Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் வெற்றி 👍

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

பைடன் வெற்றி 👍

It is tie as of now

https://www.bbc.co.uk/news/live/election-us-2020-54786937

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குழப்பம். தெளிவாக இல்லை.!

florida goes with Trump

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சகல இடங்களிலும் ரம் தான் முன்நிலை.
திரும்பவும் ரம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் 98 ட்ரம்ப் 99🙃

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல இடங்களிலும் ரம் தான் முன்நிலை.
திரும்பவும் ரம் தான்.

இன்னும் 5 வருடத்திற்கு மகிழ்ச்சியாக போகும்😂

என் சிங்கள நண்பர்கள் ட்ரம் வருவதை விரும்பவில்லை. திட்டித் தீர்க்கின்றனர். சீன எதிர்ப்பை ட்ரம்ப் கைகொள்வதால் ட்ரம்ப் வெற்றி பெறின் தமக்கு தீங்காகும் என நினைக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

என் சிங்கள நண்பர்கள் ட்ரம் வருவதை விரும்பவில்லை. திட்டித் தீர்க்கின்றனர். சீன எதிர்ப்பை ட்ரம்ப் கைகொள்வதால் ட்ரம்ப் வெற்றி பெறின் தமக்கு தீங்காகும் என நினைக்கின்றனர்.

சிங்களவர்கள் தங்கள் நலன்களுக்கு  ஏற்ற மாதிரி யோசிக்கின்றனர்; தமிழருக்கு எந்த வகையிலும் உதவிகிட்ட கூடாது

192 - BIDEN

114 - TRUMP
https://edition.cnn.com/election/2020/results/president?iid=politics_election_bop

  • கருத்துக்கள உறவுகள்

மேலவையும் (செனட்) குடியரசுக் கட்சிக்குத்தான். ஜோர்ஜியா வாக்கெடுப்புடன் 50 கிடைக்கும் + உப அதிபர். 

Trump வெல்லும் வாய்ப்புகள் தான் அதிகம்... நாளை சரியாக தெரியவரும்.

நித்தா வருகின்றது...காலையில் பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

இனி பைடன் வசம் அரிசோனா 11 , மினசோட்டா 10, மேய்ன் 04 இந்த மூன்று மாநிலங்கள் மட்டும்தான். 25 எலெக்டரோல் வோட்ட்க்கள்தான் கிடைக்கும்

பைடன் 238 வாக்குகள் மட்டுமே பெறுவார்😁

Weldone Trump!👏🏻

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

அடிப்படைவாதக் கிறீஸ்தவ குழுக்களின் ஆதரவுடன் மீண்டும் வெல்லுறம். இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு தண்ணி காட்டுறம்😂

பைடன்-220,  ட்ரம்ப் -213

ட்ரம்ப் வெல்லத்தான் வாய்ப்புக்கள் அதிகம், ஆனால் பிபிசி இப்போதும் too close என்று சொல்கின்றது.

பெரும்பாலான தமிழர்கள் அடிப்படையில் பழமைவாதச் சிந்தனை கொண்ட வலதுசாரி தேசியவாதிகள். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் தேர்தல் வரும்போது மட்டும் நிறம் கண்ணுக்குத் தெரிந்து திடீரென்று தாராளவாதிகளாகவும், ஷோஷலிஸ்ட்டுக்களாகவும் மாறிவிடுவார்கள்.😀

ட்ரம்ப் வெல்வதால் ஜனநாயகவாதிகள் கொரோனாவைக் கையாள்வதையும், பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதையும் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இனி பைடன் வசம் அரிசோனா 11 , மினசோட்டா 10, மேய்ன் 04 இந்த மூன்று மாநிலங்கள் மட்டும்தான். 25 எலெக்டரோல் வோட்ட்க்கள்தான் கிடைக்கும்

பைடன் 238 வாக்குகள் மட்டுமே பெறுவார்😁

Weldone Trump!👏🏻

Trump Face GIFs | Tenor

இனி அடுத்த 4 வருசத்துக்கு,
உலக அளவில்... நகைச்சுவை செய்திகளையும், கிறுக்கு செய்திகளையும்...  
வாசிக்க... மீண்டும், ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுள்ளது. :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை புனிதப்படுத்துறீங்க ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் என்றும் பாராமல்..  எச்சரித்த ட்விட்டர் | Twitter adds unprecedented warning to Trump tweet  threatening to shoot ...

