Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்கை தாயகத்தில் வசிக்கும் கள உறவுகளின் கருத்துக்களை இங்கு கானோம்.இந்த லட்ச்சத்தினில் ஊர்ப்புதினம் என்ற தலைப்பு வேறை.

புலம்பெயர்ந்த நாடுகளில் கனவுலகில் வாழுபவர்களுக்கு ஊரிலிருந்து உண்மைகளையும், யதார்த்தங்களையும் சொல்லுபவர்கள் கனவைக் குலைத்துவிடுவதால் கலைத்துவிட்டார்கள்.

  • Replies 165
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

சில காலமாக நீங்கள் அதிலிருந்து முற்றிலும் மாறிவிட்டதை யாழ் கள நண்பர்கள் சொல்லியே வருகிறார்கள்

யானை பார்த்த குருடர்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கும்தானே.😃

மற்றவர்களுக்காக போலியாக கதைப்பதைவிட எது சரியாகப்படுகின்றதோ அதைத்தான் சொல்லுகின்றேன். 

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

என்ன பிரயோசனம்? அதுதான் எல்லாத்தையும் இறுதியில் வாரிக்கொடுத்தாயிற்று. இதற்கு இவர் போராடப்போகாமலே இருந்திருக்கலாம். கப்பலே முழ்கிப்போயிற்று, இப்ப போய் துடுப்பை தேடுவதுபோல் உள்ளது இவர் செலுத்தும்  அஞ்சலி. இந்த ஆரவாரம் எல்லாம்  மாவீரர் நிகழ்வை திசை திருப்புவதற்கே.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.

 திட்டமிட்டு  மக்களை ஏமாற்றி, ஏமாளிகளாக்கி, ஏதிலிகளாக்கி வருகிறார்கள் எதிரிகள். இழக்க எதுவுமேயில்லாத மக்களிடம் இலகுவாக அவர்களது திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை. மக்களின் இயலாமையை பயன்படுத்துவதில் பெருமையொன்றுமில்லை. பலவான்கள் என்று தம்மை பீற்றிக்கொள்பவர்களுக்கு அது இழுக்கு. 
   
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யானை பார்த்த குருடர்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கும்தானே.😃

மற்றவர்களுக்காக போலியாக கதைப்பதைவிட எது சரியாகப்படுகின்றதோ அதைத்தான் சொல்லுகின்றேன். 

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். 

போலிகள் சருகுகள் தான் தருணத்துக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது யானை பார்த்தது என்பது தான் மிகமிக பாரிய குருட்டு வேலை. அதை நான் என்றும் செய்யப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, satan said:

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.

 திட்டமிட்டு  மக்களை ஏமாற்றி, ஏமாளிகளாக்கி, ஏதிலிகளாக்கி வருகிறார்கள் எதிரிகள். இழக்க எதுவுமேயில்லாத மக்களிடம் இலகுவாக அவர்களது திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை. மக்களின் இயலாமையை பயன்படுத்துவதில் பெருமையொன்றுமில்லை. பலவான்கள் என்று தம்மை பீற்றிக்கொள்பவர்களுக்கு அது இழுக்கு. 
   
