Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

மீன்டும் உங்களை இங்கு கன்டது மிக்க மகிழ்ச்சி.

5 hours ago, கிருபன் said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தனி.

மகிழ்ச்சி உன்மையை ஏற்றுக்கொள்ளும் உங்களைப்போன்றவர்களின் அழைப்புகளுக்கும் விசாரிப்புக்களுக்கும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி 

4 hours ago, குமாரசாமி said:

 உதாலைதான் தம்பியர் கோவிச்சுக்கொண்டு போகேக்கை நான் வாயே திறக்கேல்லை. ஒரு முற்றத்திலை பிறந்து வளர்ந்த  எங்களுக்கு எப்பிடி ஒதுங்கியிருக்க மனம் வரும்? 

ம் செய்திகளை பார்த்துவிட்டு வந்தேன்  

இன்று சுமந்திரன் ஐயா மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்  எனக்கும் ஒரே குழப்பம் புலிகளை பற்றி குற்றம் சுமத்திய மனுசன் விளக்கேத்துது 

புலிகளின் இனச்சுத்திகரிப்பு , போர்ர்குற்றம் அப்பிடி இப்படி என்று அடிச்சு விட்ட மனுசன் விளக்கேற்றுறார் 

  • Replies 165
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதே மக்கள்தான் ஒருகாலத்தில் இயக்கம் சொல்லி ஓட்டு போடாமல் இருந்தவர்கள்.. அப்போ இப்படி திட்டமிட்டு மக்களை ஏமாத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்வீர்களா..? ஒருவர் ரெண்டுபேர் எண்டால் சொல்லலாம் லட்சக்கணக்கில் வாக்களித்த மக்கள் முட்டாள்கள் இங்கிருந்து இணையத்தில் கத்துபவர்கள் அறிவாளிகள்..? யாழ்ப்பாணத்தில் அங்கஜனுக்குத்தான் ஆகக்கூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்களுக்குதான் சண்டை கிழுகிழுப்பு தேவை.. அங்கிருப்பவர்களுக்கு அல்ல.. அதை உணர்ந்து அரசியலில் பயணிக்காவிட்டால் அறலை பேர்ந்ததுகள் இருக்கும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் போகும்.. 

பாலப்பத்திர ஒணான்டி கவனமா இருங்கள் கல்லெறி , சொல்லெறி விழும் உங்களுக்கு 

கர்ணா விளக்கேத்துனது பிழையென்றால் அதாவுல்லாவைக்கொண்டு விளக்கேற்றியிருந்தால் நம்ம சனம் என்ன கதைச்சிருக்கும் என மனசுக்குள் நினைக்கிறன்.

ஏனென்றால் மனுசன் அரசாங்க ஒரு லட்ச வேலைவாய்ப்புல தமிழ் மக்களுக்கும் வழங்க்கிக்கொண்டிருக்கிறார் , கலையரசனால் சாணாக்கியனால், ஜனாவால் அமலையும் பிள்ளையானையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்க நேரம் போகிறது.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

வணக்கம் சார்! புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் தமது ஊர்,இன,சொந்த பந்த மக்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என ஒரு பட்டியல் இட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கருணா அஞ்சலி செலுத்தியதால் இப்போது என்ன நட்டம் ஏற்ப்பட்டது  என்பதை கூறிவிட்டு விவாத்ததை தொடரலாமே!  

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

.

ஏனென்றால் மனுசன் அரசாங்க ஒரு லட்ச வேலைவாய்ப்புல தமிழ் மக்களுக்கும் வழங்க்கிக்கொண்டிருக்கிறார் , 

இது நல்லவிடயம் தானே?

யார்  குடுத்தாலென்ன   வேலை  வாய்ப்பை  பெறுங்கள்

இதைச்சொன்னால்  உங்களுக்கு  குடையுமில்ல??

அதே நிலை  தான் எங்களுக்கும்???

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இது நல்லவிடயம் தானே?

யார்  குடுத்தாலென்ன   வேலை  வாய்ப்பை  பெறுங்கள்

இதைச்சொன்னால்  உங்களுக்கு  குடையுமில்ல??

அதே நிலை  தான் எங்களுக்கும்???

