Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஒற்றை வரியில் சொல்லவா 

வாக்களித்தது மக்கள் தானே பிரச்சினைகளை அவர்களே பார்த்துகொள்ளட்டுமே நெடுக்ஸ் .

இவர்களுக்கு வாக்களித்த மக்கள் நிமிர்வதற்கிடையில்.. இருந்த இடமும் பறிபோவதை தான் நிச்சயம் பார்ப்பார்கள். இருந்து பாருங்கள்.. அடுத்து வரும் 5 வருடங்கள்.. கிழக்கு தமிழர்களுக்கான அடையாளத்தை தொலைத்து நிற்கும். அதற்கு வெகுமதியாக கொம்மானின் வங்கிக் கணக்கு பலமடங்கு எகிறி நிற்கும். அதே பிள்ளையானுக்கும். வாக்களித்த மக்களுக்கு வாயில் மண் தான். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

  • Replies 165
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இவர்களுக்கு வாக்களித்த மக்கள் நிமிர்வதற்கிடையில்.. இருந்த இடமும் பறிபோவதை தான் நிச்சயம் பார்ப்பார்கள். இருந்து பாருங்கள்.. அடுத்து வரும் 5 வருடங்கள்.. கிழக்கு தமிழர்களுக்கான அடையாளத்தை தொலைத்து நிற்கும். அதற்கு வெகுமதியாக கொம்மானின் வங்கிக் கணக்கு பலமடங்கு எகிறி நிற்கும். அதே பிள்ளையானுக்கும். வாக்களித்த மக்களுக்கு வாயில் மண் தான். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

கிழக்கு போய் கனகாலம் முடிந்தால் வடக்கையாவது கைக்குள்ள வச்சிருக்க பாருங்கள் வவுனியா அரிக்கப்படுகிறது , மன்னார் ,  யாழ்ப்பாணம் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது முடிந்தால் தடுங்கள் பார்க்கலாம்  முடியாது நெடுக்ஸ் 

நீங்கள் இன்னமும் யுத்த காலத்துக்கு முன்னர் நிற்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு போய் கனகாலம் முடிந்தால் வடக்கையாவது கைக்குள்ள வச்சிருக்க பாருங்கள் வவுனியா அரிக்கப்படுகிறது , மன்னார் ,  யாழ்ப்பாணம் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது முடிந்தால் தடுங்கள் பார்க்கலாம்  முடியாது நெடுக்ஸ் 

நீங்கள் இன்னமும் யுத்த காலத்துக்கு முன்னர் நிற்கிறீர்கள் 

 நீங்கள் முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டதால்.. அரிக்கிறவனை எல்லாம் அரியணை ஏற்றுவதை வரவேற்கும் நிலை.

நாங்கள் இன்னும் முடியும் என்று கருதுவதால்.. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. அவ்வளவும் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

 நீங்கள் முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டதால்.. அரிக்கிறவனை எல்லாம் அரியணை ஏற்றுவதை வரவேற்கும் நிலை.

நாங்கள் இன்னும் முடியும் என்று கருதுவதால்.. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. அவ்வளவும் தான். 

உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான் 😜

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

யோவ், அக்கோய்! அவரிடம் இயக்கத்தின் அமைவிடம், புலிகள் கையாளும் போர்தந்திரம்,  போர்வழிமுறைகளை கேட்டு முறியடித்து அதற்காக சன்மானம் அளித்த எஜமானே வாக்குமூலம் அளித்து விட்டார்,பகிரங்கமாக சொல்லியும்விட்டார். உலக நாடுகளே   அழிக்கமுடியாது என்று சொன்ன புலிகளை நாம் அழிக்க உதவியது இந்த எட்டப்பன் தான் என்று இனி எந்த ஆதாரம் கேட்கிறீர்கள்? 

ஓமோம் இதை போய் வெளியில சொல்லிட்டு திரியாதீங்கோ தலைவருக்குத் தான் அவமானம் 
 
16 hours ago, Kapithan said:

1) முரளீதரன் காட்டிக் கொடுத்துத்தான் புலிகள் தோற்றதாக எங்குமே நான் குறிப்பிடவில்லை. 