இதே மக்கள்தான் ஒருகாலத்தில் இயக்கம் சொல்லி ஓட்டு போடாமல் இருந்தவர்கள்.. அப்போ இப்படி திட்டமிட்டு மக்களை ஏமாத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்வீர்களா..? ஒருவர் ரெண்டுபேர் எண்டால் சொல்லலாம் லட்சக்கணக்கில் வாக்களித்த மக்கள் முட்டாள்கள் இங்கிருந்து இணையத்தில் கத்துபவர்கள் அறிவாளிகள்..? யாழ்ப்பாணத்தில் அங்கஜனுக்குத்தான் ஆகக்கூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்களுக்குதான் சண்டை கிழுகிழுப்பு தேவை.. அங்கிருப்பவர்களுக்கு அல்ல.. அதை உணர்ந்து அரசியலில் பயணிக்காவிட்டால் அறலை பேர்ந்ததுகள் இருக்கும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் போகும்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்காக போராடி இழப்புகளையும், அழிவுகளையும் தொடர்ந்து சந்தித்து, ஆதரிப்பார் இன்றி  ஆயன் இல்லாமல், இலட்சியம் சிதைந்து, சிந்தும் கண்ணீரை துடைக்க, காயங்களுக்கு கட்டுப்போட ஆளின்றி வடுக்களோடு அலைந்த மக்களை ஓநாய்கள் ஏமாற்றுகின்றன. அவர்களுக்காக உண்மையாக உழைக்க யாருமில்லை. அவர்களை வைத்து உழைக்க ஏராளம் பேர் வலம்வருகின்றனர். யாரை நம்புவது என்று தெரியாமல் விட்டில்ப் பூச்சிகளாக விழுந்துகொண்டிருக்கிறோம். இதைத்தான் எதிரி எதிர்பார்த்து நசுக்குகிறான். உரிமையை விட வயிறு பெரிய பிரச்சனையாகி விட்டது இப்போ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த நாடுகளில் கனவுலகில் வாழுபவர்களுக்கு ஊரிலிருந்து உண்மைகளையும், யதார்த்தங்களையும் சொல்லுபவர்கள் கனவைக் குலைத்துவிடுவதால் கலைத்துவிட்டார்கள்.

😊😊😊 கருத்துகள பார்வையாளர் பகுதியில்  குந்தியிருக்கிறம் பார்வையாளராக .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.

விரைவில் பிள்ளையானும் விடுதலையாகிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதே மக்கள்தான் ஒருகாலத்தில் இயக்கம் சொல்லி ஓட்டு போடாமல் இருந்தவர்கள்.. அப்போ இப்படி திட்டமிட்டு மக்களை ஏமாத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்வீர்களா..? ஒருவர் ரெண்டுபேர் எண்டால் சொல்லலாம் லட்சக்கணக்கில் வாக்களித்த மக்கள் முட்டாள்கள்

இதைத்தான் அண்மையில் ஒரு பிரபல்ய சிங்கள  அரசியல்வாதி கொஞ்சம் மாற்றி சொல்லியிருந்தார். "ஒரு காலத்தில் தேர்தலை பகிஸ்கரித்த வடக்கு மக்கள், இன்று எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிய காலம் மாறி எங்களுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்." இன்றைய எமது நிலை திட்டமிட்டு எதிரியால் ஏற்படுத்தப்பட்டது. தலைவன் அழிக்கப்பட்டு மந்தைகள் சிதறடிக்கப்பட்டன, அரசியல் தலைவர்கள் கழுத்தறுக்கப்பட்டனர், தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்பட்டன, இளைஞர் சோம்பேறிகளாக்கப்பட்டனர், விரக்தியுற்று  சமூக சீர்கேட்டுக்கு தள்ளப்பட்டனர், கல்வியறிவு சிதைக்கப்பட்டது, தமிழ் பொருளாதாரம் சரிந்து கையேந்தும் நிலை வந்துள்ளது.  இதையும் பெருமையாக பேசி மகிழ்வோமில்ல நாம். 

21 hours ago, ரஞ்சித் said:

உண்மை. ஆனால் இன்றுவரை நாம் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று 30 வருடங்களுக்கும் மேலாக அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே? புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே? அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத்தானே கொல்லப்பட்டார்கள், அப்படியானால் அதுகூட இனச்சுத்திகரிப்புத்தானே?

தமிழர் போராட்டத்தை ஆரம்பம் தொடக்கமே காட்டி கொடுத்தவர்கள் இவர்கள்தான். கட்டிக்கொடுப்பதென்பது அவர்களது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதை மற்ற முடியாது. இவர்கள் ஜிஹாத் என்றும் , ஊர்க்காவல் படை என்றும் கிழக்கில் தமிழர்ளுக்கு எதிராக செய்த கொலைகள், அநியாயங்கள் எண்ணிலடங்காதவை.