இங்குள்ள நிலை வேறு இன்றைய நிலையில் மக்கள் நிலைப்பாடு என்பது வேறு வெளிநாடுகளில் இருந்து சிந்திப்பவர்கள் ஈழம் எம்மக்கள் என சிந்திக்கிறார்கள் இங்குள்ளவர்கள் நாம்  இலங்கையை தாண்ட முடியாது கிடைப்பதை பெற்று வாழத்தான் வேண்டுமென்ற மனநிலையில் 

இலங்கை ராணுவம் , பொலிசுக்கு ஆட்சேர்ப்பு தமிழ் இளைஞர்கள் அதிகமாக இணைந்து கொள்கிறார்கள் வேலை முக்கியம் அது எதுக்காக எப்படிப்படாலும் தன்ற குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற மன நிலை வெளிநாடுகளோ, வெளிநாடுகளில் வசிப்பவர்களாலயோ தீர்வை பெற்றுக்கொடுக்கவும் முடியாது தங்கள் வீட்டு பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாது அதை தங்களால்தான் தீர்க்க முடியும் என்ற முடிவும் 

24 minutes ago, nedukkalapoovan said:

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

அஞ்சலி செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியே.... ஆனால் அதனைச் செய்வது முரளீதரனல்லவா ? 

அதுதான் சிறிய நெருடல்....🤥

ஏனென்றால் தனது சொந்த நலனுக்காக தனது சொந்த மக்களையே காட்டிக் கொடுத்தவரல்லோ....

அஞ்சலி உண்மையாக இருக்குமா என்கின்ற ஐயம்தான்...

🙂

அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா? ...திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது ...உங்கட நக்கல் ,ஐயங்களை அங்கேயுள்ள மக்கள் கேட்டு இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கும் ...போராட்டம் தொடங்க முதலே நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு போராடினவனை பார்த்து துரோகி என்று சொல்வது கேவலமாய் இருக்கு 
 
4 hours ago, nedukkalapoovan said:

கொம்மான் என்னத்தை கேட்டுப் பிரிந்தார் என்பதை நாங்களும் பார்த்துவிட்டோம். கொம்மானை விட அனுபவமிக்க கரிகாலன் அண்ணா போன்றவர்களே.. தலைவரின் போய் எனக்குக் கீழ் எல்லாத்தையும் தான் என்று கேட்டதில்லை. தளபதி சொர்ணம் கூட அப்படிக் கேட்கவில்லை.. கேட்பதில் நியாயமும் இல்லை.

இப்ப அது எல்லாம் அவசியமில்லை..

இப்ப கனக்க வேண்டாம்.. மகிந்தவிடம் வாங்கிய சுதந்திரக் கட்சி உபதலைவர் பதவிக்கு என்னானது..??!  மகிந்தவிடம் கேட்ட அமைச்சர் பதவிக்கு என்னானது..??! மகிந்தவிடம் கேட்டக் கிழக்கு ஆளுநர் பதவிக்கு என்னானது..??!

இப்ப மகிந்த கொடுக்கவில்லை என்பதற்காக.. எதைக் கொண்டு போய் பிரியுறது..??! பிரிந்தால் புழைப்புக்கு என்னாகிறது.. ஓடி ஒளியவும் இடமில்லை.. அடைக்கலம் கொடுக்கவும் ஆக்களில்லை.

வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்த்தது கணக்கா எழுதிற கூட்டத்தில் கிருபன் அண்ணாவும் கடையிசில் தன்னை இணைந்துக் கொண்டு விட்டார் போலும். 

கருணாவை விட கரிகாலன் முக்கிய ஆளாய் இருந்தாரா:shocked: ஐயோ எனக்குத் தெரியாமல் போயிட்டுதே 

4 hours ago, MEERA said:

அப்படி புரிந்து கொண்டவர், எப்படி “ தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடப்போறேன்” என்ற அறிக்கையை வெளியிட்டவர். 

மேலும் போராளிகளை சண்டைக்கு புலிகள் கேட்டார்கள் என்றவர் பிறகு ஏன் தனது சகோதரன் உட்பட்ட பல போராளிகளை சண்டையில் ஈடுபடுத்தினார்?