2) முரளீதரன் தொடர்பாக சில  சொற்களை நான் பிரயோகிக்காததற்குக் காரணம் அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்பதும் அவரின் போராட்ட கால வாழ்க்கை மீதிருக்கும்  மரியாதையும்தான். 

போராட்த்தின் இறுதிக் காலத்தில் அவரினதும் அவரின் சகாக்களினதும் செயற்பாடுகள் என்னவென்று எல்லோருக்குமே தெரியும். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை

லண்டனுக்கு வந்த அவரை பேசாமல் இங்கேயே இருக்க விட்டு இருக்கலாம்...அவர் இங்கே எங்கேயாவது தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்திருப்பார்😉 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

லண்டனுக்கு வந்த அவரை பேசாமல் இங்கேயே இருக்க விட்டு இருக்கலாம்...அவர் இங்கே எங்கேயாவது தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்திருப்பார்😉 

ரதி அக்கா & கிருபன்

கும்மான் பிரித்தானியாவிற்கு வந்தது கள்ள பாஸ்போட்டில், மேலும் அவரை காட்டிக்கொடுத்தது அவரது கூட்டுக்களே( கும்மான் இங்கு வந்ததே தனது சொத்துக்களை கையகப்படுத்த) ஆனால் அவரது கூட்டுகள் அவரது காசை ஆட்டைய போடுவதற்காக காட்டி கொடுத்தார்கள்.

கும்மான் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் தஞ்சைக்கோரிக்கை நிகாரிக்கப்பட்டு அவர் திரும்பி சென்றார்.

தளபதி கிட்டுவிற்கு ஐரோப்பாவில் எந்த நாடுகளும் அரசியல் தஞ்சம் வழங்க முன்வரவில்லை. இவரின் அனுபவம் ஊடாக புலிகள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் சண்டையில் முன்னுக்கு பகிரங்கமாக நின்றவர்களுக்கு எங்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்படாது என.

எனக்கு தெரிந்தவரை தமது  தஞ்ச கோரிக்கையில் தான் சுட்டு இத்தனை இராணுவத்தினர் இறந்தார்கள் என்று கூறியவர்களுக்கு அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு சிலருக்கு war crime இன் கீழ் 6 மாத தற்காலிக விசாவே வழங்கப்பட்டது.

முன்னாள் திருமலை மாவட்பட தளபதி பதுமன் அவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் யாழ்மாவட்ட அரசியல் பொறுப்பாளர் டொமினிக் அவர்களுக்கு     5 வருட ELR  வழங்கப்பட்டே நிரந்தர விசா வழங்கப்பட்டது.

ரதி அக்கா இப்படியான நிலையில் சூசை குடும்பத்துடன் தப்பி ஓட முனைந்தார் என்று கதை விடுகிறீர்கள். இந்தியாவை தவிர வேறு ஒரு நாடும் அவரை ஏற்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான் 😜

https://www.facebook.com/watch/?v=1006868329822094

இப்படியும் மக்கள் ஊரில் இருக்கினம். எல்லாரும் எல்லாம் முடிஞ்சிட்டுது என்றில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிறையில் உள்ள பிள்ளையானால் எப்படி பணம் கொடுக்க முடியும் ??