அதைப்பற்றி தமிழர் தரப்பு பெரிதாக பேசுவதில்லை. அவர்களுடன் இணங்கிப்போக வேண்டுமென்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. இருந்தாலும் அவர்கள் அதட்கு தயாராக இல்லை. முஸ்லீம் வெளியேற்றம், முஸ்லீம் கொலை என்று பெரிதாக பேசுபவர்கள் இவர்கள் தமிழர்களுக்கு எதிராக செய்த அநியாயங்களை பேசுவதில்லை.

இன்றும் தமிழர் உரிமைக்கு எதிராக இருப்பவர்கள் இவர்களே. அதில் ரிசார்ட், ஹிஸ்புல்லா , ஹாரீஸ் , அதாஉல்லா போன்றோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஆனால் தமிழர்க்கு உரிமை என்று வரும்போது அதில் பங்கு கேட்பதிலும் முந்திக்கொள்ளுவார்கள்.

எனவே இனியாவது இவர்கள் செய்த அநியாயத்தை கிழக்கு தமிழர்கள் காலத்துக்கு காலம் வெளியிட வேண்டும். மடற்ப்படி இங்கு கருணா செய்யும் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் அரசியலுக்காகவேயன்றி வேறொன்றுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

என்ன பிரயோசனம்? அதுதான் எல்லாத்தையும் இறுதியில் வாரிக்கொடுத்தாயிற்று. இதற்கு இவர் போராடப்போகாமலே இருந்திருக்கலாம். கப்பலே முழ்கிப்போயிற்று, இப்ப போய் துடுப்பை தேடுவதுபோல் உள்ளது இவர் செலுத்தும்  அஞ்சலி. இந்த ஆரவாரம் எல்லாம்  மாவீரர் நிகழ்வை திசை திருப்புவதற்கே

இப்படிப் பலர் போராடாமல் போயிருந்தால் போராட்டமே நடந்திருக்காது. ஆயுதப் போராட்டம் ஒரு எல்லை வரை உரிமைகளை அடைய உந்தித் தள்ளியது. ஆனால் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர் உலக ஒழுங்கும், ஆயுதப் போராட்டங்கள் மீதான பார்வைகளும் மாறிவிட்டது. அதை கருணா அம்மானும் பாலசிங்கத்தாரும் புரிந்துகொண்டிருந்தார்கள். 

இந்த மாவீரர் வாரத்தில் அம்மான் வாயை மூடிக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கின்றேன். ஆனால் விசுவாசமாக இருந்து மரித்தவர்களை நினைவுகொள்வார்.

10 hours ago, விசுகு said:

போலிகள் சருகுகள் தான் தருணத்துக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது யானை பார்த்தது என்பது தான் மிகமிக பாரிய குருட்டு வேலை. அதை நான் என்றும் செய்யப்போவதில்லை 

மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஆயுதப் போராட்டம் ஏன் அழிந்தது, ஏன் அதன் பின்னர் தமிழ்த் தேசியம் நலிந்துகொண்டு போகின்றது என்பதையெல்லாம் யோசிக்காமல் குரல் கொடுப்பதை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை.

8 hours ago, Robinson cruso said:

தமிழர் போராட்டத்தை ஆரம்பம் தொடக்கமே காட்டி கொடுத்தவர்கள் இவர்கள்தான். கட்டிக்கொடுப்பதென்பது அவர்களது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதை மற்ற முடியாது. இவர்கள் ஜிஹாத் என்றும் , ஊர்க்காவல் படை என்றும் கிழக்கில் தமிழர்ளுக்கு எதிராக செய்த கொலைகள், அநியாயங்கள் எண்ணிலடங்காதவை.

முஸ்லிம்களை விட அதிகம் காட்டிக்கொடுத்தவர்கள் உள்ளிருந்த தமிழர்தான். ஆனால் முஸ்லிம்களை மட்டும் காட்டிக்கொடுக்கும் இனம் என்று சொல்லிக்கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

😊😊😊 கருத்துகள பார்வையாளர் பகுதியில்  குந்தியிருக்கிறம் பார்வையாளராக .

மீன்டும் உங்களை இங்கு கன்டது மிக்க மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

😊😊😊 கருத்துகள பார்வையாளர் பகுதியில்  குந்தியிருக்கிறம் பார்வையாளராக .