முரளிதரனை தானே நீங்கள் சொல்கிறீர்கள்???😜

வன்னியில் இருந்து புலிகள் சண்டைக்கு வரும் போது அவரது தமையனை சண்டைக்கு விடாமல் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?
சண்டை வேண்டாம் என்று தான் தனது படையினரை பிரிந்து போக சொன்னவர் ...கண காலம் இயக்கத்தில் இருந்தவர்கள் வேறு போக்கிடம் இவர்கள் போவதற்கு இடையில் சண்டை தொடங்கி விட்டது...தலைவர் சறுக்கிய இடங்களில் இதுவும் ஒன்று ... நடந்து முடிந்ததை கதைப்பதால் பிரயோசனம் இல்லை:38_worried:

2009 வரை இயக்கத்தில் இருந்து காட்டிக் கொடுத்து தப்பி வந்தவர்களை பற்றி மீராவுக்கு தெரியாது போல  😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

அங்கேயிருப்பவர்கள் உண்மையை எழுத கூடாது பேசாமல் வாயை மூடிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் இல்லையா அண்ணா🙂 ...அப்பத் தான் உங்கட எண்ணத்திற்கு இங்கேயிருந்து அவிட்டு விடலாம் 

1 hour ago, nedukkalapoovan said:

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

உந்த செய்தியை வாசித்து போட்டு பத்தோடு பதினொன்றாய் கணக்கெடுக்காமல் போயிருக்கலாமே ...எதற்கு இதில் நின்று கொண்டு குத்தி முறிகிறீர்கள்?  யார் தூக்கி பிடிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா 😁

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

1) அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா? ...

2) திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .

3) உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது ...

4) உங்கட நக்கல் ,ஐயங்களை அங்கேயுள்ள மக்கள் கேட்டு இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கும் ...

5) போராட்டம் தொடங்க முதலே நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு போராடினவனை பார்த்து துரோகி என்று சொல்வது கேவலமாய் இருக்கு 
 
1) அக்கோய்..முரளீதரனைக் குற்றம் சாட்டுவதல்ல என் நோக்கம். ஆனால் நீங்கள் கேட்டீர்கள் பாருங்கள் ஒரு கேள்வி .. ஆதாரம் இருக்கா என்று... 

இதற்கு யாழ்க் களம் முழுமையாகச் சிரிக்கும் பாருங்கோ ஒரு சிரிப்பு... கற்பனைக்கே எட்டவில்லை .. 😂😂

2) முரளீதரன் அஞ்சலி செலுத்துவது உண்மையாக இருக்குமானால் அது மகிழ்ச்சியே.. 👍

3) ஏன் நான் பேசாமல் இருக்கவேண்டும். மிரட்டலா அல்லது கெஞ்சலா... 🤔

4) புரியவில்லை.. அங்குள்ள மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பாவிப்பதுதான் பிரச்சனை.

5) உங்கள் கூற்றுப் பிழை. போராட்டம் தொடங்க முதலே நான் நாட்டை விட்டு ஓடிவரவில்லை. தொடங்கி..வளர்ந்து ....உச்ச நிலையை எட்டிய பின்னரே ஓடி வந்தேன். (ஆமாம் ஓடி 👍). ஆனால் காட்டிக் கொடுக்கவில்லை. 

அதுசரி.. நீங்கள் எப்படி ? ஓடி வந்தீர்களா நீந்தி வந்தீர்களா... அல்லது பறந்து வந்தீர்களா... 🤔

என்றெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் உங்களின் தெரிவிற்கான காரணம் எனக்கு புரியும். 👍

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

அக்கா உங்கள் அளவுக்கு லண்டனிலும் வெளிநாடுகளிலும் இருந்து இயங்கும் ஒட்டுக்குழு ஆட்கள் எழுதுவதையும் சிங்கள ஹிந்திய ஊடகங்கள் எழுதும் ஊகங்களையும் நம்ப வேண்டிய அவசியமில்லை.

போராட்டம் நடந்தது எங்கள் மண்ணை மீட்க. எங்கள் உரிமைக்காக. அதற்கான தார்மீக ஆதரவை போராடும் சக்திகளுக்கு வழங்க வேண்டிய எமது கடமை. அதைச் செய்வதற்கும்.. எமக்கான போராட்டத்தை பல்வேறு சுயநலத் தேவைகளுக்காக காட்டிக்கொடுத்தவனுக்கும்.. சொந்த இனத்தை அழிச்சு அதன் மூலம் எஜமானர்களின் எலும்பைப் பொறுக்கிறவனுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது.. மற்றவன் எங்களை மக்களை மண்ணை ஏமாற்றிப் பிழைக்க. 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

அம்பாறையில் 30,000 வாக்குகள்.. மற்றவர் மட்டக்களப்பில் 50,000 வாக்குகள்.. மொத்தம் 80,000 வாக்குகள் தான் தமிழ் மக்களின் வாக்குகளா..???! இதில் எத்தனை இலஞ்சம் கொடுத்து வாங்கினது..??!