சிறையில் உள்ள பிள்ளையானால் அபிவிருத்தி செய்யமுடியும், தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்று நீங்கள் நம்பினால் பணம் கொடுக்க ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஓமோம் இதை போய் வெளியில சொல்லிட்டு திரியாதீங்கோ தலைவருக்குத் தான் அவமானம் 
 
அண்ணல் செய்த  வீர, தீர, ஈனச் செயலைப் பாராட்டி சிறப்புச் செய்யும் பொழுது அவரின் எஜமான் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தினார் கண்டியளோ! இதில என் தலைவருக்கு என்ன அவமானம்?  இல்லாட்டி இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. உங்கள் அண்ணரின் மனசாட்சிக்கு தெரியும் தான் என்ன செய்தேன் என்று. அதனாற்தான் தலைவரின் பெருந்தன்மையை நினைத்து தன்னை தேற்றுகிறார், தலைவர் என்னை துரோகி என்று சொல்லவில்லை என்று ஆறுதல் அடைகிறார்.  உங்களுக்கு ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டமான விடயத்தில் அடாவடி நிஞாயம் பேசுவீர்கள் அல்லது விடயத்துக்கு சம்பந்தமில்லாத எதையாவது சொல்லி மற்றவர்களை அடக்குவதாக நினைத்து உங்களை ஏமாற்றுவீர்கள் என்பது   எனக்குத் தெரியும்.

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிக லஞ்சம் கொடுத்தது தமிழரசுக்கட்சி உதாரணம் சாணாக்கியன் கட்சிக்குள் சேர நிதி வழங்கினார் பல கோடி , ஜனா வும் ஆதே வேலை ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தவர்கள் என்று சொன்னதும் சிரிப்பு வருகிறது சிறையில் உள்ள பிள்ளையானால் எப்படி பணம் கொடுக்க முடியும் ??

அது போக தமிழரசுகட்சி கிழக்கிலிருந்து ஒரு புல்லையும் தமிழ் மக்களுக்காக புடுங்குவதில்லை என தெரிந்து மக்கள் கர்ணாவுக்கும் அம்பாறையில் ஆதரவு வழங்கினார்கள் இதில் பல பேர் புலம் பெயர்ந்த மக்களும் அடங்கும் விபரம் அதிகம் இருக்கு நெடுக்கு . இங்கே கூட்டமைப்பு இருந்தாலும் தமிழர் அகதிகள்தான் கர்ணா பிள்ளையான் இருந்தாலும் அகதிகள்தான் இலங்கையில்  

சின்ன உதாரணம் சுமந்திரன் ஐயா கல்முனைக்கு வந்து செருப்பை விட்டு ஓடுனது நியாபகம் வருமென நினைக்கிறன் . வடக்கில் அங்கஜன் , டக்ளஸ் மாத்தயா எல்லாம் வெல்லும் வெல்லும் போது இவர்கள் வென்றால் மட்டும் கள்ளவாக்கா ஐயா அப்ப வடக்கில் உள்ள மக்களும் உங்க லிஸ்ட்டில் என்ன மாதிரி

லஞ்சம் கொடுத்து தேர்தலில் வெல்ல சந்தர்ப்பம் இருக்கிறது. அவர் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் லஞ்சம் கொடுக்கலாம். அதட்காக வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் , கள்ள ஒட்டு போட்டுத்தான் வென்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் நடந்திருக்கலாம். இப்பவும் ஒரு சில கள்ள ஓட்டுகள் விழுந்திருக்கலாம். அதனால் வென்றிருக்க முடியாது.