ட்ரம்பின் பதிவுக்கு டுவிட்டர் நிர்வாகம் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு டுவிட்டர் நிர்வாகம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் வெற்றியினை எதிர்த் தரப்பினர் களவாடுவதற்கு முனைவதாகவும் அதற்க்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் நிர்வாகம் குறித்த பதிவின் முலம் தேர்தலை ட்ரம்ப் தவறாக வழிநடத்துவதாகவும் அதற்கு தமது கண்டனங்களை பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/ட்ரம்பின்-பதிவுக்கு-டுவி/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சனாதிபதி தேர்தல் 2020தின் வெற்றியாளரைக் கணித்த கரடி.

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

அமெரிக்க சனாதிபதி தேர்தல் 2020தின் வெற்றியாளரைக் கணித்த கரடி.

Quellbild anzeigen

பாஞ்ச்  அண்ணை.... கரடிக்கு, 🧐 கண்ணாடி வாங்கிப் போட வேணும்.  😎 
பிழையாக கணிச்சுப்   போட்டுது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் வெல்லுவதுக்கு தான் சாத்தியம் அதிகம். சனநாயக  கட்சி, பந்தயத்தில் தோற்கும் குதிரையை பின் கதவால் தெரிவு செய்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பைடனால் இனி பென்சில்வேனியாவை வெல்ல முடியாது 

மிச்சிகன் 
ஜோர்ஜ்யா 

இரண்டில் ஒன்றை வென்றாகவேண்டும் தவறினால் 
6 எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் போதாமல் தோற்றுப்போக வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சிகன் நீலமாகும் சாத்தியம் உண்டு 
காரணம் தபால் வழி வாக்குகள்தான் எண்ண இருக்கிறது 
இவை அதிகமாக பைடனுக்குத்தான் செல்லும்.

இந்த முறையும் மிச்சிக்கன்தான் ஜனாதிபதியை தேர்வு செய்ய போகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கோ, எமக்குச் சம்பந்தமில்லாத எதோ ஒரு நாட்டில்நடப்பதாக நாம் விட்டிவிட்டுச் செல்லலாம். இதனால் எமக்கு எதுவும் ஆகிவிடப்போவதில்லையென்று கூட எண்ணலாம். அது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது.

என்னைப்பொறுத்தவரை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வருவதால் எமக்கு ஏதும் நண்மைக் கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை. ஏனென்றால், அவர்களைப்பொறுத்தவரை ஈழத்தமிழர் என்று எவரும் இல்லை. சிங்களவர்களால் ஆளப்படும் சிறிலங்கா எனும் நாடுமட்டுமே தெரியும். அந்நாட்டிற்கான ராணுவ உதவிகளும், பயிற்சியும், பரஸ்பர ஒத்துழைப்பும் ஜனநாயகக் கட்சியினால் வழங்கப்படும். ட்ரம்பினால் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முட்டாள்த்தனமான நகர்வுகள் என்று ஜனநாயகக் கட்சி சொல்லும் விடயங்களான ஈரானுடனான அணுவாயுத பரவலைத் தடுக்கும் ஒப்பந்தத்திலிருந்து விலகியமை, ராணுவத்தை மீளப் பெற்றுக்கொள்கின்றமை, வடகொரியாவுடம் மோதல் போக்கினைக்  கைக்கொண்டமை, கொரொணா தொற்றுப்பற்றி அலட்சியமாக இன்றுவரை இருந்துவருகின்றமை, வலதுசாரிகளுக்கான ஆதரவு, சீனாவுடனான கடுமையான போக்கு என்று பல இருக்கலாம். இவற்றால் பலநாடுகளும், மக்களும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நாம் இவற்றுள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? 