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தனி.

தற்போது உலகம் நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் அமிழ்ந்துவிட்டது. இதில் புலம்பெயர் தேசம், தாயகம் என்ற வேறுபாடு இல்லை. ஒரு காலத்தில் இளைஞர்கள்தான் மிகவும் ஓர்மமாக விடுதலைக்குப் போராடினார்கள்.  ஆனால் இக்கால இளைஞர்களில் பலர் அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான், கருணா என்று அரசுடன் இணங்கி அரசியல் செய்பவர்களின் பின்னால் இருக்கின்றார்கள்.

எதையும் ஒரு தவமாகக் கருதி கடுமையாக உழைத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்திக்காமல், நோகாமல் எப்படி பணம் பார்க்கலாம் என்று பெரும்பாலானவர்கள் சிந்திக்கும் காலம் இது. அதனால்தான் உரிமை அரசியலிலிருந்து விலகி இணக்க அரசியலுக்குள் சேர்ந்துள்ளார்கள். இப்படியான மனமாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல் அதனை மாற்ற வழிவகைகளைத் தேடாமல் தமிழருக்கு உய்வில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

😊😊😊 கருத்துகள பார்வையாளர் பகுதியில்  குந்தியிருக்கிறம் பார்வையாளராக .

 உதாலைதான் தம்பியர் கோவிச்சுக்கொண்டு போகேக்கை நான் வாயே திறக்கேல்லை. ஒரு முற்றத்திலை பிறந்து வளர்ந்த  எங்களுக்கு எப்பிடி ஒதுங்கியிருக்க மனம் வரும்? 

  • கருத்துக்கள உறவுகள்

இதில.. கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிற கூட்டம் கூடிக்கிட்டே போகுது. இவ்வளவு காலமும் இந்த மக்களைப் பற்றியே சிந்திக்காதிருந்த இந்தக் கொம்மான் எனும் ஓநாய் இப்போது கண்ணீர் வடிக்குது என்றால்.. அது எஜமானர்களுக்காக.. இன்னும்.. எத்தனை ஆடுகளை இன்னும் வேட்டையாடப் போகுதோ என்ற பயம் தான் மேலிடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஆயுதப் போராட்டம் ஏன் அழிந்தது, ஏன் அதன் பின்னர் தமிழ்த் தேசியம் நலிந்துகொண்டு போகின்றது என்பதையெல்லாம் யோசிக்காமல் குரல் கொடுப்பதை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை.

நீங்க  சோறு என்கிறீர்கள்

நாங்க  சுதந்திரம் இருந்தால்  எல்லாம்  கிடைக்கும்  என்கிறோம்

உடனடிச்சோறு தற்காலிக தீர்வு  தான் என்கிறோம்

நீங்க சோற்றுக்கு வழி  செய்யுங்க  அதை  யாரும்  தடுக்கவில்லை

நாங்க  நீண்ட  தூர பயணத்தினை கனவாகிவிடாமல் பார்க்கலாம்  என்கிறோம்

சோறு  தான்  முக்கியம்  என சார்ல் து கோல் நினைத்து லண்டனிலேயே தன்னை அடக்கியிருந்தால்

நான்  வாழும் பிரெஞ்சு தேசம் இன்றும் சோற்றுக்கு  கையேந்தியபடி  தான் நிற்கும்???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இப்படிப் பலர் போராடாமல் போயிருந்தால் போராட்டமே நடந்திருக்காது. ஆயுதப் போராட்டம் ஒரு எல்லை வரை உரிமைகளை அடைய உந்தித் தள்ளியது. ஆனால் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர் உலக ஒழுங்கும், ஆயுதப் போராட்டங்கள் மீதான பார்வைகளும் மாறிவிட்டது. அதை கருணா அம்மானும் பாலசிங்கத்தாரும் புரிந்துகொண்டிருந்தார்கள். 

மிக மிக  அபத்தமான

வரலாற்றை திரிக்கும்  கருத்து

கடந்த சில நாட்களாக  கிருபனா  இப்படி  எழுதுவது  என்பது  போன்று தான் எழுத்துக்கள் வருகின்றன.