கடைசியாக நடந்த தேர்தல் வரைக்கும் அப்படி நடக்க சந்தர்ப்பமே இல்லை. ஆனால் இனிமேல் நடக்கலாம். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபரிய மூடடை முடிச்சுகளும் சென்றுவிடட படியால் , இனி வருபவரை பொறுத்தே இதை சொல்லலாம். ஒரு ராணுவ அதிகாரி வர இருப்பதாக அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு 
அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார், பிள்ளையோ யாழ்ப்பாண பல்கலையில் management முதலாம் ஆண்டு, பணப்பற்றாக்குறை உக்கிரத்தால்  பின்னேரங்களில் 
பகுதியளவு உத்தியோகமாக Fairness கிறீம் விற்றும் பத்தாமல் பல்கலை  கல்வியையே இடைநிறுத்தம் நிலை , 
நண்பன் முழு விபரங்களையும் எடுத்து தந்தான் மனதை என்னவோ செய்தது, மாவீரர்களுக்கு மனதில் ஒரு தீபத்தை கொளுத்திவிட்டு மாதாந்தம் 7500/= ரூபா அவரது கல்வி முயற்சிக்கு அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வங்கியிலிருந்து முதல் மாத தொகையையும் தட்டிவிட்டேன், இன்னொருத்தனையும் போட்டு நச்சரித்ததில் அவன் 8000/= தர ஒப்புக்கொண்டான் , நிச்சயமாக மாவீரர்கள் பப்ளிக் ஸ்டண்ட் அடித்து விளக்கேற்றாத எனக்கு ஆசி வழங்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
(பப்ளிக் ஸ்டண்ட் என்பதில் உண்மையாகவே குடும்ப உறவுகளை இழந்து வருந்தும் மக்கள் சேரமாட்டார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்), செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டக்கூடாது என்பார்கள் 
ஆனால் சிலவேளை இவையும் பலரின் கண்களையும் இதயங்களையும் திறக்கலாம் அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது, மாவீரர்களை நினைவுகூரவேண்டும்  என்பதில்  மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் அவர்களை எமக்கு தந்த அந்த குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்...? என்ன செய்கிறோம்...?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான் 😜

நெடுக்கர் யாழ் களத்தில் செய்யும் வீரசாகசங்களை இப்போதே பார்க்கக்கூடியதாக உள்ளதே? 😀

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

https://www.facebook.com/watch/?v=1006868329822094

இப்படியும் மக்கள் ஊரில் இருக்கினம். எல்லாரும் எல்லாம் முடிஞ்சிட்டுது என்றில்லை. 

எப்படியும் ஒரு  வழக்கில் சிக்குவார் சந்தோசமா உங்களுக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு 
அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார், பிள்ளையோ யாழ்ப்பாண பல்கலையில் management முதலாம் ஆண்டு, பணப்பற்றாக்குறை உக்கிரத்தால்  பின்னேரங்களில் 
பகுதியளவு உத்தியோகமாக Fairness கிறீம் விற்றும் பத்தாமல் பல்கலை  கல்வியையே இடைநிறுத்தம் நிலை , 
நண்பன் முழு விபரங்களையும் எடுத்து தந்தான் மனதை என்னவோ செய்தது, மாவீரர்களுக்கு மனதில் ஒரு தீபத்தை கொளுத்திவிட்டு மாதாந்தம் 7500/= ரூபா அவரது கல்வி முயற்சிக்கு அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வங்கியிலிருந்து முதல் மாத தொகையையும் தட்டிவிட்டேன், இன்னொருத்தனையும் போட்டு நச்சரித்ததில் அவன் 8000/= தர ஒப்புக்கொண்டான் , நிச்சயமாக மாவீரர்கள் பப்ளிக் ஸ்டண்ட் அடித்து விளக்கேற்றாத எனக்கு ஆசி வழங்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
(பப்ளிக் ஸ்டண்ட் என்பதில் உண்மையாகவே குடும்ப உறவுகளை இழந்து வருந்தும் மக்கள் சேரமாட்டார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்), செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டக்கூடாது என்பார்கள் 
ஆனால் சிலவேளை இவையும் பலரின் கண்களையும் இதயங்களையும் திறக்கலாம் அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது, மாவீரர்களை நினைவுகூரவேண்டும்  என்பதில்  மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் அவர்களை எமக்கு தந்த அந்த குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்...? என்ன செய்கிறோம்...?