ஜனநாயகக் கட்சி வந்தால் இவை யாவுமே மீள மாற்றியமைக்கப்படும். முக்கியமாக சீனாவுடனான உறவுகளும் ஈரானுடனான உறவுகளும் சீர்செய்யப்படும். தென் சீனக் கடலில் இருந்து பசுபிக், இந்து சமுத்திரங்களில் சீனா செய்துவரும் ஊடுருவல்கள் கண்டும் காணாது விடப்படும். இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் பற்றி கவலைப்படுவதை அமெரிக்கா தற்போதைக்கு கைவிடும், இது சீனா தனது நிலையினை மென்மேலும் பலப்படுத்தும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கும். இது எமக்கு எந்தவிதத்திலும் நண்மை பயக்கப்போவதில்லை. 

அண்மையில் கொழும்பு வந்திருந்த பொம்பியோ கோத்தாவுடன் நடத்திய பேச்சுக்களில் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல், பிராந்திய நாடுகளுடன் (முக்கியமாக இந்தியாவின் நலன்களுக்கு அமைவாக) ஒத்துப்போதல் பற்றிப் பேசியிருந்தார். சீனாவினால் இன்று வழிநடத்தப்படும் கோத்தாவோ, இலங்கையின் வெளியுறவுத்துறையோ இதனை விரும்பியிருக்கவில்லை. இதுதொடர்பான கருத்துக்களை சிங்களவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இவற்றுள் பலராலும் பகிரப்பட்ட முக்கியமான விடயம் யாதெனில், "நாம் அடக்கி வாசிப்போம், இன்னும் சில நாட்களில் ட்ரம்ப்பும் பொம்பியோவும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள், ஜனநாயகக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும், அதன்பின்னர் எந்த அழுத்தங்களும் இருக்காது" என்பதுதான். 

எமக்குத் தேவையோ இல்லையோ, சிங்களவர்களுக்கு ட்ரம்ப் தோற்பது தேவையாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை நாம் விரும்புவது எதற்காக, எமக்கு அந்தத் தெளிவு இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

சிங்களவர்கள் தங்கள் நலன்களுக்கு  ஏற்ற மாதிரி யோசிக்கின்றனர்; தமிழருக்கு எந்த வகையிலும் உதவிகிட்ட கூடாது

192 - BIDEN

114 - TRUMP
https://edition.cnn.com/election/2020/results/president?iid=politics_election_bop

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக அமெரிக்கா எடுத்துவரும் அல்லது எடுக்கவிருக்கும் கடுமையான நிலைப்பாடு எந்தவிதத்திலும் குறையாமல் இருக்கவேண்டுமென்றால், ட்ரம்ப் வருவதே சரியானது எம்மைப் பொறுத்தவரையில். ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதோ அல்லது பைடன் மூலம் கொள்கை மாற்றம் ஏற்பட்டு , இவ்வழுத்தம் குறைவதோ எமக்கு நல்லதல்ல. 

இப்போது செலுத்தப்படும் அழுத்தம், எந்தத் தடையுமின்றி தொடர்ச்சியாக செலுத்தப்படவேண்டும். இதைவிடுத்து பைடனின் வருகையில் நாம் அகமகிழ்வதால் எந்த நண்மையும் எமக்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இது எங்கோ, எமக்குச் சம்பந்தமில்லாத எதோ ஒரு நாட்டில்நடப்பதாக நாம் விட்டிவிட்டுச் செல்லலாம். இதனால் எமக்கு எதுவும் ஆகிவிடப்போவதில்லையென்று கூட எண்ணலாம். அது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது.