உண்மையை  சொல்லுங்கள்

தமிழீழம் சாத்தியமற்றது என்றா  தமிழீழத்தின் ஒரு பகுதியான கிழக்கை பிரபாகரனிடம்  தனியாக  தாருங்கள் என்று  முரளிதரன்  கேட்டார்???  கிழக்கை பிரபாகரனிடம்  தான்  பெறணும்  என்னும்  வலுவுடன் பிரபாகரன் இருந்ததால்  தானே அவர்  சிறீலங்காவிடம்  அதை  கேட்கவில்லை???

 யாழ்ப்பாணத்தெரெல்லாம்  கிழக்கை விட்டு  வெறியேறுங்கள்  என்றபோது கூட அவர்  தமிழீழம் சாத்தியமில்லை என்று  சொல்லவில்லை???

தயவு  செய்து தோல்வியை வைத்து கதைகளை  வேண்டுமானால் எழுதுங்கள் படியுங்கள்

வரலாற்றை எழுதாதீர்கள்.

கண்டதையும் திண்டுவிட்டு வந்து வாந்தி  எடுக்காதீர்கள்

டொட்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

தமிழீழம் சாத்தியமற்றது என்றா  தமிழீழத்தின் ஒரு பகுதியான கிழக்கை பிரபாகரனிடம்  தனியாக  தாருங்கள் என்று  முரளிதரன்  கேட்டார்???  கிழக்கை பிரபாகரனிடம்  தான்  பெறணும்  என்னும்  வலுவுடன் பிரபாகரன் இருந்ததால்  தானே அவர்  சிறீலங்காவிடம்  அதை  கேட்கவில்லை???

நான் வரலாற்றை எழுத முற்படவில்லை. ஆனால் 16 வருடங்களுக்கு முன்னால் கண்முன் நடந்ததையே தெரியாமலும் இருக்கவில்லை.

ஏதோ நோர்வே தமிழீழத்திற்கும் சிறிலங்காவுக்கும் எல்லைத் தகராறுக்கு மத்தியஸ்த்தம் செய்ததாக இருக்கின்றது உங்கள் கருத்துக்கள்😆 இனப்பிரச்சினைக்கு தீர்வாக உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டியை பரிசீலிப்போம் என்பதற்கு இணங்கினதாலும், மீண்டும் சண்டைக்கு கிழக்கு மாகாணப் போராளிகளை அனுப்ப இணங்காததாலும் கருணா பிளவு ஏற்பட்டது. அவர் புலிகளின் கிழக்கு மாகாண நிர்வாகம் அனைத்துக்கும் தலைவரின் கீழ் தானே பொறுப்பாக இருக்க கோரிக்கைவிடுத்தார். இதையே மாற்றி தமிழீழ நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக்கொண்டு செல்ல முயன்றார் என்று அம்புலிமாமா கதை சொல்லியுள்ளீர்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

கொம்மான் என்னத்தை கேட்டுப் பிரிந்தார் என்பதை நாங்களும் பார்த்துவிட்டோம். கொம்மானை விட அனுபவமிக்க கரிகாலன் அண்ணா போன்றவர்களே.. தலைவரின் போய் எனக்குக் கீழ் எல்லாத்தையும் தான் என்று கேட்டதில்லை. தளபதி சொர்ணம் கூட அப்படிக் கேட்கவில்லை.. கேட்பதில் நியாயமும் இல்லை.

இப்ப அது எல்லாம் அவசியமில்லை..

இப்ப கனக்க வேண்டாம்.. மகிந்தவிடம் வாங்கிய சுதந்திரக் கட்சி உபதலைவர் பதவிக்கு என்னானது..??!  மகிந்தவிடம் கேட்ட அமைச்சர் பதவிக்கு என்னானது..??! மகிந்தவிடம் கேட்டக் கிழக்கு ஆளுநர் பதவிக்கு என்னானது..??!