வருடா வருடம் மாவீரர் தினம் வர இருக்கின்றது கொண்டாடுவார்கள் ஒரு சிலர் திண்டாடுவார்கள்  நாம ஊரில் பார்க்காததா என்னுடன் வெளிநாட்டிலிருந்த நண்பனுக்கு வேற கம்பனி கூப்பிடும் நேரம் எல்லாம் வேலைக்கு போகவேண்டும் இல்லாவிட்டால் ஊருக்கு அனுப்பிவிடுவோமென மிரட்டி வேலை வாங்கிய சம்பவமும் உண்டு 2010 ல் (முன்னாள் போராளிகள்) இன்னும் பலர் தன் குடும்பத்திற்க்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் 

இத சொன்னால் நம்மளையும் சேர்த்து துரோகி என்பார்கள்  ஒரு தடவையாவது ஊர் வந்து போய் கதையுங்கள் நண்பர்களே உடனே யாழ்ப்பாணம் வந்து போர் நடக்க வில்லை யாழ் மாறிவிட்டது ஊர் மாறிவிட்டது என சொல்லாதீர்கள் போர் நடந்தது பலபேரின் வாழ்க்கையில் அது வெளி ஊர்களில் தெரிய வாய்ப்பில்லை , ஊர்களை சுற்றிப்பார்த்து படம் எடுப்பதாலும் தெரிய வாய்ப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு 
அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார், பிள்ளையோ யாழ்ப்பாண பல்கலையில் management முதலாம் ஆண்டு, பணப்பற்றாக்குறை உக்கிரத்தால்  பின்னேரங்களில் 
பகுதியளவு உத்தியோகமாக Fairness கிறீம் விற்றும் பத்தாமல் பல்கலை  கல்வியையே இடைநிறுத்தம் நிலை , 
நண்பன் முழு விபரங்களையும் எடுத்து தந்தான் மனதை என்னவோ செய்தது, மாவீரர்களுக்கு மனதில் ஒரு தீபத்தை கொளுத்திவிட்டு மாதாந்தம் 7500/= ரூபா அவரது கல்வி முயற்சிக்கு அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வங்கியிலிருந்து முதல் மாத தொகையையும் தட்டிவிட்டேன், இன்னொருத்தனையும் போட்டு நச்சரித்ததில் அவன் 8000/= தர ஒப்புக்கொண்டான் , நிச்சயமாக மாவீரர்கள் பப்ளிக் ஸ்டண்ட் அடித்து விளக்கேற்றாத எனக்கு ஆசி வழங்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
(பப்ளிக் ஸ்டண்ட் என்பதில் உண்மையாகவே குடும்ப உறவுகளை இழந்து வருந்தும் மக்கள் சேரமாட்டார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்), செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டக்கூடாது என்பார்கள் 
ஆனால் சிலவேளை இவையும் பலரின் கண்களையும் இதயங்களையும் திறக்கலாம் அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது, மாவீரர்களை நினைவுகூரவேண்டும்  என்பதில்  மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் அவர்களை எமக்கு தந்த அந்த குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்...? என்ன செய்கிறோம்...?

எப்பாடுபட்டாவது அப்பிள்ளையை கல்வியை தொடர வையுங்கள் நண்பா. யாழ் உறவுகள் சிலராவது வருடாந்த செலவை ஏற்று பல்கலைக் கல்வியை முடிக்க உதவலாமே.

ஒரு மாத செலவை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சில நண்பர்களை உதவ கேட்டு பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

ரதி அக்கா & கிருபன்

கும்மான் பிரித்தானியாவிற்கு வந்தது கள்ள பாஸ்போட்டில், மேலும் அவரை காட்டிக்கொடுத்தது அவரது கூட்டுக்களே( கும்மான் இங்கு வந்ததே தனது சொத்துக்களை கையகப்படுத்த) ஆனால் அவரது கூட்டுகள் அவரது காசை ஆட்டைய போடுவதற்காக காட்டி கொடுத்தார்கள்.

கும்மான் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் தஞ்சைக்கோரிக்கை நிகாரிக்கப்பட்டு அவர் திரும்பி சென்றார்.

தளபதி கிட்டுவிற்கு ஐரோப்பாவில் எந்த நாடுகளும் அரசியல் தஞ்சம் வழங்க முன்வரவில்லை. இவரின் அனுபவம் ஊடாக புலிகள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் சண்டையில் முன்னுக்கு பகிரங்கமாக நின்றவர்களுக்கு எங்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்படாது என.