என்னைப்பொறுத்தவரை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வருவதால் எமக்கு ஏதும் நண்மைக் கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை. ஏனென்றால், அவர்களைப்பொறுத்தவரை ஈழத்தமிழர் என்று எவரும் இல்லை. சிங்களவர்களால் ஆளப்படும் சிறிலங்கா எனும் நாடுமட்டுமே தெரியும். அந்நாட்டிற்கான ராணுவ உதவிகளும், பயிற்சியும், பரஸ்பர ஒத்துழைப்பும் ஜனநாயகக் கட்சியினால் வழங்கப்படும். ட்ரம்பினால் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முட்டாள்த்தனமான நகர்வுகள் என்று ஜனநாயகக் கட்சி சொல்லும் விடயங்களான ஈரானுடனான அணுவாயுத பரவலைத் தடுக்கும் ஒப்பந்தத்திலிருந்து விலகியமை, ராணுவத்தை மீளப் பெற்றுக்கொள்கின்றமை, வடகொரியாவுடம் மோதல் போக்கினைக்  கைக்கொண்டமை, கொரொணா தொற்றுப்பற்றி அலட்சியமாக இன்றுவரை இருந்துவருகின்றமை, வலதுசாரிகளுக்கான ஆதரவு, சீனாவுடனான கடுமையான போக்கு என்று பல இருக்கலாம். இவற்றால் பலநாடுகளும், மக்களும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நாம் இவற்றுள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? 

ஜனநாயகக் கட்சி வந்தால் இவை யாவுமே மீள மாற்றியமைக்கப்படும். முக்கியமாக சீனாவுடனான உறவுகளும் ஈரானுடனான உறவுகளும் சீர்செய்யப்படும். தென் சீனக் கடலில் இருந்து பசுபிக், இந்து சமுத்திரங்களில் சீனா செய்துவரும் ஊடுருவல்கள் கண்டும் காணாது விடப்படும். இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் பற்றி கவலைப்படுவதை அமெரிக்கா தற்போதைக்கு கைவிடும், இது சீனா தனது நிலையினை மென்மேலும் பலப்படுத்தும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கும். இது எமக்கு எந்தவிதத்திலும் நண்மை பயக்கப்போவதில்லை. 

அண்மையில் கொழும்பு வந்திருந்த பொம்பியோ கோத்தாவுடன் நடத்திய பேச்சுக்களில் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல், பிராந்திய நாடுகளுடன் (முக்கியமாக இந்தியாவின் நலன்களுக்கு அமைவாக) ஒத்துப்போதல் பற்றிப் பேசியிருந்தார். சீனாவினால் இன்று வழிநடத்தப்படும் கோத்தாவோ, இலங்கையின் வெளியுறவுத்துறையோ இதனை விரும்பியிருக்கவில்லை. இதுதொடர்பான கருத்துக்களை சிங்களவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இவற்றுள் பலராலும் பகிரப்பட்ட முக்கியமான விடயம் யாதெனில், "நாம் அடக்கி வாசிப்போம், இன்னும் சில நாட்களில் ட்ரம்ப்பும் பொம்பியோவும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள், ஜனநாயகக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும், அதன்பின்னர் எந்த அழுத்தங்களும் இருக்காது" என்பதுதான். 

எமக்குத் தேவையோ இல்லையோ, சிங்களவர்களுக்கு ட்ரம்ப் தோற்பது தேவையாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை நாம் விரும்புவது எதற்காக, எமக்கு அந்தத் தெளிவு இருக்கிறதா? 

