைகள்.

****

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உங்களை போன்றவர்களுக்கெல்லாம் விளக்கம் விசாரணைகள் எதுவுமே நடைமுறைக்கு ஒத்து வராதவைகள்.

****.

நன்றியண்ணை பதிலுக்கு! உலகம் முழுவதும் தடை செய்யப் படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்!

ஆனால் தடை செய்யப் பட்ட நாடுகளில் சொல்லப் பட்ட காரணங்கள் சில முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளோடு எங்கள் ஆட்களின் ஒரு சில செயல்பாடுகளும் ஒத்திருந்தன என்பதை இங்கே பதிவு செய்கிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.