எனக்கு தெரிந்தவரை தமது  தஞ்ச கோரிக்கையில் தான் சுட்டு இத்தனை இராணுவத்தினர் இறந்தார்கள் என்று கூறியவர்களுக்கு அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு சிலருக்கு war crime இன் கீழ் 6 மாத தற்காலிக விசாவே வழங்கப்பட்டது.

முன்னாள் திருமலை மாவட்பட தளபதி பதுமன் அவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் யாழ்மாவட்ட அரசியல் பொறுப்பாளர் டொமினிக் அவர்களுக்கு     5 வருட ELR  வழங்கப்பட்டே நிரந்தர விசா வழங்கப்பட்டது.

ரதி அக்கா இப்படியான நிலையில் சூசை குடும்பத்துடன் தப்பி ஓட முனைந்தார் என்று கதை விடுகிறீர்கள். இந்தியாவை தவிர வேறு ஒரு நாடும் அவரை ஏற்காது. 

மீரா ,  இவர் பணத்திற்காய் தான் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆனால்  காட்டிக் கொடுக்கப்பட்டதில் புலனாய்வு பிரிவினரின் பங்கு இல்லை  என்று  நீங்கள் உண்மையிலே நினைக்கிறீர்களா?

சூசை தனது குடும்பத்தோடு இந்தியாவிற்கு தான் தப்பி ஓட வெளிக்கிட்டவர்.... அந்த நேரம் இது பெரிய கதையாய் அடிப்பட்டது...நீங்கள் கேள்விப்படாததற்கு நான் ஒன்றும் செய்யேலாது 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/11/2020 at 20:37, ரதி said:

லண்டனுக்கு வந்த அவரை பேசாமல் இங்கேயே இருக்க விட்டு இருக்கலாம்...அவர் இங்கே எங்கேயாவது தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்திருப்பார்😉 

கருணா லண்டனிலை இருக்கேக்கை போய் பாத்தனீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

On 22/11/2020 at 20:15, கிருபன் said:

இந்தப் பட்டங்கள் கொடுக்கும் புலம்பெயர் பல்கலைக்கழகங்களால்தான் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட போராளிகளைப் பார்த்து  “ஏன் குப்பி கடித்துச் சாகவில்லை?” என்று கேட்கவும் முடிந்தது.

இந்தக் குதர்க்கம்தானே வேண்டாங்கிறது. சரியாகத் தமிழில்தானே எழுதியிருந்தேன்? விளங்கவிட்டால் மீண்டும் ஒருமுறை, "தன் தலைவனை, தன் போராட்டத்தை எதிரியிடம் காட்டிக்கொடுத்து, விற்று  சன்மானம், சலுகை, பதவி பெற்ற ஒருவரை எவ்வாறு அழைப்பது?"  இதுவே எனது கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள். தெரியாவிட்டால், சொல்ல நா வராவிட்டால் விடுங்கள் . நான் தப்பாய் எடுக்க மாட்டேன்.

On 22/11/2020 at 19:47, கிருபன் said:

கருணா அம்மான் பொட்டும் பிறையுமாக மாறினாலும், முன்னைய கம்பீரம் எல்லாம் போய்விட்டது!

இலை மரத்தில் இருந்தாற்தான் அழகாக, பசுமையாக இருக்கும்.  இலை என்று அழைக்கப்படும்.  மரத்தில் இருந்து உதிர்ந்துவிட்டால் அது வெறும் சருகே. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தலைவரின் தளபதி, இப்போ சிங்களத்தின் அடிமை. 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனை காட்டிக் கொடுப்பதும்

பெற்ற தாயை கூட்டிக் கொடுப்பதும்
ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படியும் ஒரு  வழக்கில் சிக்குவார் சந்தோசமா உங்களுக்கு  