சீனாவை மீறி ட்ரம்பால் ஒன்றும் செய்ய முடியாது 
சும்மா மக்களை ஏமாற்ற வாய் சவடால் விட்டு மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறாரே தவிர 
சீனாவை எதிர்க்க முடியாது. அவரதும் அவரின் மகளினதும் முழு வியாபார உற்பத்தியும் 
சீனாவில் இருந்து வருபவை. ட்ரம்ப் சொந்தம் கொண்டாடும் கட்டுடங்களின் 
அதிகமான மோர்ட்கேஜ் கடன் கொடுத்து இருப்பது சீன வங்கி. தவிர சீனா டிரம்புக்கு 
இந்தோனேசியாவில் ஒரு ரெசோர்ட் கோட்டல் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் 

இனி அமெரிக்காவில் யார் வந்தாலும் சீனாவை ஒன்றும் செய்ய முடியாது 
அவர்களின் நகர்வுகள் நிதானமான அரசியல் பிராந்திய பொருளாதார தகவல்களை 
கணித்து அதன் பிரகாரம் தொலைக்கு பார்வையில் நகருபவை. 

சீனா இப்போது மெதுவாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது 
அதில் வெற்றி பெறுமாக இருந்தால் ...அடுத்த வல்லரசு சீனாதான்.

தவிர இங்கு மற்றவர்கள் எழுதுவது போல சிங்களத்திடம் எந்த தந்திரமும் இல்லை 
மந்திரமும் இல்லை இனி சிங்களத்தால் எங்கும் அசைய முடியாது  ட்ராகோனின் பிடி 
அப்படியானது 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக அமெரிக்கா எடுத்துவரும் அல்லது எடுக்கவிருக்கும் கடுமையான நிலைப்பாடு எந்தவிதத்திலும் குறையாமல் இருக்கவேண்டுமென்றால், ட்ரம்ப் வருவதே சரியானது எம்மைப் பொறுத்தவரையில். ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதோ அல்லது பைடன் மூலம் கொள்கை மாற்றம் ஏற்பட்டு , இவ்வழுத்தம் குறைவதோ எமக்கு நல்லதல்ல. 

இப்போது செலுத்தப்படும் அழுத்தம், எந்தத் தடையுமின்றி தொடர்ச்சியாக செலுத்தப்படவேண்டும். இதைவிடுத்து பைடனின் வருகையில் நாம் அகமகிழ்வதால் எந்த நண்மையும் எமக்கில்லை. 

ட்ரம்ப் வந்தால்தான் நல்லது👍,

பைடனுக்கு நல்ல தைரியமில்லை, அத்துடன் வயதுபோய் ஒரே தடுமாற்றம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

சீனாவை மீறி ட்ரம்பால் ஒன்றும் செய்ய முடியாது 
சும்மா மக்களை ஏமாற்ற வாய் சவடால் விட்டு மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறாரே தவிர 
சீனாவை எதிர்க்க முடியாது. அவரதும் அவரின் மகளினதும் முழு வியாபார உற்பத்தியும் 
சீனாவில் இருந்து வருபவை. ட்ரம்ப் சொந்தம் கொண்டாடும் கட்டுடங்களின் 
அதிகமான மோர்ட்கேஜ் கடன் கொடுத்து இருப்பது சீன வங்கி. தவிர சீனா டிரம்புக்கு 
இந்தோனேசியாவில் ஒரு ரெசோர்ட் கோட்டல் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் 

இனி அமெரிக்காவில் யார் வந்தாலும் சீனாவை ஒன்றும் செய்ய முடியாது 
அவர்களின் நகர்வுகள் நிதானமான அரசியல் பிராந்திய பொருளாதார தகவல்களை 
கணித்து அதன் பிரகாரம் தொலைக்கு பார்வையில் நகருபவை. 

சீனா இப்போது மெதுவாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது 
அதில் வெற்றி பெறுமாக இருந்தால் ...அடுத்த வல்லரசு சீனாதான்.

தவிர இங்கு மற்றவர்கள் எழுதுவது போல சிங்களத்திடம் எந்த தந்திரமும் இல்லை 
மந்திரமும் இல்லை இனி சிங்களத்தால் எங்கும் அசைய முடியாது  ட்ராகோனின் பிடி 
அப்படியானது 

பார்க்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.