இப்ப மகிந்த கொடுக்கவில்லை என்பதற்காக.. எதைக் கொண்டு போய் பிரியுறது..??! பிரிந்தால் புழைப்புக்கு என்னாகிறது.. ஓடி ஒளியவும் இடமில்லை.. அடைக்கலம் கொடுக்கவும் ஆக்களில்லை.

வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்த்தது கணக்கா எழுதிற கூட்டத்தில் கிருபன் அண்ணாவும் கடையிசில் தன்னை இணைந்துக் கொண்டு விட்டார் போலும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நீங்க  சோறு என்கிறீர்கள்

நாங்க  சுதந்திரம் இருந்தால்  எல்லாம்  கிடைக்கும்  என்கிறோம்

உடனடிச்சோறு தற்காலிக தீர்வு  தான் என்கிறோம்

நீங்க சோற்றுக்கு வழி  செய்யுங்க  அதை  யாரும்  தடுக்கவில்லை

நாங்க  நீண்ட  தூர பயணத்தினை கனவாகிவிடாமல் பார்க்கலாம்  என்கிறோம்

சோறு  தான்  முக்கியம்  என சார்ல் து கோல் நினைத்து லண்டனிலேயே தன்னை அடக்கியிருந்தால்

நான்  வாழும் பிரெஞ்சு தேசம் இன்றும் சோற்றுக்கு  கையேந்தியபடி  தான் நிற்கும்???

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இப்படிப் பலர் போராடாமல் போயிருந்தால் போராட்டமே நடந்திருக்காது. ஆயுதப் போராட்டம் ஒரு எல்லை வரை உரிமைகளை அடைய உந்தித் தள்ளியது. ஆனால் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர் உலக ஒழுங்கும், ஆயுதப் போராட்டங்கள் மீதான பார்வைகளும் மாறிவிட்டது. அதை கருணா அம்மானும் பாலசிங்கத்தாரும் புரிந்துகொண்டிருந்தார்கள்

இந்த மாவீரர் வாரத்தில் அம்மான் வாயை மூடிக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கின்றேன். ஆனால் விசுவாசமாக இருந்து மரித்தவர்களை நினைவுகொள்வார்.

மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஆயுதப் போராட்டம் ஏன் அழிந்தது, ஏன் அதன் பின்னர் தமிழ்த் தேசியம் நலிந்துகொண்டு போகின்றது என்பதையெல்லாம் யோசிக்காமல் குரல் கொடுப்பதை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை.

4 hours ago, கிருபன் said:

அப்படி புரிந்து கொண்டவர், எப்படி “ தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடப்போறேன்” என்ற அறிக்கையை வெளியிட்டவர். 

மேலும் போராளிகளை சண்டைக்கு புலிகள் கேட்டார்கள் என்றவர் பிறகு ஏன் தனது சகோதரன் உட்பட்ட பல போராளிகளை சண்டையில் ஈடுபடுத்தினார்?

4 hours ago, கிருபன் said:

முஸ்லிம்களை விட அதிகம் காட்டிக்கொடுத்தவர்கள் உள்ளிருந்த தமிழர்தான். ஆனால் முஸ்லிம்களை மட்டும் காட்டிக்கொடுக்கும் இனம் என்று சொல்லிக்கொள்கின்றோம்.

முரளிதரனை தானே நீங்கள் சொல்கிறீர்கள்???😜

கருணா அஞ்சலி செலுத்தியதால் இப்போது என்ன நட்டம் ஏற்ப்பட்டது  என்பதை கூறிவிட்டு விவாத்ததை தொடரலாமே!  

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

கருணா அஞ்சலி செலுத்தியதால் இப்போது என்ன நட்டம் ஏற்ப்பட்டது  என்பதை கூறிவிட்டு விவாத்ததை தொடரலாமே!  

அதெல்லாம் தெர்யாது.. வார்டனுன்னா அடிப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

உங்கள  பார்க்க பரிதாபமா  இருக்கு?

இதெல்லாம் புலத்தில 

மரத்தில  புடுங்கிறம் என்று நினைக்கிறீர்கள் போலும்

வந்து  புடுங்குங்கோ

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.