எவ்வளவுக்கு அணை போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அதை  உடைக்கும்  வீரியம் பிறக்கும் தன்மானமுள்ளவனுக்கு. "அஞ்சினர்க்கு சத மரணம், அஞ்சா நெஞ்சினனுக்கு ஒரு மரணம்." அவர் வாய் தண்டனை எனும் இரும்புக்கரத்தால் அடக்கப்பட்டாலும், நெஞ்சில் கனலாய் எரிந்து கொண்டே இருக்கும். அவரால் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை என்பதே உண்மை.  தமிழர் எது செய்தாலும் அதை தடுக்க வேண்டும் எனும் கொள்கை உடைய கொடுங்கோல் ஆட்சியில் எதுவும் நடக்கும் என்று தெரிந்தும் பேசுகிறார்.  மன்னன் கரிகாலன் இரும்பொறை சரித்திரம் மனதில் வந்து போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 03:48, satan said:

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.

 திட்டமிட்டு  மக்களை ஏமாற்றி, ஏமாளிகளாக்கி, ஏதிலிகளாக்கி வருகிறார்கள் எதிரிகள். இழக்க எதுவுமேயில்லாத மக்களிடம் இலகுவாக அவர்களது திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை. மக்களின் இயலாமையை பயன்படுத்துவதில் பெருமையொன்றுமில்லை. பலவான்கள் என்று தம்மை பீற்றிக்கொள்பவர்களுக்கு அது இழுக்கு. 
   
நான் அன்றைக்கே பதில் கூறி விட்டேன் அது இன்று நடந்திருக்கிறது சாட்டான் ஏனென்றால் சில விடயங்கள் வந்து சேர்ந்துவிடும் எனக்கு அவ்வளவுதான் நண்பர்கள் மூலமாக‌

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2020 at 09:44, ரதி said:

அவர் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள மகிந்தாவோடு சேர்ந்தது உண்மை ...அதில் எந்த மாற்றுக் கருத்தும்ல்லை ...

அதுக்குதான் சொல்லுறது: உயிருக்கு பயந்தவர்களெல்லாம் போராடபோகக்கூடாதென்று. அண்ணர் களத்தில் எப்படி போராடியிருப்பார்  என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இவர் போராடப்போகாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் நலமாயிருந்திருக்கும். எழுதும்போது யோசித்து எழுதவேண்டும் என்று மற்றவர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடும் நீங்கள் மட்டும் அதை கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகிறது. அல்லது நீங்கள் மட்டும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று கருதினீர்களோ?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/11/2020 at 16:51, தனிக்காட்டு ராஜா said:

எப்படியும் ஒரு  வழக்கில் சிக்குவார் சந்தோசமா உங்களுக்கு  

உவ்விடம் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. இது என்றும் இருக்கும். ஜனநாயக சுதந்திரம் இல்லாத நாடு சிறிலங்கா.

ஆகையால் தான் சொல்கின்றோம் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் குரல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அரசியல் நிகழ்வுகளையும் வேறு கோணத்தில் பார்க்காதீர்கள் என......

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அதுக்குதான் சொல்லுறது: உயிருக்கு பயந்தவர்களெல்லாம் போராடபோகக்கூடாதென்று. அண்ணர் களத்தில் எப்படி போராடியிருப்பார்  என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இவர் போராடப்போகாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் நலமாயிருந்திருக்கும். எழுதும்போது யோசித்து எழுதவேண்டும் என்று மற்றவர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடும் நீங்கள் மட்டும் அதை கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகிறது. அல்லது நீங்கள் மட்டும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று கருதினீர்களோ?  

யுத்தத்தின் போது எதிரியுடன் போராடி வீர சாவடைவதையும், சொந்த இயக்கத்தால் போட்டு தள்ளப்படுவதைவதையும் ஓரே தட்டில் வைத்து பார்க்கும் உங்களை நினைக்க எனக்கு வியப்பேதுமில்லை 
 
On ‎23‎-‎11‎-‎2020 at 20:22, குமாரசாமி said:

கருணா லண்டனிலை இருக்கேக்கை போய் பாத்தனீங்களோ?

இல்லை அண்ணா ...எனக்கு அப்போதிருந்த சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.