போக.. இத்தனை வாக்குகள் எடுத்தவை மக்களுக்கு இதுவரை செய்தது என்ன..???! 

250 பேருக்கு வேலை வாய்ப்பு.. ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில்.. அதுவும்... ஆளுக்கு ஒரு இலச்சம் இலஞ்சம்.

30 மணல் அள்ளும் அனுமதிப்பத்திரங்கள்.. ஒரு பத்திரத்துக்கு இலஞ்சம்.. 10 இலச்சம். 

இதை தான் அந்த 80,000 வாக்குகளும் விரும்பினவையோ..???!

போக.. முஸ்லிம் அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வில் வளர்த்து வாங்கப்பட்ட ஆதரவை இப்போ.. முஸ்லிம் ஆதரவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.. மிஸ்டர் பிள்ளையான். மிக விரைவில்.. போட்ட வாக்குக்கான பலனை அனுபவிப்பினம்.. போட்ட தமிழர்கள்.

அதே தான் கொம்மான் விடயத்திலும். எம்மவர்கள் மீண்டும் மீண்டும் பட்டுத்தான் திருந்தனும் என்பது விதிப்பு என்றால் அதனை யாராலும் மாற்ற முடியாது.

இவர்களின் இந்த நிலைக்கு கூட்டமைப்பின் பலவீனமான முஸ்லிம் சிங்கள சரணாகதி.. அரசியல் முன்னெடுப்புகளும் ஒரு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அங்கேயிருப்பவர்கள் உண்மையை எழுத கூடாது பேசாமல் வாயை மூடிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் இல்லையா அண்ணா🙂 ...அப்பத் தான் உங்கட எண்ணத்திற்கு இங்கேயிருந்து அவிட்டு விடலாம் 

ரதிக்கு குதர்க்கமாக எழுதத் தெரியும் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு தலைகீழாக யோசிக்க வரும் என்று தெரியவில்லை. நன்றி ஹம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

யானை பார்த்த குருடர்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கும்தானே.😃

மற்றவர்களுக்காக போலியாக கதைப்பதைவிட எது சரியாகப்படுகின்றதோ அதைத்தான் சொல்லுகின்றேன். 

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். 

அப்படி தெரியவில்லையே   உங்கள் கருத்துக்கள். கேள்வி இவ்வளவுகாலமும் அஞ்சலி செலுத்தாத அம்மான் இம்முறைமட்டும் ஏன் அஞ்சலி செலுத்துகிறார் என்பதே !! புரியவில்லையாக்கும்! நம்பீட்டம் !!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது!

2 hours ago, ரதி said:

உந்த செய்தியை வாசித்து போட்டு பத்தோடு பதினொன்றாய் கணக்கெடுக்காமல் போயிருக்கலாமே ...எதற்கு இதில் நின்று கொண்டு குத்தி முறிகிறீர்கள்?  யார் தூக்கி பிடிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா 😁

இதைத்தான் மற்றோரு திரியில் நாங்களும் சொன்னோம். உங்களுக்கு திரி பிடிக்காவிட்டால் நகர்ந்துவிடுங்கள் என்று! யாராவது கேட்டீர்களா? இப்பமட்டும் குத்துதாக்கும் ??

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

கிழக்கில்  முஸ்லிம்களால் பறிக்கப்படும் அல்லது அடாத்தாக வாங்கப்படும்  தமிழர்களின் நிலங்களை திருப்பிப்பெற கருணாவால்  முடியுமென்று நீங்கள் நம்பும்போது இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. 

உங்குள்ள  மக்கள் சோம்பேறிகளாக, முயற்சியில்லாமல் முன்னுக்குவரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்வரை நிலங்கள் பறிபோவதை தடுக்கமுடியாது சகோ!!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

கிழக்கில்  முஸ்லிம்களால் பறிக்கப்படும் அல்லது அடாத்தாக வாங்கப்படும்  தமிழர்களின் நிலங்களை திருப்பிப்பெற கருணாவால்  முடியுமென்று நீங்கள் நம்பும்போது இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. 

உங்குள்ள  மக்கள் சோம்பேறிகளாக, முயற்சியில்லாமல் முன்னுக்குவரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்வரை நிலங்கள் பறிபோவதை தடுக்கமுடியாது சகோ!!

நான் எப்ப முடியும் என்று சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

1) என்ன சொல்ல வருகிறீர்கள் ? முரளீதரன் பிரிந்து தலைமைக்கு எதிராகவும் சிறீலங்கா இராணுவத்துடனும் சேர்ந்து நின்றதற்கு ஆதாரம் இல்லை. இருந்தால் காட்டுங்கள் என்றா கூறுகிறீர்கள் ? 😂அவர் உங்கள் உடன்பிறப்பு. விட்டுக்கொடுக்க முடியாது. புரிந்துகொள்கிறேன். ம்ம்ம்ம்..ம்

2) கெஞ்சல் இல்லையென்றால் மிரட்டல் என்கிறீர்களா ? 😂😂

3) முரளீதரனுடைய போராட்ட வாழ்க்கையை தீர்ப்பிட எனக்குத் தகுதி இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக இறுதிக் காலத்தில் அவர் செய்ததை சரியென்று நீங்கள் நியாயப்படுத்துவது ஏற்கக் கூடியதல்ல. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது..

உண்மையாகவா? எப்போதிருந்து? இது உண்மையானால், இனியாவது விடிவு பிறக்குமா? ஆகா ... மகிழ்ச்சியான செய்தி.🙂

52 minutes ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

தக்கன பிழைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

உண்மையாகவா? எப்போதிருந்து? இது உண்மையானால், இனியாவது விடிவு பிறக்குமா? ஆகா ... மகிழ்ச்சியான செய்தி.🙂

நீங்கள் பெரும் அறிவாலிகள்.. என்பதால்.. தான் கடந்த 10 ஆண்டுகளாக.. எதிர் விமர்சனம்... என்ற வரிசையில் நின்று கொண்டு தான் நிற்கிறீர்கள்.

உங்க தலைவர்.. இப்ப தான் நீதிமன்றம் போய் வீட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி.. சாரி விடுதலை வேண்டித் தந்திருக்கிறார். அந்தளவுக்கு எமக்கு அறிவில்லை தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் பெரும் அறிவாலிகள்.. என்பதால்.. தான் கடந்த 10 ஆண்டுகளாக.. எதிர் விமர்சனம்... என்ற வரிசையில் நின்று கொண்டு தான் நிற்கிறீர்கள்.

உங்க தலைவர்.. இப்ப தான் நீதிமன்றம் போய் வீட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி.. சாரி விடுதலை வேண்டித் தந்திருக்கிறார். அந்தளவுக்கு எமக்கு அறிவில்லை தான். 😂

உங்க தலைவர் .... எங்கே?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

அதற்காக அந்த மண்ணில் பிறந்த ஒருவர் அம்மக்கள் அடிமைகளாக போகக்கூடாது என நினைப்பது பிழையா??

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 13:25, கிருபன் said:

ஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது  மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

வெடிச்சத்தம் கேட்டு ஷெல்லடி கேட்டு அரைக்காற்சட்டையுடன் வெளிநாட்டிற்கு பாய்ந்த  உங்களை விட

வெடிச்சத்தமோ ஷெல்லடியோ கேட்காமல் முழுக்காற்சட்டையுடன் வெளிநாடு பாய்ந்தவர்கள் தான் போராட்டத்தை புலத்திலிருந்து ஆதரித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

உங்க தலைவர் .... எங்கே?

அவரை ஏன் உங்களுக்கு. நீங்கள் தானே பெரிய அறிவாளிகள் இருக்கேக்க.. தமிழ் மக்களுக்கு விடுதலை விரைஞ்சு கிடைச்சிடும்.. என்று அவர் ஒதுங்கிட்டார். நீங்க என்னடான்னா.. இன்னும்.. எதிர்ப்பாட்டு பாடுவதிலையே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கீங்க. மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வாயை மட்டுமல்ல.. காதையும் பொத்திட்டு திரியுதுங்க. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.